யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

17/10/15

ஆசிரியர் போராட்டத்தால்அகவிலைப்படி தாமதம்

அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு தாமதம் ஆவதால், தமிழக அரசுஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.ஆறாவது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. கடந்தமாதம், 6 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. 


இந்த உயர்வு, ஜூலை மாதம் முதலே கணக்கிட்டு வழங்கப்படும்.பொதுவாக, மத்திய அரசு ஊழியர்களுக்கு, அகவிலைப்படியை உயர்த்தியதும், தமிழக அரசு ஊழியர்களுக்கும், அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும். ஆனால், ஒரு மாதமாகியும், அறிவிப்பு வெளியாகவில்லை. இது, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம், கடும் அதிருப்தியைஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, தலைமைச் செயலக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:அகவிலைப்படியை உயர்த்துவதற்கான கோப்பில், முதல்வர் கையெழுத்து போட்டு விட்டார். அறிவிப்பு வெளியாக இருந்தபோது, ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்; எனவே, அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டது; முதல்வரிடம் இருந்து, உத்தரவு வந்தபிறகே, அறிவிப்பு வெளியாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.-DINAMALAR

ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுக்கு இன்று கலந்தாய்வு

பட்டதாரி ஆசிரியர்களுக்கு முது நிலை ஆசிரியர்களாக பதவி உயர்வுக்கான கலந்தாய்வு இன்று மாநிலம் முழுவதும் நடைபெறு கிறது.தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக பணி புரிபவர்களுக்குமுதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு அளிக்கும் கலந்தாய்வு இன்று நடைபெறுகிறது.

இந்த கலந்தாய்வில் மாநிலம் முழுவதிலிருந்து 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள் கிறார்கள். இந்த கலந்தாய்வு இணையதளம் மூலம் நடத்தப் படும். ஒவ்வொரு மாவட்டத் திலும் முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களில் நடத்தப் படுகிறது என்று பள்ளிக் கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

பதவி உயர்வு எப்போது? முதுநிலை ஆசிரியர்கள் தவிப்பு

முதுகலை பட்டம் பெற்றுள்ள, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களால், 20 ஆண்டுக்குப் பின்னரே, தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற முடிகிறது. அதுவும்,பணிமூப்பு அடிப்படையில் தான் கிடைக்கிறது. 


சீனியாரிட்டி இல்லாதவர், ஓய்வு பெறும் வரை, முதுநிலை பட்டதாரி ஆசிரியராகத் தான் இருக்க வேண்டும்.இந்த வேறுபாட்டால், பட்டதாரியாக பணியில் சேர்ந்த ஆசிரியர்களின் கட்டுப்பாட்டில், அவர்களை விட அதிகமாக படித்துள்ள, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றும் நிலை ஏற்படுகிறது; ஊக்க ஊதியத்திலும் முரண்பாடு இருக்கிறது.இந்த வேறுபாடுக்கு காரணமான, அரசாணையை மாற்றக் கோரி, முதுநிலை ஆசிரியர்கள், 10 ஆண்டுகளாக போராடி வருகின்றனர்; ஆனால், பிரச்னை தீர்க்கப்படவில்லை. இந்த கோரிக்கையையே, அரசு கிடப்பில் போட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இதுகுறித்து, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் சுரேஷ் கூறுகையில், ''இந்தப் பிரச்னையை தீர்க்க, முன்னாள் இயக்குனர்கள் கருணாகரன் மற்றும் ஜெகநாதன் தலைமையில், இரண்டு கமிட்டிகளை, அரசு அமைத்தது. இதுவரை, அதன் அறிக்கையை வெளியிடாமல் கிடப்பில் வைத்துள்ளது,'' என்றார்.

இந்நிலையில், அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 1,200 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை, பதவி உயர்வு மூலம் நிரப்புவதற்கான, இடமாறுதல் கலந்தாய்வு, இன்று நடத்தப்படுகிறது. இதில், 650 இடங்களை நிரப்ப அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். ஆனால், பட்டதாரி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற வாய்ப்பு இருப்பதால், முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வில் பங்கேற்க, ஆர்வம் இல்லாமல் இருக்கின்றனர்.எனவே, காலியிடங்களை நிரப்ப, பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் இருந்து, தொகுப்பூதியம் கொடுத்து, தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

3 ஆண்டுகளில்...

அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள், 10 ஆண்டுகளுக்கு பின், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறுகின்றனர். அதில், மூன்று ஆண்டுகள் பணியாற்றிய பின், பணிமூப்புப்படி, மாவட்ட கல்வி அதிகாரி அல்லது மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக, நியமிக்கப்படுகின்றனர். அதன்பின், மூன்று ஆண்டுகளில், முதன்மை கல்வி அதிகாரியாக முடியும்.

குரூப் 2 தேர்வு: 22 பணியிடங்களுக்கு அக். 19-இல் கலந்தாய்வு தொடக்கம்

குரூப் 2 தொகுதியில் காலியாகவுள்ள 22 பணியிடங்களுக்கு அக்டோபர் 19, 20 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.இதுகுறித்து, தேர்வாணையம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

குரூப் 2 தொகுதியில் அடங்கிய பணிகளுக்கு (நேர்காணல் அல்லாத) 2012-ஆம் ஆண்டு நவம்பரில் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.அதில், தேர்வானவர்களுக்கு இதுவரை 5 கட்டமாக கலந்தாய்வுகள் நடத்தப்பட்டன. மேலும், காலியாகவுள்ள 22 பணியிடங்களுக்கு ஆறாவது கட்டமாக கலந்தாய்வு சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் வரும் 19, 20 ஆகிய தேதிகளில் நடத்தப்படும்.கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு- கலந்தாய்வுக்கான தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு விண்ணப்பதாரர்களுக்கு விரைவஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.மேலும், அழைப்புக் கடிதத்தை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.வரத் தவறுபவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது என தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

ஓய்வூதியதாரர்கள் ஆண்டுதோறும் வாழ்வுறுதிச் சான்றிதழ் அளிக்க வேண்டும்: மத்திய அரசு உத்தரவு

ஓய்வூதியம் பெறுவோர் தங்களது வாழ்வுறுதிச் சான்றிதழை ஆண்டுதோறும் நவம்பர் மாதம்சம்பந்தப்பட்ட வங்கிகளில் அளிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக, மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:


வங்கிகள் தடையின்றி சேவையை வழங்குவதற்கு ஏதுவாக, ஓய்வூதியம் பெறுவோர் தங்களது வாழ்வுறுதிச் சான்றிதழை ஆண்டுதோறும் நவம்பர் மாதம், சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைகளில் அளிக்க வேண்டும்.

அந்தச் சான்றிதழில், தற்போதைய முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய, மாநில அரசுத் துறைகள், ராணுவம், ரயில்வே உள்ளிட்ட துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு அரசு சார்பில் வங்கிகள் ஓய்வூதியம் வழங்கி வருகின்றன.

2016-ல் பி.எஃப். பணத்தை ஆன்லைன் மூலம் எடுக்கும் வசதி: கே.கே.ஜலன்

2016 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஊழியர் வருங்கால வைப்பு நிதியை ஆன்லைன் மூலம் எடுக்கும் வசதி செய்யப்படும் என்று வருங்கால வைப்பு நிதி ஆணையம் தெரிவித்துள்ளது.பி.எஃப். தொகைக்கான விண்ணப்பங்களைப் பெற்றவுடன் 3 மணி நேரத்துக்குள் உரியவர்களுக்கு பணம் கிடைக்குமாறு இந்த ஆன்லைன் வசதி செய்யப்படவிருக்கிறது.

இது நடைமுறைக்கு வந்தவுடன் பி.எஃப். சந்தாதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.பிறகு உரிய தொகை சந்தாதாரர்களின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும்.இது குறித்து மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையர் கே.கே.ஜலன் கூறுகையில், ஆன்லைன் பி.எப். பண எடுப்பு முறையை அனுமதிக்க மத்திய தொழிலாளர் துறை அமைச்சகத்திடம் அனுமதி கேட்டு கடிதம் எழுதியுள்ளோம். மார்ச் மாத இறுதியில் இத்திட்டம் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம்.பிஎஃப் பண எடுப்பு முறையை அறிமுகம் செய்வதற்காக சில அனுமதிகளை நாங்கள் கோரியுள்ளோம். இத்திட்டத்தை அறிமுகம் செய்வதற்கு முன்பாக தங்கள் ஆதார் விவரங்களைக் குறிப்பிடும் சந்தாதாரர்களின் விண்ணப்பங்களை மிகவிரைவில் சரிபார்க்க உறுதி அளிக்கிறோம்.இந்தக் காலக்கட்டத்தில் ஆதார் எண்கள் உள்ள பிஎப் சந்தாதாரர்களின் விண்ணப்பங்கள்சரிபார்க்கப்பட்டு 3 நாட்களுக்குள் பணம் அளிக்கப்படும் என்று கூறினார்.

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு - தமிழக அரசு ஆணை வெளியீடு(தமிழில்...)






16/10/15

கருவூலத்தில் அலுவலக உதவியாளர் பணி

தூத்துக்குடி கருவூலத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:


கருவூல கணக்குத் துறையில், தூத்துக்குடி மாவட்டக் கருவூல அலகில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பதவிக்கு தகுதி வாய்ந்த நபர்கள் தேர்வு செய்வதற்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை மூலம் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி வயது மற்றும் பிற தகுதிகள் பெற்றிருப்பவர்கள் இன சுழற்சி முறையில் உள்ளவர்கள் மட்டும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து மாவட்டக் கருவூல அலுவலர், மாவட்டக் கருவூலம், 329,சிவந்தாகுளம் சாலை, தூத்துக்குடி என்ற முகவரிக்கு அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப படிவம், கல்வித்தகுதி, வயது மற்றும்  பிற தகுதிகள் இன சுழற்சி விவரங்களை  www.thoothukudi.nic.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 திட்டங்களுக்கு ஆதார்அட்டையை பயன்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி

தியோர் ஓய்வூதியம், 100 நாள் வேலைவாய்ப்பு உள்ளிட்ட 4 சமூக திட்டங்களுக்கு ஆதார் அட்டையை விருப்பத்தின் பேரில் பயன்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆதார் அட்டையை கட்டாயமாக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு மற்றும் ஆதார் கட்டாயமில்லை என்ற நீதிமன்றத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி மத்திய அரசு தொடர்ந்த வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆதார் அட்டையை கட்டாயப்படுத்துவதால் தனி நபர்களின் அடிப்படை உரிமை எந்தவிதத்திலும் பாதிக்காது என மத்திய அரசின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதற்கு எதிர் மனுதாரர் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. எனினம் தற்போதைய சூழலில் முதியோர் ஓய்வூதியம், 100 நாள் வேலை திட்டம், ஜன்தன் மற்றம் பி.எஃப் திட்டங்களுக்கு ஆதார் அட்டையை பொமுக்கள் விருப்பத்தின் பேரில் பயன்படுத்தி கொள்ளலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர். எனினும் இது கட்டாயமில்லை என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். இது இடைக்கால உத்தரவு தான் என கூறிய நீதிபதிகள் வழக்கு விசாரணை தொடரும் என்றும் கூறினர்.

இ-சேவை மையங்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் அருள்மொழி நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். உடன் தேர்வாணைய செயலாளர் மா.விஜயகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபனா, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன நிர்வாக இயக்குநர் ஜே.குமரகுருபரன். படம்: ம.பிரபு


இ-சேவை மையங்கள் மூலம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர் வாணைய (டி.என்.பி.எஸ்.சி) தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க லாம் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தலைவராக பொறுப்பேற் றுள்ள கே.அருள்மொழி கூறியுள்ளார்.

சென்னையில் நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இதுபற்றி அவர் கூறியதாவது:

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம் மற்றும் 15 மண்டல அலுவலகங்கள் என 280 இடங் களில் நடத்தப்படும் இ-சேவை மையங்களில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணைய வழி விண்ணப்ப சேவைகள் அறிமுகப்படுத்தப்படு கின்றன.

இ-சேவை மையங்களில் ரூ.50 செலுத்தி நிரந்தரப்பதிவு, ரூ.30 செலுத்தி தேர்வுகளுக்கு விண்ணப் பம், ரூ.5 செலுத்தி விண்ணப்பங் களில் மாறுதல்கள், ரூ.20 செலுத்தி விண்ணப்பங்களில் மாறுதல் செய்து விண்ணப்ப நகல் பெறு வது உள்ளிட்ட சேவைகளை பெற லாம். மேலும் நிர்ணயிக்கப் பட்ட தேர்வுக்கட்டணத்தையும் செலுத்தலாம். பணம் செலுத்தியதற் கான ஒப்புகைச் சீட்டினையும் பெற்றுக் கொள்ளலாம். மேற்படி சேவைகள் எல்காட் நிறுவனத் தால் நடத்தப்படும் இ-சேவை மையங்களுக்கும் விரைவில் விரிவுபடுத்தப்படும்.

குரூப் 4 தேர்வுகளுக்கான அறிக்கை விரைவில் வெளியிடப் படும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொடர்ந்து வெளிப்படைத் தன்மையுடன் விண்ணப்பதாரர் நேய அணுகு முறையுடன் இயங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சந்திப்பின்போது தமிழ் நாடு அரசு பணியாளர் தேர் வாணைய செயலாளர் மா.விஜய குமார், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபனா, இணை இயக்குநர் சரஸ்வதி, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன நிர்வாக இயக்குநர் ஜே.குமரகுருபரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கண்ணாடி சிலிண்டர்: மத்திய அரசு திட்டம்

சமையல் சிலிண்டரில் உள்ள, எரிவாயுவின் அளவை துல்லியமாக காணும் வகையில், கண்ணாடியால் ஆன சிலிண்டரை வினியோகிக்க, மத்திய அரசுதிட்டமிட்டுள்ளது. எடை குறைவான சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்படுவதாக, வாடிக்கையாளர்களிடம் இருந்து, அதிகளவில் புகார்கள் வந்ததால், மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.



உடையாத கண்ணாடியில், எரிவாயுவின் அளவை காணும் வகையில் சிலிண்டர்கள் இருந்தால், எடை குறைவு மற்றும் எரிவாயு திருட்டு போன்றவை தடுக்கப்படும்.ஆனால், இந்த கண்ணாடி சிலிண்டரின் விலை, தற்போதைய விலையை விட இரு மடங்காகும். டிபாசிட் தொகையும், 1,400 ரூபாயில் இருந்து, 3,000 ரூபாயாக உயர வாய்ப்புள்ளது. வரும் மார்ச் முதல், இந்த சிலிண்டர்கள் பயன்பாட்டுக்கு வருகிறது. துவக்கத்தில், இவற்றை வெளிநாட்டில் இருந்து, இறக்குமதி செய்யவும், தற்போதுள்ள பழைய சிலிண்டர்களை, கிராமப் பகுதிகளில் பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.


தற்போது வீட்டு உபயோகத்துக்கு, 14.2 கி., எடையுள்ள சிலிண்டர்வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு, 12 சிலிண்டர்கள், மானிய விலையில் வழங்கப்படுகின்றன. சிலிண்டர் விலையான, 605 ரூபாயை, வாடிக்கையாளர்கள் முழுவதுமாக செலுத்திய பின், அவர்களது வங்கி கணக்கில், மானிய தொகை, 198 ரூபாயை, மத்திய அரசு வரவு வைக்கிறது.

அரசு பள்ளிகளின் அறிவியல் கண்டுபிடிப்பு தனியார் பள்ளி மாணவர்கள் வியப்பு

சென்னை:மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்த நாள், இளைஞர் எழுச்சி நாளாக, நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அரசு பள்ளி மாணவர்களின் அறிவியல் தயாரிப்புகள் இடம் பெற்ற கண்காட்சி, சென்னை கிறிஸ்தவ கல்லுாரி பள்ளியில் நடந்தது. பள்ளிக்கல்வி அமைச்சர் வீரமணி, முதன்மை செயலர் சபிதா, இயக்குனர்கள் கண்ணப்பன்,
இளங்கோவன் மற்றும் ராமேஸ்வர முருகன் உள்ளிட்டோர், கண்காட்சியை பார்வையிட்டு, மாணவர்களை பாராட்டினர்.அரியலுார் மாவட்டம், காளையங்குறிச்சி, அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், கலாமின் சிறு வயது முதலான புகைப்படங்களையும், அவர் பணியாற்றிய ராக்கெட் திட்டங்களின் மாதிரிகளையும் வைத்திருந்தனர். புதுக்கோட்டை பள்ளி மாணவர்கள், காற்றில் இயங்கும் விமானம் செய்து பறக்கவிட்டனர். இதேபோல், மாற்றுத்திறனாளிகளுக்கான கைத்தறி கருவி, குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் சாதனம் உள்ளிட்ட, பலவித அறிவியல் கண்டு
பிடிப்புகள், கண்காட்சியில் இடம் பெற்றன. அரசு பள்ளி மாணவர்களின் இந்த தயாரிப்புகளை, தனியார் பள்ளி மாணவர்கள் பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கம் கேட்டனர்; திறமையை வியந்து பாராட்டினர்.
இதற்கிடையில், அனைத்து அரசு பள்ளிகளிலும், கலாம் குறித்த சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. பிற்பகல் 2:00 மணிக்கு, கலாமின், 10 அறிவுரைகள் உறுதிமொழியாக ஏற்கப்பட்டன. 

பதவி உயர்வு எப்போது?முதுநிலை ஆசிரியர்கள் தவிப்பு

முதுகலை பட்டம் பெற்றுள்ள, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களால், 20 ஆண்டுக்குப் பின்னரே, தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற முடிகிறது. அதுவும், பணிமூப்பு அடிப்படையில் தான் கிடைக்கிறது. சீனியாரிட்டி இல்லாதவர், ஓய்வு பெறும் வரை, முதுநிலை பட்டதாரி ஆசிரியராகத்தான் இருக்க வேண்டும்.

இந்த வேறுபாட்டால், பட்டதாரியாக பணியில் சேர்ந்த ஆசிரியர்களின் கட்டுப்பாட்டில், அவர்களை விட அதிகமாக படித்துள்ள, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றும் நிலை ஏற்படுகிறது; ஊக்க ஊதியத்திலும் முரண்பாடு இருக்கிறது.
இந்த வேறுபாடுக்கு காரணமான, அரசாணையை மாற்றக் கோரி, முதுநிலை ஆசிரியர்கள், 10 ஆண்டுகளாக போராடி வருகின்றனர்; ஆனால், பிரச்னை தீர்க்கப்படவில்லை. இந்த கோரிக்கையையே, அரசு கிடப்பில் போட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. 
இதுகுறித்து, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் சுரேஷ் கூறுகையில், ''இந்தப் பிரச்னையை தீர்க்க, முன்னாள் இயக்குனர்கள் கருணாகரன் மற்றும் ஜெகநாதன் தலைமையில், இரண்டு கமிட்டிகளை, அரசு அமைத்தது. இதுவரை, அதன் அறிக்கையை வெளியிடாமல் கிடப்பில் வைத்துள்ளது,'' என்றார்.
இந்நிலையில், அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 1,200 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை, பதவி உயர்வு மூலம் நிரப்புவதற்கான, இடமாறுதல் கலந்தாய்வு, இன்று நடத்தப்படுகிறது. 
இதில், 650 இடங்களை நிரப்ப அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். ஆனால், பட்டதாரி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற வாய்ப்பு இருப்பதால், முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வில் பங்கேற்க, ஆர்வம் இல்லாமல் இருக்கின்றனர்.
எனவே, காலியிடங்களை நிரப்ப, பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் இருந்து, தொகுப்பூதியம் கொடுத்து, தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

3 ஆண்டுகளில்...
அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள், 10 ஆண்டுகளுக்கு பின், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறுகின்றனர். அதில், மூன்று ஆண்டுகள் பணியாற்றிய பின், பணிமூப்புப்படி, மாவட்ட கல்வி அதிகாரி அல்லது மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக, நியமிக்கப்படுகின்றனர். அதன்பின், மூன்று ஆண்டுகளில், முதன்மை கல்வி அதிகாரியாக முடியும்.

ஆசிரியர் போராட்டத்தால்அகவிலைப்படி தாமதம்

ஆறாவது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. கடந்த மாதம், 6 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. இந்த உயர்வு, ஜூலை மாதம் முதலே கணக்கிட்டு வழங்கப்படும். 

பொதுவாக, மத்திய அரசு ஊழியர்களுக்கு, அகவிலைப்படியை உயர்த்தியதும், தமிழக அரசு ஊழியர்களுக்கும், அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும். ஆனால், ஒரு மாதமாகியும், அறிவிப்பு வெளியாகவில்லை. இது, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம், கடும் அதிருப்தியை 
ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து, தலைமைச் செயலக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:அகவிலைப்படியை உயர்த்துவதற்கான கோப்பில், முதல்வர் கையெழுத்து போட்டு விட்டார். அறிவிப்பு வெளியாக இருந்தபோது, ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்; எனவே, அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டது; முதல்வரிடம் இருந்து, உத்தரவு வந்தபிறகே, அறிவிப்பு வெளியாகும்.இவ்வாறு அவர் கூறினார்

அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

சேலம் : பெண் ஆசிரியருக்கு, பாலியல் தொல்லை கொடுத்ததாக, நல்லூர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.சேலம் மாவட்டம், ஏற்காடு வல்லக்கடை பஞ்சாயத்துக்கு உட்பட்ட நல்லூரில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இதில், அப்பகுதியில் உள்ள, 90 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இதில், தலைமை ஆசிரியர் சத்யராஜ் மற்றும் மூன்று பெண் இடைநிலை ஆசிரியர் உள்பட, ஐந்து பேர் பணிபுரிந்து வருகின்றனர்.இப்பள்ளியில் பணிபுரிந்து வரும் ஹஜ்ரீமா என்ற இடைநிலை ஆசிரியை, ஏற்காடு உதவி தொடக்கக்கல்வி அலுவலரிடம் புகார் அளித்தார். அப்புகாரில், கூறியிருப்பதாவது: பள்ளியின் தலைமை ஆசிரியர் சத்யராஜ், நான் வகுப்பு எடுக்கும் போது, வகுப்பறையில் அமர்ந்து கொண்டு கவனிப்பது மற்றும் பாலியல் சீண்டல் முயற்சிகளில் ஈடுபட்டும் வந்தார். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி, குழந்தைகள் இருந்த நிலையில், என்னை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி வந்தார். முதல் பருவ தேர்வு விடுமுறை முடிந்து, பள்ளிக்கு வரும் போது, திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்காவிட்டால், தற்கொலை செய்து கொள்வேன் என, மிரட்டல் விடுத்தார். இதனால், கடும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர் புகாரில் கூறியுள்ளார்.இப்புகாரின் அடிப்படையில், ஏற்காடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் ேஷக்தாவூத், பள்ளியில் சக ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தி, அறிக்கையை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரிடம் சமர்பித்தார். இந்த அறிக்கை, இயக்குனரகத்துக்கு அனுப்பப்பட்டு, இயக்குனரின் வழிகாட்டுதலின் அடிப்படையில், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் தங்கராஜ், நேற்று நல்லூர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சத்யராஜை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். பாலியல் புகாரில் சிக்கி, தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் ஆன சம்பவம், ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எல்.இ.டி., பல்புகளால் தினமும் ரூ.2.71 கோடி...மிச்சம் நாடு முழுதும் விரிவாக்க மத்திய அரசு திட்டம்

நாட்டின் பல மாநிலங்களில், எல்.இ.டி., மின் விளக்குகள் பயன்பாடு அதிகரித்துள்ளதால், மின்சாரத்தை தயாரிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு ஏற்படும் செலவில், நாள்தோறும், 2.71 கோடி ரூபாய் மிச்சமாகிறது. தற்போது, 10க்கும் குறைவான மாநிலங்களில் பின்பற்றப்படும் இந்த திட்டத்தை, அனைத்து மாநிலங்களும் முழுமனதுடன் பின்பற்றத் துவங்கினால், காற்றின் மாசு குறைவதுடன், அரசின் மின் செலவும் கணிசமாக வீழ்ச்சி அடையும்.
எல்.இ.டி., என்பது, 'லைட் எமிட்டிங் டையோடு' என்ற ஆங்கில வார்த்தைகளின் சுருக்கம். குறைந்த மின்சாரத்தை பயன்படுத்தி அதிக ஒளியை, நீண்ட காலத்திற்கு வழங்கும் திறன் கொண்ட இந்த புதுமையான மின் விளக்குகள், சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தாதவை. இந்த விளக்குகளை பயன்படுத்துபவர்களுக்கும், அரசுக்கும் பல விதங்களில் நன்மை கிடைப்பதால், எல்.இ.டி., விளக்குகளை அதிக அளவில் பயன்படுத்துவதற்கு, மத்திய அரசு ஊக்கம் அளிக்கிறது. மின்துறை சார்பில், இதற்கென சிறப்பு பிரிவை உருவாக்கி, வீடுகள் தோறும் விதவிதமான, எல்.இ.டி., விளக்குகளை பயன்படுத்த, பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. மத்திய அரசின் தீவிர முயற்சியால், ஆந்திரா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில், குண்டு மின் விளக்குகள் மற்றும் சி.எப்.எல்., எனப்படும் பாதரசம் கொண்ட விளக்குகளின் பயன்பாடு, 90 சதவீதம் தவிர்க்கப்பட்டு, எல்.இ.டி., விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன.
இதனால், மின் நுகர்வோருக்கு மின் கட்டணமும் குறைவதால், பொதுமக்களும் ஆர்வமாக, எல்.இ.டி., விளக்குகளை வாங்கி, வீடுகளில் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், சமீபத்தில் எட்டப்பட்டுள்ள முன்னேற்றம்:
* ஜனவரி முதல், டி.இ.எல்.பி., எனப்படும், முழுவதும், எல்.இ.டி., விளக்குகளை பயன்படுத்தும் திட்டம், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், டில்லி, உத்தர பிரதேசம், ஹிமாச்சல பிரதேச மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது
* அடுத்தகட்டமாக, ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், கேரளா, சத்தீஸ்கர், ஜம்மு - காஷ்மீர், அசாம், சண்டிகர், கர்நாடகாவிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது
* இ.இ.எஸ்.எல்., எனப்படும், மத்திய மின்துறை யின் துணை அமைப்பு, எல்.இ.டி., மின் விளக்குகள் வினியோகத்தை மேற்கொள்கிறது
* இதுவரை, இரண்டு கோடி எல்.இ.டி., விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன
* நாட்டில், ஒவ்வொரு ஆண்டும் தயாரிக்கப்படும், 77 கோடி சாதாரண விளக்குகள், 40 கோடி, சி.எப்.எல்., விளக்குகளை அடியோடு நிறுத்திவிட்டு, அதிக அளவில், எல்.இ.டி., விளக்குகளை புழக்கத்தில் கொண்டு வருவது தான், இ.இ.எஸ்.எல்.,லின் இலக்கு.
எந்த வகையில் சிக்கனம்? சாதாரண குண்டு மின் விளக்கு, 350 - 400, 'லுமென்' வெளிச்சத்தை உமிழ, 60 வாட் மின்சாரத்தை எடுத்துக் கொள்கிறது. பாதரசத்தை மூலப்பொருளாக கொண்ட, சி.எப்.எல்., எனப்படும் விளக்குகள், 450 - 550 லுமென் திறன் வெளிச்சத்தை உமிழ, 14 - 16 வாட் மின்சாரத்தை எடுத்துக் கொள்கிறது. ஆனால், எல்.இ.டி., விளக்குகள், 6 வாட் மின்சாரத்தை மட்டுமே எடுத்துக் கொண்டு, 600 - 700 லுமென் திறன் வெளிச்சத்தை உமிழ்கிறது. மேலும், இந்த விளக்குகள், பிற விளக்குகளால் அறவே கொடுக்க முடியாத, 15 ஆயிரம் முதல், 20 ஆயிரம் மணி ஆயுட்காலத்தை கொடுக்கும்.லுமென் என்பது, ஒளியின் திறனை அளவிடும் அளவீடு.
என்ன கிடைக்கிறது? *அதிக அளவில், எல்.இ.டி., விளக்குகளை பயன்படுத்தும் மாநிலங்களால், தினமும், 68 லட்சம் கிலோவாட் மின்சக்தி மிச்சமாகிறது
* 'பீக் ஹவர்' எனப்படும், உச்சகட்ட நேர மின் தேவை, 645 மெகாவாட் ஆக குறைந்துள்ளது
* தினமும், 5,520 டன் கார்பன் மாசு வீழ்ச்சி அடைந்துள்ளது
* மின் கட்டணம், உற்பத்திச் செலவு போன்றவற்றில், தினமும், 2.71 கோடி ரூபாய் மிச்சம் ஏற்பட்டுள்ளது.
விலை எப்படி? மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளால், ஓராண்டிற்கு முன், 650 - 700 ரூபாயாக இருந்த ஒரு எல்.இ.டி., விளக்கின் விலை, இப்போது பாதியாக குறைந்துள்ளது; தற்போதைய சந்தை விலையில், 300 - 350 ரூபாய் வரை விற்கப்படுகிறது.மத்திய அரசின் திட்டப்படி, ஒரு எல்.இ.டி., விளக்கு, 78 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது; மீதமுள்ள தொகை, மானியமாக வழங்கப்படுகிறது.

15/10/15

மேல்நிலை எழுத்தர் தேர்வு: இணையதளத்தில் நுழைவுத் சீட்டுக்களை பதிவிறக்கம் செய்ய அறிவிப்பு

புதுச்சேரியில் நடைபெறவுள்ள மேல்நிலை எழுத்தர் தேர்வுக்கான நுழைவு சீட்டுக்களை (ஹால் டிக்கெட்) இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பணியாளர் நலத்துறை செயலாளர் டாக்டர் எஸ்.சுந்தரவடிவேலு தெரிவித்துள்ளார்.


புதுச்சேரியில் பல்வேறு துறைகளில் 500 மேல்நிலை எழுத்தர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு வரும் 25.10.15 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 முதல் 12 மணி வரை நடக்கிறது.

இப்போட்டித் தேர்வில் பங்கேற்க மொத்தம் 33,617 பேர் விண்ணப்பித்துள்ளனர். மனுதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தின் நிலை, குறித்து புதுச்சேரி அரசு ஆள்சேர்ப்பு இணையதளம் https:recruitment.puducherry.gov.in  என்ற இணையதள முகவரியில் அறியலாம்.

மேலும் தகுதியான மனுதாரர்கள் தங்கள் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டை மேற்கூறிய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றார் சுந்தரவடிவேலு.

மாணவர் விடுதியில் 25 சமையலர் காலி பணியிடம்: அக்.30-க்கு விண்ணப்பிக்கலாம்

விருதுநகர் மாவட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்/சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் விடுதிகளில் காலியாக உள்ள 14 ஆண் மற்றும் 11 பெண் சமையலர் பணியிடங்களுக்கு அக்டோபர் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். 


சமையலர் பணிக்கான ஊதிய விகிதம் ரூ.4800-10000 (தர ஊதியம் ரூ.1300). நேர்காணல் மூலம், இனச்சுழற்சியின் அடிப்படையில் பணியிடம் நிரப்பப்படும். விண்ணப்பதாரர் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். சைவ மற்றும் அசைவ உணவு சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு: 1.7.2015-ல் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 18-35 வயதிற்குள் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு 18-32 வயதிற்குள் இருக்க வேண்டும். இதர பிரிவினருக்கு 18-30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் விருதுநகர் மாவட்டத்தில் வசிப்பராக இருக்க வேண்டும்.

இத்தகுதிகளுடன் விருதுநகர் மாவட்டத்திலுள்ள விடுதிகளில் முழு நேர சமையலர் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் பெயர், தகப்பனார் பெயர், பாலினம், பிறந்ததேதி, அஞ்சல் முகவரி அஞ்சல் குறியீட்டு எண்ணுடன், கல்வித் தகுதி, சாதி, முன்னுரிமை விவரம் ஏதேனும் இருப்பின் குறிப்பிடவும் (விதவை, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், கலப்புத் திருமணம்), 

வேலைவாய்ப்பு பதிவு விவரம் (இருப்பின்), குடும்ப அட்டை எண், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒன்று ஆகிய விவரங்களுடன் மற்றும் சான்றிதழ்களின் சான்று நகழுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 30.10.2015-ம் தேதி பிற்பகல் 5 மணிக்குள் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்குப் பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. கூர்ந்தாய்வுக்குப் பின் தகுதியுள்ள விண்ணப்பதாரருக்கு நேர்காணல் நடைபெறும். 

அதன் விவரம் தனியே தெரிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம் என ஆட்சித் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின்ஊதிய முரண்பாடுகள் அரசு ஆய்வு

ராமநாதபுரம்,:அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான 7 வது ஊதிய மாற்றத்தை 2006 ஜன., 1 முதல் தமிழக அரசு செயல்படுத்தியது. இதில் முரண்பாடு இருப்பதாகவும், அவற்றை களைய வலியுறுத்தியும், அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் போராடி வருகின்றன. மேலும் பல்வேறு சங்கங்கள் மற்றும் தனிநபர்கள் சார்பிலும் நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளன.

ஊதிய முரண்பாடுகளை ஆராய அரசு நிதிச்செயலர் அனைத்து துறை செயலர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் 7 வது ஊதிய மாற்றத்திற்கு முன் மற்றும் பின் ஒவ்வொரு பதவிகளின் ஊதியகட்டு விபரம், துறை வாரியாக ஊழியர்களின் எண்ணிக்கை, அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள், காலியிடங்கள், அதிகாரத்திற்கு உட்பட்ட பதவி, பணியாளர்களின் கல்வித்தகுதி, பணி தன்மை உள்ளிட்ட விபரங்களை நவ.,31 க்குள் அனுப்பி வைக்க வேண்டுமென, தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் குறை தீர்க்க கமிட்டி அமைக்க உத்தரவு

பள்ளி ஆசிரியர்களின் குறைகளைத் தீர்க்க, நான்கு கமிட்டிகள் அமைக்க வேண்டும் என, மாநிலங்களுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன் விவரம்:
* பள்ளி வாரியாக குறை தீர்ப்புக் குழு அமைத்து, ஆசிரியர்களின் குறைகளை கேட்க வேண்டும் 
* அதில், குறைகளைத் தீர்க்க முடியாவிட்டால், வட்டார வள மைய அதிகாரி தலைமையிலான, வட்டார கமிட்டி விசாரித்து, 30 நாட்களுக்குள் குறைகளைத் தீர்க்க வேண்டும்

* அதற்கு மேல், கலெக்டர் தலைமையில் அமைக்கப்படும் மாவட்ட கமிட்டி, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூடி, ஆசிரியர்களின் குறைகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் 
* இறுதியாக, மாநில அளவில், தொடக்கக் கல்வி இயக்குனரை தலைவராக கொண்ட கமிட்டி அமைக்க வேண்டும். இந்தக் கமிட்டி, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கூடி, குறைகளை தீர்த்து வைக்க வேண்டும்
* ஆசிரியரின் பணி விதிமுறைகள், பதவி உயர்வு, நிதி சார்ந்த கோரிக்கைகள், ஒழுங்கு நடவடிக்கை மற்றும் தண்டனை தொடர்பான குறைகளை, இந்தக் கமிட்டிகள் 
விசாரிக்காது. மத்திய மனிதவள அமைச்சகத்தின் இந்த உத்தரவால், எந்த பலனும் ஏற்படாது என, ஆசிரியர்கள் குறை கூறிஉள்ளனர். இதுகுறித்து, பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு தலைவர் பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது:ஏற்கனவே, அனைவருக்கும் கல்வி இயக்கக திட்டத்தில், கிராம கல்விக் குழு என்ற குறை தீர்ப்பு கமிட்டி இருக்கிறது; ஆனால், அது முறையாக செயல்படவில்லை என்ற குறையே இன்னும் போக்கப்படவில்லை. 
பணி விதிமுறைகள், பதவி உயர்வு, ஒழுங்கு நடவடிக்கை போன்றவற்றை ஆய்வு செய்யாமல், ஆசிரியர்களின் குறைகளை எப்படி தீர்க்க முடியும்? இவ்வாறு அவர் கூறினார்