யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

31/7/16

இன்ஜி., கல்லூரிகள் நாளை திறப்பு : 'பேஸ்புக், வாட்ஸ் ஆப் சாட்டிங்'குக்கு தடை

தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலையின் இன்ஜி., கல்லுாரிகள் நாளை திறக்கப்படுகின்றன. கல்லுாரி வளாகத்தில் சமூக வலைதளங்களில், 'சாட்டிங்' செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாணவ, மாணவியருக்கும், அவர்களது பெற்றோருக்கும், நடத்தப்பட்ட வழிகாட்டுதல் நிகழ்ச்சியில், பின் வரும் விதிகளை மாணவர்கள் பின்பற்ற வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
டி-ஷர்ட், பெர்முடாஸ் மற்றும் அரை டிரவுசர் அணிந்து வகுப்பறைக்கு வரக்கூடாத
விடுமுறை நாட்களில் கல்லுாரி வளாகத்தில் தேவையின்றி கூடி கும்மாளம் போடக்கூடாது
வகுப்பறையில் எந்த காரணத்தை கொண்டும், மொபைல்போன், டேப்லேட் போன்றவற்றில்
கேம்ஸ் விளையாடுதல், 'பேஸ்புக், வாட்ஸ் ஆப்' போன்ற சமூக வலைதளங்களில் சாட்டிங்
செய்வது போன்ற செயல்களுக்கு அனுமதி இல்லை
மொபைல்போனை, 'ஸ்விட்ச் ஆப் அல்லது சைலன்ட் மோடில்' வைத்து கொள்ள வேண்டும்
ஈவ்டீசிங், ராகிங் போன்ற ஒழுக்க சீர்கேடுகளில் ஈடுபட்டால், கல்லுாரியிலிருந்து வெளியேற்றப்படுவதுடன், அண்ணா பல்கலையின் எந்த இணைப்பு கல்லுாரியிலும் சேர முடியாது
கல்லுாரி வளாகங்களில், இரு சக்கரம் மற்றும் கார் போன்ற வாகனங்களை கொண்டு வருதல் அறவே தடை செய்யப்படுகிறது. கல்லுாரி நுழைவு வாயில் அருகில் வாகனங்களை நிறுத்தி கொள்ள வேண்டும்
அன்றாட பாடங்களை முடிப்பதுடன், வகுப்புகளை கட் அடிப்பது, கல்லுாரி நேரங்களில் சினிமா தியேட்டர் மற்றும் பொழுது போக்கு இடங்களுக்கு செல்வது கூடாது
தேர்வுகளில் ஒரு தாளில் தேர்ச்சி பெறாவிட்டாலும், பெற்றோருக்கு தகவல் அளித்து, விளக்கம் கேட்கப்படும். மேலும், அடுத்த தேர்வில் தேர்ச்சி பெறுவோம் என்ற உறுதிமொழி எழுதி வாங்கப்படும்.
இவ்வாறு விதிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

'ஸ்காலர்ஷிப்' பெற 'ஆதார்' எண் : ஆகஸ்ட் 8ம் தேதி வரை கெடு

மத்திய அரசின் மானியம் மற்றும் நிதி உதவி திட்ட முறைகேட்டை தடுக்க, வங்கி மூலம், பயனாளிகளுக்கு நேரடியாக நிதி அனுப்பப்படுகிறது. கல்வி திட்டங்கள் குறித்த உதவித் தொகைகளும், நேரடி மானிய திட்டத்தில் வங்கி மூலம் வழங்கப்படுகின்றன.
இந்த ஆண்டு முதல், கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்களின் ஆதார் எண்ணை பதிவு செய்ய, மத்திய அரசு கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை தொடர்ந்து, 'ஆராய்ச்சி படிப்பான பி.எச்டி., உட்பட அனைத்து படிப்புகளுக்கும் உதவித்தொகை பெறும் மாணவர்கள், ஆக., 8ம் தேதிக்குள் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும்' என, அனைத்து கல்லுாரிகள், பல்கலைகளுக்கு, யு.ஜி.சி., செயலர் ஜஸ்பால் சந்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
பி.இ., கவுன்சிலிங் முடிந்தது : ஆளில்லாமல் 1 லட்சம் 'சீட்' காலி
அண்ணா பல்கலையில் நடந்த, இன்ஜினியரிங் கவுன்சிலிங் முடிந்தது. ஒட்டுமொத்தமாக, 90 ஆயிரம் இடங்கள் நிரம்பியுள்ளன. மீதம், 1.02 லட்சம் இடங்கள் காலியாக உள்ளன.
அண்ணா பல்கலையின் இணைப்பில், 523 இன்ஜி., கல்லுாரிகளில், 1.92 லட்சம் இடங்களுக்கு இந்த ஆண்டு கவுன்சிலிங் நடந்தது. இதில், பொது கவுன்சிலிங்கில், 84,352 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, 358 இடங்களும், விளையாட்டு பிரிவில், 122 இடங்களும் நிரம்பின.
இந்நிலையில், மீதமுள்ள இடங்களுக்கு துணை கவுன்சிலிங் நடத்தப்பட்டது. இதன் முடிவில் மொத்தம், 89,760 இடங்களில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 1.02 லட்சம் இடங்கள் காலியாக உள்ளன. கவுன்சிலிங்கில் அதிகபட்சமாக மெக்கானிக்கல் படிப்பு, 21,137 பேர்; இ.சி.இ., எனப்படும், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொடர்பு, 16,413; கம்ப்யூட்டர் சயின்ஸ், 15,387; எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ், 10,136; சிவில், 10,088 பேர் சேர்ந்துள்ளனர். இது தவிர, ஆட்டோமொபைல், கெமிக்கல் உள்ளிட்ட பிரிவுகளிலும், மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
மெக்கானிக்கல் தமிழ் வழி வகுப்பில், 200 பேரும், சிவில் தமிழ் வழியில், 195 பேரும் சேர்ந்துள்ளனர். 
கோவை மாவட்டத்தில் 90% க்கு குறைவாக ( பாடவாரியாக) தேர்ச்சி விகிதம் எடுத்த ஆசிரியப் பெருமக்களுக்கு கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஒவ்வொரு ஆசிரியருகும் தலைமை ஆசிரியர் வழியாக சோக்காஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியப் பெருமக்கள் பெரிதும் மன உலைச்சலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். இதேபோல் மற்ற பிற மாவட்டங்களிலும் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதா என தெரியப் படுத்தவும்.
[5:20 AM, 7/31/2016] +91 95439 91150: 🅱news ➖➖➖➖➖➖➖➖பார்கவுன்சில்  முன்  அஞ்சலிக்கூட்டம்
➖➖➖➖➖➖➖➖➖➖➖
பார்கவுன்சிலின் அதிகாரத்தைப் பறித்து, வழக்கறிஞர்களின்  தொழில் உரிமைகளையும் சுதந்திரத்தையும்  மறுதலித்து, நீதித்துறையை பலவீனப்படுத்தும் உயர்நீதிமன்றத்தின் அநியாய விதிகளுக்கெதிரான போராட்டத்தில்  முன்னின்றதற்காக, அகில இந்திய பார் கவுன்சிலால் அக்கிரமமாக  சஸ்பென்ட் செய்யப்பட்ட 126 வழக்கறிஞர்களில் ஒருவரும், பல்லாண்டுகாலமாக அனைத்து  வழக்கறிஞர் உரிமைப்போராட்டங்களின்  முன்னணி வீரரும்,  திருநெல்வேலி வழக்கறிஞர் சங்கத்தின்  தலைவருமான மறைந்த  மூத்த வழக்கறிஞர் திரு.முத்துராமலிங்கம் அவர்களுக்கான  அஞ்சலி நிகழ்ச்சியை தமிழ்நாடு பார் கவுன்சிலின் முன்னால் வருகிற திங்கட்கிழமை (01-08-2016) அன்று காலை 10  மணிக்கு நடத்த, சென்னை வழக்கறிஞர்கள் முடிவு செய்துள்ளார்கள்.
🅱News📌பணம் படைத்தவர்களே உயர் பதவிக்கு வரக் கூடிய சூழ்நிலை: கனிமொழி கண்டன பேச்சு  
➖➖➖➖➖➖➖➖➖➖➖
நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கை 2016ஐ கண்டித்து மாவட்டத்தில் உள்ள கிருத்தவ, இஸ்லாமிய, இந்துக்கள் என  அனைத்து மதத்தினரையும் கொண்ட ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. 
போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய திமுக எம்பி கனிமொழி
"சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக புதிய கல்வி கொள்கை அமைந்துள்ளது. இட ஒதுக்கீடு வேண்டாம் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கூறியது ஏன் என்று இப்போது தான் தெரிகிறது.

கல்வியில் மாநில அரசின் உரிமையில் மத்திய அரசு தலையிடுவது ஏற்க முடியாது. சமூக நீதியை காக்க பல்வேறு போராட்டங்களை நடத்தி வெற்றி பெற்றுள்ளோம். இனி அதை கீழ் இறங்க அனுமதிக்க மாட்டோம். கல்வியில் உலக தரம் வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

ஆனால் உலக தரம் வாய்ந்த கல்வி எத்தகையது என்பது முக்கியம். எந்த மொழியில் பயின்றாலும் அந்த மொழியில் உலக தரம் உள்ள கல்வி இருக்க வேண்டும். சமஸ்கிருத மொழியில் உலக தரமான கல்விக்கு வாய்ப்பு உள்ளதா? புதிய கல்வி கொள்கையின் படி 10-ம் வகுப்பில் பெயிலாகும் மாணவன் உயர் கல்வி படிக்க முடியாது. இது பழைய குல கல்வி திட்டம் போல் உள்ளது. குல கல்வி திட்டத்தை கொண்டு வந்த ராஜாஜியை நீக்கி விட்டு அனைவருக்கும் சமமான கல்வி திட்டத்தை கொண்டு வந்த காமராஜரை ஆட்சியில் கொண்டு வந்தோம்.

இன்று மத்திய அரசு அதே குலகல்வி திட்டத்தை கொண்டு வர முயற்சிக்கிறது. தற்போது மத்திய அரசின் கல்வி குழுவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர்தான் உள்ளனர். எனவே அந்த கல்வி குழுவை மாற்றி அமைக்க வேண்டும்.

இந்த போராட்டம் சரியான நேரத்தில் தொடங்கப்பட்டுள்ளது. புதிய கல்வி கொள்கைக்கு எதிரான போராட்டத்தில் தி.மு.க. முழுமையாக ஈடுபடும். சமூக நீதிக்கு எதிரான புதிய கல்வி கொள்கையை தி.மு.க. கடுமையாக எதிர்க்கும். எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு புதிய கல்வி கொள்கையை திணித்தால் போராட்டத்தால் தமிழகம் தீப்பற்றி எரியும் என்றார்"
[5:20 AM, 7/31/2016] +91 95439 91150: 🅱news ➖➖➖➖➖➖➖➖பார்கவுன்சில்  முன்  அஞ்சலிக்கூட்டம்
➖➖➖➖➖➖➖➖➖➖➖
பார்கவுன்சிலின் அதிகாரத்தைப் பறித்து, வழக்கறிஞர்களின்  தொழில் உரிமைகளையும் சுதந்திரத்தையும்  மறுதலித்து, நீதித்துறையை பலவீனப்படுத்தும் உயர்நீதிமன்றத்தின் அநியாய விதிகளுக்கெதிரான போராட்டத்தில்  முன்னின்றதற்காக, அகில இந்திய பார் கவுன்சிலால் அக்கிரமமாக  சஸ்பென்ட் செய்யப்பட்ட 126 வழக்கறிஞர்களில் ஒருவரும், பல்லாண்டுகாலமாக அனைத்து  வழக்கறிஞர் உரிமைப்போராட்டங்களின்  முன்னணி வீரரும்,  திருநெல்வேலி வழக்கறிஞர் சங்கத்தின்  தலைவருமான மறைந்த  மூத்த வழக்கறிஞர் திரு.முத்துராமலிங்கம் அவர்களுக்கான  அஞ்சலி நிகழ்ச்சியை தமிழ்நாடு பார் கவுன்சிலின் முன்னால் வருகிற திங்கட்கிழமை (01-08-2016) அன்று காலை 10  மணிக்கு நடத்த, சென்னை வழக்கறிஞர்கள் முடிவு செய்துள்ளார்கள்.
🅱News📌பணம் படைத்தவர்களே உயர் பதவிக்கு வரக் கூடிய சூழ்நிலை: கனிமொழி கண்டன பேச்சு  
➖➖➖➖➖➖➖➖➖➖➖
நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கை 2016ஐ கண்டித்து மாவட்டத்தில் உள்ள கிருத்தவ, இஸ்லாமிய, இந்துக்கள் என  அனைத்து மதத்தினரையும் கொண்ட ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. 
போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய திமுக எம்பி கனிமொழி
"சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக புதிய கல்வி கொள்கை அமைந்துள்ளது. இட ஒதுக்கீடு வேண்டாம் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கூறியது ஏன் என்று இப்போது தான் தெரிகிறது.

கல்வியில் மாநில அரசின் உரிமையில் மத்திய அரசு தலையிடுவது ஏற்க முடியாது. சமூக நீதியை காக்க பல்வேறு போராட்டங்களை நடத்தி வெற்றி பெற்றுள்ளோம். இனி அதை கீழ் இறங்க அனுமதிக்க மாட்டோம். கல்வியில் உலக தரம் வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

ஆனால் உலக தரம் வாய்ந்த கல்வி எத்தகையது என்பது முக்கியம். எந்த மொழியில் பயின்றாலும் அந்த மொழியில் உலக தரம் உள்ள கல்வி இருக்க வேண்டும். சமஸ்கிருத மொழியில் உலக தரமான கல்விக்கு வாய்ப்பு உள்ளதா? புதிய கல்வி கொள்கையின் படி 10-ம் வகுப்பில் பெயிலாகும் மாணவன் உயர் கல்வி படிக்க முடியாது. இது பழைய குல கல்வி திட்டம் போல் உள்ளது. குல கல்வி திட்டத்தை கொண்டு வந்த ராஜாஜியை நீக்கி விட்டு அனைவருக்கும் சமமான கல்வி திட்டத்தை கொண்டு வந்த காமராஜரை ஆட்சியில் கொண்டு வந்தோம்.

இன்று மத்திய அரசு அதே குலகல்வி திட்டத்தை கொண்டு வர முயற்சிக்கிறது. தற்போது மத்திய அரசின் கல்வி குழுவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர்தான் உள்ளனர். எனவே அந்த கல்வி குழுவை மாற்றி அமைக்க வேண்டும்.

இந்த போராட்டம் சரியான நேரத்தில் தொடங்கப்பட்டுள்ளது. புதிய கல்வி கொள்கைக்கு எதிரான போராட்டத்தில் தி.மு.க. முழுமையாக ஈடுபடும். சமூக நீதிக்கு எதிரான புதிய கல்வி கொள்கையை தி.மு.க. கடுமையாக எதிர்க்கும். எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு புதிய கல்வி கொள்கையை திணித்தால் போராட்டத்தால் தமிழகம் தீப்பற்றி எரியும் என்றார்"
மெமரிகார்ட் பற்றிய சில தகவல்கள் [Some tips about Memory Card]:
மெமரிகார்ட் என்றால் Data க்களை பதிந்து வைக்க பயன்படும் ஒரு நினைவக அட்டை என்றும் அது 4GB, 8GB ,16GB, 32GB, 64GB என்ற அளவுகளில் கிடைக்கிறது. இது மட்டும்தான் நாம் மெமரிகார்டை பற்றி தெரிந்து வைத்திருக்கும் விடயம் . சரிதானே?
சரி அப்படியென்றால் ஏன் ஒரே அளவுள்ள மெமரிகார்ட் (4GB) பல தயாரிப்பாளர்களால் வெவ்வேறு விலைகளில் விற்கப்பட வேண்டும் என யாராவது சிந்தித்தீர்களா ?
(வெல கம்மியா கடச்சா வாங்கிட்டு போய்கிட்டே இருக்கனும் பாஸ் அத வச்சு ஆராய்ச்சி எல்லாம் பன்னப்படாது ) என்று ஒரு போதும் இருந்துவிடாதீர்கள் ஏனென்றால் நாம் டிஜிட்டல் உலகத்தில் இருந்து கொண்டிக்கிறோம் அதைப்பற்றிய அறிவை நாம் பெற்றிருப்பது முக்கியம்!மெமரிகார்டில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் மெமரிகார்டில் அதனுடைய தயாரிப்பு நிறுவனத்தின் பெயருக்கு கீழ் 4,6,8,10 என்ற எதாவது ஒரு எண் குறிப்பிட்டு அதில் ஒரு வட்டமிட்டு காட்டப் பட்டிருக்கும் இதுதான் இந்த விலை பட்டியலுக்கு காரணம் ஆனால் இதனை அதிக நபர்கள் தெரிந்து வைத்திருப்பதில்லை. இவ்வாறு வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள எண் அந்த memory card னுடைய class என்று குறிப்பிடப்படுகிறது அது ஒவ்வொரு மெமரிகார்டின் data transfer speed ஐ குறிக்கும் code ஆகும். 4 என்ற எண் எழுதப்பட்டு வட்டமிடப்பட்டு இருந்தால் அது நொடிக்கு 4MB வேகத்தில் file ஐ transfer செய்யும் தன்மையை பெற்றிருக்கும்
Class 6 - 6MB per second
Class 8 - 8MB per second
Class 10 - 10MB per second
என்ற வேகத்தில் dataக்களை பரிமாறிக்கொள்கிறது, இதை வைத்துதான் இதனுடைய விலை நிர்ணயிக்கப்படுகிறது என்பது இதை விற்கும் பல வியாபாரிகளுக்கே தெரியாது!
நீங்களும் இதனை share செய்வதன் மூலம் உங்களை கொண்டு பல நபர்கள் இதனை தெரிந்து கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் share செய்யுங்கள்!!
திருத்திய உண்மைத்தன்மை வரைவோலை !
உண்மைத்தன்மை (GENUINENESS) கண்டறிய அனைத்து பல்கலைக் கழகங்களின் வரைவோலை தொகை (மறுபதிப்பு)
உண்மைத்தன்மை (GENUINENESS) கண்டறிய அனைத்து பல்கலைக் கழகங்களின் வரைவோலை தொகை
1. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்- ரூ.600/-
2. அழகப்பா பல்கலைக்கழகம்- ரூ.500/-
3. தமிழ்நாடு பல்கலைக் கழகம்-ரூ.500/-
4. இந்திராகாந்தி பல்கலைக் கழகம் -ரூ.200/-
5. தஞ்சை தமிழ் பல்கலைக் கழகம்- ரூ.1000/-
6. பாரதியார் பல்கலைக் கழகம்- ரூ.500/-
7. பாரதிதாசன் பல்கலைக் கழகம் -ரூ.1000/-
8. சென்னைப் பல்கலைக் கழகம்- அரசு ஊழியர்களுக்கு RS 250
9. மதுரை காமராஐர் பல்கலைக் கழகம் -ரூ.1500/-
10. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் ரூ.500/-
11. சாஸ்த்ரா பல்கலைக் கழகம்-ரூ.500/-
12. பெரியார் பல்கலைக் கழகம்- ரூ.250/-
13. Tamilnau Teacher Education University ரூ.350/-
14. சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகம் - துறை ரீதியாக பணம் பெற்று வழங்கும் அலுவலர் மூலமாக அனுப்பும் போது எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.
15. திருவள்ளுவர் பல்கலைக்கழகம்- ரூ.275/
பி.எட்., கல்லுாரிகளுக்கு, இந்த ஆண்டு, கட்டணத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது. இதற்காக, அக்கல்லுாரிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து, ஆகஸ்ட், 8ம் தேதி முதல் ஆய்வு செய்யப்படுகிறது. அடுத்த மாத
இறுதியில், பி.எட்., கல்லுாரிகளில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இந்நிலையில், புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளது.


நடப்பு கல்வி ஆண்டு முதல், 2018 - 19 வரை, பி.எட்., - எம்.எட்., - பி.பி.எட்., - எம்.பி.எட்., ஆகிய படிப்புகளுக்கான, புதிய கல்விக் கட்டணம் அமலில் இருக்கும்.இதற்காக கல்லுாரிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த ஆவணங்களை, ஆகஸ்ட், 8ம் தேதிக்குள் அனுப்ப, சுயநிதி கல்லுாரி கல்விக் கட்டண கமிட்டி உத்தரவிட்டுள்ளது. ஆவணங்கள் வந்ததும், கல்லுாரிகளில் ஆய்வு செய்து, புதிய கட்டணம் நிர்ணயம் செய்யப்படும்.

25/3/16

மனதிற்கான மருந்துகள் அனுபவத்திலிருந்து மனவளக் கட்டுரை

மனித உடம்பின் 99 இரகசியங்கள்

மாடியில் போடும் தோட்டம் பற்றிய உங்களது அனைத்து சந்தேகங்களுக்கான பதில்களும் இனி ஒரே இடத்தில்

மூலிகை வளம் குப்பை மேனி

மொபைல் போன்

வாழ்க்கை சொல்லும் பாடம்

சென்னை ஐ.ஐ.டி., 'ஜாம் ரிசல்ட்' வெளியீடு

இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனமான, சென்னை ஐ.ஐ.டி., நடத்திய, முதுகலை பட்டப்படிப்புக்கான, 'ஜாம்' நுழைவுத்தேர்வு முடிவு, நேற்று வெளியிடப்பட்டது.

பி.இ., - பி.டெக்., - பி.எஸ்சி., போன்ற அறிவியல் தொடர்பான, இளநிலை முடித்தவர்கள், ஐ.ஐ.டி., நிறுவனங்களில், எம்.எஸ்சி., முதுகலை மற்றும் பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பில் சேர, ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வான, 'ஜாம்' தேர்வை எழுத வேண்டும்.

வரும் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான, 'ஜாம்' தேர்வு, பிப்., 7ல் நடந்தது; இந்த ஆண்டு, சென்னை ஐ.ஐ.டி., நடத்தியது. தேர்வுக்கான முடிவு, நேற்று வெளியானது. 'தேர்ச்சி பெற்றவர்கள், 'ஆன்லைன்' மூலம் மாணவர் சேர்க்கை விண்ணப்பம் அளிக்கலாம்' என, சென்னை ஐ.ஐ.டி., அறிவித்துள்ளது.

புதிய வண்ணத்தில் பிளஸ் 2 சான்றிதழ் Posted: 23 Mar 2016 08:19 PM PDT இந்த ஆண்டுக்கான, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் நவீன, '2 டி பார்கோடு' மற்றும், 'வாட்டர் மார்க்' என்ற, ரகசிய குறியீடுடன் பளிச்சிடும் வண்ணத்தில் தயாராக உள்ளது. பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. தேர்வு முடிவுகளை, சட்டசபை தேர்தலுக்கு முன் வெளியிட, பள்ளிக்கல்வித் துறையும் மற்றும் தேர்வுத் துறையும் திட்டமிட்டு உள்ளன. * இந்த ஆண்டுக்கான மதிப்பெண் சான்றிதழ், பல பாதுகாப்பு அம்சங்கள் கொண்டதாக இருக்கும் * வெயில் மற்றும் மழையால் பாதிக்கப்படாத வகையில், வழவழப்பான கனமான தாளில் தயாரிக்கப்படும் * பச்சை நிறத்தில் குறுக்கு கட்டம் போட்ட தாளில், மதிப்பெண் சான்றிதழ் தயாரிக்கப்படும் * 'வாட்டர் மார்க்' என்ற ரகசிய குறியீடு, '2 டி பார்கோடு' மற்றும் மதிப்பெண் பட்டியலுக்கு தனி எண், பதிவு எண் போன்றவை இடம் பெறும் *தமிழக அரசு முத்திரையுடன், நடப்பு ஆண்டை குறிக்கும் ரகசிய எண்ணும், சான்றிதழில் இணைக்கப்படும். இந்த சான்றிதழ் உண்மையா, பொய்யா என ஆய்வு செய்யும் வகையில், சென்னை, அண்ணா பல்கலையிலுள்ள தேர்வுத் துறையின், கணினி வழி சான்றிதழ் ஆய்வு மையத்தில், சரிபார்க்க அதிகாரம் வழங்கப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். ஆதார் எண் விவரம் சேகரிக்காத ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை Posted: 23 Mar 2016 07:54 PM PDT மாணவர்களின் ஆதார் எண் விவரம் சேகரிக்காத, ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, கல்வி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களின், ஆதார் எண் விவரங்களை சேகரிக்க, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது. ஆதார் எண் உள்ளவர்களிடம், ஆதார் அட்டை நகல் பெறப்பட்டது. அட்டை இல்லாதவர்களுக்கு, சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த பணிகள் பல இடங்களில் நடந்து முடிந்தாலும், மாணவர்களின் ஆதார் எண் விவரங்களை, பள்ளிக்கல்வி இயக்குனரகத்துக்கு, தலைமை ஆசிரியர்கள் அனுப்பவில்லை. இந்த எண்ணின்படியே, மாணவர்களின் விவரங்கள் கணினியில் சேர்க்கப்பட்டு, அதன்மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. எனவே, கோடை விடுமுறைக்குள் ஆதார் எண் விவரங்களை அனுப்ப வேண்டும். தாமதமானால், ஆசிரியர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தனியார் பள்ளிகளில் மர்மமாகும் 'அட்மிஷன்' விண்ணப்பம் அளித்த பெற்றோர் ஏமாற்றம்

விதிகளை மீறி, முன்கூட்டியே தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முடிந்து விட்டது. விண்ணப்பம் கொடுத்தவர்கள், பள்ளிக்குள் நுழைய முடியாமல் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர். தமிழகத்தில், அரசு பள்ளிகளை விட, சில குறிப்பிட்ட அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகள், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் தான், பிள்ளைகளை சேர்க்க, பெற்றோர் விரும்புகின்றனர்.இந்த பள்ளிகளில், கல்வி கட்டணம், சிறப்பு கட்டணம் மற்றும் நன்கொடை என, பல ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலித்தாலும், பெற்றோர் முட்டி மோதுகின்றனர். ஆனால், இந்த பள்ளிகளில், 'அட்மிஷன்' நடைமுறை புரியாத புதிராகவே உள்ளது.

கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, ஏப்ரலில் விண்ணப்பம் கொடுத்து, மே மாதம், இரண்டாம் வாரம் முதல், மாணவர்களை பள்ளியில் சேர்க்க வேண்டும். ஆனால், சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி, ஈரோடு, திருப்பூர், திருச்சி போன்ற பெருநகரங்களில், கிறிஸ்துமஸ் விடுமுறைமுடிந்ததும், விண்ணப்பம் கொடுத்து, மாணவர் சேர்க்கையை மார்ச்சுக்குள் முடித்து விடுகின்றனர். இந்த நடைமுறை பள்ளிக்கு பள்ளி, நகரத்துக்கு நகரம், மாவட்டத்துக்கு மாவட்டம் மாறுபடுகிறது. எந்த பள்ளியில், எப்போது விண்ணப்பம் கொடுக்கின்றனர்; எப்போது, மாணவர் சேர்க்கை நடத்துகின்றனர் என்பது புரியாத புதிராக உள்ளது.

இந்த நடைமுறையையும் பெற்றோர் பின் தொடர்ந்து, விண்ணப்பம் வாங்கி, பள்ளிகளில் கொடுத்து விடுகின்றனர். ஆனால், 'அட்மிஷன்' கிடைத்ததா என்றால், அது தான் இல்லை. விண்ணப்பம் கொடுத்த பலரும், தினமும் பள்ளிகள் முன் காத்து கிடக்கின்றனர். ஆனால், அவர்களை தனியார் பள்ளிகள், உள்ளே அனுமதிக்காமல், காவலர்கள் மூலம் பதில் அளிக்கின்றனர். பெரும்பாலான பெற்றோருக்கு, 'அட்மிஷனுக்கு தேர்வானால், வீட்டுக்கு கடிதம் வரும்' என்ற, ஒரே பதிலையே திரும்ப, திரும்ப சொல்லி அனுப்புகின்றனர். இதனால்,பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், அரசியல்வாதிகளிடம், 'சீட்' கேட்டு, பலர் தஞ்சம் புகுந்துள்ளனர். கல்வி அதிகாரிகளிடம் சிபாரிசு கடிதம் பெற்று ஏராளமானோர் செல்கின்றனர். ஆனால், அவர்களுக்கும், பள்ளிகள் அட்மிஷன் வழங்குவதில்லை.

இதுகுறித்து, அதிகாரிகளிடம் கேட்ட போது, 'தனியார் பள்ளிகள் ஏஜன்ட்களை வைத்து பணம் வசூலித்து, 'அட்மிஷன்' வழங்குவதாக, தகவல் வருகிறது. ஆனால், அதற்கு பெற்றோர் தரப்பில் இருந்து புகார் இல்லை. எழுத்துப்பூர்வ புகார் வந்தால், அதன் மீது நடவடிக்கை எடுப்போம்' என்றனர்.

ஆதார் எண் விவரம் சேகரிக்காத ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை

மாணவர்களின் ஆதார் எண் விவரம் சேகரிக்காத, ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, கல்வி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களின், ஆதார் எண் விவரங்களை சேகரிக்க, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது. ஆதார் எண் உள்ளவர்களிடம், ஆதார் அட்டை நகல் பெறப்பட்டது. அட்டை இல்லாதவர்களுக்கு, சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

இந்த பணிகள் பல இடங்களில் நடந்து முடிந்தாலும், மாணவர்களின் ஆதார் எண் விவரங்களை, பள்ளிக்கல்வி இயக்குனரகத்துக்கு, தலைமை ஆசிரியர்கள் அனுப்பவில்லை. இந்த எண்ணின்படியே, மாணவர்களின் விவரங்கள் கணினியில் சேர்க்கப்பட்டு, அதன்மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. எனவே, கோடை விடுமுறைக்குள் ஆதார் எண் விவரங்களை அனுப்ப வேண்டும். தாமதமானால், ஆசிரியர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

புதிய வண்ணத்தில் பிளஸ் 2 சான்றிதழ்

இந்த ஆண்டுக்கான, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் நவீன, '2 டி பார்கோடு' மற்றும், 'வாட்டர் மார்க்' என்ற, ரகசிய குறியீடுடன் பளிச்சிடும் வண்ணத்தில் தயாராக உள்ளது. பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. தேர்வு முடிவுகளை, சட்டசபை தேர்தலுக்கு முன் வெளியிட, பள்ளிக்கல்வித் துறையும் மற்றும் தேர்வுத் துறையும் திட்டமிட்டு உள்ளன.

* இந்த ஆண்டுக்கான மதிப்பெண் சான்றிதழ், பல பாதுகாப்பு அம்சங்கள் கொண்டதாக இருக்கும்
* வெயில் மற்றும் மழையால் பாதிக்கப்படாத வகையில், வழவழப்பான கனமான தாளில்
தயாரிக்கப்படும்
* பச்சை நிறத்தில் குறுக்கு கட்டம் போட்ட தாளில், மதிப்பெண் சான்றிதழ் தயாரிக்கப்படும்
* 'வாட்டர் மார்க்' என்ற ரகசிய குறியீடு, '2 டி பார்கோடு' மற்றும் மதிப்பெண் பட்டியலுக்கு தனி எண், பதிவு எண் போன்றவை இடம் பெறும்
*தமிழக அரசு முத்திரையுடன், நடப்பு ஆண்டை குறிக்கும் ரகசிய எண்ணும், சான்றிதழில் இணைக்கப்படும்.
இந்த சான்றிதழ் உண்மையா, பொய்யா என ஆய்வு செய்யும் வகையில், சென்னை, அண்ணா பல்கலையிலுள்ள தேர்வுத் துறையின், கணினி வழி சான்றிதழ் ஆய்வு மையத்தில், சரிபார்க்க அதிகாரம் வழங்கப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாட திட்டம் தெரியாததால் பி.எட்., கல்லூரிகள் தவிப்பு

தமிழக பி.எட்., கல்லுாரிகளில் வகுப்புகள் துவங்கி, ஆறு மாதமாகியும் பாடத்திட்டம் தெரியாமல், மாணவர்கள், ஆசிரியர்கள் தவிக்கின்றனர். உயர்கல்வித் துறையின் அலட்சியத்தால், பாடத்திட்டம் முழுமை செய்யப்படவில்லை என, மாணவர்கள் குற்றம் சாட்டிஉள்ளனர்.ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் கட்டுப்பாட்டின் கீழ், மாநிலம்முழுவதும், 690 பி.எட்., கல்லுாரிகள் உள்ளன. 
இவற்றில், இந்த ஆண்டு முதல், பி.எட்., படிப்பு, ஓராண்டில் இருந்து,இரண்டு ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது.
என்.சி.டி.இ., உத்தரவு:
அதே போல், இரண்டு ஆண்டு படிப்பில்புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த, மத்திய அரசின் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி கவுன்சிலான, என்.சி.டி.இ.,உத்தரவிட்டது; பாடத்திட்டத்தின் அம்சங்களையும் மாநில அரசுகளுக்கு அனுப்பியது.இதன் அடிப்படையில், தமிழகத்துக்கு தேவையான பாடத்திட்டத்தை, கல்வியியல் பல்கலை கடந்த ஆண்டே தயாரித்தது.கல்லுாரிகள் எதிர்ப்பு:ஆனால், இதற்கு தமிழக அரசு உரிய நேரத்தில் அனுமதி அளிக்கவில்லை. செப்டம்பரில் மாணவர்களை சேர்த்த பின், அவசர அவசரமாக பாடத்திட்டத்துக்கு ஒப்புதல் பெற்று, கல்வியியல் பல்கலை வெளியிட்டது.புதிய பாடத்திட்டப்படி, முதல் ஆண்டு மாணவர்கள், ஒன்பது பாடங்களுக்கு தேர்வு எழுத வேண்டும். இதற்கு தனியார் கல்லுாரிகள் எதிர்ப்பு தெரிவித்தன.இதையடுத்து, பாடத்திட்டத்தை திருத்தும் பணியில் உயர்கல்வித் துறை ஈடுபட்டது.இதுவரை, 15 முறை பாடத்திட்டம் திருத்தப்பட்டும், இன்னும் பாடத்திட்டம் முடிவாகவில்லை என, கல்லுாரி நிர்வாகங்கள் தெரிவித்தன.இழுபறி நிலை:கல்லுாரி முதல்வர்கள் மற்றும் மாணவர்கள் கூறியதாவது:பாடத்திட்டத்தை, உயர்கல்வி அதிகாரிகள் தன்னிச்சையாக திருத்துவதால், மாணவர்களுக்கு எது தேவை, எது தேவையில்லை என, அவர்களுக்கு தெரியவில்லை.
பொதுவாக பாடத்திட்டத்தை உருவாக்கினால் அதற்கு, கல்வியாளர்கள்,கல்லுாரிகள், கல்வி நிறுவன பிரதிநிதிகள் கொண்ட குழு மூலம் கருத்து கேட்க வேண்டும்.கல்வியாளர் கருத்துகளின் படி, திருத்தம் செய்ய வேண்டும் அல்லது புதிய அம்சங்களை சேர்க்கவோ வேண்டும்.இதை கல்வியியல் பல்கலை அதிகாரிகள் செய்யாததால், பாடத்திட்டத்தை முடிவு செய்வதில் இழுபறி நிலை உள்ளது.தற்போதே, ஆறு மாதங்களாக மாணவர்களுக்கு என்ன பாடம் நடத்துவது என்று தெரியாமல் கல்லுாரிகள் தவிக்கின்றன. அடுத்த மாதம் தேர்வும் வந்து விடும்; அதற்குள் புதிய பாடத்திட்டம் கிடைத்து, பாடங்களை நடத்தி முடிக்க முடியுமா அல்லது தேர்வை தள்ளி வைக்க வேண்டுமா என, குழப்பத்தில் உள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பாட திட்டம் தெரியாததால் பி.எட்., கல்லூரிகள் தவிப்பு Posted: 24 Mar 2016 09:13 PM PDT தமிழக பி.எட்., கல்லுாரிகளில் வகுப்புகள் துவங்கி, ஆறு மாதமாகியும் பாடத்திட்டம் தெரியாமல், மாணவர்கள், ஆசிரியர்கள் தவிக்கின்றனர். உயர்கல்வித் துறையின் அலட்சியத்தால், பாடத்திட்டம் முழுமை செய்யப்படவில்லை என, மாணவர்கள் குற்றம் சாட்டிஉள்ளனர்.ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் கட்டுப்பாட்டின் கீழ், மாநிலம்முழுவதும், 690 பி.எட்., கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், இந்த ஆண்டு முதல், பி.எட்., படிப்பு, ஓராண்டில் இருந்து,இரண்டு ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது. என்.சி.டி.இ., உத்தரவு: அதே போல், இரண்டு ஆண்டு படிப்பில்புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த, மத்திய அரசின் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி கவுன்சிலான, என்.சி.டி.இ.,உத்தரவிட்டது; பாடத்திட்டத்தின் அம்சங்களையும் மாநில அரசுகளுக்கு அனுப்பியது.இதன் அடிப்படையில், தமிழகத்துக்கு தேவையான பாடத்திட்டத்தை, கல்வியியல் பல்கலை கடந்த ஆண்டே தயாரித்தது.கல்லுாரிகள் எதிர்ப்பு:ஆனால், இதற்கு தமிழக அரசு உரிய நேரத்தில் அனுமதி அளிக்கவில்லை. செப்டம்பரில் மாணவர்களை சேர்த்த பின், அவசர அவசரமாக பாடத்திட்டத்துக்கு ஒப்புதல் பெற்று, கல்வியியல் பல்கலை வெளியிட்டது.புதிய பாடத்திட்டப்படி, முதல் ஆண்டு மாணவர்கள், ஒன்பது பாடங்களுக்கு தேர்வு எழுத வேண்டும். இதற்கு தனியார் கல்லுாரிகள் எதிர்ப்பு தெரிவித்தன.இதையடுத்து, பாடத்திட்டத்தை திருத்தும் பணியில் உயர்கல்வித் துறை ஈடுபட்டது.இதுவரை, 15 முறை பாடத்திட்டம் திருத்தப்பட்டும், இன்னும் பாடத்திட்டம் முடிவாகவில்லை என, கல்லுாரி நிர்வாகங்கள் தெரிவித்தன.இழுபறி நிலை:கல்லுாரி முதல்வர்கள் மற்றும் மாணவர்கள் கூறியதாவது:பாடத்திட்டத்தை, உயர்கல்வி அதிகாரிகள் தன்னிச்சையாக திருத்துவதால், மாணவர்களுக்கு எது தேவை, எது தேவையில்லை என, அவர்களுக்கு தெரியவில்லை. பொதுவாக பாடத்திட்டத்தை உருவாக்கினால் அதற்கு, கல்வியாளர்கள்,கல்லுாரிகள், கல்வி நிறுவன பிரதிநிதிகள் கொண்ட குழு மூலம் கருத்து கேட்க வேண்டும்.கல்வியாளர் கருத்துகளின் படி, திருத்தம் செய்ய வேண்டும் அல்லது புதிய அம்சங்களை சேர்க்கவோ வேண்டும்.இதை கல்வியியல் பல்கலை அதிகாரிகள் செய்யாததால், பாடத்திட்டத்தை முடிவு செய்வதில் இழுபறி நிலை உள்ளது.தற்போதே, ஆறு மாதங்களாக மாணவர்களுக்கு என்ன பாடம் நடத்துவது என்று தெரியாமல் கல்லுாரிகள் தவிக்கின்றன. அடுத்த மாதம் தேர்வும் வந்து விடும்; அதற்குள் புதிய பாடத்திட்டம் கிடைத்து, பாடங்களை நடத்தி முடிக்க முடியுமா அல்லது தேர்வை தள்ளி வைக்க வேண்டுமா என, குழப்பத்தில் உள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இன்ஜி., கல்லூரிகளுக்கு முன்கூட்டியே தேர்வு.

சட்டசபை தேர்தலால், அனைத்து பல்கலைகளிலும் முன்கூட்டியே தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. மே மாதம் முதல் வாரத்திற்குள் தேர்வுகளை முடிக்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.தமிழக சட்டசபை தேர்தல் மே, 16ல் நடக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
'மே முதல் வாரத்திற்குள் கல்லுாரி மற்றும் பல்கலை தேர்வுகளை முடித்து, கல்லுாரி கட்டடங்களை தேர்தல் பணிக்கு ஒப்படைக்க வேண்டும்' என, தேர்தல் கமிஷன் கடிதம் எழுதியுள்ளதால், அதன்படி செயல்பட தமிழக அரசும்உத்தரவிட்டுள்ளது.
எனவே, அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, 550 இன்ஜி., கல்லுாரிகள், 40 ஆர்கிடெக் கல்லுாரிகள்; தொழில்நுட்ப கல்வி இயக்குனரக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள, 100க்கும் மேற்பட்ட பாலிடெக்னிக் கல்லுாரிகள்; கல்லுாரி கல்வி இயக்கக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள, 1,000க்கும் மேற்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், முன்கூட்டியே செமஸ்டர் தேர்வுகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.வழக்கமாக, மே இறுதி வாரம் வரை, செமஸ்டர் தேர்வுகள் நடக்கும். ஆனால், இந்த முறை மே, முதல் வாரத்திற்குள் தேர்வுகளை முடித்து விடுமுறை விடப்பட உள்ளது. அதற்காக, பாடங்களை விரைந்து முடிக்க, பேராசிரியர்களுக்கு கல்லுாரி நிர்வாகங்கள்உத்தரவிட்டுள்ளன.