யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

18/11/15

அடுத்த கல்வி ஆண்டு முதல் புதிய கல்வி கொள்கை அமலுக்கு வருகிறது டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் குழு தயாரிப்பு

அடுத்த கல்வி ஆண்டு முதல் புதிய கல்வி கொள்கை அமலுக்கு வருகிறது. இந்த புதிய கொள்கையை டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் குழு தயாரித்து வருகிறது.


10 லட்சம் ஆலோசனைகள்


மத்திய மனிதவள மேம்பாட்டு மந்திரி ஸ்மிருதி இராணி புதிய கல்வி கொள்கையை உருவாக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். கடைசியாக 1992-ம் ஆண்டில் கல்வி கொள்கை உருவாக்கப்பட்டு இன்றளவிலும், அந்த கல்வி கொள்கைதான் அமலில் உள்ளது.இப்போது, புதிய கல்வி கொள்கையை உருவாக்க ஓய்வு பெற்ற மத்திய அரசாங்க கேபினட் செயலாளர் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தலைமையில் ஓய்வு பெற்ற 3 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் ஒரு கல்வியாளர் அடங்கிய குழு, நகல் கல்வி கொள்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த கல்வி கொள்கையைஉருவாக்க ஏறத்தாழ 10 லட்சம் ஆலோசனைகளை இந்த குழு பரிசீலித்து வருகிறது.


அமைச்சர்களுடன் ஆலோசனை

இந்த குழு தனது நகல் கல்வி கொள்கைக்கான பணியை டிசம்பர் 31-ந் தேதி முடிக்கிறது. அதன் பிறகு, மத்திய அரசு பரிசீலனை செய்து பிப்ரவரி மாதம் இந்தகல்வி கொள்கையை ஸ்மிருதி இராணி பிரதமரிடம் தாக்கல் செய்கிறார்.2016-ம் கல்வியாண்டில், இந்த புதிய கொள்கை நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. இன்றைய காலகட்டத்தில் மாணவர்களுக்கு எத்தகைய கல்விமுறை பயனுள்ளதாக இருக்கும். வேலை வாய்ப்பிற்கு எது எது உகந்ததாக இருக்கும் என்பது போன்ற ஏராளமான கருத்துகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.பல்கலைக்கழக மானிய குழு, அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில், மத்திய செகண்டரி போர்டு போன்ற பல அமைப்புகள் கருத்துகளை வழங்கி உள்ளன. மேலும், இந்த கல்வி கொள்கை தொடர்பாக ஸ்மிருதி இராணி, மாநில கல்வி அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஆசிரியர் பயிற்சியில் புதிய வழிமுறை

கல்வித்துறை நடத்தும் ஆசிரியர்களுக்கான பயிற்சிகளில்,புதிய வழிமுறைகளை அதிகம் புகுத்த வேண்டும்,என,கல்வி ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆசிரியர்களின் தலைமைப்பண்பு, கற்பிக்கும் முறை,எளிமையான முறையில் கற்பித்தல்,ஆங்கில வழியில் கற்பித்தல்,ஆய்வுப்பாடம் மற்றும் கணித உபகரணப் பெட்டிகள் குறித்து,ஆண்டுதோறும், கல்வித்துறை சார்பில்,ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.



அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் இடைநிலை கல்வி இயக்கத்தின் கீழ்,பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுனர்கள் அப்பயிற்சியை வழங்குகின்றனர். மத்திய மற்றும் மாநில அரசுகள்,பள்ளிகளின் பராமரிப்பு மற்றும் பயிற்சிக்கான நிதி ஒதுக்கீடு செய்கின்றன.இதில் நடப்பு கல்வியாண்டில்,பயிற்சிக்கு மட்டுமே பெரும்பான்மையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால்,பள்ளிகளுக்கு தேவையான பராமரிப்பு மற்றும் சுற்றுச்சுவர் வசதி மேம்படுத்துதல் உள்ளிட்டவை தடைபட்டன.தொடர் பயிற்சிகளால் பாதிப்பு தவிர,தொடர் பயிற்சிகளால் ஏற்கனவே ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில்,மாணவர்களுக்கு பாடம் நடத்துவது பாதிக்கப்படுகிறது. இவ்வாறு மேற்கொள்ளப்படும் பயிற்சிகளால்,மாணவர்களின் கல்வித்திறன் முன்னேற்றமடைந்துள்ளதாக தெரியவில்லை;சில பயிற்சிகளில் மற்ற பள்ளிஆசிரியர்களே பயிற்சியளிப்பதால் அதில் பயனில்லை என சில பள்ளி தலைமையாசிரியர்களே கூறுகின்றனர்.


இதற்கு பயிற்சிகளில் மாற்றத்தை ஏற்படுத்தாமல்,ஒரே முறையை பின்பற்றி பயிற்சியளிப்பதே காரணமாக உள்ளது.பயிற்சிகளின் நோக்கமே மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்துவது. தற்போது அதன் நிலை மாறி,தொடர் பயிற்சிகளால்,மாணவர்களின் கல்விக்கே பாதிப்பு ஏற்படும் நிலையே உள்ளது.உடுமலை,சுற்றுப்பகுதியில்,நுாற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். பயிற்சிகள் பாடவாரியாகவே நடத்தப்படுகிறது. இருப்பினும்,மாணவர்களுக்கு எளிய முறையில் எவ்வாறு அதன் கருத்துகளை கொண்டு செல்வது என்பது குறித்து பயிற்சியளிப்பதில் புதிய முறைகளை புகுத்த வேண்டும் என,எதிர்பார்க்கின்றனர்.இவ்வாறு முக்கியத்துவம் அளித்து,இதற்கு மட்டுமே அதிகளவில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியில் மேற்கொள்ளப்படும் பயிற்சிகள் பயனின்றி உள்ளது. இதனால்அரசின் நிதி ஒதுக்கீடு வீணடிக்கப்படுவதாகவும் பெற்றோர் புகார் கூறுகின்றனர். அனைவருக்கும் கல்வி மற்றும் இடைநிலை கல்வி இயக்கம் இதனை ஆய்வு செய்து,புதிய வழிமுறைகளை பயிற்சியில் புகுத்த வேண்டுமென கல்வி ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

7-வது சம்பளக் கமிஷனின் அறிக்கை இந்த வாரத்திற்குள் தாக்கல்: 15 சதவீதம் சம்பளம் உயர வாய்ப்பு

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் ஊதியத்தை மாற்றியமைக்கும் ஏழாவது சம்பளக் கமிஷன் அறிக்கை நவம்பர் 19-ம் தேதி தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மத்திய அரசு ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள கமிஷனை அமல்படுத்தி வருகிறது. அதன்படி 2016–ம் ஆண்டுக்கான சம்பள கமிஷன் பரிந்துரை அறிக்கையை தயாரிக்க நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையில் 2014–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு குழு அமைக்கப்பட்டது.

இந்த குழு ஆகஸ்டு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் இதற்கான காலக்கெடு 4 மாதத்துக்கு அதாவது டிசம்பர் 31–ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. பல்வேறு தரப்பினரிடம் இந்த குழு கருத்தை கேட்டறிந்தது.

இந்நிலையில் சம்பள கமிஷன் பரிந்துரை அறிக்கை தயாராக இருப்பதாகவும், விரைவில் நிதித்துறை அமைச்சகத்திடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், 7-வது சம்பளக் கமிஷனின் அறிக்கை நவம்பர் 19-ம் தேதி தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 15 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்க அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

2016–ம் ஆண்டு ஜனவரி 1–ந் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ள திருத்தப்பட்ட ஊதியம் மூலம் சுமார் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் அடைவார்கள். இந்த குழுவின் செயலாளராக மீனா அகர்வால் உள்ளார். இக்குழுவில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி விவேக் ராவ், பொருளாதார நிபுணர் ரத்தின் ராய் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

இந்திய மாணவர்களுக்கு புதிய விசாக்களை பிரிட்டன் அரசு விரைவில் அறிமுகம்

இந்திய மாணவர்களுக்கு புதிய விசாக்களை பிரிட்டன் அரசு விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாகத் தகவல்

தெரிவிக்கின்றன. இதன்மூலம் பிரிட்டன் பல்கலைக்கழகத்தில் படிப்பை முடிக்கும் மாணவர்கள் அதைத் தொடர்ந்து 2 ஆண்டுகள் பிரிட்டனில் வேலை பார்க்கும் வசதி செய்யப்படும்.


பிரிட்டனில் படிக்கத் திட்டமிட்டுள்ள மாணவர்களுக்கு இந்தச் செய்தி வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இந்த புதிய விசார திட்டத்தை லண்டன் மாநகர மேயர் போரிஸ் ஜான்ஸன், பிரிட்டன் அரசிடம் தரவுள்ளார். இந்தத் திட்டம் நிறைவேறினால் காமன்வெல்த் ஒர்க் விசா இந்திய மாணவர்களுக்குக் கிடைக்கும்.

இந்த புதிய விசாத் திட்டம் இந்திய மாணவர்களுக்கு மட்டுமே அறிமுகம் செய்யப்படவுள்ளது. பிரிட்டன் பல்கலைக்கழகத்தில் பட்டம் படித்து முடித்த மாணவர்கள் அதன் பிறகு 2 ஆண்டுகள் அங்கேயே வேலை செய்து பணம் ஈட்ட முடியும். இதுகுறித்து போரிஸ் ஜான்ஸன் கூறியதாவது: இந்திய மாணவர்களுக்கு புதிய விசா திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களை அரசிடம் சமர்ப்பிக்கவுள்ளோம்.

இரண்டாவதாக அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நிபுணர்களுக்கு சிறப்பு விசா திட்டத்தையும் அரசிடம் தரவுள்ளோம். பிரிட்டனில் 3-வது பெரிய வருவாய் உற்பத்தியாளர்களாக இந்திய மாணவர்கள் உள்ளனர் என்றார் அவர்.

பன்னிராண்டாம் வகுப்பு பயிலும் மாணவி திவா சர்மா டாக்டர் அப்துல் கலாம் விருதுக்குத் தேர்வு

கால்நடைகளுக்கு மருத்துவ உதவியை அளிப்பதற்காக மன அழுத்த கண்காணிப்பு திட்ட மாதிரியை உருவாக்கியதற்காக திவா சர்மாவுக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளது.


நேஷனல் இன்னோவேஷன் ஃபவுண்டேஷன் (என்ஐஎஃப்) இக்னைட் 2015 என்ற விருதை அறிவித்தது. இந்த விருதுக்கான போட்டியில் பள்ளிகளைச் சேர்ந்த 28,106 மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இதில் 40 மாணவர்கள் இறுதியாகத் தேர்வு செய்யப்பட்டனர். அதில் கடைசியாக 31 மாணவர்களின் திட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன. ஹார்ட்வேர் மற்றும் சாஃப்ட்வேர் என்ற வகையில் இந்தத் திட்ட மாதிரியை உருவாக்க போட்டி விதிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் திவா சர்மாவின் திட்ட மாதிரி தேர்வு செய்யப்பட்டு வெற்றி பெற்றது.

நவம்பர் 30-ம் தேதி நடைபெறும் விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கையால் விருதைப் பெறவுள்ளார் திவா சர்மா. இதுகுறித்து திவா சர்மா கூறியதாவது: கால்நடைகளின் உடல்நிலை குறித்து அறிய இந்த சாஃப்ட்வேர் பயன்படும். இதைப் பயன்படுத்துவதன் மூலம் கால்நடைகளின் பிரச்னையை அறிய முடியும். நாடித்துடிப்பு, இருதயத் துடிப்பு, சுவாசத்துக்கு எடுத்துக்கொள்ளும் நேரம், உடல் வெப்பநிலையை இந்த சாஃப்ட்வேர் கண்காணிக்கும் என்றார் அவர்.

இந்த சாஃப்ட்வேரைத் தயாரிக்க டெல்லி ஐஐடி-யின் உதவியை நாடியுள்ளார் திவா. இந்தத் திட்டத்துக்கு உறுதுணையாக ஐஐடி டெல்லி இன்னோவேஷன் மையத்தின் பிவிஎம் ராவ் இருந்துள்ளார்.

ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றிபெற வேண்டுமா?

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் நடத்தப் படுகின்றன. 


திருநங்கைகளை புறக்கணிக்கக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

'நோய்களை பரப்பிவரும் நாய் களை அடித்தால்கூட கேட்பதற்கு ஆள்கள் வருகின்றனர்.


ஆனால் திருநங்கைகளுக்கு குரல் கொடுக்க யாரும் வருவதில்லை' என உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.


'தாங்கள் திருநங்கைகள் என தைரியமாக வெளியில் வருவோரை ஆதரிக்க மறுக்கக் கூடாது' என நீதிபதிகள் தெரிவித்தனர்.

தேனி மாவட்டம், சின்னமனூரை சேர்ந்த எம்.பாக்கியம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

என் 2-வது மகன் சதீஷ்குமார் (17) 25.9.2015-ல் மாயமானார். அவரை அல்லிநகரத்தைச் சேர்ந்த திருநங்கைகள் பானு, கனகா ஆகியோர் கடத்தி வைத்துள்ளனர்.

இது தொடர்பாக சின்னமனூர் போலீஸார் வழக்கு பதிவு செய்தும், என் மக னைக் கண்டுபி டிக்கவில்லை. சதீஷ்குமாரை கண்டுபிடித்து ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் பி.ஆர்.சிவகுமார், வி.எஸ்.ரவி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் சுசிகுமார், திருநங்கைகள் சார்பில் வழக்கறிஞர் ரஜினி, அரசு வழக்கறிஞர் மோகன் வாதிட்டனர்.

நீதிமன்றத்தில் திருநங்கைகள் பானு, கனகா ஆகியோர் ஆஜராகியிருந்தனர். அவர்கள் நீதிபதிகளிடம் கூறியது:

குடும்பத்தால் புறக்கணிப்பட்ட திருநங்கைகள் 50-க்கும் மேற்பட்டோர் அல்லிநகரத்தில் இரு வீடுகளை வாடகைக்கு எடுத்து வசித்துவருகிறோம்ஒன்றாகவே சமைத்து சாப்பிடுகிறோம்.

கிராமிய கலைநிகழ்ச்சிகளுக்கு சென்று சம்பாதிக்கிறோம். மனுதாரர் மகன் பெண் தன்மை காரணமாக, ஜூன் மாதம் எங்களைத் தேடி வந்தார். நாங்கள் அவரை போலீஸாரிடம் ஒப்படைத்துவிட்டோம். 

தற்போது அவர் மாயமானதற்கும் எங்களு க்கும் தொடர்பு இல்லை. இருப் பினும் மனுதாரரின் உறவினர்கள் வீடு புகுந்து தாக்கி பொருள்களை சூறையாடினர்.

தற்போது வீட்டில் ஒரு பொருளும் இல்லை. இந்த சம்பவத்தால் வீட்டை காலி செய்யுமாறு உரிமையாளர் கூறுகிறார்.

திருநங்கைகளுக்கு வீடு கிடைப்பது கடினம். பாதுகாப்பில்லாமல் இருக்கிறோம் என கண்ணீர்விட்டனர்.

இதையடுத்து நீதிபதிகள் கூறியது:

திருநங்கைகளுக்கு 3-ம் பாலினமாக உலகம் முழுவதும் அங்கீகாரம் அளிக்கப் பட்டுள்ளது.

மற்றவர்களைவிட திருநங்கைகளில் அதிக திறமை உள்ளவர்கள் ஏராளமானோர் உள்ளனர். 

பார்வை யற்ற, கேட்கும் திறனற்ற, ஊனத் துடன் பிறப்பவர்களை புறக்கணிப்பதில்லை. ஆனால் திருநங்கைகளை புறக்கணிக்கி ன்றனர். 

நோய் பரப்பும் நாய்களை அடித்தால்கூட கேட்பதற்கு ஆள்கள் வருகின்றனர்.

ஆனால் திருநங்கைகளுக்கு குரல் கொடுக்க யாரும் வருவதில்லை.

அவர்களை சமூகத்தில் இழிவாக பார்க்கின்றனர்.

திருநங்கையாக இருக்கும் பலர் வெளியில் சொல்லாமல் உள்ளனர். ஆனால் நாங்கள் திருநங்கைகள்தான் என தைரியமாக வெளியே வருவோரை ஆதரிக்க மறுக்கக்கூடாது.

திருநங்கைகளின் திறமையை வெளிக் கொண்டு வர வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றனர்.

பின்னர், சிறுவன் மாயமான வழக்கு, திருநங்கைகள் தாக்க ப்பட்ட வழக்கின் விசாரணையை தேனி ஏ.டி.எஸ்.பி. கண்காணித்து, 3 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

திருநங்கைகளுக்கு போலீஸார் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். திருநங்கைகள் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

புதிய தலைமை தேர்தல் அதிகாரி விரைவில் அறிவிப்பு வெளியீடு

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜேஷ் லக்கானி நியமிக்கப்பட உள்ளார். ஓரிரு நாளில், இதற்கான அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக, 2014 அக்., 30ல், சந்தீப் சக்சேனா பொறுப்பேற்றார். ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், அவரது மேற்பார்வையில் நடந்தது.


ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், கள்ள ஓட்டுகள் அதிகம் பதிவானதாக புகார் எழுந்தது. ஆளும்கட்சிக்கு சாதகமாக அவர் செயல் படுவதாக, எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர்.எனினும், அவர், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை நீக்க, தவறு இல்லாத வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டார். இதன் மூலம், தேர்தல் கமிஷனர்களின் பாராட்டை பெற்றார். தேர்தல் கமிஷனில், மூன்று துணை தேர்தல் கமிஷனர் பதவிகள் காலியாக இருந்தன.

எனவே, சந்தீப் சக்சேனாவை துணை கமிஷனராக நியமிக்க, தேர்தல் கமிஷன் முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பு, கடந்த மாதம் வெளியானது. அதைத் தொடர்ந்து, புதிய தலைமை தேர்தல் அதிகாரியை தேர்வு செய்ய, மூன்று பேரின் பெயர்களை, தமிழக அரசு, தேர்தல் கமிஷனுக்கு பரிந்துரை செய்தது. மூன்று பேரில் ஒருவரை தேர்வு செய்வதற்கான, ஆலோசனைக் கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. தற்போது, தமிழக எரிசக்தித் துறை முதன்மை செயலராக உள்ள ராஜேஷ் லக்கானி தேர்வு செய்யப்பட்டதாக, தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து, தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறும்போது,

'தேர்தல் கமிஷன் தேர்வு செய்துள்ள அதிகாரியின் பெயரை, தமிழக அரசுக்கு அனுப்பும். தமிழக அரசு, அரசாணை பிறப்பித்து, அவரை விடுவிக்கும். இப்பணி, ஓரிரு நாளில் நடைபெறும்' என்றனர்.

பட்டப் படிப்பை அதிகபட்சம் 5 ஆண்டுகளில் முடிக்க வேண்டும்: நாடு முழுவதும் சீரான நடைமுறை

இளநிலை பட்டப் படிப்பை அதிகபட்சம் 5 ஆண்டுகளில் முடிக்க வேண்டும் என்ற வகையில், நாடு முழுவதும் சீரான வழிகாட்டுதலை பல்கலைக் கழக மானியக் குழு (யுஜிசி) கொண்டு வந்துள்ளது.

இதுதொடர்பாக அனைத்து பல்கலைக் கழகத் துணை வேந்தர்களுக்கும் பல்கலைக் கழக மானியக் குழு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:
 ஒரு பட்டப் படிப்பை முடிப்பதற்கான அதிகபட்ச காலஅவகாசம் நாடு முழுவதும் உள்ள பல்கலைக் கழகங்களில் மாறுபட்டு இருப்பது கவனத்துக்கு வந்தது. இந்த அதிகபட்ச கால அவகாசத்தை நாடு முழுமைக்கும் சீராக்கும் வகையில், ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் புதிய வழிகாட்டுதலை பல்கலைக் கழக மானியக் குழு வகுத்துள்ளது.
 அதன்படி, ஒரு மாணவர் இளநிலை பட்டப் படிப்பு அல்லது முதுநிலை பட்டப் படிப்பை அந்தப் பல்கலைக் கழகம் நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச கால அவகாசத்தில் முடிக்க வேண்டும்.
 அவ்வாறு குறைந்தபட்ச காலத்தில் முடிக்க முடியாதவர்களுக்கு மேலும் 2 ஆண்டுகளில் முடிக்க அனுமதி அளிக்கலாம். இதற்கு மேல், கால அவகாசம் அளிக்கப்படக் கூடாது.
 இருந்தபோதும், தவிர்க்க முடியாத சில சூழ்நிலைகளால் இந்தக் கூடுதல் கால அவகாசத்திலும் பட்டப் படிப்பை முடிக்க இயலாதவர்களுக்கு அவர்கள் தெரிவிக்கும் காரணங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்பட்சத்தில் மேலும் ஒரு ஆண்டு கூடுதல் அவகாசம் அளிக்கலாம் என பல்கலைக் கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.
 இதையடுத்து, மூன்று ஆண்டு இளநிலை பட்டப் படிப்பை, அதிகபட்சம் 5 ஆண்டுகளில் முடித்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

மழையால் பாதிக்கப்பட்ட வகுப்பறைகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

மழையால் பாதிக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் உள்ள பள்ளி வகுப்பறைகளுக்கு, பூட்டு போட, பள்ளி கல்வி இயக்குனர்உத்தரவிட்டுள்ளார். பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பிய சுற்றறிக்கை
:* தொடர் மழையால், பள்ளிகளின் சுற்றுச்சுவர் ஈரப்பதத்துடன் காணப்படும். எனவே, சுற்றுச்சுவரிலிருந்து குறைந்தது, 20 அடி துாரம் வரை, மாணவர்கள் செல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* மழையால் பாதிக்கப்பட்ட வகுப்பறைகளை திறக்க வேண்டாம். அவற்றை பூட்டி, மாணவர்கள் அருகே செல்லாமல் பாதுகாக்க வேண்டும்
* மின் கசிவை கண்டறிந்து, மின் இணைப்பை தற்காலிகமாக துண்டிக்க வேண்டும்
*பள்ளி வளாகத்தில் நீர் தேங்கியிருந்தால் அதை அகற்றுவதுடன், திறந்த நிலையில் தொட்டிகள், பள்ளங்கள் இருந்தால் அவற்றை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்
* வெள்ளம் வரும் இடங்கள், நீர் நிலைப்பகுதிகளை தவிர்க்க மாணவர்களுக்கு அறிவுறுத்துவதுடன், 'வெள்ளத்தை வேடிக்கை பார்க்க செல்லக்கூடாது' என, எச்சரிக்க வேண்டும்
* பருவ மழையால், 'சிக்-குன் குனியா, டெங்கு' போன்ற காய்ச்சல் வராமல் முன்னெச்சரிக்கையாக இருக்க, மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.

1,093 உதவி பேராசிரியர்கள்:டி.ஆர்.பி., மூலம் நியமனம்

அரசு கல்லுாரிகளில் காலியாகவுள்ள, 1,093 உதவி பேராசிரியர் பணியிடங்களை, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., மூலம் நிரப்ப, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், புதிதாக, 900 பாடப்பிரிவுகள் துவக்கப்பட்டு, மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அத்துடன், 2011 முதல், 12 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளன.

புதிய கல்லுாரிகளில், தலா, ஐந்து உதவி பேராசிரியர்கள் வீதம், 60 பேரும்; புதிய பாடப்பிரிவுகளுக்கான ஆசிரியர்களும் நியமிக்கப்பட வேண்டும். இந்த அடிப்படையில், தமிழகத்தில் மொத்தம், 3,165 உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இவற்றில் முதற்கட்டமாக, காலை நேர வகுப்பு களில் தற்காலிகமாக, 2,072 கவுரவ பேராசிரியர்களை, மாதம், 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் நியமிக்கவும், மீதமுள்ள, 1,093 உதவி பேராசிரியர் இடங்களுக்கு, டி.ஆர்.பி., மூலம் ஆட்களை தேர்வு செய்யவும், தமிழக உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. வேலைவாய்ப்பு பதிவு மூப்பு, இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல விதிகளின் கீழ், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என, உயர் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

மின் கட்டணம் செலுத்த ஒரு மாதம் அவகாசம் நுகர்வோர் கோரிக்கை....!

'தொடர் மழையால், பொதுமக்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ளதால், மின் கட்டணம் செலுத்த, ஒரு மாதம் அவகாசம் வழங்க வேண்டும்' என, தமிழ்நாடு மின் வாரியத்திற்கு, நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர். 
தமிழ்நாடு மின் வாரியத்திற்கு, 1.80 கோடி வீட்டு மின் நுகர்வோர் உள்ளனர். மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்பட்டதில் இருந்து, 20 தினங்களுக்குள், மின் கட்டணம் செலுத்த வேண்டும்.

சிக்கல்:
இரண்டு வாரங்களாக, சென்னை உட்பட, பல மாவட்டங்களில், கன மழை பெய்து வருகிறது. சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால், மின் கட்டண மையங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், 'சர்வர்' பழுது காரணமாக, மின் கட்டண மையங்களில் உள்ள கம்ப்யூட்டர், இணைய சேவை பாதிக்கப்பட்டு உள்ளது; இதனால், மின் கட்டணம் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மழை நீடிக்கும்:
இதுகுறித்து மின் நுகர்வோர் சிலர் கூறியதாவது:நவ., 7 முதல், மழை பெய்து வருவதால், வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல், தினக்கூலி மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மின் கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி தேதி, கடந்த வாரத்துடன் முடிவடைந்து விட்டது. 'மழை நீடிக்கும்' என, வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனால், கடைசி தேதி முடிந்தவர்கள் அபராதம் இன்றி இந்த மாதம் இறுதி வரை, மின் கட்டணம் செலுத்த அனுமதிக்க வேண்டும். எனவே, கால அவகாசம் அளிப்பது குறித்த அறிவிப்பை, மின் வாரியம் உடனே வெளியிட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்

'Group 2A' தேர்வு சிக்கல்: கூடுதல் அவகாச கோரிக்கை,

ஆசிரியர் பணி பதிவேடு பராமரிக்க கல்வித்துறை உத்தரவு....

7th pay commission அறிக்கை இந்த வாரத்திற்குள் தாக்கல்: 15 சதவீதம் சம்பளம் உயர வாய்ப்பு.....!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் ஊதியத்தை மாற்றியமைக்கும் 7th pay commission அறிக்கை நவம்பர் 19-ம் தேதி தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை pay commission அமல்படுத்தி வருகிறது. அதன்படி 2016–ம் ஆண்டுக்கான சம்பள கமிஷன் பரிந்துரை அறிக்கையை தயாரிக்க நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையில் 2014–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு ஆகஸ்டு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இதற்கான காலக்கெடு 4 மாதத்துக்கு அதாவது டிசம்பர் 31–ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. பல்வேறு தரப்பினரிடம் இந்த குழு கருத்தை கேட்டறிந்தது.

இந்நிலையில் pay commission பரிந்துரை அறிக்கை தயாராக இருப்பதாகவும், விரைவில் நிதித்துறை அமைச்சகத்திடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், 7th pay commission-ன் அறிக்கை நவம்பர் 19-ம் தேதி தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 15 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்க அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

2016–ம் ஆண்டு ஜனவரி 1–ந் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ள திருத்தப்பட்ட ஊதியம் மூலம் சுமார் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் அடைவார்கள். இந்த குழுவின் செயலாளராக மீனா அகர்வால் உள்ளார். இக்குழுவில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி விவேக் ராவ், பொருளாதார நிபுணர் ரத்தின் ராய் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

DA: 50% அகவிலைப்படியை, அடிப்படை சம்பளத்துடன் இணைக்கும் திட்டமில்லை' என, மத்திய அரசு அறிவிப்பு

மத்திய அரசு ஊழியர்களின், 50 சதவீத அகவிலைப்படியை, அடிப்படை சம்பளத்துடன் இணைக்கும் திட்டமில்லை' என, மத்திய அரசு தெரிவித்து உள்ளது. மத்திய நிதித் துறை 
இணை அமைச்சர், நமோ நாராயண் மீனா, லோக்சபாவில் நேற்று கூறியதாவது:


"அரசு ஊழியர்களின் அகவிலைப்படியில், 50 சதவீதத்தை, அடிப்படை சம்பளத்துடன் இணைக்க வேண்டும்' என, மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தி வந்தன. ஆனால், "எந்த சூழ்நிலையிலும், அகவிலைப்படியை, அடிப்படை சம்பளத்துடன் இணைக்க வேண்டாம்' என, ஆறாவது சம்பள கமிஷன், அரசுக்கு பரிந்துரைத்து உள்ளது. சம்பள கமிஷனின் இந்த பரிந்துரையை, அரசு ஏற்றுள்ளது.ஆறாவது சம்பள கமிஷனின் பரிந்துரைகள், 2006, ஜனவரி மாதத்திலிருந்தே அமலுக்கு வருகிறது. அடுத்த சம்பள கமிஷன் குறித்து, இப்போது எந்த பதிலும் கூற முடியாது. ஒரு சம்பள கமிஷன் அமைக்கப்பட்டு, 10 ஆண்டுகளுக்கு பின் தான், அடுத்த சம்பள கமிஷன் அமைப்பது குறித்து, பரிசீலிக்கப்படும். இவ்வாறு,அவர் கூறினார்.

ஆதார் எண் Online E -Pay Roll - ல் இணைக்க வேண்டும் - பள்ளிக்கல்வி இயக்குனர்

17/11/15

திருச்சி மாவட்டம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் மகாகும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு வருகிற 18.11.2015 ( புதன்கிழமை ) திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு

ந.க.எண்.25202/2015/இ4    தேதி.16.11.2015
உள்ளூர் விடுமுறை - திருச்சி மாவட்டம் -  ஸ்ரீரங்கம் வட்டம் -  அரங்கநாதசுவாமி திருக்கோயில் மகாகும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு  வருகிற 18.11.2015 (புதன்கிழமை ) நடைபெறுவதை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை எனமாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.


விடுமுறைக்கு பதிலாக வருகிற டிசம்பர் மாதம்  (05.12.2015) சனிக்கிழமை வேலை நாள் என அறிவிக்கப்படுகிறது

கணினி அறிவியல் பாடத்தை கட்டாயமாக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை கட்டாயமாக்கக் கோரி, கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநிலச் செயலர் வெ.குமரேசன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் உ.ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தின் போது, 10ஆம் வகுப்பு வரை கணினி அறிவியலை கட்டாய பாடமாக்க வேண்டும். சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தில் கைவிடப்பட்ட கணினி அறிவியல் பாடத்தை நிகழாண்டிலேயே மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். கணினி பாடப் பிரிவு இல்லாத 800க்கும் மேற்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில், அந்த பாடத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து கோஷமிட்டனர். மாவட்டத் தலைவர் தேனரசு, செயலர் சத்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்

மூவகை சான்றிதழ்; 'மூச்சு முட்டும்' ஆசிரியர்கள்: பயன்படுமா 'இ சேவை' மையம்

மதுரை;பள்ளி மாணவர்களுக்கு ஜாதி, வருவாய், இருப்பிடச் சான்றிதழ்கள் (மூவகை சான்று) வழங்குவதற்கு மாணவர் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய, மின்னணு உபகரணங்கள் வசதி இல்லாததால் ஆசிரியர்கள் திண்டாடுகின்றனர்.அரசு சார்பில் வழங்கப்படும் 14 வகை நலத் திட்டங்களில், மூவகை சான்றும் ஒன்று. இதை டிசம்பருக்குள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும், மாணவர் விவரத்தை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணியை, கல்வித்துறை முடுக்கிவிட்டுள்ளது.
ஆனால், பதிவேற்றம் செய்ய தேவையான கணினி, ஸ்கேனிங், உட்பட உபகரணங்கள் எதுவும் இல்லை. இணையதளம் வசதி, கணினி ஆசிரியர் பெரும்பாலான பள்ளியில் இல்லை. இதனால் ஒரு மாணவருக்கு ரூ.30 செலுத்தி, தனியார் மையங்கள் மூலம் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.இதற்குமுன் மாணவரிடம் ஆவணங்கள் பெற்று, அவை தாலுகா அலுவலகங்களில் வழங்கப்பட்டன. அதை பரிசீலித்து மாணவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆனால், தற்போது தலைமையாசிரியரே பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற உத்தரவால் கூடுதல் பணிச்சுமையில் தத்தளிக்கின்றனர்.இதுகுறித்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கழக செயலாளர் சிவக்குமார், உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சங்க செயலாளர் பாஸ்கரன் கூறியதாவது:
இது முற்றிலும் வருவாய்த்துறைக்கு உட்பட்டது. தற்போது பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவர் விவரப் பட்டியல், கல்வி உதவி தொகைக்கான வங்கி கணக்கு எண்கள், நலத்திட்ட விவரம் என பல்வேறு
பதிவேற்ற பணிகளை ஒரே நேரத்தில் மேற்கொள்வதால் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது.
மூவகைச் சான்றிதழ் பணிகளை தாலுகா அலுவலகங்களில் செயல்படும் 'இ சேவை' மையங்களுக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும்,
என்றனர்.