யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

20/8/16

பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் திறனறித் தேர்வு - பயன்கள்

அன்பாசிரியர்களே 

முயற்சிப்போம் முன்னேற்றுவோம் ...

பள்ளி மாணவர்களுக்கு
அறிவியல் திறனறித் தேர்வு ...

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம், விபா நிறுவனம், என்.சி,இ,ஆர்,டி ( NCERT, GOVT.OF INDIA) இணைந்து தேசிய அளவிலான அறிவியல் விழிப்புணர்வுத் தேர்வை நடத்தி வருகிறது. அறிவியல் மனப்பான்மையை, மாணாக்கர்களிடம் வளர்ப்பதோடு அறிவியலில் ஆராய்ச்சித் துறையில் ஈடுபாட்டை அதிகரிக்கவும் இத்தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வு இந்தியா முழுவதும் ஒரே நாளில் நடைபெறுகிறது.


இத்தேர்வை யாரெல்லாம் எழுதலாம்

1) 6 முதல் 11 வகுப்பு வரை உள்ள மாணாக்கர்கள் இத்தேர்வை எழுதலாம்
2) 50 மாணாக்கர்களுக்கு மேல் பங்கேற்றால் அந்தந்த பள்ளியிலேயே தேர்வு எழுதலாம்.
3) தேர்வு ஆங்கிலம் மற்றும் தமிழில் இருக்கும்.
4) தேர்வுக் கட்டணமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் 50 ரூபாயும், தனியார் பள்ளிகள் 100 ரூபாயும் செலுத்த வேண்டும். ( அதற்கு ஈடாக விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம் மூலம் இரண்டு புத்தகங்கள் பங்கேற்கும் அனைவருக்கும் வழங்கப்படும்)

என்ன பயன்கள்:

1) 6 முதல் 11ம் வகுப்பு வரை பங்கேற்கும் மாணாக்கர்களில் தமிழக அளவில் ஒவ்வொரு வகுப்பிலிருந்தும் 20 மாணாக்கர்கள் வீதமாக 120 மாணாக்கர்கள் தேர்வு செய்யப்படுவார்கள், அவர்களுக்கு இரண்டு நாட்கள் அறிவியல் சார் பயிற்சி பட்டறை நடைபெறும் . அதில் இந்திய அளவில் சிறந்த விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல் , குழுச் செயல்பாடுகள், வினாடி வினா ஆகிய நிகழ்வுகள் நடைபெறும். இதில் பங்கு பெறும் அனைவருக்கும் சான்றிதழ்கள் பரிசுகள் வழங்கப்படும்.
2) அந்த 120 மாணாக்கர்களில் ஒவ்வொரு வகுப்பில் இருந்தும் 3 மாணாக்கர்கள் வீதம் சிறந்த 18 மாணாக்கர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஒவ்வொரு பிரிவிலும் உள்ள மாணாக்கர்களுக்கு முதல் பரிசாக ரூ.5000, இரண்டாம் பரிசாக ரூ.2000, மூன்றாம் பரிசாக ரூ.1000 மற்றும் கேடயம் சான்றிதழ்கள் வழங்கப்படும். அவர்கள் மாநில அளவில் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள்.
3) அந்த 18 மாணாக்கர்களில் இருந்து ஒவ்வொரு வகுப்பிற்கும் 2 மாணாக்கர்கள் வீதம் 12 பேர் 2 நாட்கள் நடைபெறும் தேசிய அளவிலான அறிவியல் சார் நிகழ்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
4) அந்த நிகழ்வில் சிறப்பாக செயல்படும் மாணாக்கர்களில் ஒவ்வொரு வகுப்பில் இருந்தும் 3 மாணாக்கர்கள் தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவில் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டு, அவர்களில் ஒவ்வொரு பிரிவில் உள்ள மாணாக்கர்களுக்கும் முதல் பரிசாக ரூ.10000, இரண்டாம் பரிசாக ரூ.7000, மூன்றாம் பரிசாக ரூ.5000 மற்றும் கேடயம் சான்றிதழ்கள் வழங்கப்படும். இவர்கள் தேசிய அளவிலான கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படுவதோடு, இவர்கள்இந்திய அரசின் குடியரசுத் தலைவரால் கெளரவிக்கப்படுவார்கள்

தேர்வு நடைபெறும் தேதி: நவம்பர் 13, 2016

விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 30.

இத்தேர்வை தமிழக அளவில் கலிலியோ அறிவியல் கழகம் ஒருங்கிணைக்கிறது. பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தொடர்புக்கு …கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் 9942467764, இ மெயில்kannatnsfudt@gmail.com .தேர்வு பற்றிய விவரங்களை www.vvm.org.in என்ற இணையதளத்திலும் பார்வையிடலாம்.

ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் 21,609 பேர் விண்ணப்பிப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நேற்று துவங்கிய நிலையில், 650 பணியிடங்களுக்கு, 21 ஆயிரத்து, 609 இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டரங்கில், சென்னை ராணுவ ஆள்சேர்ப்பு இயக்குனரகம் மூலம், வரும், 31ம் தேதி வரை ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடக்கிறது. பொதுப்பணி, டெக்னிக்கல், நர்சிங் அசிஸ்டென்ட், டிரேட்ஸ் மேன், ஆகிய பணிகளுக்கு ஆட்கள் தேர்வு
செய்யப்படுகின்றனர். இதில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலுார், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலுார் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த, 21 ஆயிரத்து, 609 இளைஞர்கள் பங்கேற்க உள்ளனர். விண்ணப்பித்த இளைஞர்கள், எந்த நாளில் முகாமில் பங்கேற்க வேண்டும் என்ற விபரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று துவங்கிய முகாமை, பார்வையிட்டனர். அப்போது, ராணுவ பிரிகேடியர் தால்வி, நிருபர்களிடம் கூறியதாவது: ராணுவத்தின் பல்வேறு பணியிடங்களுக்காக, 21 ஆயிரத்து, 609 இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில், 650 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். முதலில், உடற்தகுதி தேர்வு நடத்தப்பட்டு, இதில் தேர்வு பெறுவோருக்கு மருத்துவத் தேர்வு, எழுத்துத் தேர்வு இறுதியாக நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

32 ஆயிரம் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி : ரூ.60 லட்சம் ஒதுக்கீடு

ராமநாதபுரம்: தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஆயிரம் மாணவிகள் வீதம், 32 ஆயிரம் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சியளிக்க 60 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுஉள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி கூறியிருப்பதாவது:பெண் குழந்தைகளின் தற்காப்பிற்கு கராத்தே போன்ற கலைகள் அவசியமாகிறது.
அதனால் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், அரசுப்பள்ளிகளில் 6, 7, 8ம்வகுப்புகளில் படிக்கும் பெண் குழந்தைகளுக்கு கராத்தே பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
வரும் செப்டம்பர் முதல் ஜனவரி முடிய பயிற்சி அளிக்கப்படும். இதற்காக மாவட்டத்திற்கு 50 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு தலா ஆயிரம் மாணவிகள் வீதம் 32 மாவட்டங்களிலும் 32 ஆயிரம் மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இதற்கென பெண் பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக 60 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.பள்ளி நாட்களில் தினமும் காலையில் ஒன்றரை மணி நேரம் பயிற்சி அளிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மனஉளைச்சலில் ஒரு லட்சம் ஆசிரியர் பட்டதாரிகள் : டி.இ.டி., தேர்வு நடக்காத பின்னணி என்ன

மதுரை: தமிழகத்தில் மூன்று ஆண்டுகளாக ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) நடக்காதததால், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பட்டதாரிகள் மனஉளைச்சலில் உள்ளனர்.
தமிழகத்தில் 2011ல் தகுதித்தேர்வு அடிப்படையில், ஆசிரியர் நியமனம் நடக்கும் என உத்தரவிடப்பட்டது. 2012 மற்றும் 2013ல் டி.இ.டி., தேர்வுகள் நடத்தப்பட்டன. 2013 தேர்வில் தேர்ச்சி எண்ணிக்கை அதிகம் இருந்ததால், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அமல்படுத்தப்பட்டது. இதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு, மூன்று ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன.

மேலும் '90 சதவீதம் மதிப்பெண் என்பதில் இருந்து ஐந்து சதவீதம் மதிப்பெண் சலுகை அளித்து, 85 சதவீதம் (அதாவது 82 மதிப்பெண்) பெற்றாலே தேர்ச்சி,' எனவும் அரசு அறிவித்தது. இதன் அடிப்படையில் 40 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். பலர் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி நியமனம் பெற்றனர். ஆனால் இதற்கும் எதிரான வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
சலுகை மதிப்பெண் அறிவிப்பு அரசின் கொள்கை முடிவு. ஆனால் அதற்கு எதிராக தாக்கலான வழக்குகளில் கூட கவனம் செலுத்தி விரைவில் தீர்வுகாண, கல்வி அதிகாரிகள் நவடிக்கை எடுக்க ஆர்வம் காட்டவில்லை. இதனால் தான் டி.இ.டி., தேர்வையே மூன்று ஆண்டுகளாக நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
அச்சத்தில் 3 ஆயிரம் ஆசிரியர்: 23.8.2010க்கு பின் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு அரசு, உதவிபெறும் பள்ளிகளில் பணி நியமனம் பெற்ற 3100 ஆசிரியர்களுக்கு வரும் நவம்பருக்குள் டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும்
என நிபந்தனை உள்ளது. ஆனால் டி.இ.டி., தேர்வு நடத்தாததால் அவர்கள் அச்சத்தில் உள்ளனர்.
'அரசு சிறுபான்மையினர் பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்திற்கு டி.இ.டி., கட்டாயமில்லை,' என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியும் இதுவரை அரசாணை பிறப்பிக்காததாலும் குழப்பம் நீடிக்கிறது.
சிக்கலுக்கு தீர்வு என்ன: தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் முருகன் கூறியதாவது:
சலுகை மதிப்பெண் என்பது அரசின் கொள்கை முடிவு. இதற்கு எதிரான வழக்குகளை கையாள்வதில் அதிகாரிகள் ஆர்வம் காட்டாததால் தான் தேர்வு நடக்கவில்லை. ஆசிரியருக்கான 'வெயிட்டேஜ்' முறையை ரத்து செய்ய வேண்டும்.
23.8.2010க்கு பின் பணியில் சேர்ந்த 3100 பேருக்கும் டி.இ.டி., தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும். நீதிமன்ற அறிவுறுத்தல்படி சிறுபான்மையினர் பள்ளிகளுக்கான அரசாணை பிறப்பிக்க வேண்டும், என்றார்.

நம் கல்வி... நம் உரிமை!- கீழ்ப்படிய மட்டும் சொல்லும் கல்விக் கொள்கை

தனிப்பட்ட மனிதருக்கு மட்டுமல்ல, முழுச் சமுதாயத்துக்கும் பயன்படும்வகையில் அரசாங்கத்தின் விதிகளையும் வரையறைகளையும் உருவாக்குவதே பொதுக்கொள்கை என்பார் அமெரிக்கப் பேராசிரியர் டக்ளஸ் கொமெரி. சமுதாயத்தின் பல்வேறு சமூகக் குழுக்களையும் மனதில்கொண்டு அரசின் கொள்கைகளை உருவாக்கச் சிறப்பான வழி அதுவே. நமது நாட்டிலும் தேசிய கல்விக் கொள்கை 2016 -ஐ உருவாக்குவதற்கான கடைசிக்கட்டத்தில் நாம் இருக்கிறோம்.

தொடக்க கல்வித்துறை மற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கு இன்று கவுன்சலிங்

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கு இன்று ஆன்ைலன் மூலம் பணியிட மாறுதல் கவுன்சலிங் நடக்கிறது. அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கடந்த 15 நாட்களாக கவுன்சலிங் நடந்து வருகிறது. இந்நிலையில் மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான கவுன்சலிங் மாநில அளவில் ஆன்லைன் மூலம் இன்று நடக்கிறது.  

நீட்' தேர்வுக்கு சிறப்பு பயிற்சி : தனியார் பள்ளிகளில் துவக்கம்

அடுத்த ஆண்டு, 'நீட்' தேர்வு கட்டாயமாகும் நிலையில், தனியார் பள்ளிகளில், சிறப்பு பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன. எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்.,ஆகிய மருத்துவ படிப்புகளில் சேர, அனைத்து மாநிலங்களிலும், அடுத்த ஆண்டு முதல், 'நீட்' எனப்படும் தேசிய பொது நுழைவுத் தேர்வு நடத்துவது கட்டாயம் ஆகியுள்ளது.
இந்த ஆண்டு மட்டும், நீட் தேர்வை அனுமதிக்காத மாநிலங்களில், அரசு கல்லுாரிகளில், நீட் தேர்வு இல்லாமல், மாணவர்களை சேர்க்க அனுமதிக்கப்பட்டது. ஆனால், அடுத்த ஆண்டும் விதிவிலக்கு உண்டா என்பது தெரியவில்லை.எனவே, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், நீட் தேர்வு அடிப்படையில் தான், மாணவர்கள் சேர்க்கப்படுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தங்கள் பள்ளி மாணவர்கள், பிளஸ் 2வில் மட்டுமின்றி, நீட் தேர்விலும் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என, தனியார் பள்ளிகள் விரும்புகின்றன. இதுதொடர்பாக, பல்வேறு பயிற்சி மையங்களுடன், தனியார் பள்ளிகள் ஒப்பந்தம் செய்துள்ளன.இந்த பயிற்சி மையங்களின் ஆசிரியர்கள், பள்ளிகளுக்கு சென்று, நீட் சிறப்பு வகுப்புகள் நடத்த துவங்கியுள்ளனர். சி.பி.எஸ்.இ., பள்ளிகள் மட்டுமின்றி, மெட்ரிக் பள்ளிகளும் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளன. மேலும், நாமக்கல், ஈரோடு, திருச்சி, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில், பிளஸ் 2 ரிசல்ட்டில் சிறப்பு கவனம் செலுத்தும் பள்ளிகளும், நீட் சிறப்பு வகுப்பை துவங்கியுள்ளன

பி.எஸ்.என்.எல்., 'சண்டே ஜாலி' சலுகை : இணையதள இணைப்புக்கு கிடையாது.

பி.எஸ்.என்.எல்., தொலைபேசி (தரைவழி) வாடிக்கையாளர்களுக்கான ஞாயிற்று கிழமைகளில் இலவச அழைப்பு சலுகை, அலைபேசி மற்றும் இணையதள இணைப்புகளுக்கு பொருந்தாது' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தனியார் நிறுவனங்களின் வருகையால், பி.எஸ்.என்.எல்., தரைவழி இணைப்புகளின் பயன்பாடு குறைந்து விட்டது.தரைவழி இணைப்புகளை அதிகரிக்க செய்யும் நோக்கில், சலுகைகளை பி.எஸ்.என்.எல்., அளித்து வருகிறது. தினமும் இரவு 9:00 முதல் காலை 7:00 மணி வரை, தொலைபேசியில் இருந்து எந்த இணைப்புகளுக்கு பேசினாலும் கட்டணம் இல்லை. இதே போல ஆக.,15 முதல் புதிய சலுகை அறிவிக்கப்பட்டது. இதன்படி, ஞாயிற்று கிழமைகளில் தொலைபேசியில் இருந்து பேசும் அழைப்புகளுக்கு கட்டணம்இல்லை.இதுகுறித்து பி.எஸ்.என்.எல்., நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், 'வெளிநாடுகளில் வசிப்போருடன் பேசவும், இணையதள இணைப்புக்கும் இச்சலுகை கிடையாது. மற்ற விடுமுறை தினங்களுக்கும் பொருந்தாது. இத்திட்டத்தால்பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர்' என்றார்.

வீட்டுவசதி வாரிய வீடுகளுக்கு ஆன்-லைனில் இனிவிண்ணப்பிக்கலாம்: அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு.

வீட்டு வசதி வாரிய வீடுகள் ஒதுக்கீட்டுக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் புதிய முறை அறிமுகப்படுத்தப்படும் என்று வீட்டுவசதி-நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.சட்டப் பேரவையில், வீட்டுவசதி-நகர்ப்புற வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலளித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்புகள்:

பள்ளி மாணவர்களுக்கு எரிசக்தி சேமிப்பு : விழிப்புணர்வு ஓவிய போட்டி நடத்த உத்தரவு

பள்ளி மாணவர்களுக்கு, எரிசக்தி சேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஓவியப்போட்டி நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மத்திய எரிசக்தி அமைச்சகத்தின் சார்பில் தேசிய அளவில் எரிசக்தி சேமிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்போட்டிகள் நடத்தப்பட உள்ளன.மாவட்ட வாரியாக 4,5,6 மற்றும் 7,8, 9ம் வகுப்பு மாணவர்களை ஏ, பி என இரு பிரிவுகளாக பிரித்து போட்டிகளைநடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தர விட்டுள்ளது. பள்ளி அளவில் சிறந்ததாக தேர்வு செய்யப்படும் இரு படைப்புகளை, சென்னையில் உள்ள எரிசக்தி துறை அதிகாரிகளுக்கு, செப்., 30க்குள் கிடைக்கும்படி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேனி முதன்மை கல்வி அலுவலர் வாசு கூறுகையில், “பள்ளி அளவில் தேர்வு செய்யப்படும் சிறந்த இரண்டு படைப்புகள் தலைமை ஆசிரியர்கள் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. இதில் தேர்வாகும் மாணவர்கள் மாநில போட்டிகளிலும், அதனை தொடர்ந்து தேசிய போட்டிகளிலும் பங்கேற்க உள்ளனர். மாநில போட்டிகளில் முதலிடம் பிடிப்பவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாயும், இரண்டாமிடத்திற்கு 15 ஆயிரம் ரூபாயும், மூன்றாமிடத்திற்கு 10 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படவுள்ளன. ஆறுதல் பரிசாக 10 பேருக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளது. தேசிய அளவில் முதலிடம் பிடிப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும், ”என்றார்.

ஏழு ஆண்டுகளாகியும் ஊதிய உயர்வில்லை : ஆர்.எம்.எஸ்.ஏ., பணியாளர் புலம்பல்.

பணியில் சேர்ந்து ஏழு ஆண்டுகளாகியும் இதுவரை ஊதிய உயர்வு அளிக்கப்படவில்லை என, ஆர்.எம்.எஸ்.ஏ., பணியாளர்கள் புலம்புகின்றனர். 2009ல் ஆர்.எம்.எஸ்.ஏ.,எனப்படும் அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. 
இத்திட்டத்தை செயல்படுத்த தொகுப்பூதிய அடிப்படையில் பணியாளர்களை மாநில அரசே நியமிக்க உத்தரவிடப்பட்டது.மத்திய அரசு ஒதுக்கும் நிதியில் இருந்து சம்பளம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி 2009ல் மாவட்ட நிர்வாகங்கள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கணக்கு மேலாளர்கள், டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்கள், கட்டடப் பொறியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டனர். கணக்கு மேலாளர்களுக்கு ரூ.7,800, டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்களுக்கு ரூ.6,000, கட்டடப்பொறியாளர்களுக்கு ரூ.12 ஆயிரம்சம்பளம் வழங்கப்பட்டது. ஆனால், ஏழு ஆண்டுகளைக் கடந்தும் ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. இவர்களைப்போல் எஸ்.எஸ்.ஏ., எனப்படும் அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பணியாற்றுவோருக்கு ஆண்டுதோறும் ஊதிய உயர்வு வழங்கப்படும் நிலையில், தங்களுக்கு மட்டும் ஏன் இந்த பாரபட்சம் என, புலம்புகின்றனர்

பத்தாம் வகுப்பை தனித்தேர்வராக எழுதிய மாணவியை சட்டக் கல்லூரியில் சேர்க்க உயர் நீதிமன்றம் உத்தரவு.

பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை தனித் தேர்வராக எழுதிய மாணவிக்கு சட்டக் கல்லூரியில் பயில அனுமதி அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
திருச்சியைச் சேர்ந்த தாரணி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:திருச்சி ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2007-ஆம் ஆண்டு 9-ஆம் வகுப்பு முடித்தேன். பின்னர் மன அழுத்தம் காரணமாக 10-ஆம் வகுப்பை பள்ளியில் படிக்காமல் தனித் தேர்வராக எழுதித் தேர்ச்சி பெற்றேன். தொடர்ந்து பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளை, ஹோலி கிராஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலேயே படித்தேன். 2013-இல் காட்சி தொடர்பியல்(விசுவல் கம்யூனிகேசன்) இளம் அறிவியல் பட்டம் பெற்றேன்.இந்த நிலையில், சட்டம் (எல்எல்பி) பயில்வதற்காக, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பித்தேன். தாழ்த்தப்பட்டமாணவர்களுக்கு கட் ஆஃப் மதிப்பெண்களாக 71.318 நிர்ணயிக்கப்பட்டிருந்தது. நான் 71.961 மதிப்பெண்கள் பெற்றிருந்தேன். தேர்வுப்பட்டியலில் எனது பெயர் இல்லை.இதுதொடர்பாக விசாரித்தபோது, பத்தாம் வகுப்பை தனித்தேர்வராக எழுதியதால் அனுமதி வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. பத்தாம் வகுப்புத் தேர்வை தனியாக எழுதி இருந்தாலும், அதைத் தொடர்ந்து பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பை முறையாக பயின்றதால் சட்டக் கல்லூரியில் சேர்க்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு, நீதிபதிகள் நூட்டி ராம்மோகனராவ், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், திறந்தநிலைப் பல்கலைக்கழகம் மூலமாக பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பயின்றவர்களுக்கே அனுமதி மறுக்கப்படும் என சட்டக் கல்வி விதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.மனுதாரர் 10-ஆம் வகுப்பை தனியாக எழுதியிருந்தாலும், பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பை முறையாகப் பயின்றதால் அவருக்கு சட்டக் கல்லூரியில் பயில அனுமதியளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்

சுதந்திர தினத்தன்று மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்காமல் காலதாமதமாக வந்து தேசியக் கொடி ஏற்றியதாக, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்துள்ள துரிஞ்சிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வளர்மதி என்பவர் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். சுதந்திர தினத்தன்று பள்ளிக்குதாமதமாக வந்த வளர்மதி, மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் தகவல் தெரிக்காமல் தேசியக்கொடியை ஏற்ற முயற்சித்தார். இதையறிந்த ஊர் பொதுமக்கள் தேசியக் கொடியை ஏற்றவிடாமல் அவரைத் தடுத்து நிறுத்தி, இதுகுறித்து கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சந்திரிகாவுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, துரிஞ்சிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு வந்த கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் விசாரணை நடத்தினார். இதுதொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் ராஜேந்திரனிடம் அறிக்கை அளிக்கப்பட்டது. அதன்பேரில், தலைமை ஆசிரியை வளர்மதியை பணியிடை நீக்கம் செய்து மாவட்டக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 191 சிறப்பு அதிகாரி பணி: விண்ணப்பிக்க அழைப்பு.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 2016-ஆம் ஆண்டில் நிரப்பப்பட உள்ள 191 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் www.pnbindia.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மொத்த காலியிடங்கள்:191

பணி:Specialist Officer

பணியிடம்: இந்தியா முழுவதும்

தகுதி: பட்டம்,முதுகலை பட்டம்,பி.இ,பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்குரூ.600மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.100கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:www.pnbindia.com என்ற இணையதளத்தின் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பிக்க தொடக்க தேதி:20.08.2016

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:09.09.2016

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி:2016நவம்பர்,டிசம்பர் மாதங்களில் நடைபெறலாம்.

மேலும் முழுமையான விவரங்கள் அறியwww.pnbindia.comஎன்ற இணையதளத்தை பார்க்கவும்..

நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட மாறுதலுக்கான காலிப்பணியிடங்கள்.(வ.எண் 34,35,36&37 ஆகியபணியிடங்கள் உருது பணியிடங்கள்.)



TRB:் உதவி பேராசிரியர் பணிக்கு, விண்ணப்பித்தவர்களின் நிலை குறித்த பட்டியல் வெளியீடு.

இன்ஜி., கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கு, விண்ணப்பித்தவர்களின் நிலை குறித்த பட்டியலை, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வெளியிட்டு உள்ளது.அரசு இன்ஜி., கல்லுாரிகளில், 192 உதவி பேராசிரியர் இடங்களுக்கு, அக்., 22ல் எழுத்துத்தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள், நேற்று முன்தினம் முதல், முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களில் வழங்கப்படுகின்றன;வரும், 7ம் தேதி வரை, விண்ணப்பங்களை அளிக்கலாம். இந்த காலியிடங்களுக்கு ஏற்கனவே, 2014ம் ஆண்டு முதல் அறிவிப்பு வெளியானது; அப்போதும் ஏராளமானோர் விண்ணப்பித்தனர்; அவர்கள், மீண்டும் விண்ணப்பிக்க வேண்டாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், 2014 விண்ணப்பங்களின் தற்போதைய நிலை குறித்த பட்டியலை, டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிட்டு உள்ளது

மஹாராஷ்டிரா வங்கியில் 1,315 அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கு அழைப்பு!

புனேயை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் 'Bank of Maharadhtra' வங்கியில் நாடு முழுவதும் உள்ள கிளைகளில் நிரப்பப்பட உள்ள 1,315 அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கபப்படுகின்றன.

பணி:General Officers officers MMGS-III - 100
பணி:General Officers officers MMGS-III -200
பணி:Security Officers officers MMGS-III -200
பணி:Clerks (Law) - 100
பணி:Clerks (Agri) - 200
பணி:Clerks (Non Conventional) - 200
பணி:Officer - 500

விண்ணப்பிக்கும் முறை:www.bankofmaharastra.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.09.2016

மேலும் தகுதி, அனுபவம், சம்பளம், அனுபவம் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய www.bankofmaharastra.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

மாவட்ட மாறுதல் கலந்தாய்வு பதிவு மூப்பு பட்டியல் வெளியீடு.....