யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

24/11/18

நீதிக்கதை



வடைக்கு ஆசைப்பட்ட காகம் – விழியன்

பாட்டி அந்த காட்டுப் பாதையில் வடை சுட ஆரம்பித்தார். இரண்டு ஊருக்கு நடுவே ஒரு காடு. அந்த காட்டை கடப்பதற்கு ஒரு வழி இருக்கு. அங்க தான் பாட்டி கடையை போட்டாங்க. ஒரு நாள் ஒரு காக்காவுக்கு பயங்கர பசி. பாட்டி வடை சுடுவதை பார்த்துகிட்டே இருந்துச்சு. பாட்டிகிட்ட வந்து “பாட்டி பாட்டி எனக்கு ஒரு வடை தாங்களேன் என்றது. உன்னால என்ன பயன், உனக்கெல்லாம் தரமுடியாது காக்கா என்று சொல்லிவிட்டது.

ஒரு மரத்தின் மேலே போய் உட்கார்ந்துகொண்டது. அந்த பக்கம் நரி வந்தது. அடடே காகமே உன் வாயில் ஒரு வடை இருக்க வேண்டுமே எங்கே காணவில்லை என்று கிண்டலடித்தது. அட போங்க நரியண்ணா, எனக்கோ பசி, பாட்டி என்னால் என்ன பயன், வடை எல்லாம் தரமுடியாதுன்னு சொல்லிட்டாங்க. அப்படியா சொல்லிட்டாங்க ஒரு கை பார்த்திடலாம் வா என காகத்தை அழைத்தது. தூரத்தில் பாட்டி வேர்த்து வியர்த்து வடை சுட்டுக்கொண்டிருந்தார்கள். காட்டுப் பகுதி என்பதால் குடிசை கூடப் போடவில்லை. வெயிலில் தான் அமர்ந்து இருந்தார்கள்.

நரி யோசித்தது. காகத்திடம் “உன்னால் இலைகளைப் பறித்து வரமுடியுமா?” என்று கேட்டது. “ஓ எத்தனை வேண்டும்” என்றது காகம். “எவ்வளவு முடியுமோ அவ்வளவு” என்றது நரி. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு…நாற்பது, அறுபது… நூறு. நூறு இலைகளைப் பறித்துக்கொண்டு வந்தது காகம். பெரிய இலைகளை கீழே வைத்து அதன் மீது சின்ன இலைகளை எல்லாம் தைத்தது நரி. கொஞ்ச நேரத்தில் பெரிய குடையாக விரிந்தன அந்த இலைகள். ஆமாம! நரி பாட்டிக்கு இலைகளைக்கொண்டும், கிளைகளைக்கொண்டும் பெரிய குடையை செய்துவிட்டது.

பாட்டியிடம் கொடுத்ததும் பாட்டிக்கு சந்தோஷம் தாங்கவில்லை. குடை நிறைய நிழலினைக் கொடுத்தது. "வடை கேட்ட காகம் நீதானே?" என்றார் பாட்டி. "ஆமாம் பாட்டி! பசியுடன் உங்களுக்காக இத்தனை இலைகளையும் காகம் எடுத்து வந்தது" என்றது நரி. "அடடே! பசின்னு கேட்டப்பவே வடை கொடுத்திருக்க வேண்டும். இந்தாங்க ரெண்டு பேரும் வடை சாப்பிடுங்க" என்று பாட்டி வடைகளை கொடுத்தாங்க. ஆளுக்கு ஒரு வடை இல்லை. நான்கு நான்கு வடை.

அய்யோடா! எப்படி இத்தனை வடையை சாப்பிடறதுன்னு காகமும் நரியும் யோசித்தன. நரி தன்னுடைய பங்கில் இருந்து இன்னொரு வடையையும் காகத்திற்கு கொடுத்தது. "உன்னால தான் எனக்கு வடை கிடைத்தது, வெச்சிக்கோ"என்று சொல்லிவிட்டு வடை சாப்பிட்டுக்கொண்டே பாட்டு பாடிக்கிட்டு போயிடுச்சு. காக்கா என்ன செய்தது தெரியுமா? “கா..கா..கா”ன்னு தன் சகாக்களை எல்லாம் கூப்பிட்டு எல்லோரும் சேர்ந்து, அந்த ஐந்து வடைகளையும் காலி செய்தார்கள்.
 தினமும் காகமும், நரியும் பாட்டிகிட்ட இருந்து வடை வாங்கி சாப்பிட ஆரம்பித்துவிட்டன. ரெண்டு பேரும் பாட்டிகிட்ட வேலைக்கு சேர்ந்துட்டாங்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக