தேர்ச்சி சதவிகிதம் குறைந்துவிடும் என்ற காரணத்தினால், ராமநாதபுரத்தில் தனியார் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 7 மாணவ, மாணவியருக்கு 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக, அப்பள்ளியில் கல்வித் துறை அதிகாரிகள்வெள்ளிக்கிழமை நேரில் விசாரணை நடத்தினர்.
ராமநாதபுரம் அரண்மனை அருகில் உள்ளது தனியார் மேல்நிலைப் பள்ளி. இங்கு, பத்தாம் வகுப்பு பயின்று வரும் பனையூர் கிராமத்தைச் சேர்ந்த இனியராஜ், முதலூர்கர்ணன், கலையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்களான ராஜசிங்கம், ஜோதிகா, மூவிதா, முதுனாள் கிராமத்தைச் சேர்ந்த சரவணக்குமார் மற்றும் ராணி ஆகிய 7 மாணவ, மாணவியர், இந்தாண்டு அரசுப் பொதுத் தேர்வு எழுத பள்ளி நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டது.
பள்ளியின் தேர்ச்சி சதவிகிதம் குறைந்துவிடும் என்ற காரணத்தினால், இவர்கள் 7 பேரும் பொதுத் தேர்வு எழுதுவதற்கான அனுமதிச் சீட்டுக்கு நிர்வாகம் விண்ணப்பிக்கவில்லை. இதனால், பாதிக்கப்பட்ட 7 பேரும் பள்ளி நிர்வாகத்தின் செயல் குறித்து வெளியே தெரிவித்தனர்.இது குறித்து, நாம் தமிழர் கட்சி நிர்வாகி வெங்குளம்ராஜூ கூறுகையில், பள்ளி நிர்வாகம் இந்த 7 பேரும் பொதுத் தேர்வு எழுதுவதற்குரிய அனுமதிச் சீட்டை பெற நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது, அதற்கான காலமும் முடிந்துவிட்டது. எனவே, பள்ளி நிர்வாகத்தின் இச்செயல்குறித்து, கல்வித் துறை அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளோம் என்றார்.
இது சம்பந்தமாக, பள்ளியில் விசாரணை நடத்திய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க. ஜெயக்கண்ணு தெரிவிக்கையில், மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிச் சீட்டுக்கு விண்ணப்பிக்காதது, பள்ளி நிர்வாகத்தின் தவறாகும். தகவல் அறிந்தவுடன் பள்ளிக்கு வந்து விசாரணைநடத்தி உடனடியாக தேர்வுத் துறை உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனுமதிச் சீட்டுக்கு விண்ணப்பிக்காமல் இருந்தால், உடனடியாக விண்ணப்பிக்கும்படியும் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் தெரிவித்துள்ளோம். விண்ணப்பிப்பதற்கு இன்றே கடைசி நாளாகும் என்றும் தெரிவித்தார்.