யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

28/6/17

தமிழ் வழி வகுப்பு நடத்தும் ஆசிரியர்களே ஆங்கில வழி வகுப்புகளை நடத்துகிறார்களா ? ஐகோர்ட் கேள்வி

அரசுபள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளியிலே சேர்க்க வேண்டும் என்பதை ஏன் கட்டயாமாக்கப்படவில்லை என தமிழக அரசுக்கு சென்னை
உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூரில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலை பள்ளியில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க அனுமதி மறுத்து அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அப்பள்ளி நிர்வாகம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் "அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளை தொடங்க 2012 தமிழக அரசு உத்தரவிட்டது. அந்த பள்ளிகளில் துவங்கப்பட்டுள்ள ஆங்கில வழி வகுப்புகளை தமிழ் வழி பாடம் நடத்தும் ஆசிரியர்களே நடத்துவதாகவும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி பாடத்தை தொடங்க மறுப்பது பாரப்பட்சமானது" என கூறப்பட்டுள்ளது.

இந்தவழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவில்,  "கல்வி மிகப்பெரிய ஆயுதம். அதை கொண்டு உலகையே மாற்றலாம் என நெல்சன் மண்டேலா கூறியதை மேற்கொள் காட்டியுள்ளார். இந்தியா கிராமங்களால் வாழ்கிறது. ஆனால் கல்வியில் கிராமப்புற மாணவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். தமிழ் வழி ஆசிரியர்களே ஆங்கில வழி பாடத்தை நடத்துவதால்,ஆங்கில வழி வகுப்புகளுக்கு அனுமதியளித்ததில் உபயோகம் இல்லை.  கிராமப் புற மாணவர்களை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என கவலை தெரிவித்துள்ளார்.
மேலும்,அரசு பள்ளி ஆசிரியர்கள்  குறித்த நேரத்தில் பள்ளிகளை திறக்காதது, முறையாக வகுப்புகளை நடத்ததாது, ஆசிரியர் பணி அல்லாமல் பகுதி நேர தொழில் செய்வது போன்ற நடவடிக்கைகளில் அரசு பள்ளி ஆசிரிர்கள் ஈடுபடுவது குறித்து நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.

அரசுபள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியிலே சேர்க்க வேண்டும் என்பதை கட்டாயம் ஆக்காதது ஏன் என அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதி, 2012-க்கு பிறகு எத்தனை பள்ளியில் ஆங்கில வழி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன, அதில் எத்தனை மாணவர்கள் படிக்கின்றனர் எனவும் கேள்வி எழுப்பினார்? தமிழ் வழி வகுப்பு நடத்தும் ஆசிரியர்களே ஆங்கில வழி வகுப்புகளை நடத்துகிறார்களா ? ஆங்கில வழி வகுப்பை நடத்த பயிற்ச பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்களா ? அரசு பள்ளியை விடுத்து பெற்றோர்கள் தனியார் பள்ளிகள் நாட காரணம் என்ன ? பள்ளிகளுக்கு குறித்த நேரத்திற்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா  ?

ஆசிரியர்கள் சங்கங்கள் துவங்குவதை ஏன் தடை செய்ய கூடாது ? ஊரக பகுதிகளில் அரசு பள்ளிகளை  நிர்வகிக்க ஏன் தொண்டு நிறுவனங்களை அனுமதிக்க கூடாது ? பள்ளி நேரங்களில் ஆசிரியர்கள் மொபைல் பயன்படுத்துவதை ஏன் தடை செய்ய கூடாது??

உள்ளிட்ட 20 கேள்விகளை எழுப்பிய நீதிபதி, அரசு இது குறித்து ஜூலை 14-ம் தேதி பதிலளிக்க  உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக