சுதந்திரத் தினத்தையொட்டி, சென்னையில் தலைமைச் செயலகம் அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை தேசிய கொடியேற்றி வைத்து, சிறப்புரையாற்றுகிறார்.
தமிழக அரசின் சார்பில் சார்பில் நடைபெறும் இந்த விழாவில் பங்கேற்பதற்காக, தனது போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து முதல்வர் ஜெயலலிதா காலை 9.10 மணிக்குப் புறப்படுகிறார். காமராஜர் சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்துக்கு அவர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். அங்கிருந்து போலீஸாரின் மோட்டார் சைக்கிள்கள் அணிவகுப்புடன் கோட்டைக்கு வரும் முதல்வரை தலைமைச் செயலர் ராமமோகன ராவ் மலர்கொத்து கொடுத்து வரவேற்கிறார்.
பின்னர், திறந்த ஜீப்பில் ஏறிச் சென்று, போலீஸாரின் அணிவகுப்பை முதல்வர் பார்வையிட்டு, கோட்டை கொத்தளத்தில் 9.30 மணியளவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, கொடி வணக்கம் செய்கிறார். பின்னர், சுதந்திர தின உரை நிகழ்த்துகிறார்.
விருதுகள் அளிப்பு: இதையடுத்து, அப்துல் கலாம், கல்பனா சாவ்லா ஆகியோர் பெயரிலான விருதுகளும், காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றியோருக்கும், சிறந்த மின் ஆளுமைக்கான அரசு ஊழியர் - அரசுத் துறையினருக்கும் விருதுகளும், மாற்றுத்திறனாளிகள், மகளிர் நலன் உள்ளிட்ட துறைகளில் சிறப்பான பணி செய்தவர்களுக்கும் விருதுகளும் வழங்கப்படுகின்றன. விழாவில், சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.
5 அடுக்குப் பாதுகாப்பு: விழாவில் கோட்டையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் 5 அடுக்கு பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.