பி.இ. பொதுப் பிரிவு ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கி மூன்று சுற்றுகள் நிறைவடைந்துள்ள நிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கை இல்லாமல் தவித்து வருவது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் 509 பொறியியல் கல்லூரிகளில் இடம்பெற்றிருந்த 1,76,865 இடங்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வை 5 சுற்றுகளாக அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. வியாழக்கிழமையுடன் மூன்று சுற்றுகள் நிறைவடைந்துள்ளன.
முதல் பிரிவில் பங்கேற்கத் தகுதி பெற்ற 10,734 மாணவர்கள் 6,768 பேரும், இரண்டாம் சுற்றுக்குத் தகுதி பெற்ற 18,513 பேரில் 12,206 பேரும், மூன்றாம் சுற்றுக்குத் தகுதி பெற்ற 25,710 பேரில் 17,152 பேர் மட்டுமே இறுதி ஒதுக்கீட்டைப் பெற்றுள்ளனர்.
1.34 லட்சம் இடங்கள் காலி:
அதன்படி, மூன்று சுற்றுகள் முடிவில் 36,126 பேர் மட்டுமே இடங்களைத் தேர்வு செய்துள்ளனர். முன்னதாக நடைபெற்ற சிறப்புப் பிரிவு கலந்தாய்வையும் சேர்த்தால், மொத்தமாக 42,363 இடங்களில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. இன்னும் இரண்டு சுற்று கலந்தாய்வு மட்டுமே நடைபெற உள்ள நிலையில், 1,34,502 இடங்கள் காலியாக உள்ளன.
திண்டாடும் கல்லூரிகள்: அண்ணா பல்கலைக்கழகம் வெளிட்டுள்ள பி.இ. காலியிட விவரங்களின் அடிப்படையில், பல்கலைக்கழகத்தின் மூன்று துறைகள், அதன் உறுப்புக் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட பிரபல தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் மட்டுமே அனைத்து இடங்களும் நிரப்பியுள்ளன.
இரண்டாம் நிலை சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 50 சதவீதத்துக்கும் குறைவான இடங்களே நிரம்பியுள்ளன.
மீதமுள்ள நூற்றுக்கும் அதிகமான கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர் சேர்க்கை நடைபெற்றிருப்பதும், சில கல்லூரிகளில் ஒரு இடங்கள்கூட நிரம்பாமல் இருப்பதும் தெரியவந்துள்ளது.
நிகழாண்டில் புதிதாக கலந்தாய்வில் சேர்க்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் (உற்பத்தி) பிரிவில் 117 இடங்களும், இயந்திரவியல் பிரிவில் 88 இடங்களும், மின்னணுவியல் தொடர்பியல் பொறியியல் (இசிஇ) பிரிவில் 38 இடங்களும், கணினி அறிவியல் (சிஎஸ்இ) பிரிவில் 92 இடங்களும், தகவல் தொழில்நுட்பப் பிரிவில் 112 இடங்களும் மாணவர் சேர்க்கையின்றிக் காலியாக உள்ளன.
கிருஷ்ணகிரி, திருப்பூர், கோவை பொறியியல் கல்லூரிகளில்... கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் பிரதான பிரிவுகளான இயந்திரவியல் பிரிவில் 180 இடங்களும், மின்னணுவியல் தொடர்பியல் பொறியியல் (இசிஇ) பிரிவில் 181 இடங்களும், கணினி அறிவியல் (சிஎஸ்இ) பிரிவில் 73 இடங்களும் காலியாக உள்ளன. திருப்பூரில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் பிரிவில் 105 இடங்களும், மின்னணுவியல் தொடர்பியல் பொறியியல் (இசிஇ) பிரிவில் 106 இடங்களும், கணினி அறிவியல் (சிஎஸ்இ) பிரிவில் 105 இடங்களும் காலியாக உள்ளன.
கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் இயந்திரவியல் பிரிவில் 149 இடங்களும், மின்னணுவியல் தொடர்பியல் பொறியியல் (இசிஇ) பிரிவில் 71 இடங்களும், கணினி அறிவியல் (சிஎஸ்இ) பிரிவில் 72 இடங்களும் காலியாக உள்ளன.
இதே போன்று அனைத்து மாவட்டங்களிலும் பல கல்லூரிகளில் ஒவ்வொரு பிரிவிலும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்கள் நிரம்பாமல் உள்ளன.
250 கல்லூரிகளில் 50 மாணவர்கள் மட்டுமே சேர்க்கை: இதுகுறித்து கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியதாவது: பொறியியல் கல்லூரிகள் இந்த ஆண்டு மிகப் பெரிய பாதிப்பைச் சந்தித்துள்ளன. கலந்தாய்வின் மூன்று சுற்றுகள் முடிவில், 250 பொறியியல் கல்லூரிகளில் அனைத்துப் பிரிவுகளின் கீழ் மொத்தமாக 50 மாணவர்கள் மட்டுமே சேர்க்கை பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கல்லூரிகளில் கூட, ஒரு சில கல்லூரிகளில் மட்டுமே இடங்கள் முழுமையாக நிரம்பியுள்ளன. அவற்றின் இரண்டாவது, மூன்றாவது நிலை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மிகவும் குறைந்துள்ளது. இந்த கல்லூரிகளில் கட்-ஆஃப் 150 பெற்ற மாணவர்கள் கூட கலந்தாய்வு மூலம் சேர்ந்து வருகின்றனர். கடந்த ஆண்டுகளில் 150 கட்-ஆஃப் பெற்ற மாணவர் நன்கொடை கொடுத்தால் மட்டுமே இடம் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. இந்த நிலை இப்போது மாறியிருக்கிறது.
முதல் முறையாக இயந்திரவியல், கட்டடவியல் (சிவில்) பிரிவுகளில் இம்முறை மாணவர் சேர்க்கை வெகுவாகக் குறைந்துள்ளது. இதற்கு, கடந்த மூன்று ஆண்டுகளாக தகவல்தொழில்நுட்பத் துறையில் இருந்த பின்னடைவால், இந்த இரு பிரிவுகளிலும் இடங்களின் எண்ணிக்கையை இரு மடங்காக கல்லூரிகள் உயர்த்தியதே காரணமாகும். இம்முறை கலந்தாய்வு மூலம் 75 ஆயிரம் இடங்கள் மட்டுமே நிரம்ப வாய்ப்புள்ளது. இனி, வரும் ஆண்டுகளிலும் இதே நிலைதான் நீடிக்கும். பாடத் திட்டத்தைத் தாண்டி, தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறன்களை மாணவர்களுக்கு ஊக்குவிக்கும் முயற்சியில் இறங்கினால் மட்டுமே பொறியியல் கல்லூரிகள் இனி நிலைத்திருக்க முடியும் என்றார் ஜெயப்பிரகாஷ் காந்தி.