மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஏழைகளுக்கான தேசிய மருத்துவ காப்பீடு திட்டம்,
காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், தேசிய மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும் என நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது. சுமார் 10 கோடி குடும்பங்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், ஒரு நபர் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெற்றுக் கொள்ளலாம் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்தார்.
தேசிய அளவில் மிகப்பெரிய காப்பீடு திட்டமான இது, வருகிற அக்டோபர் மாதம் 2ம் தேதியான காந்தி ஜெயந்தி முதல் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தேசிய மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
மருத்துவத்துக்கு தற்போது அதிகளவில் செலவு செய்ய வேண்டியுள்ளது. இதனால், ஏழைகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தேசிய மருத்துவ காப்பீடு திட்டத்தை முறையாக செயல்படுத்தும் பட்சத்தில் அனைவருக்கும் சிறப்பான மருத்துவம் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக