யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

28/11/18

அறிவியல்-அறிவோம்: ஆபத்தான மைதாமாவு உஷார்:

கோதுமையில் உள்ள நார்ச்சத்துகளை அகற்றியே மைதா மாவு தயாரிக்கப்படுகிறது. இந்த மைதா மாவில் பல ஆபத்தான ரசாயனங்கள் சேர்க்கப்படுகிறது. குறிப்பாக, அலொக்ஸான் என்ற ரசாயனம் அதிகம் கலக்கப்படுகிறது. இதனால், இன்சுலின் சுரப்பது தடுக்கப்பட்டு ஏராளமானோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
உணவில் இருக்கும் கார்போஹைட்ரேட், குளுக்கோஸாக மாறி ரத்தத்தில் கலந்து செல்களுக்குச் செல்ல வேண்டும். அப்போதுதான் நமக்கு ஆற்றல் கிடைக்கும். கணையத்தில் பீட்டா செல்களால் உற்பத்தி செய்யப்படும் இன்சுலின்தான் ரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸை இதுபோல செல்களுக்குக் கொண்டு செல்கிறது. ஆக்சிடேசன்(oxidation)  என்கிற இந்த செயலினால் கிடைக்கும் ஆற்றலின் அளவுக்கு நம் உடல் செயல்பாடுகள் இருக்கும்பட்சத்தில் ரத்தத்தில் சர்க்கரை அளவு இயல்பான நிலையில் பராமரிக்கப்படும். இன்சுலின் போதுமான அளவு சுரக்காதபட்சத்தில் குளுக்கோஸ் செல்களுக்குச் செல்லாமல் ரத்தத்திலேயே தங்கிவிடும். இதுதான் நீரிழிவுநோய்.
விஷத்தன்மை கொண்ட வேதிப்பொருட்கள்:
 அலொக்ஸான்(Alloxan) என்கிற  ரசாயனம் சேர்த்தால்தான் உணவாகப் பயன்படுத்தப்படுகிற அளவுக்கு மிருதுவாகவும், சுவையான உணவாகவும் மைதா மாறும். இந்த ரசாயனத்தால் செரிமானக்கோளாறு, எதுக்களித்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.
பென்சாயில் பெராக்சைடு' (Benzoyl Perozide) எனும் வேதிப் பொருளை மைதாவில் கலக்கிறார்கள், இந்த ரசாயனம் மைதாவின் வெண்மை நிறத்துக்காக சேர்க்கிறார்கள்.  காலில் ஆணி ஏற்பட்டால் அதை குணப்படுத்துவதற்காகவும், பொருட்களை பளபளப்பாக்குவதற்கும்  தலைமுடியை கருப்பாக்க பயன்படுற, 'ஹேர் டை'யில் சேர்க்கிற நச்சுப்பொருள் இந்த பென்சாயி்ல் பெராக்சைடு.இது ரத்தத்தில் Free radicals என்ற நச்சுக்குப்பைகளை உருவாக்குவதால் ஆக்சிஜன் உடைந்து செல்களில் பாதிப்பு ஏற்படும்.இந்த ரசாயனம் ஜவுளித்துறையில் துணிகள் வெண்மையாக இருக்க வேண்டும் என்பதற்காகப் பயன்படுத்தப்படுவது என்பது அதிர்ச்சியூட்டும் தகவல்.மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives, Sugar, Saccarine, Ajinomotto போன்ற உப பொருட்களும் சேர்க்கப்படுகிறது.

இது மைதாவை இன்னும் அபாயகரமாக்குகிறது.
மைதா உணவைச் சாப்பிடுவதால் இதயத்திற்குச் செல்லும் ரத்த நாளங்கள் பாதிக்கப்படுவதோடு, கொழுப்பு படிதல், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் மாரடைப்பு போன்ற நோய்கள் இளம் வயதிலேயே வரும் என்பதும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. 
மைதாவில் தண்ணீர் ஊற்றினாலே பசைபோல் ஒட்டும். இந்த பசைத்தன்மை உடலிலிருந்து வெளியேற 24 மணி நேரம் ஆகும். சிறுகுடல், பெருங்குடல் ஆகிய இடங்களில் தங்கித் தங்கி செல்வதால் அந்த நேரத்தில் கிருமிகள் உடலில் உற்பத்தியாகிவிடும்.
ஒரு காலத்தில் பசை மட்டுமே தயாரிக்க பயன்படுத்தப்பட்ட மைதாவை பல நூறு டன்கள் விற்பதற்கு  விஷத்தன்மை வாய்ந்த வேதிப்பொருட்களை கலந்து பரோட்டா எனும் பண்டத்தையும் உருவாக்கி மக்களை அதற்கு அடிமையாக்கி-விட்டனர். விளைவு, இன்று சில்லறைக் கடைகளில் சிறுதானிய மாவுகள் கிராம் கணக்கில் விற்பனையாக, மைதாவோ மூட்டைக் கணக்கில் விற்பனையாகிறது.

ஆபத்துவிளைவிக்கும் மைதா கலந்த உணவுகளை தவிர்ப்போம்,சிறுதானிய உணவுகளுக்கு முக்கியத்துவம் தருவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக