யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

15/6/17

பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கான கல்லூரி விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்




சென்னை, ஜூன் 14 சென் னையில் உள்ள அரசினர் பிற் படுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல விடுதிகளில் சேர்க்கைக்கு ஜூலை 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தெரிவித் துள்ளார்.

இதுகுறித்து வெளியிடப் பட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட் டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் கீழ் இயங்கும் கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பாலிடெக்னிக், அய்டிஅய் படிப் புகளில் பயிலும் மாணவ, மாண வியர் சேர்க்கைக்கு விண்ணப் பிக்கலாம்.

விண்ணப்பங்களை உணவு மற்றும் இருப்பிட வசதியுடன் உள்ள விடுதிகளின் காப்பாளர் களிடமிருந்தோ, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிக பிற் படுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலுவலகத் தில் பெற்று விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் மாணவர் களின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பங்களை ஜூலை 15-ஆம் தேதிக் குள் விடுதிகளின் காப்பாளர் களிடமும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத் தப்பட்டோர், மிக பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சமர்ப் பிக்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு 044- 25241002 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

14/6/17

CRC பயிற்சி நாட்களுக்கு வழங்கப்படும் ஈடுசெய்யும் விடுப்பு 6 மாதத்திற்குள் (அதாவது 180 நாட்களுக்குள் ) எடுக்கலாம்.

CRC பயிற்சியில் கலந்து கொண்டதற்கு ஈடுசெய்யும் விடுப்பு எடுத்தல் சார்பாக வெளியிடப்பட்ட அரசாணை 62 நாள்:13.03.15 என்பது 12.02.2008 ல் CRC பயிற்சிக்கு அனுமதித்த ஈடுசெய்யும் விடுப்பு சார்பாக வெளியிடப்பட்ட
அரசாணை 29 க்கு வெளியிடப்பட்ட திருத்த அரசாணை மட்டுமே.


*எனவே ,CRC பயிற்சிக்கு வழங்கப்படும் ஈடுசெயவிடுப்பானது, 180 நாட்களுக்குள் (அதாவது 6 மாதத்திற்குள்) துய்த்து கொள்ளலாம்

*ஈடுசெய் விடுப்பு அரசாணை எண் 2218 நாள் 14/12/81
எனவே,கடந்த கல்வியாண்டு CRC ஈடுசெய் விடுப்பை தற்போது துய்க்கலாம்.

*அரசாணை எண் 62 நாள் 13/3/15- ல் விடுமுறை நாட்களில் நடைபெறும் CRC பயிற்சிக்கு ஈடுசெய் விடுப்பு வழங்க உத்தரவு போடப்பட்டுள்ளது.அரசாணை எண் 62 என்பது அரசாணை 29 நாள் :12/2/2008 உள்ள மூன்றாம் பத்தியை மாற்றீடு செய்து வெளியிடப்பட்ட அரசாணை

* 28/01/17 அன்று நடைபெற்ற CRC - க்கு ஈடுசெய் விடுப்பை 26/7/17 க்குள் துய்க்கலாம்


* அதேபோல் 04/03/17 அன்று நடைபெற்ற CRC - க்கு ஈடுசெய் விடுப்பை 01/09/17 க்குள் துய்க்கலாம்

பணி நிரந்தரம் பகுதி நேர ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

3 மாதத்தில் 300 சாதனை: பள்ளி கல்வித் துறை பட்டியல்

தமிழக சட்டசபையில், நாளை பள்ளி கல்வி துறை மானிய கோரிக்கை
விவாதத்தில், சாதனை பட்டியல் வாசிக்கப்பட உள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறையில், அ.தி.மு.க., ஆட்சியில், ஏழு அமைச்சர்கள் மாறினர். இரண்டு முறை செயலர்களும், இயக்குனர்களும் மாற்றப்பட்டனர்.

இதில், அமைச்சராக செங்கோட்டையன், செயலராக உதயசந்திரன் மற்றும் இயக்குனராக இளங்கோவன் ஆகியோர் பதவியேற்ற பின், பல அதிரடி அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், சட்டசபையில், நாளை பள்ளி கல்வி மானிய கோரிக்கை மீது, விவாதம் நடக்க உள்ளது. இதில், மேலும் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை, அமைச்சர் வெளியிட உள்ளார்.

மூன்று மாதங்களில், முந்நுாறு சாதனைகள் என்ற அளவுக்கு, சாதனை பட்டியலை, பள்ளி கல்வித்துறை தயார் செய்துள்ளது.

சத்துணவு சாப்பிடுபவர் எண்ணிக்கை குறுஞ்செய்தி அனுப்ப உத்தரவு

சத்துணவு சாப்பிடும் மாணவர் எண்ணிக்கை குறித்து தினமும் குறுஞ்செய்தி அனுப்ப அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் 42,970 மையங்களில்
மாணவர்கள் சத்துணவு சாப்பிடுகின்றனர். சத்துணவு வழங்குவதில் முறைகேடு நடப்பதாக வந்த புகார்களை அடுத்து, ஒவ்வொரு பள்ளிகளிலும் தினசரி சத்துணவு சாப்பிடும் மாணவர்கள் எண்ணிக்கையை குறுஞ்செய்தி அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.


இதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள பிரத்யேக இணையதளத்தில் இந்த விபரங்களை மாநில அளவில் சேகரித்து கண்காணிக்கப்படுகிறது. ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியரும் 155 250 என்ற இலவச அழைப்பு எண்ணிற்கு சத்துணவு சாப்பிடும் மாணவர் எண்ணிக்கையை குறுஞ்செய்தியாக அனுப்ப வேண்டும்.தமிழகம் முழுவதும், இந்த நடை முறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு 'நீட்' தேர்வில் உள் ஒதுக்கீடு?

நீட்' தேர்வு அடிப்படையில், மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த முடிவு செய்துள்ள தமிழக அரசு, அதில், அரசு மற்றும் கிராமப் பகுதி பள்ளி
மாணவர்களுக்கு, உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து, தீவிரமாக பரிசீலித்து வருகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'நீட்' தேர்வு உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து, சட்ட வல்லுனர்களுடன், தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.


'அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் சேர, 'நீட்' தேர்வில், கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும், மே, 7ல், நீட் நுழைவு தேர்வு நடத்தப்பட்டது.

தமிழகத்தில், 88 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர். ஆனால், 'நீட்' நுழைவு தேர்வு மூலம், எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை நடத்துவதை, தமிழக அரசு விரும்பவில்லை.

எனவே, 'நீட்' தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி, அவசர சட்டம் இயற்றி, ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பியது; இதுவரை ஒப்புதல் கிடைக்கவில்லை.

இந்நிலையில், 'நீட்' தேர்வு முடிவுகள் வெளியிட, உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்தது. அதை, உச்ச நீதிமன்றம் ரத்து செய்து, தேர்வு முடிவுகள் வெளியிட, அனுமதி வழங்கியது. அதனால், அடுத்த வாரம், தேர்வு முடிவுகள் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. வேறு வழியின்றி, 'நீட்' தேர்வு அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 'நீட்' தேர்வில், சி.பி.எஸ்.இ., எனும் மத்திய பாடத்திட்ட மாணவர்கள், தனியார் பள்ளி மாணவர்கள் ஆகியோர், 'ரேங்க்' பட்டியலில் முன்னிலை வகிக்க வாய்ப்பு உள்ளது. அவர்களுடன் போட்டி போடும் அளவுக்கு, அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் உயரவில்லை; 'நீட்' தேர்வு மூலம், மாணவர் சேர்க்கை நடந்தால், அரசு பள்ளி மாணவர்களுக்கு, எம்.பி.பி.எஸ்., இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என, தமிழக அரசு கருதுகிறது.

எனவே, 'நீட்' தேர்வு அடிப்படையில், அரசு பள்ளி மற்றும் கிராம மாணவர்களுக்கு, உள் ஒதுக்கீடு வழங்கலாமா என்பது குறித்து, சட்ட வல்லுனர்களுடன், சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். மத்திய அரசிடம், இதற்கு ஒப்புதல் பெற, தமிழக சுகாதார துறை அதிகாரிகள், டில்லியில் முகாமிட்டுள்ளனர்.


இதுகுறித்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தற்போதைய சூழலில், 2,500க்கும் மேற்பட்ட இடங்களை, சி.பி.எஸ்.இ., மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பெற வாய்ப்புள்ளது. இதனால், அரசு பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிப்படைவர். இந்திய மருத்துவ கவுன்சில் விதியை பின்பற்றி, அரசு மற்றும் கிராம மாணவர்கள், 'நீட்' தேர்வு எழுதிய எண்ணிக்கைக்கு ஏற்ப, உள் ஒதுக்கீடு வழங்கலாமா என்பது குறித்து, சட்ட வல்லுனர்களுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கான வாய்ப்புகள் உள்ளதால், ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியிடப்படும்.


இவ்வாறு அவர்கள் கூறினர்.

பயோமெட்ரிக்' பதிவு பள்ளிகளுக்கு வருமா?

பள்ளிகளில், 'பயோமெட்ரிக்' திட்டம் அறிவித்து, ஓராண்டை தாண்டிவிட்ட நிலையில், இன்னும் செயல்பாட்டிற்கு வராமல் முடங்கியுள்ளது. தினமும் பள்ளிக்கு வந்து, கையெழுத்து போட்டு விட்டு, ஏதாவது ஒரு காரணம்
சொல்லி, சொந்த வேலையை பார்க்க, ஆசிரியர்கள் கிளம்பி விடுகின்றனர். அவர்களை கட்டுப்படுத்த, பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறையை, 2016ல், தமிழக அரசு அறிவித்தது.

சோதனை முறையில், பெரம்பலுார் மாவட்டத்தில், பயோமெட்ரிக் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்திற்காக, 140 கோடி ரூபாய் வரை செலவிட திட்டமிடப்பட்டது. ஆனால், இதுவரை திட்டத்தை செயல்படுத்த, அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தேர்வு முறை மாற்றம், பாடத்திட்டம் மாற்றம் என, பல அறிவிப்புகளை வெளியிட்டாலும், பள்ளிகளில், ஆசிரியர்கள் இருப்பதில்லை என்பதால், சரியாக பாடம் நடத்தப்படுவதில்லை. அதனால், அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் உயர்வதில், முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

எனவே, ஆசிரியர் மற்றும் மாணவர்களின் வருகை பதிவேடு பிரச்னைக்கு, முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என, பெற்றோரும், ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்

புதிய 500 ரூபாய் நோட்டு ரிசர்வ் வங்கி அறிமுகம்

புதுடில்லி: ஏ வரிசை கொண்ட புதிய 500 ரூபாய் நோட்டு ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்தது. புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுகள் அறிமுகம் பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த ஆண்டு நவம்பர்
8-ம் தேதி மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. அதற்கு பதிலாக புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டது. ஆரம்பத்தில் புதிய நோட்டுகளுக்கு தட்டுப்பாடு ஆரம்பத்தில் புதிய நோட்டுகளுக்கு மிகுந்த தட்டுப்பாடுகள் ஏற்பட்டது. பின்னர் நீண்ட நாட்களுக்கு பிறகு நிலைமை கட்டுக்குள் வந்தது. தற்போது புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகள் தட்டுப்பாடுகள் இல்லாமல் கிடைத்து வருகிறது. இந்நிலையில், 'ஏ' சீரியல் கொண்ட புதிய 500 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி இன்று வெளியிடப்பட்டது. ஏற்கனவே புழகத்தில் உள்ள 'இ' சீரியல் கொண்ட நோட்டுகள் பயன்பாட்டில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாறுதல்கள் புதிதாக நோட்டுகளில் 2017-ம் ஆண்டு குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த இரண்டு மாறுதல்கள் தவிர, நவம்பர் 8-ம் தேதி அச்சடிக்கபட்ட நோட்டுகள் மாதிரி தான் இந்த நோட்டுகளும் உள்ளது.

PRESS RELEASE- தொடக்கக் கல்வி பயிலச் செல்லும் அங்கன்வாடி மையக் குழந்தைகளுக்கு முன்பருவக்கல்வி நிறைவு சான்றிதழ்

13/6/17

பாடத்திட்டம் மாற்றம் குறித்த பணியில் நாளை முதல் பதிவு : ஆர்வமுள்ள கல்வியாளர்கள் பதிவு செய்து கொள்ளலாம் :பள்ளி கல்வித்துறை அறிவிப்பு.

பாடத்திட்டம் மாற்றம் குறித்த பணியில் நாளை முதல் பதிவு : ஆர்வமுள்ள
கல்வியாளர்கள் பதிவு செய்து கொள்ளலாம்
:
பள்ளி கல்வித்துறை அறிவிப்பு.

1 முதல் 12-ம் வகுப்பு வரை பாடங்களில் மாற்றம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுட்டுள்ளது. இதையடுத்து பாடத்திட்டம் மாற்றம் குறித்த பணியில் ஆர்வமுள்ள கல்வியாளர்கள்  www.tncscert.org  என்ற தளத்தில் நாளை முதல் பதிவு செய்து கொள்ளலாம் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் கல்விக்குழுக்களின் பரிந்துரை, வரைவுகள் குறித்து ஆழமாக அறிந்திருக்க வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

NEW FORM FOR NHIS FOR PENSIONERS (INCLUDING SPOUSE)/ FAMILY PENSIONERS, 2014

EMIS-Data entry, update, transfer/admit is enabled for all classes For the academic year 2016-17 only

NEET தேர்வு முடிவுகளை வெளியிட அனுமதி! மாநில உயர்நீதிமன்றங்கள் விசாரிக்கத் தடை நீட் தேர்வு முடிவுகளை வெளியிட, உச்சநீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது

NEET தேர்வு முடிவுகளை வெளியிட அனுமதி! மாநில உயர்நீதிமன்றங்கள் விசாரிக்கத் தடை.நீட்தேர்வு முடிவுகளை வெளியிட, உச்சநீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது. சிபிஎஸ்இ தொடர்ந்த வழக்கில், இந்த
உத்தரவைப் பிறப்பித்துள்ள உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் இடைக்காலத் தடையை நீக்கியுள்ளது. மேலும், மாநில உயர்நீதிமன்றங்கள் நீட் தேர்வு வழக்குகளை விசாரிக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் பொது நுழைவுத்தேர்வு, சமீபத்தில் நாடு முழுவதும் நடத்தப்பட்டது. இந்தியா முழுவதும் 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்தத் தேர்வை எழுதினார்கள். இதனிடையே நீட் தேர்வில் வினாத்தாள்கள் வெவ்வேறு மாதிரியாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. தமிழ் மொழி வினாத்தாளிலும் ஆங்கில மொழி வினாத்தாளிலும் மாறுபட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாக, தமிழக மாணவர்கள் குற்றம் சாட்டினர். இதேபோல பெங்காலியிலும் மாறுதல்கள் இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதனால், ஒரே மாதிரியான வினாத்தாள்களுடன் தேர்வு நடத்தப்பட வேண்டுமென, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், நீட் தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை விதித்து, கடந்த மாதம் 24-ம் தேதி உத்தரவிட்டது. இந்த நிலையில், இந்தத் தடையை எதிர்த்து சிபிஎஸ்இ சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தது. மேலும், தடை காரணமாக ஒட்டுமொத்த மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கையும் பாதிக்கப்படுவதால், சென்னை உயர்நீதிமன்றத்தின் தடைக்கு, தடை விதிக்க வேண்டுமென சிபிஎஸ்இ மனு அளித்திருந்தது.

இந்தமனுவின் விசாரணை, இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில், நீட் முடிவுகளை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனால், நீட் முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

மாறுமா பள்ளி நேரம்?

அன்று காலை வழக்கம்போல் என் மகளை இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தேன். வழியில் ஒரு வீட்டிலிருந்து திடீரென சிறுவன் ஒருவன் கணநேரத்தில் சாலையை கடந்தான். அவனுக்கோ, அவனின்
பெற்றோருக்கோ சாலையின் இருபுறமும் வந்து கொண்டிருந்த வாகனங்களை பற்றியோ, சாலை விதிகள் பற்றியோ எந்தவித அக்கறையும் இருந்ததாக தெரியவில்லை.


 தனது வீட்டுக்கு எதிரே ஒலி எழுப்பியபடி நின்று கொண்டிருந்த பள்ளி வேனில் மேலும் தாமதிக்காமல் ஏறிவிட வேண்டும் என்பது மட்டுமே அந்தச் சிறுவனின் இலக்காக இருந்தது.

ஒருபூனைக்குட்டி சாலையின் குறுக்கே ஓடுவதைப் போன்று சட்டென அந்தச் சிறுவன் எனது வாகனத்தின் முன் எதிர்ப்பட்டான். இருப்பினும், நான் உடனே வாகனத்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

அன்றாடம் காலை வேளையில் பள்ளி வேனை பிடிக்க, பிள்ளைகள் அவசர அவசரமாக கிளம்புவதும், கேட் மூடப்படும் கடைசி நிமிடத்திற்குள்ளாவது தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்றுவிட வேண்டுமென்ற முனைப்பில், அவர்களது பெற்றோர் இருசக்கர வாகனத்தில் பந்தய குதிரைகளாய் பறந்து, சாலையில் விழுந்து எழுவதும் சென்னை போன்ற பெருநகரங்களில் அன்றாடம் அரங்கேறும் காட்சிகளாக உள்ளன.

பெருநகரங்கள் தொடங்கி நகரங்கள், சிறுநகரங்கள், கிராமங்கள் வரை, இன்றும் அரசுப் பள்ளிகளில் காலை ஒன்பது மணியளவில் இறை வணக்கம் முடிந்த பிறகு, ஒன்பதரை மணிக்குதான் வகுப்புகள் ஆரம்பிக்கின்றன.

இதனால், இப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் காலை பள்ளிப் பாடங்களை படித்துவிட்டு, ஆற அமர சிற்றுண்டி சுவைத்துவிட்டு பதற்றமின்றி பள்ளிக்கு செல்கின்றனர். ஆனால், தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்களோ? அவசர கதியில் பள்ளிக்கு கிளம்ப வேண்டிய அவஸ்தையை தினமும் அனுபவித்து வருகின்றனர்.

பெரும்பாலான தனியார் பள்ளிகளில் காலை 8.30 மணிக்கே வகுப்புகள் ஆரம்பித்துவிடுவதுதான் மாணவர்களின் இந்த அவதிக்கு காரணம். இதற்கு மாநகரங்களில் பீக் -ஹவர்ஸ் நேரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், பள்ளிகளில் மாலை நேரத்தில் நடத்தப்படும் தனி வகுப்புகள் ஆகியவை காரணங்களாக கூறப்படுகின்றன.

காலையில் சீக்கிரம் பள்ளிக்கு வரும் மாணவர்கள், மாலையில் 3, 3.30 மணிக்கே வீடு திரும்பி விடுகின்றனரே என்று நாம் சமாதானம் சொல்லலாம்.
தினமும் காலை பள்ளிக்குச் செல்ல வேண்டிய நேரம் இதுதான் என்பது தெரிந்தும், அதற்கு தகுந்தாற்போல் திட்டமிட்டு புறப்படாமல், அடித்துப் பிடித்து பள்ளிக்கு சென்றால் அது யார் தவறு என சிலர் புத்திசாலித்தனமாக கேள்வி கேட்கலாம்.

ஆனால், பள்ளிக்கு அனுப்புகிறோம் என்ற பெயரில், ஆரம்ப கல்வி பயிலும் பிள்ளைகளை தினமும் அதிகாலையில் எழுப்பி, காலை கடன்களை முடித்தும் முடிக்காமல், அவர்களுக்கு காக்கை குளியல் போட்டுவிட்டு, அந்த வேளையில் அவர்களால் சிற்றுண்டி உண்ண முடிகிறதோ இல்லையோ, பெயருக்கு உணவை ஊட்டிவிட்டு, 7.30 மணிக்கே அந்த பிஞ்சுகளை பள்ளி வேன்களில் அடைப்பதும்கூட குழந்தைகள் மீது அன்றாடம் செலுத்தப்படும் ஒருவித வன்முறைதான்.

இரவுஉணவுக்கு பிறகு அடுத்த வேளை உணவுக்கு நீண்ட இடைவேளை இருப்பதால் காலை சிற்றுண்டியை தவிர்க்கக்கூடாது என மருத்துவ உலகம் அறிவுறுத்தி கொண்டே இருக்கிறது.

மேலும், குழந்தைப் பருவம் தொடங்கி, வளர் இளம் பருவம் (டீன் ஏஜ்) வரை மனிதனின் உடல் வளர்ச்சியில் மிக முக்கியமான காலகட்டம். இந்த காலக்கட்டத்தில் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை தருவது அவசியம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஆனால், பள்ளிக்கு செல்ல வேண்டிய அவசரத்தில் இன்றைய தலைமுறை குழந்தைகளில் பெரும்பாலோருக்கு, காலை சிற்றுண்டியை முறையாக எடுத்துக் கொள்ள முடிவதில்லை.
காலைஏழு மணிக்கு என்ன சாப்பிட முடியும்? சரி முடிந்தவரை சாப்பிடு எனக் கூறி, பிஸ்கட், பழத்துடன் ஒரு டம்ளர் பாலை பிள்ளைகளுக்கு கொடுத்துவிட்டு, காலை சிற்றுண்டி முடிந்துவிட்டதாக பெற்றோரும் சமாதானம் அடைந்துவிடுகின்றனர்.

இந்தப் போக்கு தொடரும்போது, நாளடைவில் பிள்ளைகளுக்கு வயிற்று புண் (அல்சர்) ஏற்படுவதுடன், அஜீரணம், நெஞ்சு எரிச்சல், மலச்சிக்கல் போன்ற உடல் உபாதைகளுக்கும் அவர்கள் ஆளாக நேரிடுகிறது. உடல் வளர்ச்சி பாதிக்கும் அபாயமும் உள்ளது.

அடுத்து, மாலை, இரவு நேரங்களில் பள்ளிப் பாடங்களை படிப்பதைவிட, அதிகாலையில் படிக்கும்போது, நாம் படிப்பது மனதில் ஆழமாக பதியும் என்பது படிப்பாளிகள் பலரின் கருத்து.

ஆனால், தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு காலை எழுந்ததும் பள்ளிக்கு புறப்படவே நேரம் சரியாக இருப்பதால், இந்த வேளையில் பள்ளிப் பாடங்களை படிக்கும் வாய்ப்பை இவர்கள் இழந்துவிடுகின்றனர்.

மேலும், அன்றாட வீட்டுப் பாடங்களை இரவு உறங்குவதற்கு முன்பே முடித்துவிட வேண்டிய கட்டாயமும் இவர்களுக்கு உள்ளது. இதனால், மாலையில் விளையாடுவதற்கான நேரத்தையும் இவர்கள் படிப்புக்கே செலவிட வேண்டியதாகிறது. இதன் காரணமாக, "காலை எழுந்தவுடன் படிப்பு, மாலை முழுவதும் விளையாட்டு' என்ற வரிகள் இவர்களுக்கு பொருந்தாது.

பள்ளி மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, தனியார் பள்ளிகளின் நேரத்தை மாற்றியமைக்க அரசு ஆவன செய்ய வேண்டும்.


குறைந்தபட்சம் ஆரம்பக் கல்வி பயிலும் மாணவர்களுக்கான வகுப்புகள் ஆரம்பிக்கும் நேரத்தையாவது காலை 10 மணிக்கு மாற்ற அரசு உத்தரவிட வேண்டும்.

ஜூலை முதல் வாரத்தில் TET தேர்வு முடிவுகள்

ஆசிரியர் தகுதிக்கான, ‘டெட்’ தேர்வு விடைத்தாள் திருத்தம், அடுத்த வாரம்
துவங்குகிறது. தமிழகம் முழுவதும், மூன்று ஆண்டுகளுக்கு பின், ஏப்., 29, 30ல், ‘டெட்’ தேர்வு நடந்தது. இதில், முதல் தாளில், இரண்டு லட்சத்து, 37 ஆயிரம் பேரும், இரண்டாம் தாளில், ஐந்து லட்சத்து, மூன்றாயிரம் பேரும் பங்கேற்றனர்.

கொள்குறி என்ற, ‘அப்ஜெக்டிவ்’ வகை, வினாத் தாள் அடிப்படையில் தேர்வு நடந்தது. தேர்வுக்கான விடைக்குறிப்புகள், இரு வாரங்களுக்கு முன் தயாரிக்கப்பட்டு, தோராய விடைக்குறிப்பு வெளியானது. இதில், விடைகள் குறித்து சந்தேகம் அடைந்தவர்கள், சரியான விடைக் குறிப் புகளை கூறி, ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு, கடிதம் எழுதினர்.

இந்தகடிதங்களை, ஆசி ரியர் தேர்வு வாரியம் ஆய்வு செய்ததில், வாரியம் அளித்த பல விடைக்குறிப்புகள் தவறா கவும், சிலவற்றுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் இருந்த தும் தெரிய வந்தது. இதை யடுத்து, இறுதி விடைக்குறிப்பு தயாரிக்கும் பணி முடிந்துள்ளது. ஒரு வாரத்தில், விடைத்தாள் திருத்தம் துவங்குகிறது.

ஜூலைமுதல் வாரத்தில், முடிவுகள் வெளியாகும் என, கல்வித் துறை தெரிவித்துள்ளது

த.அ.உ.ச - 2005 - அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பணிபுரியும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு மாதத்திற்கு ஒரு நாள் தற்செயல் விடுப்பும், வருடத்தில் 3 நாட்கள் வரையறுக்கப்பட்ட விடுமுறை (RH) வழங்கலாம் என இணை இயக்குநர் அறிவிப்பு

RTI- பதவி உயர்வு பணித்துறப்பு-குறித்து -தொடக்க கல்வி இணை இயக்குனர் -பதில்

உயர் நிலை/மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் உயர்கல்விபயில தலைமைஆசிரியரிடம் அனுமதிபெற்றால் போதும் என்பதற்கான செயல்முறை.

செல்போனில் லீவு சொல்லக் கூடாது - ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு!

வாட்ஸ் அப் அதிரடி அறிவிப்பு?

பிளாக்பெர்ரி 10, பிளாக்பெர்ரி ஓ.எஸ்., நோக்கியா S40, நோக்கியா S60,
உள்ளிட்ட மொபைல்கள் பழைய பிளார்ட்ஃபார்ம்களை கொண்டுள்ளதால் இந்த வகை ஃபோன்களில் வரும் ஜுன் 30 முதல் வாட்ஸ்-அப் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2009-ஆம்ஆண்டு வாட்ஸ்-அப் தொடங்கப்பட்ட காலத்தில், பிளாக்பெர்ரி மற்றும் நோக்கியாவின் இயங்குதள அமைப்புகள் சந்தையில் 70 சதவீதம் ஆதிக்கம் செலுத்தின. ஆண்ட்ராய்டு மற்றும் iOS இயங்குதளங்கள் 25 சதவீதத்திற்கும் குறைவாக இயங்கின. மொபைல்ஃபோன்களின் உலகில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்தது நோக்கியா. அதேபோல், பிளாக்பெர்ரி மொபைல்களுக்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. என்னதான் முன்னணி நிறுவனமாகக் கொடிகட்டிப் பறந்தாலும், ஸ்மார்ட்ஃபோன்களின் வருகைக்குப் பிறகு நோக்கியா, பிளாக்பெர்ரியின் நிலைமை மாறியது. இதனால், இந்த வகை ஃபோன்களுக்கு வாடிக்கையாளர்களின் விகிதம் குறையத் தொடங்கியது. இந்நிலையில். வாட்ஸ்-அப் அறிவித்துள்ள இந்த முடிவு பிளாக்பெர்ரி மற்றும் நோக்கியாவிற்கு மேலும், பின்னடைவை ஏற்படுத்தும் என்கிறார்கள்.

வாட்ஸ் அப்பின் அறிவிப்பால் பிளாக்பெர்ரி நோக்கியா வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கும் நிலையில், மற்ற ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்கள் “அப்பாடா இந்த செய்தி எனக்குரியது இல்லை“ என நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர். அந்த அளவிற்கு வாட்ஸ்-அப் மக்களை வளைத்துப் பிடித்து வைத்திருக்கிறது.

தொகுப்பு (2004-2006) ஊதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் குமுறல் !

2004ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை தொகுப்பூதிய காலத்தில் நாம்
பெற்ற எண்ணிலடங்காத துயரங்கள்....

எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான்.. ஆனால் ஏனோ எல்லோரும் அமைதியாய் இருக்கின்றோம்....

2004 முதல் 2006 வரை, 20 முதல் 22 மாதங்கள் வரை நாம் பெற்ற ஊதியம் 3000 மடடுமே....ஒவ்வொரு மாதமும் ஊதியத்தை இழந்தோம்
இரண்டு வருடம் சேர்த்து ஈட்டிய விடுப்பு ( E.L.) ஒப்படைப்பு இழந்தோம்..
இரண்டு வருட பணிக்காலத்தில் ஆண்டு ஊதிய உயர்வை இழந்தோம்...
இரண்டு வருட பணிக்காலத்தில் வருடத்திற்கு இரு முறை என அரசு உயர்த்தி வழங்கிய D.A. அனைத்தையும் இழந்தோம்.

தொகுப்பூதிய காலத்திற்கான இரண்டு வருட service இழந்தோம்..
இரண்டு வருட மருத்துவ விடுப்பை இழந்தோம்..
2004 ம் ஆண்டு பணியேற்று 2014 ல் தேர்வு நிலை பெற வேண்டிய நாம் தொகுப்பூதிய காரணத்தினால் 2016 ல் பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

தேர்வு நிலைக்குப் பெற வேண்டிய 3%,3%=6% ஊதிய உயர்வை இழந்துள்ளோம்.2014 ம் ஆண்டிலிருந்து 2016 ம் ஆண்டிற்கு தள்ளப்படுவதால் ஏற்படும் ஊதிய இழப்பு எண்ணிப்பாருங்கள். தேர்வு நிலை போன்று சிறப்பு நிலையும் 2024ல் இருந்து 2026 க்கு தள்ளிப் போகும். அவ்வாறு இடைப்பட்ட காலங்களுக்கு ஏற்படும் இழப்பீடுகள் நிலை.அதனை சரி செய்வது யாரோ ??
பணியாற்றிய காலத்திற்குரிய ( 2004 to 2006 ) முழுமையான ஊதியத்தை இழந்தோம்...

பணியாற்றுகின்ற காலத்தில் தற்போது 4200 தர ஊதியத்தை இழந்து போராடிக்கொண்டிருக்கி-றோம்..

எதிர்காலத்தில் ஓய்வு பெறும் காலத்தில் ஓய்வூதியமும் இல்லை என்ற நிலையில் இருக்கிறோம்...

இந்தநிலை மாற...மாற்ற என்ன செய்ய வேண்டும் என எண்ணிப் பாருங்கள். ஏற்பட்டுள்ள இழப்பு நமக்கே என உணர்ந்து செயல்படுங்கள்....
" இந்த உலகம் பல துன்பங்களை அனுபவிப்பது கெட்டவர்களால் அல்ல...
அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் நல்லவர்களால் தான் " என்னும் மாவீரன் "நெப்போலியன் " கருத்தை மனதில் இருங்கள்.
ஆசிரியர் சமூகம்.... இது என் சமூகம்... என் நணபர்கள் அல்லல்படுவதை நான் எதிர்த்து கேட்காமல் வேறு எவன் கேட்பான் ? என்பதை தாரக மந்திரமாகக் கொள்ளுங்கள்...

இனிமேலும் அமைதியாக இருந்து...
நம்மையும், நம் பேரினத்தை ஏமாற்றும் எவருக்கும்...
மறைமுக ஆதரவளிக்காமல்..

எதிர்த்து குரல் கொடுத்து ஆசிரியர் சமுதாயத்தை காத்திடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

உங்களில் நானும் ஒருவனே !!

அரசின் திட்டங்களால் அழியப்போகும் அரசுப்பள்ளிகள்*

 அரசின் 25% இட ஒதுக்கீட்டால் அரசுப்பள்ளியில் முதல்வகுப்பிற்கு வரவேண்டிய சுமார் 89000 குழந்தைகள் தனியார் பள்ளியில் சேர்ந்துள்ளனர். இப்படி ஆண்டுதோறும் சென்றால் அரசுப்பள்ளியை மூட வேண்டியதுதான்....


🌴 அரசுப்பள்ளியில் வசதிகளை அதிகப்படுத்தி சேர்க்கையை அதிகரிக்க திட்டமிட வேண்டும்.

🌴 அரசுப்பள்ளிக்கு ஆபத்தாக இருக்கும் 25% இடஒதுக்கீடு, ஐந்தாம் வகுப்பில் திறமையான SC/ST மாணவர்களை தேர்ந்தெடுத்து தனியார் பள்ளிகளில் படிக்க ஊக்குவிப்பது போன்ற திட்டங்களை அடியோடுகைவிட வலியுறுத்த
வேண்டும். சங்கங்கள் முயற்சி எடுத்து அரசுப்பள்ளியின் எதிர்காலத்தை காக்கவேண்டும்

🌴 அரசின் திட்டங்கள் அரசுப்பள்ளிகளை ஊக்குவிப்பதாக இருக்க வேண்டுமே தவிர , தனியார் பள்ளிகளை ஊக்குவிப்பதாக இருக்க கூடாது.

🌴  மூவாயிரம் ஆசிரியர் பணியிடங்களுக்
கான   மாணவர்களை அரசுப்பள்ளியில் சேரவிடாமல் செய்துள்ளது.

🌴 இவ்வாண்டு மட்டும்  சுமாராக இரண்டாயிரம் ஆசிரியர்கள் பணியிடங்கள் மாணவர் இல்லை என அரசு தொகுப்பில் சரண் செய்யப்பட்டுள்ளன.


🌴  இதுபோன்ற ஆபத்தான திட்டங்கள் தொடராமல் இருக்க சங்கங்கள் வலியுறுத்த  வேண்டும்

நீட் தேர்வு விடைத்தாள் இணையத்தளத்தில் இன்று வெளியிடப்படும் என சிபிஎஸ்சி அறிவித்துள்ளது.

மருத்துவப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வான, ‘நீட்’ தேர்வு, கடந்த மே 7-ஆம் தேதி நடத்தப்பட்டது. நாடு முழுவதும் நடந்த இந்த தேர்வுக்கான
வினாத்தாள், ஆங்கிலம் உட்பட 10 மொழிகளில் இருந்தன.
இந்நிலையில் ”நீட் தேர்வில் ஒரே மாதிரியான வினாத்தாள் அடிப்படையில், வினாக்கள் கேட்கப்படவில்லை என புகார் தெரிவித்து, நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. இதனிடையே உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, நீட் தேர்வு விடைத்தாள் இணையத்தளத்தில் இன்று வெளியிடப்படும் என சிபிஎஸ்சி அறிவித்துள்ளது.
விடைத்தாளில் ஆட்சேபம் இருந்ததால் நாளை 5-மணிக்குள் தெரிவிக்கலாம் என்றும், அதற்கு ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 15ந்தேதி மாணவர்களின் விடைக் குறிப்பு வெளியாகும் என சிபிஎஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

12/6/17

DEE PROCEEDINGS- குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்- 12.06.2017 அன்று அனுசரித்தல் - நாளை அனைத்து பள்ளிகளிலும் காலை 11 மணிக்கு உறுதிமொழி எடுத்தல் - தொடர்பாக



கல்வித்துறையில், பல்வேறு மாற்றங்கள் வர உள்ளன - பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

15ல் அதிரடி அறிவிப்பு - கல்வி அமைச்சர் செங்கோட்டையன்

''கல்வித்துறையில், பல்வேறு மாற்றங்கள் வர உள்ளன. வரும், 15ல் இதற்கான
அறிவிப்பு வெளியாகும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் பேசினார். 


 ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், சாதனையாளர்கள் விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:

இந்தஅரசு வெளிப்படை தன்மையோடு, கல்வித்துறையில் நடைபோட்டு கொண்டிருக்கிறது. ரேங்க் அடிப்படையில், தனியார் பள்ளிகள் வீரநடை போட்டன. அதை முறியடித்து காட்டியது இந்த அரசு. பிளஸ் 1 தேர்வுக்கு, கேள்வித்தாள் தயாரிப்பது குறித்து, சிந்தித்து செயலாற்றி வருகிறது.

வரும், 15ல் பள்ளி கல்வித்துறையில், இந்த அரசு பல்வேறு மாற்றங்களை கொண்டு வர இருக்கிறது. அப்துல்கலாம் கனவை நிறைவேற்ற, நாங்கள் துடித்து கொண்டிருக்கிறோம்.


தனியாரை மிஞ்சும் அளவுக்கு, தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற சிந்தனை ஓட்டம் உள்ளது. அரசுப்பள்ளி ஆசிரியர்கள், சிறந்த கல்வியாளர்கள் மட்டுமின்றி, மனித நேயத்தோடு சிந்திக்க கூடியவர்கள். இவ்வாறு அவர் பேசினார்.

தமிழகத்தில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளை எளிதாகத் தொடர்பு கொள்ள உதவும் இணையதளத்தை வாசர்களுக்குக் கொண்டு செல்லும் கடமையுணர்வுடன் இந்தத் தகவலை வெளியிடுகின்றோம்.

லஞ்சம் எங்கு எங்கு எல்லாம் தலைவிரித்து ஆடுகின்றதோ அங்கு எல்லாம் சட்டம் வளைந்து நெளிந்து போகின்றது. இதனால் தான் பல குற்றச் செயல்கள்
தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளது. இது அரசின் தவறு அல்ல. ஒரு சிலரின் தவறே. நமது நாடு லஞ்ச லாவண்யம் இன்றி நேர்மையாக செயல்பட்டாலே உலக அளவில் முதன்மை நாடாகத் திகழும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

அரசுஅதிகாரி ஒருவர் தன் கடமையைச் செய்ய லஞ்சம் கேட்கிறார் என்றால் அவரைப் பற்றி எங்கு எப்படிப் புகார் அளிக்க வேண்டும் என்று தெரியவில்லையா. உடனே http://www.dvac.tn.gov.in/என்ற தமிழக லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளின் இணையதளத்திற்கு சென்று பார்க்கலாம். அங்கு லஞ்சம் குறித்து யாரிடம் புகார் தெரிவிக்கலாம் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் முதல் செல்போன் எண் வரை அத்தனையும் இந்த இணையதளத்தில் தெளிவாக உள்ளது.

லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கையும் களவுமாகப் பிடித்து வருவதைப் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் பார்க்கிறோம். இந்த நிலையில் லஞ்ச பேய் பிடித்த அதிகாரிகள் குறித்து லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுக்கு தெரிவிப்பது நமது தலையாய கடமையாகும். இதைச் செய்ய பலருக்கும் குழப்பம், தயக்கம். அந்த குழப்பத்தையும், தயக்கத்தையும் போக்கியே ஆக வேண்டும்.


யாராவது அதிகாரி லஞ்சம் கேட்கிறாரா உடனே லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவியுங்கள். புகார் கொடுத்தால் என்னவாகுமோ என்று அஞ்ச வேண்டாம்.

இனி தபால் நிலையத்திலும் ஆதார் பதிவு செய்யலாம் - ஜூலை முதல் நடைமுறை!

ஆதார் விவரங்களை பதிவு செய்ய ஆதார் மையத்துக்கு தேடி அலைந்து
கொண்டு இருக்கிறோம். வரும் ஜூலை மாதத்தில் இருந்து அப்படி அலையத் தேவையில்லை, தபால் நிலையத்திலேயே ஆதார் விவரங்களை பதிவுசெய்யும் முறை நடைமுறைக்கு வர இருக்கிறது.

இதற்காக மாநிலத்தில் உள்ள குறிப்பிட்ட தபால் நிலையங்களை அடையாளம் காணும் பணியில் தபால் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அந்த குறிப்பிட்ட தபால் நிலையங்களில் ஆதார் விவரங்களை பதிவு செய்யலாம், ஆதார் தொடர்பான விவரங்களையும் “அப்டேட்” செய்து கொள்ளலாம்.

முதல் கட்டமாக தபால் நிலையத்தில் ஆதார் விவரங்களை பதிவு செய்யும் முறையை 12 நகரங்களில் உள்ள தலைமைத் தபால் நிலையங்களில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை, புதுச்சேரி, கன்னியாகுமரி, மதுரை, திருச்சி, கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், திண்டுக்கல், வேலூர், திருநெல்வேலி ஆகிய மாவட்ட தலைநகரில் உள்ள தலைமைத் தபால் நிலையங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படலாம்.

இந்தகுறிப்பிட்ட தபால் நிலையங்களில் அந்தந்த மாவட்ட மக்கள், தங்களின் ஆதார் தொடர்பான விவரங்களை அதாவது செல்போன் எண், முகவரி மாற்றம், மின்அஞ்சல் மாற்றம் போன்றவற்றை “அப்டேட்” செய்யலாம், புதிதாக ஆதார் கார்டுக்கு விண்ணப்பிக்கும் மக்களும் தங்கள் விவரங்களை பதிவுசெய்யலாம்.

சென்னை மண்டலத்துக்கான தபால்நிலைய மேலாளர் ஜே.டி. வெங்கடேஸ்வரலு கூறுகையில், “ மாநிலம் முழுவதும் தபால் நிலையங்களில் ஆதார் கார்டுகள் பதிவு செய்யவும், ஆதார் விவரங்களை அப்டேட் செய்யவும், 12 தலைமைத் தபால்நிலையங்கள்,  2 ஆயிரத்து 515 துணைதபால் நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த தபால் நிலையங்களில் ஆதார் தொடர்பான சேவைகளை மக்கள் பெறலாம். கிராமப்புறங்களில் இருக்கும் மக்கள் ஆதார் கார்டுகள் புதிதாக பதிவு செய்ய தபால் நிலையத்துக்கு எளிதாக வந்து செல்லும் வகையில் இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது.


ஒவ்வொரு தபால் நிலையத்துக்கு 2 பணியாளர்கள் வீதம் ஒதுக்கப்பட்டு, இந்த பணிகள் நடைபெறும். இதற்காக 100 ஊழியர்களுக்கு நாங்கள் பயிற்சி அளித்து இருக்கிறோம். அவர்கள் சென்று மற்ற ஊழியர்களுக்கு இது தொடர்பாக பயிற்சி அளிப்பார்கள். ஆதார் விவரங்களை பதிவு செய்யும் கருவிகளும், வாங்கப்பட்டு, அந்தந்த தபால் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்துக்காக ரூ.80 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் அண்ணா சாலையில் உள்ள தபால் நிலையம் ஆதார் விவரங்களை பதிவுசெய்ய ஒதுக்கப்படலாம்” எனத் தெரிவித்தார்.

7 வது சம்பள கமிஷன்: வீட்டு வாடகை படியில் தாராளம்!!!

அரசுஊழியர்களுக்கு 7 வது சம்பள கமிஷன் ஆணையத்தின் படி அதிக அலவென்ஸ் மற்றும் விட்டு வாடகைப் படி ஆகியவை ஜூன் மாதம் இறுதி முதல் வழங்கப்படும் என்பது மகிழ்ச்சியளித்துள்ளது. இந்தச் செய்தி  அரசு ஊழியர்களில் யாரெல்லாம் அதிக அலவன்ஸ் மற்றும் வீட்டு வாகைப்படி
வேண்டும் என்று காத்திருந்தார்களோ அவர்களுக்க மேலும் மகிழ்ச்சியை அளிக்கும்.

ஜூலைமாதம் முதல் நற்செய்தி

பல மாத காத்திருப்பிற்குப் பின்பு 52 லடசத்திற்கும் அதிகாமக அரசு ஊழியர்களுக்குப் புதுப்பிக்கப்பட்ட உயர்த்தப்பட்ட அலவன்ஸ் வீட்டு வாடகைப்படியுடன் வழங்கப்பட இருக்கின்றது. சம்பள உயர்வுக்குப் பிறகும் இந்தக் கொடுப்பனுவுகள் தொடர்ந்து அப்படியே வழங்கப்படும்.

மத்திய அரசு வீட்டு வாடகைப் படியை தாராளமாக வழங்க இருக்கின்றது

புதுப்பிக்கப்பட்ட கொடுப்பனவுகளை விடுவிப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் 2016 ஜனவரி 1 முதல் 40,000 கோடி ரூபாய் மத்திய அரசுக்குக் கிடைத்துள்ளது. அது மட்டும் இல்லாமல் மத்திய அரசு வீட்டு வாடகைப்படியை தாரளமையமாக ஊழியர்களின் கோரிக்கைக்கு ஏற்ப அளிக்க முடிவு செய்துள்ளது என்று கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

நுகர்வு அதிகரிக்கும்

கொடுப்பனுவுகள் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட உடன் நுகர்வு அதிகரிக்கும் என்று அரசு நம்புகின்றது. சென்ற நிதி ஆண்டை விட 2017-2018 நிதி ஆண்டில் தனியார் ஊழியர்களின் நுகர்வு குறைந்துள்ளது. இதனை இந்திய ரிசர்வ் வங்கியும் உறுதி செய்துள்ளது. இதனால் பணவீக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றது. பொருட்களின் விலை குறைந்துள்ளது. பணவீக்கம் ஆர்பிஐ வெளியிட்டுள்ள பணவீக்க கணிப்பில் முதல் அரையாண்டில் 2 முதல் 2.5 சதவீதமாகப் பணவீக்கம் இருக்கும் என்றும், இதுவே இந்த ஆண்டின் இரண்டாவது பாதியில் 3.5 முதல் 4.5 சதவீதமாகப் பணவீக்கம் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



வீட்டு வாடகைப் படி

மத்திய அரசு ஊழியர்கள் வீட்டு வாடகைப்படி ஊழியர்கள் இருக்கும் நகரத்தைப் பொருத்து 30, 20 மற்றும் 10 சதவீதமாக வழங்கப்பட்டு வருகின்றது, இதைக் குறைக்கக் கூடாது என்று ஊழியர்கள் சங்கங்களும் கோரிக்கை வைத்துள்ளன. குழு பரிந்துரை அரசு முடிவு அதே நேரம் 7 வது சம்பள கமிஷன் பரிந்துறை குழு 24, 16 மற்றும் 8 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்று பரிந்துரைத்தும் அரசு தாராளமாகவே அதைவிட அதிகமாகவே அளிக்க முடிவு செய்துள்ளது.



அமைச்சரவை கூட்டம்

திங்கட்கிழமை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அமைச்சரவை செயலாளருடன் கலைந்துறையாட இருப்பதாகவும் அதில் கொடுப்பனவுகள் குறித்து விவாதிக்கப்படும் என்றும் கூறப்படுகின்றது. அதே நேரம் இந்தக் கூட்டத்தில் ஊழியர்கள் யூனியன் தலைவர் பக்கத்தில் இருந்து யார் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்ற விவரங்கள் தெரியவில்லை.

தொடரும் சஸ்பென்ஸ்

வீட்டு வாடகைப் படி மீதான இந்தச் சஸ்பெஸ் இன்னும் ஒரு வார காலம் வரை நீட்டிக்கும் என்று கூறப்படும் நிலையில் அமைச்சரின் இந்தக் கூட்டத்தில் இது குறித்த விவாதம் முக்கியமாக நடைபெறும் என்றும் அதற்கான கோப்புகள் தாயார் நிலையில் உள்ளன என்றும் செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவையில் நிலுவையில் உள்ள கோரிக்கைகள் வீட்டு வாடகைப் படி மற்றும் அடிப்படை சம்பளம் இரண்டு கோரிக்கைகள் குறித்துத் தான் அரசு தரப்பில் இருந்து என்று வரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை.


வீட்டு வாடகைப்படி 27 சதவீதம் அல்லது 27 சதவீதம் அளிக்க வேண்டும் ஒரு பக்கம் பரிந்துறை குழு வட்டாரங்கள் தெரிவிக்கும் நிலையில் அமைச்சரவை ஊழியர்களின் கோரிக்கைப் படி அளிக்கவே முடிவு செய்துள்ளன. சம்பள உயர்வு ஊழியர்களின் சம்பள உயர்வு 6வது சம்பள கமிஷன் போன்றே 187 முதல் 178 சதவீதம் வரை ஊழியர்கள் வசிக்கும் நகரத்தைப் பொருத்து அளிக்க முடிவு செய்துள்ளது. எச்ஆர்ஏ உயர்ந்தால் என்ன ஆகும்? வீட்டு வாடகைப்படியை அரசு இப்போது உள்ள 30, 20, 10 சதவீத அளவில் தொடர்ந்து அளிக்க முடிவு செய்தால் சம்பள உயர்வு 157 முதல் 178 சதவீதம் உறுதியாகும்.

பள்ளிக்கல்வியில் அமைச்சர் செங்கோட்டையன் என்னென்ன செய்யவேண்டும்? - ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களின் யோசனைகள் !!!

அதிரடியான மாற்றங்களும் அறிவிப்புகளும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் மீது மக்களிடம் பரவலான எதிர்பார்ப்பைக் கிளப்பிவிட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறையில் அவர் என்னென்ன
செய்யவேண்டும் என பெற்றோரும் ஆசிரியர்களும் கல்வியாளர்களும் ஏகப்பட்ட யோசனைகளைத் தயாராக வைத்திருக்கின்றனர்.
                                   

பெற்றோர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும்கூட பொதுவாக வைக்கும் குற்றச்சாட்டு, அரசு வழங்கும் சீருடைகள் பொருத்தமான அளவு இருப்பதில்லை என்பதே. ”ஏறத்தாழ பொருத்தமாக அமைந்துவிட்டால் அந்த சட்டைகளை வைத்துக்கொள்கிறார்கள்; வேறு வழியே இல்லாமல் அளவு கூடக்குறைவாக இருக்கும் சட்டைகளை மாணவர்கள் அணிந்து கொண்டுவருவது பரிதாபமாக இருக்கிறது” என்கின்றனர் அதைச் சகிக்கமுடியாமல் வெதும்பும் ஆசிரியர்கள்.

” பள்ளிகளில் மாணவர்களுக்குத் தரப்படும் 4 செட் சீருடைகள், சரியாக அமைந்துவிட்டால் மாற்று சட்டைகள் தைக்கவேண்டிய அவசியமே ஏற்படாது. அளவெல்லாம் எடுக்கிறார்கள்; ஆனால் சட்டையாக வந்துசேரும்போது அவ்வளவு மோசமாக இருக்கிறது. எத்தனையோ முறை எடுத்துச்சொல்லியும் சட்டைகளின் நிலைமை சரிசெய்யப்படவில்லை.

துணியைக் கொடுங்கள், உள்ளூர் அளவிலேயே அரசு சொல்லும் அதே மகளிர் கூட்டுறவு தையல் சங்கத்தினரிடமே சரியாக அளவெடுக்கவைத்து முழுமையாக அழகான உடையாக தைத்து வழங்கமுடியும். அரசாங்கம் முக்கியமாக கவனிக்கவேண்டிய இடம், இது” என்கிறார், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன். 

அரசுப் பள்ளி மாணவர்கள் அனுபவிக்கும் பல கஷ்டநஷ்டங்களையும் சிக்கல்களையும் கவனத்துக்குக் கொண்டுவருகிறார், இந்த ஆசிரியர்.

teacher Manikandan ” உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு தருவதை மேல்நிலைப் பள்ளிக்கும் நீட்டிக்கவேண்டும். பள்ளிச் சத்துணவை வாங்கி உண்ணும் மாணவர்கள் கணிசமாக இருக்கிறார்கள். பணியாளர்கள் இரக்கப்பட்டு அவர்களுக்கு சாப்பாடு வழங்குவதாகவும் மாணவர்கள் தயங்கித்தயங்கி மதிய உணவைப்பெறுவதுமாக இருக்கிறது. சுயமரியாதையோடு மேல்நிலைப்பள்ளி மாணவர்களும் சத்துணவைச் சாப்பிட ஆணையிடவேண்டும்.


அவர்களுக்கு மிதிவண்டியும் கணினியும் அரசால் இலவசமாக வழங்கப்படுவது, மிகவும் பயனுள்ளது. ஆனால் 11ஆம் வகுப்பு முடியும் காலகட்டத்தில்தான் மிதிவண்டி வந்துசேர்கிறது. 12ஆம் வகுப்பு தேர்வுக்கு முன்பாகத்தான் கணினி வருகிறது. இரண்டையுமே 11ஆம் வகுப்பு ஆரம்பிக்கும்போதே வழங்கினால் மாணவர்களுக்குப் பயன்படும். நவீன அறிவியல் வளர்ச்சிக் காலகட்டத்தில் இப்போது மாணவர்களுக்கு கணினி வழங்குவது மெச்சத்தகுந்த திட்டம் என்றாலும், +2 தேர்வின்போது அவற்றைக் கொடுப்பதால் நோக்கத்துக்கு பின்னடைவு ஏற்படுகிறது.

முன்பே கொடுத்தால், மாணவர்கள் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புண்டு எனக் கூறப்படுகிறது. ஜூன் மாதமே கொடுத்துவிட்டால் ஒரு மாதம் படங்களைப் பார்த்தால்கூட அதுவே போர் அடித்து, கல்விசார்ந்து அதைப் பயன்படுத்தத் தொடங்குவான். கல்லூரிக்குச் செல்வதற்கு முன்பே மாணவர், கணினியை இயக்குவதில் வல்லவராக ஆகமுடியும்.

ஆய்வகங்களுக்கான கருவிகள் வழங்குவதற்காக 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. 3 ஆயிரத்துக்குள் அந்தப் பொருட்களை வாங்கிவிட்டு மிகைக்கணக்கு காட்டுகிறார்கள். எடுத்துக்காட்டாக, சோடியம் குளோரைடு ஒரு பாக்கெட் 200 கி= 100 ரூபாய் எனக் கணக்கு காட்டப்படுகிறது. இது வேறு ஒன்றுமில்லை, சாதாரண உப்புதான். இதைப்போலவே 100கி. ஈஸ்ட்டை 20-30 ரூபாய்க்குள் வாங்கிவிடமுடியும்; ஆனால் 5 மடங்கு அதிகமாக விலை காட்டுகிறார்கள்.

ஆய்வகத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் சோதனைக்குழாய்களையும் தரம் குறைவாக வாங்கி அதிகக் கணக்கு காட்டுகிறார்கள். இதனால் குறைந்த அளவு வெப்பநிலையிலேயே சோதனைக்குழாய்கள் வெடித்து உடைந்துபோகின்றன. ஆய்வகப்பொருட்கள், கருவிகள் கொள்முதல் செய்வதில் முறைகேடுகள் நடக்கிறது. இதைக் களைவது அவசியமானது.

இதேபோல பள்ளிக்கு வேண்டிய நூல்களைவிட சம்பந்தமில்லாத புத்தகங்களை வாங்குமாறு கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். தரமான கலைக்களஞ்சியம், பல்வேறு துறைசார்ந்த என்சைக்ளோபீடியாக்கள், அறிவியல் அறிஞர்களைப் பற்றிய புத்தகங்களைப் படிக்க மாணவர்களுக்கு வாய்ப்பில்லாமல் போகிறது. பள்ளி இருக்கும் ஊர் அளவில் இதற்காக கமிட்டிகளை அமைத்து, மாணவர்களுக்குத் தேவையான புத்தகங்களை வாங்க மட்டுமே நிதி ஒதுக்கவேண்டும்.

அண்மைக்காலமாக அரசுப் பள்ளிகளில் பல்வேறு சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தனியார் பள்ளிகளைப் பார்த்து சூடுபோட்டுக்கொள்வதாகவும் போலியான விளம்பரமாகவே யதார்த்தத்தில்  இந்த முயற்சி இருக்கிறது. இதைவிட வழக்கமான வகுப்புகளை ஒழுங்காக நடத்துமாறு பார்த்துக்கொண்டாலே மாணவர்கள் சிறப்பாகப் படிக்கமுடியும்” என விவரிக்கிறார், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியரும் தொல்லியல் ஆய்வாளருமான ஆ. மணிகண்டன்.

அண்மைக்காலமாக பள்ளிக்கல்வித் துறையின் சில முடிவுகளை வரவேற்றபோதும், சில முடிவுகள் தேர்வை மையமாகக்கொண்டதாகவே இருக்கிறது என தாங்கலாகச் சொல்கிறார், முதல் தலைமுறை மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்பு இயக்கமான, மதுரை லிட்டில்ஸ் குழந்தைகள் மையத்தின் பொறுப்பாளர், பர்வத வர்த்தினி.

”குஜராத்தில் பள்ளி இறுதித் தேர்வில் படித்த மாணவன், என்ன ஆவாய் என்று கேட்டதற்கு, சமணத் துறவியாகப் போகிறேன் என்று சொல்லியிருக்கிறான் என்றால், கல்வித்துறை எப்படி இருக்கிறது என்பதைப் பார்த்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு வகுப்பிலும் நுழையும் மாணவர்களின் கற்றல்திறனை ஆசிரியர்கள் சோதித்து, அவர்களின் அடைவுத்திறனை மதிப்பிட்டு, அதன்படி கல்வித்திறனை அதிகப்படுத்தவேண்டும்.

அதாவது நான்காவது மாணவனுக்கு கூட்டல், கழித்தல் நன்றாகத் தெரிந்திருக்கவேண்டும் என்றால் எல்லாருக்கும் இது தெரிந்திருக்கும் எனச் சொல்லமுடியாது. தெரியாத மாணவர்களுக்கு அதைப் புரியவைப்பதில் ஆசிரியர் ஈடுபடவேண்டும். தேர்வு என்பது மாணவர்களின் கற்றல்திறனை மதிப்பிடுவது என மட்டும் பார்க்காமல், ஆசிரியர்களின் கற்பித்தல் திறனையும் சோதிப்பதாக இருக்கக்கூடிய முறையைக் கொண்டுவர வேண்டும். அப்படி அமையும்போது ஏற்கனவே செயல்வழிக் கற்றல் முறையின் மூலம் புகுத்தப்பட்ட இனிய கல்விமுறையானது அர்த்தமுள்ளதாக அமையும். குழந்தைகள் ஆர்வமாகக் கற்பார்கள். புதிய உலக சூழலில் வளரிளம் பருவத்தினருக்கு ஏற்பட்டுள்ள மாற்றங்களைச் சமாளிக்கும் திறனை ஆசிரியர்களிடம் ஊட்டவேண்டும். 8 முதல் 12 வகுப்புவரை படிக்கும் மாணவர்களின் புதிய உளவியல் சிக்கல்களைச் சமாளிப்பதற்கு, கட்டாயமாக ஆசிரியர்களைத் தயார்செய்யவேண்டும். பெண் குழந்தைகளின் இடைநிற்றலுக்கு முக்கிய காரணம், முன்கூட்டியே திருமணம் செய்துவைப்பது.


கல்விகற்ற பெண்களின் குழந்தைகள் பள்ளியிலிருந்து இடையில்நிற்பது குறைவாக இருப்பது, கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் தஞ்சையில் நடந்த 18 குழந்தைத் திருமணங்களை அவர்களுடன் படித்த சக மாணவர்கள், குழந்தைகள் உதவிமையத்துக்குத் தெரிவித்து நிறுத்தியிருக்கிறார்கள். எனவே பெண்பிள்ளைகளின் கல்வியை உறுதிப்படுத்துவதில் கல்வித்துறை புதிய வழிமுறைகளைக் கையாளவேண்டும்” என கல்வித்துறையின் கடமைகளைப் பட்டியலிடுகிறார், பர்வத வர்த்தினி.

தகுதியில்லாத 44 பல்கலை., மீண்டும் ஆய்வு செய்ய உத்தரவு

நிகர்நிலை பல்கலையாக செயல்பட தகுதியற்றவை என கூறப்பட்ட, 44
பல்கலைக்கழகங்களில், மீண்டும் ஆய்வு நடத்த, பல்கலை மானிய கமிஷனுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

நாடுமுழுவதும், நிகர்நிலை அந்தஸ்து வழங்கப்பட்ட, 126 பல்கலைகள், அதற்கான தகுதியுடன் செயல்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்ய, டாண்டன் கமிட்டியை, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், 2009ல் அமைத்தது. இந்த கமிட்டி, 126 பல்கலைகளில் ஆய்வு செய்து, 44 பல்கலைகள், நிகர்நிலை பல்கலையாகச் செயல்பட தகுதியற்றவை என, தெரிவித்தது. மேலும், 44 பல்கலைகளில் பல குறைபாடுகள் உள்ளதாக தெரிவித்தது.

தகுதியற்றவை என கூறப்பட்ட, 44 பல்கலைகளுக்கு வழங்கப்பட்ட, நிகர்நிலை அந்தஸ்தை ரத்து செய்யும்படி, டாண்டன் கமிட்டி பரிந்துரைத்தது. இதை எதிர்த்து சில பல்கலைகள், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இப்போது, இந்த வழக்குகள் விசாரணையில் உள்ளன.


இந்நிலையில், டாண்டன் கமிட்டி, தகுதியற்றவை என அறிவித்த, 44 பல்கலைகளிலும் மீண்டும் ஆய்வு நடத்த, யு.ஜி.சி., எனப்படும், பல்கலை மானிய குழுவுக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.

ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வில் சாதித்துக் காட்டிய சமோசா விற்பவரின் மகன்!

நாட்டின் பல்வேறு இடங்களில் இருக்கும் இந்திய தொழில்நுட்ப கழகமான ஐ.ஐ.டியில் சேர்ந்து படிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜெ.இ.இ (JEE)
தேர்வுகள் நடத்தப்படும். இந்த ஆண்டு நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

இதில், ஹைதராபாத்தைச் சேர்ந்த சமோசா விற்கும் சுப்பா ராவ்வின் மகன் மோகன் அப்யாஸ், அகில இந்திய அளவில் 64-வது இடத்தைப் பிடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகிறார்.

இதுகுறித்து அப்யாஸ், 'நான் முதல் 50 இடங்களுக்குள் வந்துவிடுவேன் என்று நினைத்தேன். அதனால், முடிவுகள் வெளியானவுடன் கொஞ்சம் ஏமாற்றம் அடைந்தேன். ஆனால், இப்போது கொஞ்சம் சந்தோஷமாகவே உணர்கிறேன். என் ஆதர்ச நாயகன் அப்துல்கலாம்தான்' என்று பெருமை ததும்ப பேசும் இந்த சாதனை நாயகன் தன் வெற்றிக்குக் காரணம் பெற்றோர்களும் ஆசிரியர்களுமே என்கிறார்.


இதுகுறித்து அப்யாஸின் தந்தை ராவ், 'எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவன் ஒரு நாளைக்கு 10 மணி நேரம் வரை படிப்பான். அவன் 10-வது வகுப்பில் படிக்கும் வரை விற்பனைக்குத் தேவையான சமோசாக்களை செய்வதற்கு உதவியாக இருப்பான்.' என்று நெகிழ்ச்சியாக தன் மகனின் வெற்றி குறித்து பேசினார்.

ஆசிரியர்களுக்கு ஆதார் அட்டை கட்டாயம்... இல்லாவிட்டால் சம்பளம் கிடையாதாம்

உத்தரப்பிரதேசத்தில் அரசு பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் ஜூலை மாதம் முதல் கண்டிப்பாக ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும், அவ்வாறு ஆதார் அட்டை இல்லாத ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் முதல்வராக யோகி ஆதித்யநாத் வந்தபின் பல அதிரடியான முடிவுகளை எடுத்து வருகிறார். கல்வித்துறையில் சீர்திருத்தம் கொண்டுவர பள்ளி விடுமுறை நாட்களைக் குறைத்து, வேலை நாட்களை நீட்டித்தார். தலைவர்களின் பிறந்த, மறைந்த நாட்களில் விடுமுறையை ரத்து செய்து, அந்த நாட்களில் அந்த தலைவர்கள் குறித்து அறியும் வகையில் பள்ளி நடத்த உத்தரவிட்டார்.

இந்நிலையில், மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும், வருகைப்பதிவு சரியாக இருக்க வேண்டும் என்ற திட்டமிட்டு, அனைத்து ஆசிரியர்களும் ஆதார் அட்டை பெறுவதை முதல்வர் ஆதித்யநாத் கட்டாயமாக்கியுள்ளார்.

இதுகுறித்து கல்வித்துறை அமைச்சர் அனுபமா ஜெய்ஸ்வால்  சனிக்கிழமை அதிகாரிகளுடன் லக்னோ நகரில் ஆய்வுக்கூட்டம் நடத்தினார்.அப்போது அவர் கூறுகையில், “

அரசுதொடக்க பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் மட்டும் 4.95 லட்சம் ஆசிரியர்கள் 1.68 லட்சம் பள்ளிகளில் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் ஆதார் அட்டையை ஜூலை மாதத்துக்குள் பெற்று, இதை வங்கிக் கணக்கோடு இணைத்து இருப்பது கட்டமயாகும். இந்த ஆதார் அட்டைதான் ஆசிரியர்களுக்கு அடையாள அட்டையாகவும் பயன்படப்போகிறது.

அவ்வாறு ஆதார் அட்டையை பெறாமல், ஆதார் எண்ணை வங்கிக்கணக்குடன் இணைக்காமல் இருக்கும் ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் வழங்கப்படாது. ஆசிரியர்கள் மத்தியில் வெளிப்படைத்தன்மை, பள்ளிக்கு சரியாக வருகை தருகிறார்களா என்பதை கண்டறிய ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான ஆசிரியர்களுக்கு ஆதார் எண் வைத்திருப்பார்கள், அவ்வாறு இல்லாதவர்களுக்கு பள்ளிகளில் சிறப்பு ஆதார் முகாம் நடத்தப்படும் அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புவரை படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை வழங்கப்பட்டு, அது பள்ளியுடன் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும்.


தொடக்க மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் 1.78 கோடி மாணவர்கள் படிக்கின்றனர். இதில் 30 சதவீதம் மாணவர்களுக்கு ஆதார் வழங்கப்பட்டுள்ளது. புறநகர் மற்றும் தகவல் தொடர்பில்லாத பகுதிகளில் பயிலும்  மாணவர்களுக்கு ஆதார் அட்டை பெறுவதில் சிரமங்கள் உள்ளன. அவர்களுக்கு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

சென்னை டி.பி.ஐ வளாகத்தில் தீ விபத்து!



சென்னையில் உள்ள டி.பி.ஐ வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில்
சுமார் 15 பழைய வாகனங்கள் தீயில் கருகி சேதமடைந்துள்ளன.

சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ளது டி.பி.ஐ வளாகம். இங்கு கல்வித் துறை அலுவலகங்கள் மற்றும் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களும் இங்கு வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே இன்று சென்னை டி.பி.ஐ வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்தவிபத்தில் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 15 பழைய வண்டிகள் சேதமடைந்துள்ளன. இதையடுத்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயை அணைக்கும் பணியில் தற்போது தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. தீ பரவுவது கட்டுப்படுத்தப்பட்டதால், மாணவர்களுக்கு வழங்கவேண்டிய புத்தகங்கள் சேதமின்றி காப்பற்றப்பட்டதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது

அரசு பள்ளிகளுக்கு இணையதளம் கல்வி மேம்பாட்டுக்கு திட்டம்

அரசுபள்ளிகளின் செயல்பாட்டை, பொதுமக்கள் அறியும் நோக்கில், பிரத்யேக இணையதளம் உருவாக்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பள்ளிக்
கல்வித் துறையில், பல அதிரடி மாற்றங்கள் நடக்கின்றன.
மத்திய அரசு நிதியில், 'ஸ்மார்ட் கிளாஸ் ரூம்' அமைக்கவும், கல்வித் துறை முனைப்பு காட்டி வருகிறது. அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டமான, ஆர்.எம்.எஸ்.ஏ., சார்பில், அரசு பள்ளிகளுக்கு பிரத்யேகஇணைய தளம் உருவாக்கவும், உயர் கல்வி குறித்த வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தவும், நிதி ஒதுக்கி, மத்தியஅரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதை சாதகமாக்கி, அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த, கல்வித் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். முதல்கட்டமாக, மாவட்ட வாரியாக உள்ள, பழமை வாய்ந்த, அதிக தேர்ச்சி விகிதம் கொண்ட பள்ளிகளுக்கு, முன்னுரிமை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆர்.எம்.எஸ்.ஏ., உதவி திட்ட அலுவலர் ஒருவர் கூறியதாவது:மத்திய அரசின் நிதியை முழுமையாக பயன்படுத்தி, அரசு பள்ளிகளை தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளி வாரியாக பிரத்யேக இணையதளம் உருவாக்கும் போது, கல்வி சார் செயல்பாடுகளை எளிதில் விளம்பரப்படுத்தலாம். மாணவர் சேர்க்கை அதிகரிக்கவும் இத்திட்டம் உதவி புரியும்.


மேலும், நலத்திட்ட பொருட்கள் வினியோகம், பொதுத் தேர்வு பட்டியல் தயாரிக்க, மாணவர்களின் விபரங்கள் திரட்டுவதிலும் சிக்கல் இருக்காது. இதற்கான முதற்கட்ட பணிகள், விரைவில் துவங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

நோட்டரி பப்ளிக் அட்டஸ்டேஷன் தேவையில்லை என்பதை அறிவீர்களா?

பள்ளி, கல்லூரி, வேலை வாய்ப்பு என எதற்கு விண்ணப்பித்தாலும், சான்றிதழ் நகல்களுக்கு அட்டஸ்டேஷன் (சான்றொப்பம்) பெற்று அனுப்புவதை வழக்கமாக வைத்திருக்கிறோம். விண்ணப்பத்தைப் பெறுபவர்களுக்கு
அட்டஸ்டேஷன் அவசியம் என்கிறார்கள். இதைக் காலம் காலமாகக் கடைப்பிடித்து வரும் வழக்கம் என்றாலும், சட்டப்படி அட்டஸ்டேஷன் அவசியமில்லை. இந்த விவரத்தைப் பிரதமரின் அலுவலக இணையத்தளத்திலேயே வெளியிட்டு இருக்கிறார்கள்.

அட்டஸ்டேஷன் 

பெற்றோர்களும், பிள்ளைகளும் அட்டஸ்டேஷன் வாங்குவதற்குப் பல அரசு அலுவலகங்களுக்கு ஏறி இறங்கி அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரை (Gazetted Officer) தேடி அலைய வேண்டி இருக்கிறது. பெரும்பாலும், கிராமப்புறங்களில் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர்கள் இருக்க மாட்டார்கள். நகரப்பகுதியில்தான் இருப்பார்கள். சிலர் அட்டஸ்டேஷன் போடுவதற்கு நூறு ரூபாயில் இருந்து ஐந்நூறு ரூபாய் வரை வாங்குகிறார்கள். ஆனால், அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம்தான் அட்டஸ்டேஷன் வாங்குகிறோம் என்பதற்கான எந்த நடைமுறையும் இல்லை. இப்போது அரசு அலுவலகங்களில் ஒய்வுப்பெற்றவர்கள் கூட அட்டஸ்டேஷன் போடுகிறார்கள். ‘உண்மையில் அட்டஸ்டேஷன் அவசியமா?’ என்ற கேள்வியோடு வருமானவரித் துறையின் மூத்த அதிகாரியான பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி சந்தித்தோம்.

"ஜெராக்ஸ் மிஷின் வருவதற்கு முன்பு, சான்றிதழ்களின் விவரங்களை டைப்ரைட்டிங் செய்து அதனை விண்ணப்பத்துடன் இணைக்கும் பழக்கம் இருந்தது. அப்போது டைப்ரைட்டிங் செய்ததில் எந்தப் பிழையும் இல்லை என்பதற்கான சான்றொப்பமிடும் பழக்கம் இருந்தது. ஆனால், தற்போது ஜெராக்ஸ் மிஷின் மூலச் சான்றிதழை அப்படியே நகலேடுத்து தருகிறது. ஆனால் இன்னமும் டைப்ரைட்டிங் காலத்தில்தான் இருக்கிறோம்.

அரசிதழில் இடம்பெற்ற அலுவலர்களைத்தான் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர்கள் (Gazetted Officer) என்று அழைப்பார்கள். மத்திய அரசு அலுவலகங்களில் 'குரூப் பி' நிலையில் இருக்கும் அதிகாரிகள் அட்டஸ்டேஷன் செய்யலாம். கிராமப்புறங்களில் போஸ்ட் மாஸ்டர், வங்கி கிளை மேலாளர் என எல்லோரும் சான்றொப்பம் இடுவார்கள். ஆனால் அவர்கள் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர்கள் கிடையாது. அவர்களுக்குத் தெரியாமல் சான்றொப்பம் செய்து வருகிறார்கள்.

அட்டஸ்டேஷன் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தியாரோ ஒருவர் சான்றொப்பமிடுவதை நம்பும் அலுவலகங்கள் விண்ணப்பிக்கும் நபர் சான்றொப்பமிடுவதை நம்ப மறுப்பது அபத்தமாக இருக்கிறது. பள்ளியில் சேரும்போதோ அல்லது வேலைக்குச் சேரும்போதோ மூலச்சான்றிதழை (Original Certificates) பார்த்துவிட்டுதான் சேர்த்துக்கொள்கிறார்கள். இவ்வாறு இருக்கும்போது பிரயோசனமே இல்லாத விஷயத்தை வைத்துக்கொண்டு மக்களைக் கஷ்டப்படுத்துகிறார்கள். இதனால் அலைச்சலும், பண விரயமும் ஏற்படுகிறது. ஒரு ஜனநாயக நாட்டில் சான்றிதழ்களைப் பார்த்து சான்றொப்பமிடுவதற்கு கைகட்டி நிற்பதும், அதற்கு பணம் கொடுப்பதும் தேவையற்றது.

இதனைஉணர்ந்த பிரதமர் 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் 'சான்றொப்பமிடும் வழக்கத்தையும், நோட்டரி பப்ளிக்-யிடம் உறுதிமொழி பத்திரங்கள் (Affidavits) பெறுவதையும் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக சுயசான்றொப்பமிடும் (Self Attestation) வழக்கத்தைக் கொண்டு வாருங்கள்' என்று அறிவுறுத்தினார். பிரதமரின் ஆலோசனையை ஏற்று மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்தத்துறை அனைத்து மாநில தலைமைச்செயலாளர்கள், துறைச்செயலர்கள் அனைவருக்கும் அட்டஸ்டேஷன் மற்றும் நோட்டரி பப்ளிக் உறுதிமொழி பத்திரங்கள் தேவையில்லை. சுயசான்றொப்பம் போதுமானது' என்று சுற்றறிக்கையை அனுப்பியது. ஆனால், இன்னமும் அட்டஸ்டேஷன் மற்றும் நோட்டரி பப்ளிக் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

ஒருவர் மூலச்சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை மறைத்தால் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம். இதை நிர்வாக சீர்திருத்தக்குழுவும் வலியுறுத்தி இருக்கிறது.விண்ணப்பம் பெறுபவர்கள் பொதுமக்களின் கஷ்டங்களை உணர்ந்தும், தேவையில்லாத வழக்கத்தைக் கைவிடுவது நல்லது" என்கிறார் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.


நாம்தொழில்நுட்பத்தில் முன்னேறி இருந்தாலும் இன்னமும் பழைய முறையைக் கண்மூடித்தனமாக பின்பற்றுவது முன்னேற்றாமல் இருப்பதையே சுட்டிக்காட்டுகிறது. இளைஞர்களே, விண்ணப்பிக்கும் போது சுயசான்றொப்பமிடும் (Self Attestation) மட்டும் வழக்கத்தில் கொள்ளுங்கள்

11/6/17

நீட் தேர்வு வழக்கு - சிபிஎஸ்இயை திணறடித்த உயர்நீதிமன்றத்தின் அதிரடி கேள்விகள்!!!

சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலிருந்து அதிக கேள்விகள் கேட்கபட்டதின் காரணம் என்ன எனவும், பிளஸ் டூ முடிந்தவுடன் நீட் தேர்வு நடத்தப்படாதது ஏன்? எனவும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.
மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்காக, மே 7ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டது. சிபிஎஸ்இ நடத்திய தேர்வுகுறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.
இதுகுறித்து நீதிமன்றங்களில் வழக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அதன்படி நீட் மதிப்பெண்ணுடன்  2மதிப்பெண்ணை சேர்க்க கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலிருந்து அதிக கேள்விகள் கேட்கபட்டதின் காரணம் என்ன?
எனவும், பிளஸ் டூ முடிந்தவுடன் நீட் தேர்வு நடத்தப்படாததற்கு காரணம் என்ன? எனவும் சிபிஎஸ்இ க்கு அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பியது.
மேலும் ஒரே பாடத்திட்டம் இல்லாத நிலையில் நீட் தேர்வை எதிர்கொள்வது எப்படி? கல்வித்தரம் இல்லாத நிலையில் நீட்தேர்வை அனைவரும் எதிர்கொள்வது எப்படி? எனவும் கேள்விகளை எழுப்பினர்.
இதையடுத்து நீட் மதிப்பெண்ணுடன்  2 மதிப்பெண்ணை சேர்க்க கோரிய வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்தவதாக உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.

ரஷியாவில் குறைந்த செலவில் மருத்துவம் படிக்க.. சென்னையில் கல்வி கண்காட்சி இன்று(ஜூன் 10) மற்றும் நாளை(ஜூன் 11).!

தென்னிந்திய ரஷிய கூட்டமைப்பின் துணை தூதரகம் மற்றும் ரஷிய கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கைக்கான நிறுவனமான ஸ்டடி அப்ராட் ஆகியவை இணைந்து சென்னை ஆழ்வார்ப்பேட்டை, கஸ்தூரி ரங்கா சாலையில் உள்ள ரஷிய கலாசார மையத்தில் இன்று (சனிக்கிழமை) மற்றும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ரஷிய கல்வி கண்காட்சி நடத்துகிறது.
இதில் மருத்துவம், என்ஜீனியரிங் மற்றும் ஏவியேஷன் கல்வியை கற்பிக்கும் முன்னணி ரஷிய அரசு கல்வி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இந்த இலவச கண்காட்சி 10, 11ந் தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். ரஷியாவின் பல்வேறு மருத்துவ கல்வி நிலையங்கள் 500 மருத்துவ படிப்பிற்கான இடங்களை இந்திய மாணவர்களுக்கு 30 சதவீதம் வரை சலுகை கட்டணங்களில் வழங்க உள்ளன.இந்த கண்காட்சி குறித்து ரஷிய கலாசார மையத்தின் இயக்குனர் மைக்கேல் இயக்குனர் மைக்கேல் ஜே. கோர்படோவ் கூறுகையில் பிளஸ்2 மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் பட்டப் படிப்பு சான்றிதழ்களை சமர்பிக்கும் மாணவர்களுக்கு இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை கடிதம் இக்கண்காட்சியிலேயே வழங்கப்படும். ரஷிய கல்வி நிறுவனங்களில் அதிக சலுகை கட்டணங்களில் அளிக்கப்படும் படிப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்த கண்காட்சியின் நோக்கம் என்றார்.
நீட் நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டு மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை முறையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ள இன்றைய சூழலில் இந்த கல்வி கண்காட்சி இந்திய மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி பயில வழிவகுக்கும் அரிய வாய்ப்பாக அமையும் என்று ஸ்டடி அப்ராட் கல்வி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை முதல் திருத்திய சம்பளம்

நாடு முழுவதும் உள்ள, 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஏழாவது சம்பள கமிஷன் நடைமுறைக்கு வந்து, 18 மாதங்கள் முடியும் நிலையில், டி.ஏ., உள்ளிட்ட திருத்தப்பட்ட படிகளுடன் கூடிய முழு சம்பளம், ஜூலை மாதம் முதல் கிடைக்கும்.நாடு முழுவதும் உள்ள, 49 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும், 51 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கான, ஏழாவது சம்பள கமிஷன் அறிவிக்கப்பட்டது. கடும் அதிருப்தி : 'கடந்த, 2016, ஜனவரி மாதத்தில் இருந்து இது வழங்கப்படும்' என, கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளம், 16 சதவீதம், இதர படிகள், 63 சதவீதம் என, மொத்தம், 23.55 சதவீத உயர்வு அறிவிக்கப்பட்டது.பென்ஷன், 23.6 சதவீதம் உயர்த்தப்பட்டது.அடிப்படை சம்பளம் உயர்த்தப்பட்டாலும், டி.ஏ., மற்றும் எச்.ஆர்.ஏ., எனப்படும் வீட்டு வாடகைப் படி ஆகியவை குறைந்தது. இது, ஊழியர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.அதனால், படிகள் தொடர்பாக ஆய்வு செய்ய, மூத்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரி அசோக் லாவாசா தலைமையிலான ஒரு குழு அமைக்கப்|பட்டது. இந்தக் குழு தன் பரிந்துரையை, இந்த ஆண்டு, ஏப்ரல், 27ல் மத்திய அரசுக்கு சமர்ப்பித்தது. இந்தக் குழுவின் பரிந்துரைகள் குறித்து, மத்திய கேபினட் செயலர் தலைமையிலான, அரசு செயலர்கள் அடங்கிய உயர் அதிகாரக் குழு ஆய்வு செய்து, தன் இறுதி பரிந்துரையை அளித்து உள்ளது.

49 லட்சம் ஊழியர்கள் : வரும் வாரத்தில், இது குறித்து மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, படிகள் உயர்வு குறித்து அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, வரும், ஜூலை மாதம் முதல், திருத்தப்பட்ட படிகளுடன் கூடிய புதிய சம்பளம், நாடு முழுவதும் உள்ள, 49 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அண்ணா பல்கலை.யில் புதிய பாடத் திட்டம்: இந்தாண்டு நடைமுறைக்கு வருவதில் சிக்கல்

அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்விக் குழுவே இன்னும் அமைக்கப்படாததால், பொறியியல் கல்லூரிகளுக்கான புதிய பாடத் திட்டம் இந்தக் கல்வியாண்டில் அமலுக்கு வருமா என கேள்வி எழுப்புகின்றனர் பேராசிரியர்கள்.
அரசு விதிகளின்படி தொழில்நுட்ப வளர்ச்சி, தொழில் நிறுவனங்களின் தேவை ஆகியவற்றின் அடிப்படையில் பொறியியல் படிப்புகளுக்கான பாடத் திட்டம் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றியமைக்கப்பட வேண்டும். இளநிலை, முதுநிலை பொறியியல் பட்டப் படிப்புகளுக்கு இது பொருந்தும்.
இந்த விதியின்படி, நடப்பு 2017-18 கல்வியாண்டுக்கு இளநிலை பொறியியல் படிப்புகளுக்கு புதிய பாடத் திட்டத்தை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்ய வேண்டும்.பல்கலைக்கழகத்தின் கீழ் இணைப்பு பெற்றுள்ள 523 பொறியியல் கல்லூரிகளிலும் இந்தப் பாடத் திட்டத்தைத்தான் பின்பற்ற வேண்டும்.
இதற்கென பல்கலைக்கழகம் சார்பில் அமைக்கப்பட்ட பாடத் திட்டக் குழு, புதிய பாடத் திட்டத்தை உருவாக்கும் பணியை ஏற்கெனவே நிறைவு செய்துவிட்டது.
இதில், தொழில் நிறுவனங்களின் இன்றைய தேவைக்கேற்ப பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. தொழில் நிறுவனப் பயிற்சி உள்ளிட்டவை விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் ஏற்கெனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ள விருப்பப் பாடத் தேர்வு முறை (சி.பி.சி.எஸ்.), 2017-18 கல்வியாண்டு முதல் 523 இணைப்புக் கல்லூரிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என பல்கலைக்கழகத்தின் கல்வித் திட்ட இயக்குநர் கீதா கூறியிருந்தார்.
கல்விக் குழு அமைக்கப்பதில் தாமதம்: இந்தப் புதிய பாடத் திட்டத்தை, பல்கலைக்கழகத்தின் கல்விக் குழு (Academic Council) ஒப்புதல் பெற்ற பிறகுதான், நடைமுறைக்குக் கொண்டு வர முடியும்.
அதாவது, முதலில் கல்விக் குழுவில் அந்தப் புதிய பாடத் திட்டம் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட வேண்டும். பின்னர், பல்கலைக்கழகத்தின் ஆட்சிக் குழு அதற்கு இறுதி ஒப்புதல் அளிக்கும். ஆனால், அண்ணா பல்கலைக்கழகத்தில் இதுவரை கல்விக் குழுவே அமைக்கப்படவில்லை. ஆட்சிக் குழுவும் முழுமையாக அமைக்கப்படவில்லை.
இந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.
எனவே, புதிய கல்வித் திட்டத்துக்கு ஒப்புதல் பெற முடியாது என்பதால், 2017-18 கல்வியாண்டில் பொறியியல் கல்லூரிகளுக்கு புதிய பாடத் திட்டம் வருவது சந்தேகம்தான் என்றனர் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள்.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக கல்வித் திட்ட உயர் அதிகாரி கூறியது:
பல்கலைக்கழகத்துக்கு கல்விக் குழு அமைப்பதற்கான பெயர்கள் இறுதி செய்யப்பட்டு ஒப்புதலுக்காக ஏற்கெனவே அனுப்பப்பட்டுவிட்டன. விரைவில் ஒப்புதல் கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு, உடனடியாக புதிய கல்வித் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு அதனை நடைமுறைக்கு கொண்டுவந்துவிட முடியும் என்றார்.

அரசுப் பள்ளியில் படிக்கிறேன்னு சந்தோஷமா சொல்லு!" மகளுக்கு அப்பாவின் நம்பிக்கை!

தனியார் பள்ளியில் அட்மிஷன் கிடைக்கவில்லை, கட்டணம் அதிகமாக இருக்கிறது... எனப் பல காரணங்களால் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்கும் சூழல் பெற்றோர்களுக்கு ஏற்படுவதுண்டு. தனியார் பள்ளியில் சேரப்போகிறோம் எனும் ஆசையில் இருக்கும் பிள்ளைகள் அரசுப் பள்ளி என்றதும் சோர்ந்துவிடுவார்கள். அப்படித்தான் மானாமதுரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் பூங்குழலியும் சுணக்கமானார். பூங்குழலியின் அப்பா மருதுபாண்டியனுக்கு இது தெரியவந்தது. உடனே அவர் தன் மகளுக்கு புதிய நம்பிக்கையும் கொடுத்தார். அது குறித்து அவரிடம் பேசினோம். (மேலே உள்ள படத்தில்: மருதுபாண்டியன் மற்றும் பூங்குழலி)
"நான் சொந்தமாக பிஸினஸ் பண்ணிட்டு இருக்கேன். நானும் என் மனைவியும் அரசுப் பள்ளியிலதான் படிச்சோம். நல்லாத்தான் இருக்கோம். எங்களோட மூத்த மகள் பூங்குழலி, தனியார் பள்ளியிலதான் படிச்சா. ஸ்கூலுக்குப் போகனும்னா காலையில ஏழு மணிக்கே பஸ் ஸ்டாப்ல ரெடியா இருக்கணும். அப்படின்னா எத்தனை மணிக்கு எழுந்திருச்சி, தயாராகணும்னு பார்த்துக்கோங்க... அதே போல சாயந்தரம் அவ வர்றதுக்கு ஐந்தரை, ஆறு மணியாயிடும். ரொம்ப டயர்டாத்தான் வருவா. அப்பறம் ஹோம் வொர்க்கும் நிறைய தந்திருப்பாங்க. அதையெல்லாம் முடிச்சிட்டு தூங்கத்தான் நேரம் இருக்கும்.
பூங்குழலி மேடையில நல்லா பேசுவா. நிறைய போட்டிகளில் கலந்துப்பா. நாள் முழுக்க பிஸியாகவே இருந்தா கலை சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்த முடியாது இல்லையா... அவளுக்கு விருப்பமான விஷயங்களையும் செஞ்சாதானே ஸ்கூலேயும் சந்தோஷமா இருப்பா. அதனாலதான் எங்க ஊரு அரசுப் பள்ளியிலேயே சேர்த்துட்டேன். இந்தப் பள்ளி எங்க வீட்டுலேருந்து நடந்து போற தூரம்தான். அதனால் நிறைய நேரம் கிடைக்கும். அரசுப் பள்ளியில சேர்க்கப்போறதை முதலில் என் மனைவிகிட்ட சொல்லி புரிய வைச்சேன். பிறகு, பூங்குழலியிடம் சொன்னேன். அவ 'ஓகே'னு சொன்னப்பறம்தான் இந்தப் பள்ளியில சேர்த்தேன். எங்களோட இரண்டாவது பொண்ணு கயல்விழி இந்த வருஷம் தனியார் பள்ளியில அஞ்சாவது படிக்கிறா. அவளையும் அடுத்த வருஷம் பூங்குழலி படிக்கிற பள்ளியிலேயே சேர்க்கப்போறேன்.
முதல் நாள் ஸ்கூலுக்குப் போயிட்டு வந்த பூங்குழலியிடம் 'ஸ்கூல் எப்படி இருக்கு'னு கேட்டேன். 'நல்லா இருக்குப்பா, ஆனா டாய்லெட்தான் சுத்தமாக இல்லை. மத்தப்படி சூப்பரா இருக்கு'னு சொன்னாள். 'சரி, உனக்கு நிஜமாகவே இந்த ஸ்கூல் பிடிச்சிருக்கா'னு கேட்டேன். அவள் தயங்கிட்டே, 'பிடிச்சிருக்குப்பா, ஆனா, யாராவது எங்க படிக்கிறனு கேட்டா, ஃபேமஸான ஸ்கூலில் படிச்சிட்டு இப்ப கவர்மெண்ட் ஸ்கூலில் படிக்கிறேனு சொல்றதுக்கு கூச்சமாக இருக்குப்பா'னு சொன்னாள்.


அவளோட பிரச்னையைப் புரிஞ்சிகிட்டேன். 'நீ நினைக்கிறது தப்பில்ல, ஏன்னா, பிரைவேட் ஸ்கூலில் படிக்கிறதுதான் பெருமையான விஷயம்னு எல்லார் மனசுலேயும் இருக்கு. அதுதான் தப்பு. இப்ப கவர்மென்ட் காலேஜ்ல டாக்டருக்கு படிக்கிறதுக்கு சீட் கிடைச்சா கூச்சப்படுவியா?னு கேட்டேன். அவள் இல்லைனு தலையாட்டினாள். 'சரி, கவர்மெண்ட் ஆபிஸில் வேலை கிடைச்சா அதை மத்தவங்க கிட்ட சொல்லும்போது கூச்சப்படுவியா'னு கேட்டேன். அதற்கு அவள், 'இல்லப்பா சந்தோஷமா சொல்லுவேனு' சொன்னாள். 'அதுபோலத்தான் குழலி இது. கவர்மென்ட் ஸ்கூலில் படிக்கிறதையும் சந்தோஷமா சொல்லு. யாராவது உங்கிட்ட கவர்மென்ட் ஸ்கூலில் படிக்கிறதைப் பத்தி நக்கலாக விசாரிச்சா, உங்களுக்கு கவர்மென்ட் வேலைக் கிடைச்சாலும் இப்படித்தான் நினைப்பீங்களானு தைரியமா கேளு'னு சொன்னேன். அவளும் சிரிச்சிகிட்டே 'சரி'னு சொன்னாள்.  
பிரைவேட் ஸ்கூலில் பீஸ் கட்டலைனா வெளியில நிற்க வெச்சிடுவாங்க. அரசுப் பள்ளியில அப்படி இல்ல, புத்தகம், யூனிஃபார்ம்னு எல்லாம் கிடைக்கும். வசதி இருக்கிறவங்க, இல்லாதவங்கனு எல்லார் வீட்டிலேருந்து பிள்ளைகள் வருவாங்க. நல்லா பழகுவாங்க. நீயும் அவங்களோடு சந்தோஷமாப் பழகு. டீச்சரைப் பார்த்து பயப்படாமல் பேசு. இன்னைக்கு பெரிய வேலையில இருக்கிற தொண்ணூறு சதவீதம் பேர் அரசுப் பள்ளியில படிச்சவங்கதாம். அதனால அரசுப் பள்ளியில படிக்கிறதுல எந்தக் கூச்சமும் படாதே. உங்கூட படிக்கிற புள்ளைங்க யாராவது, அப்படி நினைச்சா நான் சொன்னதையெல்லாம் சொல்லு'னு முடிச்சப்ப, பூங்குழலி தெளிவாகிட்டாள். " என்றார் மருது பாண்டியன்.
புதிதாக சேர்ந்த பள்ளிக்கு புறப்பட்டுக்கொண்டிருந்த பூங்குழலியிடம் பேசினோம். "இந்த ஸ்கூல் எனக்குப் பிடிச்சிருக்கு அங்கிள். அந்த ஸ்கூலுக்கு போகும்போது காலையில ஆறு மணிக்கு எழுந்திருப்பேன். அவசரம் அவசரமாக கெளம்புவேன். இப்பவும் ஆறு மணிக்குத்தான் எழுந்திருக்கிறேன். மெதுவாக, ரிலாக்ஸா கெளம்பறேன். நானே நடந்து ஸ்கூலுக்குப் போயிடுறேனு சொன்னேன். அப்பாதான் ஒரு வாரம் மட்டும் நானே கொண்டு வந்து விடுறேனு சொன்னாங்க. ரெண்டே நாள்ல நிறைய ஃப்ரெண்ட்ஸ் கிடைச்சிட்டாங்க." என உற்சாகமாகச் சொல்கிறார்.
அரசுப் பள்ளி என்பது நமது அரசு நடத்தும் பள்ளி எனும் உணர்வு வந்தாலே இந்தக் கூச்சம் விலகிவிடும். தன் மகளுக்கு மிகச் சரியாக வழிகாட்டும் அப்பாவுக்கு வாழ்த்துகளைச் சொல்வோம்.

அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கிய குறிப்புகள்!!

1🕹. பசிக்கும்போது மட்டும் சாப்பிடுங்கள். தாகமெடுத்தால் தண்ணீர் குடியுங்கள். குளிர் பானங்களை தவிர்த்து விடுங்கள்.
2🕹. பசிக்கும் போது பயமில்லாமல் பிடித்த உணவை போதுமான அளவு சாப்பிடுங்கள். பசிக்கும் போது எந்த உணவு சாப்பிட்டாலும் அது இலகுவாக ஜீரணமாகிவிடும். உணவை நிதானமாக மென்று சாப்பிடுங்கள். டிவி பார்த்துக் கொண்டு சாப்பிடாதீர்கள்.
3🕹. தரையில் அமர்ந்து சாப்பிடுங்கள். உங்கள் கை விரல்களால் சாப்பிடுங்கள். கை இல்லாதவர்களுக்குத் தான் ஸ்பூன் தேவை. உங்கள் ஜீரணத்திற்கும் விரல்களுக்கும் தொடர்பு உள்ளது.
4🕹. இயற்கை உணவு மற்றும் பழங்களை தேவையான அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவுகளையும் தவிர்த்து விடுங்கள். விளம்பரம் செய்யப்படுவதை ஒருபோதும் வாங்காதீர்கள். 
5🕹. பசிக்கும்போது மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு உடற்பயிற்சி தேவையில்ல. 
6🕹. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள். விளையாட்டு சிறுவர்களுக்கு மட்டுமல்ல. 
7🕹. ஒரு நாளைக்கு 10 நிமிடமாவது தனிமையில் அமைதியாக இருந்து சிந்தியுங்கள். உங்கள் ஆற்றல் வெளிப்படும். அவ்வப்போது மனதுக்குள் சிறிது நேரம் பிரார்த்தனை செய்யங்கள் .
8🕹. டிவி பார்ப்பதை குறைத்துக் கொண்டு நிறைய நல்ல புத்தகங்களைப் படியுங்கள். பிள்ளைகளுக்கு நல்ல நிஷயங்களை சொல்லிக் கொடுங்கள்.
9🕹. குழந்தைகளிடம் Smart Phone களை கொடுக்காதீர்கள். தேவயற்ற விஷயங்களுக்காக Whatsup, Facebook போன்ற சமூக வலைதளங்களில் உங்கள் நேரத்தை வீனடிக்காதீர்கள்.
10🕹. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள். இரவு 10 மணிக்கு முன் தூங்கிவிடுங்கள். காலை 5 மணிக்குமேல் தூங்காதீர்கள்.
11🕹. தினம் 20 நிமிடங்கள் ரிலாக்ஸாக நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள். (உடற்பயிற்சிக்காக அல்ல மன அமைதிக்காக)
12🕹. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள். அவர்கள் பயணிக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு. அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம். உங்களுக்கு தேவையானது உங்களிடமே உள்ளது.
13🕹. எப்போதும் மனதில் நேர்மறையான எண்ணங்களை மேற்கொள்ளுங்கள். 
14🕹. கடுமையாக உழைக்காதீர்கள். உங்களால் முடிந்த அளவு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.
15🕹. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீனாக்காதீர்கள். உங்களைப் பற்றி புறம் பேசப்படுவதை பொருட்படுத்தாதீர்கள்.
16🕹. நீங்கள் விழித்திருக்கும் பொழுது உங்கள் தேவைகளைப் பற்றி நிறைய கணவு காணுங்கள். அதை செயல்படுத்தவும் முயற்சி செய்யுங்கள். 
17🕹. உங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை தானமாக கொடுத்து விடுங்கள். தேவை உள்ளவர்களுக்கு உதவி செய்யுங்கள்.
18🕹. கடந்த காலத்தை மறந்து விடுங்கள். முடிந்தது முடிந்தவையாக இருக்கட்டும். நிகழ் காலத்தில் வாழுங்கள். மகிழ்ச்சியும் மன அமைதியும் தானாக வரும்.
19🕹. குறுகிய கால இந்த வாழ்க்கையில் யாரையும் வெறுக்காதீர்கள். வெறுப்பு உங்களை தான் பாதிக்கும்.
20🕹. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள் சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.
21🕹. முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லிவிடுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே தீர்த்துவிடும்.
22🕹. வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும், வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, SMS மூலமாகவோ தொடர்பு கொண்டிருங்கள். இது உங்களுக்கும் அவர்களுக்கும் மன அமைதியையும், பரஸ்பர அன்பையும் மேம்படுத்தும்.
23🕹. மன்னிக்கப் பழகுங்கள். தேவையான நேரத்தில் தயங்காமல் மன்னிப்பும் கேளுங்கள். உங்கள் மனபாரம் நீங்கும்.
24🕹. 60 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள். அவர்களுக்கு உங்கள் அன்பு தான் முக்கியம். பணம் முக்கியமல்ல. 
25🕹. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள். எப்பொழுதும் உங்களைப் பற்றி நினைப்பது மாற்றவர்களின் வேலையல்ல.
26🕹. உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள். உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள். 
27🕹. உங்களின் நிறைவேறிய தேவைக்கு இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். நிறைவேறாத தேவைக்கு பிரார்த்தனை செய்யுங்கள்.
28🕹. உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் மட்டும்தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள். அவ்வப்போது உங்களிடம் உள்ள நல்லவைகளை நினைத்து பெருமிதம் கொள்ளுங்கள்.
29🕹. உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, அன்பை கொடுக்காதோ, நிம்மதியைக் கொடுக்காதோ அதை ஒதுக்கி விடுங்கள்.
30🕹. வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமல்ல. கவலைகளும், நோய்களும் கூட...
எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.
மலச்சிக்கல் இல்லாமல் எழுவதும், மனச் சிக்கல் இல்லாமல் தூங்குவதும் தான் ஆரோக்கியம்.
இதை கடைபிடியுங்கள் உங்கள் வாழ்கை ஆரோக்கியமாக இருக்கும். நன்றி!

TNPSC Group 2A Exam General Tamil Notes:

ஒருமை, பன்மை பிழை நீக்குதல்
டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழில் பிழை திருத்தம் என்ற பகுதியில் சந்திப்பிழையை நீக்குதல், ஒருமை பன்மை பிழைகளை நீக்குதல், மரபுப் பிழைகள், வழுவுச் சொற்களை நீக்குதல் பிறமொழிச் சொற்களை நீக்குதல் கேட்கப்படுகின்றன.
எது பிழை? எது சரி ?
1. கிருட்டிணன் - கிருட்டினன்
கிருஷ்ணன் என்ற ஆரியச் சொல்லைத் தமிழில் கிருட்டினன் என்று எழுதுவதே மரபு. கர்ணன் என்பது தமிழில் கன்னன் என்றே வரும். க்ருஷ்ணவேணி என்பது கிருட்ணவேணி என்று எழுதப்படும்.
2. சுவற்றில் எழுதாதே - சுவரில் எழுதாதே
சுவர் + இல் = சுவரில் - சுவரில் எழுதாதே என்பதே சரியான தொடர். சுவற்றில் என்று எழுதினால் வரண்டு போன இடத்தில் என்பது பொருளாகும்.
3. ஒரு ஆடு - ஓர் ஆடு
ஒன்று என்பது ஒரு எனத் திரிந்துள்ளது. ஓர் ஆடு, ஓர் இரவு, ஓர் யானை என்று எழுதுவதே வழாநிலையாம்.

கல்வியியல் பல்கலை.யில் எம்.எட்., படிப்பு தொடக்கம்

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் இந்தஆண்டு முதல் புதிதாக எம்.எட்., படிப்பு தொடங்கப்பட இருக்கிறது.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியி யல் பல்கலைக்கழகம் சென் னையை அடுத்த காரப்பாக்கத்தில் செயல்பட்டு வருகிறது.2017-18-ம் கல்வி ஆண்டு முதல் முழுநேர எம்.எட்., படிப்பு தொடங்க தேசிய ஆசிரியர் பயிற்சி கவுன்சில் (என்சிஇடிஇ) அனுமதி அளித் திருப்பதாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) என்.ரவீந்திர நாத் தாகூர் தெரிவித்துள்ளார்.

இப்படிப்பில் ஆண்டுக்கு 50 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்றும் மாணவர் சேர்க்கை தொடர்பானஅறிவிப்பு வெகு விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

உதவி பேராசிரியர் பணிக்கு முனைவர் பட்டம் பெற்றிருந்தாலும் தகுதித்தேர்வில் தேர்ச்சிகட்டாயம், யுஜிசி அதிரடி அறிவிப்பு:

TNAU Rank List for Counselling 2017-2018 | www.tnau.ac.in:

வேளாண் பல்கலை. தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் 2017-18ம் கல்வியாண்டில் 14 உறுப்பு மற்றும் 21 இணைப்பு கல்லூரி மூலம் 13 வேளாண் பட்டப்படிப்பு உள்ளது. வேளாண்ைம, தோட்டக்கலை, வனவியல், இளம் தொழில்நுட்ப படிப்புகளில் உயர் தொழில்நுட்பவியல், உயிர்தகவலியல் உள்பட 13 பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த படிப்புகளில் மொத்தம் 2,820 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் சேர மாணவர்கள் மே 12ம் தேதி முதல் ஜூன் 4ம் ேததி வரை ஆன்லைனில் விண்ணப்பித்தனர். மாணவர்கள் 23,065 பேர், மாணவிகள் 29,985 பேர் மற்றும் திருநங்கை 4 பேர் என 53,052 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதனால் வேளாண் பட்டப்படிப்புக்கு மாணவர்கள் மத்தியில் மவுசு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மதிப்பெண் தரவரிசை பட்டியலை இன்று (ஜூன் 10ம் தேதி) துணைவேந்தர் ராமசாமி பல்கலைக்கழக அரங்கில் வெளியிடுகிறார். சிறப்புபிரிவு கலந்தாய்வு ஜூன் 16ம் தேதியும், பொதுப்பிரிவு முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 19ம் தேதி முதல் 24ம் தேதி வரையும் நடக்கிறது. விவரங்களுக்கு பல்கலைக்கழக இணையதள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் எண் கட்டாயம் இல்லை-உச்சநீதிமன்றம்.

ஆதார் எண் கட்டாயம் என்ற மத்திய அரசு உத்தரவுக்கு உச்சநீதி மன்றம்
இடைக்கால தடை விதித்துள்ளது.

WhatsApp New Updates – தவறாக அனுப்பிய மெஸேஜை திரும்பப்பெறலாம் – அசத்தலான புதிய வசதிகள்!!!!

வாட்ஸ்அப் பார்க்காமல் ஒரு நாளைக்கூட இன்றைய தலைமுறையினரால் கடத்திவிட முடியாது. அலுவலகப்பணி காரணமாகவும், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் உரையாடவும் வாட்ஸ்அப் தான் அதிகம்
பயன்படுத்தப்படுகிறது. உலகம் முழுவதும் சுமார் 120 கோடிப்பேர் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் மட்டும் சுமார் 20 கோடிப்பேர் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர்.



வாட்ஸ்அப் – புதிய வசதிகள்

வாட்ஸ்அப் புதிய வசதிகளை அறிமுகப்படுத்துவதற்கு முன், டெஸ்ட்டர்களுக்கான பீட்டா வெர்ஷனில் அறிமுகப்படுத்தி சோதிப்பது வழக்கம். அதன்பின் தான் புதிய வசதிகள் அனைத்தும் அனைவருக்கும் அறிமுகப்படுத்தப்படும். சமீபத்தில் வெளியான வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் (Beta Version – 2.17.210), அசத்தலான சில புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவை விரைவில் அனைவருக்கும் அறிமுகப்படுத்தப்படலாம்.

மெஸேஜை திரும்பப்பெறலாம் :

வாட்ஸ்அப்பில் தவறுதலாக ஒரு மெஸேஜை அனுப்பிவிட்டு, அதை நீக்கவோ அல்லது திரும்பப்பெறவோ முடியாமல் சிரமப்பட்டிருப்போம். மெஸேஜை டெலீட் செய்தால் அனுப்பியவரின் சாட்டில் மட்டுமே அது நீக்கப்படும். ஆனால், ரிசீவர் மொபைலில் அந்த மெஸேஜ் அப்படியே இருக்கும். பீட்டா வெர்ஷனில் இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது வாட்ஸ்அப். மெஸேஜை திரும்பப்பெற்றுக்கொள்ள ‘Unsend’ என்ற ஆப்ஷன் பீட்டா வெர்ஷனில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. திரும்பப்பெற நினைக்கும் மெஸேஜை செலக்ட் செய்ததும், திரையின் மேலே மெனு ஒன்று தோன்றும். அதில் ‘Unsend’ ஆப்ஷனை கிளிக் செய்தால், உடனடியாக மெஸேஜ் திரும்பப்பெறப்படும். ஆனால், மெஸேஜ் அனுப்பி ஐந்து நிமிடங்களுக்குள் மட்டுமே அதைத் திரும்பப்பெற முடியும். அதற்கு மேல் நேரமாகியிருந்தால் மெஸேஜை திரும்பப்பெற முடியாது. ரிசீவர் மொபைலில் இருந்தும் அந்த மெஸேஜ் உடனடியாக நீக்கப்பட்டு, அன்சென்ட் செய்யப்பட்ட விவரம் மட்டும் தெரிவிக்கப்படும்.

லைவ்லொக்கேசன் :

வாட்ஸ்அப்பில் ஓர் இருப்பிடத்தின் மேப்பை எளிதாகப் பகிர்ந்துகொள்ளக்கூடிய லொக்கேசன் ஆப்ஷன் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். இந்த மேப்பில் குறிப்பிட்ட இடம் எங்கே இருக்கிறது என்பதைத் துல்லியமாக அறிந்துகொள்ள முடியும். இதே போல, நடமாடும் ஒரு நபரின் அப்போதைய இருப்பிடத்தை அறிந்துகொள்ளும் வகையில் ‘லைவ் லொக்கேசன்’ ஆப்ஷனையும் வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு நபர் தனது லைவ் லொக்கேசனை மற்றொரு நபருக்கு அனுப்பினால், அதன் மூலம் அந்நபர் பயணிக்கும் இருப்பிடங்களின் லொக்கேசனை அறிந்துகொள்ள முடியும். பாதுகாப்பு உள்ளிட்ட பல காரணங்களுக்காக இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டும் லைவ் லொக்கேசனைப் பகிர்ந்துகொள்ள முடியும்.

டெக்ஸ்ட் ஸ்டேட்டஸ் :


வாழ்வின் அத்தனை இனிமையான தருணங்களையும், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மூலம் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வது தான் தற்போதைய ட்ரெண்ட். புகைப்படம், வீடியோ, Gif போன்ற எந்த ஃபார்மட்டிலும் வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துக்கொள்ள முடியும். 24 மணிநேரம் இந்த ஸ்டேட்டஸை மற்றவர்களால் பார்க்க முடியும். இந்த பீட்டா வெர்ஷனில் டெக்ஸ்ட் (Text) வடிவில் கலர் பேக்ரவுண்ட் உடன் ஸ்டேட்டஸ் வைத்துக்கொள்ளும் ஆப்ஷனும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மெஸேஜில் Bold, Italic, Strike Through போன்ற எழுத்துருவின் வடிவங்களை மாற்றிக்கொள்வது போல, டெக்ஸ்ட் ஸ்டேட்டஸிலும் மாற்றிக்கொள்ளலாம்

EMIS - Student Application Form

9/6/17

அரசு ஊழியர், ஆசிரியர் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க உத்தரவு வருகிறதா?- பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் சூசகம்!!

அரசுஊழியர்கள் மற்றும் ஆசிரியர் களின் குழந்தைகளை அரசு பள்ளியில்
சேர்க்குமாறு உத்தரவு வரவிருக்கிறதா? என்ற கேள்விக்கு பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சூசகமாக பதிலளித்தார்.

சென்னை விருகம்பாக்கம் ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பாடப் புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகளை வழங்கினார். விழாவில் அவர் கூறியதாவது:

தமிழக அரசு வெளிப்படைத்தன் மையுடன் செயல்பட்டு வருகிறது. அண்மையில் நடந்து முடிந்த அரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் வெளிப்படையாக ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்டு ஆணைகள் வழங்கப் பட்டன என்பதை அனைவரும் நன்கு அறிவர். ஆசிரியர்கள் எந்தவிதமான மன உளைச்சலும் இல்லாமல் நல்ல முறையில் பணியாற்ற இந்த அரசு என்றும் துணை நிற்கும். தற்போது கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்களை உருவாக்கி வருகிறோம். நாங்கள் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கை யையும் மக்கள் கூர்ந்து கவனிக் கிறார்கள். கல்வித்துறையை மேம் படுத்துவதன் மூலம் தமிழகம் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக திகழும்.

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 20 லட்சம் பேருக்கும் எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவு களை அனுப்பினோம். இது இந்தியா வில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத சரித்திர சாதனை ஆகும். பாகுபாடு காரணமாக மாணவர் களுக்கு ஏற்படும் மன உளைச் சலைத் தடுக்கும் வகையில் பொதுத் தேர்வுகளில் ரேங்க் பட்டியல் வெளியிடும் முறையை இந்த ஆண் டிலிருந்து ரத்து செய்துள்ளோம். மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வு களுக்கான தேதி, தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி ஆகியவற்றை இந்த ஆண்டு முன்கூட்டியே வெளியிட்டிருக்கிறோம்.

இவ்வாறு அமைச்சர் செங்கோட் டையன் கூறினார்.

விழாவில் தென்சென்னை எம்பி டாக்டர் ஜெ.ஜெயவர்தன், தி.நகர் எம்எல்ஏ சத்யா, விருகம்பாக்கம் எம்எல்ஏ விருகை ரவி, பள்ளிக்கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன், தொடக்கக் கல்வி இயக்குநர் எஸ்.கார்மேகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அரசுமற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாண வர்களுக்கு பாடப்புத்தகம், நோட்டு கள், சீருடை, காலணி, லேப்-டாப், சைக்கிள் என 14 வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படு கின்றன. தற்போது முதல்கட்டமாக பாடப்புத்தகம், நோட்டு, சீருடை ஆகிய மூன்றும் வழங்கப்பட்டு இருக்கிறது. எஞ்சியவை விரைவில் வழங்கப்படும். பள்ளி திறந்த முதல் நாளிலேயே தமிழகம் முழுவதும் ஒரு கோடியே 3 லட்சம் மாணவர்களுக்கு புத்தகம், நோட்டு, சீருடை வழங்கப்பட்டுள்ளன.

பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத் தேர்வு வைக்கப்போகிறார்களே, வினாத்தாள் எப்படி இருக்குமோ என்ற அச்சம் மாணவர்களுக்கு இருக்கிறது. அவர்களின் அச்சத் தைப் போக்கும் வகையில் ஒரு வாரத்தில் அவர்களுக்கு மாதிரி வினாத்தாள் வழங்கப்படும். அப் போதுதான் அதற்கேற்ப ஆசிரியர் கள் பயிற்சி அளிக்க முடியும். அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வுகளுக்கு அரசு பள்ளி மாண வர்களைத் தயார்படுத்த அவர்க ளுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க முடிவுசெய்துள்ளோம். இதற்காக ஒவ்வொரு வட்டாரத்திலும் குறிப்பிட்ட இடத்தை தேர்வுசெய்து அங்கு சனிக்கிழமை தோறும் 3 மணி நேரம் சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படும்.

அரசுஊழியர்களும் அரசு பள்ளி ஆசிரியர்களும் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பது குறித்து கேட்கிறீர்கள். கல்வி என்பது ஒருவரின் மனநிலையைப் பொறுத்தது. ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வில் வெற்றிபெறுவோர் பெரும்பாலும் அரசு பள்ளிகள், அரசு கல்லூரிகளில் படித்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் பட்டியல் கூட தயாராக உள்ளது. அப்படிப்பட்ட நிலையில், அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க ஒத்துழைப்பு தருவார்கள் என்று நம்புகிறேன். ஜூன் 15-ம் தேதி அன்று பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையின்போது 40-க்கும் மேற்பட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன.

இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

பழையபஸ் பாஸ் பயன்படுத்தலாம்


அரசுபள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஆண்டுதோறும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டும் பஸ் பாஸ் வழங்குவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இருப்பினும், புதிய பஸ் பாஸ் வழங்கப்படும்வரை, மாணவர்கள் தாங்கள் ஏற்கெனவே வைத்திருக்கும் பழைய பஸ் பாஸை பயன்படுத்தி அரசு பஸ்களில் பயணம் செய்யலாம். இது தொடர்பாக அனைத்து போக்குவரத்து கிளை மேலாளர்களுக்கும் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

PRESS RELEASE- நிலங்களுக்கான வழிகாட்டு மதிப்பு 33 சதவீதமாக குறைப்பு நாளை முதல் அமல்

முறையான கணினி ஆசிரியர்கள் இல்லாமல் காட்சி பொருளாகும் கம்ப்யூட்டர் உபகரணங்கள்

Image may contain: text

"SCIENCE EXPRESS TRAIN" - 15.06.2017 - 30.06.2017 வரை மாணவர்கள் பார்வையிடுவதற்காக தமிழக்தில் பல்வேறு இடங்களில் நிறுத்தப்படும் - மாணவர்கள் பார்வையிட ஏற்பாடு செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு இயக்குனர் உத்தரவு - நிற்கும் இடங்கள் மற்றும் செயல்முறைகள்

கல்விக் கட்டணங்கள் அனைத்தும் ஆன்லைன் வழியாகச் செலுத்த வேண்டும்: மத்திய அரசின் அடுத்த அதிரடி!

பல்கலைக்கழகங்களிலும் உயர்கல்வி நிறுவனங்களிலும் இனி கல்விக்
கட்டணங்கள் அனைத்தும் ஆன்லைன் வழியாகவே பெறவேண்டும்' என்று மத்திய அரசின் மனிதவளத்துறை, கல்வி நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கியிருக்கிறது.
கல்விக் கட்டணங்கள் பிரகாஷ் ஜவடேகர்
மனிதவளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் 'பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு அனைத்துக் கட்டணங்களையும் இணையத்தின் வழியாகப் பெறுவதற்குத் தேவையான ஆலோசனைகளை, அனைத்து பல்கலைக்கழகங்களும் உயர்கல்வி நிறுவனங்களும் வழங்க வேண்டும்' என்று அறிவுறுத்தியிருக்கிறார்.
'கல்வி நிறுவனங்கள், மாணவர்களுக்கான கல்விகட்டணம், தேர்வுக் கட்டணம், விடுதிக் கட்டணம் மற்ற இதர கட்டணங்களையும் ஆன்லைன் வழியாகவே பெற வேண்டும். சம்பளம் மற்றும் இதர செலவினங்களையும் டிஜிட்டல் வழியில் மேற்கொள்ள வேண்டும். பல்கலைக்கழகங்களிலும், உயர்கல்வி நிறுவனங்களின் வளாகங்களில் உள்ள கேன்டீன்களிலும் மற்றும் இதர கடைகளிலும் ஆன்லைன் வழியே பணம் செலுத்தும் வசதியை ஏற்படுத்த வேண்டும். இதற்காக பீம்ஸ் செயலியையும், இந்தச் செயலியுடன் மாணவர் வங்கி கணக்கையும் ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும். கல்வி வளாகத்தில் அனைத்தையும் டிஜிட்டல் மயமாக்குவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திட வேண்டும். இதற்காக, ஒவ்வொரு கல்வி நிறுவனமும் ஒரு சிறப்பு அலுவலரை நியமித்து, என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்ற விவரத்தை ஒவ்வொரு மாதமும் அனுப்பிவைக்க வேண்டும்' என்றும் அறிவுறுத்தி இருக்கிறது.

கடந்த ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இதில் முன்னோடியாக, அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களிலும், உயர்கல்வி நிறுவனங்களிலும் அனைத்து கட்டணங்களையும் ஆன்லைன் வழியாகச் செலுத்த அறிவுறுத்தியிருப்பது நல்ல விஷயமே. அரசின் வழிகாட்டுதல் இல்லாமலேயே, ஏற்கெனவே பல உயர்கல்வி நிறுவனங்களில் கட்டணங்கள் வங்கிகளின் வழியாகப் பெறப்படுகின்றன. இப்போது, அரசின் வழிகாட்டுதலை ஏற்படுத்தி இருப்பதன்மூலம், இனி வரும் காலங்களில் இதைத் தனியார் கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் கொண்டுவருவதற்கான வாய்ப்பை உருவாக்கியிருக்கிறது. அரசு கொண்டுவரும் மாற்றங்கள் வழியே மக்களுக்கு நல்லது நடந்தால் பாராட்டுவோம்.

கல்வி ஆண்டின் தொடக்கத்தில் பள்ளி ஆசிரியர்களிடம் தரப்படும் குறிப்புகள்!!

ஆசிரியர்களே..!


1.எல்லாக் குழந்தைகளும் ஒரே மாதிரியான திறன் கொண்டிருப்பதில்லை. அவரவர் திறனுக்கேற்ற எதிர்பார்ப்புகள்
மட்டுமே கொண்டவராகவும்
ஊக்குவிப்பவராகவும் இருங்கள்.

2.படிப்பே வராத குழந்தை என்ற போதும் .. தன்னம்பிக்கை
இழந்து விடாதவாறு அதனிடம்
பேசிப் பழகுங்கள்.

3.மதிப்பெண் நிறைய எடுக்க முயற்சிப்பது நல்லதுதான். ஆனால், முயற்சியையும் தாண்டி அது முடியாத போது அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்து..உணர்த்துங்கள்.

4.கற்றலில் குறையுள்ள குழந்தையை எதற்கும் உதவாததென முத்திரை குத்தவோ மற்றவர் முன் அதைச்
சொல்லி அவமானப் படுத்தவோ கூடாது.அவர்களுக்கு உதவுங்கள்.

5.வீட்டுப் பாடம் அளவாக தினமும் கொடுக்கலாம்.அது நன்கு கற்பிக்கப் பட்டதாக இருக்க வேண்டும்.

6.Meanings Test என்பது வீட்டுப் பாடம் என்றால் ...வகுப்பில் அது நன்கு விளக்கப் பட்ட பிறகு ரஃப் நோட்டில்  எழுதச் செய்து பிறகு
வீட்டுப் பாடமாகத் தரலாம்.

7.அடுத்த நாளில் உடனே தேர்வு வைக்காமல் வாய் மொழியாக ஒவ்வொருவரிடமும் கேட்டு நல்ல பயிற்சி கொடுத்த பிறகு
எழுதச் சொல்லலாம்.

8.இவ்வாறு நல்ல பயிற்சிக்குப்
பிறகு வகுப்பில் எழுதும் சிறு தேர்வுகளில் நல்ல மதிப்பெண்  பெறும் வகையில் கவனம் கொண்டால்  அது கற்றலின் மீது குழந்தைக்குப் பிரியம் மற்றும் தன்னம்பிக்கையைத் தரும்.

9.பாடங்களை கற்பிக்க நிறைய நேரம் எடுத்து புரியும்படி கற்பிக்க வேண்டும். ஏனோ தானோவென்று பாடம் நடத்தி விட்டு தேர்வு வரை மனனம் செய்ய வைத்து கூடுதல் மதிப்பெண் பெற வைப்பது பயனற்றது... அருவருக்கத் தக்கது.

10.முதல் வகுப்பு முதலே மொழிப் பாடங்களில் சிறு சிறு சொற்றொடர் சொந்தமாக எழுதப் பயிற்சி அளித்து பிறகு சிறு கட்டுரைகள் எழுத வைத்து மொழித் திறனை வளர்க்கலாம்

11. பாராட்டும், ஊக்குவிப்பும்,அன்பான அணுகு முறையுமே ஒரு நல்லாசிரியரின்
பண்புகள்.

12.எழுத்துக்களும், அடிப்படை இலக்கணமும் சரிவரக் கற்பிக்கப் பட்டால் பிழையின்றி எழுதவும் தவறின்றி மொழியைக் கையாளவும் செய்வார்கள்.

13.ஒவ்வொரு பாடம் கற்பிக்கும் முன்பும், பின்பும் அந்தப் பாடத்தை படிக்கப் பயிற்சி அளிக்க வேண்டும். வேகமாகப் படிக்க முடிந்தால்தான் புரிதல் சாத்தியம்.

14. பாடங்களை சிறு நாடகமாக்கி எல்லாக் குழந்தைகளும் பங்கேற்கும் வண்ணம் நடிக்கச் செய்தால் நல்ல புரிதலுடன் மகிழ்ச்சி யான கற்றல் நிகழும்.

15.பாடப்புத்தகம் தாண்டியும் வாசிக்கும  பழக்கம் உருவாக உறுதுணையாக இருங்கள்.

16.ஆடல், பாடல், பேச்சு, வரைதல் போன்ற தனித் திறமைகள் கண்டறியப பட்டு ஊக்குவிக்கப் பட வேண்டும்.
போட்டி என்பது பரிசு பெற மட்டுமல்ல..பங்கு பெறவும்
யார்வென்றாலும் மனமாறப் பாராட்டி மகிழவும் என்று உணர்த்துங்கள்.

17.பரிசு  எல்லாக் குழந்தைகளுக்கும் கிடைக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

18.பள்ளி வளாகத்தில்.. முதலில் பாதுகாப்பு...பிறகுதான் கற்பித்தல்.

19.அடி வாங்கி வளரும் குழந்தை கோழை அல்லது கொடூரன் ஆக மாறும் அபாயம் உள்ளது.

20.சமூக வன்முறைகளுக்கும், அவலங்களுக்கும் பள்ளி நாற்றங்காலாகி விடாமல் இருப்பதில் உங்கள் பங்கு முக்கியமானது.

21.மனக்காயங்கள் இல்லாத குழந்தைப் பருவம்குழந்தைகளின் அடிப்படை உரிமை.

22.பின்னாளில் நினைவு கூரும் போதெல்லாம் இனிய தென்றலாக நினைவலைகள் வந்து தழுவிச் செல்வதாக பள்ளிப் பருவம் அமைவது ஆசிரியர்களாகிய உங்களால் மட்டுமே சாத்தியப் படுத்தக் கூடிய ஒன்று.

23.உங்களிடம் ஒப்படைக்கப் பட்டிருப்பது உயிர்ப்புடன் கூடிய நிகழ் காலங்கள்...நாட்டின் நம்பிக்கைக்குரிய எதிர்காலங்கள்..!

***
ஒவ்வொரு கல்வி ஆண்டின் தொடக்கத்திலும் நம் பள்ளி ஆசிரியர்களிடம் தரப்படும்