குரூப் 4 பிரிவில் அடங்கியுள்ள தட்டச்சர் பணிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 16-ஆம் தேதி முதல் நடைபெறும் என்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.இதுகுறித்து தேர்வாணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
குரூப் 4 பிரிவில் அடங்கிய தட்டச்சர் பணிக்கு நேரடி நியமனம் செய்யும் வகையில், கடந்த 2014-ஆம் ஆண்டு அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதற்கான எழுத்துத் தேர்வு 2014 டிசம்பரில் நடந்தது. ஆனாலும் 314 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன.இந்தப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு-கலந்தாய்வு, சென்னையில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் வரும் 16-ஆம் தேதி முதல் 19-ஆம்தேதி வரை நடைபெறும்.சான்றிதழ் சரிபார்ப்பு-கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கு அதற்கான தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்கள் செல்லிடப்பேசி குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மூலமும், கலந்தாய்விற்கான அட்டவணை (அழைப்புக் கடிதம்) விரைவு அஞ்சல் மூலமும் தனியாக அனுப்பப்பட்டுள்ளது.சான்றிதழ் சரிபார்ப்பு-கலந்தாய்வில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள், தரவரிசை, அவர்களின் இடஒதுக்கீட்டு பிரிவு,விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள், தகுதியுடைமை-நிலவும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப அனுமதிக்கப்படுவர்.
எனவே, சான்றிதழ் சரிபார்ப்பு-கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டதாலேயே அந்தப் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டதாக உரிமை கோர இயலாது. விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு- கலந்தாய்வுக்கு குறித்த நேரத்தில் வரத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது என தேர்வாணைய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.