யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

14/11/18

உலகிலேயே அதிக பெண் விமானிகளை கொண்ட விமான நிறுவனம் எது?

உலகம் முழுவதும் அதிகரித்து வரும் விமான பயணிகளின் எண்ணிக்கையை சமாளிக்கும் வகையில் புதிய விமானிகளை, குறிப்பாக பெண் விமானிகளை தேர்ந்தெடுப்பதில் பல்வேறு விமான சேவை நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.
கடந்த சில வருடங்களாக சுற்றுலா சார்ந்த விடயங்களில் மக்கள் அதிகளவு பணத்தை செலவழிக்கும் போக்கு அதிகரித்து காணப்படுகிறது.
உலக சுற்றுலா கழகத்தின் அறிக்கையின்படி, கடந்த 2010ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2017ஆம் ஆண்டு உலகளவில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 350 மில்லியன் அதிகரித்துள்ளது.
எந்த விமான சேவை நிறுவனத்தில் அதிக பெண் விமானிகள் பணிபுரிகிறார்கள்?


உலகம் முழுவதுமுள்ள வர்த்தக விமானங்களின் விமானிகளில் வெறும் 5.18 சதவீதத்தினரே பெண்களாக உள்ளனர்.
உலகிலேயே இந்தியாவை சேர்ந்த விமான சேவை நிறுவனங்கள்தான் அதிகளவில் பெண் விமானிகளை பணியில் சேர்த்துக்கொள்கிறார்கள். அதாவது, மொத்த இந்திய விமானிகளில் 12.4 சதவீதம் பேர் பெண்களாவர்.
• 
குறிப்பாக பார்த்தோமானால், இந்தியாவை சேர்ந்த உள்நாட்டு விமான சேவை நிறுவனமான ஜூம் ஏர் உலகில் அதிக பெண் விமானிகளை கொண்ட நிறுவனமாக விளங்குகிறது. அதாவது, அந்நிறுவனத்திலுள்ள 30 விமானிகளில் ஒன்பது பேர் பெண் விமானிகள் என்று சர்வதேச பெண் விமானிகள் அமைப்பு கூறுகிறது.
எதிர்காலத்தில் விமானிகளுக்கு ஏற்படவுள்ள கடுமையான பற்றாற்குறையை சமாளிக்கும் வகையில் இந்தியா விமான சேவை நிறுவனங்கள், பெண்கள் விமானியாவதற்கு அதிகப்படியான ஊக்கத்தை அளித்து வருவதாக சர்வதேச பெண் விமானிகள் அமைப்பின் தலைவர் கேத்தி மெக்கல்லோ கூறுகிறார்.
இந்தியாவில் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால் வர்த்தகரீதியான விமான பயணிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயருமென்று போயிங் நிறுவனம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
விமானிகளின் சராசரி ஊதியம் என்ன?
பொதுவாக விமானிகள் ஒவ்வொரு நாளும் குறுகிய அல்லது நீண்டதூர இடங்களுக்கு பயணிகள் விமானத்தையோ அல்லது சரக்கு விமானங்களையோ இயக்குகிறார்கள்.
வர்த்தக விமானிகளின் ஊதியமானது அவர்கள் பணிபுரியும் விமான நிறுவனம், அவர்கள் இயக்கும் விமானத்தின் வகை மற்றும் அவர்களது அனுபவத்தை பொறுத்து அமையும்.
சராசரியாக 20,000 முதல் 30,000 பவுண்டுகள் வரையில் அவர்களது வருமானம் இருக்கும்.

மேற்குறிப்பிட்டுள்ள அட்டவணையில் பிரிட்டனில் விமானிகளுக்கு வழங்கப்படும் ஊதியம் துறை வாரியாக கொடுக்கப்பட்டுள்ளது.
மிகுந்த அனுபவம் கொண்ட விமானிகளுக்கு 1,40,000 பவுண்டுகளுக்கு மேலாக ஊதியம் வழங்கப்படுகிறது.
விமானிகளின் ஊதியத்தில் பாலின பாகுபாடு உள்ளதா?
பிரிட்டன் வரலாற்றில் முதல் முறையாக 250 பணியாளர்களுக்கு மேல் கொண்ட விமான நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தில் ஆண்-பெண்களுக்கு இடையே ஊதியத்தில் நிலவும் பாலின பாகுபாடு குறித்த அறிக்கையை வெளியிட வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டது.

71.8 சதவீதத்துடன் ரியான்ஆர் நிறுவனம் அதிகளவிலான பாலின ஊதிய இடைவெளியை கொண்டுள்ளது. ஈசிஜெட் நிறுவனத்தில் 45.5 சதவீதம் பாலின இடைவெளி நிலவும் நிலையில், குறிப்பிட்ட சில பணிகளில் ஆண்கள்-பெண்களுக்கு சமமான ஊதியம் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தது.
மேலும், வரும் 2020ஆம் ஆண்டிற்குள் தங்களது விமான நிறுவனத்தில் 20 சதவீத பெண் விமானிகளை கொள்வதை இலக்காக கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக