அண்னா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தரவரிசைப்பட்டியலில் சென்னை கல்லூரிகள் முதன்மையான இடங்களை பிடித்து அசத்தியுள்ளன.
தமிழகத்தில் சிறந்த பொறியியல் படிப்பை வழங்கும் கல்லூரிகள் குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தரவரிசைப்பட்டியலில், முதல் பத்து இடங்களை சென்னையை சேர்ந்த கல்லூரிகள் பிடித்து சாதனை படைத்துள்ளன.
இந்தாண்டு, இந்த கல்லூரி மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்கல் உள்ளிட்ட நான்கு பாட பிரிவுகளில் தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளது. மேலும், பல்கலைக்கழகத்தின் தரவரிசைப்பட்டியலில் முதலிடத்தை தொடர்ந்து 5வது முறையாக இந்த கல்லூரி தக்கவைத்துக் கொண்டுள்ளது.
இதுதொடர்பாக பேசிய சாய் ராம் கல்வி குழுமத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் சாய் பிரகாஷ் லியோ முத்து, மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கிடையே நிலவும் புரிதல் தான் தங்களது கல்லூரியின் வெற்றிக்கு காரணம் என தெரிவித்தார்.
மற்ற மாவட்டங்களில் இருக்கும் கல்லூரிகள் ஏன் அண்ணா பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் முதன்மையான இடங்களை பெற முடியவில்லை என்பது தொடர்பாக ஈரோட்டை சேர்ந்த கல்வி ஆர்வலர் மூர்த்தி செல்வகுமரன் பேசினார். பிளஸ் 2 படிப்பில் அதிக மதிப்பெண்கள் வாங்குவோர் சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரிகளை தான் தேர்வு செய்கின்றனர். சென்னையை சுற்றி பல்வேறு தொழில் நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்புகள் இருப்பது தான் இதற்கு காரணம். மேலும் ஜிஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு அமல்படுத்தபப்ட்ட பிறகு, பிளேஸ்மென்ட் உள்ளிட்ட பணியிடங்கள் மற்ற மாவட்ட கல்லூரிகளுக்கு வருவது குறைந்துவிட்டது. எனினும், சென்னை கல்லூரிகளில் இந்த வாய்ப்பு தொடர்ந்து இருந்து வருகிறது. இதன் காரணமாகவும், தமிழக மாணவர்கள் பலர் சென்னை கல்லூரிகளில் படிக்க ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் படிப்பு முடிந்த உடன் வேலை மற்றும் அரசின் கல்வி திட்ட உதவிகள் போன்ற வாய்ப்புகளை அவர்களால் எளிதாக பயன்படுத்திக் கொள்ள முடிகிறது என்று அவர் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக பேசிய பெயரிடவிரும்பாத திருச்சியை சேர்ந்த பேராசிரியர் ஒருவர்; திருச்சி, கோயம்புத்தூர் என மாநிலத்தின் மற்ற முதன்மையான நகரங்களில் படிக்கும் பொறியியல் மாணவர்களின் தேர்வு தாள்கள், சென்னை பொறியியல் கல்லூரிகளில் வைத்து தான் திருத்தப்படுகின்றன. சென்னையை ஒப்பிடும் போது மற்ற நகரங்களில் இருக்கும் பெரும்பாலான பேரசியர்களின் கல்வி அறிவு மிகவும் குறைவு தான். இதுவும் மற்ற மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் குறைந்த மதிப்பெண் எடுக்க காரணம் என்று கூறினார்.
எனினும், கோயம்புத்தூரை சேர்ந்த பிஎஸ்ஜி மற்றும் குமரகுரு கல்வி நிறுவனங்கள்
தன்னாட்சி பெற்றவை என்பதால் அண்ணா பல்கலைக்கழகத்தின் தரவரிசைப் பட்டியலில் இடம்பெறவில்லை. யுஜிசி-யின் கட்டமைப்புப்படி அந்த கல்வி நிறுவனங்கள் தங்களுக்கான தேர்வுகள் உள்ளிட்ட செயல்பாடுகளை நடத்தி வருகின்றன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக