யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

12/7/17

மருத்துவ சேர்க்கை கலந்தாய்வு நிறுத்திவைப்பு!!!

ஜூலை 17 ல் நடைபெறவிருந்த மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வை நிறுத்தி வைக்க 
சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில், மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு, 85 சதவீதம்; சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு, 15 சதவீதம் ஒதுக்கப்படுவதாக, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில், 'மருத்துவப் படிப்பில், மாநில பாடத் திட்டத்தின் கீழ் படித்தவர்களுக்கு, தனி ஒதுக்கீடு வழங்க அதிகாரம் உள்ளது' என, சென்னை ஐகோர்ட்டில், தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது.
தொடர்ந்து, ஜூலை 17 ல் மருத்துவ கலந்தாய்வு நடத்த கூடாது. தர வரிசை பட்டியல் வெளியிடுவதை நிறுத்தி வைக்க வேண்டும். மாணவர் சேர்க்கையில் தற்பாதைய நிலையே தொடர வேண்டும் எனக்கூறி, வழக்கின் தீர்ப்பை ஐகோர்ட் ஒத்திவைத்தது

வேலை உங்களுக்குதான்... மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் 7,042 ஆசிரியர் வேலை

எஸ்எஸ்ஏ என்ற சர்வசிக்க்ஷா அபியான் திட்டம் அனைவருக்கும் கல்வி என்ற 
கொள்கையின் கீழ் ஆரம்பிக்கபட்ட பள்ளிகளில் லோயர் பிரைமரி ஸ்கூல், அப்பர் பிரைமரி ஸ்கூல் பிரைமரி டீச்சர்கள் பணியிடங்கள் என 7 ஆயிரத்து 42 துணை ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: ஆசிரியர்

தகுதி: எஸ்எஸ்ஏ திட்டதின் கீழ் ஆசிரியப்பணி பெற உயர்நிலை வகுப்பில் 50 சதவீத மதிப்பெண் டிப்ளமோ படிப்பில் 50 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள், இளநிலை பட்டம், கணிதம் மற்றும் அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 முதல் 43க்குள் இருக்க வேண்டும்

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூபாய் 200. மற்ற பிரிவினருக்கு ரூபாய் 150 தேர்வு கட்டணமாக செலுத்த வேண்டும்.

மேலும் முழுமையான முழுமையான விவரங்கள் அறிய http://www.ssaassam.gov.in/AdvertisementAsstteacherJuly2017.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்

அரசை அசைக்க ஜாக்டோ ,ஜீயோ போராட்ட அறிவிப்பு ,அரசு செவிமடுக்கவில்லையென்றால் காலவரையற்ற போராட்டம் !!

முத்தான மூன்று கோரிக்கை..*
                                      

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிடுக..
ஏழாவது ஊதியக்குழுவை அமூல்படுத்து..
இடைக்கால நிவாரணம் 20%வழங்கிடுக..

*13ம்தேதி மாவட்டத்தில் ஆலோசனை கூட்டம்..*


*18ஆம் தேதி மாவட்ட தலைநகரில் ஆர்பாட்டம்..*

*ஆகஸ்ட் 5ல் கோட்டை நோக்கி பேரணி..*

*ஜாக்டோ-ஜியோ கூட்டறிக்கை...

பள்ளிப் பைகளின் எடையைக் குறைக்க புதிய திட்டம் - ஜாவடேகர்!!

அடுத்த கல்வி ஆண்டிலிருந்து புதிய மென்பொருள் ஒன்றுடன் ஒரு திரையிடல் கருவி
மற்றும் டிஜிட்டல் பலகை ஒன்றையும் பள்ளிக்கூடங்களுக்கு வழங்கும் திட்டம் அமலாகும்; இதன் மூலம் பள்ளி மாணவர்களின் புத்தகப்பைகளின் சுமையும் குறையும் என்றார்.

மத்திய பிரதேசத்தில் 20 ஹை-டெக் பள்ளிகளை திறந்து வைத்துப் பேசுகையில் இவ்வாறு கூறினார்.

”நாடு முழுதும் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 15 லட்சம் பள்ளிகளில் 26 கோடி மாணவர்களுக்கு 70 லட்சம் ஆசிரியர்கள் பாடம் கற்பிக்கின்றனர். இம்மாணவர்களில் 10 கோடி பேர் மதிய உணவு திட்டத்தில் இணைந்துள்ளனர்” என்றார் அமைச்சர்

அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்.. சாம்சங் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது தமிழக அரசு!!

அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைப்பது தொடர்பாக 
சாம்சங் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
வளர்ந்து வரும் தொழில்நுட்ப சவால்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில், அரசுப் பள்ளி மாணாக்கர்கள் போதிய கணினி திறன்களை அடையும் வகையில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்கள் ஏற்படுத்தப்படும்.

அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் கிராமப்புற மாணவர்களுக்கு கணினி மூலமாக பாடங்களை பயிற்றுவிக்கும் வகையில் முதற்கட்டமாக 3,000 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒரு பள்ளிக்கு ஓர் அறிவுத் திறன் வகுப்பறை, அதாவது ஸ்மார்ட் கிளாஸ் ஏற்படுத்தப்படும் என்று சமீபத்தில் 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் அறிவித்தார்.

இந்நிலையில் அரசு மாநகராட்சி பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்க சாம்சங் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் தமிழக அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, சம்பத் ஆகியோர் முன்னிலையில் இன்று கையெழுத்தானது.
தமிழக அரசும், சாம்சங் நிறுவனமும் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளது. அதன்படி முதல்கட்டமாக சென்னையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சென்னையில் 20 மேல்நிலைப்பள்ளிகள், 8 நடுநிலைப் பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

11/7/17

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் நடத்தும் பிராந்திய கிராம வங்கிகளுக்கான காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.



காலியிடங்கள்: 14192
தகுதி: Degree
வயது வரம்பு: 18-40 ஆண்டுகள்
தேர்வு முறை: எழுத்து தேர்வு & இன்டர்வியூ.
சம்பளம்: Rs.47,000/-
ஆரம்ப தேதி: 12.07.2017
கடைசி தேதி: 01.08.2017
விண்ணப்பிக்கும் முறை: Online
Apply link--> https://www.kappajobs.com/ibps-rrb-recruitment-2017-14192-officers-office-assistant-post/

ரேஷன் கார்டில் மாற்றம் செய்ய... இருக்கவே இருக்கு 1967! வரிசையில் காத்திருக்க வேண்டாம்!!!

ரேஷன் கார்டு மட்டுமல்ல...வழங்கல் துறையும் படிப்படியாக 'ஸ்மார்ட்' ஆக மாறி வருகிறது
. இனி, ரேஷன் கார்டில் பெயர், முகவரி மாற்ற, தாலுகா அலுவலகங்களில் கால்கடுக்க காத்து நிற்க தேவையில்லை. கையில் ஒரு ஆன்டிராய்டு மொபைல் போன் இருந்தால் போதும்; 1967 என்ற எண்ணை அழுத்தி, இருந்த இடத்தில் இருந்தே வேலையை கச்சிதமாக முடித்து விடலாம்.ஆம்...! மொபைல் போன் நிறுவனங்களில் உள்ளதை போன்று, வாடிக்கையாளருக்கு சேவையளிப்பதற்காக, 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்படும் வகையில், தானியங்கி மொபைல் சேவை மையத்தை உணவு வழங்கல் துறை உருவாக்கியுள்ளது. இச்சேவை மையம், தமிழகம் முழுக்க உள்ள, ரேஷன்கார்டுதாரர்களின் புகார்களை பெற்று, உடனுக்குடன் சரிசெய்து கொடுக்கிறது.ரேஷன்கடையில் பெரும்பாலானவர்கள் ஆதார் எண்ணை பதிவு செய்திருப்பார்கள், குடும்பத்தலைவரின் போட்டோவை கொடுத்திருக்க மாட்டார்கள் அல்லது தெளிவான போட்டோவை கொடுத்திருக்க மாட்டார்கள். அதனால் பலருக்கு 'ஸ்மார்ட் கார்டு' இன்னும் கிடைக்கவில்லை.போட்டோவை நாம் ரேஷன்கடையில், சமர்ப்பிக்க வேண்டுமென்றால், போட்டோவை 'மொபைல் ஆப்' மூலமாகவோ., அல்லது TNEPDS என்ற இணையதளம் மூலமாகவோ மட்டுமே, 'அப்லோடு' செய்ய முடியும். அதன்பின்பு தான் 'ஸ்மார்ட் கார்டு' பிரிண்ட் செய்வார்கள். TNEPDS என்ற இணையதளம் வாயிலாக, 'போட்டோவை' எளிதாக 'அப்லோடு' செய்யலாம்.அதன் பின், அதை 'பிரிண்ட் அவுட்' எடுத்து ரேஷன்கடையில் சமர்ப்பிக்கலாம். இதே இணையதளத்தில் முகவரி மாற்றம், பெயர் மாற்றம், பெயர் சேர்ப்பு, கடை மாற்றம், பெயர் திருத்தம் உள்ளிட்ட பணிகளையும், இதே போன்று இணையதளம் வாயிலாக மேற்கொள்ளும் வசதி, விரைவில் வரவுள்ளது.தற்போது இ-சேவை மையங்களில் இச்சேவைகள் அறிமுகப்படுத்தப்படுத்தப்பட்டு விட்டன.இது குறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணமூர்த்தி கூறியதாவது:உணவு வழங்கல் துறை, பல்வேறு முன்னேற்றங்களை அடைந்துள்ளது. தனியாருக்கு இணையாக இணையதள சேவையை மக்களுக்கு வழங்கி வருகிறது. இதை மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். படிக்காதவர்கள் எண்ணிக்கை மிக மிகக்குறைவு. அவர்களை தவிர்த்து மற்றவர்கள், இச்சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம். ஒவ்வொரு ரேஷன்கார்டுதாரர்களும், உணவுப்பொருள் வழங்கல் துறையில் என்னென்ன வசதிகள் உள்ளன, என்பதை இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ள வேண்டும்.tnepds.gov.in என்ற வெப்சைட்டில் நுழைந்தால், அதில் உள்ள பல்வேறு வசதிகளை எளிதாக தெரிந்து கொள்ளலாம். முடிந்தால், அதிலுள்ள செயலியை (ஆப்) உங்கள் மொபைல் போனில் டவுண்லோடு செய்து வைத்துக்கொண்டு, நேரம் கிடைக்கும் போது பயன்படுத்திக்கொள்ளலாம்.இதன் வாயிலாக, வீட்டில் இருந்து கொண்டே, ரேஷன்கடையிலுள்ள இருப்பை தெரிந்து கொள்ளலாம். கடைக்கு சென்றால் பொருட்கள் கிடைக்குமா, கடை திறந்திருக்கிறதா என்ற தகவல்களை கூட, நாம் தெரிந்து கொள்ளலாம். இச்செயலியை பயன்படுத்திய பலரும், மிகவும் உபயோகமாக இருப்பதாக பாராட்டு தெரிவித்துள்ளனர்.இவ்வாறு, சரவணமூர்த்தி கூறினார்.

இப்படித்தான் சாத்தியம்!1967 என்ற எண்ணை, மொபைல் போன் அல்லது தொலைபேசி வாயிலாக, 'டயல்' செய்தால், 'தமிழுக்கு ஒன்றை அழுத்தவும்' என்ற பதில் கிடைக்கும். அதன்படி அழுத்தினால், 'குடும்ப அட்டை வைத்திருப்பவரா' என்ற அடுத்த கேள்விக்கு, எண், 2 ஐ அழுத்தவேண்டும்.சேவை அதிகாரி உங்களுடன் பேசுவார். அவர் ரேஷன்கார்டின் வலது பக்கத்தின், மேற்பகுதியிலுள்ள எண்ணை கேட்பார். உதாரணத்திற்கு, 006/w/33658889 என்ற எண்ணை நாம் தெரிவித்தால், ரேஷன்கார்டிலுள்ள, ஒருவரின் ஆதார் எண்ணை, அவர் கேட்பார். ஆதார் எண்ணை தெரிவித்தால், நம் ரேஷன்கார்டில் நமக்கு தேவையான, மொபைல் எண்ணை பதிவு செய்து கொள்ளலாம்.அல்லது ஏற்கனவே பதிவில் இருக்கும் மொபைல் எண்ணுக்கு பதிலாக, வேறுஎண்ணையும் மாற்றிக்கொள்ளலாம். இவ்வளவுதான் வேலை. இதற்காக, ரேஷன் கடையிலோ, உணவுபொருள் வழங்கல் துறை அலுவலகத்திலோ வேலைமெனக்கெட்டு காத்திருக்க வேண்டியதில்லை

ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் லீக்?

120 மில்லியன் ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் லீக் ஆகியுள்ளதாக தகவல் 
வெளியாகியுள்ளது. இதனை ஜியோ நிறுவனம் மறுத்துள்ளது.

மிகக் குறைந்த கட்டணத்தில் டேட்டா வழங்கி மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், அதிர்ச்சி அடைய வைத்தது. இதனால் மற்ற நிறுவனங்களும் சலுகைகளை அள்ளி வழங்கின. ஜியோ அறிவித்த குறைந்த விலையில் 4ஜி டேட்டா திட்டத்தால் ஜியோ வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தன.

இந்நிலையில், 120 மில்லியன் ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் லீக் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வாடிக்கையாளரின் பெயர், இ-மெயில் ஐ.டி, மொபைல் எண், ஆதார் எண், சிம் கார்டு ஆக்டிவேட் ஆன தேதி உள்ளிட்ட தகவல்கள் லீக் ஆகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை ஜியோ நிறுவனம் மறுத்துள்ளது. தங்களது வாடிக்கையாளர்களின் தகவல் அதிக பாதுகாப்புடன் பராமரிக்கப்படுவதாக ஜியோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனையானவற்றிற்கு மட்டுமே டேட்டா பகிரப்பட்டதாக தெரிவித்த அதிகாரிகள், இதுகுறித்து கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்

இன்ஜி., படிப்புக்கு 'நீட்' விலக்கு: அமைச்சர் உறுதி !!

அடுத்த ஆண்டு, 'நீட்' தேர்வில் இருந்து விலக்களித்து, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே, தமிழகத்தில், இன்ஜி., கலந்தாய்வை நடத்த, மத்திய அரசை வலியுறுத்துவோம்,'' என, தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.


சேலத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் கடந்த ஆண்டை விட அரசு கலைக் கல்லுாரியில் மாணவ மாணவியர் சேர்க்கை அதிகரித்துள்ளது. வரும் கல்வியாண்டில் அரசு கலை அறிவியல் கல்லுாரிகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


அடுத்த கல்வியாண்டில், பொறியியல் கல்லுாரியில் சேரும் மாணவர்கள், 'நீட்' தேர்வு எழுத சட்டம் கொண்டு வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில், அதை அனுமதிக்காத வகையில் பார்த்துக் கொள்வோம், மேலும், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், இன்ஜி., கலந்தாய்வு நடத்த வேண்டும் என, மத்திய அரசை வலியுறுத்துவோம்.இவ்வாறு அவர் கூறினார். 

சிபிஎஸ்சி க்கு நிகராக தமிழக பள்ளிகளில் பாடத்திட்டங்கள்… அமைச்சர் செங்கோட்டையன் உறுதி….!!

சிபிஎஸ்சிக்கு நிகராக தமிழக கல்வித் துறையில் மாற்றங்கள் கொண்டுவரப்படும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ,செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்ற பிறகு பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார். பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் ரேங்க் பட்டியல் வெளியிடுவதற்கு தடை விதித்தது உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்,தமிழகத்தில் பாடத்திட்டங்களை மாற்றி அமைக்க 2 குழுக்கள் நியமக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சிபிஎஸ்சிக்கு நிகராக தமிழக பாடத்திட்டங்களில் மாற்றம் கொண்டுவரப்படும் என தெரிவித்த அமைச்சர் செங்கோட்டையன், இந்த மாற்றம் அடுத்த 3 ஆண்டுகளுக்கு நிறைவேற்றப்படும் என கூறினார்.

இதே போன்று தமிழகத்தில உள்ள பள்ளிகளில் 10 ஆயிரம் நவீன கழிப்பறைகள் கட்டித் தரப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

பிராந்திய மொழியில் உயர் கல்வி புத்தகங்கள்: பிரணாப்

உயர் கல்வி பயிலும் மாணவர்கள் ஆங்கிலத்தில் கற்க சிரமப்படுவதை தவிர்க்க, பிராந்திய மொழியில் உயர் கல்வி புத்தகங்கள் இருக்க வேண்டும் என ஜனாதிபதி
பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

கல்வித்தரத்தில் வேறுபாடு:

டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசியதாவது: நம் நாட்டில் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதன் மூலம் இளைஞர்களின் திறமையை மேம்படுத்த முடியும். நம் நாட்டில் கிராம பகுதிகளுக்கும், நகரப் பகுதிகளுக்கும் இடையே கல்வித்தரத்தில் மிகுந்த வேறுபாடு உள்ளது. தவிர மாநிலங்களுக்கு இடையிலும், கல்வி நிலையங்களுக்கும் இடையிலும் கல்வித்தரத்தில் வேறுபாடு உள்ளது.

ஆங்கிலத்தில் கற்க சிரமம்:

பிராந்திய மொழிகளில் தரமான புத்தகங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளிக் கல்வியை பிராந்திய மொழியில் படித்துவிட்டு, உயர் கல்வியை ஆங்கிலத்தில் படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு சிரமங்கள் உள்ளன. இதனை தவிர்க்க பிராந்திய மொழியில் உயர் கல்வி புத்தகங்கள் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்

வங்கக்கடலில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் கூட்டுப்பயிற்சி : அதிர்ச்சியில் சீனா

கடற்படையை வலிமைப்படுத்துவதற்காகவும், எதிரி நாடுகளால் ஏற்படும்
பாதுகாப்பு அச்சுறுத்தல்களை சமாளிக்கவும், திடீரென போர் மூண்டால் எதிரி நாடுகளின் வியூகத்தை கணித்து செயல்படவும் ஆண்டுதோறும் கூட்டுப்பயிற்சி நடத்தப்பட்டு வருகின்றது.
இந்தியா, அமெரிக்கா கடற்படைகள் இணைந்து, கடந்த 1992ம் ஆண்டு முதல் மலபார் என்ற பெயரில் கூட்டுப்பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன. இந்த கூட்டுப் பயிற்சியில் கடந்த 2007ம் ஆண்டு முதல் ஜப்பான் கடற்படையும் இணைந்துள்ளது. இந்நிலையில், ஜூலை 7ம் தேதி முதல் வங்கக்கடல் பகுதியில், இந்தியா - அமெரிக்கா, ஜப்பான் நாடுகளின் கடற்படைகள் இணைந்து மலபார் 2017 என்ற பெயரிலான கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. வரும் 17ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தப் பயிற்சியில் பங்கேற்றுள்ள அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த 2 போர்க்கப்பல்கள், சென்னை துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளன. அவற்றுக்கு இந்திய கடற்படை அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கடல் மற்றும் துறைமுகம் ஆகிய 2 பகுதிகளிலும் நடைபெறும் கூட்டுப்பயிற்சியில், வான்வழித் தாக்குதல்களை எதிர்கொள்வது, நீர்மூழ்கிக் கப்பல்களை தடுப்பது, கடலில் மூழ்குவோரை தேடுவது மற்றும் மீட்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவிற்கு சீனா, பாகிஸ்தான் நாடுகளால், கடல்வழி அச்சுறுத்தல் இருக்கும் நிலையில், இந்தியா உள்பட 3 சக்தி வாய்ந்த நாடுகளின் கூட்டுப்பயிற்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது சீனாவிற்கு பேரதிர்ச்சியாகவும் அமைந்துள்ளது

பயிற்சிக்கு 'டிமிக்கி' கொடுக்கும் ஆசிரியர்கள் கண்காணிப்பு : வீடியோ கான்பரன்சிங்கில் கலந்துரையாடல்!!!

மதுர மாவட்டத்தில் இன்று முதல் (ஜூலை 10) துவங்கும் எஸ்.எஸ்.ஏ.,- ஆர்.எம்.எஸ்.ஏ., சிறப்பு
பயிற்சியை கல்வித்தறை செயலாளர் உதயசந்திரன் நேரடியாக கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால், பயிற்சிக்கு 'டிமிக்கி' கொடுக்காமல் சரியான நேரத்திற்கு ஆசிரியர்கள் சென்றுவிடுங்கள் என சங்கங்கள் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
பொதுவாக எஸ்.எஸ்.ஏ., ஆர்.எம்.எஸ்.ஏ., உட்பட பயிற்சி வகுப்புகள் என்றாலே தாமதமாக செல்லும் ஒரு ஆசிரியர் கூட்டமே உள்ளது. சங்கம் பின்னணியில் உள்ள ஆசிரியர்கள் ஏதாவது ஒரு காரணத்தை கூறி பயிற்சியில் பங்கேற்காமல் 'டிமிக்கி' கொடுத்து தப்பித்து விடுவர்.இந்நிலையில் இன்றுமுதல் ஐந்து நாட்கள் நடக்கும் சிறப்பு பயிற்சி வகுப்பில், 6-10ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பாடம் வாரியாக பங்கேற்கின்றனர். இப்பயிற்சியின் செயல்பாடுகளை செயலாளர் உதயச்சந்திரன் நேரடியாக கண்காணித்து, முதன்முறையாக காணொலி காட்சி மூலம் பயிற்சியிலுள்ள ஆசிரியர்களிடம் கலந்துரையாடல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் அனைத்து தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கும், ஜூலை 10- 14 மற்றும் 24 - 28 ம்தேதி என இரண்டு கட்டங்களாக வட்டார வளமையங்களிலும் பயிற்சி நடக்கிறது.பயிற்சியை செயலாளர் கண்காணிப்பதால் ஆசிரியர்கள் கட்டாயம் பங்கேற்க வலியுறுத்தி சங்கங்கள் சார்பில் 'வாட்ஸ்ஆப்' மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
அதில், 'ஆசிரியர்கள் முன்கூட்டியே பயிற்சி வகுப்பு நடக்கும் அறைக்கு சென்று விடுங்கள். பஸ் வரவில்லை, நிற்கவில்லை, திடீரென உடம்பு சரியில்லாமல் போச்சு போன்ற காரணத்தை தவிர்த்துவிடுங்கள். உண்மையிலேயே உடல் பாதிப்பு இருந்தால் முன்கூட்டியே அனுமதி பெற்று விடுங்கள்' என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்வி அதிகாரி கூறியதாவது: பல லட்சம் ரூபாய் செலவிட்டு பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. ஆனால் ஏனோ தானோ என்று தான் ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். இப்பயிற்சியில் ஆசிரியர்களுக்கு சில முக்கிய ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன. இதனால் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என செயலாளர் எச்சரித்துள்ளார். 'வீடியோ கான்பரன்சிங்', 'ஸ்கைப்' மூலம் அவரே குறுக்கிட்டு பயிற்சி குறித்தும் கேட்கவும் வாய்ப்புள்ளது. பயிற்சி மையங்களில் இதற்கான கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது, என்றார்

அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு கோர்ட் வாய்ப்பூட்டு


மே மாதம் 24 ம் தேதி பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அளித்த பேட்டியில் 
, தனியார் நிறுவனங்கள் விற்கும் பாலில் வேதிக்கலப்படம் இருப்பதாக புகார் தெரிவித்திருந்தார். இது பெரும் எதிர்ப்பை கிளப்பியது.இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் ஹட்சன் , டோட்லா, விஜய் பால் நிறுவனங்கள் வழக்கு தொடுத்தன. அமைச்சர் பேச்சால் விற்பனையில் பாதிப்பு ஏற்படுகிறது என்றும், இதனால் அமைச்சர் ரூ. 1 கோடி நஷ்டஈடு தர வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த கோர்ட் , தனியார் பால் நிறுவனங்கள் குறித்து ஆதாரம் இன்றி விமர்சிப்பதை அமைச்சர் நிறுத்த வேண்டும் என தடை விதித்தது. மேலும் தனியார் பால் நிறுவனங்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது

ஏர்இந்தியா விமானத்தில் இனி அசைவ உணவு கிடையாது!!!

அனைத்து உள்நாட்டு விமானங்களின் எக்கனாமிக் வகுப்பில் பயணம் செய்யும் பயணிக
ளுக்கான உணவுப் பட்டியலில் இருந்து அசைவ உணவுகள் நீக்கப்படுவதாக ஏர்இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
கட்டணத்தை குறைப்பதற்காகவும், உணவு வீணாவதை தடுப்பதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் ஏர்இந்தியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் சர்வதேச விமானங்களிலும், உள்நாட்டு விமானங்களில் முதல்வகுப்பு பயணிகளுக்கும் அசைவ உணவுகள் வழக்கம் போல் வழங்கப்படும் என ஏர்இந்தியா தெரிவித்துள்ளது.
இந்த முடிவுகளை ஏர்இந்தியா 2 வாரங்களுக்கு முன்னதாகவே எடுத்து விட்டதாக கூறப்படுகிறது. 90 நிமிடங்களுக்கும் குறைவான பயண தூரத்தை உடைய அனைத்து விமானங்களிலும் அசைவ உணவுகள் வழங்குவதை 6 மாதங்களுக்கு முன்னதாகவே ஏர்இந்தியா நிறுத்தி விட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் விமானங்களில் அதிக சுமை ஏற்றப்படுவதை தவிர்ப்பதற்காக கடந்த மாதம் முதல் சாலட் உள்ளிட்ட உணவுகள், சில மேகசின்கள் வழங்குவதையும் ஏர்இந்தியா நிறுத்தியது

துணைவேந்தர் நியமனம்; தேடல் குழுவால் தாமதம்

அண்ணா பல்கலை துணைவேந்தராக இருந்த ராஜாராம், 2016 மே
மாதம் ஓய்வு பெற்றார்.
இதையடுத்து, புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை துணைவேந்தர் பாஸ்கரன் தலைமையில், தேடல் குழு அமைக்கப்பட்டது.இந்தக் குழு, மூவரின் பெயர்களை கவர்னருக்கு பரிந்துரை செய்தது.
அதை பரிசீலித்த கவர்னர், மூவரிடமும் நேர்முக தேர்வு நடத்தினார். அவர்களின் தகுதிகளில் திருப்தி அடையாத கவர்னர், தேடல் குழுவின் பரிந்துரையை நிராகரித்ததோடு, குழுவையும் கலைத்தார்.
பின், உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி லோதா, கான்பூர் ஐ.ஐ.டி., முன்னாள் இயக்குனர் அனந்த பத்மநாபன் மற்றும் ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சுந்தரதேவன் இடம் பெற்ற, புதிய தேடல் குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவினர், ஜூலை, ௧ல் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினர். இதன் பிறகும், புதிய துணைவேந்தர் தேர்வுக்கான, விண்ணப்பங்கள் தகுதியான நபர்களிடம் இருந்து பெறப்படவில்லை; அதற்கான நடவடிக்கைகளையும், தேடல் குழு துவக்கியதாக தெரியவில்லை.
அதனால், புதிய துணைவேந்தர் தேர்வு விரைவில் நடப்பதற்கான வாய்ப்பு இல்லை; தாமதமாகலாம் என, எதிர்பார்க்கப்படுகி

சிறப்பு பேனா மூலம் அடையாள மை!!

தேர்தலின் போது வாக்களித்தவர்களின் விரலில் அடையாள மை வைப்பதற்காக 
தேர்தல் ஆணையம் சிறப்பு பேனாவை தயார் செய்து வருகிறது.
ஆரம்பத்தில், தேர்தல் வாக்குச் சீட்டுகளை பயன்படுத்தி நடத்தப்பட்டன.
அதன்பின், பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த இருமுறைகளிலும் தேர்தலில் ஓட்டு போட்டவர்களை அடையாளம் காண வாக்காளர்களின் கையில் அழியாத மை வைக்கும் முறை நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில், தேர்தலின் போது வாக்களித்தவர்களின் விரலில் அடையாள மை வைப்பதற்காக தேர்தல் ஆணையம் சிறப்பு பேனாவை தயார் செய்து வருகிறது.

மைசூரில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான பெயிண்ட் மற்றும் வார்னிஷ் தொழிற்சாலையில் இந்த தயாரிப்பு பணி நடைபெறுகிறது.

அடையாள மை பாட்டில் தயாரிப்பு செலவைக் காட்டிலும், இந்த சிறப்பு பேனாவின் தயாரிப்புச் செலவு பாதி தான் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், ஒரு பே‌‌னாவின் மூலம் ஆயிரம் வாக்காளர்களின் விரல்களின் அடையாள மை வைக்க முடியும் என்றும், இதனை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் இருந்து பயன்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.`

செல்போன் திருடர்கள் 'ஈ'தான் ஓட்டணும்: செல்போன் திருடுபோனால், செயலிழக்க வைக்கும் தொழில்நுட்பம் !

ஒரு வேளை செல்போன் திருடுபோனால், அதனை முற்றிலும் செயலிழக்க வைக்கும் புதிய
தொழில்நுட்பம் சோதனை அளவில் இருக்கிறது.

செல்போனை செயலிழக்க வைக்கும் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டால், அதனை அனைத்து செல்போன் தயாரிப்பு நிறுவனங்களும், தங்களது உற்பத்தியில் இணைக்க வேண்டியது கட்டாயமாக்கப்படும்.

இதனை முன்னிட்டு, செல்போனில் இருக்கும் ஐஎம்இஐ எனப்படும் 15 இலக்க எண்ணை அழிப்பது குற்றச் செயலாகவும், அதற்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கவும் வகை செய்ய தொலைத் தொடர்புத் துறை திட்டமிட்டுள்ளது.

சோதனை அடிப்படையில் இருக்கும் நவீன தொழில்நுட்பத்தின் மூலம், தொலைந்து போகும் அல்லது களவு போகும் செல்போனை முற்றிலும் செயலிழக்க வைக்கலாம், அது எந்த தொலைத்தொடர்பு நிறுவனத்துடையதாக இருந்தாலும். மேலும் அந்த செல்போனில் சிம் கார்டு அகற்றப்பட்டிருந்தாலோ அல்லது ஐஎம்இஐ எண் மாற்றப்பட்டிருந்தாலும் கூட அதனை செயலிழக்க வைக்கலாம்.

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடட் நிறுவனம், மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள மையத்தில், இந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்தி பரிசோதித்து வருகிறது.

சென்ட்ரல் எக்யூப்மென்ட் ஐடின்டி ரெஜிஸ்டர் (CEIR) எனப்படும் இந்த தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வந்தால், செல்போன்கள் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதும், செல்போன் திருட்டுச் சம்பவங்களும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது இந்த சிஇஐஆர் தொழில்நுட்பம் ஒவ்வொரு செல்போனின் ஐஎம்இஐ தகவல்களுடன் இணைக்கப்படும். இதன் மூலம் அனைத்துத் தொலைத்தொடர்பு எண்களுக்கும் மையப் புள்ளியாக சிஇஐஆர் இருக்கும். இதில், களவுப் போன அல்லது தொலைந்து போன செல்போன் குறித்த தகவலை அனுப்பிவிட்டால், உடனடியாக அந்த செல்போன் எந்த தொலைத்தொடர்பு எண்ணுக்கும் பயன்படாத வகையில் முடக்கிவிட முடியும். அந்த செல்போனில் சிம் கார்டு இல்லாவிட்டாலும் இதனை செயல்படுத்த முடியும் என்கிறது தகவல்கள்

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வுமையம

தென்மேற்கு பருவமழை தொடங்கினாலும்  சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் 
மாவட்டங்களில் போதிய மழை பெய்யவில்லை. இந்த நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மெரீனா கடற்கரை, அம்பத்தூர், ஆவடி பகுதிகளில் லேசான மழை தூறல் விழுந்தது.

இரவு 7 மணி அளவில் படிப்படியாக மழை அதிகரித்து கனமழை பெய்ய தொடங்கியது. சுமார் 2 மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது.

கோயம்பேடு,  வட பழனி, மயிலாப்பூர், மந்தைவெளி, தி.நகர், கிண்டி, கோடம்பாக்கம், அண்ணா நகர், எழும்பூர், மண்ணடி, நுங்கம்பாக்கம், கீழ்ப்பாக்கம், வில்லிவாக்கம், கொரட்டூர், அம்பத்தூர், திருமுல்லை வாயல், ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லா வரம்,  புழல்,  செம்பரம் பாக்கம், சோழவரம், பூண்டி, திருவள்ளூர்,  காஞ்சீபுரம் உள்பட பல பகுதிகளில் பலத்த காற்று, இடியுடன் கனமழை பெய்தது.

வெப்பசலனம் காரணமாக நேற்றிரவு பெய்த மழை  இன்றும் நீடிக்கும் என்றும், நேற்று  இரவு  நுங்கம்பாக்கத்தில் 84 மி.மீட்டர் மழையும்,  மீனம் பாக்கத்தில் 46.2 மி.மீட்டர்  மழையும் பெய்துள்ளதாக வானிலை மையம்  அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் பாலசந்திரன் இன்று பேட்டி அளித்தார். அப்போது  தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும். வட மற்றும் தென் தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் மழைபெய்ய வாய்ப்பு உள்ளது என கூறினார்

ஐஐடி.,யில் மாணவர் சேர்க்கைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!!!

நாடு


முழுவதிலும் உள்ள ஐஐடி மற்றும் என்.ஐ.டி.,க்களில் மாணவர்கள் சேர்க்கை
ஐஐடி நுழைவு தேர்வில் இந்தி வினாத்தாளில் பிழை இருந்ததன் காரணமாக சலுகை மதிப்பெண் வழங்கப்பட்டது. இந்தியில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மட்டுமின்றி பிழையில்லாத வினாத்தாள் கொண்டு ஆங்கிலத்தில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கும் இந்த சலுகை மதிப்பெண் வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மாணவர் சேர்க்கை மற்றும் கவுன்சிலிங்கிற்கு கடந்த வாரம் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பதிலளித்த ஐஐடி நிர்வாகம், வினாத்தாளில் பிழை இருப்பது தெரிந்ததும் தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் சலுகை மதிப்பெண் வழங்கப்பட்டது. இது போன்ற அச்சுப்பிழைகள் இனி ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. இவ்விளக்கத்தை ஏற்ற சுப்ரீம் கோர்ட், மாணவர்கள் சேர்க்கை மற்றும் கவுன்சிலிங்கிற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியதுடன், சலுகை மதிப்பெண்ணிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் தள்ளுபடி செய்தது