சிவகங்கை: சிவகங்கையில் நடந்த இடமாறுதல் கலந்தாய்வு ஆசிரியர்கள், அதிகாரிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இடைநிலை ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. துணை இயக்குனர் ராஜேந்திரன், முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல்முருகன், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் பார்த்தசாரதி பங்கேற்றனர். காளையார்கோவில் ஒன்றியம் செவல்புஞ்சை ஆசிரியர் ஜோசப், தனது மனைவி 35 கி.மீ., ல் உள்ள கீழக்கோட்டையில் பணிபுரிவதால் கவுன்சிலிங்கில் முன்னுரிமை தர வேண்டுமென, கேட்டார்.
இதற்கு ஆதாரமாக நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளரின் சான்றை சமர்ப்பித்தார். இதனை அதிகாரிகள் ஏற்று கொண்டனர்.
சான்றில் தவறான துாரத்தை குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு முன்னுரிமை அளிக்க கூடாது என கூறி ஆசிரியர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பின் அதிகாரிகள் 'கூகுள் மேப்பை' பயன்படுத்தி துாரத்தை கணக்கிட்டனர். அதில் செவல்புஞ்சை, கீழக்கோட்டை இடையே 29 கி.மீ., என, காட்டியது. இதையடுத்து ஜோசப்பிற்கு முன்னுரிமை மறுக்கப்பட்டது. இதையடுத்து ஜோசப் 'தனக்கு இடமாறுதல் வழங்க மறுப்பதற்கான காரணத்தை எழுத்து பூர்வமாக தர வேண்டும்,' என அதிகாரிகளிடம் கேட்டார். அதிகாரிகள் தர மறுத்ததால் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதன்பின் மற்றவர்களுக்கு கவுன்சிலிங் நடத்தப்பட்டது.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஒரே ஒன்றியத்திற்குள் கணவர், மனைவி 30 கி.மீ.,க்கு அப்பால் பணிபுரிந்தால் கவுன்சிலிங்கில் முன்னுரிமை தரப்படும். கூகுள் மேப்பில் 29 கி.மீ., கட்டியதால் முன்னுரிமை வழங்கவில்லை,” என்றார்.