யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

18/11/15

மின் கட்டணம் செலுத்த ஒரு மாதம் அவகாசம் நுகர்வோர் கோரிக்கை....!

'தொடர் மழையால், பொதுமக்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ளதால், மின் கட்டணம் செலுத்த, ஒரு மாதம் அவகாசம் வழங்க வேண்டும்' என, தமிழ்நாடு மின் வாரியத்திற்கு, நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர். 
தமிழ்நாடு மின் வாரியத்திற்கு, 1.80 கோடி வீட்டு மின் நுகர்வோர் உள்ளனர். மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்பட்டதில் இருந்து, 20 தினங்களுக்குள், மின் கட்டணம் செலுத்த வேண்டும்.

சிக்கல்:
இரண்டு வாரங்களாக, சென்னை உட்பட, பல மாவட்டங்களில், கன மழை பெய்து வருகிறது. சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால், மின் கட்டண மையங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், 'சர்வர்' பழுது காரணமாக, மின் கட்டண மையங்களில் உள்ள கம்ப்யூட்டர், இணைய சேவை பாதிக்கப்பட்டு உள்ளது; இதனால், மின் கட்டணம் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மழை நீடிக்கும்:
இதுகுறித்து மின் நுகர்வோர் சிலர் கூறியதாவது:நவ., 7 முதல், மழை பெய்து வருவதால், வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல், தினக்கூலி மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மின் கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி தேதி, கடந்த வாரத்துடன் முடிவடைந்து விட்டது. 'மழை நீடிக்கும்' என, வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனால், கடைசி தேதி முடிந்தவர்கள் அபராதம் இன்றி இந்த மாதம் இறுதி வரை, மின் கட்டணம் செலுத்த அனுமதிக்க வேண்டும். எனவே, கால அவகாசம் அளிப்பது குறித்த அறிவிப்பை, மின் வாரியம் உடனே வெளியிட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக