அரசு போட்டித் தேர்வுகளில் முறைகேடு நடைபெறுவதாக உயர் நீதிமன்ற
மதுரைக் கிளை தாமாக எடுத்துக்கொண்ட வழக்கில், ஆசிரியர் தேர்வு வாரியப் பணிகள் இனி தனியாருக்கு வழங்கப்படாது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
“போட்டித் தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளினால் தவறான முறையில் மதிப்பெண்களைப் பெறுபவர்கள், தகுதியுடையவர்களின் பணியைப் பறித்துவிடுகின்றனர். அதனால், போட்டித் தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனுடன் தொடர்புடையவர்கள் மீது விசாரணைக் குழு அமைக்கவோ அல்லது விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றவோ செய்ய வேண்டும்” என்று பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணையில் இன்று (பிப்ரவரி 16) சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், “அரசு போட்டித் தேர்வு நடைமுறைகள் தனியாருக்கு வழங்கப்டாது என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் பயோமெட்ரிக் முறையைக் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டது.
தற்போது கடைபிடிக்கப்படும் தேர்வு மற்றும் பாதுகாப்பு முறைகள் குறித்து டி.என்.பி.எஸ்.சி மார்ச் 9ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக