தமிழ்நாட்டில் தொடக்கக்கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஒவவொரு ஆண்டும் மாறுதல் கலந்தாய்வு நடத்துவது வழக்கம். இதை கோடை விடுமுறையிலேயே நடத்தினால் ஆசிரியர்கள் புதிய பணியிடங்களில் பணியேற்க வசதியாக இருக்கும் என ஆசிரியர் சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தன. கல்வித்துறை செயலராக உதயசந்திரன் பொறுப்பேற்றது முதல் பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக கடந்த சில ஆண்டுகளாக கோடை விடுமுறை திறந்த பின் நடைபெற்ற ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை மே மாதத்திலேயே நடத்த உத்தரவிட்டார்.
இதன்படி உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்களுகக்கான பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு வருகிற மே 19ந் தேதியும், நடுநிலைப்பள்ள தலைமையாசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் மாவட்டத்திற்குள்ளான பணி மாறுதல் மே 22ந் தேதியும், தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு மற்றும் பணி மாறுதல் 23ந் தேதியும் நடைபெற உள்ளது. 24ந் தேதி இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வும், 25ந் தேதி இடைநிலை ஆசிரியர்களுக்கான ஒன்றியத்திற்குள் மற்றும் மாவட்டத்திற்குள்ளான பணி மாறுதல் கலந்தாய்வும் நடைபெற உள்ளது.
மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோருக்கான கலந்தாய்வு பட்டதாரி ஆசிரியர்களுக்கு மே 26ந் தேதியும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மே 29 மற்றும் 30ந் தேதியும் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டுகளை போல் அல்லாமல் இந்தாண்டு அனைத்து விபரங்களும் இணைய வழி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள. எனவே விதி மீறல் நடப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளன.
கோடை வெயில் வாட்டி வதைப்பதால் கலந்தாய்வு நடைபெறும் இடங்களில் உரிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன் கூறியதாவது
கடந்தாண்டுகளில் நடந்த கல்தாய்வு இடங்களில் உரிய அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து தரவில்லை;. குறிப்பாக கழிப்பிட வசதியில்லாததால் பெண் ஆசிரியர்கள் மிகவும் சிரமதிதிற்குள்ளாயினர். வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் சுத்தமான குடி நீர் வசதியுடன் ஆசிரியர்கள் அமர்வதற்கு இருக்கை வசதிகள் செய்து தரப்பட வேண்டும். கலந்தாய்வை நேர்மையாக நடத்துவதற்கு ஏதுவாக மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை காலிப்பணியிடங்களையும் வெளிப்படையாக வெளியிட வேண்டும். மேலும் ஒவ்வொரு அறிவிப்புகளையும் ஒலி பெருக்கியில் தெளிவாக அனைத்து ஆசிரியர்கள் அறிந்துகொள்ளும் வகையில் அறிவித்திட வேண்டும் என அவர் தெரிவித்தார். மேலும் மேல் முறையீடுகளை மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் அவர்கள் உடனடியாக விசாரித்து கலந்தாய்வை தொய்வின்றி நடத்த வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக