யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

29/11/18

ஜேக்டோ ஜியோ அறிவித்த டிசம்பர் 4 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் திட்டமிட்டபடி நடைபெறும்.

                                             
(28.11.18) திருச்சியில் நடைபெற்ற ஜேக்டோ ஜியோ மாநில

ஒருங்கிணைப்பாளர்கள் கூட்ட முடிவுகள்.


👉   ஜேக்டோ ஜியோ அறிவித்த டிசம்பர் 4 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் திட்டமிட்டபடி நடைபெறும்.
👉  மாநில உயர்மட்டக்குழு கூட்டம் டிசம்பர் 1 ம் தேதி நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெறும்.

SCHOOL TEAM VISIT குறித்து மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!!!

நீதிக்கதை :

நடப்பது எல்லாம் நன்மைக்கே!

காட்டு ராஜா சிங்கத்தின் குகை வாசலில், ஏகப்பட்ட மிருகங்களின் கூட்டம். காட்டு ராஜா, வேட்டையாடச் சென்றபோது, கால்விரலில் அடிபட்டு, விரல் துண்டாகி விட்டதென்று அறிந்து துக்கம் விசாரிக்கத்தான் காட்டுப் பிரஜைகளான மிருகங்கள் கூடியிருந்தன. ஒவ்வொரு மிருகமாக வரிசையில் நின்று, குகையின் உள்ளே சென்று, சிங்க ராஜாவைப் பார்த்து விட்டுத் திரும்பின.

சிங்கராஜா காலில் பலமான கட்டுடன், கட்டிலில் படுத்துக் கிடந்தது. அருகே சிங்கராணி, வழியும் கண்­ரும் சிந்திய மூக்குமாக அமர்ந்து இருந்தது.

ஒவ்வொரு மிருகமாக வரிசையாகச் சென்று கொண்டிருந்தபோது, வரிசையின் இடையே வந்து, புகுந்து கொண்ட குள்ளநரி, சிங்கராஜாவின் அருகே சென்றதும் பெருமூச்சு விட்டபடி “ஊம் நடப்பது எல்லாம் நன்மைக்கே” என்றது. சிங்கராஜாவுக்கு கடுங்கோபம் வந்துவிட்டது.

நமது காலிலுள்ள ஒரு விரலே போய்விட்டது. இந்தக் குள்ளநரி, நடப்பதெல்லாம் நன்மைக்கே, என்று கூறுகிறதே. “பிடி அதை அடைத்துவை, குகைச்சிறையில்!” எனக் கட்டளை இட்டது சிங்கராஜா.

சிப்பாய்க் குரங்குகள் பாய்ந்து, நரியைப் பிடித்து இழுத்துச் சென்றன.

“ஒவ்வொரு காரியமும் நமது நன்மைக்குத்தான் நடக்கிறது என்ற உண்மையைத்தானே சொன்னேன்” என்று புலம்பியபடி சென்றது குள்ளநரி.

சிங்கராஜாவின் காலிலுள்ள புண் குணமாவதற்கு, மூன்று மாதகாலம் கடந்தது. காலில் ஒருவிரல் இல்லாமையால், சிங்கராஜா கம்பீரமாக நடக்க இயலாமல், நொண்டி நொண்டி நடந்தது. அதனால் மிருகங்கள் எல்லாம் மறைமுகமாக “நொண்டி ராஜா” என அழைத்தன.

இப்படிச் சிங்கராஜாவை எல்லாரும் கேலி செய்வதைக் கேட்டு, சிங்கராணிக்கு மிகுந்த வருத்தம். என்ன செய்வது? இந்தப் பட்டத்தைச் சூட்டியது எந்த மிருகம் என்பது தெரிந்தால், இளவரசன் சிங்கக்குட்டியிடம் தண்டனை கொடுக்கச் சொல்லலாமே என நினைத்தது.

உண்மையில் இப்படி பெயர் வைத்தது, குறும்புக்கார முயல் என்பது எவருக்கும் தெரியாது.

சிறையில் அடைபட்டிருந்த குள்ளநரிக்கு, சைவ உணவே தினசரி ஒரு வேளை தரப்பட்டது. காட்டுக்கிழங்கையும், கனிகளையும், பார்த்தாலே குள்ளநரிக்கு குமட்டிக் கொண்டு வரும், என்ன செய்வது? வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல், வார்த்தையைக் கொட்டிவிட்டு, வாழ்க்கையைக் கெடுத்துக் கொண்டோமே, என ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தது குள்ளநரி.

வெகுநாட்களாகியும் குணமாகாமல் காலை நொண்டிக் கொண்டே ஒரு நாள் காட்டில், வெகுதூரம் வேட்டைக்கு வந்துவிட்ட சிங்கம், ஒரு இடத்தில் திறந்து வைக்கப்பட்டிருந்த ஒரு கூண்டுக்குள், ஆட்டுக்குட்டி ஒன்று இருந்ததைக் கண்டது. ஆவலுடன் ஆட்டுக்குட்டியின் மீது பாய்ந்து, கடித்துக் குதறித் தின்றது.

தின்று முடிந்து, ஏப்பம் விட்டபடி திரும்பிய சிங்கம் அந்த இரும்புக் கூண்டில் கம்பிக்கதவால் மூடப்பட்டிருந்ததைக் கண்டு, திகைத்தது. மடத்தனமாக கூண்டுக்குள் அகப்பட்டுக் கொண்டோமே என்று நினைத்து வேதனைப்பட்டது. ஆத்திரத்தில் கர்ஜனை செய்தது. அப்போது கூண்டில் அடைப்பட்ட சிங்கத்தை, தங்கள் வண்டியில் கட்டி இழுத்துச் சென்ற காவலர்கள், “நம் இளவரசர் கேட்டபடி அவர் விளையாடுவதற்கு ஒரு சிங்கம் கிடைத்துவிட்டது. இதைப் பார்த்தால் மிகவும் மகிழ்ச்சியடைவார். இளவரசரின் மகிழ்ச்சியைக் கண்டு மன்னர் நமக்குப் பரிசுகள் கொடுப்பார்”, என்றெல்லாம் பேசிக்கொண்டே அரண்மனையை அடைந்தனர்.

கூண்டிலிருந்த சிங்கத்தை இறக்கியபோதுதான் அது நொண்டி நொண்டி நடந்ததை அறிந்தனர்.

இதைக்கண்டு வருந்திய அவர்கள், “இது ஊனமுற்ற சிங்கம். இதை நம் இளவரசர் விளையாடப் பழக்கப்படுத்த முடியாது. “எனவே, இதைக் காட்டில் கொண்டு போய் விட்டுவிடுவதே நல்லது” என்று கூறியபடி சிங்கத்தை மீண்டும் காட்டுக்குள் கொண்டு சென்று விட்டுவிட்டுத் திரும்பினர் காவலர்கள். சிங்கத்திற்கு மகிழ்ச்சி பொங்கியது.

“நமது கால் விரல், இல்லாததால்தான் நம்மை விட்டு விட்டார்கள். “நடப்பது எல்லாம் நன்மைக்கே” என்று அன்றைக்கு நரி சொன்னபோது, ஆத்திரப்பட்டு அதைக் கூண்டில் அடைத்தோம். ஆனால் அது சொன்னது சரியென்று இப்போதுதான் உணர முடிகிறது” என்றெல்லாம் நினைத்தபடி தனது குகைக்குச் சென்ற சிங்கம், தனது மனைவியிடமும் குட்டிகளிடமும் நடந்ததைச் சொன்னது.

உடனடியாக, சிப்பாய்க் குரங்குகளை அழைத்து, “சிறையைத் திறந்து குள்ளநரியை வெளியில் அனுப்புங்கள்” என்று உத்தரவிட்டது. அதன்படி சிறையை விட்டு, வெளிவந்த குள்ளநரியை வரவேற்ற சிங்கராஜா, “அறிவுக் கடலே, இன்று முதல் நீங்கள்தான் எனது மந்திரி, நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று அன்று நீங்கள் சொன்னது உண்மையாகி விட்டது. யார் எதைச் சொன்னாலும் அவசரப்படாமல் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டேன் என்று மகிழ்ந்தது.

நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று நினைத்தால் துன்பம் தரக்கூடிய செயல் எதுவும் இல்லை

தமிழகத்தில் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: எங்கெங்கு கன மழை பெய்யும்?- வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தகவல்!!!

நவம்பர் 29-ம் தேதி தொடங்கி 3 நாட்களுக்கு
தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்

நவம்பர் 29-ம் தேதி தொடங்கி 3 நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது


தமிழகத்தில் நவம்பர் 28-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும். இந்த நாட்களில் இரவு மற்றும் அதிகாலை நரங்களில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். இதனால் மழைக்கு வாய்ப்பில்லையோ என கவலை வேண்டாம்.

சுமத்ரா தீவில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை நவம்பர் 29-ம் தேதி மாலத்தீவு நோக்கி நகரும். இதனால் வடகிழக்கு காற்று தமிழக கடலோர மாவட்டங்களுக்குள் நுழையும் சாதக சூழல் உள்ளது. இதன் காரணமாக நவம்பர் 29-ம் தேதி முதல் டிசம்பர் 1-ம் தேதி வரை தமிழகத்துக்கு மழை வாய்ப்புள்ளது.

எனினும் காற்று வலிமையாக இல்லாததால் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், உள்ளிட்ட மேற்குபகுதி மற்றும் உள் மாவட்டங்களுக்கு மழை குறைவாக இருக்கும். சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களிலும் ஒரளவே மழையை எதிர்பார்க்கலாம்.



அதேசமயம் கடலோரா மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் கனமழையை எதிர்பார்க்கலாம். நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை போன்ற தென் மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யும் வாய்ப்புள்ளது. எனினும் இது பாதிப்புகளை ஏற்படுத்தும் அளவுக்கு மிக மிக கடுமையான மழையாகவோ இருக்க வாய்ப்பில்லை. டிசம்பர் -5ம் தேதிக்கு பிறகே வலிமையான காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்

பள்ளிகள் சேதம்ரூ.35 கோடி தேவை :

புயலால் சேதம் அடைந்த, பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட, அரசு கட்டடங்கள் புனரமைப்பு பணிக்கு, அரசிடம், 35 கோடி ரூபாயை, பொதுப்பணித் துறை கேட்டுள்ளது.
சமீபத்தில் வீசிய, 'கஜா' புயலால், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில், 865 அரசு பள்ளி கட்டடங்கள் சேதம் அடைந்துள்ளன.அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களும் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. அரசு அலுவலக கட்டடங்கள், ஆய்வு மாளிகை போன்றவற்றுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.இவற்றை புனரமைக்க, 35 கோடி ரூபாய் செலவாகும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. அந்த நிதியை, அரசிடம் பொதுப்பணித் துறை கேட்டுள்ளது. நிதி கிடைப்பது தாமதமாகி வருவதால், பள்ளிகள், மருத்துவமனைகளை சீரமைப்பதில், காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.

வருகிறது புதிய வருமான வரி சட்டம் : அடுத்த அதிரடிக்கு தயாராகிறார் மோடி :

புதுடில்லி:பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி., அறிமுகத்தை தொடர்ந்து, அடுத்த அதிரடியாக, வருமான வரி சட்டத்தில், சீர்திருத்தம் செய்ய தயாராகி வருகிறது.

வருகிறது, புதிய, வருமான வரி, சட்டம்,அடுத்த, அதிரடிக்கு, தயாராகிறார், மோடி,
அதன்படி, 1961ம் ஆண்டு, வருமான வரிச் சட்டத்திற்கு பதிலாக, தற்போதைய பொருளாதார சூழலுக்கும், தேவைக்கும் ஏற்ப, புதிய வருமான வரிச் சட்டம் அறிமுகமாக உள்ளது.இதற்காக, ஏற்கனவே, அரவிந்த் மோடி தலைமையில், செயல் திட்டக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழு, புதிய வருமான வரி சட்ட வரைவறிக்கையை தயாரிக்கும் பணியை மேற்கொண்டு வந்தது.
இப்பணி முடிவடையாத நிலையில், கடந்த செப்டம்பரில், அரவிந்த் மோடி ஓய்வு பெற்றார்.

புதிய தலைவர்
இதையடுத்து, மத்திய அரசு, புதிய வருமான வரி சட்ட வரைவறிக்கை தயாரிக்கும் குழு தொடர்பாக, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில் மாற்றம் செய்துள்ளது.இது குறித்து, மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
மத்திய நேரடி வரிகள் வாரிய உறுப்பினர், அகிலேஷ் ரஞ்சன், புதிய வருமான வரி சட்ட வரைவறிக்கை தயாரிப்பதற்காக அமைக்கப் பட்டு உள்ள செயல் திட்டக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார். மற்றபடி, குழு உறுப் பினர்களில் எந்த மாற்றமும்செய்யப்படவில்லை.
செயல் திட்டக் குழு, 57 ஆண்டுகள் பழமையான வருமான வரிச் சட்டத்திற்கு மாற்றாக, புதிய வருமான வரிச் சட்ட வரைவறிக்கை தயாரித்து, 2019, பிப்., 28க்குள், அமைச்சகத்திற்கு வழங்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.வரி செலுத்து வோருக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் பயனளிக்கும் வகையில், புதிய வருமான வரி சட்ட வரைவறிக்கை இருக்கும் என, எதிர்பார்க்கப் படுகிறது.
பயன்கள்
இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:பல நாடுகளில், வருமான வரி விகிதம் குறைவாக உள்ளது. வரி விலக்கு சலுகைகள் எதுவும் வழங்கப்படுவதில்லை.இதே கொள்கையை மத்திய அரசு பின்பற்றும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வருமான வரிசெலுத்தும் ஏராளமானோர் பயன் பெறுவர். தாமாக முன்வந்து வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்கும்.
தற்போது, தனிநபருக்கான, வருமான வரி விலக்கு வரம்பு, 2.50 லட்சம் ரூபாயாக உள்ளது. இதை, 5 லட்சம் ரூபாயாக உயர்த்துவது குறித்து, செயல் திட்டக் குழு பரிசீலிக்கும்.வருமான வரி விகிதம்
, 10 - -30 சதவீதத்தில் இருந்து, 5 - - 20 சதவீத மாக குறைக்கப்படும் என, தெரிகிறது.வெளி நாடுகளை பின்பற்றி, நாட்டின் பொருளாதார தேவையை கருத்தில் கொண்டு, சிறந்த வரி நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்படும்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், முதலீடு களை ஈர்க்கவும், வேலைவாய்ப்பு களை அதிகரிக்கவும், 'கார்ப்பரேட்' நிறுவனங்க ளுக்கான வரியை குறைத்து, வெற்றி கண்டு உள்ளார். இதே பாணியை, மத்திய அரசு பின் பற்றும் என, எதிர்பார்க்கப்படுகிறது இவ்வாறு அவர் கூறினார்.
வரி குறையும்
கார்ப்பரேட் நிறுவனங்கள் வரியை, 30 சதவீதத்தில் இருந்து, 25 சதவீதமாக குறைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.ஏற்கனவே, ஆண்டுக்கு, 250 கோடி ரூபாய் விற்றுமுதல் உள்ள நிறுவனங்களுக்கான வரி, 25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது

TET - ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான 5 கேள்விகளுக்கு TRB வழங்கியுள்ள RTI பதில்.



Labels: Morning Prayer Activities 15 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளுக்கு பள்ளி மானியம் விடுவித்து மாநில திட்ட இயக்குநர் உத்தரவு - செயல்முறைகள்!

TNPSC - டிச. 3ல் குரூப் - 4 தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு

குரூப் - 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, டிச., 3 முதல், சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங் நடக்க உள்ளதாக, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர் நந்தகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அரசு துறையில், குரூப் - 4 பதவியில் அடங்கிய காலியிடங்களை நிரப்ப, இந்த ஆண்டு, பிப்., 11ல், எழுத்து தேர்வு நடந்தது. அதன் மதிப்பெண் விபரங்கள், ஜூலை, 30ல் வெளியாகின. இதுதொடர்பாக, மூல சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங், வரும், 3ம் தேதி முதல் நடக்க உள்ளது.இதற்கு தகுதியுள்ளவர்களின் பட்டியல், தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அழைப்பு கடிதத்தை, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

 தபாலில் தனியே அனுப்பப்பட மாட்டாது.எழுத்து தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், தரவரிசை, இட ஒதுக்கீட்டு விதி மற்றும் விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள் மற்றும் காலியிடங்களுக்கு ஏற்ப, கவுன்சிலிங்கில் அனுமதிக்கப்படுவர். அழைக்கப்படும் அனைவருக்கும், பணி நியமனம் உத்தரவாதம் அல்ல. சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங்குக்கு வர தவறினால், மறுவாய்ப்பு அளிக்கப்படாது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல, 'கிடுக்கிப்பிடி' :

ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல, தடையின்மை சான்றுக்கான விண்ணப்பங்கள், போதிய கால அவகாசமின்றி அனுப்பினால், ஏற்கப்படமாட்டாது' என, பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல, பாஸ்போர்ட் புதுப்பித்தல் நடைமுறைகளுக்கு, கல்வித்துறையிடம் இருந்து தடையின்மை சான்று பெற்று, சமர்ப்பிக்க வேண்டும். முன் அனுமதி கோரும் விண்ணப்பங்கள், இறுதி நேரத்தில் அனுப்பப்படுவதால், அதிக பணிப்பளு உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இதையடுத்து, பள்ளிக்கல்வித் துறை இயக்குனர், ராமேஸ்வரமுருகன் வெளியிட்ட அறிக்கையில், கூறியிருப்பதாவது:

வெளிநாடு செல்லும் ஆசிரியர்கள், கல்வித்துறையிடம் முன் அனுமதி பெற விண்ணப்பிக்கும் முன், 10 வகையான ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும். குறைந்தபட்சம், ஏழு வேலைநாட்களுக்கு முன், அனுப்பினால் மட்டுமே, விண்ணப்பம் ஏற்கப்படும்.மாவட்ட கல்வி அலுவலர் ஒப்புதல் இல்லாதவை மற்றும் முழு தகவல் இல்லாத விண்ணப்பங்களுக்கு, தடையின்மை சான்று வழங்கப்படமாட்டாது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

28/11/18

ஆசிரியர் தகுதி தேர்வில் முறைகேடு நடந்துள்ளது குறித்து விசாரணை நடத்தப்பட்டது -அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

அடுத்த 3 மாதங்களில் 500 பள்ளிகளில் ‘அட்டல் டிங்கர் லேப்’ எனப்படும் நவீன ஆய்வுக்கூடம் அமைக்கப்படும் என்று செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் கோபியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

ஆசிரியர் தகுதி தேர்வில் முறைகேடு நடந்துள்ளது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. ஒரு லட்சத்து 3 ஆயிரம் பேர் தேர்வு எழுதிய நிலையில் புகார் குறித்து விசாரணை செய்து 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்வு எழுதியவர்களின் ஓ.எம்.ஆர். தாளை இதுவரை டெல்லியில் உள்ள நிறுவனம் ஸ்கேன் செய்து வழங்கி வந்தது.

தற்போது, அதை பள்ளி கல்வித்துறையே செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்காக தனியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. 1ம் வகுப்பு, 6ம் வகுப்பு, 9ம் வகுப்பு, 11ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றப்பட்டு உள்ளது. அதேபோல், 2, 3, 4, 5, 7, 8, 10, 12 ஆகிய வகுப்புகளுக்கும் பாடத்திட்டங்கள் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அடுத்தவாரம் இதற்கான குழு கூட உள்ளது. அதேபோல், இந்த பாடத்திட்டத்துடன் 2 திறன் வளர்ப்பு பாடங்கள் இணைக்கப்பட உள்ளது. இந்த பாடங்கள் மூலம் பிளஸ் 2 முடித்தவுடன் எளிதாக வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், மத்திய மற்றும் மாநில அரசுகளின் உதவியுடன் அடுத்த மூன்று மாதங்களில் தமிழகத்தில் 500 பள்ளிகளில் ‘அட்டல் டிங்கர் லேப்’ எனப்படும் நவீன ஆய்வுக்கூடம் அமைக்கப்படும்.

FLASH NEWS-அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவது தொடர்பான சாத்தியக்கூறுகள் அடங்கிய அறிக்கை தாக்கல்


நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும்.. மதுரை ஹைகோர்ட் அதிரடி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க தேசிய தேர்வு முகமை கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.


கஜா புயலால் தமிழகம் பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது. தஞ்சாவூர், நாகை, திருவாரூர் உள்ளிட்ட 7 மாவட்டங்கள் பெரிய இழப்பை சந்தித்துள்ளது. முக்கியமாக மாணவர்கள் தங்கள் புத்தகங்கள், ஆவணங்களை இழந்து உள்ளனர்.

இந்த புயலில் பல மாணவர்கள் தங்கள் உடைமைகளை இழந்துள்ளனர். இந்த நிலையில் மருத்துவம் படிக்கும் எண்ணத்தில் இருக்கும் மாணவர்களுக்கு கஜா புயல் பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வு 2019 மே 5ம் தேதி நடக்க இருக்கிறது.
இந்த தேர்விற்கு இப்போதே விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். வரும் நவம்பர் 30ம் தேதியுடன் இதற்கான கால அவகாசம் முடிகிறது. இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் கஜா புயலால் டெல்டா பகுதி மாணவர்கள் நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க தேசிய தேர்வு முகமை கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று மதுரைமேலூரை சேர்ந்த ஸ்டாலின் என்பவர் மதுரை ஹைகோர்ட் கிளையில் மனுதாக்கல் செய்து இருந்தார்.
அந்த மனு மீதான விசாரணையில் இன்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு தீர்ப்பு வழங்கியுள்ளனர். அதன்படி, கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க தேசிய தேர்வு முகமை கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும். மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டு புதிய இறுதி தேதியை அறிவிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

பள்ளிகளில் முழுமையாக அமல்படுத்தாத நீதிபோதனை வகுப்புகள்: கல்வித் துறை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு :

பெரும்பாலான பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகள் நடத்தப்படுவதில்லை என்ற குறைபாடு அதிகரித்து வரும் நிலையில், இந்த வகுப்புகள் நடத்துவதை உறுதி செய்வதில் கல்வித் துறை அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2012-ஆம் ஆண்டு தமிழக கல்வித் துறைக்கு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் நீதிபோதனை வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. வாரம் ஒரு வகுப்பு நீதிபோதனைக்கு என ஒதுக்கப்பட்டு அதன்மூலம் நீதிபோதனை கதைகள், ஒழுக்கத்துக்கான செயல்பாடுகள், நீதி, நேர்மையை கடைப்பிடித்து வாழ்ந்த மகான்களின் செயல்பாடுகள் குறித்து ஆசிரியர்களால் போதிக்கப்பட்டன. இதனால் தவறு செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது.
காலப்போக்கில் இந்த வகுப்புகள் ப
டிப்படியாக நிறுத்தப்பட்டன. இந்த வகுப்புகளுக்காக செலவிடப்பட்ட நேரத்தை பெரும்பாலான பள்ளிகளில் பாட வேளையாகப் பயன்படுத்தி வருவதாகவும், இதன் காரணமாக, மாணவர்களிடையே மீண்டும் ஒழுங்கீன செயல்பாடுகள் அதிகரித்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதுகுறித்து பெற்றோர் தரப்பில் கூறியதாவது:
செல்லிடப்பேசி, இணையதளம் உள்ளிட்ட தொழில்நுட்ப தாக்குதல் அதிகரித்து வரும் தற்போதைய சூழலில் அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த பக்குவம் மாணவர்களிடம் இருப்பதில்லை. கல்வியறிவற்ற பெற்றோர் சிலரால் இதுதொடர்பாக கேள்வி எழுப்பவும் இயலுவதில்லை. இதனால், இளம் வயதிலேயே மாணவர்களின் மனநிலை சீர்கெட்டு வருகிறது. இதையடுத்து பள்ளி மாணவர்களிடையே மதுஅருந்துதல், காதல் வயப்படுவது, ஜாதி மோதல்களில் ஈடுபடுவது உள்ளிட்ட ஒழுங்கீன செயல்பாடுகள் அதிகரித்து வருகின்றன.
இதுதொடர்பாக ஆசிரியர்களிடம் கேள்வி எழுப்பினால் மாணவர்களின் ஒழுங்கீன செயல்பாடுகளை பெற்றோர்தான் கவனிக்க வேண்டும் எனக் கூறுகின்றனர். ஆனால், அரசு உத்தரவுப்படி நீதிபோதனை, யோகா போன்ற வகுப்புகள் பெரும்பாலான பள்ளிகளில் நடத்துவதில்லை. இதை கல்வித் துறை அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. தற்போதுள்ள நிலையில் மாணவர்களுக்கு  கல்வியைவிட ஒழுக்கம்தான் அதிக அளவில் தேவை. எனவே, பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகளை முறைப்படி நடத்த கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து வேலூர் மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் கூறியது:
அனைத்துப் பள்ளிகளிலும் நீதிபோதனைக்கு வகுப்புக்கு என தனியாக ஆசிரியர் நியமித்து வாரம் ஒரு வகுப்பு நடத்த கல்வியாண்டு தொடங்கத்திலேயே உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளிகளில் நீதிபோதனை, விளையாட்டு, இதர திறன் வளர்ப்புக்கு பயிற்சிகள் முறைப்படி நடத்தப்படுவதை அந்தந்த கல்வி மாவட்ட அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து அறிவுறுத்தி வருகின்றனர். எனினும், நீதிபோதனைக்கு என தனியாக மதிப்பெண்கள் கிடையாது என்பதால் இந்த வகுப்புகள் முறைப்படி நடத்தப்படுவதை அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களால்தான் உறுதிசெய்ய முடியும் என்றனர்.
இதுகுறித்து, ஜக்டோ ஜியோ மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் செ.நா.ஜனார்த்தனன் கூறியது:
மாணவர்களை கண்டிக்கும், தண்டிக்கும் உரிமை ஆசிரியர்களுக்கு இருந்தவரை அவர்களது ஒழுக்கமும் கட்டுக்குள் இருந்தது. தற்போது அந்த உரிமை ஆசிரியர்களுக்கு இல்லாததால் மாணவர்களை கண்காணிப்பது  சவாலாக மாறிவிட்டது. மேலும், தேர்வு முடிவுகளை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு பாடத் திட்டங்கள் வடிவமைக்கப்படுவதால் இத்தகைய நீதிபோதனை வகுப்புகள் நடத்த வேண்டும் என்ற உத்தரவுகள் செயல் வடிவம் பெறுவதும் கேள்விக்குறியாகும்.
தவிர, இந்த நீதிபோதனை வகுப்புகளுக்கு என தனியாக ஆசிரியர்கள் நியமிக்கப்படாமல், இருக்கும் ஆசிரியர்களைக் கொண்டே நடத்தப்படுகிறது. அவர்கள் வாரந்தோறும் நீதிபோதனை நடத்தலாம் அல்லது நடத்தாமலும் போகலாம். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த வகுப்புகள் நடத்தப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்றால் மாதந்தோறும் எத்தனை நீதிபோதனை வகுப்புகள் நடத்தப்பட்டன என்பது குறித்து அறிக்கைகள் பெறப்பட வேண்டும். அவ்வாறு பெற்றாலே குறைந்தபட்சம் 60 முதல் 70 சதவீதமாவது நீதிபோதனை வகுப்புகள் நடத்தப்பட வாய்ப்புள்ளது என்றார் அவர்

கணினி தமிழ் விருது விண்ணப்பங்கள் வரவேற்பு :

முதல்வர் கணினி தமிழ் விருதுக்கான விண்ணப்பங்கள், டிச., 31க்குள் வந்தடைய வேண்டும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழ் வளர்ச்சி கருதி, தமிழ் மொழியை கம்ப்யூட்டரில், அனைத்து நிலைகளிலும் பயன்படுத்தும் வகையில், சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்குவோருக்கு, 2013 முதல், 'முதல்வர் கணினி தமிழ் விருது' வழங்கப்படுகிறது. விருது பெறுவோருக்கு, 1 லட்சம் ரூபாய், 1 சவரன் தங்கப்பதக்கம் மற் றும் தகுதியுரை வழங்கப்படுகிறது. இந்தாண்டுக்கான விருதுக்கு, தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து, தமிழ் மென்பொருள்கள் வரவேற்கப்படுகின்றன. போட்டிக்கு அனுப்பப்பட உள்ள மென்பொருள்கள், 2015, 2016, 2017ல் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். இதற்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளை, www.tamilvalarchithurai.com என்ற இணையதளத்தில், இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.விருதுக்கான விண்ணப்பம், தமிழ் வளர்ச்சி இயக்ககத்திற்கு, டிச., 31க்குள் வந்தடைய வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 044 - 2819 0412, 2819 0413 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

பகுதி நேர தொழிற் ஆசிரியர்களின் கல்விச்சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா தொடங்கி வைத்தார் :

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2011-2012ஆம் கல்வியாண்டில் நியமனம் செய்யப்பட்ட பகுதி நேர தொழிற் ஆசிரியர்களின் கல்விச்சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா தொடங்கி வைத்தார்.
 புதுக்கோட்டை,நவ,26-          அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலமாக 2011-2012ஆம் கல்வியாண்டில் அரசாணை 177ன்படி    தமிழகம் முழுவதும் 16549 தையல்,இசை,கணினி,உடற்கல்வி உள்ளிட்ட பகுதிநேர தொழிற்ஆசிரியர்கள் அரசு நடுநிலை,உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டனர். அந்த ஆசிரியர்களின் கல்விச்சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி இன்று 26ந்தேதி(திங்கட்கிழமை)மற்றும் நாளை27ந்தேதி (செவ்வாய்கிழமை)ஆகிய இரண்டு நாட்கள் தமிழகம் முழுவதும் நடைபெறும் என்று அரசால்  அறிவிக்கப்பட்டு  அதன்படி தொடங்கியது. அந்த முறையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை அருள்மிகு பிரகதம்பாள் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள   தேர்வுக்கூட அரங்கிலும்,புதுக்கோட்டை அருள்மிகு பிரகதம்பாள் அரசினர் மேல்நிலைப்பள்ளியிலும் இன்று 26ந்தேதி (திங்கட்கிழமை) பகுதிநேர தொழிற் ஆசிரியர்களின் சான்றிதழ்களின் சரிபார்ப்பு பணியினை புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா தலைமை தாங்கி தொடங்கி வைத்து பகுதி நேர தொழிற் ஆசிரியர்களின் கல்விச்சான்றிதழ்களை சரிபார்க்கும் முறைக்குறித்து சான்றிதழ்கள் சரிபார்க்கும் குழு உறுப்பினர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

இன்று 26-ந்தேதியும்(திங்கட்கிழமை) நாளை27-ந்தேதியும் (செவ்வாய்கிழமை)ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பணி புரியும் 451 பகுதிநேர தொழிற் ஆசிரியர்களின் கல்விச்சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது. இப்பணியில்  பாடவாரியாக உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் பலரை  உள்ளடிக்கிய 9குழுக்கள் அமைக்கப்பட்டு கல்விச்சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது. இப்பணி நடைபெறுவதை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா உத்தரவின்பேரில் மாவட்டக்கல்வி அலுவலர்கள் புதுக்கோட்டை கே.அண்ணாமலைரஞ்சன்,இலுப்பூர் க.குணசேகரன்,அறந்தாங்கி(பொ)கு.திராவிடச்செல்வம் ஆகியோர் மேற்பார்வை செய்துவருகிறார்கள்.

1 - 2 வகுப்பு மாணவர்களுக்கு வீட்டு பாடம் கிடையாது :

'பள்ளிகளில், 1 மற்றும் 2ம் வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு, வீட்டு பாடங்கள் தரக்கூடாது' என, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, மத்திய அரசு அனுப்பியுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ் உள்ள, பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவு துறை, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு அனுப்பியுள்ள உத்தரவு விவரம்:பள்ளி மாணவர்கள் எடுத்து வரும், நோட்டு, புத்தகங்கள் உட்பட, 'பேக்'குகளின் எடை விஷயத்தில், அரசின் விதிகள் பின்பற்றப்பட வேண்டும். கூடுதல் புத்தகங்கள், பொருட்களை எடுத்து வரும்படி, மாணவர்களை நிர்ப்பந்திக்கக் கூடாது. 1 - 2 ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டு பாடங்கள் அளிக்க கூடாது.பள்ளிகளில், 1 - 2ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் எடுத்து வரும், பாட புத்தகங்கள் அடங்கிய, 'பேக்'கின் எடை, 1.5 கிலோவுக்கு மேல் இருக்கக் கூடாது;
3 - 5ம் வகுப்பு மாணவர்களின், பேக் எடை, 2 அல்லது 3 கிலோ இருக்கலாம்;மேலும், 6 - 7ம் வகுப்பு மாணவர்களின், பேக் எடை, 4 கிலோவுக்கு மேல் இருக்கக் கூடாது. 8 - 9ம் வகுப்பு மாணவர்களின் பேக் எடை, 4.5 கிலோவுக்கு மிகாமலும், 10ம் வகுப்பு மாணவர்களின் பேக் எடை, 5 கிலோவுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.பள்ளிகளில், 1 - 2ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, மொழி, கணிதம் தவிர வேறு பாடங்களை பரிந்துரைக்கக் கூடாது. மேலும், 3 - 4ம் வகுப்பு மாணவர்களுக்கு, என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பரிந்துரைக்கும், மொழிப்பாடம், கணிதம், சுற்றுச்சூழலியல் பாடம் சொல்லி தரப்பட வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு சாதகமான சட்டப்பிரிவை எதிர்த்து மனு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் :

பொதுநல வழக்குகளுக்கான மையம்’ என்ற
தொண்டு நிறுவனம் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில், கூறப்பட்டு இருப்பதாவது:-

ஊழல் தடுப்பு சட்டத்தின், திருத்தப்பட்ட 17ஏ (1) பிரிவின்படி, ஊழல் புகாரில் சிக்கிய அரசு ஊழியர்கள் மீது விசாரணையை தொடங்குவதற்கு முன்அனுமதி பெறுவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இது, அரசு ஊழியர்கள் மீதான விசாரணையை முற்றிலும் தடுக்கும் வகையில் உள்ளது.


ஏற்கனவே இதுபோன்ற சட்டப்பிரிவை செல்லாது என்று சுப்ரீம் கோர்ட்டு 2 தடவை அறிவித்த பிறகும், 3-வது முறையாக மத்திய அரசு திணித்துள்ளது.

தனது அரசுப்பணியை செய்யும்போது, அரசு ஊழியர் எடுக்கும் முடிவு அல்லது சிபாரிசு தொடர்பான குற்றங்களை பற்றிய புகார்களுக்கு இது பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. பணி தொடர்பான குற்றமா என்று தீர்மானிப்பது போலீசாருக்கு கடினமாக இருக்கும். அப்படி தீர்மானித்தாலும், அது வழக்குக்கு வழிவகுத்து விடும். அதனால், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்க முடியாமல் போய்விடும்.

மேலும், முன்அனுமதி பெறுவதற்குள், அரசு ஊழியர்கள் ஆதாரங்களை அழிப்பதற்கும், அனுமதி கொடுப்பதை தடுப்பதற்கு வேலை செய்வதற்கும் வாய்ப்பு உள்ளது. அனுமதி கொடுக்கும் பொறுப்பு, ஊழியர் பணியாற்றும் துறைக்கே இருப்பதால், மேலிடம் அவருக்கு சாதகமாக செயல்படும் நிலை உள்ளது. அத்துடன், அனுமதி பெறுதல் என்பதே இன்னொரு ஊழலுக்கு காரணமாகி விடும்.

அனுமதி பெற்று விசாரணையை தொடங்குவதற்குள் ஊழல் பணத்தை சொத்துகளாக மாற்றுவதற்கும், வெளிநாடுகளில் பதுக்குவதற்கும் வாய்ப்பு உள்ளது.

எனவே, இந்த சட்டப்பிரிவு, ஊழல் ஊழியர்களுக்கு பாதுகாப்பானதாக அமைவதுடன், ஊழலின் அளவை அதிகரித்து விடும். ஊழல் தடுப்பு சட்டப்பிரிவுகளை நீர்த்து போகச் செய்து விடும். ஆகவே, அந்த சட்டப்பிரிவை செல்லாது என்று அறிவிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆஜராகி வாதிட்டார்.

பின்னர், இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்

வரும் 29ம் தேதி புதிய காற்றழுத்தம் வானிலை ஆய்வாளர்கள் தகவல்

வரும் 29ம் தேதி புதிய காற்றழுத்தம் உருவாக வாய்ப்புள்ளதாக
வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகவும் தாமதமாக கடந்த நவம்பர் 1ம் தேதி தொடங்கியது. பருவமழை தாமதமாக தொடங்கினாலும் தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக, அணைகள், ஏரிகளின் நீர் மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், பொங்கல் பண்டிகை வரை 7 புதிய காற்றழுத்தம் உருவாக வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர். இதனால், தமிழகத்திற்கு டிசம்பர் 31ம் தேதிக்கு பிறகும் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஓட்டியுள்ள லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழறசி நிலவுவதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன்படி தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி மற்ற பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

அதிராமபட்டினத்தில் 41.4 மி.மீ, காரைக்கால் 111 மி.மீ, நாகையில் 166 மி.மீ, பாம்பனில் 154 மி.மீ, பரங்கிப்பேட்டையில் 53 மி.மீ, தஞ்சாவூரில் 70 மி.மீ, திருச்சியில் 27 மி.மீ, வால்பாறையில் 26 மி.மீ, வேலூரில் 16 மி.மீ, நாமக்கல்லில் 16 மி.மீ, குன்னூரில் 20 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இந்தநிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலை காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 29ம் ேததி மற்றும் டிசம்பர் 5ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் சூழல் உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக 29ம் தேதிக்கு பிறகு மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்

TET, TRB முறைகேட்டை தடுக்க ஆசிரியர் தேர்வு விடைத்தாள்களை ஸ்கேன் செய்ய புதிய முறை - அமைச்சர் செங்கோட்டையன் தகவல் :

அடுத்த 3 மாதங்களில் 500 பள்ளிகளில்
‘அட்டல் டிங்கர் லேப்’ எனப்படும் நவீன ஆய்வுக்கூடம் அமைக்கப்படும் என்று செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் கோபியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
ஆசிரியர் தகுதி தேர்வில் முறைகேடு நடந்துள்ளது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. ஒரு லட்சத்து 3 ஆயிரம் பேர் தேர்வு எழுதிய நிலையில் புகார் குறித்து விசாரணை செய்து 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்வு எழுதியவர்களின் ஓ.எம்.ஆர். தாளை இதுவரை டெல்லியில் உள்ள நிறுவனம் ஸ்கேன் செய்து வழங்கி வந்தது.

தற்போது, அதை பள்ளி கல்வித்துறையே செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்காக தனியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. 1ம் வகுப்பு, 6ம் வகுப்பு, 9ம் வகுப்பு, 11ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றப்பட்டு உள்ளது. அதேபோல், 2, 3, 4, 5, 7, 8, 10, 12 ஆகிய வகுப்புகளுக்கும் பாடத்திட்டங்கள் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அடுத்தவாரம் இதற்கான குழு கூட உள்ளது. அதேபோல், இந்த பாடத்திட்டத்துடன் 2 திறன் வளர்ப்பு பாடங்கள் இணைக்கப்பட உள்ளது. இந்த பாடங்கள் மூலம் பிளஸ் 2 முடித்தவுடன் எளிதாக வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், மத்திய மற்றும் மாநில அரசுகளின் உதவியுடன் அடுத்த மூன்று மாதங்களில் தமிழகத்தில் 500 பள்ளிகளில் ‘அட்டல் டிங்கர் லேப்’ எனப்படும் நவீன ஆய்வுக்கூடம் அமைக்கப்படும்.
இதற்கான நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவர்களின் அறிவியல் மீதான ஆர்வம், ஆராய்ச்சி திறனை மேம்படுத்துவதற்கு இந்த ஆய்வுக்கூடங்கள் உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்