யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

29/11/18

கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ரத்தாக வாய்ப்பு இல்லை : அமைச்சர் செங்கோட்டையன்

2018-19-ம் கல்வியாண்டுக்கான 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு அரையாண்டு


பொதுத்தேர்வுகள், வரும் டிசம்பர் 10-ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் 22 வரை நடைபெறும் என பள்ளிக்கல்வி இயக்குனர் கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அப்போது வெளியிட்ட செய்தியில், இந்த ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு வரும் டிசம்பர் மாதம் தொடங்குகிறது.


அதாவது வரும் டிசம்பர் 10-ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் 22 வரை தேர்வு நடக்கும்.


இந்த தேர்வுகள் அனைத்தும் குறிப்பிட்டுள்ள தேதியில் காலை 10 மணிக்கு தொடங்கும். 10 மணியில் இருந்து 10.10 மணி வரை வினாத்தாளை படிப்பதற்கும், 10.10 மணி முதல் 10.15 மணி வரை விடைத்தாளின் முதல் பக்கத்தை நிரப்புவதற்கும், 10.15 மணி முதல் 12.45 மணி வரை தேர்வு எழுதுவதற்கும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இதில் எந்தவித மாற்றம் இன்றி தேர்வுகள் நடத்தப்படும் என அவர் தெரிவித்து இருந்தார்.

இதனிடையே, கஜா புயலால் கடந்த இரண்டு வாரத்துக்கு மேலாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மட்டுமே அரையாண்டு தேர்வுகளை ஒத்தி வைக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக, தமிழக பள்ளி கல்வித் துறை ஆலோசித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், 10 நாட்களுக்கு பிறகு, தலைமைச் செயலகத்துக்கு வந்த அமைச்சர் செங்கோட்டையன், கல்வி துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தேர்வுகளை தள்ளி வைப்பது குறித்து விவாதித்தனர். இது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ரத்தாக வாய்ப்பு இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக