யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

19/1/18

நீட் தேர்வில் மாநில பாடத்திட்டத்தையும் பரிசீலித்து வினாத்தாள் தயாரிக்க மத்திய அரசு முடிவு

டெல்லி: நீட் தேர்வில் மாநில பாடத்திட்டத்தையும் பரிசீலித்து வினாத்தாள் தயாரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் தமிழக மாணவர்கள பயனடைவர்  என தகவல்கள் தெரிவிக்கின்றன . நீட் எனப்படும் தேசிய தகுதி காண் தேர்வின் மூலம் நாடு முழுவதும் ஒரே மாதிரியான முறையில் மருத்துவ படிப்புகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் இந்த தேர்வு நடத்தப்பட்டது. இதனால் ஏழை மாணவர்கள், தமிழ் வழியில் கல்வி பயின்றோர் பாதிக்கப்படுவர் என்று கூறியும் மத்திய அரசு  பரிசீலனை செய்யவில்லை.

இதனால் தமிழகத்தில் போராட்டங்களும், உயிரிழப்புகளும் நடைபெற்றன. அரியலூர் மாணவி அனிதா தற்கொலை விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரபப்பை ஏற்படுத்தியது.மேலும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை கொண்டு வினாத்தாள் தயாரிக்கப்படுவதால் மாநில பாடத்திட்ட மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் வரும் மார்ச் மாதம் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடைபெறவுள்ள நிலையில் இந்தாண்டாவது நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் தமிழக மாணவர்களும் பெற்றோர்களும் உள்ளனர்.

கடந்த முறையே சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை மட்டும் வைத்துக் கொண்டு வினாத்தாளை தயாரிக்காமல் மாநில பாடத்திட்டத்தையும் சேர்க்க வேண்டும் என்று நீதியரசர்கள் யோசனை தெரிவித்தனர். இந்நிலையில் மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் நீட் தேர்வுக்கான வினாத்தாளில் மாநில பாத்திட்டங்களையும் சேர்த்து பரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளது. மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் தயாரிக்க முடிவு  செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக