யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

11/8/16

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் மாற்ற மத்திய அரசுதிட்டம்.

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை மாற்ற, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கான, கருத்து கேட்பு கூட்டம், டில்லியில் நடக்கவுள்ளது.உலகில் மாறி வரும் தொழில்நுட்பம், கல்வியின் தேவை, மாணவர்களின் எண்ண ஓட்டங்களுக்கு ஏற்ப, பாடத்திட்டங்களை மாற்றி அமைக்க வேண்டியது அவசியம். 
இதன்படி, சி.பி.எஸ்.இ., அமைப்பு, தங்கள் பள்ளிகளுக்கான பாடத்திட்டத்தை மாற்றி, தரம் உயர்த்த முடிவு செய்துள்ளது. இதற்கான கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், பெற்றோர்களின் கருத்து கேட்பு உயர்மட்ட ஆலோசனை கூட்டம், டில்லியில் வரும், 23, 24ம் தேதிகளில் நடக்கிறது.இதில், பாடத்திட்டத்தை தரம் உயர்த்துதல், தேர்வு முறைகளில் மாற்றம் கொண்டு வருதல், மாற்றுத்திறனாளி களுக்கு தேவையான பாடத்திட்டம் ஏற்படுத்துதல் போன்ற, பல அம்சங்கள் விவாதிக்கப்பட உள்ளன.

தேசிய திறனறி தேர்வு தேதி அறிவிப்பு.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மத்திய அரசின் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி., சார்பில், தேசிய திறனறித் தேர்வு, இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது.
மாநில அளவில் தேர்வு நடத்தி, அதில் தேர்ச்சி பெறுவோர், இரண்டாம் கட்ட தேர்வுக்கு தகுதி பெறுகின்றனர். இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் போது, மாதம், 1,250 ரூபாயும், பட்டப்படிப்பு படிக்கும் போது மாதம், 2,000 ரூபாயும் உதவித்தொகை வழங்கப்படும்.தமிழகத்தில், நடப்பு கல்வியாண்டில் இத்தேர்வு, நவ., 6ல் நடக்கும். இதற்கான விண்ணப்ப அறிவிப்பை, தமிழக அரசின் தேர்வுத்துறை வெளியிடும் என,என்.சி.இ.ஆர்.டி., தெரிவித்துள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டு

ஆதார் இணைப்பு பணிகள், விவர சேகரிப்பு பணிகள் நடப்பதால்,விரை வில் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என அமைச்சர் பெஞ்சமின் தெரிவித்தார்.பள்ளிக் கல்வித்துறை மானிய கோரிக்கை விவாதம் மற்றும் பதி லுரை முடிவில், திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு, ‘கடந்த 2012-ம் ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என அறிவித்தீர்கள். 
அந்த திட்டத்தின் கீழ் எவ்வளவு மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது’ என கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளித்து அமைச்சர் பி.பெஞ்சமின் பேசுகையில், ‘தற் போது மாணவர்களின் விவரங்கள் பெறப்பட்டுள்ளன. அவர்களின் ஆதார் எண்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 90 லட்சம் மாணவர்களின் விவரங்கள் சேகரிக் கப்பட்டுள்ளன. விரைவில் இவர் களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப் படும்’ என்றார்.

7th pay : புதிய ஓய்வூதியம் : மத்திய அரசு விளக்கம்'

கடந்த ஆண்டு இறுதி வரை ஓய்வு பெற்ற, அனைத்து மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கும், இந்த மாதத்திலேயே புதிய ஓய்வூதியம் மற்றும் 'அரியர்ஸ்' அளிக்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து, மத்தியபணியாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:
ஏழாவது சம்பள கமிஷனின் பரிந்துரைகளின் படி, கடந்த ஆண்டு இறுதி வரை ஓய்வு பெற்றவர்களுக்கு, இந்த மாதம் புதிய ஓய்வூதியம் அல்லது குடும்ப ஓய்வூதியம் மற்றும்இந்த ஆண்டு ஜனவரி முதலான நிலுவைத் தொகை, அரியர்ஸாக வழங்கப்படும். இதுவரை வாங்கிய ஓய்வூதியத்தைவிட, 2.57மடங்கு அதிக ஓய்வூதியம் கிடைக்கும். அனைத்து ஓய்வூதிய அலுவலகங்களும், வங்கிகளும், இந்த மாத இறுதிக்குள், புதிய ஓய்வூதியம் மற்றும் அரியர்ஸ் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தஆண்டு, ஜனவரி, 1ம் தேதிக்குப் பின், ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதிய விபரம் விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இளைய ஆசிரியர்களுக்கு கட்டாய இடமாற்றம்.

இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நிரவலில், பணிமூப்பில்குறைந்த ஆசிரியர்களை மாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கவுன்சிலிங், வரும், 13, 14ம் தேதிகளில் நடக்கிறது. 
பணி நிரவலில், குறிப்பிட்ட சில ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள பள்ளிக்கு கட்டாயமாக இடமாற்றம் செய்யப்படுவர். இதுதொடர்பாக, தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், 'இடைநிலை ஆசிரியர்களை, ஒன்றியத்துக்குள் பணி நிரவல் செய்யும் போது, பள்ளியளவில் பணிமூப்பில் இளைய ஆசிரியர்களை மாற்றம் செய்ய வேண்டும். ஒன்றியம் விட்டு ஒன்றியத்திற்கும், இளைய ஆசிரியர்களை மாற்றம் செய்ய வேண்டும். பணி நிரவல் செய்ய வேண்டிய ஆசிரியர் பட்டியலை தயார் செய்து, சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு, தகவல் தெரிவிக்க வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.

உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் பாதுகாப்பு வழிமுறை: பல்கலை. மானியக் குழு அறிவிப்பு.

உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவியர் பாதுகாப்பு தொடர்பாக கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை பல்கலைக்கழக மானியக்குழு வரையறுத்து அறிவித்துள்ளது.உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவியர் பாதுகாப்பான, சுமுகமான சூழ்நிலை நிலவ வழிகாட்டு நெறிமுறைகளை யுஜிசி எனப்படும் பல்கலை. 
மானியக்குழு வரையறுத்துள்ளது.அனைத்து பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தங்களுடைய சட்டதிட்டங்களில் இவ்வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவித்துள்ளது.கல்வி நிலைய வளாகத்தில் மாணவ, மாணவியர் இருக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் விவரம்:மாணவர்கள் தங்கும் விடுதிகளில் குறிப்பிடப்பட்ட அளவு உயரத்துடன் கூடிய மதில் சுவர் கட்டப்பட வேண்டும்.

இதற்கான நுழைவு வாயில்கள் 3-க்கும் மேல் இருத்தல் கூடாது. அனைத்து வாயில்களிலும் பாதுகாவலர்கள், கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். அடையாளம் தெரியாத நபர்கள் வரும் போது, அவர்களை அடையாளம் காணும் வசதிகள் கொண்டிருக்க வேண்டும். அவர்களது உடைமைகளையும் தீவிரமாக சோதனை செய்தே அனுப்ப வேண்டும்.பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறை: கல்வி நிறுவனங்கள், விடுதிகளில் மாணவர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப் பதிவை மேற்கொண்டால், வெளியாளை அடையாளம் கண்டுவிடலாம்.மாணவர்கள், ஊழியர்களுக்கு எளிதில் அடையாளம் காணக்கூடியஅடையாள அட்டைகளை தர வேண்டும்.எதாவது அசம்பாவிதம் உண்டானால் அதுகுறித்து மாணவ, மாணவியருக்கு உடனே தெரிவிக்கும் அவசர கால தகவல் தெரிவிப்பு வசதிகளை உள்ளடக்கி இருக்க வேண்டும்.மேலும் பல்கலைக்கழகங்களில் காவல் நிலையம் அல்லது புறக்காவல் நிலையம் அமைத்தால் மாணவர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படும்.2012ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பல்கலைக்கழக மானியக்குழு ஒழுங்குமுறை விதிகளை அனைத்து தரப்பினரும் அறிந்திருக்க வேண்டும்.உளவியல் ஆலோசகர் அவசியம்: மாணவ, மாணவியருக்கு ஏற்படும் பிரச்னைகள், மன அழுத்தத்தில் இருந்து விடுபட ஏதுவாக உளவியல் ஆலோசகர்களை நியமிக்க வேண்டும்.ஒவ்வொரு 25 மாணவர்கள் குழுவுக்கு ஆசிரியரை உளவியல் ஆலோசகராக நியமிக்க வேண்டும். அவ்வப்போது பெற்றோர் சந்திப்புக் கூட்டத்தை நடத்த வேண்டும். ஆன்லைன் மூலம் புகார் தெரிவிக்கும் முறையை ஏற்படுத்த வேண்டும்.

தற்காப்புக் கலைப் பயிற்சி:

மாணவ, மாணவியருக்கு பேரிடர்மேலாண்மை தொடர்பான உரிய விழிப்புணர்வு பயிற்சிகளை அளிக்க வேண்டும்.பல்வேறு தொண்டு நிறுவனங்கள் உதவியோடு, பயிலும் மாணவியர், பெண் ஊழியர்களுக்கு தற்காப்புக் கலைப் பயிற்சி தர வேண்டும்.கல்வி நிறுவன ஊழியர்களுக்கு பாலியல் கொடுமைகள் குறித்தவிழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உணவகங்களில் தரமான தின்பண்டங்கள் விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாணவ, மாணவியர் சுற்றுலா பயணங்கள், கல்வி சுற்றுலா செல்லும் போது ஒரு ஆசிரியை உள்பட ஆசிரியர்கள் உடன் செல்ல வேண்டும். பெற்றோரின் ஒப்புதல் கடிதங்களை பெறுதல்அவசியமாகும். சுற்றுலா பயணங்களில் மாணவ, மாணவியர் செல்லிடப்பேசி போன்றவற்றை கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும்

பள்ளிகளில் யோகா பயிற்சி கட்டாயம்.

 பள்ளி கல்வித்துறை கொள்கை விளக்க குறிப்பில், “யோகா என்பது மனம், உடல் மற்றும் ஆன்மாவை ஒருநிலைப்படுத்துவதற்கான பயிற்சியாகும். மேலும் யோகாப் பயிற்சி, பள்ளி மாணவர்களின் விளையாட்டு செயல்பாடுகளின் ஓர் ஒருங்கிணைந்த அங்கமாகவும் உள்ளது. 
பள்ளிகளில் மதிய உணவுஇடைவேளைக்கு முன்னர் இப்பயிற்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

விளையாட்டு துறைக்கு ரூ.153 கோடி ஒதுக்கீடு

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் கொள்கை விளக்க குறிப்பில், “விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் ஆகியவற்றுக்கு தமிழக அரசு பெரிய அளவில் உத்வேகம் அளித்து வருகிறது. பல்வேறு புதுமைத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. துறையின் நிதி ஒதுக்கீடு இதுவரை இல்லாத அளவுக்கு 2016-2017-ம் ஆண்டில் ரூ.153 கோடியே 38 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீட்டில் ரூ.104 கோடியே 77 லட்சம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கும், ரூ.41 கோடியே 58 லட்சம் தேசிய மாணவர் படைக்கும் மற்றும் ரூ.5 கோடியே 47 லட்சம் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 மாணவர் நலத்திட்டங்கள் தொடர நிதி ஒதுக்கீடு

பள்ளி கல்வித்துறை கொள்கை விளக்க குறிப்பில், “2016-2017-ம் கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்12-ம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்க ரூ.1,080 கோடியும், 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்க ரூ.381 கோடியும், 4 ஜோடி சீருடைகள் வழங்க ரூ.409 கோடியே30 லட்சமும், மலைப் பகுதிகளில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கம்பளிச் சட்டை வழங்க ரூ.3 கோடியே 71 லட்சமும், பாடப்புத்தகங்கள் வழங்கரூ.264 கோடியே 35 லட்சமும், நோட்டுப் புத்தகம் வழங்க ரூ.107 கோடியே 20 லட்சமும், விலையில்லா புத்தகப்பை வழங்க ரூ.115 கோடியே 11 லட்சமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

அரசாணை நிலை எண். 231 பள்ளிக் கல்வி (சி2) துறை நாள் 11.08.2010 ன் படி மாணவர் ஆசிரியர் விகிதம்.

தொடக்கப் பள்ளிகள்.

01. -  60.  -    2

61. -  90. -  3

91. -  120. - 4

121. -  150. - 5

151. -  200. -  6

201. -  240. -  7

241. -  280. -  8

281. -  320. -  9

321. -  360. -  10

361. -  400. -  11

401. -  440. -  12

441. -  480. -  13

481. -  520. -  14

521. -  560. -  15

561. -  600. -  16

601. -  640. -  17

641. -  680. -  18

681. -  720. -  19

721. -  760. -  20

:::::::::::::::::::::::::::::::::::::::::::

நடுநிலைப் பள்ளிகள்.

01. -  60. -  2

61. -  90. -  3

91. -  120. -  4

121. -  200. -  5

201. -  240. -   6

241. -  280. -  7

281. -  320. -  8

321. -  360. -  9

361. -  400. -  10

401. -  440. - 11

441. -  480. -  12

481. -  520. -  13

521. -  560. -  14

561.   600. --  15

601  -  640. -  16

641. -  680. -  17

681. - 720. -  18

721 -  760. -  19

761. -  800. -  20

இராமநாதபுரம் மாவட்டம் ஒன்றியம் வாரியாக இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் !

பரமக்குடி வட்டாரம்*

கௌரிப்பட்டி(1)
மடந்தை(1)
மேலாய்க்குடி கீழ்குடியிருப்பு(1)
பரளை(1)
மொத்தம் (4)

*திருப்புல்லாணி வட்டாரம்*

வண்ணாங்குண்டு(1)
மேலப்புதுக்குடி(1)
எக்ககுடி(1)
பஞ்சந்தாங்கி(1)
மொத்தம் (4)
பணிநிரவல்(2)
மீதம்(2)

*திருவாடானை*

கொடிப்பங்கு{2}
வெள்ளையாபுரம்{1}
முகிழ்தம்{1}
பதனக்குடி{1}
புதுவயல்{1}
பணிநிரவல் {3}
மீதம் {3}

*மண்டபம் வட்டாரம்*

காலியிடம் (1)
பணிநிரவல்(8)

*கமுதி வட்டாரம்*

கருங்குளம் (1)
மற்றொரு காலியிடம் (1)
சென்ற ஆண்டு வந்த உபரி திம்மநாதபுரம்(1)
இந்த ஆண்டு தேவை (2)
பணிநிரவல் (5).

*ஆர்எஸ்மஙகளம்*

மோர்ப்பண்ணை(1)
ஆனந்தூர்(1)
ராதானூர்(1)
கலக்காப்புலி(1)
கூடலூர்(1)
கே.கோட்டை (1)
மொத்தம் (6)
பணிநிரவல் இல்லை

போகலூர்

பணிநிரவல் (3)
காலியிடம் சரிசெய்யப்படும்.

*நயினார்கோவில்*

குளத்தூர் காலனி(1)
சின்ன அக்ரமேசி(1)
சித்தனேந்தல்(1) நகரம்(1)
ராதாப்புளி(1)
மொத்தம் (5)
தேவை (1) பணிநிரவல் (1)

*கடலாடி வட்டாரம்*

சாயல்குடி (2)
சத்திரம் (1)
வாலிநோக்கம் (2)
ஓரிவயல்(1)
ஏர்வாடி (1)
ஏர்வாடிதர்ஹா(1)
மாரந்தை(1)
கூராங்கோட்டை (1)
நரசிங்கம் பட்டி (1)
புனவாசல்(1)
குருவாடி(1)
கீழச்சாக்குளம்(1)
சண்முக குமாரபுரம்(1)
ஒச்சத்தேவன்கோட்டை(1)
பெருமாதலைவனேந்தல்(1)
வேடர்கரிசல்குளம்(1)
மொத்தம் (18)
பணிநிரவல் (3)
மீதம்(15)

TNPSC-குரூப் 4 தட்டச்சர் பணியிடங்கள்: வரும் 16 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு.

குரூப் 4 பிரிவில் அடங்கியுள்ள தட்டச்சர் பணிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 16-ஆம் தேதி முதல் நடைபெறும் என்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.இதுகுறித்து தேர்வாணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
குரூப் 4 பிரிவில் அடங்கிய தட்டச்சர் பணிக்கு நேரடி நியமனம் செய்யும் வகையில், கடந்த 2014-ஆம் ஆண்டு அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதற்கான எழுத்துத் தேர்வு 2014 டிசம்பரில் நடந்தது. ஆனாலும் 314 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன.இந்தப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு-கலந்தாய்வு, சென்னையில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் வரும் 16-ஆம் தேதி முதல் 19-ஆம்தேதி வரை நடைபெறும்.சான்றிதழ் சரிபார்ப்பு-கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கு அதற்கான தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்கள் செல்லிடப்பேசி குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மூலமும், கலந்தாய்விற்கான அட்டவணை (அழைப்புக் கடிதம்) விரைவு அஞ்சல் மூலமும் தனியாக அனுப்பப்பட்டுள்ளது.சான்றிதழ் சரிபார்ப்பு-கலந்தாய்வில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள், தரவரிசை, அவர்களின் இடஒதுக்கீட்டு பிரிவு,விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள், தகுதியுடைமை-நிலவும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப அனுமதிக்கப்படுவர்.

எனவே, சான்றிதழ் சரிபார்ப்பு-கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டதாலேயே அந்தப் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டதாக உரிமை கோர இயலாது. விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு- கலந்தாய்வுக்கு குறித்த நேரத்தில் வரத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது என தேர்வாணைய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், அனக்காவூர் ஒன்றியத்தில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிட விவரம்.

திருவண்ணாமலை மாவட்டம், அனக்காவூர் ஒன்றியத்தில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிட விவரம்.

1.ஊ.ஒ.தொ.ப,ஆக்கூர்-4
2.ஊ.ஒ.தொ.ப,அனப்பத்தூர்-1
3.ஊ.ஒ.தொ.ப,கீழாத்தூர்-1
4.ஊ.ஒ.தொ.ப,மகாஜனம்பாக்கம்-1
5.ஊ.ஒ.தொ.ப,பெரியசெங்காடு-1

6.ஊ.ஒ.தொ.ப,ஆலத்தூர்-1
7.ஊ.ஒ.தொ.ப,இளநீர்குன்றம்-2
8.ஊ.ஒ.தொ.ப,வெங்கடாபுரம்-1
9.ஊ.ஒ.தொ.ப,அனக்காவூர்காலனி-1
10.ஊ.ஒ.தொ.ப,காட்டுகுடிசை-1
11.ஊ.ஒ.தொ.ப,நர்மாபள்ளம்-1
12.ஊ.ஒ.தொ.ப,பழஞ்சூர்-1
13.ஊ.ஒ.தொ.ப,வீரம்பாக்கம்-1
14.ஊ.ஒ.தொ.ப,வினாயகபுரம்-1
15.ஊ.ஒ.தொ.ப,பின்னத்தூர்-1
16.ஊ.ஒ.தொ.ப,புரிசை-3
17.ஊ.ஒ.தொ.ப,பொன்னங்குளம்-1
18.ஊ.ஒ.தொ.ப,தென்கல்பாக்கம்-1
19.ஊ.ஒ.ந.நி.ப,மேல்நெமிலி-1
20.ஊ.ஒ.ந.நி.ப,செய்யாற்றை வென்றான்-1
21.ஊ.ஒ.ந.நி.ப,மடிப்பாக்கம்-2

மேலும் விபரங்கள் அறிந்து கொள்ள,

ஏ.பலராமன் த.ஆ
9843618997

ஜெ.கருணாநிதி த.ஆ
9965772723,8526996885

சு.பெருமாள் த.ஆ
9842283755

ஏழுமலை த.ஆ
9942223093

CRC கூட்டத்திற்கு வராத ஆசிரியர்களுக்கு தன்னிலை விளக்கம் கேட்டு நோட்டீஸ் !

10/8/16

" கட்டாய நன்கொடை தடுப்புச்சட்டம்-1992 "

என்றால் என்ன? "  சட்ட எண் :57 /1992 "
தமிழகத்தில் உள்ள கல்வி நிலையங்களில் மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டாய நன்கொடையாக. வசூலிப்பதை தடை செய்வதற்காக. 20.08.1992. ஆம் ஆண்டு  "கட்டாய நன்கொடை தடுப்புச்சட்டம் "கொண்டு வரப்பட்டது.

இசசட்டப்பிரிவு -2 (b) ன் படி
பல்கலை கழகங்கள், சட்டம், மருத்துவம் , பொறியியல் கல்லூரிகள்,  பட்டயபடிப்பு கல்வி நிறுவனங்கள் , தனியார் பள்ளிகள், தனியார் அமைப்பை சார்ந்த கல்வி நிலையங்களில் சட்டப்பிரிவு 3 (a)  மற்றும் (b)  ன் கீழ் கட்டாய நன்கொடை (Capitation Fee)  வசூலிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இச்சட்டப்பிரிவு -4 (3)  ன் படி ஒவ்வொரு கல்வி நிலையமும் மாணவர்களிடம் இருந்து வசூலிக்கும் கட்டணம் மற்றும் வைப்பீட்டு தொகைக்கு  அதிகார முறை பற்றுச்சீட்டு (Recept)   கண்டிப்பாக வழங்க வேண்டும்.

 இச்சட்டப்பிரிவு 7 (1)  கீழ் கட்டாய நன் கொடை வசூலித்தது  தெரிய வந்து அவர் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டால் அவருக்கு மூன்று ஆண்டுகள் முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டணையும், ஐயாயிரம் ருபாய் அபராதமும்  விதித்து தண்டிக்கப் படுவார்கள்.

இச்சட்டப்பிரிவு 7 (2)  b ன் படி அதிகமாக வசூலிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தை  மாணவர்களுக்கு திருப்பி  கொடுக்க வேண்டும்.

கட்டாய நன்கொடை தடுப்புச்சட்டப் பிரிவு  -   9 (1)  ன் படி புகாருக்குள்ளாகும் கல்வி நிலையகளை முன்னறிவிப்பின்றி சோதளை இடவும், ஆவணங்களையும், பதிவேடுகளையும் கைப்பற்றும் அதிகாரம் மாவட்ட. கல்வி அலுவலர்களுக்கு  வழங்கப்பட்டுள்ளது.

நண்பர்களே  கட்டாய நன் கொடை கேட்பவர்களை சிறைச்சாலைக்கு அனுப்புங்கள்.

  அரசியலமைப்புச்சாசனம் - 19 ( 1)  அ. வின் கீழ் பொது நலன் கருதி வெளியிடுவோர் :

"சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு "

அதிகாலையில் கண் விழித்தால் ஸ்லிம் ஆகலாம்..!

அதிகாலையில் கண் விழிப்பவர்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், ஸ்லிம்மாகவும் இருப்பார்கள் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
ரோகாம்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மேற்கொண்ட ஆய்வில், அதிகாலையில் எழுபவர்கள் தங்களுக்கான வேலையை சுறுசுறுப்பாக செய்வதோடு தங்கள் குழந்தைகளையும் பள்ளிக்கு விரைவாக அனுப்பிவைப்பார்கள் என்று கூறியுள்ளனர்.
இரவு ஆந்தைகளைப்போல விடிய விடிய வேலை பார்ப்பவர்கள் மன அழுத்தத்தினாலும், உடல் பருமனுடனும் இருப்பார்கள் என்று கூறுகிறது அந்த ஆய்வு முடிவு.
1,068க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் அவர்களின் உறங்கும் பழக்கம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதிகாலையில் எழுபவர்கள் சராசரியாக காலை 6.58 மணிக்கு எழுந்திருத்தனர்.
ராக்கோழிகள் எனப்படும் சோம்பேரிகள் காலை நேரத்தை சராசரியாக 8மணி 54 நிமிடத்திற்கு தொடங்குகின்றனர்.

DEE ERODE DISTRICT VACANT LIST 2016:

இளைய ஆசிரியர்களுக்கு கட்டாய இடமாற்றம்



இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நிரவலில், பணிமூப்பில் குறைந்த ஆசிரியர்களை மாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கவுன்சிலிங், வரும், 13, 14ம் தேதிகளில் நடக்கிறது. 


பணி நிரவலில், குறிப்பிட்ட சில ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள பள்ளிக்கு கட்டாயமாக இடமாற்றம் செய்யப்படுவர். இதுதொடர்பாக, தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.



அதில், 'இடைநிலை ஆசிரியர்களை, ஒன்றியத்துக்குள் பணி நிரவல் செய்யும் போது, பள்ளியளவில் பணிமூப்பில் இளைய ஆசிரியர்களை மாற்றம் செய்ய வேண்டும். ஒன்றியம் விட்டு ஒன்றியத்திற்கும், இளைய ஆசிரியர்களை மாற்றம் செய்ய வேண்டும். பணி நிரவல் செய்ய வேண்டிய ஆசிரியர் பட்டியலை தயார்  செய்து, சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு, தகவல் தெரிவிக்க வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.

BRC Training(Tentative):*



*Primary
 2 Days on
 Aug'29 & 30
Topic:
Maths kit Box Training....

*Upper Primary 
3 Days on 
Sep'6, 7 & 8
Science Training..

விழிப்புணர்வு செய்திகள்



ஈரோடு ஒன்றியத்தில் 31.8.2015 ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரப்படி கணக்கிட்டுப்பார்த்ததில் 42 ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.31.7.2016 தேதிப்படி கணக்கிட்டால் 60 ஆசிரியருக்கு மேல் உபரியாக உள்ளனர்.காரணம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கை குறைவு.இதனால் ஒன்றியத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர் முன்னுரிமைப்பட்டியலில் உள்ள 42 ஆசிரியர்கள் தாளவாடி,சத்தியமங்களம்,அந்தியூர் போன்ற ஒன்றியங்களுக்கு கட்டாய மாறுதலில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.மாநகராட்சியில் 8 பணியிடங்கள் உபரியாக இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.இச்சூழ்நிலையில் தலைமையாசிரியர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான பணி உங்கள் பகுதியில் உள்ள பள்ளி வயது குழந்தைத்தொழிலாளர்கள்,பள்ளிக்குச் செல்லாமல் விளையாடுபவர்கள்,மெட்ரிக்குலேசன் ,தனியார் ஆங்கில வழி பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளை குறி வைத்து நேரில் சென்று பேசி பள்ளியின் சிறப்புக்களையும் தமிழ்நாடு அரசு வழங்கும் நலத்திட்டங்களையும் எடுத்துக் கூறி மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துங்கள்.நமக்குப் பாதிப்பு இல்லையே,யாரைத்தூக்கி எங்கு மாற்றினால் என்ன என்ற குறுகிய மனதோடு இருந்து விடாதீர்கள்.நீங்கள் (Hm or Teacher) பணியாற்றுகின்ற காலத்தில் ஒரு பணியிடத்தை ஒழித்துக்கட்டுவது என்பது வேதனைக்கறிய மன்னிக்க முடியாத வரலாற்றுப் பிழையாகும்.இதே பணிநிரவலால் நாம்  ஒவ்வொருவரும் பாதிக்கின்ற காலம் தொலைவில் இல்லை என்பதை மனதில் வையுங்கள்.ஆகவே இப்பொழுது நாம் செய்ய வேண்டுய பணி நாளை உங்கள் பள்ளியில் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை AEO வை தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளுங்கள்.அப்படி பாதித்திருந்தால் உங்கள் பள்ளியில் உள்ள மொத்த ஆசிரியர்களும் எட்டுத்திசையும் சென்று மாணவர்களைச் சேர்த்துங்கள்.VEC,PTA,SMC உதவியை நாடுங்கள்.கடைசி வாய்ப்பு பணி நிரவல் நடைபெறும் நாளுக்கு முன்பாக 12.8.2016 ல் மாணவர் எண்ணிக்கை உயர்ந்திருந்தாலும் கணக்கில் எடுத்துக்கொள்வார்கள்.ஆகவே இது வேகமாக செயல்படும் நேரம்.நமது சந்ததி நமக்கு விட்டுச்சென்ற நாற்காலியில் அமர்ந்து லட்சக்கணக்கில் பணப்பயனை அனுபவித்துவிட்டு அதை உடைத்து நொறுக்கி சமாதிகட்டிவிட்டு யாருடைய வியர்வையாலோ மாணவர் எண்ணிக்கை உள்ள பள்ளிக்குச்சென்று பாதுகாப்புத்தேடலாம் என நினைக்க வேண்டாம்.மாணவர் குறைவுக்கு நியாயமான பல காரணங்கள் இருக்கலாம் ஆனால் நாம் காரணமாக இருக்க வேண்டாம்.(மேலே உள்ளவை என் கருத்தல்ல போதி மரத்தின் அடியில் நின்று ஒரு பெரியவர் சொன்னது என் செவியில் விழுந்தது).நான் கூறிய பணி நிரவல் புள்ளி விபரங்கள் மிகத்துள்ளியமானதல்ல நீங்கள் அலுவலகத்தில் கேட்டு உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

இன்று ஈரோடு ஒன்றியத்துக்கு ஏற்பட்ட நிலை நாளை நமக்கும் ஏற்படலாம். விழித்துக்கொள்வோம் இனிமேலாது.

9/8/16

உயர்கல்வித் துறை 2016-17 ஆண்டிற்கான புதிய அறிவிப்புகள் பள்ளிகல்விதுறை அறிவிப்புகள் :



* தொலைதூரம் மற்றும் மலை பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு பள்ளிக்கு சுலுபமாக சென்றுவர 12.58 கோடி செலவில் போக்குவரத்து மற்றும் வழிகாவலர் வசதிகள் செயல்படுத்தபடும்

* இடைநின்ற மற்றும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களின்
குழந்தைகளுக்கு 21 கோடி ரூபாய் செலவில் கல்வி அளிக்கபடும், இத்திட்டதின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் 20 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்து உள்ளார்கள்

உயர்கல்வித் துறை 2016-17 ஆண்டிற்கான புதிய அறிவிப்புகள்

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கம் மையம் கோவையில் நிறுவ 1 கோடி ஒதுக்கீடு.

உயர்கல்வித்துறையின் கீழ் இயங்கும் பல்கலைகழகங்களால் நடத்தப்படும் தொலைநிலைக் கல்வி முறைப்படிப்புகளுக்கு தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தால் ஒரே வகையான பாடத்திட்டங்களை தயாரிக்க 5 கோடி ஒதுக்கீடு.

கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் பேரிடர் மீட்பு மேலாண்மை இணையத்தள மையம் ஏற்படுத்த 50 லட்சம் ஒதுக்கீடு.

கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்குவதற்கு திறன் வளர்த்தல் மையம் 10 லட்சம் செலவில் ஏற்படுத்தப்படும்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகத்தில் செவி மற்றும் பேச்சுத்திறன் குறைப்பாடு உள்ள மாணவர்களுக்கு சிறப்பு இளங்கலை பட்டப் பாடப்பிரிவு துவங்க 76 லட்சம் ஒதுக்கீடு.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மொழி பரிமாற்ற மேம்பாடு குறித்து இடைவெளி நிரப்பு பயிற்சிக்கு புத்தகங்கள் 12.50 லட்சம் செலவில் வழங்கப்படும்.

சேலம் பெரியார் பல்கலைகழகத்தின் பல்வேறு மேம்பாடு திட்டங்களுக்கு 30.74 கோடி ஒதுக்கீடு.

சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கைகள் - பள்ளிக்கல்விதுறை அறிவிப்புகள்


* தொலைதூரம் மற்றும் மலை பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு பள்ளிக்கு சுலுபமாக சென்றுவர 12.58 கோடி செலவில் போக்குவரத்து மற்றும் வழிகாவலர் வசதிகள் செயல்படுத்தபடும்

* இடைநின்ற மற்றும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு 21 கோடி ரூபாய் செலவில் கல்வி அளிக்கபடும், இத்திட்டதின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் 20 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்து உள்ளார்கள்

* நடப்பு கல்வியாண்டில் 132353 மாற்றுத்திறனாளி குழந்தைகள் உள்ளடிக்கிய கல்வி ம்றறும் உதவி உபகரணங்கள் 32.18 கோடி வாங்கப்படும்

* கல்வியில் பின்தங்கிய 44 ஒன்றியங்களில் உள்ள குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதற்காக கணினி மற்றும் சார்ந்த உபகரணங்கள் 4 கோடி செலவில் வாங்கப்படும்

* தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தினால் பல்வேறு தலைப்புகளில் வெளியிட்ட சுமார் 1000 நூல்கள் தமிழ்இணைய கல்வி கழகத்துடன் இணைந்து 5 கோடி செலவில் மின்மியமாக்கி இணையதளத்தில் பணிவேற்றபடும்

* மாணவர்கள் பாடங்களை பொருள் உணர்ந்து படிப்பதற்கு வசதியாக மல்டிமீடியா அனுபவத்தை தரகூடிய வகையில் பாடநூல்கள் 9 லட்சம் செலவில் மாற்றியமைக்கபடும்

* தமிழ்நாட்டில் பொது நூலகங்கள் சேவையினை மேம்படுத்த வாசகர்கள் பயன்பாட்டிற்காக 93 பகுதி நூலகங்கள் ஊர்ப்புற நூலகங்களாக 2.32கோடி செலவில் மேம்படுத்த படும்

* மாணவர்களின் ஆங்கில மொழி திறன் மேம்பட மூன்றாவது முதல் எட்டாம் வகுப்பு வரை ஆங்கில பாடம் புத்தகங்களுடன் மொழி திறனை வளர்க்க இலக்கண பயிற்ச்சி தாள்கள் வழங்கப்படும்

* தமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்டங்களில் மைய நூலகங்களில் சூரிய ஒளியை பயண்படுத்தி மின்சாரம் வழங்கிட 64 லட்சம் செலவில் செயல்படுத்தப்படும்

இவை உட்பட மொத்தம் 22 அறிவிப்புகள்