யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

14/12/15

பிளஸ் 2 பொதுத்தேர்வு எப்போது? மாணவர்கள் குழப்பம்

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு தேதியை அறிவிக்காததால், தேர்வு தாமதமாகுமோ என, மாணவர்கள் குழப்பம் அடைந்துஉள்ளனர்.
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும், மார்ச்சில் பொதுத் தேர்வு நடக்கும். ஆனால், நடப்பு கல்வி ஆண்டில்,ஏப்ரலில் சட்டசபைக்கு தேர்தல் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால், பிப்ரவரியில் இருந்து தேர்தல் சார்ந்த பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட வேண்டியுள்ளது. எனவே, பொதுத் தேர்வை விரைவில் முடிக்க வேண்டும்.


இதற்காக, வினாத்தாள்களும் இறுதி செய்யப்பட்டு, விடைத்தாள் அச்சடிப்பு ஆயத்த பணி துவங்கியுள்ளது. முதற்கட்டமாக, பிப்., 29ல், பிளஸ் 2 தேர்வை துவங்க, தேர்வுத்துறை திட்ட
மிட்டிருந்தது.ஆனால், மழை வெள்ளத்தால் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டு, வகுப்புகள் நடக்காமல், பாடங்கள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், பிப்ரவரியில் தேர்வு வைப்பதா, அல்லது மார்ச், முதல் வாரத்துக்கு பின் துவங்குவதா என, தேர்வுத்துறையினர் ஆலோசித்து வருகின்றனர்.இதற்காக, பிப்., 29, மார்ச், 2 மற்றும் மார்ச், 7 ஆகிய தேதிகளில், ஏதாவது, ஒரு நாளில், பிளஸ் 2 தேர்வை துவங்கலாம் என திட்டமிட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. பள்ளிகள் நாளை திறந்ததும், பொதுத் தேர்வு அறிவிப்பு வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கிடையே, வழக்கமாக, டிசம்பர், முதல் வாரமே பொதுத் தேர்வு அறிவிக்கப்படும் நிலையில், இந்த ஆண்டு இன்னும் அறிவிப்பு வராததால், தேர்வு எப்போது என, மாணவர்கள் குழப்பம் அடைந்து உள்ளனர்.

தமிழகத்தில் பெய்த மழையால், மாணவர்கள் தங்கள் பாட குறிப்புகளையும், புத்தகங்களையும் இழந்து விட்டனர். எனவே, அரையாண்டு தேர்வை ரத்து செய்து விட்டு, மாணவர்கள் பொதுத் தேர்வுக்கு முழுமையாக தயாராக, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வெள்ளத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர் குடும்பத்தினர் பலர், உடைமைகளை இழந்துள்ளனர். எனவே, அவர்களுக்கு, ஒரு மாத ஊதியத்தை, வட்டியில்லா முன் பணமாக வழங்க வேண்டும்.
இளமாறன், ஆசிரியர் சங்க கூட்டுக்குழு,
'ஜாக்டா' ஒருங்கிணைப்பாளர்

வகுப்பறையில் பூச்சி தொல்லை ஆசிரியர்கள் சோதிக்க உத்தரவு

சென்னை:'வகுப்பறையில் பூச்சிகள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்த பிறகே, மாணவர்களை அனுமதிக்க வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்குஉத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இன்று, பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படுகின்றன. இந்நிலையில், அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும், கல்வித்துறை அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்.


அதன் விவரம்:
*கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி, மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி, கிணறு, ஆழ்துளை கிணறு போன்றவற்றை 'பிளீச்சிங் பவுடர்' மூலம் சுத்தம் செய்ய வேண்டும். நீரில் கிருமிகளை கொல்லும் குறிப்பிட்ட அளவு, 'குளோரின்' கலந்த பின் குடிக்க தர வேண்டும்
*பள்ளி வளாகங்களில், குப்பை இல்லாமல் அகற்ற வேண்டும். குப்பை தேங்கி கிடந்தால் கொசு மற்றும் ஈக்கள் உற்பத்தியாக வாய்ப்பு ஏற்படும்
*எலுமிச்சை மற்றும் குளோரினை, 4க்கு, 1 என்ற விகிதத்தில் கலந்து, பள்ளி வளாகத்தில் சுத்தம் செய்ய வேண்டும். வகுப்பறைகளை, 'பினாயில்' மூலம் சுத்தம் செய்ய வேண்டும்
*மின் சாதனங்கள், 'ஸ்விட்ச்'களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். கட்டடத்தில் எங்காவது விரிசல் போன்ற பாதுகாப்பற்ற தன்மை இருந்தால், அந்தப் பகுதியை பயன்படுத்தக் கூடாது
*வெள்ளம் காரணமாக, ஊர்வன, பறப்பன வகை பூச்சிகள் வகுப்பறைகளில் இருக்க வாய்ப்புள்ளது. எனவே, வகுப்பறைகளுக்குள் சென்று, முழுமையாக ஆய்வு செய்து, அதன் பிறகே மாணவர்களை வகுப்பறைக்குள் அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பரிதவிக்கும் மாணவர்கள்: கைகொடுக்கும் நண்பர் குழுவினர்

காரைக்குடி:வெள்ளத்தால் பாடப்புத்தகங்கள், நோட்டுகளை இழந்து நிற்கும் மாணவர்களுக்கு கல்வி பணி செய்து வருகின்றனர், காரைக்குடி பொதுப்பணித்துறை இன்ஜினியர்கள், அலுவலர்கள்,நண்பர்கள் குழுவினர்.

சென்னை,கடலுாரை புரட்டிய வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள்,கரம் நீட்டும் முன்பே, கை கொடுத்து வருகின்றனர் காரைக்குடி தன்னார்வலர்கள். ஒவ்வொரு நாளும் லாரியில் எண்ணற்ற புத்தகங்கள், நோட்டுக்கள், துணி, உணவு, இதர பொருட்கள் என தங்களால் முடிந்தவற்றை அனுப்பி வருகின்றனர்.உணவு, உடைக்குரிய தட்டுப்பாடு நீங்கினாலும், பள்ளி திறக்கும் வேளையில், நோட்டு புத்தகங்களின் தேவை அவர்களை வாட்டி வதைக்கிறது. அந்நிலையை மாற்ற, நோட்டு, புத்தகம் தேவைப்படுவோருக்கு, ஒவ்வொரு நாளும் கூரியர் மூலம், காரைக்குடி பொதுப்பணித்துறை பொறியாளர்கள், அலுவலர்கள் அனுப்புகின்றனர்.

காரைக்குடி பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுந்தர மூர்த்தி. இவரது மகள் சேதுராணி. சென்னையில் நிலத்தடி நீர் பிரிவில் பொறியாளராக உள்ளார். பிரசவத்துக்காக தந்தை வீட்டுக்கு வந்தார். சென்னை வெள்ளத்தை பார்த்து, கடந்த 7-ம் தேதி, தன்னால் இயன்ற உதவியை வழங்கலாம், என, 'வாட்ஸ் ஆப்' மூலம் புத்தகம் தேவைப்படுவோர் கீழ்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அவரது தந்தை எண் 94869 05884, கணவர் சரவணன் 81787 61625, அவரது சகோதரர் சேதுபதி 81486 89993 ஆகியோரின் எண்களை வழங்கியுள்ளார்.அன்று முதல் சென்னை, கடலுாரில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொடர்பு கொண்டு புத்தகங்களை கேட்டு வருகின்றனர். அவர்களுக்கு கூரியரில் கடந்த 9-ம் தேதி முதல் புத்தகங்களை சுந்தரமூர்த்தி அவரது நண்பர்கள் அனுப்பி வருகின்றனர்.

சுந்தரமூர்த்தி கூறும்போது: எனது மகள் அனுப்பிய வாட்ஸ் ஆப் மூலம், நல்லது செய்ய வேண்டும் என கருதி, மற்றவர்களிடம் இது குறித்து கேட்டேன். உதவி செயற்பொறியாளர்கள் தாசூஸ், பொன்னன், பாண்டி, சங்கர், உதவியாளர் கோடை மலை, உதவி பொறியாளர் நவசக்தி, அஜீத்குமார், எனது மருமகன், மகன் உதவினர்.நடுத்தர, பின்தங்கிய ஏழைகளை தேர்வு செய்து, ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான புத்தகங்களை, அவர்களின் வீட்டு முகவரிக்கு தினந்தோறும் கூரியரில் அனுப்பி வருகிறோம். இதுவரை 200-க்கும் மேற்பட்டோருக்கு அனுப்பியுள்ளோம். மதுரை, திருச்சி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு சென்று புத்தகங்களை சேகரித்து வருகிறோம். .

பிளஸ் 1, பிளஸ் 2 புத்தகங்கள் கிடைப்பது இல்லை. பள்ளிகளை தொடர்பு கொண்டு கேட்டுள்ளோம். அவர்கள் பழைய மாணவர்களிடமும், தங்களிடம் உள்ள பழைய புத்தகங்களையும் தருவதாக கூறியுள்ளனர்.வித்யாகிரி பள்ளி முதல்வர், அவர் கோடவுனை திறந்து உங்களுக்கு தேவையான புத்தகங்களை எடுத்து கொள்ளுங்கள் எனக் கூறி, ரூ.25 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்களை வழங்கினார். கூரியரில் புத்தகங்கள் கொண்ட பார்சலுக்கு ரூ.15 மட்டுமே பெற்று உதவியுள்ளனர். இதுவரை ரூ.1.5 லட்சம் வரையிலான புத்தகங்களை அனுப்பியுள்ளோம், என்றார்.

சென்னை குரோம்பேட்டை அமுதா: என் மகன்களுக்கு கூரியரில் புத்தகம் அனுப்பி வைத்தனர். வாழ்க்கையில் இது மறக்க முடியாது. என்றும் நாங்கள் அவர்களுக்கு கடமை பட்டுள்ளோம், என்றார்.

பாடம் நடத்தாத ஆசிரியர்கள் விளக்கம் கேட்டு 'நோட்டீஸ்'

வேலுார்:சரிவர பாடம் நடத்தாத ஆசிரியர்கள், ஏழு பேரிடம் விளக்கம் கேட்டு, முதன்மைக் கல்வி அலுவலர், 'நோட்டீஸ்' கொடுத்துள்ளார்.

வேலுார் மாவட்டம், பள்ளிகொண்டா அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில், தமிழ், ஆங்கிலம் மற்றும் உருது மொழிக்கல்வி கற்றுக் கொடுக்கப்படுகிறது; 21 ஆசிரியர்கள் உள்ளனர்.கடந்த ஆண்டு பொதுத் தேர்வில், ௧௦ம் வகுப்பில், 76 சதவீதம், பிளஸ் 2வில், 48 சதவீதம் மட்டுமே, மாணவர்களின் தேர்ச்சி இருந்தது; வேலுார் மாவட்டத்திலேயே மிகக் குறைந்த தேர்ச்சி, இந்தப் பள்ளியில் தான்.சமீபத்தில், இந்த பள்ளிக்கு சென்ற முதன்மை கல்வி அலுவலர் பூபதி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தினார்.


அப்போது, அந்த பள்ளியின், ஏழு ஆசிரியர்கள், மாணவர்களுக்கு சரிவர பாடங்களை நடத்தாதது தான், தோல்விக்கு காரணம் என, மாணவர்கள் மற்றும் பெற்றோர் கூறினர். இதையடுத்து, அந்த ஏழு ஆசிரியர்களுக்கும், 'சரி வர பாடம் நடத்தாதது ஏன்?' என கேட்டு, கல்வி அலுவலர், நோட்டீஸ் கொடுத்துள்ளார். பிற ஆசிரியர்களையும் கண்டித்த அலுவலர், 'வரும் பொதுத்தேர்வில், அதிக வெற்றி பெற பாடுபட வேண்டும்' என, அறிவுறுத்தினார்

12 நாட்களுக்கு பின் 13 பக்க ஆங்கில அறிக்கை

சென்னை:செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து, அதிக அளவு தண்ணீர் திறந்தது தொடர்பாக,
12 நாட்களுக்கு பின், 13 பக்க ஆங்கில அறிக்கை மூலம், தமிழக அரசின் தலைமைச் செயலர் ஞானதேசிகன் விளக்கம் அளித்துள்ளார்.


தமிழகத்தில், நவ., மாத இறுதி முதல், இடைவிடாது மழை கொட்டித் தீர்த்தது. டிச., 1ம் தேதியும் விடாது மழை கொட்டியது. ஏரிகள் நிரம்பி, உபரி நீர் திறந்து விடப்பட்டதால், சென்னை வெள்ளக்காடாக மாறியது. அடுக்குமாடிகளில், முதல் தளம் வரை தண்ணீர் சென்றது; உயிர் இழப்புகளும் ஏற்பட்டன.

'பெரும் பாதிப்பு ஏற்பட்டதற்கு, சரியான திட்டமிடல் இன்றி, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து, டிச., 1ம் தேதி நள்ளிரவு, வினாடிக்கு, 30 ஆயிரம் கன அடி நீர், திடீரென திறந்து விடப்பட்டதே காரணம்; அரசு முன்னெச்சரிக்கையாக இருந்திருந்தால், பெரும் வெள்ளப் பாதிப்பை தடுத்திருக்கலாம்' என, நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். பல்வேறு தரப்பிலும் தமிழக அரசுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில், 12 நாட்களுக்கு பின், நேற்று இரவு, 7:00 மணிக்கு, தமிழக அரசின் தலைமைச் செயலர் ஞானதேசிகன், 13 பக்கம் கொண்ட, விளக்க அறிக்கை ஒன்றை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளார்.

பள்ளி, கல்லூரிகள் இன்று திறப்பு மாணவர்களுக்கு இலவச புத்தகம் தயார்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலுார் மாவட்டங்களில், 34 நாள் விடுமுறைக்கு பின், இன்று, பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

வெள்ளத்தில் புத்தகங்களை பறிகொடுத்த அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, புத்தகங்கள் மற்றும் சீருடைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன. மாணவர்களுக்கு தொற்று நோய் பரவாமல் தடுக்க, மருத்துவ முகாமுக்கும், வெள்ள பாதிப்பிலிருந்து நீங்கி, புத்துணர்ச்சி பெற, 'கவுன்சிலிங்' வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


வெள்ளத்தில், மாணவர்கள் சீருடைகளை தொலைத்திருந்தால், சீருடை அணிந்து வர கட்டாயப்படுத்த வேண்டாம் என, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.அரசு கைவிரிப்பு: சென்னையில், வெள்ளத்தால் உருக்குலைந்து போன அசோக் நகர் பள்ளியை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வீரமணி மற்றும் துறையின் முதன்மை செயலர் சபிதா பார்வையிட்டனர். 'வெள்ள சேதம் பற்றி கவலைப்படாமல் இருக்கும் கட்டமைப்பை பயன்படுத்தி பாடங்களை நடத்த வேண்டும்' என, ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டனர்.

34 நாள் விடுமுறைக்கு பின், பள்ளிகள் இன்று திறப்பு

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலுார் மாவட்டங்களில், 34 நாள் விடுமுறைக்கு பின், இன்று, பள்ளிகள் திறக்கப்படுகின்றன. 
வெள்ளத்தில் புத்தகங்களை பறிகொடுத்த அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, புத்தகங்கள் மற்றும் சீருடைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன. மாணவர்களுக்கு தொற்று நோய் பரவாமல் தடுக்க, மருத்துவ முகாமுக்கும், வெள்ளப் பாதிப்பிலிருந்துநீங்கி, புத்துணர்ச்சி பெற, 'கவுன்சிலிங்' வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வெள்ளத்தில், மாணவர்கள் சீருடைகளை தொலைத்திருந்தால், சீருடை அணிந்து வர கட்டாயப்படுத்த வேண்டாம் என, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.சென்னையில், வெள்ளத்தால் உருக்குலைந்து போன அசோக் நகர் பள்ளியை, பள்ளிக்கல்வித்
துறை அமைச்சர் வீரமணி மற்றும் துறையின் முதன்மை செயலர் சபிதா பார்வையிட்டனர்.

'வெள்ளச் சேதம் :பற்றி கவலைப்படாமல், இருக்கும் கட்டமைப்பை பயன்படுத்தி, பாடங்களை நடத்த வேண்டும்' என, ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டனர்.

NMMS EXAM - 2016

ரயில் டிக்கெட் ரத்து செய்ய '139' எண்ணில் அழைக்கலாம்

ரயில் பயணத்துக்கு சிறிது நேரத்துக்கு முன், '139' என்ற எண்ணுக்கு டயல்செய்து, டிக்கெட்டை ரத்து செய்யும் முறை, புத்தாண்டில் அமலுக்கு வருகிறது.ரயில் புறப்படும் முன், முன்பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டும் எனில், ரயில் நிலையத்துக்கு செல்வது அவசியம். இல்லையெனில், கட்டண தொகையில் பாதி பிடித்தம் செய்யப்படும். 


ரயில் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்துக்கு முன், டிக்கெட்டை ரத்து செய்வதற்கான கட்டணத்தை, நவ.,12ல் ரயில்வே வாரியம் இருமடங்காக உயர்த்தியது. அனைத்து வகுப்பு டிக்கெட்களுக்கும், இது அமல்படுத்தப்பட்டது. அதாவது, ரயில்புறப்படுவதற்கு, 48 மணிநேரத்துக்கு முன் டிக்கெட்டை ரத்து செய்யும்போது,இரண்டாம் வகுப்பு இருக்கை உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுக்கு ரத்து செய்யப்படும் தொகை, 30 இருந்து, 60 ரூபாயாக உயர்த்தப்பட்டது. மூன்றடுக்கு, 'ஏசி' பெட்டிகளுக்கான டிக்கெட்டுக்கு, பிடித்தம் செய்யப்படும்தொகை, 90லிருந்து, 180 ஆகவும் உயர்த்தப்பட்டது.இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளுக்கு இந்த தொகை, 60லிருந்து, 120 ரூபாயாகவும், இரண்டடுக்கு, 'ஏசி' பெட்டிகளுக்கு, 100லிருந்து, 200- ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில், புத்தாண்டு முதல், ரயில் டிக்கெட் ரத்து செய்வதற்கு புதிய வசதி அமல்படுத்தப்படுகிறது.

அதன்படி, '139' என்ற ரயில்வே, 'ஹெல்ப்லைன்' எண்ணை தொடர்பு கொண்டு, டிக்கெட் பதிவு செய்யும் போது அளித்த மொபைல் போன் எண்ணை கூற வேண்டும். அதன் பின், மொபைல் எண்ணில், அனுப்பப்பட்ட, 'ஒன் டைம் பாஸ்வேர்டை' விசாரணை அதிகாரி அல்லது கணிணிமயமாக்கப்பட்ட விசாரணையில் கூறவேண்டும். இதையடுத்து, டிக்கெட் ரத்தாகும். பின், ரயில் நிலைய கவுன்ட்டருக்கு சென்று டிக்கெட்டை காட்டி, மீதமுள்ள கட்டண தொகையை பெறலாம். இந்த வசதி, 2016, ஜன. 26 முதல் அமலுக்கு வருகிறது.

போலியோ முகாம் 2016க்கு தள்ளிவைப்பு

தமிழகத்தில், மழை வெள்ள பாதிப்பால், டிசம்பர் மாதம் நடத்த வேண்டிய, போலியோ சொட்டு மருந்து முகாம், ஜனவரி, பிப்ரவரி மாதங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும், போலியோ நோயை ஒழிக்கும் வகையில், ஆண்டு தோறும், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுவது வழக்கம்.


ஒவ்வொரு ஆண்டும், டிசம்பர், ஜனவரி மாதத்தில், இம்முகாம் நடக்கும். தமிழகத்தில், இரண்டு கட்டமாக நடக்கும் முகாம்களில், மாநிலம் முழுவதும் உள்ள, 2.50 கோடி குழந்தைகளுக்கு, 46 ஆயிரம் மையங்களில் சொட்டு மருந்து வழங்கப்படும்.சமீபத்தில், பெய்த தொடர் மழை காரணமாக, பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள், இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு, இன்னும் ஒரு மாதமாகிவிடும். இந்த சூழ்நிலையில், முகாம் நடத்தினால், அவை வெற்றிகரமாக இருக்காது என்ற தகவல் அரசுக்கு சென்றது.

மத்திய சுகாதாரத்துறையிடம், போலியோ முகாமை, ஒரு மாதம் தள்ளிவைக்குமாறு, தமிழக சுகாதார அதிகாரிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அதனடிப்படையில், ஜனவரி, 17ம் தேதியிலும், பிப்ரவரி, 21ம் தேதியிலும், போலியோ முகாம் நடத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளை, மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

சட்டப்படிப்பு வயது வரம்பு உத்தரவு தலையிட சுப்ரீம் கோர்ட் மறுப்பு

சட்டப்படிப்பு படிப்பதற்கான வயது வரம்பை நீக்கும் உத்தரவில் தலையிட முடியாது' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சட்டப்படிப்பின் தரத்தை உயர்த்த, தேசிய சட்ட ஆணையம் மத்திய அரசுக்கு, 2002-ல் அறிக்கை அளித்தது. இதையடுத்து, 2008ல் சட்டப் படிப்புக்கான விதிகளை, இந்திய பார் கவுன்சில் வரையறுத்தது. அதில், சட்டப்படிப்புக்கு முதன் முறையாக, நாடுதழுவிய அளவில், வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. 


மறுபரிசீலனை

இந்த வயது வரம்பை எதிர்த்து உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் அமைத்த மூன்று பேர் குழு, 'சட்டப் படிப்புக்கான வயது வரம்பு விதியைக் கட்டாயமாக அமல்படுத்த வேண்டும்' என, பரிந்துரை செய்தது.இந்நிலையில், சட்டப் படிப்புக்கான வயது வரம்பு விதியை மறுபரிசீலனை செய்ய, வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் தலைமையில், ஒரு நபர் குழுவை பார் கவுன்சில் அமைத்தது. இக்குழு சட்டப் படிப்புக்கான வயது வரம்பை அறவே நீக்கும்படி, 2013ல் பரிந்துரை செய்தது.இதையடுத்து, சட்டக் கல்விக்கான வயது வரம்பை நீக்கி, இந்திய பார் கவுன்சில்,2013 செப்டம்பரில் உத்தரவிட்டது.

வழக்கு தாக்கல்

இந்நிலையில், தமிழகத்தில், 2015 - 16ம் ஆண்டுக்கான சட்டப் படிப்பு மாணவர் சேர்க்கை துவங்கியது.இதில், இந்திய பார் கவுன்சில் ஆணைப்படி, மூன்றாண்டு சட்டப் படிப்பில் சேர வயது வரம்பு இல்லை; 5 ஆண்டு சட்டப் படிப்பில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு மட்டும் வயது வரம்பு இல்லை என்றும், மற்ற இனத்தவருக்கு, 21 வயது என்றும் நிர்ணயிக்கப்பட்டு, தமிழக அரசு உத்தரவிட்டது.ஆனால், 'இந்த அறிவிப்பு உச்ச நீதிமன்றத்தின், மூன்று பேர் குழு தாக்கல் செய்த பரிந்துரைக்கு எதிரானது' என, மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், பார் கவுன்சிலின் வயது வரம்பு தளர்வு உத்தரவை ரத்து செய்து, ஏற்கனவே இருந்த முறைப்படி, வயது வரம்பு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை, நீதிபதிகள் ஜே.எஸ்.கெஹார் மற்றும் ரோஹிண்டன் நாரிமன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து, மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்தது.

வங்கிகளுக்கு 4 நாள் தொடர் விடுமுறை

மிலாடி நபி மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகைகளை முன்னிட்டு, வங்கிகளுக்கு தொடர்விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வங்கி பணிகளை முன் கூட்டியே முடிக்க வேண்டிய நிலை, பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது.டிச., 23ல், மிலாடி நபி; 25ல், கிறிஸ்துமஸ் பண்டிகைகள் வருகின்றன. 


26ல், நான்காவது சனிக்கிழமை விடுமுறை; 27ல், ஞாயிறு விடுமுறை என, வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது. இதற்கிடையே, 23ல் அறிவிக்கப்பட்டமிலாடி நபி, 24க்கு மாற்றுப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அப்படி மாற்றி அறிவித்தால், 24 முதல், 27 வரை, 4 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது.


இதுகுறித்து, கனரா வங்கி மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:'மிலாடி நபி விடுமுறை, டிச., 23' என, வங்கிகளுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில், இதுவரை மாற்றம் இல்லை. அதனால், 24ல், வங்கிகள் இயங்கும். 25 முதல் 27 வரை விடுமுறை. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பேரிடர் பாதிப்பை தொடர்ந்து, தொடர் விடுமுறை ரத்தாக வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மழை, வெள்ளம் பாதிப்பு காரணமாக விஏஓ தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்படுமா?

டிஎன்பிஎஸ்சி கிராம நிர்வாக அலுவலர் பதவியில் காலியாக உள்ள 813 பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த நவம்பர்12ம் தேதி அறிவித்தது. அன்றைய தினம் முதல் டிஎன்பிஎஸ்சியின் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இத்தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி கல்வி தகுதி என்பதால் போட்டிப் போட்டு லட்சக்கணக்கில் விண்ணப்பித்தனர். 


இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. இதனால் மக்களின்இயல்பு வாழ்க்கை கடந்த 20 நாட்களுக்கு மேலாக அடியோடு முடங்கியது. இதன் காரணமாக, வி.ஏ.ஓ. தேர்வுக்கு தயாராகி வந்த மாணவ, மாணவியரின் புத்தகங்கள், கடந்த கால வினா தாட்கள் ஆகியவை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. தேர்வுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே உள்ளதால் அனைத்தையும் மீண்டும் திரட்டி தயாராவது என்பது சாத்தியமானது அல்ல. அதுமட்டுமின்றி, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தேர்வுக்கு தயாராவதைப் பற்றி நினைத்துக்கூட பார்க்க முடியாது. மழை வெள்ளத்தில் மாணவர்கள் கடந்த ஒரு மாதமாக அனுபவித்த துயரம் மற்றும் அதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வருவது மிகவும் கடினம். மேலும், மழை பெய்த நேரத்தில் செல்போன், இன்டர்நெட் உள்ளிட்டவற்றின் சேவையும் அடியோடு துண்டிக்கப்பட்டது. தற்போது வரை இன்டர்நெட் சேவை மிகவும் மெதுவாகவே உள்ளது.

இதனால், தேர்வுக்கு விண்ணப்பிப்போர், தேர்வு எழுதுவோர் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், விஏஓ தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை (14ம் தேதி) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, பிப்ரவரி 14ம் தேதி எழுத்து தேர்வும் நடைபெற உள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் ஒரு நாள் மட்டுமே எஞ்சியுள்ளதால் சான்றிதழ் உள்ளிட்டவற்றை மழையால் பாதிக்கப்பட்டவர்கள் புதிதாக வாங்குவது என்பது முடியாத காரியம். இதனால் அவர்கள் திண்டாடி வருகின்றனர். எனவே, இத்தேர்வை தள்ளி வைக்க வேண்டும், விண்ணப்பிக்கும் தேதியை நீட்டிக்க ேவண்டும் என்ற ேகாரிக்கை தற்போது எழுந்துள்ளது.

வெள்ள சேதத்தால் தமிழக சட்டசபை தேர்தல் ஒத்தி வைப்பா? வாய்ப்பே இல்லை என்கிறது தேர்தல் கமிஷன்

சட்டசபை தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள், மழை வெள்ளம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதற்காக, சட்டசபை தேர்தல் தள்ளிப்போக வாய்ப்பே இல்லை என, தேர்தல் கமிஷன் அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.அ.தி.மு.க., அரசின் பதவி காலம், 2016 மே, 16ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. அதற்கு முன், சட்டசபை தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும்.தற்போது வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடந்து வருகிறது.


ஜனவரி, 5ம் தேதி, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாக இருந்தது. வெள்ளம் காரணமாக, ஜன., 20க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள, 32 மாவட்டங்களில், நான்கு மாவட்டங்கள் மட்டுமே, வெள்ளத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு முழு வீச்சில் நிவாரணப் பணிகளை முடித்து, தேர்தலுக்கு தயாராகவே, ஆளுங்கட்சி முயற்சிக்கும்.ஏனெனில், திட்டமிட்டபடி மே, 16ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடித்தாக வேண்டும். இல்லையெனில், கவர்னர் ஆட்சி வந்துவிடும். அதை, ஆளுங்கட்சியினர் விரும்ப மாட்டார்கள். தமிழகத்துடன் மேற்கு வங்கம், கேரளா, அசாம், புதுச்சேரி போன்ற மாநிலங்களுக்கும், சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முன்னேற்பாடுகள்குறித்து, தேர்தல் கமிஷன் அதிகாரிகள், நேற்று முன்தினம் மேற்கு வங்கம் சென்று, மாநில அதிகாரிகளுடன் ஆலோசித்துள்ளனர்.தமிழக வருகை, வெள்ளம் காரணமாக தள்ளி போயுள்ளது. ஒரு வாரத்தில், வெள்ள மீட்பு பணிகள் முடிந்து விடும். அதன்பின் தேர்தல் பணிகள் துவக்கப்படும்.தேர்தலுக்கு முன், பொதுத் தேர்வுகள் முடிந்து விடும் நிலையில், தேர்தல் பணியில், எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. எனவே, தேர்தல் ஒத்திப்போவதற்கான வாய்ப்பு இல்லை; திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும்.காஷ்மீர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மிகப்பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மாநிலம் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. வெள்ள நிவாரண பணிகளை செய்ய வேண்டும் என்பதற்காக, சட்டசபை தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என, எல்லா கட்சிகளும் விரும்பின.

நிராகரிப்பு:

ஆனால், இந்த கோரிக்கையை தேர்தல் கமிஷன் திட்டவட்டமாக மறுத்து விட்டது. தேர்தலையும் குறித்த காலத்தில் நடத்தி முடித்தது. எப்போதும் இல்லாத வகையில், காஷ்மீர் தேர்தலில் ஓட்டுப்பதிவும் மிக அதிகமாக இருந்தது. மாநிலம்முழுவதுமே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காஷ்மீரில் தேர்தல் ஒத்திவைக்கப்படாதநிலையில், நான்கு மாவட்டங்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தில், தேர்தலை ஒத்திவைக்க வேண்டிய அவசியமே இல்லை. அதுவும் தேர்தல் அறிவிப்பு ஏப்ரல் முதல் வாரம் தான் வெளியாகும். அதற்குள் அரசு, எல்லா நிவாரண பணிகளையும் முடித்து விட முடியும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பள்ளிகளை திறக்க வேண்டியது தலைமை ஆசிரியர்களின் பொறுப்பு'

எந்த நிலையில் இருந்தாலும், பள்ளிகளை நாளை திறந்து இயல்பு நிலையை காட்ட வேண்டும்' என, ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால், சுத்தம் செய்யப்படாத பள்ளிகளில், மாணவர்களுக்கு நோய் தொற்று ஏற்படுமோ என, பெற்றோர் அச்சம் அடைந்துள்ளனர். நான்கு மாவட்டங்களை புரட்டிப்போட்ட வெள்ளப்பெருக்கைதொடர்ந்து, பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்ட தொடர் விடுமுறை, இன்றுடன் முடிவுக்கு வருகிறது. 


எச்சரிக்கை:

'பள்ளிகளை திறந்தால் தான், இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டதாக அர்த்தம். எனவே, பள்ளி விடுமுறையை நீட்டித்தால், அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும். என்னநிலையில் இருந்தாலும், பள்ளிகளை திறக்க வேண்டியது அந்தந்த தலைமை ஆசிரியர்களின் பொறுப்பு' என, அதிகாரிகள் கடுமையாக எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:'பள்ளியை திறக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்' என்று கூறிவிட்டு, வேலைக்கான ஆட்களையே வழங்கவில்லை. உள்ளூர் காரர்கள், நண்பர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் எவ்வளவு தான் வேலை பார்க்க முடியும். சில குறிப்பிட்ட மின் சாதன பராமரிப்பு, கீழ்நிலை தொட்டி மற்றும் மேல்நிலை தண்ணீர் தொட்டி சுத்தம் செய்தல், கல்லுாரி வளாகத்தை பராமரித்தல், கழிப்பறையை சுத்தம் செய்தல், கரையான் பிடித்த தளவாட பொருட்களை அகற்றுதல் என, முக்கிய பணிகளுக்கு கூட ஆட்கள் இல்லை; பொருளுதவியும் இல்லை.

பகுதிவாசிகள்:

பிற மாவட்ட ஊழியர்களை வரவழைத்து பணிகளை முடிக்க, உதவி இருக்க வேண்டும். அதைவிடுத்து, அவ்வப்போது அதிகாரிகள் வந்து, 'விசிட்' அடித்துவிட்டு, 'இன்னும் ரெடியாகலையா?' என கேட்டு, நெருக்கடி தருகின்றனர். பல பள்ளிகளில் அடைக்கலமாகி உள்ள பகுதிவாசிகளை, கட்டாயப்படுத்தி வெளியேற்றுகின்றனர். இயல்புநிலை வந்துள்ளதாக செயற்கையாக காட்ட, கல்வித்துறை இந்த முயற்சி மேற்கொண்டுள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

முழுமையாக சுத்தம் செய்யப்படாத பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறையில், ஈரமாக இருக்கும் சுவர்கள் மற்றும் குவிக்கப்பட்ட குப்பையால், நோய் பரவும் வாய்ப்புள்ளதாக, பெற்றோர் கவலையடைந்து உள்ளனர்.

வெள்ள நிவாரணத்துக்கு ஒரு நாள் ஊதியம் - அனைத்திந்திய ஆசிரியர் பேரவை அறிவிப்பு...

2016-ம் ஆண்டிலும் புதிய ரேஷன் அட்டை இல்லை: 7-வது ஆண்டாக உள்தாள்தான்

தமிழகத்தில் இந்த மாதத்துடன் ரேஷன் அட்டைகள் காலாவதியாக உள்ள நிலையில், புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாததால் 7-வது ஆண்டாக 2016-ம் ஆண்டுக் கும் உள்தாள்தான் இணைக்கப்பட வுள்ளது.தமிழகத்தில் ஏறத்தாழ 2 கோடி ரேஷன் அட்டைகள் உள்ளன. இவற்றில் அரிசி, சர்க்கரை பெறும் அட்டைகள் அதிகம். அரிசி தேவையில்லை என்ற அட்டைகள், எந்த பொருளும் வேண்டாம் என்ற கவுரவ அட்டைகள் மற்றும் காவலர்களுக்கான குடும்ப அட்டைகளும் உள்ளன.தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிதாக ரேஷன் அட் டைகள் அச்சிடப்பட்டு பொதுமக்க ளுக்கு வழங்கும் நடைமுறை பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்தது. 


கடைசியாக 2005-ம் ஆண்டில் புதிய ரேஷன் அட்டைகள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டன. இவை 2009-ம் ஆண்டோடு காலாவதியாகிவிட்டன. இதைத் தொடர்ந்து ஆண்டுதோறும் ஒவ் வொரு ஆண்டுக்கும் உள்தாள் இணைக்கப்பட்டு பழைய கார்டே தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.பொது விநியோகத் திட்டத்தின் மூலம் ரேஷன் கடைகள் வாயி லாக இலவசமாக அரிசி, மானிய விலையில் சர்க்கரை, மண்ணெண் ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் ரேஷன் அட்டை களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. போலியான ரேஷன் அட்டைகள் அதிகஅளவில் புழக்கத்தில் இருப் பதால் அத்தியாவசியப் பொருட் கள் முறைகேடாக பயன்படுத்தப் படுவதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின் றன.போலியான ரேஷன் அட்டை களை ஒழிக்கும் வகையிலும், தகுதியானவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் சென்று சேரும் வகையிலும் பழைய ரேஷன் அட்டைகளுக்கு மாற்றாக ஸ்மார்ட் கார்டு வழங்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திவருகின்றனர்.ஆனால், அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு பழைய ரேஷன் அட்டை களுக்கு பதிலாக பயோ மெட்ரிக் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என சட்டப்பேரவையிலேயே தெரிவிக் கப்பட்டது. ஆனால், இத்திட்டம் அறிவிக்கப்பட்டு 4 ஆண்டுகளாகி விட்டன.தமிழகத்தில் தேர்ந்தெடுக் கப்பட்ட சில மாவட்டங்களில் ஒருசில வட்டங்களில் சோதனை அடிப்படையில் ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி தொடங்கப்பட்டும், அவை இதுவரையில் இறுதிக் கட்டத்தை எட்டி பயன்பாட்டுக்கு வரவில்லை.ரேஷன் அட்டை என்பது அத்தி யாவசிப் பொருட்களை வாங்கு வதற்கு மட்டுமே பயன்படவில்லை. அரசுத்துறைகளில் வழங்கப்படும் பல்வேறு சான்றிதழ்களுக்கும் ஆதாரமாக ஏற்றுக் கொள்ளப் படுகிறது. ஆனால், 10 ஆண்டுகளாக ஒரே அட்டை பயன்படுத்தப்பட்டு வருவதால், அவை மிகவும் சேத மடைந்து, அதிலுள்ள விவரங்களைஅறியகூட முடியாத நிலையில் உள்ளன.இதுகுறித்து உணவுத் துறை வட்டாரங்களில் கேட்டபோது, 2016-ம் ஆண்டுக்கு பழைய அட்டைகளை மாற்றி புதிதாக ரேஷன் அட்டைகளோ அல்லது ஸ்மார்ட் கார்டுகள் வழங்கவோ தற்போது இயலாது. மேலும், தமிழகத்தில் சென்னை, காஞ்சி புரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழையால் பலத்த சேதங்கள் ஏற்பட்ட நிலையில், அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் மீட்பு மற்றும் நிவாரணப் பணி மற்றும் சேத கணக்கெடுப்பு பணிகளில் முழு அளவில் ஈடுபட்டுள்ளதால், இதில் தற்போது கவனம் செலுத்த இயலாதநிலை உள்ளது.மேலும், வெள்ளத்தால் ரேஷன் கார்டுகளை இழந்தவர்களுக்கு புதிதாக கார்டுகள் வழங்க வேண்டிய பணியும் தற்போது கூடுதலாக சேர்ந்துள்ளது.எனவே, 2016-ம் ஆண்டுக்கும் ரேஷன் அட்டைகளில் உள் தாள் இணைக்கப்படுவதற்கான வாய்ப்புகள்தான் அதிகம். இதற் கான அறிவிப்பு ஓரிருநாளில் வெளியிடப்படும் என்றனர்.

10ம் வகுப்பு பெயர் பட்டியல்15ம் தேதி வரை அவகாசம்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேர்வுப்பட்டியல் தயாரிப்பதற்கான, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் மார்ச், ஏப்ரலில் நடைபெறும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பங்கேற்கும் மாணவர்களின் பெயர் பட்டியலை, அதற்கென வழங்கப்பட்ட மென்பொருளில் தயார் செய்து வைக்க, தேர்வுத்துறை உத்தரவிட்டிருந்தது.


அப்பணிகளை நவ., 30 முதல் டிச., 9ம் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், மழையால் பணிகள் முடிக்கப்படவில்லை. இதனால், டிச., 15ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.அதற்குள், அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், பிழைகள் இன்றி, மாணவ, மாணவியரின் பெயர் பட்டியலை தயார் நிலையில் வைக்க, உத்தரவிடப்பட்டுள்ளது

சிவில் சர்வீஸ் தேர்வுகளை ஒத்திவைக்க கோரி பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

ஆட்சிப்பணி உள்ளிட்ட பதவிகளுக்கு, யுபிஎஸ்சி நடத்தும் சிவில் சர்வீஸ் பிரதான தேர்வுகளை, இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடியை, முதலமைச்சர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.இதுதொடர்பாக, பிரதமருக்கு முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் பிற மாவட்டங்களில், இயல்பு நிலை திரும்பி வருவதாக கூறியுள்ளார்.


மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சி, வருகிற 18-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை, சிவில் சர்வீஸ் பிரதான தேர்வை நடத்த உள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.தமிழகத்தில், இந்த தேர்வை எழுதும் மாணவர்கள், சென்னையையே பிரதான மையமாக தேர்வு செய்து, சென்னை மாநகரின் பல்வேறு இடங்களில் உள்ள விடுதிகள், பயிற்சி மையங்கள், வாடகை வீடுகளில் தங்கி, தேர்விற்காக தயாராகி வருவதாகவும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.முழுவீச்சில் தேர்விற்கு தயாராகி வந்த சிவில் சர்வீஸ் மாணவர்கள், கனமழை மற்றும் வெள்ளத்தால், கடந்த சில வாரங்களாக, பாடங்களில் கவனம் செலுத்த முடியாத அளவிற்கு உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.எனவே, மாணவர்கள் நலனை கருதி, அவர்கள் நல்ல முறையில் தேர்விற்கு தயாராகும் வகையில், சிவிஸ் சர்வீஸ் தேர்வுகளை, குறைந்த பட்சம் 2 மாதங்களுக்காவது ஒத்திவைக்க வேண்டும் என்றும், முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

13/12/15

கணினி அறிவியல் பாடத்திட்ட புத்தகங்கள் முடக்கிவைப்பு

நடுநிலை, உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு தொழில்நுட்ப திறன் மேம்பாட்டுக்காக அச்சிடப்பட்ட, கணினி அறிவியல் பாடத்திட்ட புத்தகங்கள் முடக்கிவைக்கப்பட்டுள்ளதால், அரசு பள்ளி மாணவர்கள் தொழில்நுட்பத்தில் பின்தங்கியுள்ளதாக கல்வியாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.


கடந்த, 2011ம் ஆண்டு, தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசின் கல்வித்திட்டத்தை மேம்படுத்தும் நோக்கில், சமச்சீர் கல்வியில் 6, 7, 8, 9, 10 ஆகிய வகுப்புகளுக்கு கணினி அறிவியல் பாடம் அறிமுகப் படுத்தப்பட்டு, புத்தகங்கள் அச்சிடப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.ஆனால், அக்கல்வியாண்டே காரணங்கள் ஏதுமின்றி, புத்தகங்கள் திரும்ப பெறப்பட்டு, கணினி அறிவியல் பாடம் கற்பித்தல் நிறுத்தப்பட்டது. இன்றைய உலகில், தொழில்நுட்ப அறிவு கட்டாயம் என்ற நிலையில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், அடிப்படை கம்ப்யூட்டர் இயக்கங்கள் கூட அறியாமல் படிப்பை முடித்து செல்கின்றனர்.இதனால், உயர்கல்வி, வேலைவாய்பு பெறுதல் போன்ற போட்டியில், பின்தங்கிவிடுகின்றனர். குறிப்பாக, அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில் கணினி அறிவியல் பாடங்களை ஆசிரியர்கள் இல்லை என்பது வேதனைக்குரியதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.பிளஸ்1, பிளஸ்2 வகுப்பில் கணினி அறிவியல் பாடத்தை தேர்வு செய்து படிக்கும் மாணவர்கள் மட்டுமே, ஓரளவு தொழில்நுட்ப அறிவை பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில பொதுசெயலாளர் குமரேசன் கூறுகையில், ''சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டபோது, தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் புரிந்து, கணினி அறிவியல் பாடம், ஆறு முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.''லட்சக்கணக்கில் புத்தகங்கள் அச்சிடப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. முறையே, வகுப்புகளும் நடந்தது. ''ஆனால், இரண்டு மாதங்களிலேயே எவ்வித அறிவிப்பும்இல்லாமல், கணினி அறிவியல் பாடம் கற்பிப்பதை நிறுத்தி, புத்தகங்களை திரும்ப பெற்றனர். இந்த புத்தகங்களின் நிலை என்ன என்பது குறித்து அரசு தெளிவுபடுத்தவேண்டும்,'' என்றார்.