யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

17/10/15

Test

அரசு பள்ளிகளின் அறிவியல் கண்டுபிடிப்பு தனியார் பள்ளி மாணவர்கள் வியப்பு

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்த நாள், இளைஞர் எழுச்சி நாளாக, நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அரசு பள்ளி மாணவர்களின் அறிவியல் தயாரிப்புகள் இடம் பெற்ற கண்காட்சி, சென்னைகிறிஸ்தவ கல்லுாரி பள்ளியில் நடந்தது. 


பள்ளிக்கல்வி அமைச்சர் வீரமணி, முதன்மை செயலர் சபிதா, இயக்குனர்கள் கண்ணப்பன், இளங்கோவன்மற்றும் ராமேஸ்வர முருகன் உள்ளிட்டோர், கண்காட்சியை பார்வையிட்டு,மாணவர்களை பாராட்டினர்.அரியலுார் மாவட்டம், காளையங்குறிச்சி, அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், கலாமின் சிறு வயது முதலான புகைப்படங்களையும், அவர் பணியாற்றிய ராக்கெட் திட்டங்களின் மாதிரிகளையும் வைத்திருந்தனர்.புதுக்கோட்டை பள்ளி மாணவர்கள், காற்றில் இயங்கும் விமானம் செய்துபறக்கவிட்டனர். இதேபோல், மாற்றுத்திறனாளிகளுக்கான கைத்தறி கருவி,குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் சாதனம் உள்ளிட்ட, பலவித அறிவியல் கண்டுபிடிப்புகள், கண்காட்சியில் இடம் பெற்றன.

அரசு பள்ளி மாணவர்களின்இந்த தயாரிப்புகளை, தனியார் பள்ளி மாணவர்கள் பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கம் கேட்டனர்; திறமையை வியந்து பாராட்டினர்.இதற்கிடையில், அனைத்து அரசு பள்ளிகளிலும், கலாம் குறித்த சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. பிற்பகல் 2:00 மணிக்கு, கலாமின், 10அறிவுரைகள் உறுதிமொழியாக ஏற்கப்பட்டன

மாணவர்களுக்கு சான்றுகள் வழங்க பள்ளிகள் ஒருங்கிணைப்பு மையம்

மாணவர்களுக்கான சான்றுகள் வழங்க, சில பள்ளிகளை ஒருங்கிணைத்து தனிமையங்கள் அமைத்து, 'ஆன்-லைனில்'சான்றுகள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.


பள்ளிகளில் 6,10, பிளஸ்2 படிக்கும் மாணவர்களுக்கு ஜாதி, இருப்பிடம், வருமான சான்றுகள் அந்தந்த பள்ளிகள் மூலம் விண்ணப்பித்து, தாலுகா அலுவலகங்களில் மொத்தமாக பெற்று வினியோகிக்கப்படுகிறது.இதற்காக, மாணவர்களிடம் ஆகஸ்ட், செப்டம்பரில் மனுக்கள் பெறப்பட்டு,அந்தந்த தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும். அங்கு வி.ஏ.ஓ.,க்கள், ஆர். ஐ.,க்கள், தாசில்தார் கையெழுத்து பெற்று, டிசம்பரில் சான்றுகள் வழங்கப்படும். சான்றுகள் பெற தாலுகா அலுவலகங்களுக்கு தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பலமுறை அலைய நேரிடும். இதனால் கல்விப்பணி பாதிக்கப்படும்.தற்போது, வருவாய் துறையில் சான்றுகள் 'ஆன்-லைனில்' வழங்கும் நடைமுறை உள்ளது. இதனால் மாணவர்களுக்கு சான்றுகள் பெற, தலைமை ஆசிரியர்கள் தாலுகா அலுவலகத்திற்கு அலைவதை தவிர்க்க, 10 முதல் 12 ம் வகுப்பு பள்ளிகளை ஒருங்கிணைத்து ஏதாவது ஒரு பள்ளியில் பொதுமையம் அமைக்கப்படுகிறது. இப்பொது மையங்களுக்கு தனி 'பாஸ் வேர்டு, ஐ.டி.' வழங்கப்படும்.

இந்த பொது மையத்திற்கு உட்பட்ட பள்ளிகள், மாணவர்களுக்கான சான்று பெற மனுக்களை வழங்க வேண்டும். அவை 'ஸ்கேன்' செய்யப்பட்டு, 'ஆன்-லைன்' மூலம் தாலுகா அலுவலகத்திற்கு அனுப்பப்படும். 'ஆன்-லைனில்' வி.ஏ.ஓ., ஆர்.ஐ., தாசில்தார் மனுவை பரிசீலித்து, தகுதியானவர்களுக்கு தாசில்தார் டிஜிட்டல் கையெழுத்துடன் சான்று வழங்க பரிந்துரை செய்வார்.தாசில்தார் வழங்கும் 3 வகையான சான்றுகளை அந்தந்த பள்ளியிலேயே 'பிரின்ட் -அவுட்' ஆக சான்றுகளை பெற்று கொள்ளலாம். இப் புதிய நடைமுறை யால் தலைமை ஆசிரியர்களுக்கு அலைச்சல் குறையும்.சிரமமின்றி பள்ளி மாணவர்கள் சான்றுகள் பெற முடியும்

உயர்நீதிமன்றத்துக்கு அக்.17 முதல் 25 வரை விடுமுறை

சென்னை உயர் நீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளைக்கு அக். 17 முதல் 25 வரை தசரா விடுமுறை நாள்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், 20-ஆம் தேதி விடுமுறைக் கால நீதிமன்றம் இயங்குகிறது.இதுதொடர்பாக உயர்நீதிமன்றப் பதிவாளர் (பொது) பொன்.கலையரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:


தசரா பண்டிகையை முன்னிட்டு, அக். 17 முதல் 25 வரை உயர்நீதிமன்றத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நாள்களில் விடுமுறைக்கால அலுவலர்கள் செயல்படுவர்.அவசர வழக்குகளுக்கான மனுக்களை 19-ஆம் தேதி பிற்பகல் 1.30 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.20-ஆம் தேதி காலை 10.30 மணி முதல் மாலை 4.45 மணி வரை விடுமுறைக்கால நீதிமன்றம் இயங்கும் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனுக்களை நீதிபதிகள் டி.மதிவாணன், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வும், மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்படும் மனுக்களை நீதிபதிகள் சி.டி.செல்வம், பி.என்.பிரகாஷ் ஆகியோர் அடங்கிய அமர்வும் விசாரணை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டீசல் விலை லிட்டருக்கு 95 பைசா உயர்வு

டீசல் விலை லிட்டருக்கு 95 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு, வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.அதேவேளையில், பெட்ரோல் விலையில் மாற்றமேதும் செய்யப்படவில்லை.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளைப் பொருத்து, பிரதி மாதம் 1 மற்றும் 15-ஆம் தேதிகளில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைக்கும்.அதன் அடிப்படையில், தில்லியில் ரூ.44.95-ஆக இருந்த ஒரு லிட்டர் டீசலின் விலையை ரூ.45.90-ஆக உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் வியாழக்கிழமை முடிவு செய்தன. இந்த மாதத்தில் மட்டும் இரண்டாவது முறையாக டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 1-ஆம் தேதி டீசல் விலை லிட்டருக்கு 50 பைசா உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.உள்ளூர் வரிகளின் அடிப்படையில் டீசல் விலை மாநிலங்களுக்கு மாநிலம் மாறுபடும்.

4 திட்டங்களுக்கு ஆதார் அட்டையை பயன்படுத்த அனுமதித்துஉச்சநீதிமன்றம்

முதியோர் ஓய்வூதியம், 100 நாள் வேலைவாய்ப்பு உள்ளிட்ட 4 சமூக திட்டங்களுக்கு ஆதார் அட்டையை விருப்பத்தின் பேரில் பயன்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.ஆதார் அட்டையை கட்டாயமாக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு மற்றும் ஆதார் கட்டாயமில்லை என்ற நீதிமன்றத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி மத்திய அரசு தொடர்ந்த வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.


அப்போது ஆதார் அட்டையை கட்டாயப்படுத்துவதால் தனி நபர்களின் அடிப்படை உரிமை எந்தவிதத்திலும் பாதிக்காது என மத்திய அரசின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதற்கு எதிர் மனுதாரர் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. எனினம் தற்போதைய சூழலில் முதியோர் ஓய்வூதியம், 100 நாள் வேலைதிட்டம், ஜன்தன் மற்றம் பி.எஃப் திட்டங்களுக்கு ஆதார் அட்டையை பொதுமக்கள் விருப்பத்தின் பேரில் பயன்படுத்தி கொள்ளலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர். எனினும் இது கட்டாயமில்லை என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். இது இடைக்கால உத்தரவு தான் என கூறிய நீதிபதிகள் வழக்கு விசாரணை தொடரும் என்றும் கூறினர்.

அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

பெண் ஆசிரியருக்கு, பாலியல் தொல்லை கொடுத்ததாக, நல்லூர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம், ஏற்காடு வல்லக்கடை பஞ்சாயத்துக்கு உட்பட்ட நல்லூரில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இதில், அப்பகுதியில் உள்ள, 90 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இதில், தலைமை ஆசிரியர் சத்யராஜ் மற்றும் மூன்று பெண் இடைநிலை ஆசிரியர் உள்பட, ஐந்து பேர் பணிபுரிந்து வருகின்றனர்.


இப்பள்ளியில் பணிபுரிந்து வரும் ஹஜ்ரீமா என்ற இடைநிலை ஆசிரியை, ஏற்காடு உதவி தொடக்கக்கல்வி அலுவலரிடம் புகார் அளித்தார். அப்புகாரில், கூறியிருப்பதாவது: பள்ளியின் தலைமை ஆசிரியர் சத்யராஜ், நான் வகுப்பு எடுக்கும் போது, வகுப்பறையில் அமர்ந்து கொண்டு கவனிப்பது மற்றும் பாலியல் சீண்டல் முயற்சிகளில் ஈடுபட்டும் வந்தார். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி, குழந்தைகள் இருந்த நிலையில், என்னை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி வந்தார்.முதல் பருவ தேர்வு விடுமுறை முடிந்து, பள்ளிக்கு வரும் போது, திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்காவிட்டால், தற்கொலை செய்து கொள்வேன் என, மிரட்டல் விடுத்தார். இதனால், கடும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் புகாரில் கூறியுள்ளார்.

இப்புகாரின் அடிப்படையில், ஏற்காடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் கேஷக்தாவூத், பள்ளியில் சக ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தி, அறிக்கையை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரிடம் சமர்பித்தார். இந்த அறிக்கை, இயக்குனரகத்துக்கு அனுப்பப்பட்டு, இயக்குனரின் வழிகாட்டுதலின் அடிப்படையில், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் தங்கராஜ், நேற்று நல்லூர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சத்யராஜை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். பாலியல் புகாரில் சிக்கி, தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் ஆன சம்பவம், ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு அரசுப் பள்ளி ஆசிரியரின் கனவு!

பல வருடங்களாக வண்ணம் தீட்டப்படாத அழுக்கான கட்டிடங்கள்,காய்ந்த சருகுகள் ,புல் ,சிறிய புதர்கள் நிரம்பிய வளாகங்கள், பராமரிக்கப்படாத மாணவர் கழிப்பறைகள்....


இவை பெரும்பாலான அரசுப்பள்ளிகளின் இன்றைய அடையாளங்கள். நகர்ப்பகுதியில் உள்ள ஒருபெண்கள் பள்ளியில் படிக்கும் மாணவியிடம் பேசியபோது அவர் சொன்ன கருத்துக்கள் இவை..“பள்ளியில் நன்றாக பாடம் சொல்லிக்கொடுக்கிறார்கள்.எல்லா பாட வேளைகளுக்கும் ஆசிரியர்கள் வந்துவிடுகிறார்கள்.

கழிப்பறைகள் பயன்படுத்த இயலாத நிலையில் இருப்பதால் காலையில் பள்ளிக்கு வந்துவிட்டால் மாலை வீட்டுக்குச் சென்றவுடன்தான் கழிப்பறைக்குச்செல்வோம்.”சுயநிதி தனியார் பள்ளிகளின் கட்டணக்கொள்ளைக்கு பயந்து தன் பெண் பிள்ளைகளை அரசுப்பள்ளியில் சேர்க்க நினைக்கும் பெற்றோர்க்கு ஏற்படும் முதல் பிரச்சனை இது.கழிப்பறை பராமரிப்புக்காக அரசால் நிதி ஏதும் ஒதுக்கப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டிற்கு பதிலாகபெற்றோர் ஆசிரியர் கழகத்தின் பெயரால் வசூல் செய்யப்படும் நிதியில் தினமும் கழிப்பறை சுத்தம் செய்ய துப்புறவுப் பணியாளர் ஒருவரை பணியமர்த்திக்கொள்வது இப்பிரச்சனைக்கான உடனடித் தீர்வாகும்.தலைமை ஆசிரியரும் ஆசிரியர்களும் மனது வைத்தால் எல்லாப் பள்ளிகளிலும் இதை நடை முறைப்படுத்த முடியும்.நான் பணிபுரியும் பள்ளி உட்பட சில பள்ளிகளில் இது நடைமுறையில் உள்ளது.ஒவ்வொரு ஆண்டும் 6 ம் வகுப்பில் சேரும் மாணவர் எண்ணிக்கை குறைந்து கொண்டு வரும் நிலையில் அரசுப்பள்ளிகளின் தற்போதைய அடையாளங்கள் மாற்றப்படாவிட்டால் மாணவர் இல்லா பள்ளிகளாக அரசுப்பள்ளிகள் மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை.

மாணவர் இல்லா பள்ளியில் ஆசிரியருக்கு என்ன வேலை? ஆசிரியர் இல்லா பள்ளியில் சங்கங்களுக்கு என்ன வேலை?ஊதிய முரண்பாடுகள்,பணிச்சுமை போன்ற வழக்கமான கோரிக்கைகளைத்தாண்டி ஆசிரியர்கள் போராட வேண்டிய உண்மையான பிரச்சனைகள் பல நம்முன்னே உள்ளன.கல்வி வியாபாரத்தில் வெற்றி பெரும் நோக்கத்தோடு 12 ம் வகுப்புபாடத்தை இரண்டு ஆண்டுகள் நடத்தி மாணவர்களை மனப்பாடம் செய்யும் இயந்திரங்களாக மாற்றும் சுயநிதிப் பள்ளிகளுக்கு ஆதரவாக இருக்கும் இந்த மனப்பாட கல்வி முறையில் மாற்றங்களைக் கொண்டுவரும் விதமாக ஆசிரியர் போராட்டம் அமைய வேண்டும்.பள்ளிக்கழிப்பறைகள் மற்றும் கட்டிடங்களில் தூய்மை பராமரிக்கப்பட்டு தயக்கமில்லாமல் ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்கும் சூழலை உருவாக்க ஆசிரியர்கள் போராட வேண்டும்.

பள்ளி நிதியை தவறாக பயன்படுத்தும் நோக்கத்தோடு மாணவர் எண்ணிக்கைஅதிகமுள்ள நகர்ப்புற பள்ளிகளில் பணியேற்க லஞ்சப் பணம் லெட்சங்களில் கொடுத்து பணிமாறுதல் பெற்றுவரும் சில ஊழல் தலைமை ஆசிரியர்களுக்கு எதிராக ஆசிரியர் போராட்டம் அமைய வேண்டும்.அரசுப்பள்ளிகளின் தரம் உயர்ந்தால் மாணவர் சேர்க்கை தானாக உயரும்.மாணவப் பருவத்தின் உண்மையான அடையாளத்தை இழந்து வரும் இந்த தலைமுறை மாணவர்களை மீட்டெடுக்கும் விதமாக ஆசிரியர் போராட்டம் அமைய வேண்டும்.போராடாமல் எந்த மாற்றமும் ஏற்பட்டதில்லை என்பது வரலாறு.சங்கங்களின் பெயரால் பிளவுபட்டு போட்டி அரசியலில் சிக்கிவிடாமல் இதுபோன்ற ஆராக்கியமான மாற்றம் வேண்டி ஆசிரியர் சங்கங்கள் போராட வேண்டும் என்பதே என்னைப்போன்ற பெரும்பான்மையான அரசுப்பள்ளி ஆசிரியர்களின் கனவு.
கி.முருகன்
முதுகலை ஆசிரியர
்அரசு மேல் நிலைப் பள்ளி
புதுக்கோட்டை உள்ளூர்
தஞ்சாவூர் மாவட்டம்.

‘தங்கப் பரிசு போட்டி பற்றி விளம்பரத்தில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை’: தமிழக மக்களுக்கு மட்டும் தடை விதித்து மோசடி - அமேசான் நிறுவனம் மீது போலீஸில் புகார்

ஆன்லைன் சிறப்பு விற்பனைக்கான தங்கப் பரிசு போட்டியில் தமிழக மக்கள் மட்டும் பங்கேற்க முடியாது என அறிவித்துள்ள ‘அமேசான்’ நிறுவனம் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.குறைந்த விலைக்கு பொருட்கள் கிடைப்பதாலும், வீட்டில் இருந்தபடியே தேவையானவற்றை பெற்றுக்கொள்ள முடியும் என்பதாலும் ஆன்லைன் வர்த்த கம் மீதானமோகம் மக்களிடம் அதிகரித்து வருகிறது. 

இதைப் பயன்படுத்தி, சிறப்புத் தள்ளுபடி விற்பனைகளை பல நிறுவனங் கள் அவ்வப்போது அறிவிக்கின்றன.அந்த வகையில், ‘கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல்’ என்ற சிறப்பு தள்ளுபடி விற்பனையை பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ‘அமேசான்’, சமீபத்தில் அறிவித்தது. இந்த திட்டத்தின் ஒரு அம்ச மாக, அமேசான் ஆன்லைன் அப்ளி கேஷனை பயன்படுத்தி ரூ.299-க்குமேல் பொருட்களை வாங்குபவர்களுக்கு தின மும் ஒரு கிலோ தங்கம் பரிசாக வழங்கும் போட்டி ஒன்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், இந்தப் போட்டியில் தமிழகத் தில் வசிப்பவர்கள் பங்கேற்க முடியாது என்று அமேசான் அறிவித்துள் ளது. தங்கப் பரிசுப் போட்டி பற்றி விளம்பரத்தில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை. இது தமிழகத்தில் இணையம் மூலம்பொருட் களை வாங்கும் பலரை அதிர்ச்சியடைய வைத்தது. இதனால் அமேசானுக்கு எதிராக சமூக வலைதளங் களில் கருத்துக்கள் பகிரப்பட்டன.இந்நிலையில், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன், கோவை மாநகர காவல் ஆணையரிடம் அமேசான் மீது புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில், ‘ஒரு கிலோ தங்கம் வெல்லலாம் என்று தமிழக நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்த அமேசான் நிறுவனம், தமிழ கத்தை சேர்ந்தவர்கள் அந்தப் போட்டியில் பங்கேற்க முடியாது என்று கூறி தமிழக மக்களை ஏமாற்றியுள்ளது. எனவே, அந்நிறுவனத்தின் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்ட அறிக்கையில், ‘தங்கம் வெல்லலாம் என்ற ஆசையை தமிழக மக்களிடத்தில் தூண்டிவிட்டு தங்களது இணையதளத்தின் மூலம் பொருட்களை வாங்க வைத்து கடைசியாக உங்களுக்கு தங்கம் இல்லை என ஏமாற்றுகிற மோசடி வேலையை அமேசான் உள்நோக்கத்துடன் செய்துள் ளது. தமிழக மக்கள் போட்டியில் பங்கேற்க முடியாது என்றால், பிறகு எதற்காக தமிழகஊடகங்களில் விளம்பரம் செய்ய வேண்டும் இத்தகைய நூதன மோசடியில் ஈடுபட்டுள்ள அமேசான் நிறுவனத்தின் மீது தமிழக அரசு உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியுள் ளார்.

அமேசானுக்கு தமிழ் அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.இது தொடர்பாக அமேசான் நிறுவனத்தின் இந்திய செய்தித் தொடர்பாளர் மாதவி, ‘திஇந்து’விடம் கூறும்போது, ‘‘தமிழகத்தில் தங்க பரிசுத் திட்டம் போன்ற போட்டிகளை நடத்த முடியாது. மீறி நடத்தினால், அது தமிழக அரசின் பரிசுப் பொருட்கள் சலுகை தடைச் சட்டம் 1979-ன்படி குற்றமாகிவிடும். எனவேதான்தமிழகத்தில் தங்க பரிசுப் போட்டியை நடத்தவில்லை” என்றார்.

ஆசிரியர் போராட்டத்தால்அகவிலைப்படி தாமதம்

அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு தாமதம் ஆவதால், தமிழக அரசுஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.ஆறாவது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. கடந்தமாதம், 6 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. 


இந்த உயர்வு, ஜூலை மாதம் முதலே கணக்கிட்டு வழங்கப்படும்.பொதுவாக, மத்திய அரசு ஊழியர்களுக்கு, அகவிலைப்படியை உயர்த்தியதும், தமிழக அரசு ஊழியர்களுக்கும், அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும். ஆனால், ஒரு மாதமாகியும், அறிவிப்பு வெளியாகவில்லை. இது, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம், கடும் அதிருப்தியைஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, தலைமைச் செயலக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:அகவிலைப்படியை உயர்த்துவதற்கான கோப்பில், முதல்வர் கையெழுத்து போட்டு விட்டார். அறிவிப்பு வெளியாக இருந்தபோது, ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்; எனவே, அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டது; முதல்வரிடம் இருந்து, உத்தரவு வந்தபிறகே, அறிவிப்பு வெளியாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.-DINAMALAR

ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுக்கு இன்று கலந்தாய்வு

பட்டதாரி ஆசிரியர்களுக்கு முது நிலை ஆசிரியர்களாக பதவி உயர்வுக்கான கலந்தாய்வு இன்று மாநிலம் முழுவதும் நடைபெறு கிறது.தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக பணி புரிபவர்களுக்குமுதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு அளிக்கும் கலந்தாய்வு இன்று நடைபெறுகிறது.

இந்த கலந்தாய்வில் மாநிலம் முழுவதிலிருந்து 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள் கிறார்கள். இந்த கலந்தாய்வு இணையதளம் மூலம் நடத்தப் படும். ஒவ்வொரு மாவட்டத் திலும் முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களில் நடத்தப் படுகிறது என்று பள்ளிக் கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

பதவி உயர்வு எப்போது? முதுநிலை ஆசிரியர்கள் தவிப்பு

முதுகலை பட்டம் பெற்றுள்ள, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களால், 20 ஆண்டுக்குப் பின்னரே, தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற முடிகிறது. அதுவும்,பணிமூப்பு அடிப்படையில் தான் கிடைக்கிறது. 


சீனியாரிட்டி இல்லாதவர், ஓய்வு பெறும் வரை, முதுநிலை பட்டதாரி ஆசிரியராகத் தான் இருக்க வேண்டும்.இந்த வேறுபாட்டால், பட்டதாரியாக பணியில் சேர்ந்த ஆசிரியர்களின் கட்டுப்பாட்டில், அவர்களை விட அதிகமாக படித்துள்ள, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றும் நிலை ஏற்படுகிறது; ஊக்க ஊதியத்திலும் முரண்பாடு இருக்கிறது.இந்த வேறுபாடுக்கு காரணமான, அரசாணையை மாற்றக் கோரி, முதுநிலை ஆசிரியர்கள், 10 ஆண்டுகளாக போராடி வருகின்றனர்; ஆனால், பிரச்னை தீர்க்கப்படவில்லை. இந்த கோரிக்கையையே, அரசு கிடப்பில் போட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இதுகுறித்து, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் சுரேஷ் கூறுகையில், ''இந்தப் பிரச்னையை தீர்க்க, முன்னாள் இயக்குனர்கள் கருணாகரன் மற்றும் ஜெகநாதன் தலைமையில், இரண்டு கமிட்டிகளை, அரசு அமைத்தது. இதுவரை, அதன் அறிக்கையை வெளியிடாமல் கிடப்பில் வைத்துள்ளது,'' என்றார்.

இந்நிலையில், அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 1,200 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை, பதவி உயர்வு மூலம் நிரப்புவதற்கான, இடமாறுதல் கலந்தாய்வு, இன்று நடத்தப்படுகிறது. இதில், 650 இடங்களை நிரப்ப அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். ஆனால், பட்டதாரி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற வாய்ப்பு இருப்பதால், முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வில் பங்கேற்க, ஆர்வம் இல்லாமல் இருக்கின்றனர்.எனவே, காலியிடங்களை நிரப்ப, பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் இருந்து, தொகுப்பூதியம் கொடுத்து, தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

3 ஆண்டுகளில்...

அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள், 10 ஆண்டுகளுக்கு பின், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறுகின்றனர். அதில், மூன்று ஆண்டுகள் பணியாற்றிய பின், பணிமூப்புப்படி, மாவட்ட கல்வி அதிகாரி அல்லது மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக, நியமிக்கப்படுகின்றனர். அதன்பின், மூன்று ஆண்டுகளில், முதன்மை கல்வி அதிகாரியாக முடியும்.

குரூப் 2 தேர்வு: 22 பணியிடங்களுக்கு அக். 19-இல் கலந்தாய்வு தொடக்கம்

குரூப் 2 தொகுதியில் காலியாகவுள்ள 22 பணியிடங்களுக்கு அக்டோபர் 19, 20 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.இதுகுறித்து, தேர்வாணையம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

குரூப் 2 தொகுதியில் அடங்கிய பணிகளுக்கு (நேர்காணல் அல்லாத) 2012-ஆம் ஆண்டு நவம்பரில் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.அதில், தேர்வானவர்களுக்கு இதுவரை 5 கட்டமாக கலந்தாய்வுகள் நடத்தப்பட்டன. மேலும், காலியாகவுள்ள 22 பணியிடங்களுக்கு ஆறாவது கட்டமாக கலந்தாய்வு சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் வரும் 19, 20 ஆகிய தேதிகளில் நடத்தப்படும்.கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு- கலந்தாய்வுக்கான தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு விண்ணப்பதாரர்களுக்கு விரைவஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.மேலும், அழைப்புக் கடிதத்தை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.வரத் தவறுபவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது என தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

ஓய்வூதியதாரர்கள் ஆண்டுதோறும் வாழ்வுறுதிச் சான்றிதழ் அளிக்க வேண்டும்: மத்திய அரசு உத்தரவு

ஓய்வூதியம் பெறுவோர் தங்களது வாழ்வுறுதிச் சான்றிதழை ஆண்டுதோறும் நவம்பர் மாதம்சம்பந்தப்பட்ட வங்கிகளில் அளிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக, மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:


வங்கிகள் தடையின்றி சேவையை வழங்குவதற்கு ஏதுவாக, ஓய்வூதியம் பெறுவோர் தங்களது வாழ்வுறுதிச் சான்றிதழை ஆண்டுதோறும் நவம்பர் மாதம், சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைகளில் அளிக்க வேண்டும்.

அந்தச் சான்றிதழில், தற்போதைய முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய, மாநில அரசுத் துறைகள், ராணுவம், ரயில்வே உள்ளிட்ட துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு அரசு சார்பில் வங்கிகள் ஓய்வூதியம் வழங்கி வருகின்றன.

2016-ல் பி.எஃப். பணத்தை ஆன்லைன் மூலம் எடுக்கும் வசதி: கே.கே.ஜலன்

2016 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஊழியர் வருங்கால வைப்பு நிதியை ஆன்லைன் மூலம் எடுக்கும் வசதி செய்யப்படும் என்று வருங்கால வைப்பு நிதி ஆணையம் தெரிவித்துள்ளது.பி.எஃப். தொகைக்கான விண்ணப்பங்களைப் பெற்றவுடன் 3 மணி நேரத்துக்குள் உரியவர்களுக்கு பணம் கிடைக்குமாறு இந்த ஆன்லைன் வசதி செய்யப்படவிருக்கிறது.

இது நடைமுறைக்கு வந்தவுடன் பி.எஃப். சந்தாதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.பிறகு உரிய தொகை சந்தாதாரர்களின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும்.இது குறித்து மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையர் கே.கே.ஜலன் கூறுகையில், ஆன்லைன் பி.எப். பண எடுப்பு முறையை அனுமதிக்க மத்திய தொழிலாளர் துறை அமைச்சகத்திடம் அனுமதி கேட்டு கடிதம் எழுதியுள்ளோம். மார்ச் மாத இறுதியில் இத்திட்டம் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம்.பிஎஃப் பண எடுப்பு முறையை அறிமுகம் செய்வதற்காக சில அனுமதிகளை நாங்கள் கோரியுள்ளோம். இத்திட்டத்தை அறிமுகம் செய்வதற்கு முன்பாக தங்கள் ஆதார் விவரங்களைக் குறிப்பிடும் சந்தாதாரர்களின் விண்ணப்பங்களை மிகவிரைவில் சரிபார்க்க உறுதி அளிக்கிறோம்.இந்தக் காலக்கட்டத்தில் ஆதார் எண்கள் உள்ள பிஎப் சந்தாதாரர்களின் விண்ணப்பங்கள்சரிபார்க்கப்பட்டு 3 நாட்களுக்குள் பணம் அளிக்கப்படும் என்று கூறினார்.

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு - தமிழக அரசு ஆணை வெளியீடு(தமிழில்...)






16/10/15

கருவூலத்தில் அலுவலக உதவியாளர் பணி

தூத்துக்குடி கருவூலத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:


கருவூல கணக்குத் துறையில், தூத்துக்குடி மாவட்டக் கருவூல அலகில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பதவிக்கு தகுதி வாய்ந்த நபர்கள் தேர்வு செய்வதற்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை மூலம் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி வயது மற்றும் பிற தகுதிகள் பெற்றிருப்பவர்கள் இன சுழற்சி முறையில் உள்ளவர்கள் மட்டும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து மாவட்டக் கருவூல அலுவலர், மாவட்டக் கருவூலம், 329,சிவந்தாகுளம் சாலை, தூத்துக்குடி என்ற முகவரிக்கு அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப படிவம், கல்வித்தகுதி, வயது மற்றும்  பிற தகுதிகள் இன சுழற்சி விவரங்களை  www.thoothukudi.nic.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 திட்டங்களுக்கு ஆதார்அட்டையை பயன்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி

தியோர் ஓய்வூதியம், 100 நாள் வேலைவாய்ப்பு உள்ளிட்ட 4 சமூக திட்டங்களுக்கு ஆதார் அட்டையை விருப்பத்தின் பேரில் பயன்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆதார் அட்டையை கட்டாயமாக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு மற்றும் ஆதார் கட்டாயமில்லை என்ற நீதிமன்றத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி மத்திய அரசு தொடர்ந்த வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆதார் அட்டையை கட்டாயப்படுத்துவதால் தனி நபர்களின் அடிப்படை உரிமை எந்தவிதத்திலும் பாதிக்காது என மத்திய அரசின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதற்கு எதிர் மனுதாரர் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. எனினம் தற்போதைய சூழலில் முதியோர் ஓய்வூதியம், 100 நாள் வேலை திட்டம், ஜன்தன் மற்றம் பி.எஃப் திட்டங்களுக்கு ஆதார் அட்டையை பொமுக்கள் விருப்பத்தின் பேரில் பயன்படுத்தி கொள்ளலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர். எனினும் இது கட்டாயமில்லை என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். இது இடைக்கால உத்தரவு தான் என கூறிய நீதிபதிகள் வழக்கு விசாரணை தொடரும் என்றும் கூறினர்.

இ-சேவை மையங்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் அருள்மொழி நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். உடன் தேர்வாணைய செயலாளர் மா.விஜயகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபனா, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன நிர்வாக இயக்குநர் ஜே.குமரகுருபரன். படம்: ம.பிரபு


இ-சேவை மையங்கள் மூலம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர் வாணைய (டி.என்.பி.எஸ்.சி) தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க லாம் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தலைவராக பொறுப்பேற் றுள்ள கே.அருள்மொழி கூறியுள்ளார்.

சென்னையில் நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இதுபற்றி அவர் கூறியதாவது:

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம் மற்றும் 15 மண்டல அலுவலகங்கள் என 280 இடங் களில் நடத்தப்படும் இ-சேவை மையங்களில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணைய வழி விண்ணப்ப சேவைகள் அறிமுகப்படுத்தப்படு கின்றன.

இ-சேவை மையங்களில் ரூ.50 செலுத்தி நிரந்தரப்பதிவு, ரூ.30 செலுத்தி தேர்வுகளுக்கு விண்ணப் பம், ரூ.5 செலுத்தி விண்ணப்பங் களில் மாறுதல்கள், ரூ.20 செலுத்தி விண்ணப்பங்களில் மாறுதல் செய்து விண்ணப்ப நகல் பெறு வது உள்ளிட்ட சேவைகளை பெற லாம். மேலும் நிர்ணயிக்கப் பட்ட தேர்வுக்கட்டணத்தையும் செலுத்தலாம். பணம் செலுத்தியதற் கான ஒப்புகைச் சீட்டினையும் பெற்றுக் கொள்ளலாம். மேற்படி சேவைகள் எல்காட் நிறுவனத் தால் நடத்தப்படும் இ-சேவை மையங்களுக்கும் விரைவில் விரிவுபடுத்தப்படும்.

குரூப் 4 தேர்வுகளுக்கான அறிக்கை விரைவில் வெளியிடப் படும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொடர்ந்து வெளிப்படைத் தன்மையுடன் விண்ணப்பதாரர் நேய அணுகு முறையுடன் இயங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சந்திப்பின்போது தமிழ் நாடு அரசு பணியாளர் தேர் வாணைய செயலாளர் மா.விஜய குமார், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபனா, இணை இயக்குநர் சரஸ்வதி, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன நிர்வாக இயக்குநர் ஜே.குமரகுருபரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கண்ணாடி சிலிண்டர்: மத்திய அரசு திட்டம்

சமையல் சிலிண்டரில் உள்ள, எரிவாயுவின் அளவை துல்லியமாக காணும் வகையில், கண்ணாடியால் ஆன சிலிண்டரை வினியோகிக்க, மத்திய அரசுதிட்டமிட்டுள்ளது. எடை குறைவான சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்படுவதாக, வாடிக்கையாளர்களிடம் இருந்து, அதிகளவில் புகார்கள் வந்ததால், மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.



உடையாத கண்ணாடியில், எரிவாயுவின் அளவை காணும் வகையில் சிலிண்டர்கள் இருந்தால், எடை குறைவு மற்றும் எரிவாயு திருட்டு போன்றவை தடுக்கப்படும்.ஆனால், இந்த கண்ணாடி சிலிண்டரின் விலை, தற்போதைய விலையை விட இரு மடங்காகும். டிபாசிட் தொகையும், 1,400 ரூபாயில் இருந்து, 3,000 ரூபாயாக உயர வாய்ப்புள்ளது. வரும் மார்ச் முதல், இந்த சிலிண்டர்கள் பயன்பாட்டுக்கு வருகிறது. துவக்கத்தில், இவற்றை வெளிநாட்டில் இருந்து, இறக்குமதி செய்யவும், தற்போதுள்ள பழைய சிலிண்டர்களை, கிராமப் பகுதிகளில் பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.


தற்போது வீட்டு உபயோகத்துக்கு, 14.2 கி., எடையுள்ள சிலிண்டர்வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு, 12 சிலிண்டர்கள், மானிய விலையில் வழங்கப்படுகின்றன. சிலிண்டர் விலையான, 605 ரூபாயை, வாடிக்கையாளர்கள் முழுவதுமாக செலுத்திய பின், அவர்களது வங்கி கணக்கில், மானிய தொகை, 198 ரூபாயை, மத்திய அரசு வரவு வைக்கிறது.