யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

6/11/17

மழையால் தொடரும் விடுமுறை... தேர்வுகள் தள்ளிப்போகுமா? - பெற்றோர்கள் கவலை

சென்னை, காஞ்சி, திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பலத்த மழையால் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் தள்ளிப்போகுமா என்ற எதிர்பார்ப்பு பெற்றோர்களிடையே எழுந்துள்ளது.


வடகிழக்குப் பருவமழையின் தீவிரத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், காவிரி டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

இன்று மழையால் 10 மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு கடந்த செவ்வாய்கிழமை தொடங்கி தொடர்ச்சியாக இன்று 7வது நாளாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தாழ்வு நிலை

காற்றழுத்த தாழ்வுநிலையால் மேலும் மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் பள்ளிகள் இப்போதைக்கு திறக்க வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது. சுகாதாரமான சூழல் நிலவினால் மட்டுமே பள்ளிகள் திறக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.

  

மாணவர்கள் ஜாலி- பெற்றோர்களுக்குக் கவலை

பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பைக் கருதியே பள்ளிகளுக்கு மழை விடுமுறை விடப்படுகிறது என்றாலும் இரண்டாம் பருவம் மிகக் குறுகிய காலம் என்பதால் பாடங்களை ஆசிரியர்கள் நடத்தி முடிக்காவிட்டால் அரையாண்டுத் தேர்வை மாணவர்கள் எதிர்கொள்வது சிரமமாகிவிடும் என பெற்றோர்கள் குறிப்பாக பொதுத் தேர்வை எதிர்கொள்ளவிருக்கும் 10, 11, 12 வகுப்பு மாணவர்களின் பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

  

தள்ளிப் போன அரையாண்டு

கடந்த 2015ஆம் ஆண்டு மழை வெள்ளம் காரணமாக 40 நாட்கள் வரை தொடர் விடுமுறை விடப்பட்டது. இதனால் டிசம்பர் மாதம் நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் ஜனவரி மாதம் நடைபெற்றது. இந்த ஆண்டும் அதே போல தேர்வுகள் தள்ளிப்போகுமா என்ற கவலை பெற்றோர்களிடையே எழுந்துள்ளது. மழையால் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக