யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

21/4/18

அதிகமான பாடங்களை கற்பிக்க வற்புறுத்தவில்லை: நீதிமன்றத்தில் என்சிஇஆர்டி பதில்

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) விநியோகிக்கும் புத்தகங்களை மட்டும் சிபிஎஸ்இ பள்ளிகள் பயன்படுத்த உத்தரவிடக் கோரி தொடரப்பட்டுள்ள வழக்கில், 'ஒருபோதும் அதிகமான பாடங்களை கற்பிக்க வேண்டுமென பள்ளிகளை வற்புறுத்தவில்லை'
என என்சிஇஆர்டி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் புருஷோத்தமன் தாக்கல் செய்த மனுவில், 'கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) பாடத்திட்டத்தின்படி முதல் வகுப்பில் மூன்று பாடங்கள் மட்டுமே பயிற்றுவிக்கப்படுகிறது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தை பின்பற்றும் தனியார் பள்ளிகள் முதல் வகுப்பில் எட்டுப் பாடங்களை பயிற்றுவிக்கின்றன. இதனால் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் 5 முதல் 7 கிலோ எடையுள்ள புத்தகப் பைகளைச் சுமந்து செல்கின்றனர். இதனால் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே, என்சிஇஆர்டி விநியோகிக்கும் புத்தகங்களை மட்டும் சிபிஎஸ்இ பள்ளிகள் பயன்படுத்த சிபிஎஸ்இ நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தார். 
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த மனு தொடர்பாக மத்திய அரசு, என்சிஇஆர்டி மற்றும் சிபிஎஸ்இ பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. 
தரமான புத்தகங்கள்: இதையடுத்து, என்சிஇஆர்டி செயலாளர் மேஜர் ஹர்ஷ் குமார் பதில்மனு தாக்கல் செய்தார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
குழந்தைகள் மத்தியில் எந்தவிதமான கல்வி பாகுபாடும் பார்க்கக் கூடாது. எந்தவொரு குழந்தைக்கும் கல்வி மனஅழுத்தத்தையும் தரக்கூடாது என பள்ளிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம். கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில் தலைசிறந்த ஆசிரியர்களைக் கொண்டு பாடப் புத்தகங்களை நாங்களே வடிவமைத்து வழங்கி வருகிறோம். ஆண்டுதோறும் குறைவான கட்டணத்தில் 364 தலைப்புகளில் தரமான புத்தகங்களை வெளியிடுகிறோம். ஒரு குழந்தை எவ்வளவு நேரம் படிக்க வேண்டும், எவ்வளவு நேரம் கற்பிக்க வேண்டும் என்பதை வரையறுத்துதான் பாடத்திட்டம் உருவாக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் ஆரம்ப கல்வியில் இருந்து இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப் பாடம் கொடுக்கக் கூடாது. 3 -ஆம் வகுப்பிலிருந்து 5-ஆம் வகுப்பு வரை வாரத்துக்கு 2 மணி நேரம் வீட்டுப் பாடம் கொடுக்க வேண்டும். 8 -ஆம் வகுப்பு வரையிலான நடுநிலைப் பள்ளிகளில் தினமும் ஒரு மணி நேரம் வீதம், வாரத்தில் 5 முதல் 6 மணி நேரமும், 9 -ஆம் வகுப்பு முதல் 12 - ஆம் வகுப்பு வரை தினமும் 2 மணி நேரம் வீதம் வாரத்தில் 10 முதல் 12 மணி நேரம் மட்டுமே வீட்டுப்பாடம் கொடுக்கப்பட வேண்டும் என ஏற்கெனவே பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
வற்புறுத்தவில்லை: புத்தகச் சுமையைக் குறைக்க முதல் மற்றும் இரண்டாம் வகுப்புகளுக்கு மொழிப்பாடம், கணிதம் ஆகிய இரண்டு பாடங்களையும், மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மொழிப்பாடம், சூழ்நிலையியல், கணிதம் ஆகிய 3 பாடங்களை மட்டுமே கற்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இவை தவிர பொது அறிவுப் பாடமும் கொடுக்கப்பட்டுள்ளது. என்சிஇஆர்டி ஒருபோதும் அதிகமான பாடங்களை கற்பிக்க வேண்டுமென வற்புறுத்தவில்லை. அதே போன்று, பள்ளியில் விநியோகிக்கும் புத்தகங்களை வாங்க வேண்டும் என மாணவர்களை ஒருபோதும் நிர்பந்திக்கக் கூடாது. இதுகுறித்து பெற்றோர்களும் பள்ளி நிர்வாகத்துடன் பேச வேண்டும். 
அதே வேளையில் எல்லா பாடங்களையும் ஒரே நாளில் கற்பிக்க வேண்டிய கட்டாயமும் கிடையாது. வாழ்க்கைக்குத் தேவையான அறிவை போதிக்கும் இடமாக திகழ வேண்டிய பள்ளிகள் தரமான கல்வியை மட்டுமே கற்பிக்க வேண்டும். கல்வி ஒருபோதும் சுமையாக இருக்கக்கூடாது என்பதை தாரகமந்திரமாக வைத்து என்சிஇஆர்டி செயல்பட்டு வருகிறது. மேலும் மின்னணு வடிவிலான இ-புத்தக திட்டத்தையும் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறோம். இதனை கைபேசி செயலி வழியாகவும் பெற முடியும் என அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைநிலைக் கல்வியிலிருந்து கல்லூரிக்கு மாறும் வசதி: இந்த ஆண்டு முதல் சென்னைப் பல்கலை. அறிமுகம்

தொலைநிலைக் கல்வி முறையிலிருந்து கல்லூரிக்கும், கல்லூரி படிப்பிலிருந்து தொலைநிலைக் கல்வி முறைக்கும் மாணவர்கள் மாறிக் கொள்ளும் வகையில் புதிய வசதியை வரும் கல்வியாண்டு முதல் (2018-19) சென்னைப் பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்த உள்ளது.

பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 முடித்து தொலைநிலைக் கல்வி அல்லது திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் பெறப்படும் பட்டங்கள், கல்லூரியில் சேர்ந்து பெறும் பட்டத்துக்கு இணையானது எனவும், அனைத்து வகை வேலைவாய்ப்புகளுக்கும் இந்தப் பட்டப் படிப்புகளையும் தகுதியானதாக கருத வேண்டும் எனவும் யுஜிசி தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. 
யுஜிசி-யின் இந்தக் கருத்தை மேலும் ஒருபடி உயர்த்தி, தொலைநிலைப் பட்டப் படிப்புகளை முழுமையாக, கல்லூரி பட்டப்படிப்புக்கு இணையானதாக மாற்றும் நடவடிக்கையை சென்னைப் பல்கலைக்கழகம் மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி கூறியதாவது:
சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனப் படிப்புகளின் தரத்தை மேம்படுத்தும் வகையில், இதன் பாடத் திட்டங்கள் அனைத்தும், நேரடி பட்டப் படிப்புக்கு இணையானதாக மாற்றப்பட்டுள்ளன. வருகிற கல்வியாண்டு முதல் இந்தப் புதிய பாடத் திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது. மேலும் தேர்வு முறையும், பருவத் தேர்வு முறையாக மாற்றப்பட உள்ளது.
இதன் மூலம், தொலைநிலைக் கல்வி மாணவர் இரண்டாம் ஆண்டில் ஏதாவது ஒரு கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்பினால், நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கை நடைமுறையின் அடிப்படையில் அவர் கல்லூரியில் சேர்ந்துகொள்ள முடியும்.
அதுபோல, கல்லூரியில் படித்து வரும் மாணவர் அல்லது மாணவி தவிர்க்க முடியாத சூழலில் படிப்பைத் தொடர இயலாமல் போனால், அவர் தொலைநிலைக் கல்வி முறைக்கு மாறிக் கொள்ள முடியும். இந்த வசதி வரும் கல்வியாண்டு (2018-19) முதல் நடைமுறைக்குக் கொண்டுவரப்படும் என்றார் அவர்.

எம்.பி.ஏ., நுழைவு தேர்வு அறிவிப்பு

சென்னை, சென்னை பல்கலையின், எம்.பி.ஏ., மாணவர் சேர்க்கைக்கு, ஜூன், 22ல் நுழைவு தேர்வு நடக்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை பல்கலையில், இரண்டு ஆண்டு, எம்.பி.ஏ., எக்ஸ்கியூட்டிவ் படிப்பு நடத்தப்படுகிறது. இதில், மாணவர்கள் சேர, ஜூன், 22ல் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான ஆன்லைன் பதிவு, நேற்று முன்தினம் துவங்கியுள்ளது. ஜூன், 18 வரை,www.unom.ac.in என்ற, இணையதளத்தில் பதிவு செய்யலாம் என, பல்கலை அறிவித்துள்ளது

திறந்தநிலை பல்கலைக்கு 2020 வரை யு.ஜி.சி., அனுமதி

சென்னை, மத்திய அரசின், 'நாக்' தரமதிப்பீடு இல்லாமல், 2020 வரை படிப்புகளை நடத்த, அனுமதி கிடைத்து உள்ளதாக, தமிழ்நாடுதிறந்தநிலை பல்கலை அறிவித்துள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு பல்கலையின் பதிவாளர், கே.எம்.சுப்ரமணியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மரபார்ந்த பல்கலைகளுக்கு மட்டுமே, தொலைநிலை படிப்பை நடத்த, நாக் தரமதிப்பீடு கட்டாயம்.ஆனால், திறந்தநிலை பல்கலை போன்றவற்றுக்கு, நாக் தரமதிப்பீடு, இன்னும் கட்டாயம் ஆகவில்லை.எனவே, நாக் தரமதிப்பீடு இல்லாமல், 2020ம் ஆண்டு வரை, திறந்தநிலை பல்கலையில், பட்டப்படிப்பு நடத்த, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., அனுமதி அளித்துள்ளது.மேலும், நேரடி,'ரெகுலர்' கல்வி முறையில், பிஎச்.டி., - எம்.பில்., ஆராய்ச்சி படிப்பை நடத்தவும், திறந்தநிலை பல்கலைக்கு,யு.ஜி.சி., அனுமதி வழங்கி உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உயர் கல்வி செயலரை மாற்ற அரசு திட்டம் நிர்மலாதேவி விவகாரத்தில் நீளும் விசாரணை

தமிழக உயர் கல்வித் துறையில், முறைகேடு கள் அதிகரித்துள்ளதால், உயர் கல்வி செயலரை மாற்ற, தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.


 உயர் கல்வி ,செயலரை, மாற்ற ,அரசு, திட்டம்,  நிர்மலாதேவி விவகாரத்தில், நீளும், விசாரணை


தமிழக உயர் கல்வித்துறை செயலராக, சுனில் பாலிவால், ஓராண்டுக்கு முன் நியமிக்கப் பட்டார். இவர், ஊழல், முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என, எதிர்பார்த்த நிலையில், நிலைமை இன்னும் மோசமாகி யுள்ளது. அருப்புக்கோட்டை பேராசிரியை, நிர்மலாதேவி விவகாரத்தில், ஒரு மாதம் முன்னரே புகார் வந்தும், விசாரணை நடத்தாமல், உயர் கல்வி செயலர், மெத்தன மாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.


நிர்மலா தேவி, மார்ச், 15ல், மாணவியரிடம் பேசியுள்ளார். மார்ச், 19ல், கல்லுாரி நிர்வாகத் திடம் தகவல் தரப்பட்டுள்ளது. அப்போதே, மதுரை காமராஜர் பல்கலைக்கும், அதை தொடர்ந்து, உயர் கல்வி செயலகத்துக் கும் தகவல்கள் வந்துள்ளன. ஆனால், போலீசில் புகார் அளிக்க, உயர் கல்வி செயலர் அனுமதி அளிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.


இதுபற்றி, கவர்னர் அலுவலகத்துக்கும் தகவல் அளிக்கவில்லை. நாளிதழ்களில் செய்தி வெளிவந்த பிறகே, கவர்னர் அலுவலகத்துக்கு 

தெரிய வந்துள்ளது. எனவே, உயர் கல்வி செயலகம் வரை விசாரணை நடத்த, கவர்னர் அலுவலகம் அனுமதி அளித்துள்ளது. மேலும், உயர் கல்வி செயலரை மாற்றவும்,தமிழக அரசு ஆலோசித்து வருவதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதுகுறித்து, உயர் கல்வித்துறை சங்கத்தினர் கூறியதாவது:

மதுரை காமராஜர் பல்கலை அதிகாரிகள் பற்றியும்,கவர்னர் குறித்தும், நிர்மலாதேவி பேசியுள்ளார். இதுகுறித்து, மாணவியர், கல்லுாரியில் புகார் அளித்தபோதே, உயர் கல்வி செயலர் விசாரணை நடத்தியிருக்க வேண்டும். அப்படி நடந்திருந்தால், கவர்னர் மீது, தேவையற்ற பழி சுமத்தப்பட்டிருக்காது. இந்த விவகாரத்தில், உயர் கல்வி செயலர், மவுனமாக இருந்தது ஏன்?

பல பல்கலைகளில், துணைவேந்தர் இல்லாத நேரங்களில், தற்காலிக ஒருங்கிணைப்பு குழுவுக்கு, தன்னையே தலைவராக நியமித்து, பல்கலை நிர்வாகத்தில், ஆதிக்கம் செலுத்துவதையே, உயர் கல்வித்துறை செயலர் அதிகம் விரும்புகிறார். 


சென்னை பல்கலையில், பட்டமளிப்பு சான்றிதழில், துணை வேந்தருக்கு பதில், தன் கையெழுத்து இடம்பெற முயற்சி எடுத்தார். ஆனால், ஆசிரியர் சங்கங்களின் கடும் எதிர்ப்பால், இந்த முடிவு கைவிடப்பட்டது.உயர் கல்வித்துறை பிரச்னைகள் குறித்து, பேராசிரியர் சங்கங்களின் சார்பில், செயலகத்தில் அளித்த புகார்கள் கிடப்பில் போடப் படுகின்றன. உயர் கல்வியில் நடக்கும் ஊழல்களை களைய, உயர் அதிகாரம் உடைய அமைப்பை உருவாக்க வேண்டும் என, பேராசிரியர் சங்க கூட்டமைப்பினர், தீர்மானம் நிறைவேற்றினர். இந்த கோரிக்கையும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.


சென்னை பல்கலையில், பல்வேறு முறைகேடுகளை, துணை வேந்தர் துரைசாமி கண்டறிந்தார். அவற்றின் மீது, உயர் கல்வி செயலர், எந்த விசாரணையும் நடத்தவில்லை. கோவை பாரதியார் பல்கலையின் முறைகேடு கள் குறித்து, பல்கலையின் இணைப்பு கல்லுாரி நிர்வாகத்தினர், பல முறை முறையிட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இறுதி யாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் தலையிட்ட பிறகே, ஊழல் அம்பலமானது.


பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் ஏற்பட்ட ஊழல் குறித்தும், தனி விசாரணை நடத்தவில்லை. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதியை, பள்ளிக் கல்வித்துறை முன்கூட்டியே அறிவித்து விட்டது. ஆனால், அண்ணா பல்கலையில், இன்ஜினியரிங் படிப் புக்கான, விண்ணப்ப பதிவு தேதியை, முடிவு செய்யாமல், உயர் கல்வி செயலகம் காலம் தாழ்த்துகிறது.அண்ணா பல்கலையில், பேராசிரியர் நியமனத்தில் ஏற்பட்ட முறைகேடு குறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதன்பிறகும், பேராசிரியர் நியமனம் குறித்து, உயர் கல்வி செயலர் விசாரணை நடத்தவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

நீட் தேர்வுக்கூடங்களை மாற்ற இயலாது: சிபிஎஸ்இ அறிவிப்பு

எம்.பி.பி.எஸ். படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு கூடங்களை மாற்ற இயலாது என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சிபிஎஸ்இ நீட் தேர்வு இயக்குநரகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு:

நீட் தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்த பிறகு மாணவர்கள் தரப்பில் இருந்து சில கோரிக்கைகள் வந்துள்ளன. அதன்படி, தாங்கள் முதல் தேர்வாக குறிப்பிட்டிருந்த நகரத்தில் தங்களுக்கு தேர்வுக்கூடம் அளிக்கப்படவில்லை என பலரும், தேர்வு நடைபெறும் நகரத்தை தவறாக தேர்வு செய்துவிட்டதாக பலரும் கூறி, தங்களுக்கு தேர்வு நடைபெறும் நகரங்களை மாற்றித் தரும்படி கோரியுள்ளனர். 
ஏற்கெனவே, தேர்வு அறிவிக்கையில் தெரிவித்த விதிகளின்படி, எந்தக் காரணத்தைக் கொண்டும் தேர்வு நகரங்கள், தேர்வுக் கூடங்கள் மாற்றப்படாது. ஏனென்றால், நீட் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டன. 
மேலும், தேர்வு எழுதும் நகரங்கள் கணினி மூலமாகவே ஒதுக்கப்பட்டன. அதில் மனித தலையீடுகள் எதுவும் நிகழவில்லை. எனவே, தேர்வுக்கூடத்தை மாற்ற இயலாது. இதுதொடர்பாக தேர்வர்களின் கோரிக்கைகளுக்கு தனித்தனி பதில்களும் அனுப்பப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தலை நடத்தலாம்.. தடையை நீக்கி உத்தரவிட்டது சுப்ரீம்கோர்ட்

டெல்லி: தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.


தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் நடைமுறைகளில் பாரபட்சம் காட்டப்படுவதாக தி.மு.க. எம்.எல்.ஏ. சக்கரபாணி உயர்நீதிமன்ற கிளையில் வழக்கைத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த மதுரை ஹைகோர்ட்டு கிளை, தேர்தல் பணிகளை நிறுத்திவைக்கவும், 3, 4 மற்றும் 5-வது கட்ட தேர்தல்களை நடத்த தடை விதித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தேர்தல் நடவடிக்கைகளில் ஹைகோர்ட் தலையிட்டு தடை விதிக்க முடியாது என்று கூட்டுறவு சங்க தேர்தல் கமிஷன் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தது.

தமிழக அரசு சார்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது. தமிழக அரசின் மனுவை விசாரித்த சுப்ரீம்கோர்ட், கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் நடத்த அனுமதி அளித்த போதிலும், தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது சுப்ரீம் கோர்ட் நிபந்தனை விதித்துள்ளது. தேர்தலை நடத்தி விட்டு மே 3 ஆம் தேதி அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை மாணவர்கள் குறைந்தால் வகுப்புகளை இழுத்து மூடுவதா? வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை உள்ள வகுப்புகளை மூடவேண்டும் என பள்ளிக்கல்வித் துறை  உத்தரவிட்டுள்ளது. 
இது தொடர்பாக, பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நகர்ப்புற அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 30 மாணவர்களுக்குக் குறைவாக உள்ள வகுப்புகளை மூட வேண்டும். கிராமப்புற அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 15 மாணவர்களுக்குக் குறைவாக இருந்தால் வகுப்புகளை மூட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அ.தி.மு.க. அரசுக்கு ஏன் இந்தக் கேடு கெட்ட புத்தி! 
ராஜகோபாலாச்சாரியாரின் வழியிலே செயல்படத் தொடங்கிவிட்டார்களா? மீண்டும் குலக்கல்வியா?
1937-1939 ஆம் ஆண்டுகளில் ராஜகோபாலாச்சாரியார் சென்னை மாநிலப் பிரதமராக இருந்தபோது 2500 கிராமப் பள்ளிகளை இழுத்து மூடினார். 1952 இல் மறுமுறை ஆட்சிக்கு வந்தபோது 6000 பள்ளிகளை இழுத்து மூடி அரை நேரம் படித்தால் போதும்; மீதி அரை நேரம் அப்பன் தொழிலைப் படித்தால் போதும் என்ற கல்வித் திட்டம் ஒன்றைக் கொண்டு வந்தார்.



ஆச்சாரியாரைப்பற்றி அறிந்தவர் அல்லவா அய்யா தந்தை பெரியார், இது நவீனக் குலக்கல்வித் திட்டம், வருணாசிரமக் கல்வி என்று கூறி, போர்ப்பறை முழங்கினார். 



நாடே தந்தை பெரியார் தலைமையில் கிளர்ந்தெழுந்தது. மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என்று கட்சிகளைக் கடந்து தந்தை பெரியார் தலைமையிலே கனன்று எழுந்தது தமிழ்நாடு.



இந்தக் குலக்கல்வித் திட்டத்தை விலக்கிக் கொள்ளாவிட்டால், கழகத் தோழர்களே! பெட்ரோலும், தீப்பந்தமும் தயாராகட்டும்; நாள் குறிப்பிடுவேன், அக்கிரகாரத்திற்கு நெருப்பு வையுங்கள் என்ற அறிவிப்புக் கொடுத்தார்.



விளைவு ஆச்சாரியார் பதவியை விட்டு விலகி ஓடும்படிச் செய்யப்பட்டது.



65 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இந்த நிலவரம், அ.தி.மு.க. அரசுக்குத் தெரியாதா? எம்.ஜி.ஆர். அவர்களே வருமான வரம்பு கொண்டு வந்து கையைச் சுட்டுக்கொண்டாரே! மாணவர்கள் குறைந்தால் அதற்கான காரணத்தைக் கண்டறிந்து, சரி செய்ய வேண்டுமே தவிர, குல்லாய்க்கு ஏற்ப தலையைச் சீவக்கூடாது!



இது பணப் பிரச்சினையல்ல - தலைமுறை தலைமுறையாக கல்வி மறுக்கப்பட்ட சமுதாயத்தின் தலையை நிமிர்த்தும் மிகப்பெரும் சமூகப் பிரச்சினை! இதில் வேண்டாம் விஷப் பரீட்சை!

அ.தி.மு.க. அரசு பாம்புப் புற்றுக்குள் கைவிட ஆசைப்படுகிறதா? எரிமலையை எழுப்ப வேண்டாம். சமூகநீதியில் கை வைத்தால், நாடே தீப்பற்றி எரியும் - ஜாக்கிரதை!



பாதிக்கப்படுவோர் யார்?



இன்னும் நூற்றுக்கு நூறு கல்வி என்ற  நிலையை எட்டவில்லை. வகுப்புகளை இழுத்து மூடினால் அந்தப் பிள்ளைகள் எங்கே போய்ப் படிப்பார்கள்? இதில் பாதிக்கப்படுவோர் - உயர்ஜாதியினரோ,  செல்வந்தர்களோ அல்ல; ஒடுக்கப்பட்ட மக்களும், கிராமப்புற மக்களும்தான்

ஏற்கெனவே விவசாயிகள் வெந்து மடிந்து கொண்டுள்ளனர். வேண்டாம் இந்த விபரீதம்! புலிவாலை மிதிக்கவேண்டாம்!

எச்சரிக்கை! எச்சரிக்கை!!
                           கி.வீரமணி,
தலைவர்                                                   திராவிடர் கழகம்.

20-04-2018

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிக்கான ஆசிரியர் -மாணவர் விகிதம் அட்டவணை ( 18.04/2018-ன் படி )

​ஆசிரியர் பணியிடங்களை நிர்ணயம் செய்தல் சார்ந்த பள்ளிக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண் 055838-நாள்:18.04/2018-ன் படி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிக்கான ஆசிரியர் -மாணவர் விகிதம் அட்டவணை 

                           

20/4/18

கல்வித்தகுதியை உறுதி செய்யாவிட்டால் தென்மாவட்ட கல்லூரி ஆசிரியர்களில் 30% பேர் வேலையிழக்கும் அபாயம்

நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் 30 சதவீத கல்லூரி ஆசிரியர்கள் தங்கள் தகுதியை நிரூபிக்காவிட்டால் வேலை இழக்கும் வாய்ப்பு உள்ளது என மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை துணைவேந்தர் பாஸ்கர் தெரிவித்தார். 
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:  கடந்த செமஸ்டர் தேர்வுக்கு விடைத்தாள் திருத்த வராத ஆசிரியர்கள் குறித்து கணக்கெடுத்து அவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. நடப்பு கல்வியாண்டில் செமஸ்டர் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கு அழைக்கப்பட்ட ஆசிரியர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும். இல்லையேல் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். 70 முதல் 80% ஆசிரியர்கள் வந்தால் கூட 15 நாட்களில் விடைத்தாள்கள் திருத்தி முடிக்கப்பட்டு ரிசல்ட் வெளியிட முடியும்.
பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் உரிய கல்வித்தகுதி இல்லாதவர்கள் இருப்பின் அவர்கள் தங்கள் தகுதியை உறுதி செய்து தெரிவிக்க வேண்டும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக இதுகுறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 
அதன் பின்னரும் விரிவுரையாளர்களுக்கான கல்வித்தகுதியை ஏற்படுத்திக் கொள்ளாதவர்கள் மீது வரும் கல்வியாண்டில் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு எடுக்கப்படும் போது 30 % ஆசிரியர்களின் பணிக்கு சிக்கல் வரலாம். வரும் கல்வியாண்டு முதல் 5 ஆண்டு படிப்பான ஒருங்கிணைந்த எம்எஸ்சி பயோ - டெக்னாலஜி அறிமுகம் செய்யப்படுகிறது. இதில்30 பேர் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார். .

பள்ளி மாணவர்களுக்கு அஞ்சல் தலை சேகரிப்பு முகாம்

கோடை விடுமுறையை முன்னிட்டு 3 நாள் அஞ்சல் தலை சேகரிக்கும் முகாமை தபால் துறை நடத்த உள்ளது. சென்னை நகர தலைமை போஸ்ட் மாஸ்டர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 
6ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் 25 முதல் 27ம் தேதி வரை, மே 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை, மே 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை, 16 முதல் 18 வரை, மே 23ம் தேதி முதல் 25ம் ேததி வரை என 5 பிரிவுகளாக அஞ்சல் தலை சேகரிப்பு முகாம் நடைபெறும். இந்த 3 நாட்களும் மாணவர்களுக்கு அஞ்சல் துறையின் செயல்பாடு, அஞ்சல் தலைகள் பயன்பாடு, அஞ்சல் துறையின் செயல்பாடுகள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்படும். 


இதற்காக கட்டணம் ரூ.250. அண்ணா சாலை தலைமை தபால் நிலைய வளாகத்தில் இந்த முகாம் நடைபெறும். அண்ணா சாலை தபால் நிலைய வளாகத்தில் இதற்கான விண்ணப்பத்தை பெறலாம். www.chennaipost.gov.in என்ற இணையதளத்தில் மாதிரி விண்ணப்பம் உள்ளது. இவ்வாறு கூறபப்ட்டுள்ளது. 

குழந்தைகளின் தகவல்களை குறிவைக்கும் பிளே ஸ்டோர் ஆண்ட்ராய்டு ஆப்ஸ்.!

தற்சமயம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஸ்மார்ட்போன்களை அதிக நேரம் பயன்படுத்துகின்றனர், குறிப்பாக குழந்தைகள் புத்தகங்களை படிப்பதை விட ஸ்மார்ட்போனில் உள்ள கூகுள் தளத்தில் அதிக நேரம் செலவிடுகின்றனர். 
மேலும் இப்போது புதிய தகவல் வெளிவந்துள்ளது, அதன்படி கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் அதிகமான செயலிகள் குழந்தைகளின் தனியுரிமை மீறுவதாக சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஆயிரக்கணக்கான செயலிகள் பெற்றோர்களின் அனுமதியின்றி குழந்தைகளின் தனிப்பட்ட தகவல்களை சேகரித்து இருப்பதாக ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6000 செயலி
இதுவரை பிளே ஸ்டோரில் இருக்கும் 6000 செயலிகளை ஆய்வு செய்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள், அதில் பெரும்பாலான
செயலிகள் குழந்தைகளின் ஆன்லைன் தனியுரிமை பாதுகாப்பு சட்ட விதியை மீறுவது கண்டறியப்பட்டுள்ளது.
பாதுகாப்பு
குறிப்பாக ஆய்வு செய்யப்பட்டதில் அதிமான செயலிகள் டிராக்கிங் மென்பொருள் தொழில்நுட்பங்களுடன் குழந்தைகளின் தகவலை சேகரித்து இருக்கின்றது. மேலும் 50 சதவீதம் செயலிகள் விதிகளுக்கு உட்பட்ட பாதுகாப்பு முறைகளை பின்பற்றவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
டிஸ்னி:
மேற்கூறிய படி 6000 செயலிகளில் 5,855 செயலிகள் சுமார் 7.5 லட்சத்திற்கும் அதிகமானோர் இன்ஸ்டால் செய்துள்ளனர், பின்பு

விரைவாக தகவல்களை சேகரிக்கும் தன்மை கொண்டுள்ளது இந்த செயலிகள். மேலும் இது தொடர்பாக டிஸ்னி, டியோலிங்கோ போன்ற நிறுவனங்கள் கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டெவலப்பர்கள்:
டெவலப்பர்கள் சரியான பாதுகாப்பு வசதி மற்றும் சட்ட விதிமுறைகளை பின்பற்றுவதில்லை என ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர், மேலும் கூகுள் நிறுவனம் சட்டவிதிமுறைகளை பின்பற்ற வேண்டிய கட்டயாத்தில் உள்ளது.
பேஸ்புக்:
மேலும் பேஸ்புக் போன்று கூகுள் நிறுவனமும் டேட்டா டிராக்கிங் தொழில்நுட்பம் மூலம் அதிக லாபம் பெருகிறது என்று தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது

தமிழக கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பான அனைத்து மனுக்கள் மீது ஏப்.20ல் விசாரணை : உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

தமிழக கூட்டுறவு சங்கத்தேர்தல் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்கள் மீதும் ஏப்ரல் 20ம் தேதி தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா அமர்வில் விசாரணை மேற்கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் நேற்று அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் அறிவிப்பை கடந்த மார்ச் மாதம் 5ம் தேதி மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இந்த தேர்தலுக்கு முதல்வர், துணை முதல்வர் மாநில பொருப்பாளராகவும், அமைச்சர்கள் எம்எல்ஏக்கள், மாவட்ட பொறுப்பாளர்களாகவும் அறிவிக்கப்பட்டன. இதில் 18,435 கூட்டுறவு சங்கங்களுக்கு 5 கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்ட இந்த தேர்தலில் ஆளும் அதிமுகவினர் அதிகாரத்தை பயன்படுத்தி தங்களுக்கு வேண்டியவர்களை மட்டுமே தேர்ந்தெடுத்ததால் எதிர்க்கட்சியினரின் வேட்பு மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. இதனால் பல இடங்களில் வாக்குப்பதிவு நடத்தாமலேயே சங்க நிர்வாகிகள், உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கப்பட்டது. மேலும் பல இடங்களில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தேர்தல்கள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

இதில் முதல் இரு கட்ட தேர்தல்கள் முடிவடைந்த நிலையில், தேர்தல் நடைமுறைகளில் பாரபட்சம் காட்டப்படுவதாக திமுக கொறடா சக்கரபாணி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, தேர்தல் பணிகளை நிறுத்தி வைக்கவும், 3, 4, மற்றும் 5 வது கட்ட தேர்தல்களை நடத்த தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில் உயர்நீதிமன்றத்தின் தடை உத்தரவிற்கு எதிராக தமிழக கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவும், திமுக தரப்பில் கேவிட் மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் உச்சநீதிமன்றம் நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில்,”கூட்டுறவு சங்க தேர்தல் விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் அனைத்தையும் வரும் வெள்ளிக்கிழமை அதாவது ஏப்ரல் 20ம் தேதி உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா அமர்வில் விசாரணை மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளது.

எல்.கே.ஜி., சேர்க்கைக்கு விண்ணப்ப பதிவு துவக்கம்:

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், எல்.கே.ஜி., வகுப்புக்கான மாணவர் சேர்க்கைப்பதிவு, நாளை துவங்குகிறது.இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி,
சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகள், எல்.கே.ஜி., அல்லது ஒன்றாம் வகுப்பில், 25 சதவீத இடங்களில், கல்வி கட்டணமின்றி, மாணவர்களை சேர்க்க வேண்டும். இந்த மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு, 2017 முதல், 'ஆன்லைன்' முறைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு, நாளை துவங்குகிறது. மே, 18க்குள் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். மாணவர்களின் பெற்றோர், அரசு தேர்வுத்துறையின், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், தங்கள் விபரங்களை பதிவு செய்ய, வசதி செய்யப்பட்டுள்ளது.

கிராமப்புற மாணவர்களுக்கு, அந்தந்த பகுதி தனியார் பள்ளிகள், வட்டார வள மையங்கள், கல்வித் துறை அலுவலகங்களில், விண்ணப்பம் பதிவு செய்யும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது என, பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

வேளாண் நுழைவுத்தேர்வு மாத இறுதியில் விண்ணப்பம் :

இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின், அகில இந்திய வேளாண் நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்பங்கள், இம்மாத இறுதியில் வெளியிடப்படுகின்றன.
ஐ.சி.ஏ.ஆர்., எனப்படும், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் கீழ் செயல்படும் வேளாண் பல்கலைக்கழகங்கள் மற்றம் நிறுவனங்களில், வேளாண்மை, பொறியியல், தோட்டக்கலை, கால்நடை மற்றும் மீன்வள அறிவியல் போன்ற பல்வேறு படிப்புகள் வழங்கப்படுகின்றன. இளநிலை படிப்பில், 15 சதவீதம், முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில், 25 சதவீத இடங்கள், ஒதுக்கீட்டு முறையில் நிரப்பப்படுகின்றன.இதற்காக ஒவ்வொரு ஆண்டும், தேசிய அளவில் வேளாண் நுழைவுத் தேர்வை, ஐ.சி.ஏ.ஆர்., நடத்துகிறது.இந்தாண்டுக்கான, இளநிலை படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு, மே, 12; முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கான தேர்வு, மே, 13 தேதிகளில் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.ஐ.சி.ஏ.ஆர்., நிறுவன விஞ்ஞானி ஒருவர் கூறுகையில், 'நிர்வாக காரணங்களால், நுழைவுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. விரைவில்புதிய தேதிகள் அறிவிக்கப்படும்.

 ஏப்ரல் இறுதி வாரத்தில், விண்ணப்பங்கள் வெளியிடப்படும்.'இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின், www.icar.org.in என்ற இணையதளத்தில், தகவல்களை அறிந்துகொள்ளலாம். வேளாண் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், அரசு உதவித்தொகையுடன் படிக்க, இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்' என்றார்.

விரைவில் பணிநிரவல் ? - 01.08.2017- படி உபரி ஆசிரியர்களில் STATION JUNIOR பட்டியல் கோரி இயக்குனர் உத்தரவு - CEO செயல்முறைகள் :

பள்ளிகளை திறப்பதோ, மூடுவதோ என்பதை அரசு தான் முடிவு செய்யும். பள்ளிக்கல்வி அலுவலர்கள் அதை முடிவு செய்ய முடியாது - அமைச்சர் செங்கோட்டையன்

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறார்.



அதில் அரசு, நிதி உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 1.8.2017 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதுகலை, பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்வது தொடர்பான தகவல்கள் இடம்பெற்று இருந்தன.

மேலும், சுற்றறிக்கையில் மேல்நிலை பிரிவுகளை பொறுத்தவரை பள்ளி அமைந்துள்ள பகுதி நகராட்சி, மாநகராட்சி பகுதியாக இருப்பின் குறைந்தபட்சம் 30 மாணவர்களும், ஏனைய ஊரக பகுதியாக இருப்பின் குறைந்தபட்சம் மாணவர் எண்ணிக்கை 15 ஆக இருத்தல் வேண்டும்.

குறைந்தபட்ச மாணவர்கள் இல்லாமல் நடைபெற்று வரும் பாடப்பிரிவுகளை நீக்கம் செய்துவிட்டு அதில் பயிலும் மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளுக்கு மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-

அரசு ஆணை 2010-ன் படி ஒவ்வொரு ஆண்டும் தேர்வு முடிந்த பிறகு, மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்துவதற்காக சில தகவல்கள் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும்.

அந்த அடிப்படையில் தான் இது வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் பள்ளிகள் மூடுவது தொடர்பாக எந்தவித கருத்தும் பதிவிடப்படவில்லை.

ஒரு பள்ளியை மூடுவது என்பதை அரசு ஆராய்ந்து, ஆலோசனை செய்து அதன் பின்னர் தான் முடிவு செய்யும்.

எனவே பள்ளிகளை திறப்பதோ, மூடுவதோ என்பதை அரசு தான் முடிவு செய்யும். பள்ளிக்கல்வி அலுவலர்கள் அதை முடிவு செய்ய முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஸ்மார்ட் வகுப்புக்கு ரூ.463 கோடி ஒதுக்கீடு'

பள்ளி மாணவர்களுக்கு, இணையம் வழியே கல்வி வழங்க, 463 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது,''
என, அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.சென்னை, அம்பத்துார் அருகே, சோழபுரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில், புதிய கட்டடத்தை திறந்து வைத்தபின், அவர் கூறியதாவது: 'நீட்' தேர்வை எதிர்கொள்ளும் வகையில், மாணவ - மாணவியருக்கு, சிறந்த ஆசிரியர்களால், சிறப்பான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. எனவே, வரும் நீட் தேர்வில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் வெற்றி பெறுவர். பள்ளிக் கல்வித் துறையை பொருத்த வரை, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆறாம் வகுப்பில் இருந்து, 3,000 பள்ளிகளில், 'ஸ்மார்ட்' வகுப்புக்களை ஏற்படுத்த, நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்காக, 463 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

டான்செட்' தேர்வு தேதி மாற்றம்

அண்ணா பல்கலை அறிவித்த, 'டான்செட்' நுழைவு தேர்வு தேதி, மாற்றப்பட்டு உள்ளது.பி.இ., - பி.டெக்., மற்றும் பி.ஆர்க்., பட்டப்படிப்பு முடித்தவர்கள், முதுநிலை இன்ஜினியரிங் மற்றும், எம்.பி.ஏ., படிப்புகளில் சேர, அண்ணா பல்கலை நடத்தும், டான்செட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
வரும் கல்வி ஆண்டுக்கான, டான்செட் நுழைவு தேர்வு, மே, 20ல் நடத்தப்படும் என, அறிவிக்கப் பட்டிருந்தது.அதே நாளில், அரசுத்துறையில், உதவி இன்ஜினியர் பணியில் காலியிடங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., போட்டி தேர்வு நடத்தப்படும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே, இன்ஜினியரிங் பட்டதாரிகள், போட்டி தேர்வை எழுதுவதா, மேல் படிப்புக்கான நுழைவு தேர்வை எழுதுவதா என, குழப்பம் அடைந்தனர்.இது குறித்து, நமது நாளிதழில், ஒரு வாரத்திற்கு முன் செய்தி வெளியானது. இதையடுத்து, டான்செட் தேர்வு தேதியை மாற்றும்படி, தமிழக உயர்கல்வித்துறைக்கு, டி.என்.பி.எஸ்.சி., கடிதம் அனுப்பியது.இதை தொடர்ந்து, டான்செட் தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை, அண்ணா பல்கலை டான்செட் தேர்வு கமிட்டி செயலர், நாகராஜன் நேற்று அறிவித்தார்.புதிய அறிவிப்பின்படி, அண்ணா பல்கலையின் டான்செட் தேர்வு, எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., - எம்.பிளான் மற்றும், எம்.பி.ஏ., படிப்புகளுக்கு, மே, 19ல் தேர்வு நடத்தப்படுகிறது. எம்.சி.ஏ., படிப்புக்கு, மே, 20ல் தேர்வு நடத்தப்படுகிறது

பிளஸ் 1 சேர்க்கை : கல்வித்துறை அதிரடி

பிளஸ் 1ல், ஒவ்வொரு பாடப்பிரிவிலும், கிராமப்புறங்களில், 15 பேர்; நகர்ப்புறங்களில், 30க்கும் மேற்பட்ட மாணவர்களை சேர்க்க வேண்டும்' என, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.  பள்ளிகளில், ஆசிரியர்கள், மாணவர்கள் விகிதத்தை பராமரிப்பது குறித்து, அவரது உத்தரவு:ஒவ்வொரு பள்ளியிலும், பிளஸ் 1 வகுப்பில், மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். நகர்ப்புற பள்ளிகளில், ஒரு பாடப்பிரிவில், குறைந்த பட்சம், 30 பேர்; கிராமப்புறங்களில், 15 பேர் இருக்க வேண்டும். இந்த எண்ணிக்கையை விட, குறைவாக இருக்கும் பாடப்பிரிவுகளை நடத்த முடியாது. குறைந்தபட்ச மாணவர் எண்ணிக்கையை பராமரிக்கும் வகையில், வரும் கல்வி ஆண்டில், அதிக மாணவர்களை சேர்க்க, தலைமை ஆசிரியர்கள், முயற்சி எடுக்க வேண்டும்.ஆக., 1 நிலவரப்படி, இந்த எண்ணிக்கை இல்லாவிட்டால், குறைந்த மாணவர்கள் உள்ள பாடப்பிரிவு கலைக்கப்பட்டு, அருகில் உள்ள பள்ளிகளில், மாணவர்களை சேர்க்க வேண்டும்.இவ்வாறு, இளங்கோவன் உத்தரவிட்டு உள்ளார்.

தவறான தகவல் தந்தால் நடவடிக்கை: வருமான வரித் துறை

வருமான வரி செலுத்துவதில் இருந்து தப்பிக்க, வருமானத்தை குறைத்து அல்லது பிடித்தங்களை உயர்த்தி காட்டும், அரசு மற்றும் தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'
என, வருமான வரித் துறை எச்சரித்துள்ளது.கர்நாடக மாநிலத்தில் செயல்படும், ஒரு தகவல் தொழில்நுட்ப துறை நிறுவனத்தின் ஊழியர்கள், வருமான வரி செலுத்துவதில் இருந்து தப்பிக்க, வருமானத்தை குறைத்தும், விலக்குகள் மற்றும் பிடித்தங்களை அதிகரித்து, கணக்கு தாக்கல் செய்திருந்தது, கண்டுபிடிக்கப்பட்டது; அவர்களுக்கு எதிராக, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது.இந்நிலையில், பெங்களூரில் இயங்கும், வருமான வரித் துறையின், மத்திய செயலாக்க மையம், ஒரு ஆலோசனை குறிப்பை நேற்று வெளியிட்டது; அதில் கூறியிருப்பதாவது:வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர், சட்டவிரோதமாக, வருமானத்தை குறைத்தும், பிடித்தங்கள் மற்றும் விலக்குகளை அதிகரித்தும் காட்டியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க, அவர்கள் பணிபுரியும் நிறுவனத்திற்கு உத்தரவிடப்படும்.அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றுவோர். இத்தகைய தவறை செய்திருந்தால், பணியாளர் நடத்தை விதிகளின் கீழ், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, 'விஜிலென்ஸ்' பிரிவுக்கு பரிந்துரைக்கப்படும்.தவறான தகவல் தந்தது கண்டுபிடிக்கப்பட்டால், அது, வருமான வரி சட்டப் பிரிவுகளின் கீழ், தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுவதுடன், அவர்களுக்கு திரும்பக் கிடைக்க வேண்டிய பணப் பயன்கள் தாமதமாகும்.வருமான வரி படிவங்களில் பொய்யான தகவல்களை தர உதவும், வரி ஆலோசகர்கள் மீது, குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க, சி.பி.ஐ., மற்றும் அமலாக்க துறைக்கு பரிந்துரைக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

19/4/18

2018ம் ஆண்டு 'நீட்' ஹால்டிக்கெட் வெளியீடு..கெடுபிடி தொடர்கிறது :

2018ம் ஆண்டிற்கான 'நீட்' ஹால்டிக்கெட் இன்று வெளியிடப்பட்டது. சிபிஎஸ்இ இணைய தளத்தில் இன்று வெளியான ஹால்டிக்கெட்டில் தேர்வு எழுதுவோரின் புகைப்படம், தேர்வு மைய விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு தேர்வு அறைக்குள் அனுமதியில்லாத பொருட்கள் குறித்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது. அதோடு ஆடை கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது. முறைகேடு தவிர்க்கும் வகையில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இத்தகைய கெடுபிடிகளால் மாணவ மாணவிகள் பெரும் தவிப்புக்கு ஆளாகினர்.
தேர்வு எழுதுவோர் இலகு ரக ஆடைகள் தான் அணிய வேண்டும். அறைக் கை சட்டை தான் அணிய வேண்டும். பெரிய அளவில் பட்டன்கள் இருக்க கூடாது. ஆடை ஊசி, பேட்ஜ், பூ அணிய கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கை நீட் கட்டாயம் என்பது கடந்த ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டது. தேர்வு மையத்திற்கு சென்ற மாணவ மாணவிகளிடம் அதிகளவில் கெடுபிடிகள் கடந்த ஆண்டு கடைபிடிக்கப்பட்டது.
முழு கை சட்டை அணிந்தவர்கள், ஷூ அணிந்தவர்கள் அனுமதிக்கப்படவில்லை. சாதார செருப்பு, ஹீல்ஸ் குறைவான செருப்புகள், சாண்டல் காலணிகள் போன்றவை மட்டுமே அனுமதிக்கப்பட்டது. உச்சகட்டமாக கேரளாவில் ஒரு பெண் அணிந்திருந்த ப்ரா அகற்றப்பட்டது. வெடிகுண்டு சோதனையின் போது ப்ராவில் இருந்த இரும்பு கொக்கியால் சத்தம் கேட்ட காரணத்தால் அகற்றப்பட்டதாக பின்னர் விளக்கம் அளிக்கப்பட்டது.
ஜீன்ஸ் பேன்ட்களில் இருந்து பாக்கெட்கள், இரும்பு பட்டன்கள் அகற்றப்பட்டது. இது போல் இந்த ஆண்டும் கெடுபிடிகள் அதிகமாக இருக்கும். அதனால் நீட் எழுத செல்லும் மாணவ மாணவிகள் ஆடை, அலங்கார பொருட்கள், காலணிகள் குறித்த விஷயத்தில் முன்னெச்சரிக்கையாக செல்லுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது..

கோடை விடுமுறைக்கு பின் புதிய பாடத்திட்ட பயிற்சி!!

கோடை விடுமுறைக்கு பிறகே, ஆசிரியர்களுக்கு, புதிய பாடத்திட்ட பயிற்சி அளிக்க, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.தமிழகத்தில், 13 ஆண்டுகளுக்கு பின், அனைத்து வகுப்புகளுக்கும் பாடத்திட்டம் மாற்றப்பட்டு உள்ளது. பள்ளிக் கல்வி செயலர், உதயசந்திரன் மேற்பார்வையில், புதிய பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. வரும் கல்வி ஆண்டில், 1, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் அமலுக்கு வருகிறது.

புதிய பாடத்திட்டப்படி, எப்படி பாடம் நடத்துவது, அதில் உள்ள முக்கிய அம்சங்கள் என்ன என்பது போன்ற பயிற்சிகள், ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட உள்ளன. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், இந்த பயிற்சி வழங்கப்பட உள்ளது.பள்ளி துவங்குவதற்கு முன், கோடை விடுமுறையில் பயிற்சி தரலாம் என, முடிவு செய்யப்பட்டுஇருந்தது. ஆனால், 'கோடை விடுமுறையை ரத்து செய்யக் கூடாது' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து, கோடை விடுமுறைக்கு பின், புதிய பாடத்திட்டம் குறித்த பயிற்சி அளிக்கலாம் என, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்து உள்ளது

12 ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிக்கு வராத தனியார் பள்ளி ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்கப்படும் -அமைச்சர் செங்கோட்டையன்

வரும் கல்வியாண்டுக்கான புத்தகங்களை இணையதளம் மூலம் பெறலாம்!!!

வரும் கல்வியாண்டுக்கான (2018-19) பாடநூல்களை இணையதளம் மூலம் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியது:-
தமிழகத்தில் வரும் கல்வியாண்டுக்கான பாடநூல்களை பள்ளிகள் மொத்தமாக, தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழகத்திடமிருந்து கொள்முதல் செய்து விநியோகிக்கின்றன.
நிகழாண்டு புதிய பாடத்திட்டத்தின்படி அச்சிடப்படவுள்ள 1,6,9,11 ஆகிய வகுப்புகளுக்குத் தேவையான நூல்கள் ஜூன் மாதத்தில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவை தவிர 2,3,4,5,7,8,10, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கான பாடநூல்கள், சென்னை நுங்கம்பாக்கம் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதேபோன்று, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மையத்திலும் பாடநூல் விற்பனை தொடங்கியுள்ளது.
மேலும் வெளி மாவட்டங்களில் உள்ள மாணவர்கள், பெற்றோர் வசதிக்காக www.textbookcorp.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து பணம் செலுத்தி பாட புத்தகங்களை பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
இணையதளத்தில் பதிவு செய்த அடுத்த மூன்று நாள்களுக்குள் பாடநூல்கள் நேரடியாக வீடுகளுக்கே கூரியர் சேவை மூலம் அனுப்பி வைக்கப்படும். பாடநூல்கள் விலை விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் நிறுவனத்தில் ஏற்கெனவே பதிவு செய்த பள்ளிகள், பாடநூல்களை மொத்தமாகப் பெறுவதற்கு இணையதளத்தைத் தொடர்பு கொள்ளலாம் என அவர்கள் தெரிவித்தனர்.

மாதிரி மாணவர் சேர்க்கை விண்ணப்பம் :

தொடக்கக் கல்வித் துறை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை பற்றிய சரியான தகவல் --- தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவிப்பு.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஏப்ரல் 21 முதல் பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை விடப்படுகிறது என தெரிவித்திருந்தார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அறிவிப்பால் ஏப்ரல் 19ஆம் தேதியுடன் பள்ளி வேலைநாள்கள் முடிவதாக இருந்த சூழ்நிலை ஏப்ரல் 20ஆம் தேதியும் பள்ளி வேலைநாள் என்ற நிலை உருவானது.

சென்ற ஆண்டு மாறுதல் ஆணை பெற்று விடுவிக்கப்படாமல் (ஈராசிரியர் பள்ளிகளில்) உள்ள ஆசிரியர்களை தற்போது பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் ஆணைக்கிணங்க ஏப்ரல் 18 ஆம் தேதி விடுவித்து ஏப்ரல் 19 ஆம் தேதிக்குள் பணியில் சேர்ந்துகொள்ள குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆணை அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் இ.மெயில் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

பள்ளி கோடை விடுமுறை மாற்றம் தொடர்பாக எழுத்து பூர்வமான அறிவிப்புகள் எதுவும் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்படாததால் ஏற்கனவே உள்ள பள்ளி வேலைநாள் கால அட்டவணைப்படி ஏப்ரல் 19 ஆம் தேதிதான் இவ்வாண்டின் கடைசி வேலைநாளாகும். ஏப்ரல் 20 ஆம் தேதி கோடைவிடுமுறை தொடங்குகிறது.

தொடக்கக் கல்வித் துறை பள்ளிகள் 210 பள்ளி வேலைநாள்கள் முடித்திருக்க வேண்டும். பள்ளி வேலைநாள்கள் 210 க்கு குறைவாக உள்ளது எனில் ஏப்ரல் 20 பள்ளி வேலைநாளாக செயல்படலாம். இதில் வேறு எந்தவித குழப்பமும் தேவையில்லை.

விஐபி வரவேற்பில் மாணவியர் பங்கேற்க தடை

அருப்புக்கோட்டையில் உள்ள, தேவாங்கர் கலை கல்லுாரி கணித பேராசிரியை, நிர்மலாதேவி, தன்னிடம் படிக்கும், பி.எஸ்சி., மாணவியரை, தவறான வழிக்கு துாண்டிய விவகாரம், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக வெளியான, 'ஆடியோ' பதிவில், கல்லுாரி நிகழ்ச்சிகளுக்கு, வி.ஐ.பி.,க்கள் என்ற, முக்கிய பிரமுகர்கள் வருகை தரும்போது, சில விஷயங்கள் தேவைப்படுவதாக, மாணவியரிடம் நிர்மலா தேவி கூறியுள்ளார். இதனால், பெற்றோர்களும், கல்வியாளர்களும், அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதையடுத்து, கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில், உபசரிப்பு, வரவேற்பு, விருந்து போன்றவற்றில், மாணவியர் மற்றும் பேராசிரியைகளை பங்கேற்க அனுமதிக்க வேண்டாம் என, கல்லுாரி முதல்வர்களுக்கு, உயர் கல்வித் துறை சார்பில், சுற்றறிக்கை அனுப்ப உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

பத்தாம் வகுப்பு அறிவியலில் தேர்ச்சி எளிது : ஆசிரியர், மாணவர்கள் கருத்து

பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெறுவது எளிது, என ஆசிரியர், மாணவர்கள் தெரிவித்தனர்.
ஆர்.விஷால், சுவார்ட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி: 15 ஒரு மதிப்பெண் வினாக்களில் இரண்டு வினாக்கள் விடை எழுத முடியவில்லை. இரண்டு மதிப்பெண்ணில், 32 கேள்விகளில் 20 கேள்விகள் எழுதவேண்டும். இவை எளிதாக இருந்தன. 5 மதிப்பெண் கேள்விகளில் புத்தகத்தின் உள்ளே இருந்து அதிகம் இடம்பெற்றிருந்தது.
ஜே.லேஷிதா, அரசு உயர்நிலைப்பள்ளி, பேராவூர்: ஒரு மதிப்பெண்ணில் 13, 14 கேள்விகள் பாடத்தின் உள்ளே இருந்து கேட்கப்பட்டதால், விடை அளிக்க முடியவில்லை. ஐந்து மதிப்பெண்ணிலும், அது போல் கேட்கப்பட்டாலும், ஆசிரியர்கள் எங்களுக்கு பயிற்சிஅளித்ததால் எளிதானது.
ஹெப்சி ஜெனிடா ஆக்னஸ், சுவார்ட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம்: ஒன்று, ஐந்து மதிப்பெண் வினாக்கள், புத்தகத்தின் உள்ளே இருந்து கேட்கப்பட்டிருந்தது. கேள்விகளை புரிந்து எழுதினால் அதிக மதிப்பெண் பெறலாம்.
பி.ஆறுமுகம், அறிவியல் பட்டதாரி ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, அழகன்குளம்: முந்தைய தேர்வுகளை காட்டிலும், அறிவியல் தேர்வு எளிமை. அனைவரும் தேர்ச்சி பெறுவது எளிது. இரண்டு ஒரு மதிப்பெண் வினாக்கள் சிந்தித்து எழுதுவதாக இருந்தது.மேலும், இரண்டு மற்றும் ஐந்து மதிப்பெண் கேள்விகளில் 'அ' மற்றும் 'ஆ' என இரண்டு பகுதியிலும் சரியாக எழுதினால் மட்டுமே முழு மதிப்பெண் பெற முடியும்.

தொடக்க, நடுநிலை பள்ளிகளில் டி.சி., வழங்குவதில் குழப்பம்

விடைத்தாள் திருத்தாமல் போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்- உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

திட்டமிட்டபடி +2 தேர்வு முடிவுகள் மே 16-ஆம் தேதி வெளியாகும் என்று தமிழக அரசு உறுதிப்படத் தெரிவித்துள்ளது. மேலும் போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விடைத்தாள் திருத்தும் பணியின் போது, ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தடை கோரிய வழக்கில் ஆசிரியர் சங்கம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

18/4/18

பிளஸ் 1 தேர்வு நிறைவு: மே 30ல் 'ரிசல்ட்' வெளியீடு

சென்னை: பிளஸ் 1 பொதுத்தேர்வு நேற்றுடன் முடிந்தது. தேர்வு முடிவுகள், மே, 30ல் வெளியாகின்றன.

தமிழகத்தில், பிளஸ் 1 பொது தேர்வு, மார்ச், 7ல் துவங்கியது. இந்தாண்டு முதன்முதலாக, பிளஸ் 1க்கு பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டதால், மாணவர்கள் மத்தியில், தேர்வு குறித்து பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அத்துடன், இந்த ஆண்டு தேர்வில், பெரும்பாலான பாடங்களில், வினாத்தாள்கள் கடினமாகவே இருந்தன. குறிப்பாக, தமிழ் இரண்டாம் தாள், இயற்பியல் தேர்வுகள் தவிர, அனைத்து பாடங்களிலும், மாணவர்கள் முழுவதுமாக விடை எழுத தடுமாறினர். கணிதம், வேதியியல், உயிரியல் போன்ற பாடங்களில், 'நீட்' மற்றும், ஜே.இ.இ., தேர்வுகளுக்கு கேட்கப்படுவது போன்ற, வினாக்கள் அமைந்துஇருந்தன. இந்த பாடங்களில், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெறும் மாணவர்கள் எண்ணிக்கை, மிக சொற்பமாகவே இருக்கும் என, ஆசிரியர்கள் தெரிவித்துஉள்ளனர். இந்நிலையில், பிளஸ் 1 தேர்வுகள் நேற்றுடன் முடிந்தன. முக்கிய பாடப் பிரிவு மாணவர்களுக்கு, ஏப்., 9ல், தேர்வுகள் முடிந்தன. மற்ற தொழிற்கல்வி மாணவர்களுக்கு, நேற்று தேர்வுகள் முடிந்தன. தேர்வின் முடிவுகள், மே, 30ல் வெளியாகின்றன.

ரூ.2,000 நோட்டுக்கு திடீர் தட்டுப்பாடு ஏன்?

சென்னை: ''ரிசர்வ் வங்கி, போதிய அளவுக்கு, 2,000 ரூபாய் நோட்டுகளை வழங்காததால், வங்கிகளில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது,'' என, அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் பொதுச்செயலர், தாமஸ் பிராங்கோ தெரிவித்தார்.

சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி: வங்கிகளின் வாரா கடன், ஒன்பது லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அதில், 88 சதவீதம், 'கார்ப்பரேட்' நிறுவனங்கள் வாங்கியவை. அந்த கடனை வசூலிக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.வாரா கடன் தொடர்பாக, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள சுற்றறிக்கை, இந்திய பொருளாதாரம் மற்றும் நிதி நிலைமையை, ஆபத்திற்கு அழைத்து செல்வதாக உள்ளது.பார்லிமென்ட் நிலைக்குழு, வாரா கடன் குறித்து, 2016 பிப்ரவரியில் கொடுத்த பரிந்துரைகளை, உடனடியாக நிறைவேற்ற வேண்டும். ரிசர்வ் வங்கி, போதிய அளவுக்கு, 2,000 ரூபாய் நோட்டுகள் சப்ளை செய்வதில்லை. இதனால், வங்கிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வங்கிகளில் இருந்து எடுத்த, 2,000 ரூபாய் நோட்டுகளை, வாடிக்கையாளர்கள், தட்டுப்பாடு காரணமாக, வீடுகளில் பத்திரப்படுத்தி விடுகின்றனர். இது, வங்கிகள் மீதான நம்பிக்கையை இழக்க செய்கிறது. பொதுத்துறை வங்கிகளின் நிர்வாக குழுவில், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பிரதிநிதியை, இடம்பெற செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டுறவு சங்கத் தேர்தலுக்குத் தடை: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை விதித்த தடைக்கு எதிராக தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

கூட்டுறவு சங்கத் தேர்தல் தொடர்பாக திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தொகுதி சட்டப்பேரவை திமுக உறுப்பினர் ஆர்.சக்கரபாணி, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், 'ஆளும் கட்சியினர் அதிகாரத்தைப் பயன்படுத்தி, தங்களது கட்சியைச் சார்ந்தவர்களை மட்டுமே கூட்டுறவு சங்கப் பதவிகளுக்கு தேர்வு செய்து வருவதால் கூட்டுறவு சங்கத் தேர்தலை ரத்து செய்து, சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும்' என்று கோரப்பட்டிருந்தது. 
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது, கூட்டுறவு சங்கத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், ஏற்கப்பட்ட மனுக்கள், நிராகரிக்கப்பட்ட மனுக்கள் உள்ளிட்டவற்றின் விபரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது. இது தொடர்பான மனு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் சி.டிசெல்வம், ஏ.எம். பஷீர் அகமது ஆகியோர் அடங்கிய அமர்வு முன் ஏப்ரல் 12-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் கூட்டுறவு சங்கத் தேர்தல் தொடர்பாக வேட்பு மனுக்களை வாங்கவோ, வேட்பு மனுக்களை பரிசீலிக்கவோ, அடுத்த கட்ட தேர்தல் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ஏப்ரல் 23 ஆம் தேதி வரை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையம் சார்பில் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைக்கு முன்பு ஓய்வு பெற்றோருக்கான நிலுவைத் தொகைகள்: 2 தவணைகளாக வழங்க தமிழக அரசு உத்தரவு

7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்பாக ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதிய நிலுவைத் தொகைகளை இரண்டு தவணைகளாக வழங்கிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் கடந்த ஆண்டு (2017) செப்டம்பர் 30-ஆம் தேதி வரையிலான காலத்தில் ஓய்வூதிய நிலுவைத் தொகைகளை இரண்டு கட்டங்களாக பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.
அரசுப் பணிகளில் இருந்து ஓய்வு பெறும் ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஓய்வூதிய பணப் பயன்கள் அளிக்கப்படும். அதாவது, பணிக் காலத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகைகள், பணிக் கொடைகள், விடுப்புகளை பணமாக மாற்றிக் கொள்ளுதல் போன்றவை ஓய்வு பெற்ற உடனேயே வழங்கப்படும். 
இந் நிலையில், கடந்த 2016 ஜனவரி 1-ஆம் தேதி முதல் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி வரையிலான காலத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஓய்வுக் கால பணப் பயன்கள் இரண்டு தவணைகளாக அளிக்கப்படும்.
முதல் தவணையானது, 2017-18-ஆம் நிதியாண்டிலும், இரண்டாவது தவணைத் தொகையானது 2018-19-ஆம் நிதியாண்டிலும் அளிக்கப்படும். ஏற்கெனவே முதல் தவணை அளிக்கப்பட்டிருந்தால், இரண்டாவது தவணையை இந்த மாதத்தில் இருந்தே (ஏப்ரல்) ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு வழங்க கருவூலம் மற்றும் கணக்குத் துறை அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முதல் தவணையைப் பெறாத ஓய்வூதியதாரர்கள் இரண்டு தவணைகளையும் சேர்த்து மொத்தத் தொகையாக பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தனது உத்தரவில் நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் தெரிவித்துள்ளார்.
ஏழாவது ஊதியக் குழு: தமிழகத்தில் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள் கடந்த ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, அதற்கு முந்தைய தேதி வரையில் ஓய்வு பெற்றோருக்கு ஓய்வூதிய பணப் பயன்களை இரண்டு தவணைகளாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அக்டோபர் 1-ஆம் தேதிக்குப் பிறகு ஓய்வு பெறுவோருக்கு ஓய்வூதியப் பணப்பயன்களும், தொகையும் மிகையளவு மாறுபடும். எனவே, அக்டோபர் 1-ஆம் தேதிக்கு முன்பாக ஓய்வு பெறுவோருக்கு பணப் பயன்களை இரண்டு தவணைகளாக விரைந்து அளித்திட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கம்ப்யூட்டர், ஃபேன், கடிகாரம்... 2 லட்சம் பொருள்களுடன் அரசுப் பள்ளிக்கு வந்த சீர்வரிசை!

சிதம்பரம் அருகே உள்ள நந்திமங்கலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கிவருகிறது. இந்தப் பள்ளியில் மாணவர்களைச் சேர்க்க வலியுறுத்தியும் பொது மக்களுக்கு அரசுப் பள்ளிமீது நல்ல எண்ணங்களை ஏற்படுத்தவும், தன்னார்வ அமைப்புகள் பள்ளிக்கு வழங்கிய பொருள்களைக் கிராம மக்கள் மேள தாளத்துடன் ஊர்வலமாக எடுத்துவரும் ஊர் கூடி கல்விச் சீர் திருவிழா என்ற வித்தியாசமான விழா நடந்தது.


தமிழகத்தில் மக்களின் ஆங்கிலக் கல்வி மோகத்தால் அரசுப் பள்ளிகளில் நாளுக்கு நாள் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள பல பள்ளிகள் மூடு விழா காணும்நிலை உள்ளது. தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க வலியுருத்தி மாணவர் சேர்க்கை விழிப்பு உணர்வுப் பேரணி, ஆசிரியர்கள் மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று மாணவர்கள் சேர்க்கையில் ஈடுபடுவது எனப் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகின்றது. இந்நிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே நந்திமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. கடலூர் மாவட்டத்தில் இயற்கை பேரிடர்கள் வரும் போதெல்லாம் பாதிக்கப்படும் இந்தக் கிராமம். ஏழை, எளிய விவசாயிகள் அதிகம் வசிக்கும் பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கிய கிராமம்.

இந்தக் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உதவி தலைமையாசிரியராகப் பணிபுரியும் சத்தியசீலன் என்ற பட்டதாரி ஆசிரியர் பள்ளியை மேம்படுத்தவும் மாணவர்கள் சேர்க்கையை ஊக்குவிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை ஆர்வமாக எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக அரசுப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை வலியுறுத்தியும் பொது மக்களுக்கு அரசுப் பள்ளிகள்மீது நல்ல எண்ணங்களை ஏற்படுத்தவும் பள்ளிக்கு தன்னார்வ அமைப்புகள் வழங்கிய கம்ப்யூட்டர், ஃபேன், கடிகாரம் தேசிய தலைவர்களின் படம் உள்ளிட்ட சுமார் 2 லட்சம் மதிப்புள்ள பொருள்களைப் பெண்கள், கிராம பொதுமக்கள் மேள தாளத்துடன் ஊர்வலமாகக் கிராமத்தின் முக்கிய தெருக்கள் வழியாக எடுத்து வந்து விழிப்பு உணர்வை ஏற்படுத்தினார்கள். பின்னர், பள்ளியில் நடந்த விழாவில் காட்டுமன்னார்கோயில் எம்.எல்.ஏ முருகுமாறன், சிதம்பரம் எம்.எல்.ஏ பாண்டியன், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், கிராம முக்கியஸ்தர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர். மிகவும் பின்தங்கிய பகுதியில் உள்ள பள்ளியில் நடந்த இந்த ஊர் கூடி கல்விச் சீர் திருவிழா அந்தக் கிராம மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோடை விடுமுறைக்கு பின் புதிய பாடத்திட்ட பயிற்சி!!

கோடை விடுமுறைக்கு பிறகே, ஆசிரியர்களுக்கு, புதிய பாடத்திட்ட பயிற்சி அளிக்க, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், 13 ஆண்டுகளுக்கு பின், அனைத்து வகுப்புகளுக்கும் பாடத்திட்டம் மாற்றப்பட்டு உள்ளது. பள்ளிக் கல்வி செயலர், உதயசந்திரன் மேற்பார்வையில், புதிய பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. வரும் கல்வி ஆண்டில், 1, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் அமலுக்கு வருகிறது.


புதிய பாடத்திட்டப்படி, எப்படி பாடம் நடத்துவது, அதில் உள்ள முக்கிய அம்சங்கள் என்ன என்பது போன்ற பயிற்சிகள், ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட உள்ளன. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், இந்த பயிற்சி வழங்கப்பட உள்ளது.பள்ளி துவங்குவதற்கு முன், கோடை விடுமுறையில் பயிற்சி தரலாம் என, முடிவு செய்யப்பட்டுஇருந்தது. ஆனால், 'கோடை விடுமுறையை ரத்து செய்யக் கூடாது' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து, கோடை விடுமுறைக்கு பின், புதிய பாடத்திட்டம் குறித்த பயிற்சி அளிக்கலாம் என, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்து உள்ளது.

கிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறிய இந்திய சிறுவன்!!!

www.kalvikural.com

ஐதராபாத், தெலுங்கானாவை சேர்ந்த, 7 வயது சிறுவன், ஆப்ரிக்காவின் கிளிமஞ்சாரோ மலை சிகரத்தில் ஏறி, சாதனை படைத்துள்ளான். தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது.இங்குள்ள ஐதராபாதை சேர்ந்த சிறுவன், சமன்யூ பெத்துராஜு, 7. மலையேற்றத்தில் ஆர்வம் உடைய, இந்த சிறுவனை, அவனது பெற்றோர், ஊக்குவித்து வந்தனர்.மலைச்சிகரங்களில் ஏற, அவன் பயிற்சி பெற்றான். 


கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் உள்ள கிளிமஞ்சாரோ மலை சிகரத்தில் ஏற, முடிவு செய்தான்; இது ஆப்ரிக்காவின் மிக உயர்ந்த மலைச்சிகரம்.கடல் மட்டத்தில் இருந்து, 5,895 மீட்டர் உயரம் உடைய இந்த சிகரத்தில், சமீபத்தில், சிறுவன் ஏறினான். அவனுடன், அவனது தாயார், லாவண்யா, பயிற்சியாளர், உள்ளூர் மருத்துவர் மற்றும் மேலும் இரண்டு பேர் இணைந்தனர்.இந்த மலையேற்றம், மார்ச், 29ல் துவங்கி, ஏப்ரல், 2ல் முடிந்தது. உடல் நிலை காரணமாக, லாவண்யா, பாதியிலேயே விலகினார். சிறுவன் சமன்யூ, சற்றும் மனம் தளராமல், கிளிமஞ்சாரோவின் உச்சியான, உஹூரூ சிகரத்தில் ஏறி, இந்திய கொடியை நாட்டினான்.''அடுத்த மாதம், ஆஸ்திரேலியாவில் உள்ள மலை சிகரத்தில் ஏறி, உலக சாதனை படைப்பதே, சமன்யூவின் லட்சியம்,'' என, அவனது தாயார், லாவண்யா தெரிவித்தார்.

வெப்பத்தாக்கம் காரணமாக செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து "தமிழக பேரிடர் மேலாண்மை துறை அறிவிப்பு!

வருங்கால வைப்புநிதி வட்டியை குறைப்பதா?:-தொழிலாளர்கள் குமுறல்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி திருச்சியில் இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் குறித்த நாளிதழ் செய்தி!!!

விடைத்தாள் திருத்தும்போது மாரடைப்பால் உயிரிழந்த தலைமையாசிரியர்! - ஈரோடு அருகே சோகம்

                                        

கோபிசெட்டிபாளையத்தில் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த தலைமையாசிரியர் ஒருவர், பள்ளியிலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தாலுகாவை அடுத்த புஞ்சை புளியம்பட்டி காயிதே மில்லத் வீதியைச் சேர்ந்தவர், ஏசுராஜா (53). இவர், புஞ்சை புளியம்பட்டியிலுள்ள கே.வி.கே அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி வந்துள்ளார். தற்போது +2 பொதுத் தேர்வு விடைத்தாள்கள் திருத்தப்பட்டுவரும் நிலையில், கோபிசெட்டிபாளையத்தில் உள்ள பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணியில், மதிப்பெண் சரிபார்க்கும் அதிகாரியாக ஏசுராஜா இருந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று பிற்பகல் சுமார் 4.15 மணியளவில் மதிப்பெண் சரிபார்க்கும்போது திடீரென ஏசுராஜாவுக்கு மாரடைப்பு ஏற்பட, வலியால் துடித்துச் சரிந்திருக்கிறார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல ஏற்பாடுசெய்யும்போதே ஏசுராஜாவின் உயிர் பிரிந்தது. இதையடுத்து, ஏசுராஜாவின் குடும்பத்தினருக்குத் தகவல் சொல்ல, அவர்கள் உடலை அவர்களது சொந்த ஊரான புஞ்சை புளியம்பட்டிக்கு எடுத்துச் சென்றனர். உயிரிழந்த ஏசுராஜாவுக்கு 2 மகள்கள் உள்ளனர். அதில், ஒருவர் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறாராம். இன்னொரு மகளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பணியின்போது பள்ளிக்கூடத்திலேயே, தலைமையாசிரியர் ஒருவர் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Breaking News மெட்ரிக் பள்ளிகளுக்கு தேர்வுத் துறை எச்சரிக்கை. விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்களை அனுப்பா தனியார் பள்ளி தேர்வுகள் நிருத்தம்:


17/4/18

உண்மைத்தன்மை (GENUINENESS) கண்டறிய அனைத்து பல்கலைக் கழகங்களின் வரைவோலை தொகை அறிந்து கொள்ளுங்கள்.




1. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்- 600

2. அழகப்பா பல்கலைக்கழகம்- 250

3. தமிழ்நாடு பல்கலைக் கழகம்- 500

4. இந்திராகாந்தி பல்கலைக் கழகம் -200

5. தஞ்சை தமிழ் பல்கலைக் கழகம்-1000

6. பாரதியார் பல்கலைக் கழகம்- 500

7. பாரதிதாசன் பல்கலைக் கழகம் -1000

8. சென்னைப் பல்கலைக் கழகம்- அரசு ஊழியர்களுக்கு இலவசம்

9. மதுரை காமராஐர் பல்கலைக் கழகம் - 1500

10. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் -500

11. சாஸ்த்ரா பல்கலைக் கழகம்- 500

12. பெரியார் பல்கலைக் கழகம்- 250

13. Tamilnau Teacher Education University -350

14. சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகம் - துறை ரீதியாக பணம் பெற்று வழங்கும் அலுவலர்மூலமாக அனுப்பும் போது எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.

15. திருவள்ளுவர் பல்கலைக்கழகம்-275

நாட்டில் 24 போலி பல்கலைகள் யு.ஜி.சி., பட்டியல் வெளியீடு :

நாடு முழுவதும் செயல்படும், போலி பல்கலைகளின் பெயர் பட்டியல், பல்கலை மானியக்குழு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டில்,24,போலி பல்கலைகள்,யு.ஜி.சி.,பட்டியல்,வெளியீடு

,UGCகல்லுாரிகள் மற்றும் பல்கலைகளுக்கான அங்கீகாரம் வழங்குதல், கட்டமைப்பு, ஆராய்ச்சி நிதிகளை பகிர்ந்தளித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை, யு.ஜி.சி., எனப்படும், பல்கலை மானியக்குழு மேற்கொள்கிறது. யு.ஜி.சி., கட்டுப்பாட்டில் செயல்படும், 'நாக்' அமைப்பு,பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளின் கட்டமைப்பு வசதிகள், பாடத்திட்டம், ஆசிரியர்கள் குறித்து ஆய்வு செய்து, சிறப்பு அந்தஸ்தை தருகிறது.இதுபோன்ற, அங்கீகாரம், அந்தஸ்து, கட்டமைப்பு ஏதும் இல்லாத போலி கல்வி நிறுவனங்கள், மாணவர்கள் சேர்க்கையை நடத்துகின்றன. இக்கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களின் கல்வித்தகுதி சான்றிதழ்கள், எந்த வகையிலும் பயனளிக்காது.இதனால், ஆண்டுதோறும் மாணவர்கள் சேர்க்கை பணிகள் துவங்கும் முன், போலி பல்கலைகளின் பட்டியலை, யு.ஜி.சி., வெளியிடுவது வழக்கம்.

தற்போது, நாடு முழுவதும், 24 பல்கலைகள் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன. தமிழகத்தில் ஒரு பல்கலையும் இடம் பெறவில்லை.டில்லியில் 7 பல்கலைகள், உத்தரபிரதேசத்தில், 8; மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் தலா, 2; பீஹார், கர்நாடகா, கேரளா, மஹாராஷ்டிரா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தலா ஒன்று, இடம் பெற்றுள்ளன. வெளி மாநிலங்களில் கல்வி பயில செல்லும் மாணவர்கள், இப்பட்டியலை கவனித்து செயல்பட வேண்டியது அவசியம்.

நீதிமன்றம் மூலம் புதிய காப்பீடு திட்டத்தில் சிகிச்சைக்கு முழு பணமும் நஷ்ட ஈடும் பெற்ற ஆசிரியர்!

விடாமுயற்சியின் வெற்றி......
நீதியின் குரலும் புதிய காப்பீடு திட்டமும்.....

அன்பார்ந்த ஆசிரியர்களே , கரூர் மாவட்டம்-கடவூர் ஒன்றியம் இயக்க முன்னோடியும், எருதிக்கோன்பட்டி தலைமை ஆசிரியர் திரு.மாணிக்கம்  அவர்களுடைய துணை வியார் அவர்களின் இருதய அறுவை சிகிச்சைக்கான செலவு ரூ.2,41,000 . இதில் நமது TNNHIS ரூ.1,70,000 மட்டும் அனுமதித்தது. அதற்குமேல் தர மறுத்து  விட்டது.
எங்கெல்லாம் தர்மம் தாழ்ந்து அதர்மம் தலை தூக்குகிறதோ அங்கே நானே தோன்றுவேன் என பகவான் கிருஷ்ணர் கூறுவதாக படித்திருப்போம்அந்த வகையில் நமது மாணிக்கம் சார் அவர்கள்,
கரூர் மாவட்ட நுகர்வோர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து, தொடர் முயற்சியினால் கடந்த வாரம் தீர்ப்பு பெறப்பட்டது. தீர்ப்பில் முழுமையாக மருத்துவ செலவினை ஏற்பதோடு அந்த தொகைக்கு 9% வட்டியுடன் வழங்கவும் மனஉளச்சலுக்காக நஷ்ட ஈடாக ரூ.50,000 மற்றும் வழக்கு செலவுக்காக ரூ.3000 வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அதன் நகல் இணைத்து அனுப்பப்பட்டு உள்ளது அவசியம் முழுமையாக படிக்கவும். நமது மருத்துவ செலவுகள்,அதாவது மருத்துவமனையால் வழங்கப்படும் அனைத்து செலவுகளையும் TNNHIS  ஏற்கவேண்டும்.ரூ.4,00,000க்குள் அதற்கு மேல் ஆகும் செலவு நம்மை சார்ந்து எனவே விழிப்புடன் இருக்கவும். மேலும்  இவ்வழக்கில் உதவிய முன்னாள் பொருளர் திரு.செங்குட்டுவன் மற்றும் TNTF வட்டாரச் செயலர் திரு.இராஜ்குமார் ஆகியோர்க்கு நன்றியைத் தெரிவித்துள்ளார். இந்த தீர்ப்பு நமக்கு பெருமையும்,மகிழ்ச்சியும் அளிக்கிறது.இது போன்ற தீர்ப்பினை இதுவரை அரசூழியரும் ஆசிரியர்களும் எங்கும் பெற்றதாக செய்தி இல்லை. இது முன்னுதாரனமாக திகழும் என்பதில் ஐயமில்லை.aa

பகுதிநேர பி.இ., பி.டெக். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

பகுதிநேர பி.இ., பி.டெக். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் | பகுதிநேர பி.இ., பி.டெக் படிக்க விரும்புபவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு பகுதிநேர பி.இ., பி.டெக் மாணவர் சேர்க்கை மைய செயலாளர் வி.செல்லதுரை கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.


அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் வருகிற 2018-19-ம் கல்வி ஆண்டில், பகுதி நேர பி.இ., பி.டெக் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதன்படி கோவை அரசு பொறியியல் கல்லூரி (ஜி.சி.டி.), சேலம் அரசு பொறியியல் கல்லூரி, நெல்லை அரசு பொறியியல் கல்லூரி, காரைக்குடி அழகப்ப செட்டியார் பொறியியல் கல்லூரி, வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி, பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி, கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கல்லூரி, கோவை தொழில்நுட்ப கல்லூரி (சி.ஐ.டி.), மதுரை தியாகராஜா பொறியியல் கல்லூரி ஆகியவற்றில் பகுதிநேர பி.இ., பி.டெக் ஆகிய வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த படிப்புகளில் சேர டிப்ளமோ படிப்புகளை முடித்து 2 ஆண்டுகள் நிறைவடைந்தவர்கள் மற்றும் டிப்ளமோ முடித்து 2 ஆண்டுகள் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள் மட்டுமே தகுதியானவர்கள். இதன்படி பகுதிநேர பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர விரும்புபவர்கள் கடந்த 5-ந் தேதி முதல் விண்ணப்பங்களை பதிவு செய்து வருகின்றனர்.

அடுத்த மாதம் 10-ந் தேதி 4 மணிக்குள் www.ptp-et-n-ea.com என்ற முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வருகிற ஜூன் மாதம் 2-ந் தேதி நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

விஜயா வங்கியில் அதிகாரி பணிகள் :

பொதுத்துறை வங்கிகளில் ஒன்று விஜயா வங்கி. 2135 கிளைகள் மற்றும் 16 ஆயிரத்து 138 பணியாளர்களுடன் செயல்படும் பிரபலமான வங்கிகளில் ஒன்றாகும்.
தற்போது இந்த வங்கியில் மேலாளர்( சார்ட்டடு அக்கவுண்டன்ட்), மேலாளர் (சட்டம்), மேலாளர் (பாதுகாப்பு) போன்ற பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 57 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் சி.ஏ. பணிகளுக்கு 32 இடங்களும், சட்ட அதிகாரி பணிக்கு 21 இடங்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பணிகளுக்கு 20 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
செக்யூரிட்டி அதிகாரி பணிக்கு 45 வயதுடையவர்களும் விண்ணப்பிக்க முடியும். 1-3-2018-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படுகிறது. குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வும் பின்பற்றப்படுகிறது. சி.ஏ. இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், சட்ட பட்டதாரிகள் அந்தந்த பிரிவு அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பணி அனுபவம் அவசியம். ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்து துணை ராணுவம் அல்லது ராணுவம் அல்லது காவல் துறை போன்றவற்றில் 5 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் செக்யூரிட்டி அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் ரூ.600 கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.100 கட்டணம்செலுத்தினால் போதுமானது. 27-4-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். பின்னர் பூர்த்தியான விண்ணப்ப நகலை கணினிப் பிரதி எடுத்து குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். நகல் விண்ணப்பம் 4-5-2018-ந் தேதிக்குள் சென்றடைய வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை www.vijayabank.com

சிறப்பு ஆசிரியர் தேர்வு எழுதியவர்களுடன் தரையில் அமர்ந்து பேச்சுவார்த்தை தேர்வு முடிவு அடுத்த மாதம் வெளியிடப்படும் என அமைச்சர் உறுதி

சிறப்பு ஆசிரியர் தேர்வு எழுதியவர்களுடன் தரையில் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சிறப்பு ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவு அடுத்த மாதத்தில் வெளியிடப்படும் என்று உறுதி அளித்தார்.

சிறப்பு ஆசிரியர் தேர்வு தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உடற்கல்வி, தையல், இசை, ஓவியம் போன்ற சிறப்பு ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 35 ஆயிரம் பேர் எழுதினார்கள். இதன் முடிவு நவம்பர் மாதம் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தேர்வு முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை. சென்னை, விழுப்புரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு ஆசிரியர் தேர்வு எழுதியவர்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை நேரில் சந்தித்து மனு கொடுப்பதற்காக நேற்று காலை ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்துக்கு வந்தனர். அவருடைய வீட்டிற்கு செல்வதற்காக வெள்ளாளபாளையம் பிரிவில் நின்றிருந்தனர்.

பேச்சுவார்த்தை இதுபற்றி தகவல் அறிந்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், அவர்களை ஒரு தனியார் திருமண மண்டபத்திற்கு செல்லும்படியும் அங்கு வந்து நேரில் சந்திப்பதாகவும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அனைவரும் அந்த திருமண மண்டபத்துக்கு சென்றனர். காலை 7 மணி அளவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மண்டபத்திற்குசென்று அவர்களை சந்தித்து பேசினார். அப்போது தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் அமைச்சரிடம் மனுவாக கொடுத்தனர். அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்களுடன் தரையில் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

 அடுத்த மாதம்

அப்போது அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்களிடம் கூறும்போது, “அடுத்த மாதத்தில் சிறப்பு ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. நேர்மையான முறையில் தகுதி உள்ளவர்களுக்கு வேலை கிடைக்கும். இதில் எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடமில்லை” என்றார். இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.

தமிழகத்தில் கேபிள் டிவி ஒளிபரப்பு நாளை 3 மணி நேரம் நிறுத்தம்

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாளை (ஏப். 17) கேபிள் டிவி ஒளிபரப்பை மாலை 3 மணி முதல் 6 மணி வரை நிறுத்த தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநலச் சங்கம் முடிவு செய்துள்ளது.
கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநலச் சங்க மாவட்ட மாநாடு திண்டுக்கல்லில் நடைபெற்றது.சங்கத்தின் மாவட்டத் தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார்.
தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநலச் சங்க மாநில பொதுச் செயலாளர் தாமோதரன் செய்தியாளர்களிடம் கூறும்போது “மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஏப். 17-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) தமிழகம் முழுவதும் மாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை 3 மணி நேரம் கேபிள் டிவி ஒளிபரப்பை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.அன்றைய தினம், மதுரையில் தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநலச் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என்றார்.

1-8 மாணவர்களுக்கு பழைய சீருடைதான் வழங்கப்படும்!!

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பழைய &'லைட்பிரவுன்&' மற்றும் &'மெரூன்&' நிற சீருடையில் மாற்றம் இல்லை; மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான மாற்றப்பட்ட சீருடை விபரம் சி.இ.ஓ., அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

பள்ளி கல்வி இயக்குனர் இளங்கோவன், &'நடப்பு கல்வியாண்டு (2017--18) பயன்படுத்த வேண்டிய சீருடை குறித்து, முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், &'அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சாம்பல் நிறத்தில் பேண்ட், இளஞ்சிவப்பு நிறத்தில் கோடிட்ட சட்டை, சட்டை மேல் மாணவியருக்கு சாம்பல் நிறத்தில் ஒரு கோட் சீருடையாக அணிய வேண்டும்.
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் கருநீல நிறத்தில் கோடிட்ட மேல்சட்டை, மாணவியர் கருநீல கோட்டு சீருடையாக அணிய வேண்டுமென, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரம் போட்டோவுடன் சி.இ.ஓ., அலுவலகத்துக்கு வந்துள்ளது.

மாணவர் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் கிடையாது - பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் திட்டமிடப்படியே மே 16 ம் தேதி வெளியிடப்படும். பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 23 ம் தேதி வெளியிடப்படும் :




1,6,9,11 ஆகிய வகுப்புகளுக்கான பாட புத்தகங்களின் விலையை 20% உயர்த்த பாடநூல் கழகம் திட்டம்

1,6,9,11 ஆகிய வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்களின் விலையை உயர்த்த தமிழ்நாடு அரசு பாட நூல் கழகம் முடிவு செய்துள்ளது. வரும் கல்வியாண்டு முதல் விலை உயர்வு நடைமுறைக்கு வருகிறது.
மற்ற வகுப்புகளுக்கு அடுத்த கல்வி ஆண்டு முதல் புத்தகங்களின் விலை உயர்த்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. கோடை விடுமுறைக்கு பிறகு வரும் ஜூன் 1-ம் தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அப்போது 1,6,9,11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடப்புத்தகம் வழங்கப்பட உள்ளது. பாடப்புத்தகம் அச்சடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.


இந்நிலையில் இந்த நான்கு வகுப்புகளுக்கான பாடப்புத்தக விலையை 20% உயர்த்த பாட நூல் கழகம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அதிகாராப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த விலை உயர்வு அரசுப்பள்ளி மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு பொருந்தாது என்றும் அவர்களுக்கு வழக்கம் போல் விலையில்லா புத்தகம் தமிழக அரசு வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

விலை உயர்வு காரணம்

தரமான தாளில் பாடப்புத்தகங்கள் அச்சிடுவது, அதிக அளவில் வண்ணப்படங்களை சேர்ப்பது, புத்தகத்தின் முதல் மற்றும் பின் பக்க அட்டைகள் சேதம் அடையாமல் இருக்க லெமினேஷன் செய்வது உள்ளிட்ட காரணங்களால் தயாரிப்பு செலவு அதிகரித்துள்ளது என்றும் இதனால் விலை உயர்த்தப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.a

16/4/18

15 நாட்களில் சிறப்பாசிரியர் தேர்வு முடிவு பணி ஆணை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் -பள்ளிக்கல்வி அமைச்சர்.

தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் சிறப்பாசிரியர்கள் 300க்கும் மேற்பட்டோர்
அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து மனு

15 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, பணி ஆணை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்ததாக மனு அளித்த ஆசிரியர்கள் பேட்டி.

சரியும் மாணவர் சேர்க்கை குறையும் அரசுப்பள்ளிகள்!

அரசுப்பள்ளியில் இரண்டு ஆண்டுகளில், மாணவர் எண்ணிக்கை, 1.40 லட்சம் குறைந்திருப்பது, கல்வித்துறை ஆய்வில் தெரிய வந்துள்ளது.


பெற்றோர் தயக்கம்

தமிழக அரசின் தொடக்கப் பள்ளிகளில், ஆண்டுதோறும், மாணவர் சேர்க்கை சரிந்த வண்ணம் உள்ளது. பெரும்பாலான பள்ளிகளில், ஓராசிரியர் அல்லது இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களும், அடிக்கடி விடுமுறை எடுப்பதும், அலுவலக பணிகளை கவனிப்பதுமாக உள்ளனர்.இந்த பிரச்னைகளால், அரசின் தொடக்கப் பள்ளிகளில், மாணவர்களை சேர்க்க, பெற்றோர் தயக்கம் காட்டுகின்றனர். இதனால், மாணவர் எண்ணிக்கை, ஆண்டுதோறும் குறைகிறது.

இரண்டு ஆண்டுகளில், புதிய மாணவர்கள் சேர்க்கையால், எண்ணிக்கை உயர்வதற்கு பதிலாக, ஏற்கனவே இருந்த மாணவர்களில், 1.40 லட்சம் பேர் வெளியேறியிருப்பது தெரிய வந்துள்ளது.தொடக்கப் பள்ளிகளில், எத்தனை மாணவர்களுக்கு, எத்தனை ஆசிரியர்கள் பணியில் உள்ளனர் என, கணக்கெடுக்கும்போது, இந்த உண்மைகள், அரசுக்கு தெரிய வந்துள்ளன.
இதைத் தொடர்ந்து, 30 மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர்; ஒரு பள்ளிக்கு, குறைந்தபட்சம் இரண்டு ஆசிரியர்கள் என்ற விதிகளின்படி, நடவடிக்கை எடுக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

எதிர்ப்பு
அதன்படி, 4,400 ஆசிரியர்கள், உபரியாக உள்ளது கண்டறியப்பட்டு, அவர்களை, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளுக்கு மாற்ற, முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு, எதிர்ப்பு கிளம்பிஉள்ளது.'மாணவர் எண்ணிக்கை குறைந்ததால், ஆசிரியர்களை இடமாற்றம் செய்வோம் என்பது, ஆரோக்கியமான நிலையை ஏற்படுத்தாது.'சரிந்த மாணவர் எண்ணிக்கையை மீட்கும் வகையில், தற்போதுள்ள ஆசிரியர்களை வைத்து, கூடுதல் பயிற்சி தருவதற்கு, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

TET Results | TETதேர்வு வெளியிடப்படாதது குறித்து கேள்வி, முறைகேடு நடப்பதாக புகார் |SunNews

7/4/18

ஆபரணங்களுக்கும் ஆரோக்கியத்துக்கும் தொடர்பு உண்டு!* *நன்றி குங்குமம் டாக்டர்*

முன்னோர் அறிவியல்

‘‘உணவுப் பழக்கவழக்கங்களைப் போலவே, ஆபரணங்களும் நம்முடைய பாரம்பரியத்தில் மிகவும் சிறப்புக்குரிய ஒன்றாக இருந்து வருகிறது. இயற்கையோடு இணைந்த நமது பாரம்பரியத்தில் இந்தஅணிகலன்கள் வெறும் அழகுக்காகவும், ஆடம்பரத்துக்காகவும் மட்டுமேயன்றி மருத்துவரீதியாகவும் பயன்படுகிறது’’ என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் ராதிகா...
ஆபரணங்களுக்கும் ஆரோக்கியத்துக்கும் அப்படி என்ன தொடர்பு....


உலோகங்கள் ஸ்திரத்தன்மை கொண்டுள்ளதால் அதை பயன்படுத்தும் நமக்கும் அதன் முழுப்பலன் கிடைக்க வழிவகை செய்கிறது. உலோகங்களில் இருக்கும் ரசாயனம் நம் உடலில் கலப்பதன் மூலம் சீரான ரத்த ஓட்டம் மற்றும் வலிமைகளைப் பெற முடியும். இதில் நாம் ஆபரணங்கள் அணியும் இடத்துக்கு ஏற்பவும் பலன்கள் கிடைக்கின்றன.

*காதணி*
காதணி அணியும் இடத்தில் இருக்கும் நரம்பானது மூளையுடன் தொடர்பு கொண்டது. பிறந்த குழந்தைகளுக்கு காதணி அணியும்போது, அது அவர்களின் மூளையின் செயல்திறனை அதிகரிப்பதோடு, கண்பார்வை திறனையும் மேம்படுத்தும். இதனால்தான் காதணிக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதனை விழாக்கள் போன்றே நாம் பின்பற்றி வருகிறோம்.

*மூக்குத்தி*
மூக்கின் உள்ளிருக்கும் சில புள்ளிகளுக்கும் பெருங்குடல் மற்றும் சிறுகுடலுக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. அந்தப் புள்ளிகள் தூண்டப் படும்போது அது சம்பந்தமான நோய்கள் குணமாகும். மாதவிடாய் பிரச்னைகள் கட்டுப்படும்.

*கழுத்து ஆபரணங்கள்*
கழுத்தில் ஆபரணங்கள் அணிவதனால் உடலுக்கும் தலைக்கும் இடையே உள்ள சக்தி ஓட்டம் சீராகிறது. ஏனெனில், கழுத்தில் முக்கிய உணர்வு புள்ளிகள் உள்ளன.

*மோதிரம்*
உடலின் வெப்பத்தை சமமாக வைக்க விரலில் மோதிரம் அணியும் பழக்கம் உதவுகிறது. மேலும், விரல்களில் இருக்கும் முக்கிய புள்ளிகள் மோதிரம் அணிவதால் பல வகையில் நன்மை பயக்கும்.ஆள் காட்டி விரல் மன தைரியத்தை ஏற்படுத்தும். நடுவிரல் நுரையீரல் மற்றும் சுவாசத்தை சீர்படுத்தும். மோதிர விரல் - இதயம் சம்பந்தப்பட்ட புள்ளிகள் இந்த விரலில் இருப்பதால் இதயத்துக்கு நன்மை உண்டாகும். திருமண விழாக்களில் இதனால்தான் மோதிரம் மாற்றிக் கொள்ளப்படுகிறது. சிறுவிரல் மூளைத்திறன் மேம்படும்.

*வளையல்*
கை மணிக்கட்டு பகுதியைச் சுற்றிலும் மிக முக்கியமான 5 புள்ளிகள் அமைந்துள்ளன. இவைகளை அழுத்துவதன் மூலம் வெள்ளையணுக்களின் உற்பத்தி உடலில் அதிகரிக்கிறது. முக்கியமான ஹார்மோன்கள் சுரப்பும் சீராகிறது. பெண்களுக்கு கர்ப்ப காலங்களில் அதிக வளையல்கள் போடுவது இதற்காகத்தான். இதனால் தாய்க்கும் சேய்க்கும் நோய் எதிர்ப்பாற்றல் கூடும்.

*கொலுசு*
கல்லீரல், மண்ணீரல், பித்தப்பை, சிறுநீர்ப்பை, வயிறு போன்ற மிக முக்கிய உறுப்புகளின் செயல் திறனைத் தூண்டிவிடும். கர்ப்பப்பை இறக்க பிரச்னையை தடிமனனான கொலுசு அணிவதன் மூலம் தீர்க்கலாம்.

*மெட்டி*
மெட்டி அணிவது கர்ப்பப்பையை பலப்படுத்தும். பாலின ஹார்மோன்களைத் தூண்டக்கூடிய முக்கிய புள்ளிகள் கால் விரல்களில் உள்ளது. வாந்தி , சோர்வு, மயக்கம் பசியின்மை போன்று கர்ப்ப காலங்களில் ஏற்படும் பிரச்னைகளைக் குறைக்கும்.

*அரை நாண் கொடி*
உடலின் நடுப்பகுதியான இடுப்பில் அரைநாண் கொடி அணிவிப்பதன் முக்கிய நோக்கமே உடலில் ரத்தத்தின் ஓட்டத்தை சீராக்குவதற்குத்தான். மேலிருந்து கீழாகவும், கீழிருந்து மேலாகவும் செல்லும் ரத்த ஓட்டம் இதன்மூலம் சீராகவும் சம நிலையுடனும் இருக்கும். அத்துடன் ஆண், பெண் மலட்டுத் தன்மையை நீக்கவும், உடல் உஷ்ணத்தைக் குறைக்கவும் அரை நாண் கொடி அணியப் படுகிறது. ஒட்டியாணமும் இதற்காகவே அணியப்படுகிறது.
ஆபரணங்கள் அணியும் இடத்தைப் போன்றே, ஆபரணங்களின் தன்மைகளைப் பொறுத்தும் நன்மைகள் உண்டு. அதையும் தெரிந்துகொண்டு பயன்படுத்துவது இன்னும் சிறப்பான பலனைத் தரும்...

*தங்கம்*
தங்கம் அனைவரும் பயன்படுத்த கூடிய ஓர் உலோகம். மூளையை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவும். நரம்பு மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளைப் போக்கக் கூடியது. செரிமானத்தை சீர்ப்படுத்தும். மன அழுத்தத்தைக் குறைக்கும். மூளைத் திறனை மேம்படுத்தவும் உதவுகிறது.

*வெள்ளி*
வெள்ளி கிருமி நாசினி என்பதால் அடிபடும்போதோ அல்லது தொற்றுக் களிலிருந்தோ பாதுகாக்கும். மாதவிடாய் பிரச்னைகளைக் குறைக்கும். பித்தத்தைத் தணிக்கும் தன்மை கொண்டது. நாள்பட்ட காயம் குணமாகும். வாந்தி, சோர்வைப் போக்கக் கூடியது.

*பிளாட்டினம்*
வெள்ளை உலோகம் என அழைக்கப்படும் பிளாட்டினம் மிக அரிதான ஒன்று. தங்கத்தை விட விலை உயர்ந்தது மட்டு மல்ல; மதிப்பும்மிக்கது. தனித்தன்மை கொண்டது. இது அதிக வெப்பத்தைத் தாங்கக் கூடிய உலோகமாகும். புற்றுநோய் போன்ற பிரச்னைகளை குணப்படுத்தக் கூடியது.

*வைரம்*
வைரத்துக்கு தனித்தன்மை உண்டு. புற்றுநோய், எய்ட்ஸ் போன்ற பெரும் நோய்களை குணப்படுத்தும் என நம்பப் படுகிறது. உடலின் வாத, பித்த, சிலேத்துமதோஷங்களை நிவர்த்தி செய்யக் கூடியது. இதனை சந்த தாதுக்கள் என கூறுவார்கள்.

*முத்துக்கள்*
முத்துகள் உடல் வெப்பத்தை குறைக்கும். உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும். விஷத்தன்மையை முறிக்கும். கண்களுக்கு மிகவும் நல்லது. படபடப்பு தன்மையைக் குறைக்கும், நாள்பட்ட நோய் மற்றும் காய்ச்சல்களை தீர்க்கக் கூடியது.

*பவளம்*
பவளம், முத்தை விட சற்று வெப்பம் அதிகம் கொண்டிருக்கும். தோல் சம்பந்தமான பிரச்னைகளை தீர்க்கக் கூடியது. நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளைத் தீர்க்கும் வல்லமை கொண்டது.தமிழரின் பாரம்பரியத்தில் நகைகளை கட்டாயப்படுத்தியதற்கு முக்கிய காரணம் ஆரோக்கியத்தை முன் நிறுத்தியே என்பதை இதிலிருந்து புரிந்துகொள்ளலாம். அக்காலத்தில் நம் முன்னோர்கள் நோய்கள் உருவாவதை தடுப்பதற்கு மருந்துகளை உபயோகிப்பதை விட நகைகளின் குணமறிந்து பயன்படுத்தினர்.
அதனால்தான் அவர்களால் நோயின்றி வெகுகாலம் வாழ முடிந்தது. ஆதலால், ஆபரணங்களை வெறும் ஆடம்பரம் என மேலோட்டமாக நினைக்காமல் அதன் நன்மைகளை உணர்ந்து நாமும் அவர்களின் வழிகளை பின்பற்றி நடப்பது என்பது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அஸ்திவாரம் அமைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!

*தொகுப்பு: எம்.வசந்தி*

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 2 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதால் வரும் கல்வியாண்டிற்குள் புதிதாக ஆசிரியர்களை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் 6 ஆயிரத்து 81 உயர்நிலைப்பள்ளிகளும், 5 ஆயிரத்து 803 மேல்நிலைப்பள்ளிகளும் செயல்பட்டு வருகின்.
இப்பள்ளிகளில் பெரும்பாலான பள்ளிகளில் துறைவாரியான ஆசிரியர்கள் இல்லாமல் தள்ளாடி வருகின்றன. அதாவது, பள்ளி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவது இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு சரிந்து வருகிறது.
மாணவர்களுக்கு பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லாதால் ஓரிரு ஆசிரியர்களை வைத்து கொண்டு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கற்பித்து வருகின்றனர்.
கடந்த டிசம்பர் 31ம் தேதி வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 84 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதில் அதிகபட்சமாக 696 அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் வரும் கல்வி ஆண்டிற்குள் பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்காக தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு சேர்த்து காலியாக உள்ள ஆசிரியர் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. அதன்படி 26 மாவட்டங்களுக்கு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 
அதில், அரியலூர் 61, கோவை 3, கடலூர்82, தர்மபுரி11, ஈரோடு20, காஞ்சிபுரம்33, கரூர்3, கிருஷ்ணகிரி271, மதுரை2, நாகப்பட்டினம்145, பெரம்பலூர்19, புதுக்கோட்டை62, ராமநாதபுரம்8, சேலம்12, சிவகங்கை4, தஞ்சாவூர்33, நீலகிரி76, தூத்துக்குடி2, திருப்பூர்11, திருவள்ளூர்23, திருவண்ணாமலை381, திருவாரூர்70, திருச்சி3, வேலூர்335, விழுப்புரம்383, விருதுநகர்11 என மொத்தம் 2 ஆயிரத்து 84 பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. 
அதில் தமிழ்பாடத்திற்கு 270 பணியிடங்களும், ஆங்கிலத்திற்கு 228 பணியிடங்களும், கணிதத்திற்கு 436 பணியிடங்களும், அறிவியல் பாடத்திற்கு 696 பணியிடங்களும், சமூக அறிவியல் பாடத்திற்கு 454 பணியிடங்களும் நிரப்பபட உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்

ஆசிாியா்கள் அரசு ஊழியா்கள் அனைவருக்கம் வணக்கம்.*

ஆசிாியா்கள் அரசு ஊழியா்கள் அனைவருக்கம் வணக்கம்.*
*TNPSC: May-2018 துறை தேர்வு விண்ணப்பங்கள்  வரவேற்க்கப் பட்டுள்ளன*
விளம்பர எண்: *49*
விளம்பர நாள்: *01.03.2018*
விண்ணப்பிக்க கடைசி நாள் *16.04.2018*
துறை தேர்வில் புதிய பாட திட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்
*இடைநிலை ஆசிரியர்கள்*
1. 065- Tamil Nadu School Education Department Administrative Test – Paper - I - 
 Higher Secondary / Secondary / Teacher Training and Special School
2. 072-Tamil Nadu School Education Department Administrative Test – Paper - II -  Elementary / Middle and Special Schools
3.  124 - Account Test for Subordinate Officers - Part I .
(or)
4.152-The Account Test for Executive Officers
5.172 - The Tamil Nadu Government Office Manual Test
*பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்*
1 . 124 - Account Test for Subordinate Officers - Part I .(or)
152.The Account Test for Executive Officers
2 . 172 - The Tamil Nadu Government Office Manual

துறை தேர்வில் *மற்ற அலுவலர்கள்* தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்
1 . 124 - Account Test for Subordinate Officers - Part I .
2 . 172 - The Tamil Nadu Government Office Manual

ஒரே பக்கத்தில் ஆண்டு ஊதிய உயர்வு, வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுப்படி விவரம் :

11,12 ஆம் வகுப்புக்கான புதிய சீருடை அறிமுகம்!!

கல்வித்துறையில் உருவானது எஸ்.எஸ்.ஏ.எஸ்., திட்டம் ரூ.75 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,), ஆர்.எம்.எஸ்.ஏ., (அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம்) மற்றும் மாநில திட்டமான மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்
(டயட்) ஆகியவற்றை ஒன்றாக இணைக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவை ஒருங்கிணைக்கப்பட்டு, 'எஸ்.எஸ்.ஏ.எஸ்., (சப்கோ சிக்ஷா - அச்சி கிச்ஷா) திட்டம்' என புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக 75 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.தமிழக கல்வித்துறையில் 1- 8ம் வகுப்பு வரை எஸ்.எஸ்.ஏ., 9-10ம் வகுப்பில் ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டம் செயல்படுகின்றன. இதன் மூலம் கற்றல் கற்பித்தல், உபகரணம், ஆசிரியருக்கான பயிற்சி, புதிய வகுப்பறை, பள்ளி பராமரிப்பிற்காக மத்திய, மாநில அரசுகள் 60:40 விகிதத்தில் நிதி ஒதுக்கீடு செய்கின்றன. இதில் 1-12 வகுப்புகள் புதிய திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இத்திட்டம் 2020 வரை இருக்கும்.
கல்வி அதிகாரிகள் கூறியதாவது: முழு விவரம் கிடைத்ததும் மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும். இதன்மூலம் பள்ளிகளுக்கு 100 சதவீதம் அடிப்படை வசதி கிடைக்கும். கற்றலுக்கான டிஜிட்டல் திட்டம், கணினி தொழில் நுட்பம், மின்னணு பாடத்திட்டம், மெய்நிகர் வகுப்பறை உட்பட கூடுதல் வசதிகளுடன் அடுத்த நிலைக்கான நவீன திட்டங்கள் செயல்படுத்த வாய்ப்புள்ளது, என்றார்.

கல்வித்துறையில் உருவானது S.S.A.S திட்டம் (சப்கோ சிக்ஷா - அச்சி கிச்ஷா)

மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,), ஆர்.எம்.எஸ்.ஏ., (அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம்) மற்றும் மாநில 
திட்டமான மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் (டயட்) ஆகியவற்றை ஒன்றாக இணைக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இவை ஒருங்கிணைக்கப்பட்டு, 'எஸ்.எஸ்.ஏ.எஸ்., (சப்கோ சிக்ஷா - அச்சி கிச்ஷா) திட்டம்' என புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.இதற்காக 75 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.தமிழக கல்வித்துறையில் 1- 8ம் வகுப்பு வரை எஸ்.எஸ்.ஏ., 9-10ம் வகுப்பில் ஆர்.எம்.எஸ்.ஏ.,திட்டம் செயல்படுகின்றன.


இதன் மூலம் கற்றல் கற்பித்தல், உபகரணம், ஆசிரியருக்கான பயிற்சி, புதிய வகுப்பறை, பள்ளி பராமரிப்பிற்காக மத்திய, மாநில அரசுகள் 60:40 விகிதத்தில் நிதி ஒதுக்கீடு செய்கின்றன. இதில் 1-12 வகுப்புகள் புதிய திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இத்திட்டம் 2020 வரை இருக்கும்.கல்வி அதிகாரிகள் கூறியதாவது: முழு விவரம் கிடைத்ததும் மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும்.


இதன்மூலம் பள்ளிகளுக்கு 100 சதவீதம் அடிப்படை வசதி கிடைக்கும். கற்றலுக்கான டிஜிட்டல் திட்டம், கணினி தொழில் நுட்பம், மின்னணு பாடத்திட்டம், மெய்நிகர் வகுப்பறை உட்பட கூடுதல் வசதிகளுடன் அடுத்த நிலைக்கான நவீன திட்டங்கள் செயல்படுத்த வாய்ப்புள்ளது, என்றா

பள்ளிக்கல்வித்துறை நிர்வாகத்தில் பெரிய மாற்றம்!!!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில்
பள்ளிக்கல்வித்துறை, தொடக்கக்கல்வி இயக்குனரகம், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம், மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனரகம், பள்ளிசாரா கல்வி இயக்குனரகம், அரசு தேர்வுத்துறை, ஆசிரியர் தேர்வு வாரியம், தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழகம், அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனரகம், இடைநிலை கல்வி திட்ட இயக்குனரகம் ஆகியவை உள்ளன.

இதில் பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் 5 ஆயிரத்து 850 உயர்நிலை பள்ளிகளும், 7 ஆயிரத்து 300 மேல்நிலை பள்ளிகளும் இருக்கின்றன. பள்ளிகளை கண்காணிக்க மாவட்ட கல்வி அதிகாரிகளும், அவர்களை கண்காணிக்க முதன்மை கல்வி அதிகாரிகளும் உள்ளனர். இந்த முதன்மை கல்வி அதிகாரிகளை மேற்பார்வை செய்ய இணை இயக்குனர்கள் (சென்னை டி.பி.ஐ. வளாகம்) இருக்கிறார்கள். இணை இயக்குனர்களை கண்காணிக்க இயக்குனர் இருக்கிறார்.

இதைப்போல தொடக்க கல்வித்துறை இயக்குனரின் கட்டுப்பாட்டில் 35 ஆயிரத்து 500 தொடக்கப்பள்ளிகளும், 9 ஆயிரத்து 800 நடுநிலை பள்ளிகளும் உள்ளன. இந்த பள்ளிகளை கண்காணிக்க உதவி கல்வி அதிகாரிகளும், அவர்களை கண்காணிக்க மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகளும், அவர்களை கண்காணிக்க இணை இயக்குனர்களும் உள்ளனர். இணை இயக்குனர்களை மேற்பார்வை செய்ய இயக்குனர் இருக்கிறார்.

மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டில் அனைத்து மாவட்ட பயிற்சி நிறுவனங்களும், அனைத்து ஆசிரியர் பயிற்சி பள்ளிகளும் இயங்குகின்றன.

அரசு தேர்வுத்துறை, அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு நடத்தி முடிவை வெளியிட்டும், அவர்களுக்கு சான்றிதழ் வழங்கியும் வருகிறது.

இந்த துறைகள் அனைத்தும் தனித்தனியாக இயங்குவதால், அதிகாரிகள், ஊழியர்கள் என ஏராளமானோர் தேவைப்படுகின்றனர். எனவே இதில் பல துறைகளை இணைத்து நிர்வாகத்தில் மாற்றம் ஏற்படுத்த அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

அந்தவகையில் தொடக்ககல்வித்துறை இயக்குனரகம், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் ஆகியவை ஒழிக்கப்படும் என்று தெரிகிறது. மேலும் தமிழ்நாடு அளவில் 6 மண்டலங்கள் அமைக்கப்பட உள்ளன. இவற்றுக்கு என இயக்குனர்கள் அமர்த்தப்படுவர்.

டி.பி.ஐ. வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் மட்டும் இருப்பார். அவர்தான் அனைத்து மண்டல இயக்குனர்களையும் கண்காணிப்பார். பள்ளிக்கல்வி இயக்குனர் தவிர அனைத்து இயக்குனர்களும் சென்னையை விட்டு வெளியே போய் பதவி வகிப்பார்கள்.

ஆசிரியர் தேர்வு வாரியம் வருடத்திற்கு குறைந்த அளவில்தான் வேலைக்கு ஆட்களை தேர்ந்து எடுக்கிறார்கள். எனவே ஆசிரியர் தேர்வு வாரியமும் கலைக்கப்படும் என தெரிகிறது. அவற்றின் பணிகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் செய்யும் என்றும் கூறப்படுகிறது.

இதைப்போல உதவி கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகள் பணியிடங்களும் ஒழிக்கப்பட்டு அவர்களுக்கு வேறு பணிகள் வழங்கப்படுகிறது. முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு இப்போது உள்ள அதிகாரத்தை விட கூடுதல் அதிகாரம் கொடுக்கப்படும்.

இது தொடர்பாக ஆலோசனைகள் நடத்தி விரைவில் முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

நெட்' தேர்வுக்கு கூடுதல் அவகாசம்!!!

சென்னை, 'கல்லுாரி பேராசிரியர் பணிக்கான, 'நெட்' தேர்வுக்கு, வரும், 12ம் தேதி வரை 
விண்ணப்பிக்கலாம்' என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.
கல்லுாரி பேராசிரியர் பதவிக்கு, தகுதி பெறுவதற்கான, 'நெட்' தேசிய தகுதி தேர்வு, ஜூலையில் நடத்தப்படுகிறது.இதற்கு விண்ணப்பிக்க, நேற்று தான் கடைசி நாள் என, அறிவிக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில், வரும், 12ம் தேதி வரை, விண்ணப்ப பதிவுக்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தேர்வு கட்டணத்தை, வரும், 13ம் தேதி வரை செலுத்தலாம் என, சி.பி.எஸ்.இ.,அறிவித்துள்ளது

தேய்ந்து வரும் தேர்வுத்துறை சி.இ.ஓ.,வின் கீழ் இணைக்கப்படுமா???

மதுரை, கல்வித்துறையில் எஸ்.எஸ்.ஏ., ஆர்.எம்.எஸ்.ஏ., மாவட்ட கல்வி மற்றும் ஆராய்ச்சி 
நிறுவனம் (டயட்) இணைப்பை போல் தேர்வுத்துறையை அந்தந்த சி.இ.ஓ., அலுவலகங்களில் ஒரு பிரிவாக (செக்ஷன்) இணைக்க வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
கல்வித்துறையில் ஒரு இயக்குனரின் கீழ் இத்துறை ஒரு பிரிவாக செயல்படுகிறது. சென்னை, மதுரை, கோவை உட்பட 11 மண்டல அலுவலகங்கள் துணை இயக்குனர்களின் கீழ் செயல்படுகின்றன. மொத்தம் 800 ஊழியர் வரை உள்ளனர்.பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர் பெயர் பட்டியல் (நாமினல் ரோல்) தயாரிப்பது உட்பட அத்துறையின் முக்கிய பணிகள், கல்வித்துறை அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முக்கிய பணியாக ஆசிரியர் சான்றிதழ்களின் உண்மை தன்மையை ஆய்வு செய்வது மட்டும் இருந்தது. அதுவும் சி.இ.ஓ.,க்களின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.தற்போது 'டூப்ளிகேட்' மதிப்பெண் சான்று வழங்குவது, பொது தேர்வில் மாணவருக்கான எழுதுபொருள் வழங்குவது என குறிப்பிட்ட சில பணிகள் மட்டும் இத்துறை அலுவலர்கள் மேற்கொள்கின்றனர்.இதுகுறித்து கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது:தேர்வுத்துறையின் பல பணிகள் எங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. குறிப்பாக, சென்னை தேர்வுத்துறையில் மொத்தம் 60ல் 17 'செக்ஷன்'கள் ஆசிரியர் சான்றிதழின் உண்மை தன்மையை ஆய்வு செய்ய ஒதுக்கப்பட்டன. அப்பணியை சி.இ.ஓ.,க்கள் வசம் ஒப்படைத்த பின் அப்பிரிவு ஊழியர் போதிய வேலையின்றி உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. எனவே அந்தந்த சி.இ.ஓ., அலுவலகங்களின் கீழ் ஒரு செக்ஷனாக இத்துறையை இணைத்தால் அரசு நிதி வீணடிக்கப்படுவதை தடுக்கலாம், என்றார்.