திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடந்த கலந்தாய்வில் உயரதிகாரிகளிடம் தகராறில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியரை தொடக்கக்கல்வி இயக்குனரகம் 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல்லில் நேற்று இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடந்தது. பழநி காவலப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் குணசேகரன், ஒன்றியம் விட்டு ஒன்றியத்திற்கான கலந்தாய்வில் பங்கேற்றார். அவர் விரும்பிய இடம் கிடைக்காததால் ஆவேச மடைந்தார்.
கலந்தாய்வு பணியில் ஈடுபட்டுள்ள உதவி தொடக்ககக்கல்வி அலுவலர்களிடம் வாக்குவாதம் செய்து, தகராறில் ஈடுபட்டார். மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பாண்டியராஜா அறிவுறுத்தியும் கேட்கவில்லை.
இதையடுத்து இணை இயக்குனர் சுகன்யா பரிந்துரையில் தொடக்கக்கல்வி இயக்குனரகம் ஆசிரியர் குணசேகரனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது