யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

7/12/18

வங்கக் கடலில் புதிய புயல்..?? அடுத்த 2 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் எல்லாம் அடித்து வெளுக்கப் போகுது மழை !!

கடந்த மாதம் 15 ஆம் தேதி வங்க கடலில் உருவான கஜா புயல் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் புதுக்கோட்டையில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி சென்றது.

இந்த புயலால் புதுச்சேரியிலும் பாதிப்பு ஏற்பட்டது. காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் பெரும் பாதிப்பினை கஜா புயல் ஏற்படுத்தி சென்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கி போனது.


இந்த நிலையில் , வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இதனை அடுத்து டிசம்பர் 7, 8 ஆகிய தேதிகளில் அதாவது நாளையும்இ நாளை மறுநாளும் தென் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் குமரிக்கடல் , மன்னார் வளைகுடா , தென்மேற்கு வங்க கடலுக்கு அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது .


இதே போல் காற்றழுத்த தாழ்வு சுழற்சி நகர்ந்துள்ளதால் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.


இந்திய பெருங்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த சுழற்சி தற்போது, இலங்கையின் கொழும்பு அருகே நிலை கொண்டுள்ளது. அதேசமயம், தெற்கு ஆந்திரா மற்றும் தெற்கு கர்நாடகாவில் நிலவி வந்த மற்ற இரண்டு காற்றழுத்த சுழற்சிகள் மறைந்து விட்டன.


இதனால் வட தமிழகத்தில் நேற்று பெய்த மழை இன்று குறைந்துள்ளது. இந்த இரு சுழற்சிகள் தான் வட தமிழகம் வரை காற்றை ஈர்த்து வழங்கி வந்தது. தற்போது அதற்கு வாய்ப்பில்லை என்பதால் சென்னை உட்பட வட தமிழகத்துக்கு மழை குறைந்துள்ளது.

அதேசமயம், தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும். இந்த மழை 6-ம் தேதி வரை நீடிக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால் தற்போது அது 8-ம் தேதி வரை நீடிக்கும் என தெரிகிறது எனவும், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் செல்வகுமார் தெரிவித்துள்ளார்..


டிசம்பர் 12-ம் தேதியையொட்டி புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது. அது சற்று வலிமையாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. அதன்போக்கை பொறுத்து டிசம்பர் 12-ம் தேதிக்கு பிறகு மழை அதிகரிக்க வாய்ப்புள்ளது.


இதனிடையே சென்னையில் நேற்று மாலை முதல் பரவலாக மழை பெய்தது. கிண்டி, எழும்பூர், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, வேளச்சேரி, திருவான்மியூர், திருவொற்றியூர், ராயபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக