யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

7/1/17

nata | பி.ஆர்க்., படிப்புக்கான, 'நாட்டா' தேர்வு முறையில், அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஆன்லைன் விண்ணப்ப பதிவு, ஜன., 2ல் துவங்கியது; பிப்., 2 நள்ளிரவு, 11:59 மணிக்கு முடிகிறது. மார்ச் 26ல், ஹால் டிக்கெட் வெளியிடப்படும். ஜூன் 10ல், தேர்வு முடிவு வெளியாகும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.


DEE PROCEEDINGS- தொடக்கப்பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பெங்களூரில் RIESI ஆல் 16/1/17 முதல் 14/2/17 வரை பயிற்சி அளித்தல் - கலந்துகொள்ளும் ஆசிரியர் விவரம் கோருதல் சார்பு

DSE PROCEEDINGS- DETAILS CALLED FOR PTA LEADERS LIST - REG

தொடக்கக்கல்வி செயல்முறைகள் நாள்:06/01/2017 - ஆசிரியர்களின் ஊதியம், பணப்பலன்கள், பணிப்பதிவேடு உள்ளிட்ட கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் - AEEO களுக்கு இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்(பழைய பதிவுகள் ஏதேனும் விடுபட்டு இருப்பின் தற்போது உள்ள உதவி தொடக்கக்கல்வி அலுவலரே ஆவணங்களை சரிபார்த்து பதிவுகளை மேற்கொள்ளலாம்)



பேச்சு நடத்த அமைச்சரை அழைத்த ஆசிரியர்கள் கைது

Image may contain: text

TRB - அரசுப் பொறியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் நேரடி நியமன எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியீடு. (நாள்:06.01.2017)

📝 அரசு பொறியியல்கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் நேரடிநியமனத்துக்கு
நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வு முடிவுகளை ஆசிரியர்தேர்வு வாரியம் (டிஆர்பி) வெளியிட்டுள்ளது.
📝 இதில் தகுதிபெற்றவர்களுக்கு வருகிற 19,20 தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட உள்ளது.

📝 அரசுப் பொறியியல்கல்லூரிகளில் காலியாக இருந்த 192 உதவிப்பேராசிரியர் பணியிடங்களுக்கு நியமனம் செய்வதற்கான அறிவிப்பைகடந்த 2014 ஆம் ஆண்டு டிஆர்பிவெளியிட்டது.

📝 அந்த அறிவிப்பில், வயது உச்சவரம்பில் எழுந்த சிக்கல் காரணமாக, இந்தப் பணியாளர் தேர்வுப் பணி நிறுத்திவைக்கப்பட்டது.

📝 அதன் பிறகுவயது உச்சவரம்பு மாற்றியமைக்கப்பட்டது.

📝 விண்ணப்பதாரருக்கான அதிகபட்சவயது 57 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

📝 பின்னர் மீண்டும்அறிவிப்பு வெளியிட்டு, கடந்த 22-10-2016 அன்று எழுத்துத் தேர்வுநடத்தப்பட்டது.

📝 மொத்தம் 48,286 பேர்விண்ணப்பித்ததில் 27,635 பேர் பங்கேற்று தேர்வுஎழுதினர்.

📝 இந்தத் தேர்வுக்கானமுடிவு இப்போது வெளியிடப்பட்டுள்ளது.

📝 தேர்வு எழுதியஅனைவருக்குமான முடிவுகள் டி.ஆர்.பி. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

📝 அதனுடன் சான்றிதழ்சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ள தகுதிவாய்ந்தவர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

📝 ஒரு இடத்துக்குஇருவர் என்ற அடிப்படையில் தகுதிவாய்ந்தவர்கள்தேர்வு செய்யப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது.

📝 சான்றிதழ் சரிபார்ப்பானதுசெனனை கிழக்கு தாம்பரத்தில் பாரத்மாதா சாலையில் அமைந்துள்ள ஜெய் கோபால் கரோடியாதேசிய உயர்நிலைப் பள்ளியில் வருகிற 19, 20 தேதிகளில் நடத்தப்பட உள்ளது.

📝 இதற்கான அழைப்புக்கடிதத்தை டிஆர்பி இணையதளத்திலிருந்து பதிவிறக்கம்செய்துகொள்ள வேண்டும்.


📝 அழைப்புக் கடிதம்தனியார் தபால் மூலம் அனுப்பப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு இ - சேவை மையங்களில், இலவச அடையாள அட்டை !!

புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்களுக்கு, அரசு இ - சேவை மையங்களில், இலவச அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

இதுகுறித்து, அவர் கூறியதாவது: அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. புதிதாக, 15.04 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, வாக்காளர் அடையாள அட்டை, ஜன., 
25க்கு பின் வழங்கப்படும். தற்போதே அடையாள அட்டை பெற விரும்புவோர், அரசு இ - சேவை மையங்களுக்கு சென்று, 25 ரூபாய் கட்டணம் செலுத்தி, பெற்றுக் கொள்ளலாம். புதிய வாக்காளர்களுக்கு, அடையாள அட்டை வழங்குவதற்காக, புதிய மென்பொருள் தயார் செய்துள்ளோம். இதன்மூலம், புதிய வாக்காளர்களுக்கு, ஜன., 25க்கு பின், அவர்களின் மொபைல் எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் ரகசிய குறியீட்டு எண் அனுப்பப்படும். அந்த எண்ணை, அரசு இ - சேவை மையங்களில் காண்பித்து, இலவசமாக அடையாள அட்டையை பெறலாம். புதிய அடையாள அட்டை வந்து சேரவில்லை என்ற புகாரை தவிர்க்க, இந்த ஏற்பாட்டை செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சென்னை முதலிடம்! : வாக்காளர் எண்ணிக்கையில், சென்னை முதலிடத்தில் உள்ளது. இம்மாவட்டத்தில், 20.07 லட்சம் ஆண்கள்; 20.51 லட்சம் பெண்கள் என, மொத்தம், 40.58 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அதற்கு அடுத்த இடங்களை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் பெற்றுள்ளன.
அரியலுார் மாவட்டத்தில், மிகக்குறைந்த வாக்காளர்கள் உள்ளனர். இம்மாவட்டத்தில், 2.49 லட்சம் ஆண்கள்; 2.51 லட்சம் பெண்கள் என, மொத்தம், ஐந்து லட்சம் வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். 

டி.இ.ஓ., பதவிக்கான நேர்காணல், வரும், 19ல் !!

டி.இ.ஓ., பதவிக்கான நேர்காணல், வரும், 19ல் நடக்கும் என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஷோபனா வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாவட்ட கல்வி அலுவலரான, டி.இ.ஓ., 
பதவிக்கான, 11 காலியிடங்களுக்கு முதன்மை எழுத்துத் தேர்வு, 2015 ஆகஸ்டில் நடந்தது; 2,432 பேர் பங்கேற்றனர். மதிப்பெண், இட ஒதுக்கீடு அடிப்படையில், தேர்வான, 30 பேருக்கு நேர்காணல், வரும், 19ல், சென்னை, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் நடக்கும்.

வேலை இல்லையா ?? மாதம் ரூ.40 ஆயிரம் உதவித்தொகை !

பின்லாந்து நாட்டில், வேலை இல்லாதவர்களுக்கு, மாதந்தோறும், 40 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுமென, அந்நாட்டு அரசு அறிவித்து உள்ளது.

ஐரோப்பிய நாடுகளில்ஒன்றான பின்லாந்தில், தனியார் துறையில் பணிபுரி வோர், சராசரியாக மாதந்தோறும், 2.50 லட்சம் ரூபாய் 
சம்பாதிக்கின்றனர். இந்நிலையில், நாட்டில் வறுமையை ஒழிக்கும் வகையில், வேலை இல்லாத, 2,000 பேருக்கு, மாதத்திற்கு, 40 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுமென, அந்நாட்டு அரசுஅறிவித்துள்ளது.

’சோதனை முறையில், இரு ஆண்டுகளுக்கு, இந்த உதவித்தொகை வழங்கப்படும். முதற்கட்டமாக, 2,000 பேர், இதற்காக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். உதவித்தொகை பெறுவோர், செலவுக்கான ஆதாரங்களை அரசுக்கு தெரிவிக்க வேண்டியதில்லை’என, பின்லாந்து அரசு அறிவித்துள்ளது.

இதே போல், சுவிட்சர்லாந்து நாட்டு அரசு, உதவித்தொகை வழங்குவதாக அறிவித்த போது, ’வேலை கொடுத்தால் போதும்; உதவித்தொகை தேவையில்லை’ என, அந்நாட்டு மக்கள் அதை ஏற்க மறுத்துவிட்டனர்.

ஜி.எஸ்.டி. இணையதளத்தில் தமிழக வணிகர்கள் அனைவரும் பெயர் பதிவு செய்ய வேண்டும்; அரசு அறிவிப்பு!!!

ஜி.எஸ்.டி. இணையதளத்தில் தமிழக வணிகர்கள் அனைவரும் பெயர் பதிவு செய்ய வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து தமிழக வணிகவரி கமி‌ஷனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;–அமலுக்கு வரும் ஜி.எஸ்.டி.



நாடு முழுவதும் ஒரே சீரான வரிவிதிப்பை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) விரைவில் அமல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கான இணையதளம் மற்றும் மென்பொருளை உருவாக்கும் பணியை சரக்கு மற்றும் சேவை கட்டமைப்பு (ஜி.எஸ்.டிஎன்.) நிறுவனம் மேற்கொண்டுள்ளது.இந்த நிறுவனம் ஜி.எஸ்.டி. தொடர்பாக www.gst.gov.in என்ற இணையதளத்தை உருவாக்கி உள்ளது. தமிழ்நாட்டில் வரி செலுத்துவோர் அடையாள எண் (டி.ஐ.என்.) பதிவு பெற்ற அனைத்து வணிகர்களும் இந்த இணைய தளத்தில் பதிவு செய்யவேண்டும். 1.1.2017 முதல் இந்த பதிவை வணிகர்கள் மேற்கொள்ளலாம்.இந்த இணைய தளத்தில் பதிவு செய்ய தற்காலிக ஐ.டி. மற்றும் பாஸ்வேர்டு, வணிகர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் வணிகவரித்துறை இணையதளம் https://ctd.tn.gov.in மூலமாக வழங்கப்படும்.முகாம்கள் நடக்கும்

தற்காலிக ஐ.டி. மற்றும் பாஸ்வேர்டு பெற்றவுடன் ஜி.எஸ்.டி. இணையதளத்தை உபயோகப்படுத்தி இந்த பதிவை பூர்த்தி செய்ய வணிகர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஜி.எஸ்.டி. பதிவை பூர்த்தி செய்ய https://ctd.tn.gov.in இணையத்தில் உள்ள உதவி கோப்பை (ஹெல்ப் பைல்) பயன்படுத்திக் கொள்ளலாம்.வணிகவரித்துறையின் சார்பில் மாநிலத்திலுள்ள அனைத்து முக்கிய நகரங்களிலும் சிறப்பு முகாம் ஏற்படுத்தப்பட உள்ளது. அனைத்து வணிகர்களும் ஜி.எஸ்.டி. இணைய தளத்தில் பதிவு பெற இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இந்த முகாம்களின் விவரம் வணிகர்களுடைய வரிவிதிப்பு வட்டங்களில் தெரிந்து கொள்ளலாம்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

6/1/17

110 GROUP-க்கு ADMIN! வாட்ஸ் அப்பில் கலக்கும் ஆசிரியர்.. கவனிக்கும் கல்வி அமைச்சர்!

வாட்ஸ்அப்பில் என்னவெல்லாம் செய்யலாம்? காலை எழுந்தவுடன்குட்மார்னிங், இரவு ஆனவுடன் குட்நைட் மெசேஜ்போட்டுக் ‘கடமை’யாற்றலாம். நமக்குவந்த பழையஃபார்வர்ட் மெசேஜ்களையே நாமும் ஃபார்வர்ட் செய்து, படிப்பவர்களை டரியல் ஆக்கலாம். இன்னும் மீம்ஸ், அதிசயச் செய்திகள், அரசியல் கிண்டல்கள்என அத்தனையும்பகிரலாம். ‘வாட்ஸ்அப் என்பது வெறுமனே பொழுதுபோக்கமட்டுமல்ல; மற்றவர்களுக்கு உதவவும்கூட’ என்பதற்கு சென்னைப்
பெருவெள்ளத்தின்போது நடந்த சேவைகளேசாட்சி.



 ‘வாட்ஸ்அப்’பைஉருப்படியாகவும் பயன்படுத்த முடியும் என்பதற்கு இன்னுமொருஉதாரணம் விழுப்புரம்மாவட்டம் தியாகதுருக்கம்பக்கம் உள்ளஉதயமாம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் கணித ஆசிரியர் முரளிதரன். அரசுப்பள்ளியில் பணிபுரியும்ஆசிரியரான முரளிதரன்நூற்றுக்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் குரூப்பின் மூலம்முனைப்பும், ஆர்வமும் உள்ள  ஆசிரியர்களைஇணைத்து அரசுபள்ளி ஆசிரியர்களிடையேபுதிய கற்றலைஅறிமுகப்படுத்தி வருகிறார் .

இவர் ஒன்றாம் வகுப்பில்இருந்து பன்னிரண்டாம்வகுப்பு வரைஉள்ள ஒவ்வொருபாடத்துக்கும் ஒரு வாட்ஸ்அப் குரூப்பையும், மாணவர்களுக்குமருத்துவம் மற்றும் இதர நுழைவுத் தேர்வுகளுக்குதயார் செய்யும்வகையில் போட்டித்தேர்வுகளுக்குஎன்று இரண்டுவாட்ஸ்அப் குரூப்பையும், பள்ளி குழந்தைகளுக்குநீதிக்கதைகளை சொல்லிக் கொடுக்க இரண்டு குரூப்கள், மாணவர்களின் கல்வி செயல்பாட்டுக்கு ஒரு குழு, முதல் உதவிக்குமருத்துவத் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள ஒரு குழு, ஆசிரியர்களுக்கு மனமொத்த மாறுதலுக்கு எட்டு குழுக்கள், ஆசிரியர்களுக்கான அரசாணைகளைத் தெரிவிப்பதற்குஒரு குழு, பொதுவான தகவல்களைப்பதிவு செய்வதற்குஎன்று பதிமூன்றுகுழுக்கள், ஒவ்வொரு மாவட்டத்துக்கு ஒரு குழுஎன்று மொத்தம்110 வாட்ஸ்அப் குரூப்புகளை வைத்திருக்கிறார்.  இந்த குரூப்பில் தமிழகபள்ளி கல்விஅமைச்சர் மாபாபாண்டியராஜனும் இணைந்து ஆசிரியர்கள் என்னென்ன விஷயங்கள்விவாதித்து வருகிறார்கள் என்று சத்தம் இல்லாமல்கவனித்து வருகிறார்என்பது தான்சிறப்பு.

அமைச்சரைத் தவிர மாவட்டஅளவிலும், மாநிலஅளவிலும் உள்ளகல்வித் துறைஅதிகாரிகளும் இவரது வாட்ஸ்அப் குரூப்பில் இருக்கிறார்கள்.

“தமிழ்நாட்டில் ஏதாவது பள்ளியில்ஒரு ஆசிரியர்  வித்தியாசமானமுறையில் சொல்லிக்கொடுத்தாலும் அந்த விஷயம் அடுத்த நாளேதமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளி் ஆசிரியர்களும்போய் விடுகிறது. இதன் மூலம்தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் புதியகற்பித்தல் முறையும், தொலைநுட்ப பயன்பாடும் அதிகரித்துவருகிறது.

வாட்ஸ்அப் மூலம் ஆசிரியர்களைஇணைத்து புதியகற்றலுக்கு எப்படி உதவி வருகிறேன் என்பதைஅமைச்சர் கலந்துகொண்டகூட்டத்தில் கல்வித்துறை அதிகாரிகள் சொன்னார்கள். கற்றலுக்குஉதவும் இந்தமுறை அமைச்சருக்குப்பிடித்துப் போய் ‘சமூக வலைத்தளங்களை இதுபோல்கல்விக்கு நல்லமுறையில் பயன்படுத்தவேண்டும்’ என்றுபாராட்டி அடுத்தநாளே எங்களுடையஇரண்டு வாட்ஸ்அப்குழுவில் இணைத்துக்கொண்டார். இது எங்களுக்குகூடுதல் மகிழ்ச்சியும்பொறுப்பையும் கூட்டியது. இவரைத் தவிர கல்வித்துறையில் உயர்அதிகாரிகள் பலரும் எங்களது குழுவில் இணைந்திருக்கிறார்கள்என்பது எங்கள்வாட்ஸ்அப் குழுக்களுக்குப்பலம்" என்கிறார் முரளிதரன்.

 வாட்ஸ்அப்  மூலம் கற்க வைக்கும் ஆசிரியர் முரளிதரன்ஆசிரியர் வேலையைவிட வாட்ஸ்அப்குரூப்பை நிர்வாகிக்கவேஉங்களுக்கு நேரம் சரியாக இருக்குமே? எப்படிசமாளிக்கிறீர்கள்? 

“வகுப்பு நேரத்தில் வாட்ஸ்அப்பைப்பார்ப்பதே இல்லை. பாடம் நடத்தும்போது வாட்ஸ்அப்பார்த்துக்கொண்டிருக்கக்கூடாது என்பதற்காகவே காலை9.30 மணி முதல்  மாலை4.30 மணி வரைஎந்தத் தகவலும்பகிர்ந்துக்கொள்ளக்கூடாது என்பதை முக்கியவிதிமுறைகளில் ஒன்றாக வைத்திருக்கிறோம்.

இதைப்போலவே, ஒவ்வொரு பாடத்துக்குஎன்று உள்ளகுரூப்பில் பாடம் சார்ந்த விஷயங்களை மட்டுமேவிவாதிக்க வேண்டும்என்ற தெளிவானநிபந்தனைகளோடு இந்தக் குழுக்கள் செயல்படுகின்றன. ஆகையால்வகுப்பு நேரத்தில்வாட்ஸ்அப்-க்குநோ சொல்லிவிடுகிறோம்.

குரூப்பில் காலை வணக்கம், மாலை வணக்கம்போன்ற பதிவுகளுக்குஇடமில்லை. தங்களுடையதனிப்பட்ட, பொதுக் கருத்துகளை எல்லாம் பதிவுசெய்வதற்கு என்று தனித்தனியே வாட்ஸ்அப் குரூப்புகள்இருக்கின்றன. அதில் பதிவு செய்யலாம் என்றுசொல்லி விடுகிறோம். இதனை எல்லாம்கடைப்பிடிக்காதவர்களைப் பட்டியலில் இருந்துஉடனே வெளியேற்றிவிடுகிறோம். புதியதாகக் குழுவில் இணைந்தவர்களை ஆரம்பத்தில்கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அதன் பின்புகுழு இயங்கும்முறையையும் அதன் அடிப்படைக் கட்டுப்பாட்டையும் புரிந்துகொள்கிறார்கள். நானும்பள்ளியில் இருந்துவீட்டுக்கு வந்தவுடன் இரண்டு முதல் மூன்றுமணி நேரம்ஒதுக்கி குரூப்பில்என்னென்ன தகவல்களைப்பகிர்ந்துகொள்கிறார்கள் என்பதைக் கவனித்துஅதில் உள்ளதகவல்களை ஃபேஸ்புக்கிலும், இணையத்தளத்திலும் பகிர்ந்துக்கொள்கிறோம். இதன்மூலம் வாட்ஸ்அப்குரூப்புகள் வெற்றிகரமாக இயங்குகின்றன”.

இத்தனை குரூப்கள் மூலம்எதாவது சாதிக்கமுடிகிறதா?

“இந்தக் குழுக்கள் மூலம்தமிழகம் முழுவதும்உள்ள ஆசிரியர்கள்ஒருங்கிணைக்கப்பட்டு, கற்றல், கற்பித்தலில்புதிய உத்திகளையும்பாடப்பகுதிக்கான வினாத்தாள்கள், குறிப்புகள், விளக்கங்களையும் உடனுக்குடன் பகிர்ந்துகொள்கிறார்கள். இந்த குரூப்பில்பகிரப்பட்ட 1300 கணித ஃபார்முலாக்கள் அடக்கிய தகவல்இன்றைக்கு 90% அரசு பள்ளிக்கூடங்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்த வாட்ஸ்அப் தளத்தில் ஓர்ஆசிரியர் பயன்படுத்தியவித்தியாசமான அணுகுமுறைகளை அனைத்து ஆசிரியர்களும் கடைப்பிடித்துக்கற்றுக்கொடுப்பதை எளிமையாகச் செய்கிறார்கள். வாட்ஸ்அப்பில் நிறையதகவல்கள் பகிர்ந்துகொள்வதால்ஆசிரியர்கள் வீட்டுக்குச் சென்ற பிறகும் கற்றல்கற்பித்தல் செயல் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்தகுரூப்பின் மூலம் ஆசிரியர்களும் மாணவர்களும் பெருமளவில்பயனடைகிறார்கள்” என்கிறார். 

தொழில்நுட்பத்தை ஆக்கபூர்வமாக பயன்படுத்திஅரசு பள்ளியில்படிக்கும் மாணவர்களதுமுன்னேற்றத்துக்கு உதவும் ஆசிரியரைவாழ்த்துவோம்.
10 ரூபாய் நாணயம் செல்லுமா.. செல்லாதா? ரிசர்வ் வங்கி விளக்கம்
Published: January 4 2017, 7:56 [IST]
By: Shankar
மும்பை: 10 ரூபாய் போலி நாணயங்கள் புழக்கத்தில் வந்துவிட்டதால், அவற்றைச் செல்லாது என அறிவிக்கப் போவதாக எழுந்துள்ள வதந்திகளுக்கு மத்திய ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.
அதில் 10 ரூபாய் நாணயங்களை ஒழிக்கும் திட்டம் எதுவுமில்லை என்றும், தற்போது புழக்கத்தில் உள்ள நாணயங்களைப் பயன்படுத்தலாம் என்றும் கூறியுள்ளது.

மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதி ரூ.500, ரூ.1,000 செல்லாது என்று அறிவித்தது. இதை தொடர்ந்து புதிதாக ரூ.2 ஆயிரம் நோட்டு புழக்கத்தில் விடப்பட்டது. இதனால் சில்லரை பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து 10 ரூபாய் நாணயங்களை அதிக அளவு புழக்கத்தில் விட்டுள்ளனர்.
10 ரூபாய் நாணயங்களில் தயாரிப்பு ஆண்டுகளாக 2010, 2015 ஆண்டுகள் அச்சிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் சென்னையில் பணத்தட்டுப்பாடு காரணமாக இந்த 2 விதமான 10 ரூபாய் நாணயங்களும் புழக்கத்திற்கு வந்தன. ரிசர்வ் வங்கியே மூட்டை மூட்டையாக இந்த நாணயங்களை மக்களுக்கு வழங்கியது.
இதில் 2010-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயம் போலியானது என்ற தகவல் பரவ ஆரம்பித்தது. இதனால் பஸ்கள், டீக்கடைகள், வர்த்தக நிறுவனங்களில் இந்த நாணயங்களை பொதுமக்களிடம் இருந்து வாங்க மறுத்து வருகின்றனர். இதனால் பொது மக்கள் மேலும் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
வதந்தி
இதற்கிடையில் மத்திய அரசு 10 ரூபாய் நாணயத்தையும் விரைவில் செல்லாது என்று அறிவிக்க உள்ளது என்ற வதந்தி பரப்பப்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் அதிக குழப்பத்திற்கு ஆளானார்கள்.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகள் வெளியிட்டுள்ள விளக்கத்தில், "10 ரூபாய் போலி நாணயம் புழக்கத்தில் இருப்பதாக எங்களுக்கும் புகார் வந்தது. அதுகுறித்து விசாரணை நடத்தினோம். ஆனால் அதில் உண்மை இல்லை. ரிசர்வ் வங்கி சார்பில் 2010-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயங்கள் 2011-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. தொடர்ந்து 2015-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயத்தில் ரூபாய் சின்னமும் சேர்த்து வித்தியாசமான முறையில் தயாரிக்கப்பட்டது.
இந்த இரண்டு வகை நாணயங்களும் செல்லுபடியாகும். புரளியை நம்ப வேண்டாம். போலி நாணயத்துடன் ஒருவர் வங்கி கிளையை அணுகினால் அதனை வங்கி அதிகாரிகள் பறிமுதல் செய்ய வேண்டும். அதற்கு ஒரு சான்றிதழ் வழங்கிவிட்டு, போலி நாணயத்தை ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்க வேண்டும். பின்னர் இதுகுறித்து போலீஸ் விசாரணை நடத்தப்படும். மேற்கொண்டு தகவல் தேவைப்படுபவர்கள் ரிசர்வ் வங்கியின் www.rbi.org.in என்ற இணையதள முகவரியை பார்த்து தெரிந்து கொள்ளலாம்," என்று தெரிவித்துள்ளனர்.
UPCOMING TRAININGS

( 1 )
 IED TRAINING - FOR PRIMARY Trs  - 5 days

( 2 ) Maths TRAINING FOR UPPER PRIMARY MATHS TEACHERS ( 9.1.2017 , 10.1.2017,11.1.2017) - 3 DAYS

*( 3 )*IED TRAINING FOR UPPER PRIMARY TEACHERS - 5 DAYS 

( 4 ). BRITISH ENGLISH TRG FOR PRIMARY TEACHERS - 4 DAYS ( FOR PRIMARY TEACHERS )

BRITISH ENGLISH TRG 2 DAYS FOR UPPER PRIMARY TEACHERS

( 5 ). PRIMARY CRC 

( 6). UPPER PRIMARY CRC .

( 7 ). SMC TRAINING

( 8 ) SMF and PINDICS FORM FILLING

இலவச சைக்கிள் : முதல்வர் வழங்கினார்

பள்ளி மாணவர்களுக்கு, இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை, முதல்வர் பன்னீர் செல்வம், நேற்று துவக்கி வைத்தார். நடப்பு கல்வியாண்டில், 243 கோடி ரூபாய் செலவில், 11ம் வகுப்பு படிக்கும், 2.70 லட்சம் மாணவர்கள்; 3.49 லட்சம் மாணவியர் என, மொத்தம், 6.19 லட்சம் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தை துவக்கி வைக்கும் விதமாக, தலைமை செயலகத்தில், ஏழு மாணவர்களுக்கு, முதல்வர்பன்னீர்செல்வம், இலவச சைக்கிள் வழங்கி வாழ்த்தினார்; தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் உட்பட, பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ரயில் பயணச்சீட்டு ரத்து: பணத்தை திரும்ப பெற தனி கவுன்ட்டர்: தெற்கு ரயில்வே அறிவிப்பு.

உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பின்பு பயணச்சீட்டை ரத்து செய்தவர்களுக்கு பணத்தை திரும்ப அளிக்க சிறப்பு கவுன்ட்டர் திறக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததையடுத்து பொது மக்கள் தங்களிடம் இருந்த பழைய ரூபாய் நோட்டுகள் மூலம் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மேற்கொண்டனர். ஆனால் அப்போது, கவுன்ட்டர்களில் பயணிகளுக்கு பயணச்சீட்டு ரத்து செய்ததற்கான பணத்தை திரும்பிக் கொடுப்பதில் சிக்கல் இருந்ததால் அவர்களுக்கு ரசீது மட்டுமே வழங்கப்பட்டது.பயணியின் வங்கிக் கணக்கு எண் கொடுத்தால் முன்பதிவு ரத்துக்கான பணம் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.இந்த நிலையில், நவம்பர் 8 -ஆம் தேதி தொடங்கி 3500 பேர் பயணச்சீட்டை ரத்து செய்துள்ளனர். அவர்களுக்கு பயண ரத்துக்கான ரசீதும் வழங்கப்பட்டது.

 இன்னும் சில பயணிகளுக்கு ரயில் பயணச்சீட்டு ரத்துக்கான ரசீதும், பணமும் திரும்ப தரும் நடைமுறையை துரிதப்படுத்த, சென்னை மூர்மார்க்கெட் வளாகத்தில் 5 -ஆவது மாடியில் சிறப்பு கவுன்ட்டர் திறக்கப்பட்டுள்ளது.அங்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட பயணச்சீட்டு ரசீதை செலுத்தி, வங்கி கணக்கு எண்ணையும் சமர்ப்பித்தால், மின்னணு பணப்பறிமாற்றம் முறையில் வங்கி கணக்கில் பயணச்சீட்டு ரத்துக்கான பணம் செலுத்தப்படும்.இந்த சிறப்பு கவுன்ட்டர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை செயல்படும்.

 மேலும் விவரங்களை 044 -2535 4897, 044 -2535 4746, 90031 60955 மற்றும் இ -மெயில் www.cco@sr.railnet.gov.in, www.dyccmclaims@sr.railnet.gov.in.

நீட்' தேர்வு அறிவிப்பு எப்போது? : தமிழக மாணவர்கள் எதிர்பார்ப்பு.

மருத்துவப் படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு அறிவிப்பு, இன்னும் வெளியிடப்படாததால், தமிழக மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர். நாடு முழுவதும், அனைத்து மருத்துவப் படிப்புகளுக்கும், நுழைவுத் தேர்வு கட்டாயம் என, இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்தது. 
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் சேர,நீட் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்ற, இந்திய மருத்துவ கவுன்சிலின் உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம், 2016ல் அனுமதி அளித்தது.இதற்கு, தமிழகம், ஆந்திரா, மஹாராஷ்டிரா உட்பட, பல மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்தது. எதிர்த்த மாநிலங்களில், மாநில ஒதுக்கீடு இடங்களுக்கு, கடந்த கல்வி ஆண்டுக்கு மட்டும், நீட் எழுதத் தேவையில்லை என, விலக்கு அளிக்கப்பட்டது. அதேநேரத்தில், தனியார் கல்லுாரி மாணவர் சேர்க்கைக்கு, நீட் கட்டாயம் ஆனது. இந்த ஆண்டு நீட் தேர்வு தொடர்பாக, எந்த மாநிலத்திற்கும் விலக்கு அளிக்கப்படவில்லை. மே மாதம் நடக்கவுள்ள நீட் தேர்வுக்கு, வழக்கமாக டிசம்பரில், விண்ணப்ப பதிவு துவங்கும். ஆனால், இந்த ஆண்டு இன்னும் விண்ணப்ப பதிவு துவங்கவில்லை. நீட் தொடர்பான அறிவிப்பு, ஒரு மாதத்திற்கு மேல் தாமதமாகியுள்ளது. இதுகுறித்து, தேர்வை நடத்தும், சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'நீட் தேர்வு குறித்து, இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்தில், திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது.

இந்த மசோதா நிறைவேற்றிய பிறகே, அறிவிப்பு வெளியாகும்' என்றனர்.இதற்கிடையில், பல்வேறு மாநிலங்களும், இந்த ஆண்டே, தங்கள் மாநில மொழிகளில், நீட் தேர்வு எழுத அனுமதி பெற்று வருகின்றன. இதுவரை, ஹிந்தி, ஆங்கிலம் மட்டுமின்றி, குஜராத்தி, மராத்தி, அசாமி, பெங்காலி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில், நீட் எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழுக்கு இன்னும் அனுமதிகிடைக்கவில்லை. பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்க, இரு மாதங்களே உள்ள நிலையில், திடீரென நீட் கட்டாயம் எனஅறிவிக்கப்பட்டால், என்ன செய்வது என, தமிழக மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்

சென்டம்' எடுக்க பள்ளிகள் குறுக்கு வழி : பள்ளி கல்வி இயக்குனரகம் எச்சரிக்கை.

மதிப்பெண் குறைந்த, பிளஸ் 2 மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்காமல், கட்டாய சான்று கொடுத்து வெளியேற்றும் பள்ளி கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, பள்ளிக்கல்வி இயக்குனரகம் எச்சரித்துள்ளது.பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கு, மார்ச்சில், பொதுத்தேர்வு நடக்க உள்ளது.
இந்த தேர்வில், 20 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்க உள்ளனர். அரசு மற்றும் தனியார் பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி இலக்கை எட்ட, பலகுறுக்கு வழிகளை கடைபிடிப்பதாக, பள்ளிக்கல்வி இயக்குனரகத்துக்கு புகார்கள் வந்துள்ளன.பல பள்ளிகள், அரையாண்டு தேர்வு விடுமுறைக்கு பின், மதிப்பெண் பட்டியலை பார்த்து, மிகவும் குறைந்த மதிப்பெண் மற்றும் தேர்ச்சியை எட்ட முடியாத நிலையில் உள்ள மாணவர்களுக்கு, கட்டாய சான்றிதழ் கொடுத்து, அவர்களை வெளியேற்றுவது தெரிய வந்துள்ளது. சில பள்ளிகளில், தேர்ச்சி குறைய வாய்ப்புள்ள, மாணவர்களின் பெயரை, தனியார் கல்வி மையத்தின், தனித்தேர்வர்கள் பட்டியலில் சேர்த்து விடுவதாகவும் புகார் கூறப்படுகிறது. அதனால், பல மாணவர்கள், பொதுத் தேர்வை எழுத முடியாமலும், பள்ளிக் கல்வியை முடிக்காமலும், இடையில் படிப்பை கைவிடும் அபாயம் உள்ளது.

இது போன்று செயல்படும் பள்ளிகளை கட்டுப்படுத்த, பள்ளிக் கல்வி இயக்குனரகம், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. முதன்மை கல்வி அதிகாரிகள், தங்கள் மாவட்ட மேல்நிலை பள்ளி களுக்கு நேரில் சென்று, ஆய்வு நடத்த வேண்டும். பத்து மாத வருகை பதிவேட்டில் உள்ள மாணவர் விபரங்களை, தற்போது பொதுத்தேர்வுக்கான விபரங்களுடன் சரிபார்க்க, உத்தரவிடப்பட்டுள்ளது. இதில், மாணவர்கள் பெயர் விடுபட்டிருந்தால், சம்பந்தப்பட்ட பள்ளி கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.

அஞ்சல் துறை ஊழியர்களுக்கு பொங்கல் விடுமுறை மறுப்பு 40 ஆயிரம் ஊழியர்கள் வேதனை.

மத்திய அஞ்சல்துறை ஊழியர்க ளுக்கு பொங்கல் விடுமுறை மறுக்கப்பட்டுள்ளதால், தமிழகத் தில் 40 ஆயிரம் ஊழியர்கள் பொங்கல் பண்டிகையை கொண் டாட முடியாத நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர். மத்திய அரசு 2017-ம் ஆண்டில் 17 நாள் விடுமுறை அறிவித் துள்ளது.
மத்திய அரசை பொறுத்தவரை ஜன. 26 (குடியரசு தினம்), ஆகஸ்ட் 15 (சுதந்திர தினம்), அக். 2 (காந்தி ஜெயந்தி) ஆகியன நிரந்தர விடுமுறை நாளாகும். மற்ற விடுமுறை நாட்களை மத்திய அரசு அதி காரிகள் குழு முடிவு செய்து அறிவிக்கும். தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள 17 நாள் விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை தினமான ஜன.14 இடம் பெறவில்லை.

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை அளித்துவிட்டு இந்த ஆண்டு இல்லை என மறுத்து விட்டனர். ஜனவரி மாதத்தில் குடியரசு தினமான ஜன.26-ம் தேதி மட்டும் விடுமுறையாக அறி விக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு துறைகளைப் பொறுத்தவரை அஞ்சல்துறையை தவிர்த்து மற்ற அனைத்து துறையிலும் வாரத்தில் 5 நாள் மட்டுமே வேலை நாள். சனி, ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறை நாளாகும். அஞ்சல் துறையில் ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மற்ற 6 நாளும் வேலை நாளாகும். அஞ்சல்துறை தவிர்த்து பிற மத்திய அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பண்டிகை ஜன.14 வழக்கமான விடுமுறை நாளான சனிக்கிழமை வருவதால் பாதிப்பு எதுவும் இல்லை. அஞ்சல்துறை ஊழியர்களுக்கு ஜன.14 சனிக்கிழமை வேலை நாளாகும். அன்று விடுமுறை மறுக்கப்பட்டுள்ளதால் தமிழ கத்தில் 40 ஆயிரம் அஞ்சல் துறை ஊழியர்கள் பொங்கல் பண்டி கையை கொண்டாட முடியாத நிலை உருவாகி உள்ளது. இதுகுறித்து தேசிய அஞ்சல் துறை ஊழியர்கள் கூட்டமைப்பு (சி பிரிவு ஊழியர்கள்) மாவட்டச் செயலர் சுந்தரமூர்த்தி கூறிய தாவது: மத்திய அரசு விடுமுறையை முடிவு செய்யும் குழுவில் அஞ்சல்துறை அதிகாரிகள் இடம்பெறவில்லை.

பிற துறை ஊழியர்களுக்கு ஜன. 14 சனிக்கிழமை வழக்கமான விடுமுறை நாளாக இருப்பதால் பொங்கல் பண்டிகையை விடுமுறை நாள் பட்டியலில் சேர்க் காமல் விட்டுள்ளனர். தமிழகத்தின் முக்கியமான பண்டிகை பொங்கல். தமிழர்கள் பண்டிகை இது. இப்பண்டிகையை மத்திய அரசின் பிற ஊழியர்கள் கொண்டாடும் நிலையில், அஞ்சல் துறை ஊழியர்களுக்கு மட்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அஞ்சல் துறை ஊழியர்களுக்கும் பொங்கல் விடுமுறை வழங்கக் கோரி அதிகாரிகளிடம் தொழிற்சங்கங்கள் சார்பில் வேண்டுகோள் விடுத்துள்ளோம். இதில் முடிவு ஏற்படாவிட்டால் வழக்கு தொடர்வோம், என்றார்.

‘இக்னோ’ பி.எட். நுழைவுத்தேர்வு முடிவு வெளியீடு

மத்திய அரசு பல்கலைக்கழகமான இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் (இக்னோ) தொலைதூரக் கல்வியில் பிஎட். படிப்பில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு கடந்த அக்டோபர் மாதம் 23-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது.
இந்த நிலையில், நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் இக்னோ பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.ignou.ac.in) பதிவு எண்ணை குறிப்பிட்டு தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் எப்போது தளர்த்தப்படும் ?

வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி படிப்படியாகத் தளர்த்தும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதலாக நிகழ் நிதியாண்டின் வரி வசூல் தொகை இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு கருப்புப் பணப் பொருளாதாரம் ஒழிக்கப்பட்டு, அவை கணக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது.

பணம் எடுப்பதில் உள்ள சிரமங்கள் குறைந்து வருகின்றன. இந்நிலையில், நாட்டின் நிதிச் சூழலை ரிசர்வ் வங்கி தீவிரமாக கண்காணித்து வருகிறது.
நிலைமையைப் பொருத்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகளை படிப்படியாக ரிசர்வ் வங்கி தளர்த்தும்.
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை மூலம் கடந்த மூன்று மாதங்களில் நேரடி மற்றும் மறைமுக வரிவிதிப்புகளின் மூலம் வசூலான தொகை அதிகரித்துள்ளது. மத்திய அரசின் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் மேற்கு வங்கத்தில் வரி வசூல் 13 சதவீதம் குறைந்ததாக அந்த மாநில அமைச்சர் அமித் மித்ரா குற்றம்சாட்டியுள்ளார். அதேநேரத்தில் ஹரியாணா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் வரி வசூல் வழக்கத்தைக் காட்டிலும் அதிக அளவில் நடந்துள்ளது.
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், நல்ல ஆட்சி நிர்வாகம் இருக்கும் இடத்தில் வருவாயும் நன்றாக இருக்கும் என்பது புலனாகிறது.

நிகழ் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் வரி வசூல் மூலம் அரசுக்கு ரூ. 16.3 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது. தற்போது அந்தத் தொகையைக் காட்டிலும் கூடுதான வருவாய் கிடைக்கும் என்ற நம்பிக்கை மேலோங்கியுள்ளது.
நவம்பர் வரையிலான காலகட்டத்தில் மறைமுக வரிவிதிப்பின் மூலம் கிடைத்த வருவாய், அதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் 26 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோன்று நேரடி வரிவிதிப்பு வருவாயும் அதிகரித்துள்ளது. பட்ஜெட் மதிப்பீட்டில் குறிப்பிட்டிருந்த வரி வசூல் அளவில் தற்போது 65 சதவீதம் எட்டப்பட்டுள்ளது. நிகழ் நிதியாண்டு இறுதிக்குள், எதிர்பார்த்த அளவை விட அதிகமான வருவாய் ஈட்டப்படும் என்றார் அருண் ஜேட்லி.