யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

3/12/15

தனியார் நிறுவனங்களுக்கு 2 நாள் விடுமுறை அளிக்க தமிழகஅரசு அறிவுறுத்தல்

மழை வெள்ளச் சூழலை கருத்தில் கொண்டு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட தனியார் நிறுவனங்கள் டிசம்பர் 3, 4 தேதிகளில் பொது விடுமுறை அளிக்கலாம் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு தொழிலாளர் நலத்துறை செயலர் அனுப்பிய கடிதத்தில், 


''சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட தனியார் நிறுவனங்கள் டிசம்பர் 3, 4 தேதிகளில் பொது விடுமுறை அளிக்கலாம்.அல்லது வீட்டிலிருந்தே ஊழியர்களை பணிகளை முடிக்கச் சொல்லலாம்.

வெள்ள சூழலை கருத்தில் கொண்டு விடுமுறை அளிக்கலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே, அலுவலகத்தில் பணிபுரிய சென்றவர்கள் இரவில் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முடியாமல், அலுவலகத்திலேயே தங்கும் சூழலும் ஏற்பட்டது. இன்று காலையில் வசிப்பிடங்களில் இருப்பவர்கள் அலுவலகம் வர முடியாமல் சிரமப்பட்டனர்.இந்நிலையில், தமிழக அரசு தனியார் நிறுவனங்கள் பொது விடுமுறை அளிக்கலாம் என்று அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

2/12/15

3 நாட்களுக்கு கனமழை தொடரும் BBC கணிப்பு 50 செ.மீ.,

'வங்க கடலில், நேற்று முன்தினம் உருவான குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலையால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்னும், மூன்று நாட்களுக்கு கனமழை தொடரும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

'தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், (இன்று) புதன்கிழமை, மிக, மிக கனமழை பெய்யும்' என, எச்சரிக்கப்பட்டு உள்ளது. வானிலை ஆய்வு மையம், நேற்று வெளியிட்ட அறிக்கை:தென் மேற்கு வங்க கடலில், உருவான குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலை, இலங்கை அருகே, வட தமிழகத்துக்கும், புதுச்சேரிக்கும் இடையே நிலை கொண்டு உள்ளது.

இதனால், டிச., 5 வரை 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும்.

டிச., 2: தமிழகம், புதுச்சேரியில் கனமழை பெய்யும்.டிச., 3: தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் மிக, மிக கனமழை பெய்யும். தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் கனமழை பெய்யும்.

டிச., 4, 5: தமிழகம், புதுச்சேரியில் மிக கனமழை பெய்யும்.சென்னையில் அடுத்த, 48 மணி நேரத்துக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். பரவலாக, மிக கனமழை பெய்யும். காற்று மிக பலமாக வீசும். கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால், மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை 8:30 மணி வரை, 4 செ.மீ., மழை பெய்தது. காலை, 8:30 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, 14 செ.மீ., மழை பதிவானது. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில், குறைந்தபட்ச வெப்ப நிலை, 23 டிகிரி செல்சியஸ். சமவெளி பகுதியில், தர்மபுரியில் மிக குறைவான வெப்ப நிலை பதிவானது. அங்கு அதிகபட்ச வெப்பநிலையே, 19 டிகிரி செல்சியஸ் தான். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

பி.பி.சி., அறிக்கை:

லண்டன் பி.பி.சி., செய்தி நிறுவனம், சென்னை மழை குறித்து, நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'டிச., 1, 2ல், சென்னையில் கனமழை பெய்யும். இந்த, இரண்டு நாட்களில் மட்டும், 50 செ.மீ., மழை, சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் பதிவாகும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்., 21ம் தேதிஆசிரியர் தகுதி தேர்வு

மத்திய அரசின், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், தனியார், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர, மத்திய அரசின், 'சிடெட்' என்ற ஆசிரியர் தகுதித் தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். மாநில பள்ளிகளில் பணியாற்ற, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., நடத்தும், 'டெட்' எனப்படும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதில், மத்திய அரசு தேர்வில் வெற்றி பெற்றவர்களால், மாநில அரசு பள்ளிகளில் பணியில் சேர முடியும். 
வரும், 2016க்கான, 'சிடெட்' தேர்வுக்கு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதல் தேர்வு, பிப்., 21ம் தேதியும், இரண்டாவது தேர்வு, செப்., 18ம் தேதியும் நடக்கிறது. தமிழக அரசின், 'டெட்' தேர்வு, இரண்டு ஆண்டுகளாக நடக்கவில்லை. எனவே, மத்திய அரசின் தேர்வில், தமிழகத்தை சேர்ந்த பட்டதாரிகள், அதிக அளவில் பங்கேற்கலாம் என, தெரியவந்துள்ளது.

பொது விடுமுறை நாட்கள் 2016 ல் எவ்வளவு; அரசு அறிவிப்பு

அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு முதல்வர் அறிவிப்பு

சென்னை: 'தமிழக பள்ளிகளுக்கு, பல நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், டிச., 7 முதல் துவங்க இருந்த, அரையாண்டு தேர்வுகள், ஜனவரி, முதல் வாரத்தில் நடத்தப்படும்' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா அறிக்கை:தொடர் மழையால் நீர் சூழ வாய்ப்புள்ள பகுதிகளில், காவல் துறை, தீயணைப்பு துறை, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை, கடலோர பாதுகாப்புப்படையினர், பாதிக்கப்படும் மக்களை படகுகள் மூலம் மீட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க, தயார் நிலையில் உள்ளனர். அந்த மக்களுக்கு, உணவு, பாதுகாப்பான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட இதர வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.
பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ முகாம்களை, தொடர்ந்து நடத்தவும், நிலவேம்பு குடிநீர் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் நியமனம்
* திருவள்ளூர் மாவட்டம்- அமைச்சர்கள் பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, ரமணா, அப்துல் ரஹீம்
* காஞ்சிபுரம் மாவட்டத்தில், குறிப்பாக தாம்பரம், முடிச்சூர் பகுதிகள் - அமைச்சர்கள் பழனியப்பன், வேலுமணி, தங்கமணி, சின்னையா
* சென்னை மாநகராட்சி பகுதி - அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், வைத்திலிங்கம், வளர்மதி, கோகுலஇந்திரா
* கடலுார் மாவட்டம் - அமைச்சர்கள் சம்பத், உதயகுமார், ஆகியோர் நிவார பணிகளை மேற்பார்வையிட்டு, அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்குவர்.
தேர்வு ஒத்திவைப்பு
பல மாவட்டங்களில், தொடர்ந்து மழை பெய்து வருவதால், பள்ளிகளுக்கு பல நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே டிச., 7 முதல் நடக்க இருந்த, அரையாண்டு தேர்வுகளை ஒத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் ஜனவரி முதல் வாரத்தில் நடத்தப்படும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முதல்வர் ஆய்வு
மழை பாதிப்பு மற்றும் நிவாரண நடவடிக்கை குறித்து, தலைமை செயலகத்தில், நேற்று, முதல்வர் ஜெயலலிதா தலைமையில், ஆய்வுக் கூட்டம் நடந்தது.
இதில், எட்டு அமைச்சர்கள், தலைமைச் செயலர் ஞானதேசிகன் மற்றும் பல துறைகளின் அதிகாரிகள், கலந்து கொண்டனர். கூட்டத்தில், வௌ்ள பாதிப்புகளை தவிர்க்க, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை, நிவாரண பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பத்தாம் வகுப்பு தனித் தேர்வு: டிச. 4 முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்

பத்தாம் வகுப்பு தனித் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் டிசம்பர் 4-ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட உள்ளதாக அரசுத்தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.


இவர்களுக்கான தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் அக்டோபர் 28 முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. இந்தச் சான்றிதழ்ஜனவரி 26-ஆம் தேதி வரை மட்டுமே செல்லத்தக்கது ஆகும்.இந்த நிலையில், அசல் மதிப்பெண் சான்றிதழ்களை டிசம்பர் 4 (வெள்ளிக்கிழமை) முதல் 11-ஆம் தேதி வரை மாணவர்கள் தேர்வு எழுதிய மையங்களில் பெற்றுக்கொள்ளலாம். பிறகு, சம்பந்தப்பட்ட அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகங்களில் இதைப் பெற்றுக்கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ்-2 மாணவர்களுக்கு இரு வாரங்களில் பதிவெண்கள்: விவரங்களில் பிழை திருத்தும் பணி தீவிரம்

வரும் மார்ச் மாதம் நடைபெறும் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு இரு வாரங்களில் பதிவு எண்கள் வழங்கப்பட உள்ளது. இதற்காக பிளஸ்-2 மாணவர்களின் விவரங்களில் உள்ள பிழைகளைத் திருத்தும் பணி தீவிரமாகநடைபெற்று வருகிறது.


பிளஸ்-2 மாணவர்களின்விவரங்களை பிழைகளின்றி நவம்பர் 23-ஆம் தேதிக்குள்இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என பள்ளிகளுக்கு கல்வித் துறை உத்தரவிட்டது. அதன் பிறகு, 26 வரை நீட்டிக்கப்பட்டது.இந்தப் பணி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் இப்போது நடைபெற்று வருகிறது.

அதன்பிறகு, டிசம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் திருத்தப்பட்ட தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன. அடுத்த 2 வாரங்களில் மாணவர்களுக்கு பதிவெண் வழங்கப்பட உள்ளதாக கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு....:இதேபோல், மார்ச்சில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விவரங்களைப் பதிவேற்றம் செய்யும் பணிகள் டிசம்பர் 10-ஆம் தேதிக்கு பிறகு நடைபெற உள்ளன. இவர்களின் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களும் இப்போது கோரப்பட்டுள்ளன.சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மாணவர்கள் விடுமுறையிலும் பள்ளிகளுக்கு வந்து தங்களது விவரங்களை சரிபார்த்துச் செல்வதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இந்த விவரங்களை பதிவேற்றம் செய்வதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் தனி பாஸ்வேர்டுவழங்கப்பட்டுள்ளது.இந்த மாணவர்களுக்கு பதிவு எண் உள்ளிட்டவை இந்த மாதத்துக்குள் வழங்கப்பட்டு விடும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.அரையாண்டு தேர்வு மாற்றம்?அதேபோல், மழை விடுமுறை காரணமாக பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை தள்ளிவைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதிகளிலேயே தேர்வுகள் நடைபெறும் என்றும் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

5 நாள் கனமழை - தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு.

வங்கக் கடலில் உருவாகியுள்ள, புதிய காற்று அழுத்த தாழ்வு நிலை, தீவிரமடைந்து வருகிறது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன், நேற்று கூறியதாவது: 


இரு நாட்களுக்கு முன், அந்தமான் கடலில் உருவான காற்று அழுத்த தாழ்வு நிலை, எதிர்பார்த்த அளவு வலுவடைந்து, தமிழகத்தை நோக்கி நகரவில்லை; மறைந்து விட்டது. தற்போது, வங்கக் கடலின் தென்மேற்கு பகுதியில், இலங்கை அருகே, புதிய காற்று அழுத்த தாழ்வு உருவாகி உள்ளது. இது, தென்மேற்காக மேலும் நகர்ந்து, தமிழகம் அருகே நிலை கொண்டுள்ளது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அடுத்த நான்கு நாட்களுக்கு விடுக்கப்பட்டுள்ள

மழை எச்சரிக்கை:

டிச., 1, 2, - தமிழக வட மாவட்டங்கள், புதுச்சேரியின் அனேக இடங்களில் மிக கனமழை; தென் மாவட்டங்களில், ஒருசில இடங்களில் கனமழை. டிச., 3, 4 - தமிழகம், புதுச்சேரியில் பரவலாக கனமழை.சென்னையில், அடுத்த 48 மணி நேரத்துக்கு, வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்; மழை அல்லது இடியுடன் கூடிய மழை, விட்டு விட்டு பெய்யும்.நேற்று காலை, 8:30 மணிவரை, தமிழகத்தில் அதிகபட்சமாக, தஞ்சை மாவட்டம், குடவாசல் - 12; விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் - 10; சிவகங்கை மாவட்டம், திருபுவனம் - 9 செ.மீ.,மழை பதிவாகி உள்ளது.அதிகம்:இவ்வாறு அவர் கூறினார்.நேற்றுடன் முடிந்த ஒரு வாரத்தில், இயல்பு அளவாக தமிழகத்தில், 3.6 செ.மீ.,மழை பெய்ய வேண்டும். ஆனால், 9.1 செ.மீ., மழை பெய்துள்ளது. இதே கால கட்டத்தில், சென்னையில், 8.2 செ.மீ., மழை பெய்ய வேண்டும். ஆனால், 21.7 செ.மீ., மழை பெய்துள்ளது. இதேபோல், 30 மாவட்டங்களில் இயல்பு அளவை விட, கூடுதலாக மழை பெய்துள்ளது. ஈரோடு, கரூர் மாவட்டங்களில், இயல்பு அளவு மழை பதிவாகி உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் மட்டும், இயல்பு அளவை விட, குறைவாக மழை பெய்துள்ளது.

மாவட்ட நிர்வாகங்கள் 'உஷார்':

தமிழகத்தில், ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்தால், அதை சமாளிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி, கலெக்டர்கள் உட்பட, அனைத்து துறை அதிகாரிகளுக்கும், அரசு அறிவுறுத்தி உள்ளது.
* ஏற்கனவே பெய்த தொடர் மழையால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலுார், துாத்துக்குடி மாவட்டங்கள், பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன
* கனமழை தொடரும் என்பதால், அனைத்து துறை அதிகாரிகளும், ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்
* தண்ணீர் தேங்கும் பகுதிகளில், உடனடியாக தண்ணீரை வெளியேற்ற வேண்டும்
* நீர்நிலைகளை, 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும்
*நீர் கசிவைநிறுத்த, மணல் மூட்டைகளை தயார் செய்து வைத்திருக்க வேண்டும்
* நிவாரண முகாம் மற்றும் மருத்துவ குழுக்களை, 24 மணி நேரமும் செயல்படும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.இவ்வாறு அனைத்து துறை அதிகாரிகளுக்கும், அரசு அறிவுறுத்தி உள்ளது.

காமராஜர் பல்கலை. பி.எட். படிப்புக்கு தகுதிப் பட்டியல் வெளியீடு: டிச.8-ல் கலந்தாய்வு

மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்கத்தின் பி.எட். படிப்புக்கான தகுதிப் பட்டியல் பல்கலை. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.தொலைதூர கல்வி இயக்ககத்தின் கீழ் வழங்கப்படும் பி.எட் (2015-2016) படிப்பு சேர்க்கைக்கு தகுதி பெற்ற மாணவர்களின் விபரம் காமராஜர் பல்கலைக்கழக இணையதளமான வெளியிடப்பட்டுள்ளது.

தகுதி பெற்ற மாணவர்களுக்கான கலந்தாய்வு டிச.8 முதல் டிச.10 ஆம் தேதி வரை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தொலைதூர கல்வி இயக்ககத்தில் நடைபெறும்.

முதல்வர் கணினித் தமிழ் விருது டிசம்பர் 31-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்: தமிழ் வளர்ச்சித்துறை அறிவிப்பு

முதல்வர் கணினித் தமிழ் விருதுக்கு இம்மாதம் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண் டும் என தமிழ் வளர்ச்சித்துறை அறிவித்துள்ளது.இது தொடர்பாக, தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 


கணினித் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்ததமிழ் மென்பொருள் உருவாக்கு பவர்களை ஊக்குவிக்கும் வகை யில் ‘முதலமைச்சர்கணினித் தமிழ் விருது’ ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்படுகிறது. விருது பெறு பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய், ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப் படும்.இந்த வகையில் 2015-ம் ஆண்டுக்கு ‘முதல்வர் கணினித் தமிழ் விருது’க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.போட்டிக்குரிய மென் பொருள்கள் 2012,13 மற்றும் 2014-ம் ஆண்டுக்குள் தயாரிக்கப் பட்டதாக இருக்க வேண்டும்.இவ்விருதுக்கு விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளை ‘www.tamilvalarchithurai.org’ என்ற தமிழ் வளர்ச்சித் துறையின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச் சாலை, எழும்பூர், சென்னை- 600008 என்ற முகவரிக்கு இம்மாதம் 31-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044- 2819 0412, 2819 0413 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதுடில்லி,:பெட்ரோல் விலை லிட்டருக்கு 58 பைசா குறைக்கப்பட்டுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 25 பைசா குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.


இந்தியாவிலேயே தமிழக ஆசிரியர்களே திறமையானவர்கள் : பள்ளி கல்வி இயக்குனர்

சென்னை எழும்பூர் டான்போஸ்கோ பள்ளியில் கற்றலில் குறைபாடு உள்ளவர்களை கண்டறிந்து அக்குழந்தைகளை குறைகளை போக்கு, அவர்களை நல்ல மதிப்பெண்கள் வாங்குவது குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. முதன் முதலாக தொடங்கப்பட்டுள்ள இந்த பயிற்சி மையத்தை, பள்ளிக் கல்வி இயக்குனர் டாக்டர் எஸ்.கண்ணப்பன் தொடங்கி வைத்தார்.


பிறகு நிகழ்ச்சியில் பேசிய கண்ணப்பன், “கற்றலில் குறைபாடு என்பது மிகமிக குறைவாகவும், 10 சதவீதத்திற்கு குறைவாக இருக்கக்கூடும். அத்தகைய மாணவர்களை ஆசிரியர்கள் கண்டறிய வேண்டும். அவர்களிடம் உள்ள குறைபாடுகளை களைய ஆசிரியர்கள் கவனமாக கையாள வேண்டும்.அந்த குழந்தைகளிடமோ, பெற்றோர்களிடமோ அதுபற்றி கூறாமல் அவர்களை சரி செய்து மற்ற மாணவர்களை போல உருவாக்க வேண்டும்.இந்த பணிகளை மேற்கொள்வது தான் ஒவ்வொரு ஆசிரியர்களின் கடமையாகும். கற்றலில்குறைபாடு உள்ள மாணவர்களை முதலில் அடையாளம் கண்டு அவர்களுக்கேற்றவாறு பாடங்களை கற்று கொடுக்க வேண்டும். அது தான் இந்த பயிற்சி மையத்தின் நோக்கமாகும்.அந்த வகையில் கற்றல் குறைபாடுகளை போக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க கூடிய மையத்தை தொடங்கி இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. 

இதில் பயிற்சி பெற்ற25 ஆசிரியைகளும் மற்ற ஆசிரியர்களுக்கு தங்கள் அனுபவத்தை தெரிவிக்க வேண்டும்.ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர் பணியில் மட்டுமே உள்ளது. உலகிலேயே அதிக மனிதவளம் உள்ள நம் நாட்டில் அதனை உருவாக்கும் சக்தியாக ஆசிரியர் பெருமக்கள் திகழ வேண்டும். அந்த பொறுப்பு ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் உள்ளது.இந்தியாவிலேயே தகுதியான ஆசிரியர்கள் நியமிப்பதில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. இங்குள்ள ஆசிரியர்கள் திறமையானவர்கள்” என்று தெரிவித்தார்.

ஆசிரியர்களை பயிற்சிக்கு அழைக்கும் நேரமா இது?

பாடம் நடத்தவும், தேர்வு நடத்தவும், நாளில்லாமல் ஆசிரியர்கள் திணறி வருகின்றனர்; இந்நிலையில் ஆசிரியர்களை, ஒரு மாதம் பயிற்சிக்கு வருமாறு, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறையில், அனைவருக்கும் கல்வி இயக்கம், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம், ஆசிரியர் கல்வியியல் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் சார்பில், ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் தரப்படுகின்றன.


இதற்கு, மத்திய அரசிடமிருந்து, பல கோடி ரூபாய் நிதி கிடைக்கிறது.கற்றல், கற்பித்தலை தொழில்நுட்ப ரீதியாக வழங்க வேண்டும் என்பது தான், மத்திய அரசின்நோக்கம்.ஆனால் இது, தமிழகத்தில், பலனில்லாத பயிற்சி திட்டங்களாக மாறிவிட்டன.தமிழகத்தில், பள்ளிக்கல்வி இயக்குனரகம், தொடக்கக் கல்வி இயக்குனரகம் ஆகியவற்றுடன், பயிற்சி அளிக்கும் மூன்று இயக்குனரகங்களின் செயல்பாடுகள் ஒருங்கிணைக்கப்படவில்லை. எனவே, பாடம் நடத்துவதைப் பார்க்க ஒருதுறை; பயிற்சியை நடத்த, வேறொரு துறை என, முரண்பாடாக உள்ளது.

தற்போது இரண்டாம் கல்விப் பருவத்தில், மழைக்கால விடுமுறை, பண்டிகை விடுமுறைகளுக்கு மத்தியில், அரையாண்டுத் தேர்வு நெருங்கியுள்ளது. பாடங்களை எப்படி முடிப்பது என, ஆசிரியர்கள் திணறி வருகின்றனர். இந்த நேரத்தில், ஒரு மாதம் முழுவதும் ஆசிரியர் பயிற்சிக்கான அட்டவணையை கல்வித்துறை அறிவித்துள்ளது. 
* பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடம் எடுக்க, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூலம், டிசம்பர் முதல் வாரத்தில் பயிற்சி
* நவ., 30, டிச., 1 மற்றும் 5ம் தேதிகளில், தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு, வாசித்தல், எழுதுதலுக்கு பயற்சி 
* நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, டிச., 12ல், குறுவள பயிற்சி, கணித பயிற்சி பெட்டகப் பயிற்சி, கணினி இயக்கம் மற்றும் கற்பித்தல் பயிற்சி. நவ.,30 முதல் டிச., 22ம் தேதி வரை நடக்கும் பயிற்சியில், ஆசிரியர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என, பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பிஉள்ளது.

மாற்றுத்திறனாளிஅரசு ஊழியர்கள் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு DEC 03 அன்று சிறப்பு தற்செயல் விடுப்புஎடுத்துக்கொள்ளலாம்.


பிளஸ்–2, 10–ம் வகுப்பு பொதுத் தேர்வை முன்கூட்டியே நடத்தும் திட்டம் இல்லை: தேர்வுத்துறை இயக்குனர் தகவல்

சென்னை, டிச. 1–வருகிற மே மாதம் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால்பிளஸ்–2, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகள் முன் கூட்டியே நடத்தப்படும் என்ற தகவல் பரவி வருகிறது. மேலும் தொடர் மழையால் பள்ளிகள் 20 நாட்களாக செயல்படாமல்இருப்பதால் மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்பட்டுள்ளது.இந்த சூழ்நிலையில் பொதுத் தேர்வுகள் தள்ளி வைக்கப்படுமா? தேர்தலுக்காக முன் கூட்டியே நடத்தப்படுமா என்பது குறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவியிடம் மாலைமலர் நிருபர் கேட்டதற்கு அவர் அளித்த விளக்கம் வருமாறு:–


தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பள்ளிகள் திறக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, தூத்துக்குடி ஆகிய 7 மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.வருகிற 7–ந்தேதி பிளஸ்–2 மாணவர்களுக்கும், 9–ந்தேதி எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கும் அரையாண்டு தேர்வுதொடங்குவதற்கான அட்டவனை தயாரிக்கப்பட்டு அதற்கான வினாத்தாள்கள் அச்சடிக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு உள்ளன. தீபாவளிக்கு முன்பே வினாத்தாள்கள் பள்ளிக்கல்வி துறையிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது.மழையால்அரையாண்டு தேர்வு தள்ளி வைப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை தான் முறைசெய்ய வேண்டும். அரசு தேர்வுத்துறை அல்ல.

பிளஸ்–2, 10–ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தேர்வுத்துறை மூலம் நடத்தப்படுகின்றன. பொதுத்தேர்வுகள் அட்டவணைஇந்த மாதத்திற்குள் வெளியிடப்படும். பிளஸ்–2 தேர்வுகள் 11 நாட்கள் நடைபெறும். மாணவர்கள் படித்து தேர்வு எழுத வசதியாக போதிய கால அவகாசம் கொடுக்கப்படும். சட்டசபை தேர்தலுக்காக பொதுத்தேர்வுகள் முன் கூட்டியே நடத்தும் திட்டம் எதுவும் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது போல மார்ச் முதல் வாரத்தில்பிளஸ்–2 தேர்வு தொடங்கி இறுதியில் முடிவடையும்.பொது தேர்வுக்கான கால அட்டவணைஅரசின் ஒப்புதல் பெறப்பட்டு வெளியிடப்படும். குறுகிய காலத்தில் தேர்வுகளை நடத்தஇயலாது. அதனால் ஒவ்வொரு தேர்விற்கும் போதிய இடைவெளி இருக்கும். மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் அரசின் ஆலோசனைப்படி பொதுத்தேர்வுகள் நடைபெறும்.முன்கூட்டியே தேர்வு நடைபெறும் கால அவகாசம் இல்லை என்று மாணவர்கள் குழப்பம் அடைய தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த கல்வியாண்டில் தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்பு

அடுத்த ஆண்டில் கல்வி மேலும் செலவுமிக்கதாக மாற வாய்ப்பிருக்கிறது. வடகிழக்கு பருவமழை காரணமாக கடும் சேதத்தைச் சந்தித்த தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கனமழையால் பள்ளிக் கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதால் கட்டண நிர்ணய கமிட்டியிடம் தனியார் பள்ளி நிர்வாகங்கள் முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ளனர்.


கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலூரில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளன. பள்ளிக் கட்டிடங்களுக்கு ஏற்பட்ட சேதம் காரணமாக பள்ளியின் மின் அமைப்புகள், பைப்லைன்கள், உட்பட பல சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சுகாதாரத்தை பராமரிக்கவும் சில செலவினங்கள் தனியார் பள்ளிகளுக்கு காத்திருக்கிறது.“அவ்வளவாக சேதமில்லாத பெரிய பள்ளிகள் ரூ.5 லட்சம் வரையில் செலவிட்டுள்ளது. எனவே சேதம் அதிகம் ஏற்பட்ட பள்ளிகள் மேலும் அதிக தொகை செலவிட வேண்டி வரும்” என்று பள்ளி முதல்வர் ஒருவர் தெரிவித்தார்.மாநில கல்வி ஆலோசகர் பி.புருஷோத்தமன் இது பற்றி கூறும்போது, “பெரும்பாலான பள்ளிகள் கல்விக் கட்டணத்தை உயர்த்தவுள்ளன.

சேதத்துக்கு செலவிடப்பட்ட தொகைமற்றும் பரமாரிப்பு உள்ளிட்ட செலவு விவரங்களை பள்ளி நிர்வாகத்திடமிருந்து கேட்டுள்ளோம்” என்றார்.மற்றொரு மூத்த கல்வித்துறை அதிகாரி தெரிவிக்கும் போது, “பைப்லைன், கட்டிட சேத விவரம், மின் இணைப்பு பரமாரிப்பு உள்ளிட்ட செலவு விவரங்களை சமர்ப்பிக்குமாறு பள்ளிகளிடம் கேட்டுள்ளோம். சேதத்தை சரிசெய்ய சராசரியாக பள்ளிகள் ரூ.5 லட்சம் முதல் 8 லட்சம் வரை கோரியுள்ளன.மாநில அரசு மத்திய அரசுக்கு இந்த விவரங்களை அனுப்ப வேண்டியுள்ளது” என்றார்.

கனமழை காரணமாக பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளிவைப்பு

தமிழகத்தில் கனமழை கொட்டித் தீர்த்து வருவதால் அண்ணா பல்கலைக் கழக மற்றும்சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன.காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில், குறிப்பாக சென்னையில் விடிய விடிய மழை கொட்டித் தீர்த்ததோடு, இன்றும் கன மழை நீடித்து வருகிறது. 


இந்நிலையில் மழை மேலும் 3 நாட்களுக்கு நீடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதன் காரணமாக அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளின் தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல்ஒத்திவைக்கப்பட்டுள்ளது.அதே போல் சென்னை பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளின் தேர்வுகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.சென்னை மாநிலக் கல்லூரியில் இன்று நடைபெறுவதாக இருந்த தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டன.திருவள்ளூர் பல்கலைத் தேர்வுகளும் ஒத்திவைக்கப் பட்டன.

FLASH NEWS : அனைத்து பள்ளிகளிலும் அரையாண்டு தேர்வுகள் ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்து முதலமைச்சர் உத்தரவு

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.கன மழை காரணமாக அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன. வழக்கமாக பள்ளிகளில் டிசம்பர் மாதத்தில் அரையாண்டுத் தேர்வுகள் நடத்தப்படும்.


ஆனால், தமிழகத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக 3 வாரங்களாக பள்ளிகள் செயல்படாமல் விடுமுறை அறிவிக்கப்பட்டது.இதனால், டிசம்பர் 7ம் தேதி முதல் நடக்கவிருந்த அரையாண்டுத் தேர்வுகள் அனைத்தும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

1/12/15

7-வது ஊதியக் குழுவில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து விரைவில் நடைமுறைப்படுத்திட வேண்டும்: வாசன் வலியுறுத்தல்

தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ‘’ஏழாவது ஊதியக்குழு 2014 பிப்ரவரி மாதம் அமைக்கப்பட்டது. அக்குழு தனது அறிக்கையை 19.11.2015 அன்று
மத்திய நிதி அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது. அதன்படி மத்திய அரசில் பணிபுரியும் பணியாளர்கள், முப்படை வீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்கள் என மொத்தம் சுமார் ஒரு கோடி பேர் பயன்பெறுவார்கள். இதனால் குறைந்த பட்சம் 15 சதவீதத்திலிருந்து அதிகபட்சம் 23.55 சதவீதம் வரை ஊதியம் உயரலாம் என்று ஊதியக்குழு அறிவித்துள்ளது.

 கடந்த ஊதிய குழுவின் பரிந்துரைகளின் அளவை விட 7வது ஊதியக்குழு பரிந்துரையின் அளவு குறைவாக உள்ளது. 7வது ஊதியக்குழுவின் பரிந்துரையால் நிதிச்சுமையின் பங்கு 0.56 சதவீதம் மட்டுமே. ஆகவே அரசுப் பொருளாதாரத்தை இவ்வுயர்வு பாதிக்காது என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

15-வது தொழிலாளர் மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி, குறைந்த பட்ச ஊதியம் மாதம் ரூ.26,000 இருக்க வேண்டும். ஆனால் அது ரூ. 18,000 என்ற அளவில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் கீழ்மட்ட ஊழியர்கள் பாதிப்புக்கு உள்ளாவார்கள். இது உயர்த்தப்பட வேண்டும்.


அடிப்படைச் சம்பளம் உயர்வு என்ற காரணம் காட்டி, வாடகைப் படி குறைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. மேலும் பண்டிகைக் காலங்களில் வழங்கப்படும் வட்டியில்லா கடன் நிறுத்தப்பட உள்ளது. எனவே அவர்களின் நியாயமான கோரிக்கைகளைக் கவனத்தில் கொண்டு, அரசு நல்ல முடிவு எடுக்க வேண்டும். மத்திய அரசு, 7-வது ஊதியக் குழுவில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து விரைவில் நடைமுறைப்படுத்திட வேண்டும்’’என்று கூறியுள்ளார்.

காமராஜர் பல்கலை. பி.எட். படிப்புக்கு தகுதிப் பட்டியல் வெளியீடு: டிச.8-ல் கலந்தாய்வு

மதுரை காமராஜர் பல்கலைக்கழகதொலைதூர கல்விஇயக்கத்தின் பி.எட். படிப்புக்கான தகுதிப்பட்டியல் பல்கலை. இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது.

தொலைதூர கல்வி இயக்ககத்தின்கீழ் வழங்கப்படும்பி.எட்(2015-2016) படிப்பு சேர்க்கைக்கு தகுதிபெற்ற மாணவர்களின்விபரம் காமராஜர்பல்கலைக்கழக இணையதளமான  வெளியிடப்பட்டுள்ளது.


தகுதி பெற்ற மாணவர்களுக்கானகலந்தாய்வு டிச.8 முதல் டிச.10 ஆம்தேதி வரைபல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தொலைதூர கல்விஇயக்ககத்தில் நடைபெறும்.