குரூப் - 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, டிச., 3 முதல், சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங் நடக்க உள்ளதாக, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர் நந்தகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அரசு துறையில், குரூப் - 4 பதவியில் அடங்கிய காலியிடங்களை நிரப்ப, இந்த ஆண்டு, பிப்., 11ல், எழுத்து தேர்வு நடந்தது. அதன் மதிப்பெண் விபரங்கள், ஜூலை, 30ல் வெளியாகின. இதுதொடர்பாக, மூல சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங், வரும், 3ம் தேதி முதல் நடக்க உள்ளது.இதற்கு தகுதியுள்ளவர்களின் பட்டியல், தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அழைப்பு கடிதத்தை, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
தபாலில் தனியே அனுப்பப்பட மாட்டாது.எழுத்து தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், தரவரிசை, இட ஒதுக்கீட்டு விதி மற்றும் விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள் மற்றும் காலியிடங்களுக்கு ஏற்ப, கவுன்சிலிங்கில் அனுமதிக்கப்படுவர். அழைக்கப்படும் அனைவருக்கும், பணி நியமனம் உத்தரவாதம் அல்ல. சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங்குக்கு வர தவறினால், மறுவாய்ப்பு அளிக்கப்படாது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக