யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

15/8/16

பி.எப்., பணத்தை அடகு வைத்து வீடு வாங்கும் திட்டம் விரைவில் அறிமுகம்; நான்கு கோடி சந்தாதாரர்கள் நலன் காக்க மத்திய அரசு புது முயற்சி

புதுடில்லி:தொழிலாளர்கள், பி.எப்., எனப்படும், வருங்கால வைப்பு நிதியை அடகு வைத்து, குறைந்த விலையில் வீடுகள் வாங்கும் திட்டத்தை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியம் அறிமுகம் செய்ய உள்ளது. இத் திட்டத் தால், நான்கு கோடி, பி.எப்., சந்தாதாரர்கள் பயன்பெறுவர். 



நாடு முழுவதும் உள்ள பல்வேறு நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களின், சொந்த வீடு கனவை நனவாக்கும் திட்டம் குறித்து, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான பண்டாரு தத்தாத்ரேயா, சமீபத்தில் லோக்சபாவில் அறிவித்தார். 

அப்போது, 'பி.எப்., சந்தாதாரர்களாக உள்ள தொழிலாளர்களுக்கு, குறைந்த விலை வீடு பெற்று தருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது' என்றார்; தற்போது, அந்த திட்டம் அமலாகும் சூழல் உருவாகி உள்ளது.

முன்பணம்:

இதுகுறித்து, மத்திய தொழிலாளர் துறை செயலர் சங்கர் அகர்வால், நேற்று கூறியதாவது:
பி.எப்., திட்டத்தில் சேர்ந்துள்ள தொழிலாளர் களுக்கு, வீட்டு வசதித் திட்டத்தை உருவாக்கி வருகிறோம். இத்திட்டப்படி, தொழிலாளர்கள் குறைந்த விலையில் வீடு வாங்க, பி.எப்., கணக்கிலிருந்து முன்பணம் பெறலாம். 

மேலும், வருங்காலத்தில், தங்கள் பி.எப்., கணக் கில் சேரப்போகும் தொகையை, வங்கிகளுக்கு செலுத்தப்போகும் மாதத் தவணை களாக அடகு வைத்து,குறைந்த விலை வீடுகளை வாங்க லாம். இதன்படி, பி.எப்., சந்தாதாரர், வங்கி மற்றும் இ.பி.எப்.ஓ., எனப்படும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியம் ஆகிய மூவர் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். 

தலையிடாது:

சந்தாதாரர் கணக்கில், வருங்காலத்தில் மாதந் தோறும் சேரும் தொகை, வீடு வாங்குவதற்கு, வங்கிக் கடனாக அளிக்கும் பணத்துக்கு, மாதத்தவணையாகச்செலுத்தப்படும். பி.எப்., 
சந்தாதாரர் வாங்கும் வீடு, கடன் செலுத்தி முடியும் வரை, வங்கியிடம் அடமானமாக இருக்கும். 

இந்த திட்டம், அடுத்த மாதம் நடக்கும், இ.பி.எப்.ஓ.,வின் சி.பி.டி., எனப்படும், மத்திய அறக்கட்டளை நிர்வாகிகள் கூட்டத்தில் முன்வைக்கப்படும்; இதில், ஒப்புதல் பெறப்பட்ட பின், நடைமுறைக்கு வரும். தொழிலாளர்கள், தாங்கள் விரும்பும் குறைந்த விலை வீடுகளை, அவர்களே வாங்கலாம்; இதில், இ.பி.எப்.ஓ., தலையிடாது. இவ்வாறு அவர் கூறினார்.

யாருக்காக இது? 

தங்கள் சம்பளத்தில், வாழ் நாள் முழுவதும் வீடு வாங்க முடியாத, குறைந்த வருவாய் உள்ள தொழிலாளர்களுக்கென இத்திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. 

தொழிலாளர்களின் வருங்கால, பி.எப்., பணத்தில், எந்த அளவுக்கு கடனாக பெறலாம் என்பது குறித்தும், குறைந்த விலை வீடு என்றால் என்ன என்பது குறித்தும், இன்னும் வரையறை செய்யப்படவில்லை. இது பற்றிய விபரங்கள், சி.பி.டி., எனப்படும், மத்திய அறக்கட்டளை நிர்வாகிகள் கூட்டத்தில் இறுதி செய்யப்படும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக