தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கத்தைக் கட்டிக் காக்கும் இயக்கவாதிகளுக்கு, 2002 இல் தொடக்கக்கல்வித் துறைக்குக் கிடைக்க வேண்டிய வட்டார வள மைய மேற்பார்வையாளர் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்களை அன்றைய பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் சூழ்ச்சியாக அபகரித்துக் கொண்டு அனைத்தையும் பள்ளிக்கல்வித் துறைக்கே அள்ளிக் கொடுத்தது குறித்தும் தமக்கு நேரிட்ட அநீதிகளைத் தட்டிக் கேட்க வழியின்றி அசட்டையாக இருந்தது போதும்!
16 ஆண்டுகளுக்குப் பிறகும் அதே சூது கவ்வும் வேலைகள் தொடங்கிவிட்டன...
இந்த முறையும் கண்ணிருந்தும் குருடர்களாக நாம் இருப்போமேயானால் அறிவாலும் ஆற்றலாலும் தகுதியாலும் திறமையாலும் மாற்றானைவிட பல மடங்கு உயர்ந்து நிற்கும் இக்கால இளைய சமுதாயமும் நாளைய இளைஞர் சக்தியும் தொடக்கக்கல்வி இயக்கங்கள் மீது சபித்துக் கொட்டும்!
ஊதியத்திற்காக மட்டுமல்ல உரிமைகளுக்காகவும் போராடிடும் மாபெரும் இயக்கங்கள் நமது என்பதை உயிரைக் கொடுத்தேனும் நிரூபிக்க வேண்டியது அவசர அவசியக் கடமையாக உள்ளது.
ஆளப் போகிறோமா?
அடிமையாகிச் சாவப் போகிறோமா?
ஓங்கி உரத்துச் சொல்வோம்!
தொடக்கக்கல்வித் துறை
தொடக்கப்பள்ளி ஆசிரியருக்கே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக