பிளஸ் 2 தேர்வு விடைத்தாளில், கூட்டல் பிழைகள் ஏற்படுத்திய, ஆசிரியர்கள் மற்றும் துறை அலுவலர் கள், 1,000 பேருக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது.
பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச் மற்றும் ஏப்ரலில் நடந்தது. விடைத்தாள்கள் திருத்தப்பட்ட பின், தேர்வு முடிவுகள், மே, 16ல் வெளியாகின. இந்தத் தேர்வை நன்றாக எழுதியும், சரியாக மதிப்பெண் கிடைக்காத மாணவர்களுக்கு, மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்ய, சலுகை வழங்கப்பட்டது.இந்த சலுகையை பயன்படுத்தி, 2,500க்கும் மேற்பட்டவர்கள், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பித்தனர். அவர்களின் மறுமதிப்பீடு முடிவுகள், இரு வாரங்களுக்கு முன் வெளியாகின. அதில், 1,000 மாணவர்களின் விடைத்தாளில், கூட்டல் மற்றும் மதிப்பீடு பிழைகளால், மதிப்பெண் மாறியது.இந்த விடைத்தாள்களை தேர்வுத்துறை ஆய்வு செய்து, அவற்றை திருத்திய ஆசிரியர்கள், சரிபார்த்த விடை திருத்தும் மைய தலைமை அதிகாரிகள், துறை அலுவலர்கள் யார் யார் என, பட்டியல் எடுக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலின்படி, ஆசிரியர்கள் உள்ளிட்ட, 1,000 பேருக்கு, நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க, தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.விளக்கத்துக்கு சரியான பதில் அளிப்பவர்களை தவிர, மற்றவர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
தேர்வுத்துறையில் இருந்து ஆசிரியர்களின் பட்டியல், பள்ளி கல்வித்துறைக்கு அனுப்பப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.