யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

20/10/15

நவ.1 முதல் 91 அங்காடிகளில் கிலோ ரூ.110-க்கு துவரம் பருப்பு விற்பனை: தமிழக அரசு

தமிழகம் முழுவதும் நவம்பர் 1-ம் தேதி முதல் 91 விற்பனை அங்காடிகளில் கிலோ 110 ரூபாய் என்ற விலையில் துவரம் பருப்பு விற்பனை செய்யப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:


'தற்போது தமிழ்நாட்டில் 58 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் வாயிலாக தரமான காய்கறிகள் நுகர்வோருக்குக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்ற ஆண்டு துவரம்பருப்பு, உளுந்தம் பருப்பு, மிளகாய், புளி போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை வெளிச் சந்தையில் உயர்ந்த போது 'விலை நிலைப்படுத்தும் நிதியம்' பயன்படுத்தப்பட்டு, கூட்டுறவு விற்பனை நிலையங்களின் மூலம் இந்த பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன.மேலும், துவரம் பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு ஆகியவற்றை குறைந்த விலையில் விற்கும் ஒரு விற்பனைத் திட்டம், 24.5.2015 அன்று முதல்வர் ஜெயலலிதாவால் துவக்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் 25 கூட்டுறவு விற்பனை மையங்கள் மற்றும் தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழகத்தின் அங்காடிகள் மூலம் துவரம் பருப்பு அரை கிலோ பாக்கெட் 53.50 ரூபாய் என்ற விலையிலும், உளுந்தம் பருப்பு ஏ ரகம் அரை கிலோ 56 ரூபாய் என்ற விலையிலும், பி ரகம் அரை கிலோ 49.50 ரூபாய் என்ற விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.அண்மையில், பருப்பு அதிகம் உற்பத்தி செய்யப்படும் வட மாநிலங்களில் பருவ மழை பொய்த்ததன் காரணமாக பருப்பு வகைகள் போதிய அளவு உற்பத்தி செய்யப்படவில்லை. எனவே, துவரம் பருப்பு விலை வெளிச்சந்தையில் அபரிமிதமாக உயர்ந்துள்ளது.இந்த விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு வெளிநாட்டிலிருந்து 5000 மெட்ரிக் டன் முழு துவரை இறக்குமதி செய்ய முடிவெடுத்தது.

இது பற்றித் தெரிந்தவுடன் முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்படி, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும்துவரையிலிருந்து 500 மெட்ரிக் டன் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யவேண்டும் என தமிழக அரசால் மத்திய அரசு கேட்டுக்கொள்ளப்பட்டது. அதன்படி, மத்திய அரசு, தமிழ்நாட்டிற்கு 500 மெட்ரிக் டன் துவரையை வழங்க உத்தரவிட்டு, அது சென்னை துறைமுகத்தில் பெறப்பட்டுள்ளது.இவ்வாறு பெறப்பட்ட துவரை, அரவை ஆலைகள் மூலம் துவரம் பருப்பாக மாற்றப்பட்டு, கூட்டுறவு பண்டக சாலைகள் மற்றும் தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழகத்தினால் நடத்தப்படும் பல்பொருள் விற்பனை அங்காடிகள் மூலம் விற்பனை செய்யப்படும். இந்த துவரம் பருப்பு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு, 1/2 கிலோ பாக்கெட்டு 55 ரூபாய் என்ற விலையிலும்,1 கிலோ பாக்கெட்டு 110 ரூபாய் என்ற விலையிலும் விற்பனை செய்யப்படும்.சென்னையில் டிசியுஎஸ், வடசென்னை, சிந்தாமணி மற்றும் இதர கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் 36 கூட்டுறவு பண்டக சாலைகள், 20 அமுதம் விற்பனை அங்காடிகள் என மொத்தம் 56 விற்பனை நிலையங்கள் மூலம்விற்பனை செய்யப்படும்.

மேலும், மதுரையில் 11 கூட்டுறவு பண்டக சாலை மூலமும், திருச்சியில் 14 பண்டக சாலைகள் மூலமும், கோயம்புத்தூரில் 10 விற்பனை அங்காடிகள் மூலமும் துவரம் பருப்பு விற்பனை செய்யப்படும். மொத்தத்தில் 91 விற்பனை அங்காடிகள் மூலம் துவரம் பருப்பு விற்பனை செய்யப்படும். இந்த விற்பனை 1.11.2015 அன்று துவங்கப்படும்.இதுவன்றி, பொது விநியோகத் திட்டத்தின்கீழ் குடும்ப அட்டை ஒன்றுக்கு வழங்கப்படும் ஒரு கிலோ துவரம் பருப்பு / கனடா பருப்பு, ஒரு கிலோ உளுந்தம் பருப்பு தலா 3 கிலோ 30 ரூபாய் என்ற விலையிலும், ஒரு லிட்டர் பாமாலின் எண்ணெய் 25 ரூபாய்க்கும் தொடர்ந்து வழங்கப்படும்'என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

DSE :BT TRANSFER APPLICATION & SPOUSE CERTIFICATE FORM

ஆசிரியர் பயிற்றுனராக பணிபுரிய பட்டதாரி ஆசிரியர் யாரும்முன் வரவில்லை

மொகரம் அரசு விடுமுறை அக்டோபர் 24-ம் தேதிக்கு (சனி கிழமைக்கு) மாற்றம் - வெள்ளி கிழமை வேலைநாள்...!

அக்டோபர் 23-ம் தேதியை மொகரம் விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவித்திருந்தது. மொகரம் மாதத்தின் முதல் நாளில் பிறைதெரிந்தால் 10-வது நாளில் மொகரம் திருநாள் கடைப்பிடிக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு முதல் நாளான அக்டோபர் 13-ம் தேதி பிறை சரியாகத் தெரியவில்லை. மறுநாள் தெரிந்தது. 


இதனால், 10-ம் நாளான அக்டோபர் 24-ம் தேதியை மொகரம் விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தலைமை காஜி வேண்டுகோள் விடுத்தார்.இதனை பரிசீலனை செய்த தமிழக அரசு, அக்டோபர் 23-ம்தேதிக்குப் பதிலாக 24-ம் தேதியை மொகரம் பொது விடுமுறையாக அறிவித்து அரசாணை பிறப்பித்துள்ளது.

18/10/15

ஆசிரியர்களுக்கு ஓர் ஆறுதல் செய்தி; மிஸ்டர் கழுகு:ஜூனியர் விகடன்

‘ஆசிரியர்கள் போராட்டம் ஆட்சிக்கு பெரிய சிக்கலை உருவாக்கிவிட்டதாமே?” ‘‘ஆசிரியர் சங்கங்களின் கூட்டு குழுவான ஜாக்டோ அமைப்பு கடந்த 8ம் தேதி தமிழகத்தில் பள்ளிகளில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தியது.
ஆசிரியர்கள்
மற்றும் அரசு ஊழியர்களின்
முக்கியமான கோரிக்கை 6-வது ஊதிய
ஊயர்வு கமிஷன் நிர்ணயித்த சம்பள
விகிதங்களில் உள்ள குளறுபடிகளை
நீக்க வேண்டும் என்பது. இதை வைத்து
ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் சங்கங்கள்
நீண்ட நாள் போராட்டங்கள் நடத்தி வந்தன.
ஆசிரியர் சங்கங்களின் இந்தப் போராட்டம்
சட்டசபை தேர்தலில் பெரிய அளவில்
பாதிப்பை ஏற்படுத்தும் என்று உளவுத்
துறையினர் ஆளும் கட்சி மேலிடத்தின்
கவனத்துக்குக் கொண்டு சென்றனர்.
இதையடுத்து தலைமைச்செயலகத்தில்
அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன்
தலைமையில் தலைமைச்செயலாளர்,
நிதித்துறை செயலாளர்,
பொதுத்துறை செயலாளர் ஆகியோர்
கூடிய அவசர கூட்டம் நடந்தது.
இதையடுத்து நிதித் துறை
செயலாளர் சண்முகம் அனைத்து துறை
முதன்மைச் செயலாளர்களுக்கும் ஓர்
உத்தரவை அவசர அவசரமாக அனுப்பி
வைத்தார். அதில் 6-வது
ஊதியக்குழுவில் என்னென்ன
முரண்பாடுகள் இருக்கின்றன. அதை
எப்படி தீர்ப்பது என்று அறிக்கை
அளிக்கும்படி அந்த உத்தரவில்
கூறப்பட்டிருந்தது. விரைவில்
ஆசிரியர்கள் பிரச்னை தீரலாம்!”

துண்டிக்கப்படும் இணைப்புக்கு ரூ.1 இழப்பீடு வழங்க வேண்டும் : டிராய் அதிரடி உத்தரவு

வாடிக்கையாளர்கள் செல்போனில் பேசும்போது திடீரென இணைப்பு துண்டிக்கப்பட்டு (கால் டிராப்) விடுகிறது. இப்படி துண்டிக்கப்படும் இணைப்புக்கும் தொலை தொடர்பு நிறுவனங்கள் கட்டணம் வசூலித்து வந்தன. இது தொடர்பாக டிராய்க்கு அதிகளவில் புகார்கள் வந்தன. இந்நிலையில் டிராய், நேற்று வெளியிட் ட உத்தரவில் கூறியிருப்பதாவது;

துண்டிக்கப்படும் இணைப்புகளுக்கு ஒரு ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும். 


நாள் ஒன்றுக்கு 3 இணைப்புக்கு மட்டும் இழப்பீடு வழங்கப்படும். இணைப்பு துண்டிக்கப்பட்ட 4 மணி நேரத்துக்குள் வாடிக்கையாளர்களுக்கு இது குறித்து எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும். அதில் வாடிக்கையாளர் கணக்கில் செலுத்திய விவரத்தை தெரிவிக்க வேண்டும். இதுபோல் போஸ்ட் பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு அடுத்த மாத பில்லில் இதுகுறித்து தெளிவாக தெரிவிக்க வேண்டும். இதை வரும் ஜனவரி 1ம் தேதிக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வுத் தேதி மாற்றப்படுமா?

இரண்டு போட்டித் தேர்வுகள் ஒரே தேதியில் வருவதால், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப்-2 தேர்வு தேதி மாற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு வேலைத் தேடும் பல லட்சம் பட்டதாரி இளைஞர்களிடையே எழுந்துள்ளது.


கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) ஆண்டுக்கு இருமுறை ஜூன், டிசம்பர் மாதங்களில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.
வரும் டிசம்பர் மாதத்துக்கான "நெட்' தேர்வு அறிவிப்பை, கடந்த செப்டம்பர் மாதம் சி.பி.எஸ்.இ. வெளியிட்டது. தேர்வானது டிசம்பர் 27-ஆம் தேதி நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வை தமிழகம் உள்பட நாடு முழுவதும் இருந்து 7 லட்சத்துக்கும் அதிகமானோர் ஆண்டுக்கு ஆண்டு எழுதி வருகின்றனர்.

இதற்கிடையே, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-2 (ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-2) தேர்வுக்கான அறிவிப்பு கடந்த அக்டோபர் 12-ஆம் தேதி வெளியிட்டது. இந்தத் தேர்வும் டிசம்பர் 27-ஆம் தேதி நடத்தப்படுகிறது. இதற்கு இளநிலை பட்டப் படிப்பு குறைந்தபட்ச கல்வித் தகுதியாகும். இந்த நிலையில், முதுநிலை பட்டப் படிப்பை முடித்து "நெட்' தேர்வை எழுதுபவர்களில் பலர், அரசுப் பணியைப் பெறும் நோக்கத்தில் டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் குரூப்-1, குரூப்-2 தேர்வுகளையும் எழுதுவது வழக்கம்.

இந்த முறை இந்த இரண்டு தேர்வுகளும் ஒரே நாளில் (டிசம்பர் 27) வருவதால், குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து "நெட்' "செட்' சங்க நிறுவனர் தலைவர் சுவாமிநாதன் கூறியது:

"நெட்' தேர்வை ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திலிருந்து 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் எழுதுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் அரசுப் பணிகளுக்கான தேர்வுகளையும் எழுதி வருகின்றனர். இந்தத் தேர்வுக்கான அறிவிப்பு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதமே அறிவிக்கப்பட்டுவிடும். இதுபோல் 2015 டிசம்பர் மாதத் தேர்வும் செப்டம்பர் மாதமே அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் "நெட்' தேர்வு நடத்தப்படும் அதே தேதியில், குரூப்-2 தேர்வை டி.என்.பி.எஸ்.சி. நடத்த இருப்பதால் ஆயிரக்கணக்கானோர் தேர்வெழுத முடியாத நிலை ஏற்படும்.

முதுநிலை பட்டப் படிப்பையும், அதற்கு மேலும் படித்துவிட்டு பல ஆண்டுகளாக வேலைவாய்ப்புக்காகக் காத்திருப்பவர்களின் நிலையைக் கருத்தில்கொண்டு, குரூப்-2 தேர்வு தேதியை மாற்றியமைக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அதிகாரி ஒருவர் கூறியது: "நெட்' தேர்வு தேதி என்பன உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அறிந்து, ஆலோசித்துதான் குரூப்-2 தேர்வு தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, தேதியை மாற்றியமைக்க வாய்ப்பு இல்லை. இருந்தபோதும் தேர்வாணையத் தலைவருடன் இதுதொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்றார்.

பி.எட். சேர்க்கை கலந்தாய்வு நிறைவு

இளநிலை ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்பான பி.எட். சேர்க்கைக்கான இரண்டாம் கட்டக் கலந்தாய்வு வெள்ளிக்கிழமையுடன் முடிந்த நிலையில், 95 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன.


தமிழகம் முழுவதும் 21 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 1,777 இடங்களில் 2015-16-ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் நடத்தியது. முதல் கட்ட கலந்தாய்வில் ஆயிரம் இடங்கள் நிரம்பின.
இரண்டாம் கட்ட கலந்தாய்வின் முடிவில் 95 சதவீத பி.எட். இடங்கள் நிரம்பிவிட்டன பி.எட். சேர்க்கை செயலர் பாரதி தெரிவித்தார்.

6 சதவீத ஊதிய உயர்வை எதிர்பார்த்து பதவி உயர்வை புறக்கணித்த ஆசிரியர்கள்

விரைவில் கிடைக்கவுள்ள 6 சதவீத ஊதிய உயர்வை  எதிர்பார்த்து, முதுகலைப் பட்டதாரி ஆசிரியராகப் பதவி உயர்வு பெறுவதை பட்டதாரி ஆசிரியர்கள் புறக்கணித்தனர். பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து 32 பட்டதாரி ஆசிரியர்கள், பதவி உயர்வு பெறுவதற்கான முன்னிலைப் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர்.


மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ம.க.செ. சுபாஷினி முன்னிலையில், ஆன்லைன் மூலம் நடைபெற்ற இந்த கலந்தாய்வில் 3 பேர் மட்டுமே பணியிடங்களைத் தேர்வு செய்தனர். ஊதிய உயர்வுக்காக பதவி உயர்வை துறந்த ஆசிரியர்கள்: ஒரு பள்ளியில் 10 ஆண்டுகள் வரை   பணி செய்யும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை அளிக்கப்படுகிறது.

அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் பதவி உயர்வுக்கு முன்னிலை பெற்ற ஆசிரியர்கள் பலருக்கும், 6 மாதங்களில் தேர்வு நிலை அளிக்கப்பட உள்ளது. தேர்வு நிலை கிடைக்கும்போது, ஊதியத்தில் 6 சதவீதம் உயர்வு கிடைக்கும். அதே நேரத்தில், பதவி உயர்வு கிடைத்தால் 3 சதவீதம் மட்டுமே ஊதியம் உயரும். இதனால், பெரும்பாலான ஆசிரியர்கள், பதவி உயர்வுக்கான தாற்காலிக உரிமைவிடல் அடிப்படையில் கலந்தாய்விலிருந்து வெளியேறியதாக, கல்வித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எல்.இ.டி., பல்புகளால் தினமும் ரூ.2.71 கோடி மிச்சம், நாடு முழுதும் விரிவாக்க மத்திய அரசு திட்டம்

நாட்டின் பல மாநிலங்களில், எல்.இ.டி., மின் விளக்குகள் பயன்பாடு அதிகரித்துள்ளதால், மின்சாரத்தை தயாரிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு ஏற்படும் செலவில், நாள்தோறும், 2.71 கோடி ரூபாய் மிச்சமாகிறது. தற்போது, 10க்கும் குறைவான மாநிலங்களில் பின்பற்றப்படும் இந்த திட்டத்தை, அனைத்து மாநிலங்களும் முழுமனதுடன் பின்பற்றத் துவங்கினால், காற்றின் மாசு குறைவதுடன், அரசின் மின் செலவும் கணிசமாக வீழ்ச்சி அடையும்.


எல்.இ.டி., என்பது, 'லைட் எமிட்டிங் டையோடு' என்ற ஆங்கில வார்த்தைகளின் சுருக்கம். குறைந்த மின்சாரத்தை பயன்படுத்தி அதிக ஒளியை, நீண்ட காலத்திற்கு வழங்கும் திறன் கொண்ட இந்த புதுமையான மின் விளக்குகள், சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தாதவை. இந்த விளக்குகளை பயன்படுத்துபவர்களுக்கும், அரசுக்கும் பல விதங்களில் நன்மை கிடைப்பதால், எல்.இ.டி., விளக்குகளை அதிக அளவில் பயன்படுத்துவதற்கு, மத்திய அரசு ஊக்கம் அளிக்கிறது. மின்துறை சார்பில், இதற்கென சிறப்பு பிரிவை உருவாக்கி, வீடுகள் தோறும் விதவிதமான, எல்.இ.டி., விளக்குகளை பயன்படுத்த, பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. மத்திய அரசின் தீவிர முயற்சியால், ஆந்திரா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில், குண்டு மின் விளக்குகள் மற்றும் சி.எப்.எல்., எனப்படும் பாதரசம் கொண்ட விளக்குகளின் பயன்பாடு, 90 சதவீதம் தவிர்க்கப்பட்டு, எல்.இ.டி., விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன.

இதனால், மின் நுகர்வோருக்கு மின் கட்டணமும் குறைவதால், பொதுமக்களும் ஆர்வமாக, எல்.இ.டி., விளக்குகளை வாங்கி, வீடுகளில் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், சமீபத்தில் எட்டப்பட்டுள்ள முன்னேற்றம்:

* ஜனவரி முதல், டி.இ.எல்.பி., எனப்படும், முழுவதும், எல்.இ.டி., விளக்குகளை பயன்படுத்தும் திட்டம், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், டில்லி, உத்தர பிரதேசம், ஹிமாச்சல பிரதேச மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது
* அடுத்தகட்டமாக, ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், கேரளா, சத்தீஸ்கர், ஜம்மு - காஷ்மீர், அசாம், சண்டிகர், கர்நாடகாவிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது
* இ.இ.எஸ்.எல்., எனப்படும், மத்திய மின்துறை யின் துணை அமைப்பு, எல்.இ.டி., மின் விளக்குகள் வினியோகத்தை மேற்கொள்கிறது
* இதுவரை, இரண்டு கோடி எல்.இ.டி., விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன
* நாட்டில், ஒவ்வொரு ஆண்டும் தயாரிக்கப்படும், 77 கோடி சாதாரண விளக்குகள், 40 கோடி, சி.எப்.எல்., விளக்குகளை அடியோடு நிறுத்திவிட்டு, அதிக அளவில், எல்.இ.டி., விளக்குகளை புழக்கத்தில் கொண்டு வருவது தான், இ.இ.எஸ்.எல்.,லின் இலக்கு.

எந்த வகையில் சிக்கனம்? சாதாரண குண்டு மின் விளக்கு, 350 - 400, 'லுமென்' வெளிச்சத்தை உமிழ, 60 வாட் மின்சாரத்தை எடுத்துக் கொள்கிறது. பாதரசத்தை மூலப்பொருளாக கொண்ட, சி.எப்.எல்., எனப்படும் விளக்குகள், 450 - 550 லுமென் திறன் வெளிச்சத்தை உமிழ, 14 - 16 வாட் மின்சாரத்தை எடுத்துக் கொள்கிறது. ஆனால், எல்.இ.டி., விளக்குகள், 6 வாட் மின்சாரத்தை மட்டுமே எடுத்துக் கொண்டு, 600 - 700 லுமென் திறன் வெளிச்சத்தை உமிழ்கிறது. மேலும், இந்த விளக்குகள், பிற விளக்குகளால் அறவே கொடுக்க முடியாத, 15 ஆயிரம் முதல், 20 ஆயிரம் மணி ஆயுட்காலத்தை கொடுக்கும்.லுமென் என்பது, ஒளியின் திறனை அளவிடும் அளவீடு.

என்ன கிடைக்கிறது? *அதிக அளவில், எல்.இ.டி., விளக்குகளை பயன்படுத்தும் மாநிலங்களால், தினமும், 68 லட்சம் கிலோவாட் மின்சக்தி மிச்சமாகிறது
* 'பீக் ஹவர்' எனப்படும், உச்சகட்ட நேர மின் தேவை, 645 மெகாவாட் ஆக குறைந்துள்ளது
* தினமும், 5,520 டன் கார்பன் மாசு வீழ்ச்சி அடைந்துள்ளது
* மின் கட்டணம், உற்பத்திச் செலவு போன்றவற்றில், தினமும், 2.71 கோடி ரூபாய் மிச்சம் ஏற்பட்டுள்ளது.

விலை எப்படி? மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளால், ஓராண்டிற்கு முன், 650 - 700 ரூபாயாக இருந்த ஒரு எல்.இ.டி., விளக்கின் விலை, இப்போது பாதியாக குறைந்துள்ளது; தற்போதைய சந்தை விலையில், 300 - 350 ரூபாய் வரை விற்கப்படுகிறது.மத்திய அரசின் திட்டப்படி, ஒரு எல்.இ.டி., விளக்கு, 78 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது; மீதமுள்ள தொகை, மானியமாக வழங்கப்படுகிறது.

மொகரம் விடுமுறை பிறை சரியாக தெரியாததால் சனிக்கிழமைக்கு மாற்றமா?

வரும் வெள்ளி அன்று   அறிவிக்கப்பட்டுள்ள மொகரம் விடுமுறை பிறை சரியாக தெரியாததால் சனிக்கிழமை அன்று மாற்றப்பட உள்ளதாக தலைமைச்செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முறையான அரசாணை திங்கள் அன்று வெளிவருகிறது.
திரு.சாந்தகுமார் தலைமை நிலையச்செயலர் TNTF

17/10/15

Test

அரசு பள்ளிகளின் அறிவியல் கண்டுபிடிப்பு தனியார் பள்ளி மாணவர்கள் வியப்பு

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்த நாள், இளைஞர் எழுச்சி நாளாக, நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அரசு பள்ளி மாணவர்களின் அறிவியல் தயாரிப்புகள் இடம் பெற்ற கண்காட்சி, சென்னைகிறிஸ்தவ கல்லுாரி பள்ளியில் நடந்தது. 


பள்ளிக்கல்வி அமைச்சர் வீரமணி, முதன்மை செயலர் சபிதா, இயக்குனர்கள் கண்ணப்பன், இளங்கோவன்மற்றும் ராமேஸ்வர முருகன் உள்ளிட்டோர், கண்காட்சியை பார்வையிட்டு,மாணவர்களை பாராட்டினர்.அரியலுார் மாவட்டம், காளையங்குறிச்சி, அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், கலாமின் சிறு வயது முதலான புகைப்படங்களையும், அவர் பணியாற்றிய ராக்கெட் திட்டங்களின் மாதிரிகளையும் வைத்திருந்தனர்.புதுக்கோட்டை பள்ளி மாணவர்கள், காற்றில் இயங்கும் விமானம் செய்துபறக்கவிட்டனர். இதேபோல், மாற்றுத்திறனாளிகளுக்கான கைத்தறி கருவி,குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் சாதனம் உள்ளிட்ட, பலவித அறிவியல் கண்டுபிடிப்புகள், கண்காட்சியில் இடம் பெற்றன.

அரசு பள்ளி மாணவர்களின்இந்த தயாரிப்புகளை, தனியார் பள்ளி மாணவர்கள் பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கம் கேட்டனர்; திறமையை வியந்து பாராட்டினர்.இதற்கிடையில், அனைத்து அரசு பள்ளிகளிலும், கலாம் குறித்த சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. பிற்பகல் 2:00 மணிக்கு, கலாமின், 10அறிவுரைகள் உறுதிமொழியாக ஏற்கப்பட்டன

மாணவர்களுக்கு சான்றுகள் வழங்க பள்ளிகள் ஒருங்கிணைப்பு மையம்

மாணவர்களுக்கான சான்றுகள் வழங்க, சில பள்ளிகளை ஒருங்கிணைத்து தனிமையங்கள் அமைத்து, 'ஆன்-லைனில்'சான்றுகள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.


பள்ளிகளில் 6,10, பிளஸ்2 படிக்கும் மாணவர்களுக்கு ஜாதி, இருப்பிடம், வருமான சான்றுகள் அந்தந்த பள்ளிகள் மூலம் விண்ணப்பித்து, தாலுகா அலுவலகங்களில் மொத்தமாக பெற்று வினியோகிக்கப்படுகிறது.இதற்காக, மாணவர்களிடம் ஆகஸ்ட், செப்டம்பரில் மனுக்கள் பெறப்பட்டு,அந்தந்த தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும். அங்கு வி.ஏ.ஓ.,க்கள், ஆர். ஐ.,க்கள், தாசில்தார் கையெழுத்து பெற்று, டிசம்பரில் சான்றுகள் வழங்கப்படும். சான்றுகள் பெற தாலுகா அலுவலகங்களுக்கு தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பலமுறை அலைய நேரிடும். இதனால் கல்விப்பணி பாதிக்கப்படும்.தற்போது, வருவாய் துறையில் சான்றுகள் 'ஆன்-லைனில்' வழங்கும் நடைமுறை உள்ளது. இதனால் மாணவர்களுக்கு சான்றுகள் பெற, தலைமை ஆசிரியர்கள் தாலுகா அலுவலகத்திற்கு அலைவதை தவிர்க்க, 10 முதல் 12 ம் வகுப்பு பள்ளிகளை ஒருங்கிணைத்து ஏதாவது ஒரு பள்ளியில் பொதுமையம் அமைக்கப்படுகிறது. இப்பொது மையங்களுக்கு தனி 'பாஸ் வேர்டு, ஐ.டி.' வழங்கப்படும்.

இந்த பொது மையத்திற்கு உட்பட்ட பள்ளிகள், மாணவர்களுக்கான சான்று பெற மனுக்களை வழங்க வேண்டும். அவை 'ஸ்கேன்' செய்யப்பட்டு, 'ஆன்-லைன்' மூலம் தாலுகா அலுவலகத்திற்கு அனுப்பப்படும். 'ஆன்-லைனில்' வி.ஏ.ஓ., ஆர்.ஐ., தாசில்தார் மனுவை பரிசீலித்து, தகுதியானவர்களுக்கு தாசில்தார் டிஜிட்டல் கையெழுத்துடன் சான்று வழங்க பரிந்துரை செய்வார்.தாசில்தார் வழங்கும் 3 வகையான சான்றுகளை அந்தந்த பள்ளியிலேயே 'பிரின்ட் -அவுட்' ஆக சான்றுகளை பெற்று கொள்ளலாம். இப் புதிய நடைமுறை யால் தலைமை ஆசிரியர்களுக்கு அலைச்சல் குறையும்.சிரமமின்றி பள்ளி மாணவர்கள் சான்றுகள் பெற முடியும்

உயர்நீதிமன்றத்துக்கு அக்.17 முதல் 25 வரை விடுமுறை

சென்னை உயர் நீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளைக்கு அக். 17 முதல் 25 வரை தசரா விடுமுறை நாள்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், 20-ஆம் தேதி விடுமுறைக் கால நீதிமன்றம் இயங்குகிறது.இதுதொடர்பாக உயர்நீதிமன்றப் பதிவாளர் (பொது) பொன்.கலையரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:


தசரா பண்டிகையை முன்னிட்டு, அக். 17 முதல் 25 வரை உயர்நீதிமன்றத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நாள்களில் விடுமுறைக்கால அலுவலர்கள் செயல்படுவர்.அவசர வழக்குகளுக்கான மனுக்களை 19-ஆம் தேதி பிற்பகல் 1.30 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.20-ஆம் தேதி காலை 10.30 மணி முதல் மாலை 4.45 மணி வரை விடுமுறைக்கால நீதிமன்றம் இயங்கும் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனுக்களை நீதிபதிகள் டி.மதிவாணன், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வும், மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்படும் மனுக்களை நீதிபதிகள் சி.டி.செல்வம், பி.என்.பிரகாஷ் ஆகியோர் அடங்கிய அமர்வும் விசாரணை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டீசல் விலை லிட்டருக்கு 95 பைசா உயர்வு

டீசல் விலை லிட்டருக்கு 95 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு, வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.அதேவேளையில், பெட்ரோல் விலையில் மாற்றமேதும் செய்யப்படவில்லை.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளைப் பொருத்து, பிரதி மாதம் 1 மற்றும் 15-ஆம் தேதிகளில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைக்கும்.அதன் அடிப்படையில், தில்லியில் ரூ.44.95-ஆக இருந்த ஒரு லிட்டர் டீசலின் விலையை ரூ.45.90-ஆக உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் வியாழக்கிழமை முடிவு செய்தன. இந்த மாதத்தில் மட்டும் இரண்டாவது முறையாக டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 1-ஆம் தேதி டீசல் விலை லிட்டருக்கு 50 பைசா உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.உள்ளூர் வரிகளின் அடிப்படையில் டீசல் விலை மாநிலங்களுக்கு மாநிலம் மாறுபடும்.

4 திட்டங்களுக்கு ஆதார் அட்டையை பயன்படுத்த அனுமதித்துஉச்சநீதிமன்றம்

முதியோர் ஓய்வூதியம், 100 நாள் வேலைவாய்ப்பு உள்ளிட்ட 4 சமூக திட்டங்களுக்கு ஆதார் அட்டையை விருப்பத்தின் பேரில் பயன்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.ஆதார் அட்டையை கட்டாயமாக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு மற்றும் ஆதார் கட்டாயமில்லை என்ற நீதிமன்றத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி மத்திய அரசு தொடர்ந்த வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.


அப்போது ஆதார் அட்டையை கட்டாயப்படுத்துவதால் தனி நபர்களின் அடிப்படை உரிமை எந்தவிதத்திலும் பாதிக்காது என மத்திய அரசின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதற்கு எதிர் மனுதாரர் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. எனினம் தற்போதைய சூழலில் முதியோர் ஓய்வூதியம், 100 நாள் வேலைதிட்டம், ஜன்தன் மற்றம் பி.எஃப் திட்டங்களுக்கு ஆதார் அட்டையை பொதுமக்கள் விருப்பத்தின் பேரில் பயன்படுத்தி கொள்ளலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர். எனினும் இது கட்டாயமில்லை என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். இது இடைக்கால உத்தரவு தான் என கூறிய நீதிபதிகள் வழக்கு விசாரணை தொடரும் என்றும் கூறினர்.

அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

பெண் ஆசிரியருக்கு, பாலியல் தொல்லை கொடுத்ததாக, நல்லூர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம், ஏற்காடு வல்லக்கடை பஞ்சாயத்துக்கு உட்பட்ட நல்லூரில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இதில், அப்பகுதியில் உள்ள, 90 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இதில், தலைமை ஆசிரியர் சத்யராஜ் மற்றும் மூன்று பெண் இடைநிலை ஆசிரியர் உள்பட, ஐந்து பேர் பணிபுரிந்து வருகின்றனர்.


இப்பள்ளியில் பணிபுரிந்து வரும் ஹஜ்ரீமா என்ற இடைநிலை ஆசிரியை, ஏற்காடு உதவி தொடக்கக்கல்வி அலுவலரிடம் புகார் அளித்தார். அப்புகாரில், கூறியிருப்பதாவது: பள்ளியின் தலைமை ஆசிரியர் சத்யராஜ், நான் வகுப்பு எடுக்கும் போது, வகுப்பறையில் அமர்ந்து கொண்டு கவனிப்பது மற்றும் பாலியல் சீண்டல் முயற்சிகளில் ஈடுபட்டும் வந்தார். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி, குழந்தைகள் இருந்த நிலையில், என்னை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி வந்தார்.முதல் பருவ தேர்வு விடுமுறை முடிந்து, பள்ளிக்கு வரும் போது, திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்காவிட்டால், தற்கொலை செய்து கொள்வேன் என, மிரட்டல் விடுத்தார். இதனால், கடும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் புகாரில் கூறியுள்ளார்.

இப்புகாரின் அடிப்படையில், ஏற்காடு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் கேஷக்தாவூத், பள்ளியில் சக ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தி, அறிக்கையை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரிடம் சமர்பித்தார். இந்த அறிக்கை, இயக்குனரகத்துக்கு அனுப்பப்பட்டு, இயக்குனரின் வழிகாட்டுதலின் அடிப்படையில், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் தங்கராஜ், நேற்று நல்லூர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சத்யராஜை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். பாலியல் புகாரில் சிக்கி, தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் ஆன சம்பவம், ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு அரசுப் பள்ளி ஆசிரியரின் கனவு!

பல வருடங்களாக வண்ணம் தீட்டப்படாத அழுக்கான கட்டிடங்கள்,காய்ந்த சருகுகள் ,புல் ,சிறிய புதர்கள் நிரம்பிய வளாகங்கள், பராமரிக்கப்படாத மாணவர் கழிப்பறைகள்....


இவை பெரும்பாலான அரசுப்பள்ளிகளின் இன்றைய அடையாளங்கள். நகர்ப்பகுதியில் உள்ள ஒருபெண்கள் பள்ளியில் படிக்கும் மாணவியிடம் பேசியபோது அவர் சொன்ன கருத்துக்கள் இவை..“பள்ளியில் நன்றாக பாடம் சொல்லிக்கொடுக்கிறார்கள்.எல்லா பாட வேளைகளுக்கும் ஆசிரியர்கள் வந்துவிடுகிறார்கள்.

கழிப்பறைகள் பயன்படுத்த இயலாத நிலையில் இருப்பதால் காலையில் பள்ளிக்கு வந்துவிட்டால் மாலை வீட்டுக்குச் சென்றவுடன்தான் கழிப்பறைக்குச்செல்வோம்.”சுயநிதி தனியார் பள்ளிகளின் கட்டணக்கொள்ளைக்கு பயந்து தன் பெண் பிள்ளைகளை அரசுப்பள்ளியில் சேர்க்க நினைக்கும் பெற்றோர்க்கு ஏற்படும் முதல் பிரச்சனை இது.கழிப்பறை பராமரிப்புக்காக அரசால் நிதி ஏதும் ஒதுக்கப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டிற்கு பதிலாகபெற்றோர் ஆசிரியர் கழகத்தின் பெயரால் வசூல் செய்யப்படும் நிதியில் தினமும் கழிப்பறை சுத்தம் செய்ய துப்புறவுப் பணியாளர் ஒருவரை பணியமர்த்திக்கொள்வது இப்பிரச்சனைக்கான உடனடித் தீர்வாகும்.தலைமை ஆசிரியரும் ஆசிரியர்களும் மனது வைத்தால் எல்லாப் பள்ளிகளிலும் இதை நடை முறைப்படுத்த முடியும்.நான் பணிபுரியும் பள்ளி உட்பட சில பள்ளிகளில் இது நடைமுறையில் உள்ளது.ஒவ்வொரு ஆண்டும் 6 ம் வகுப்பில் சேரும் மாணவர் எண்ணிக்கை குறைந்து கொண்டு வரும் நிலையில் அரசுப்பள்ளிகளின் தற்போதைய அடையாளங்கள் மாற்றப்படாவிட்டால் மாணவர் இல்லா பள்ளிகளாக அரசுப்பள்ளிகள் மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை.

மாணவர் இல்லா பள்ளியில் ஆசிரியருக்கு என்ன வேலை? ஆசிரியர் இல்லா பள்ளியில் சங்கங்களுக்கு என்ன வேலை?ஊதிய முரண்பாடுகள்,பணிச்சுமை போன்ற வழக்கமான கோரிக்கைகளைத்தாண்டி ஆசிரியர்கள் போராட வேண்டிய உண்மையான பிரச்சனைகள் பல நம்முன்னே உள்ளன.கல்வி வியாபாரத்தில் வெற்றி பெரும் நோக்கத்தோடு 12 ம் வகுப்புபாடத்தை இரண்டு ஆண்டுகள் நடத்தி மாணவர்களை மனப்பாடம் செய்யும் இயந்திரங்களாக மாற்றும் சுயநிதிப் பள்ளிகளுக்கு ஆதரவாக இருக்கும் இந்த மனப்பாட கல்வி முறையில் மாற்றங்களைக் கொண்டுவரும் விதமாக ஆசிரியர் போராட்டம் அமைய வேண்டும்.பள்ளிக்கழிப்பறைகள் மற்றும் கட்டிடங்களில் தூய்மை பராமரிக்கப்பட்டு தயக்கமில்லாமல் ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்கும் சூழலை உருவாக்க ஆசிரியர்கள் போராட வேண்டும்.

பள்ளி நிதியை தவறாக பயன்படுத்தும் நோக்கத்தோடு மாணவர் எண்ணிக்கைஅதிகமுள்ள நகர்ப்புற பள்ளிகளில் பணியேற்க லஞ்சப் பணம் லெட்சங்களில் கொடுத்து பணிமாறுதல் பெற்றுவரும் சில ஊழல் தலைமை ஆசிரியர்களுக்கு எதிராக ஆசிரியர் போராட்டம் அமைய வேண்டும்.அரசுப்பள்ளிகளின் தரம் உயர்ந்தால் மாணவர் சேர்க்கை தானாக உயரும்.மாணவப் பருவத்தின் உண்மையான அடையாளத்தை இழந்து வரும் இந்த தலைமுறை மாணவர்களை மீட்டெடுக்கும் விதமாக ஆசிரியர் போராட்டம் அமைய வேண்டும்.போராடாமல் எந்த மாற்றமும் ஏற்பட்டதில்லை என்பது வரலாறு.சங்கங்களின் பெயரால் பிளவுபட்டு போட்டி அரசியலில் சிக்கிவிடாமல் இதுபோன்ற ஆராக்கியமான மாற்றம் வேண்டி ஆசிரியர் சங்கங்கள் போராட வேண்டும் என்பதே என்னைப்போன்ற பெரும்பான்மையான அரசுப்பள்ளி ஆசிரியர்களின் கனவு.
கி.முருகன்
முதுகலை ஆசிரியர
்அரசு மேல் நிலைப் பள்ளி
புதுக்கோட்டை உள்ளூர்
தஞ்சாவூர் மாவட்டம்.

‘தங்கப் பரிசு போட்டி பற்றி விளம்பரத்தில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை’: தமிழக மக்களுக்கு மட்டும் தடை விதித்து மோசடி - அமேசான் நிறுவனம் மீது போலீஸில் புகார்

ஆன்லைன் சிறப்பு விற்பனைக்கான தங்கப் பரிசு போட்டியில் தமிழக மக்கள் மட்டும் பங்கேற்க முடியாது என அறிவித்துள்ள ‘அமேசான்’ நிறுவனம் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.குறைந்த விலைக்கு பொருட்கள் கிடைப்பதாலும், வீட்டில் இருந்தபடியே தேவையானவற்றை பெற்றுக்கொள்ள முடியும் என்பதாலும் ஆன்லைன் வர்த்த கம் மீதானமோகம் மக்களிடம் அதிகரித்து வருகிறது. 

இதைப் பயன்படுத்தி, சிறப்புத் தள்ளுபடி விற்பனைகளை பல நிறுவனங் கள் அவ்வப்போது அறிவிக்கின்றன.அந்த வகையில், ‘கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல்’ என்ற சிறப்பு தள்ளுபடி விற்பனையை பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ‘அமேசான்’, சமீபத்தில் அறிவித்தது. இந்த திட்டத்தின் ஒரு அம்ச மாக, அமேசான் ஆன்லைன் அப்ளி கேஷனை பயன்படுத்தி ரூ.299-க்குமேல் பொருட்களை வாங்குபவர்களுக்கு தின மும் ஒரு கிலோ தங்கம் பரிசாக வழங்கும் போட்டி ஒன்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், இந்தப் போட்டியில் தமிழகத் தில் வசிப்பவர்கள் பங்கேற்க முடியாது என்று அமேசான் அறிவித்துள் ளது. தங்கப் பரிசுப் போட்டி பற்றி விளம்பரத்தில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை. இது தமிழகத்தில் இணையம் மூலம்பொருட் களை வாங்கும் பலரை அதிர்ச்சியடைய வைத்தது. இதனால் அமேசானுக்கு எதிராக சமூக வலைதளங் களில் கருத்துக்கள் பகிரப்பட்டன.இந்நிலையில், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன், கோவை மாநகர காவல் ஆணையரிடம் அமேசான் மீது புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில், ‘ஒரு கிலோ தங்கம் வெல்லலாம் என்று தமிழக நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்த அமேசான் நிறுவனம், தமிழ கத்தை சேர்ந்தவர்கள் அந்தப் போட்டியில் பங்கேற்க முடியாது என்று கூறி தமிழக மக்களை ஏமாற்றியுள்ளது. எனவே, அந்நிறுவனத்தின் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்ட அறிக்கையில், ‘தங்கம் வெல்லலாம் என்ற ஆசையை தமிழக மக்களிடத்தில் தூண்டிவிட்டு தங்களது இணையதளத்தின் மூலம் பொருட்களை வாங்க வைத்து கடைசியாக உங்களுக்கு தங்கம் இல்லை என ஏமாற்றுகிற மோசடி வேலையை அமேசான் உள்நோக்கத்துடன் செய்துள் ளது. தமிழக மக்கள் போட்டியில் பங்கேற்க முடியாது என்றால், பிறகு எதற்காக தமிழகஊடகங்களில் விளம்பரம் செய்ய வேண்டும் இத்தகைய நூதன மோசடியில் ஈடுபட்டுள்ள அமேசான் நிறுவனத்தின் மீது தமிழக அரசு உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியுள் ளார்.

அமேசானுக்கு தமிழ் அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.இது தொடர்பாக அமேசான் நிறுவனத்தின் இந்திய செய்தித் தொடர்பாளர் மாதவி, ‘திஇந்து’விடம் கூறும்போது, ‘‘தமிழகத்தில் தங்க பரிசுத் திட்டம் போன்ற போட்டிகளை நடத்த முடியாது. மீறி நடத்தினால், அது தமிழக அரசின் பரிசுப் பொருட்கள் சலுகை தடைச் சட்டம் 1979-ன்படி குற்றமாகிவிடும். எனவேதான்தமிழகத்தில் தங்க பரிசுப் போட்டியை நடத்தவில்லை” என்றார்.