- Home
- TET
- TRP
- TNPSC
- CCE
- Forms
- GO
- Results
- Teachers Profile Form
- NHIS CARD DOWNLOAD
- KNOW UR GPF,TPF STATUS
- ஆதார் எண்ணை பதிவு செய்வது எப்படி?
- CPS A/C SLIP ONLINE
- EMIS ஆன்லைனில் பதிவிடும் முறை
- EMIS TNSCHOOLS
- பொருள் வாங்காத குடும்ப அட்டை
- தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் தொகுப்பு
- தமிழில் எழுத
- பள்ளிகள் பற்றிய விவரங்கள்
- INCOMETAX INDIA
- தேசிய திறனறித் தேர்வு
- NMMS ON LINE ENTRY
- EMIS இணையதளம்
- தேசிய கல்வி உதவித் தொகை
- கல்விச் செய்திகள்
- தகவல் துளிகள்
- பொதுஅறிவுகட்டுரை
- உடல்நலம் மருத்துவம்
- சிந்தனை கதைகள்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.
Download
16/8/16
பகத் சிங்கின் இறுதி நாள்...
லாகூர் மத்திய சிறைச்சாலையில் மற்ற நாட்களை போல சாதாரணமாகவே விடிந்தது 23, மார்ச், 1931. வழக்கம்போல காலை வேளையில் அரசியல் கைதிகள் தங்களது சிறைக்கூடங்களிலிருந்து வெளியே அனுப்பப்பட்டார்கள். சாதாரணமாக, அவர்கள் பகற்பொழுதுகளில் வெளியே இருப்பார்கள். சூரியன் மறைந்த பிறகு மீண்டும் சிறையறைகளில் அடைக்கப்படுவார்கள். அதனால் அன்று மாலை நான்கு மணிக்கே வார்டன் சரத் சிங் அவர்களிடம் வந்து சிறையறைகளுக்குத் திரும்பச் செல்லும்படி சொன்னபோது, ஆச்சரியப்பட்டார்கள்.
தனியார் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்!
பத்தாம் வகுப்புத் தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் பிடித்தவர்களில் 99 சதவீதத்தினர் தனியார் பள்ளியில் பயின்றவர்கள். அவர்களின் பெரும்பாலானோரின் பெற்றோர், அரசு பள்ளி ஆசிரியர்கள்! சமீபத்தில் இப்படி ஒரு விமர்சனத்தை எதிர்கொண்டேன். 'அரசுப் பள்ளிகளின் மீது அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கே நம்பிக்கையில்லை!" என்பதே அந்த விமர்சனத்தின் சாரம்.
15/8/16
நீட்' தேர்வு 'ரிசல்ட்' எப்போது?
எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புக்கான, 'நீட்' தேர்வு முடிவுகள், அடுத்த வாரம் வெளியாகும் என தெரிகிறது.எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பில் சேர, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, அனைத்து மாநிலங்களுக்கும் நீட் தேர்வு மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் தனியார் கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், மருத்துவ படிப்பில் சேரவும், மத்திய அரசின் இட ஒதுக்கீட்டில் அரசு கல்லுாரிகளில் சேரவும், இந்த தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
மற்ற மாநிலங்களில், அரசு மற்றும் தனியார் என அனைத்து கல்லுாரிகளில் சேரவும், மருத்துவ படிப்பில் சேரவும் நீட் தேர்வு கட்டாயம். மே, 1ல் முதற்கட்டமாகவும்; ஜூலை, 24ல் இரண்டாம் கட்டமாகவும் நீட் தேர்வு நடந்தது. இதில், ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
தேர்வுக்கான விடைத்தாள் நகல்கள், இரு தினங்களுக்கு முன், ஆன்லைனில் வெளியிடப்பட்டன. ஒரு வாரத்திற்குள், நீட் தேர்வு முடிவு வெளியாகலாம் என தெரிகிறது

ரூ.5 கோடிக்கு மருந்து பெட்டி
அங்கன்வாடி மையங்களுக்கு, மருந்து பெட்டிகள் வழங்க, ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பெட்டியில், எளிதான முறையில் கையாளக்கூடிய, காய்ச்சல், வயிற்றுப்போக்கு, தோல் தொற்று போன்ற பொதுவான நோய்களுக்கான மருந்துகள் இருக்கும்.
நடப்பாண்டு, அனைத்து அங்கன்வாடி களுக்கும், மருத்துவ சேவைக் கழகம் மூலம் மருந்து பெட்டிகள் வழங்க, ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.-

கல்வி கொள்கை கருத்து தெரிவிக்கசெப்., 15 வரை அவகாசம் நீட்டிப்பு
புதிய கல்விக் கொள்கை அறிக்கை, தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. கருத்துகளை அனுப்ப, கூடுதலாக ஒரு மாத அவகாசம் தரப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி தொடர்பான புதிய கல்விக் கொள்கையை, மத்திய அரசு தயாரித்துள்ளது. இந்த கொள்கையின், வரைவு அறிக்கை மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின் இணையதளத்தில், ஜூலையில் வெளியிடப்பட்டது.
பொதுமக்கள், கல்வியாளர்கள் தங்களின் கருத்துகளை, ஜூலை, 31 வரை தெரிவிக்கலாம் என, அவகாசம் வழங்கப்பட்டது. பின், கல்வியாளர்களின் கோரிக்கையை ஏற்று, ஆக., 16 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தி, தமிழ், உருது, மலையாளம், தெலுங்கு, மராத்தி உள்ளிட்ட, 12 பிராந்திய மொழிகளில், கல்விக் கொள்கை அறிக்கை மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு உள்ளது. மேலும், கல்விக் கொள்கை குறித்த கருத்துகளை தெரிவிக்க,
செப்., 15 வரை கூடுதல் அவகாசம் தரப்பட்டு உள்ளது

பி.எப்., பணத்தை அடகு வைத்து வீடு வாங்கும் திட்டம் விரைவில் அறிமுகம்; நான்கு கோடி சந்தாதாரர்கள் நலன் காக்க மத்திய அரசு புது முயற்சி
புதுடில்லி:தொழிலாளர்கள், பி.எப்., எனப்படும், வருங்கால வைப்பு நிதியை அடகு வைத்து, குறைந்த விலையில் வீடுகள் வாங்கும் திட்டத்தை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியம் அறிமுகம் செய்ய உள்ளது. இத் திட்டத் தால், நான்கு கோடி, பி.எப்., சந்தாதாரர்கள் பயன்பெறுவர்.
நாடு முழுவதும் உள்ள பல்வேறு நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களின், சொந்த வீடு கனவை நனவாக்கும் திட்டம் குறித்து, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான பண்டாரு தத்தாத்ரேயா, சமீபத்தில் லோக்சபாவில் அறிவித்தார்.
அப்போது, 'பி.எப்., சந்தாதாரர்களாக உள்ள தொழிலாளர்களுக்கு, குறைந்த விலை வீடு பெற்று தருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது' என்றார்; தற்போது, அந்த திட்டம் அமலாகும் சூழல் உருவாகி உள்ளது.
முன்பணம்:
இதுகுறித்து, மத்திய தொழிலாளர் துறை செயலர் சங்கர் அகர்வால், நேற்று கூறியதாவது:
பி.எப்., திட்டத்தில் சேர்ந்துள்ள தொழிலாளர் களுக்கு, வீட்டு வசதித் திட்டத்தை உருவாக்கி வருகிறோம். இத்திட்டப்படி, தொழிலாளர்கள் குறைந்த விலையில் வீடு வாங்க, பி.எப்., கணக்கிலிருந்து முன்பணம் பெறலாம்.
மேலும், வருங்காலத்தில், தங்கள் பி.எப்., கணக் கில் சேரப்போகும் தொகையை, வங்கிகளுக்கு செலுத்தப்போகும் மாதத் தவணை களாக அடகு வைத்து,குறைந்த விலை வீடுகளை வாங்க லாம். இதன்படி, பி.எப்., சந்தாதாரர், வங்கி மற்றும் இ.பி.எப்.ஓ., எனப்படும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியம் ஆகிய மூவர் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்.
தலையிடாது:
சந்தாதாரர் கணக்கில், வருங்காலத்தில் மாதந் தோறும் சேரும் தொகை, வீடு வாங்குவதற்கு, வங்கிக் கடனாக அளிக்கும் பணத்துக்கு, மாதத்தவணையாகச்செலுத்தப்படும். பி.எப்.,
சந்தாதாரர் வாங்கும் வீடு, கடன் செலுத்தி முடியும் வரை, வங்கியிடம் அடமானமாக இருக்கும்.
இந்த திட்டம், அடுத்த மாதம் நடக்கும், இ.பி.எப்.ஓ.,வின் சி.பி.டி., எனப்படும், மத்திய அறக்கட்டளை நிர்வாகிகள் கூட்டத்தில் முன்வைக்கப்படும்; இதில், ஒப்புதல் பெறப்பட்ட பின், நடைமுறைக்கு வரும். தொழிலாளர்கள், தாங்கள் விரும்பும் குறைந்த விலை வீடுகளை, அவர்களே வாங்கலாம்; இதில், இ.பி.எப்.ஓ., தலையிடாது. இவ்வாறு அவர் கூறினார்.
யாருக்காக இது?
தங்கள் சம்பளத்தில், வாழ் நாள் முழுவதும் வீடு வாங்க முடியாத, குறைந்த வருவாய் உள்ள தொழிலாளர்களுக்கென இத்திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.
தொழிலாளர்களின் வருங்கால, பி.எப்., பணத்தில், எந்த அளவுக்கு கடனாக பெறலாம் என்பது குறித்தும், குறைந்த விலை வீடு என்றால் என்ன என்பது குறித்தும், இன்னும் வரையறை செய்யப்படவில்லை. இது பற்றிய விபரங்கள், சி.பி.டி., எனப்படும், மத்திய அறக்கட்டளை நிர்வாகிகள் கூட்டத்தில் இறுதி செய்யப்படும்

தில்லுமுல்லுக்கு இடமின்றி ஆசிரியர் கவுன்சிலிங்:போராட்டம் இல்லாததால் அதிகாரிகள் நிம்மதி
சிபாரிசுக்கு இடமின்றி, காலியிடங்களை மறைக்காமல் ஆசிரியர் கவுன்சிலிங் நடந்து வருகிறது. போராட்டம், ஆர்ப்பாட்டம் இல்லாததால், அதிகாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங், ஆக., 3ல் துவங்கி நடந்து வருகிறது. தொடக்கக் கல்வித்துறைக்கு தனியாகவும், உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கான பள்ளிக் கல்வித்துறைக்கு தனியாகவும் நடந்து வருகிறது. இந்த ஆண்டு, 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தில்லுமுல்லு, சிபாரிசு கடிதமின்றி கவுன்சிலிங் நடத்துவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
'அமைச்சர் அலுவலகம் துவங்கி, கீழ் நிலையில் உள்ள உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள் என, எவ்வித சிபாரிசுக்கும் இடமில்லை; சங்கங்களோ, அதிகாரிகளோ தலையிட்டு, காலியிடங்களை மறைத்து வைத்து, வேண்டியவர்களுக்கு ஒதுக்கக் கூடாது. புகார் வந்தால் சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, கல்வித்துறை உயர் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கவுன்சிலிங் நடைமுறையில் குழப்பங்கள் இல்லாததால், கடந்த ஆண்டை போல, கல்வித்துறை மாவட்ட அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம், முற்றுகை, தர்ணா போன்ற போராட்டங்கள் இல்லாததால் அதிகாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
ஆசிரியர் இடமாறுதல் மற்றும் பதவி உயர்வு கவுன்சிலிங்கில், காலி இடங்கள் முழுமையாக காட்டப்பட்டுள்ளன. இதேபோல், காலியாக உள்ள தலைமை ஆசிரியர் இடங்களையும் வெளிப்படையாக நிரப்ப வேண்டும்.சாமி.சத்தியமூர்த்தி, மாநில தலைவர், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம்.

ஆசிரியையை பலாத்காரம் செய்ய முயற்சி:2 ஆசிரியர்கள் உட்பட 3 பேர் கைது
திருவண்ணாமலை:பெண் ஆசிரியையை பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவத்தில், இரண்டு ஆசிரியர்கள் உட்பட மூன்று பேரை, போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு டவுனை சேர்ந்தவர் சித்ரா, 40; அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை. இவரது வீட்டுக்குள், கடந்த மாதம், 25ம் தேதி, திடீரென ஒருவன் நுழைந்து, மயக்க மருந்து கைக்குட்டையை முகத்தில் வைத்து அழுத்தினான். இதில், சித்ரா மயங்கினார்.
சிறிது நேரத்தில், அவருக்கு மயக்கம் தெளிந்தது. அப்போது, எதிர் வீட்டில் வசிக்கும் அரசுப் பள்ளி முதுகலை ஆசிரியர் சாண்டில்யன், 41, நின்றிருந்தான். அவனிடம் கேட்ட போது, 'உங்கள் வீட்டில் திருடன் நுழைந்தான். சத்தம் கேட்டு உள்ளே வந்தேன்; என்னை உங்கள் மீது தள்ளிவிட்டு ஓடிவிட்டான்' என, கூறியுள்ளான்.
சாண்டில்யன் மீது சித்ராவுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், கடந்த, 1ம் தேதி, செய்யாறு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார், சாண்டில்யனை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை, செய்யாறு பேருந்து நிலையத்தில் இருந்த சாண்டில்யனை போலீசார் கைது செய்தனர். அவன் அளித்த வாக்குமூலம்:ஆசிரியை சித்ராவை அடைய வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இதை, தனியார் பள்ளி ஆசிரியரான மணி என்ற நண்பரிடம் கூறினேன். அவன், 'குளோரோபார்ம்' எடுத்து வந்தான்.
அதை ஆட்டோ ஓட்டுனர் மோத்தியிடம் கொடுத்து, சித்ராவை மயக்கமடைய செய்யுமாறு கூறினேன்; அவனும் அவ்வாறு செய்தான். பின், சித்ராவை பலாத்காரம் செய்ய வீட்டினுள் நுழைந்த போது மயக்கம் தெளிந்து கூச்சலிட்டார். வெளியே காத்திருந்த மணி, மோத்தி தப்பியோடினர்; நானும் ஓடிவிட்டேன்.இவ்வாறு அவன் தெரிவித்தான்.
இதையடுத்து, சாண்டில்யன், மணி, மோத்தி ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கலந்தாய்வில் தகராறு ஆசிரியர் 'சஸ்பெண்ட்'
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடந்த கலந்தாய்வில் உயரதிகாரிகளிடம் தகராறில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியரை தொடக்கக்கல்வி இயக்குனரகம் 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல்லில் நேற்று இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடந்தது. பழநி காவலப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் குணசேகரன், ஒன்றியம் விட்டு ஒன்றியத்திற்கான கலந்தாய்வில் பங்கேற்றார். அவர் விரும்பிய இடம் கிடைக்காததால் ஆவேச மடைந்தார்.
கலந்தாய்வு பணியில் ஈடுபட்டுள்ள உதவி தொடக்ககக்கல்வி அலுவலர்களிடம் வாக்குவாதம் செய்து, தகராறில் ஈடுபட்டார். மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பாண்டியராஜா அறிவுறுத்தியும் கேட்கவில்லை.
இதையடுத்து இணை இயக்குனர் சுகன்யா பரிந்துரையில் தொடக்கக்கல்வி இயக்குனரகம் ஆசிரியர் குணசேகரனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது

பணிநிரவல் பெற்ற ஆசிரியர்கள் கலந்தாய்வில் பங்கேற்கலாம்
கோவை : தொடக்கக்கல்வி துறை சார்பில் நடந்த, பணிநிரவல் கலந்தாய்வில் பங்கேற்ற ஆசிரியர்கள், உரிய பணியிடத்தில் சேராமல், மாவட்ட மாறுதலுக்கு விண்ணப்பித்திருந்தால், கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம் என, அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தொடக்க கல்வி இயக்குனரகம் சார்பில் வெளியிட்ட அறிக்கை:
தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கான, பணிநிரவல் கலந்தாய்வு, நேற்று முன் தினம் நடந்தது. இதில், ஒன்றியத்துக்குள், வேறு ஒன்றியத்துக்கு நிரவல் பெற்ற, பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள், பணியில் சேராமல் இருந்தால், பொது மாறுதலில் பங்கேற்கலாம். இதற்கு, பொது மாறுதல் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள, ஏற்கனவே முறையாக, விண்ணப்பித்திருக்க வேண்டும்.
இத்தகவலை, பணிநிரவல் பெற்ற ஆசிரியர்களுக்கு, சம்மந்தப்பட்ட மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தெரியப்படுத்துவது அவசியம்.இவ்வாறு, அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

புதுமை கற்பித்தல் முறை
தேவகோட்டை: ஆசிரியர்களின் கற்பித்தலில் புதுமை செய்வது பற்றி, வித்தியாசமான முறைகளில் கற்பிக்கும் முறை, எளிமையாக புரியும்படி கற்பித்தல் தொடர்பான செய்திப்படத்தை எஸ்சிஇஆர்டி நிறுவனம் தயாரித்தது.
இதில் தேவகோட்டை சேர்மன் மாணிக்கம் வாசகம் நடுநிலைப்பள்ளியில் அனுபவம் புதுமை என்ற பெயரில் சம்பந்தப்பட்ட துறையினர் படம் பிடித்தனர். இது போன்ற பல பள்ளிகளில் திரட்டிய ஆவணப்படத்தை அரசு சில தினங்களுக்கு முன் வெளியிட்டது. பள்ளிகளுக்கு விரைவில் சிடி வழங்க உள்ளனர். இந்நிலையில் யூடியூபில் வெளியிட்டனர். யூடியூபில் வெளியிட்ட படத்தை சேர்மன் மாணிக்கம் வாசகம் பள்ளியில் தலைமையாசிரியர் சொக்கலிங்கம் முன்னிலையில் மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டது.

ஆசியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு அதிகாரிகளிடம் வாக்குவாதம்
சிவகங்கை: சிவகங்கையில் நடந்த இடமாறுதல் கலந்தாய்வு ஆசிரியர்கள், அதிகாரிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இடைநிலை ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. துணை இயக்குனர் ராஜேந்திரன், முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல்முருகன், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் பார்த்தசாரதி பங்கேற்றனர். காளையார்கோவில் ஒன்றியம் செவல்புஞ்சை ஆசிரியர் ஜோசப், தனது மனைவி 35 கி.மீ., ல் உள்ள கீழக்கோட்டையில் பணிபுரிவதால் கவுன்சிலிங்கில் முன்னுரிமை தர வேண்டுமென, கேட்டார்.
இதற்கு ஆதாரமாக நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளரின் சான்றை சமர்ப்பித்தார். இதனை அதிகாரிகள் ஏற்று கொண்டனர்.
சான்றில் தவறான துாரத்தை குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு முன்னுரிமை அளிக்க கூடாது என கூறி ஆசிரியர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பின் அதிகாரிகள் 'கூகுள் மேப்பை' பயன்படுத்தி துாரத்தை கணக்கிட்டனர். அதில் செவல்புஞ்சை, கீழக்கோட்டை இடையே 29 கி.மீ., என, காட்டியது. இதையடுத்து ஜோசப்பிற்கு முன்னுரிமை மறுக்கப்பட்டது. இதையடுத்து ஜோசப் 'தனக்கு இடமாறுதல் வழங்க மறுப்பதற்கான காரணத்தை எழுத்து பூர்வமாக தர வேண்டும்,' என அதிகாரிகளிடம் கேட்டார். அதிகாரிகள் தர மறுத்ததால் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதன்பின் மற்றவர்களுக்கு கவுன்சிலிங் நடத்தப்பட்டது.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஒரே ஒன்றியத்திற்குள் கணவர், மனைவி 30 கி.மீ.,க்கு அப்பால் பணிபுரிந்தால் கவுன்சிலிங்கில் முன்னுரிமை தரப்படும். கூகுள் மேப்பில் 29 கி.மீ., கட்டியதால் முன்னுரிமை வழங்கவில்லை,” என்றார்.

இளந்தலைமுறையை நல்வழிப்படுத்த புதிய கல்விக் கொள்கை அவசியம்: கலந்துரையாடலில் பேராசிரியர் கருத்து
இளந்தலைமுறையினரை நல்வழிப்படுத்துவதற்கு புதிய கல்விக் கொள்கை அவசியம் என மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலில் பேராசிரியர்கள் வலியுறுத்தினர்.
மதுரையில் அகில பாரதீய வித்தியார்த்தி பரிஷத் (தேசிய மாணவர் இயக்கம்) மாநில கல்விக்குழு சார்பில் நடைபெற்ற புதிய கல்விக் கொள்கை மேம்பாட்டை நோக்கி எனும் தலைப்பிலான கலந்துரையாடல் நடைபெற்றது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி (ஆண்டிப்பட்டி) பேராசிரியர் ஏ.கதலி நரசிங்கப்பெருமாள் தலைமை வகித்துப் பேசியது: தரமிக்க கல்வி, தேசப்பற்று, தேச முன்னேற்றம், அனைவருக்கும் சமமான கல்வி என பல சிறப்பு அம்சங்களுடன் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
இன்றைய தலைமுறைக்கு கல்வியுடன், தர்மங்களையும், மனிதநேயத்தையும் கற்பிப்பது அவசியம். ஆகவே புதிய கல்வியானது நேயத்தையும், அன்பையும் இளந்தலைமுறையினரிடையே ற்படுத்தும் என்றார்.
கலந்துரையாடலை தொடங்கிவைத்து திருவேடகம் விவேகானந்தர் கல்லூரி முதல்வர் பி.ராமமூர்த்தி பேசியது: தற்போதைய சூழலில் மாணவர்களுக்கு தேச பக்தியை ஏற்படுத்துவது அவசியம். அறிவும், ஆற்றலும், அன்பும் சேர்ந்த கல்வியே இன்றைய காலகட்டத்துக்குத் தேவையானது.
சுவாமி விவேகானந்தர் விரும்பிய பாரதத்தை நாம் காணவேண்டும் எனில் இளைஞர்களின் சக்தியை நல்லமுறையில் பயன்படுத்தவேண்டும். இளைஞர்களை நல்வழிப்படுத்தும் வகையிலே புதிய கல்விக் கொள்கை அமைந்துள்ளது.
நாலந்தா போன்ற பழம் பெருமை மிக்க பல்கலைக்கழகம் இருந்த நமது தேசத்தின் பெருமையை இளைஞர்கள் உணரும் வகையில் புதிய கல்வி அமையும் என்றார்.
சாஸ்த்ரா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆர். ஸ்ரீநிவாசன்: கல்வி கற்கும் குழந்தைகள் இடை நிற்றலை புதிய கல்விக் கொள்கையால் தடுக்கலாம். பெண் கல்வியை உறுதிப்படுத்தும். அறிவுப் பூர்வமான, ஆக்கப்பூர்வமான தலைமுறையை உருவாக்கும் வகையிலே புதிய கல்விக் கொள்கை அமையும்.
கலந்துரையாடலில் சமூக ஆர்வலர் சந்திரன், விவேகானந்தர் கல்லூரி முன்னாள் துணை முதல்வர் ஜெயபால், தமிழ்நாடு தேசிய ஆசிரியர் சங்கம் நிர்வாகி டி.செந்தமிழ்அரசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

"கற்றலில் குறைபாடுள்ள குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும்'
கற்றலில் குறைபாடுள்ள குழந்தைகளை ஓவியம், விளையாட்டு, இசை உள்ளிட்ட துறைகளில் சாதனை படைக்க ஊக்கவிக்க வேண்டும் என மெட்ராஸ் டிஸ்லெக்ஸியா சங்கத்தின் (எம்டிஏ) தலைவர் சந்திரசேகர் வலியுறுத்தினார்.
"மெட்ராஸ் டிஸ்லெக்ஸியா சங்கத்தின் சார்பில் கற்றலில் குறைபாடு விழிப்புணர்வு வார நிகழ்ச்சி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
இதன் முதல் நாளில் நடைபெற்ற ஓவியப் போட்டிகளில் சென்னையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கற்றல் திறனில் குறைபாடுள்ள மாணவர்கள் பங்கேற்று தங்களது படைப்பாற்றல் திறனை வெளிப்படுத்தினர். இதில் சங்கத்தின் தலைவர் டி.சந்திரசேகர் பேசுகையில், கற்றலில் குறைபாடுள்ள குழந்தைகள் வாசித்தல், எழுதுதல், கணிதம் போன்றவற்றில் பின்தங்கி இருந்தாலும் பிற துறைகளில் அவர்கள் கற்பனைத் திறன் மிகுந்தவர்கள்.
இந்தக் குழந்தைகளால் ஓவியம், இசை, விளையாட்டு போன்ற துறைகளில் சாதனை படைக்க இயலும். அதற்காக அவர்களை ஊக்குவித்து உறுதுணையாக இருப்பது அவசியம். கூட்டு செயல்பாடுகளிலும் உளவியல் திறனிலும் இந்தக் குழந்தைகள் அபார ஆற்றலை வெளிப்படுத்துவர் என்றார் அவர்.
முன்னதாக நிகழ்ச்சியை தென் சென்னை ரோட்டரி சங்கத்தின் தலைவர் ஆஷா மெரீனா தொடக்கி வைத்தார். எம்டிஏ ஒருங்கிணைப்பாளர் வான்கடே ரேஷ்மி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொடக்கக் கல்வித்துறை அலுவலர்களுடன் தகராறு: இடைநிலை ஆசிரியர் பணியிடை நீக்கம்
பணி மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க வந்த இடைநிலை ஆசிரியர், தொடக்கக் கல்வித்துறை அலுவலர்களுடன் தகராறில் ஈடுபட்டதால் ஞாயிற்றுக்கிழமை தாற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்ட தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது. மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கூ.பாண்டியராஜா தலைமையில்,
முற்பகலில் ஒன்றியத்திற்குள்ளும், பிற்பகலில் ஒன்றியம் விட்டு ஒன்றியத்திற்கும் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.
இதில் ஒன்றியத்திற்குள் 43 பேர், ஒன்றியம் விட்டு ஒன்றியம் 24 பேர் என மொத்தம் 67 ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதலுக்கான ஆணை வழங்கப்பட்டது.
தகராறு செய்த ஆசிரியர் பணியிடை நீக்கம்: திண்டுக்கல் மாவட்டம், பழனி புறநகர் ஒன்றியத்திற்குள்பட்ட காவலப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் த.குணசேகரன், கலந்தாய்வில் பங்கேற்றார். அப்போது, கலந்தாய்வு பணியில் ஈடுபட்டிருந்த தொடக்கக் கல்வித்துறை அலுவலர்களுடன் தகராறு செய்ததாகவும், மிரட்டல் விடுத்ததாகவும் புகார் எழுந்தது.
இதனை அடுத்து, விதிமுறைகளை மீறி கலந்தாய்வு மையத்தில் தகராறு செய்த ஆசிரியர் த.குணசேகரனை தாற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கூ.பாண்டியராஜா உத்தரவிட்டுள்ளார்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)