யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

14/11/15

மத்திய அரசு விதிமுறைகளுக்குசத்துணவு பணியாளர்கள் எதிர்ப்பு

குழந்தைகள் பள்ளி செல்வதை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்கவும், தமிழகத்தில், 1982ல், சத்துணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 43 ஆயிரம் சத்துணவு மையங்களில், 55 லட்சம் மாணவ, மாணவியருக்கு, இலவச மதிய உணவு வழங்கப்படுகிறது.ஒரு மாணவருக்கு, 5ம் வகுப்பு வரை, தலா, 100 கிராம் அரிசியும்; 6 முதல், 10 வரை, 150 கிராம் அரிசியும் ஒதுக்கப்படுகிறது. ஒன்றாம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை மத்திய அரசும்; 9 மற்றும், 10ம் வகுப்புக்கு, மாநில அரசும், அரிசி செலவை ஏற்கின்றன. மளிகை பொருட்கள்

உள்ளிட்ட மற்ற செலவுகளில், 75 சதவீதத்தை மத்திய அரசும், 25 சதவீதத்தை தமிழக அரசும் வழங்குகின்றன. முட்டை செலவை, தமிழக அரசே ஏற்கிறது.

இந்நிலையில், உணவு பாதுகாப்பு சட்டப்படி, புதிய விதிமுறைகளை, மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது:உணவு தானியம், எரிபொருள், சமையல் பணியாளர் இல்லை போன்ற காரணத்தால், ஏதாவது ஒரு நாள் மதிய உணவு வழங்கப்படாவிட்டால், அடுத்த மாதம், 15ம் தேதிக்குள், அதற்கான தொகையை, குறிப்பிட்ட பள்ளிக்கு மாநில அரசு வழங்க வேண்டும்

தரத்தை உறுதிப்படுத்த, சத்துணவை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்; இதற்காக, மாதம் ஒரு பள்ளியை தேர்வு செய்ய வேண்டும்

ஒவ்வொரு பள்ளியிலும், சுகாதாரமான சமையல் அறை வசதி ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.இந்த விதிமுறைகளை அமல்படுத்த, சத்துணவு அமைப்
பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இது குறித்து, சத்துணவு அமைப்பாளர் சங்க தலைவர்
பழனிச்சாமி கூறியதாவது:மதிய உணவு வழங்காத நாளில், அதற்கான செலவு தொகையை, பள்ளிக்கு ஒதுக்க வேண்டும்; அந்த தொகையை, மாணவர்களுக்கு செலவிட வேண்டும் என, கூறப்பட்டுள்ளது. ஆனால், அந்தத் தொகையை, பள்ளிக்கு வழங்குவதில், ஊழல் நடக்கிறது; ஊழல் செய்வதற்காகவே, வேண்டுமென்றே சமையல் செய்யாமலிருக்க வாய்ப்பு உள்ளது. இதனால், சத்துணவு திட்டம் பாதிக்கப்படும். மேலும், பணம் கொடுக்கப்பட்டதா, இல்லையா என்பதை மாணவர்களால் தெரிந்து கொள்ள முடியாது. அதிகாரிகளும், ஆசிரியர்களும் சேர்ந்து, ஊழல் செய்ய வாய்ப்பு அதிகம். எனவே, மத்திய அரசின் புதிய விதிமுறைகள், நடை
முறைக்கு சாத்தியமில்லை.இவ்வாறு அவர் கூறினார்

தொடர் மழை காரணமாக நாளை(14.11.15) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..

1.சென்னை (பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை)
2.திருவள்ளுர் (பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை)

3.காஞ்சிபுரம் (பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை)

தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை!!!

தமிழகம் முழுவதும் பெய்து வரும் மழையால் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்டத் தொடக்க, உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை 
அனுப்பியுள்ளார்.இதுகுறித்து அவர் மின்னஞ்சலில் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:


பலத்த மழை காரணமாக பள்ளியின் மேற்கூரையில் தண்ணீர் தேங்காமல் வைத்திருக்க வேண்டும். மேற்கூரையில் பழுது ஏற்பட்டால், அதை உடனடியாக சரி செய்திட வேண்டும். பள்ளி வளாகத்தினுள் மழைநீர் தேங்கியிருந்தால், அதை உடனடியாக மின் மோட்டார் மூலம் அகற்ற வேண்டும்.மழைக் காலங்களில் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் நீர் நிரம்பியிருக்கும் என்பதால், அங்கு மாணவர்கள் செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும். மாணவர்களுக்கு நீர்ப் பிடிப்புப் பகுதிகளுக்குச் செல்வதால் ஏற்படும் அபாயங்கள் குறித்தும் அறிவுறுத்திட வேண்டும்.உணவு இடைவேளை, காலை, மாலை இடைவேளைகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல், கீழ்நிலை, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு அருகில் மாணவர்களை அனுப்பாமல் இருத்தல், காய்ச்சி வடிகட்டிய நீரைப் பருக அறிவுறுத்தல், மின் கசிவு இல்லாமல் பாதுகாப்புடன் மின் சாதனங்கள் உள்ளனவா என்பதை உறுதி செய்தல்.மேலும், இடி, மின்னல் போன்றவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுதல், மழைக்கு மரங்களுக்கு அடியில் நிற்கக் கூடாது என்று மாணவர்களிடம் எடுத்துக் கூற வேண்டும்.இன்னும் சில தினங்களுக்கு தொடர்ந்து மழை பெய்யும் என்பதால், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களும், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களும் அவரவர் தலைமையிடத்தில் இருந்து, சூழ்நிலைக்கேற்றவாறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முகநூலில் அரசுக்கு எதிராக இயங்குபவரா-???

உலகில் உள்ள பல்வேறு நாடுகள், முகநூலில் (பேஸ்புக்) தங்களுக்கு எதிராக இயங்குபவர்கள் குறித்த தகவல்களை சேகரிப்பது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது என பேஸ்புக் நிர்வாகம் கூறியுள்ளது.

இந்தியாவில் மட்டும், சட்டத்துக்குப் புறம்பான கருத்துகளை வெளியிட்டதாக இந்த ஆண்டில் 15,155 பேரின் தகவல்கள் நீக்கப்பட்டுள்ளன.பேஸ்புக் நிறுவனத்தில் ஆண்டுக்கு இருமுறை வெளியிடப்படும் ஆய்வறிக்கையில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.உலகில் உள்ள அரசாங்கங்கள் கேட்கும் தகவல்கள் கடந்த ஆறு மாதத்தைவிட தற்போது 18 மடங்கு அதிகரித்துள்ளது. 2014 ஆண்டு பிந்தைய ஆறுமாதங்களில் 35,051 பேரின் தகவல்கள் கேட்கப்பட்ட நிலையில், நிகழ் ஆண்டின் முதல் ஆறு மாதத்தில் 41,214 பேரின் தகவல்கள் கேட்கப்பட்டுள்ளன.அரசுகளின் கோரிக்கையை ஏற்று, இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை, 20,568 ஆட்சபேகரமான கருத்துகள் பேஸ்புக் பக்கங்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இது கடந்த 6 மாதத்தைவிட இரு மடங்காகும்.மேலும் அரசுக்கு எதிரான கருத்துகளை பதிவு செய்யும் நபர்களின் அடிப்படை தகவல்கள், அவர்கள் பயன்படுத்தும் கணினி, மொபைல் போன்கள்குறித்த தகவல்கள் (IP address), அவர்கள் பதிவிடும் தகவல்களை தர வேண்டும் என்பது உலக அரசுகளின் முக்கிய கோரிக்கையாகஉள்ளது.பேஸ்புக் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 1.55 மி்ல்லியனை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க ஐக்கிய அரசாங்கத்திடமிருந்துதான்,தனிநபர்கள் குறித்த தகவல்கள் கேட்டு அதிகமான கோரிக்கைகள் வந்துள்ளன. இதைத் தொடர்ந்து பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளிலிருந்து அதிக கோரிக்கைகள் வந்துள்ளன.உள்ளூர் சட்ட விதிகளை மீறியதாகவும், தகவல்களை நீக்க வலியுறுத்தி இந்தியா மற்றும் துருக்கி நாடுகளிலிருந்து அதிக வேண்டுகோள்கள் வந்துள்ளன. 190 மில்லியன் இந்திய வாடிக்கையாளர்கள் பேஸ்புக்கில் உள்ள நிலையில், இந்த ஆண்டு மட்டும் இந்தியாவைச் சேர்ந்த 15,155 பேரின் தகவல்கள் நீக்கப்பட்டுள்ளன.


இது கடந்த ஆண்டைவிட 3 மடங்கு அதிகமாகும்.அரசாங்கங்கள் விடுக்கும் கோரிக்கையை தட்டிகழிக்க இயலாமல், தனிநபர் விவரங்கள் பாதுகாப்பு குறித்து வாடிக்கையாளர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மீறி, அவர்கள் குறித்த விவரங்களை அரசுகளுக்கு வழங்கி வருகிறது பேஸ்புக்.எனினும், தனது வாடிக்கையாளர் விவரங்களை எந்த அரசும் நேரிடையாக பயன்படுத்திகொள்வதற்கு அனுமதி அளிக்கவில்லை என்று அறிவித்துள்ளது பேஸ்புக் நிறுவனம்

முன்பணம், 5,000 ரூபாயில் இருந்து, 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது....

பணியின் போது இறக்கும், அரசு ஊழியர் குடும்பத்தின் உடனடி தேவைக்காக வழங்கப்படும் முன்பணம், 5,000 ரூபாயில் இருந்து, 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.அரசு ஊழியர்கள், பணியில் இருக்கும் போது இறந்தால், அவர்கள் குடும்பத்தின் உடனடித் தேவைக்காக, குடும்ப 
பாதுகாப்பு நிதியில் இருந்து, 5,000 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது.


'இத்தொகை, 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்' என, செப்., 29ல், சட்டசபையில், நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்தார். அதன்படி, முன்பணத்தை உயர்த்தி வழங்க, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த உத்தரவு, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உட்பட, அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும்.

பள்ளிகளில் 4 முறை வருகைப்பதிவு!!!

தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன், பள்ளிகளுக்கு அனுப்பிஉள்ள சுற்றறிக்கை:
மாணவர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தினமும், நான்கு வேளையும், மாணவர்களின் வருகையை 
உறுதிபடுத்த வேண்டும். காலையில் வகுப்பு துவங்கியதும், இடைவேளை முடிந்து, மாணவர்கள் மீண்டும் வகுப்புக்கு வந்ததும், வருகை பதிவேடு சரிபார்க்கப்பட வேண்டும்; தொடர்ந்து, மதிய உணவு முடிந்து, வகுப்பு துவங்கும் போதும்; மாலைஇடைவேளைக்கு பிறகும் சரிபார்க்கப்பட வேண்டும்.

813 வி.ஏ.ஓ. பணியிடங்களுக்கு பிப்ரவரி 14-ல் போட்டித்தேர்வு!

கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.) பதவியில் 813 காலியிடங்களை நிரப்புவதற்காக பிப்ரவரி 14-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும்என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு 
தேவைப்படும் ஊழியர்களும், அலுவலர் களும் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு மூலமாக தேர்வுசெய் யப்படுகிறார்கள்.


நேர்முகத் தேர்வு இல்லாத பணிகளில் 1,934 காலியிடங்களுக்காக குரூப்-2ஏ தேர்வுக்கு ஆன் லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.இந்த நிலையில், 813 விஏஓ காலியிடங்களை நிரப்பு வதற்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தில் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, விஏஓ பணிக்கு எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்றவர்கள் ஆன் லைனில் (www.tnpsc.gov.in) விண்ணப்பிக்கலாம். வயது 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். பொதுப் பிரிவினர் நீங்கலாக இதர இட ஒதுக் கீட்டுப் பிரிவினருக்கும், ஆதரவற்ற விதவைகளுக்கும் வயது வரம்பு 40 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


தமிழ்வழியில் படித்தவர்களுக்குதமிழ்வழியில் படித்தவர் களுக்கு அரசுப் பணியில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப் படுகிறது. இந்த உத்தரவு விஏஓ பணிக்கும் பொருந் தும் என்பதால் மொத்த காலி யிடங்களில் 20 சதவீத இடங்கள் தமிழ்வழியில் எஸ்எஸ்எல்சி முடித்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போதே இதுகுறித்து குறிப்பிட வேண்டும்.எழுத்துத் தேர்வு அடிப்படை யில் பணிநியமனம் நடை பெறும். நேர்முகத் தேர்வு எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. எழுத்துத் தேர்வில் பொது அறிவு, திறனறிவு, கிராம நிர்வாக நடைமுறைகள், பொது தமிழ்அல்லது பொது ஆங்கிலம் ஆகிய பகுதிகளில் இருந்து 200 கேள்விகள் கேட்கப்படும். மொத்த மதிப் பெண் 300. எழுத்துத் தேர்வுக் கான பாடத்திட்ட விவரங் கள் டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தில் வெளியிடப்பட் டுள்ளன. எழுத்துத் தேர்வில் வெற்றிபெற்றாலே பணி உறுதி. தகுதியுள்ள விண் ணப்பதாரர்கள் டிசம்பர் 14-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித் துள்ளது.


விஏஓ பணியில் சேரு வோருக்கு சம்பளம் ஏறத்தாழ ரூ.17 ஆயிரம் அளவுக்குகிடைக்கும். 7-வது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப்படும் பட்சத்தில் சம்பளம் கணிசமாக உயரும் வாய்ப்புள்ளது. 6 ஆண்டு பணியை முடித்தவர்கள் துறைத்தேர்வுகளில் தேர்ச்சிபெற்றால் வருவாய்த் துறையில் உதவியாளர் ஆகலாம். அதன்பின்பு அவர்கள் வருவாய் ஆய்வாளர், துணை வட்டாட்சியர், வட்டாட்சியர் என படிப்படியாக பதவி உயர்வு பெறலாம்என்பது குறிப்பிடத்தக்கது.

2 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை- ஆதங்க்கத்தில் ஆசிரியர்கள்

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை. இதனால், இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களும் பி.எட். பட்டதாரிகளும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி 
பள்ளிகளில்ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரைக்குமான இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியராக பணியில் சேர வேண்டுமானால் ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறவேண்டும். கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள், நவோதயா பள்ளிகள் போன்ற மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர ‘சி-டெட்’ எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.


இத்தேர்வை சிபிஎஸ்இ நடத்துகிறது.தமிழகத்தில் தகுதித் தேர்வு நடத்தும் பொறுப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 3 தகுதித்தேர்வு மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. முதல் தகுதித் தேர்வு 2012 ஜூன் மாதமும், அடுத்த சிறப்பு தேர்வு அக்டோபர் மாதமும் கடைசி யாக 2013 ஆகஸ்ட் மாதமும் நடத் தப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக் கான சிறப்பு தகுதித் தேர்வு கடந்த ஆண்டு மே மாதத்தில் நடந்தது.ஆசிரியர் தகுதித்தேர்வில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 60 சதவீதம் (90 மதிப்பெண்) ஆகும். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் தளர்வு (82 மதிப் பெண்) அளிக்கப்பட்டது. ஆசிரியர்தகுதித் தேர்வை ஆண்டுக்கு 2 முறை நடத்த வேண்டும் என்பது விதிமுறை.


இந்த விதிமுறையை சிபிஎஸ்இ சரியாக கடைபிடித்து வருகிறது. இந்த ஆண்டின்முதல் சி-டெட் தேர்வு பிப்ரவரியிலும், 2-வது தேர்வு கடந்த செப்டம்பரிலும் நடத்தப்பட்டு முடிவுகளும் வெளியிடப்பட்டுவிட்டன. அடுத்த ஆண்டுக்கான தேர்வு தேதிகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன.ஆனால், தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை. இத னால், இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களும்பி.எட். பட்டதாரி களும் பணியில் சேர முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் தளர்வு அளிக் கப்பட்டதையும், வெயிட்டேஜ் மதிப் பெண் முறையில் (பிளஸ்-2, ஆசிரி யர் பயிற்சி, பட்டப் படிப்பு, பிஎட் ஆகியவற்றுக்கு குறிப்பிட்ட மதிப் பெண் அளித்து தேர்வு செய்யும் முறை)ஆசிரியர்களை தேர்வு செய் வதையும் எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


தகுதித்தேர்வு குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘டெட் தேர்வு தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் இப்போது ஒன்றும் சொல்ல இயலாது’’ என்று தெரி வித்தனர்.

தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: சென்னை வானிலை ஆய்வு மையம்

தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


வரும் 14ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


இதன் காரணமாக தென் மாவட்டங்களில் அநேக இடங்களிலும்,வட மாவட்டங்களில் சில இடங்களிலும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.கடலோர மாவட்டங்களில் கனமழையை எதிர்பார்க்கலாம் எனவும் அது தெரிவித்துள்ளது.


கேரளாவில் நிலை கொண்டிருந்த மேலடுக்கு சுழற்சி தெற்கு நோக்கி நகர்ந்து லட்சத்தீவு அருகே காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலைகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

7/11/15

WhatsApp தந்துள்ள சிறப்பு புதிய வசதிகள்:

அவ்வப்போது பல புதுமைகளை செய்து வருகிறது. இன்று உலக முழுவதும் நூறு கோடி பயனாளர்கள் வாட்ஸ்ஆப் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். வாட்ஸ்ஆப் அதிகம் பயனாளர்கள் பயன்படுத்த தொடங்கிய பிறகு மற்ற பிரபல சமூக வலைதளங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டதை யாராலும் மறுக்க முடியாது.சில தினங்கள் முன் வாட்ஸ்ஆப் தனது புதிய பதிப்பை வெளியீட்டு உள்ளது. இதில் இரண்டு சிறப்பு வசதிகளை வாட்ஸ்ஆப் புகுத்தி உள்ளது. உங்களுக்கு இது பெரிதும் வசதியாக இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. இந்த பதிவில் புதிய வசதிகளை தெரிந்துக்கொள்வதோடு புதிய WhatsApp 2.12.342 பதிப்பை டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்
.1. WhatsAppல உங்களுக்கு மிக முக்கியமான அல்லது பிடித்த மேசெஜ் எப்போதோ வந்து இருக்கும். அதை இப்போது பார்க்க நினைத்தால் விரைவில் பார்க்க முடியாது. ஆயிர கணக்கான மேசெஜ்கிடையே எப்படி கண்டுபிடிப்பது. சர்ச் செய்தாலும் பொறுமை வேண்டும். இனி அப்படி கஷ்டப்பட தேவை இல்லை. நீங்கள் விரும்பிய அல்லதுமுக்கியமான மேசெஜ்களை Starred Messages பகுதியில் இணைத்து விட்டால் உடனே படிக்க முடியும்.நீங்கள் ஜிமெயில் பயன்படுத்தி இருப்பீர்கள். அதில் உங்களுக்கு முக்கியமான மின்னஞ்சலை Starred செய்யும் வசதி இருக்கும். இதன் மூலம் Starred செய்த மின்னஞ்சலை மட்டும் தனியாக பார்க்க முடியும். இதே வசதியை WhatsApp  இப்போது புதிய பதிப்பில் கொடுத்து உள்ளது. படம்பாருங்கள்.இங்கே கிளிக் அல்லது இங்கே கிளிக்செய்து WhatsApp 2.12.342 இன்று வெளிவந்த புதிய பதிப்பை டவுன்லோட் செய்து உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்துக்கொள்ளுங்கள். இது Play Storeக்கு வர சில தினங்கள் ஆகும். (இரண்டாவதாக உள்ளது Dropbox லிங்க் - மொபைலில் டவுன்லோட் செய்யும் போது எச்சரிக்கை செய்தி காட்டினால் Ignore செய்து விடுங்கள். Dropbox லிங்க் என்பதால் பெரும்பாலான மொபைல்கள் எச்சரிக்கை செய்யும்.)இன்ஸ்டால் செய்த பிறகு WhatsApp உள்ளே செல்லுங்கள். மெனுவில் Starred Messages என்ற புதிய ஆப்சன் வந்து இருக்கும். அதன் உள்ளே சென்று பார்த்தால் வெற்றிடமாக இருக்கும். இப்போது ஏதேனும் நண்பர்கள் அல்லது குருப்ல உள்ளஒரு மெசேஜை லாங் பிரஸ் செய்தால் மேலே ஒரு ஸ்டார்போன்ற குறியீடு வரும். அதை டச் செய்தால் Starred Messages பகுதியில் சேர்ந்து விடும். இனி நீங்கள் விரும்பிய மேசெஜ்களை ஸ்டார் செய்து விரைவில் பார்க்க முடியும். என்னசந்தோஷம்தானே. கீழே வீடியோ தயாரித்து இணைத்து இருக்கிறேன் பாருங்கள்.2. மொபைலில் Android 6.0 Marshmallow வைத்து இருப்பவர்கள் இனி WhatsApp புதிய பதிப்பின் மூலம் நேரடியாக யாருக்கும் வீடியோ, படங்கள் போன்றவற்றை விரைவில் Share செய்ய முடியும். இந்த வசதி மூலம் மற்ற அப்ளிகேசங்களுக்கும் தங்குதடையின்றி விரைவாக பெரிய வீடியோகளை அனுப்ப முடியும். இதனை WhatsApp Direct Share என்று அழைக்கிறார்கள். இந்த வசதி Android 6.0 மொபைல்களுக்கு மட்டுமே தற்போது சாத்தியமாம்.

ஆசிரியர் பயிற்சி விரிவுரையாளர் போட்டித் தேர்வுக்கு புதிய பாடத்திட்டம்

மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் (டயட்) முதுநிலை விரிவுரையாளர், விரிவுரையாளர், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் இளநிலை விரிவுரையாளர் ஆகிய பணி யிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித் தேர்வு மூலமாக நேரடியாக நிரப்பப்படுகின்றன.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாக நேரடியாக நிரப்பப்பட உள்ள DIET முதுநிலை விரிவுரையாளர், விரிவுரையாளர், இளநிலை விரிவுரையாளர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்குப் புதிய 
பாடத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு
30 முதுநிலை விரிவுரையாளர் களும்,
41 விரிவுரையாளர்களும்
18 இளநிலை விரிவுரை யாளர்களும் நியமிக்கப்படுவார்கள் என்று பள்ளிக்கல்வி மானியக்கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டது.


இந்த நிலையில், முதுநிலை விரிவுரையாளர், விரிவுரையாளர், இளநிலை விரிவுரையாளர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்குப் புதிய பாடத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 2-ம் தேதியிட்ட அரசிதழில் (சிறப்பு வெளியீடு- எண் 232) தமிழ், ஆங்கிலம், இயற்பியல், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல், உடற்கல்வி என பாடவாரியாக பாடத்திட்டத்தை தெரிந்து கொள்ளலாம்

TNTET தகுதி தேர்வில் 2013 ஆண்டு தேர்ச்சி ( 60 % ) பெற்ற ஆசிரியர்களின் கவனத்திற்கு...

வருகின்ற 16 .11.2015 திங்கள் கிழமை சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு உண்ணாவிரதம்....!

அற வழியில் நாம் பாதிக்க பட்டதை தமிழக முதல்வரின் மேலான கவனத்திற்கு எடுத்து செல்வோம் முறையான அனுமதி பெறப்பட்டுள்ளது.
ஆகவே அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
அனுமதி கடிதம் 15.11.2015 மாலை 6 மணிக்கு வெளியிடப்படும்.
கலந்து கொள்ளும் அனைவரும் கீழ்க்கண்ட அலைபேசி எண்களுக்கு தங்கள் பெயர் ,ஊர் ,பாடம், மதிப்பெண் , குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை ஆகிய தகவல்களை குறுந்தகவல் மூலம் பகிர்ந்து , பதிவு கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம் .

தொடர்புக்கு:

திருமதி பாரதி : 94426 91704,  திரு.ராதாகிருஷ்ணன் : 99657 06150,  திரு.பரந்தாமன் : 94432 64239,  திரு.சக்தி : 97512 68580,  திரு.லெனின் ராஜ் : 80125 32233.

இந்த அறிவிப்பில் வெளியாவது மட்டுமே உண்மையான தகவல் என்பதை தெரிவித்து கொள்கிறோம்

செல்லிடப்பேசி மூலம் சீசன் பயணச் சீட்டு; நடைமேடை அனுமதிச் சீட்டு: தெற்கு ரயில்வே அறிமுகம்

சென்னை புறநகர் மின்சார ரயில்களுக்கான சீசன் பயணச் சீட்டு, நடைமேடை அனுமதிச் சீட்டு ஆகியவற்றை செல்லிடப் பேசி மூலம் பெறும் வசதியை தெற்கு ரயில்வே வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியது.சென்னை புறநகர் மின்சார ரயில்களில் பயணம் செய்ய செல்லிடப்பேசியில் (ஸ்மார்ட் போன்) பயணச் சீட்டு பெறும் வசதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. 


இந்தத் திட்டம் பொதுமக்களிடம் ஓரளவு வரவேற்பைப் பெற்றுள்ளது.முன்பதிவு அல்லாத ரயில் டிக்கெட்டுகளை செல்லிடப் பேசி மூலம் பெறும் வசதி தற்போது மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தற்போது செல்லிடப் பேசி புறநகர் மின்சார ரயில்களுக்கான சீசன் பயணச் சீட்டு, நடைமேடை அனுமதி சீட்டு பெறும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

புறநகர் ரயில்களில் பயணம் செய்பவர்களில் 52 சதவீதம் பேர் சீசன்பயணச் சீட்டு பயன்படுத்துபவர்கள் ஆவர். அவர்களுக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த வசதி வியாழக்கிழமை (நவ. 5)முதல் நடைமுறைக்கு வந்தது. ஆன்ட்ராய்டு சாப்ட்வேர் வசதி கொண்ட ஸ்மார்ட் போன்கள் மூலம் இந்த வசதியைப் பெறலாம்.செல்லிடப்பேசியில் பயணச் சீட்டை பதிவிறக்கம் செய்து பரிசோதகரிடம்காட்டினால் போதுமானது.காகிதம் இல்லாத இந்த நவீன வசதி மூலம் சீசன் பயணச் சீட்டு, நடைமேடை அனுமதி சீட்டு பெற முடிவதால் இனி கவுன்ட்டர்களில் வரிசையில் காத்து நிற்க தேவையில்லை. நேரமும் மீதமாகும். www.sr.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் சீசன் பயணச் சீட்டு எவ்வாறு எடுக்க முடியும் என்ற விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.நடைமேடை அனுமதிச் சீட்டு: தற்போது சென்னையில் உள்ள 5 முக்கிய ரயில் நிலையங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் மட்டும் பொருந்தும் வகையில் நடைமேடை அனுமதிச் சீட்டு பெறும் வசதி வழங்கப்படுகிறது.

சென்னை சென்ட்ரல், எழும்பூர், மாம்பலம், தாம்பரம், பெரம்பூர் ஆகியரயில் நிலையங்களில் ஒட்டியுள்ள 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளவர்கள் மட்டும் செல்லிடப் பேசி மூலம் நடைமேடை அனுமதி சீட்டு பெற முடியும்.இந்த 2 புதிய வசதிகள் மூலம் கவுன்ட்டர்களில் நிற்கும் நேரம் விரயமாவது தவிர்க்கப்படும். மேலும் பயணிகள் எளிதாக பயணச் சீட்டு பெற முடியும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறப்பு சலுகையில் பொதுத்தேர்வு: விரைந்து விண்ணப்பிக்க அறிவுரை

மாற்றுத்திறனாளி, நோயால் உடல்நலம் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்கள்சிறப்பு சலுகையில் 10ம்வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத மருத்துவ சான்றிழுடன் விரைந்துவிண்ணப்பிக்க வேண்டும் என, அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தி உள்ளது.


10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி பள்ளி மாணவர்களுக்கு தேர்வுத்துறை சார்பில் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. கண்பார்வையற்றவர்கள், காது கேளாத, வாய் பேச இயலாதவர்கள், எதிர்பாராத விபத்தில் உடல் ஊனமடைந்தவர்கள், கைகால் நடுக்கம் கொண்ட 'டிஸ்லெக்சியா' நோய் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், நரம்பியல் கோளாறு கொண்ட மாணவர்கள் அடுத்தாண்டு மார்ச்சில் நடக்க உள்ள இப்பொதுத்தேர்வு எழுத அங்கீகாரம் பெற்ற அரசு மருத்துவர்களிடம் உடல்நலக்குறைபாடு தொடர்பான மருத்துவச்சான்றிதழ்பெற்று தலைமையாசிரியர்களிடம் அளிக்க வேண்டும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தி உள்ளது.

விண்ணப்பம்:

பிளஸ் 2 மாணவர்கள் மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள், 10ம் வகுப்பு மாணவர்கள் மாவட்டக்கல்வி அதிகாரிகளிடம், தேர்வு எழுதுவதற்கான விண்ணப்பத்தை தலைமையாசிரியர்கள் பரிந்துரை கடிதத்துடன் விரைந்து சமர்ப்பிக்க வேண்டும்.அது தேர்வுத்துறை இயக்குனரகத்திற்கு அனுப்பப்பட்டு சிறப்பு சலுகையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.

டாக்டர் சான்று:

மாவட்டகல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “மாற்றுத்திறனாளிகள், இதர நோய் குறைபாடு உடைய மாணவர்களுக்கு வேறொரு ஆசிரியர் மூலம் தேர்வு எழுதுவது, அதற்காக கூடுதலாக ஒருமணி நேரம் ஒதுக்குவது, ஏதாவது ஒரு மொழிப்பாடம் எழுதுவதில் இருந்து விலக்கு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. விபத்தில் சிக்கி காயமடைவோர் தவிர மற்றவர்கள் கடைசி நேரத்தில் விண்ணப்பிக்கும்போது தேவையற்ற குழப்பங்கள் ஏற்படுகின்றன. அரசு டாக்டர்களிடம் உரிய சான்றிதழ் பெற்று அம்மாணவர்கள் தற்போதே சிறப்பு சலுகையில் தேர்வு எழுத விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது,”என்றார்.

போலீஸ் இளைஞர் படைபணி நிரந்தரமாக்க ஏற்பாடு தேர்வுக்கு விண்ணப்பம்

தமிழகத்தில் போலீஸ் இளைஞர் படையினர் அனைவருக்கும் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. தேர்வுக்கு தயாராகுமாறு அறிவுறுத்தப்பட்டுஉள்ளனர்.


தமிழகத்தில் கடந்தாண்டு செப்டம்பரில், போலீஸ் இளைஞர் படையினர் 10 ஆயிரத்து 500 பேர், உடல் தகுதி,மருத்துவம், எழுத்துத் தேர்வுகள் நடத்தி தேர்வு செய்யப்பட்டனர்.இவர்களுக்கு கம்ப்யூட்டர், டிரைவர், அலுவலக உதவியாளர் பணி வழங்கப்பட்டது. இதில் பணி சுமை மற்றும் மன உளைச்சல் காரணமாக பலர் வேலையை விட்டு விட்டனர்.தற்போது 8 ஆயிரத்து 600 பேர் பணியில் உள்ளனர்.இவர்களை பணிநிரந்தரம் செய்வதற்கான உத்தரவுகளை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதையடுத்து நேற்று இளைஞர் படையினருக்கு விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டன. இதில் அவர்களின் பாஸ்போர்ட் போட்டோ ஒட்டி,பெயர், விலாசம், வயது, பணியாற்றும் ஸ்டேஷன் உட்பட பல தகவல்கள் கேட்கப்பட்டுள்ளன.இவர்களுக்கான தேர்வுகள் வரும் நவ.29ல் நடக்கஉள்ளது. இதற்கான ஹால் டிக்கெட் நவ.17, 18ல் இளைஞர்களுக்கு வழங்கப்படஉள்ளது.தேர்வு தயாராக அறிவுரை: இளைஞர்கள் படையில் உள்ள வீரர்கள் நவ.29ல் நடக்கும் போலீசாருக்கான தேர்வில் தயாராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதில் பொது அறிவு, ஸ்டேஷன் நடைமுறைகள்,உளவியல் சம்பந்தமானவை, குற்றவழக்குகள் விபரங்கள்கேட்கப்பட உள்ளன.

டெங்கு' பரவுவதை தடுக்க புதிய திட்டம்

'டெங்கு' காய்ச்சல் பரவுவதை தடுக்க, 300 குடும்பங்களுக்கு, ஒரு சுகாதாரப் பணியாளரை நியமிக்க, உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசுஉத்தரவிட்டுள்ளது.அரசு உத்தரவு விவரம்:


* சுகாதார பணியாளர்கள், வீடு வீடாகச் சென்று,தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளதா என, ஆய்வு செய்ய வேண்டும
்* ஒவ்வொரு வீட்டுக் கும் ஆறு நாட்களுக்கு ஒரு முறை, சுகாதார பணியாளர் செல்லும் வகையில், செயல் திட்டம் வகுக்க வேண்டும்
* மக்களுக்கு நில வேம்பு கஷாயம் வழங்கு வதுடன் நோய் குறித்த, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

தொடக்கக் கல்வி இயக்குநரின் பட்டாசு விழிப்புணர்வு கடிதம்

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு

புதுச்சேரியில், இரண்டு நாள் தேசிய அறிவியல் மாநாடு நேற்று துவங்கியது.புதுச்சேரி அறிவியல் இயக்கம், பள்ளிக் கல்வித் துறை மாநில பயிற்சி மையத்துடன் இணைந்து, 23வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, தட்பவெப்பநிலையும், கால நிலையும் புரிந்து கொள்வோம் என்ற தலைப்பில் பள்ளிக் கல்வித் துறை வளாகத்தில் நேற்று துவங்கியது. 


அறிவியல் இயக்கத் தலைவர் தமிழ்மணி தலைமை தாங்கினார். செயலாளர் சுதர்சனன் வரவேற்றார்.மாநில ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் ஆண்டறிக்கை வாசித்தார். புதுச்சேரி அறிவியல் இயக்க பொதுச் செயலாளர் ஹேமாவதி பேசும்போது, இந்தாண்டு தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டு ஆய்வு தலைப்பாக தட்பவெப்ப நிலையும், காலநிலையை புரிந்து கொள்வோம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் புதுச்சேரி, காரைக்கால், மாகி பகுதிகளை சேர்ந்த வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, மாவட்ட மாநாடுகள் நடத்தப்பட்டன.இதில் சமர்ப்பிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட ஆய்வு திட்டங்களில் தேர்ந்தெடுத்த 27 ஆய்வு திட்டங்கள் இந்த இரண்டு நாள் மாநாட்டில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இதில் தேர்வு செய்யப்படும் சிறந்த 6 ஆய்வு குழுக்கள், டிசம்பர் 27ம் தேதி முதல் 31ம் தேதி வரை பஞ்சாபில் நடக்கும் தேசிய மாநாட்டில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படும் என்றார்.காலநிலை தொடர்பாக 27 குழுக்கள் ஆய்வு திட்டங்களை சமர்ப்பித்து, பார்வையாளர்கள் எழுப்பிய சங்தேகங்களுக்கு விடையளித்தனர். அறிவியல் தொழில்நுட்பத் துறை விஞ்ஞானிகள் ருக்மணி, சுமதி, புதுச்சேரி அறிவியல் இயக்கதுணை தலைவர் சேகர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிமேட் 2016 நுழைவுத்தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்பு

ஏஐசிடிஇ.,யால் நடத்தப்படும் சிமேட் 2016 நுழைவுத்தேர்வுக்கு ஆன்லைனில்விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மேலாண்மை படிப்பில் சேர சிமேட் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில், 2016-17 கல்வியாண்டுக்கான நுழைவுத்தேர்வு ஜனவரி 17-ம்தேதி நடத்தப்படுகிறது. 


இந்நிலையில், ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க விரும்புவோர் நவம்பர் 3 முதல் டிசம்பர் 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் தகவல்களுக்கு http://www.aicte-cmat.in/College/Index_New.aspx என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு இயற்கை பாடம்! வனத்தை பாதுகாக்க புது முயற்சி

தண்ணீர் சிக்கனம், வனம் மற்றும் வனஉயிரினங்கள் பாதுகாப்பு குறித்து, மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஆசிரியர்கள் வாயிலாக மாணவர்களுக்கு கற்பிக்கவும், 'இயற்கை பாடம்' நடத்தப்படவுள்ளது.நாட்டின் வனப்பரப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.


வன உயிரினங்களுக்கான உணவு, தண்ணீர் தேவை வனத்தினுள் குறைந்து வரும் நிலையில், அவை வனத்தை விட்டு வெளியே வருகின்றன. இதனால், மனித - வன விலங்கு மோதல் ஏற்படுகிறது. வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில், சமீப காலமாக, யானை, சிறுத்தை, கரடி, காட்டு எருமை போன்ற விலங்குகள் புகுந்து விடுவது அதிகரித்து வருகிறது. இதனால், மனித - விலங்கு மோதலும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.வன உயிரினங்களை பாதுகாத்தால் தான், மனிதர்களுக்கான காற்று, குடிநீர், உணவு போன்றவை தடையின்றி கிடைக்கும். இதுபற்றிய புரிதல் இல்லாததால், பல இடங்களில்போராட்டங்களும், பிரச்னைகளும் வெடிக்கின்றன. இயற்கையை பாதுகாக்க வேண்டும், வனவிலங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற உணர்வை மாணவர்கள் மனதில்விதைக்க வேண்டும்.இதற்காக, 'நேச்சர் கன்சர்வேஷன் சொசைட்டி' அமைப்பு வாயிலாக, தனியார் பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களுக்கு, விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில், கோவை மாநகரம், புறநகரம் மற்றும் நீலகிரி மாவட்ட போலீசாருக்கு, வனம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வகுப்பு நடத்தப்பட்டது. அதேபோன்று, மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு வகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகம், 'நேச்சர் கன்சர்வேஷன் சொசைட்டி', வனத்துறை இணைத்து, செயல்வடிவம் கொடுத்துள்ளது.

மாநகராட்சியிலுள்ள, 41 துவக்கப்பள்ளிகளில் பணியாற்றும், 199 ஆசிரியர்கள்; 15 நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும், 109 ஆசிரியர்கள்;11 உயர்நிலைப்பள்ளிகளின் ஆசிரியர்கள், 103 பேர்; 16 மேல்நிலைப்பள்ளிகளின் ஆசிரியர்கள், 408 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.மொத்தம், 83 பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை, தலா, 274 பேர் வீதம், மூன்று பிரிவுகளாக பிரித்து பயிற்சி வகுப்பு நடக்கிறது. சித்தாபுதுார் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி கலையரங்கில், வரும் 24, 25,26 ஆகிய தேதிகளில், 'பயிற்றுனர்களுக்கான பயிற்சி' என்ற தலைப்பில், 'இயற்கை பாடம்' போதிக்கப்படுகிறது.காலை, 10:00 - மாலை 4:00 மணி வரையிலும் வகுப்பு நடக்கிறது. மொத்தம் மூன்று நாட்கள் பயிற்சியில், மூன்று பிரிவுகளாக பயிற்சி வகுப்பு நடக்கிறது. தண்ணீர் பாதுகாப்பு, வனஉயிரின பாதுகாப்பு, மனித - விலங்கு மோதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புவி வெப்பமயமாதல் ஆகிய தலைப்புகளில், 'பவர் பாயின்ட்' மற்றும் செயல்திட்டம் முறையில் வகுப்பு நடக்கிறது. வனத்துறை அதிகாரிகள், சுற்றுச்சூழல் அமைப்பினர், வனத்துறை கால்நடை மருத்துவர்கள், துறை சார்ந்த வல்லுனர்கள் பயிற்சி அளிக்கின்றனர்.தொடர்ந்து, வருவாய்த்துறை, உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள், அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளனர். சுழற்றுச்சூழலை பாதுகாக்க இலவசமாக இப்பயிற்சி நடத்தப்படுகிறது.