யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

22/8/16

ஆதார் முகாம் நடத்துவதில் இழுபறி : தனியார் பள்ளி மாணவர்கள் அவதி

ஆதார் முகாம் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், தனியார் பள்ளி மாணவர்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். 
 பள்ளி மாணவர்களுக்கான, கல்வி உதவித்தொகை மற்றும் இலவச நலத்திட்ட உதவிகளை, ஆதார் எண் அடிப்படையில் வழங்க, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளி மாணவ, மாணவியரின் எண்ணிக்கையை கணக்கிட்டு, அந்த தகவல்களை, பள்ளிக்கல்வி மின்னணு நிர்வாக திட்ட தொகுப்பு மையத்தில் இணைக்க அறிவுறுத்தப்பட்டது. பெரும்பாலான அரசு பள்ளிகளில், ஆதார் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளில், 6ம் வகுப்புக்கு மேற்பட்ட மாணவ, மாணவியரின் ஆதார் எண்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. ஒன்றாம் வகுப்பு முதல், 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் ஆதார் எண்களை சேகரிப்பதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, தனியார் பள்ளி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: பள்ளிகளில், உள்ளாட்சி அமைப்பு மற்றும் வருவாய் துறையினர் மூலம், ஆதார் முகாம் நடத்தப்படும் எனக் கூறப்பட்டாலும், பெரும்பாலான பள்ளிகளில், இன்னும் முகாம் நடத்தப்படவில்லை. முகாமிற்கான ஆவணங்களை மாணவர்களிடம் பல முறை பெற்றும், முகாம் நடத்த அதிகாரிகள் உதவாததால், பெற்றோரையே ஆதார் எண்ணில் பதிவு செய்ய கட்டாயப்படுத்த வேண்டிஉள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்

ஆசிரியர்கள் அச்சம் தவிருமா? - மணி.கணேசன்..

முன்பொருகாலத்தில் ஆசிரியர்கள் மீது மாணவர்களுக்குப் பக்தி, மரியாதை, பயம் முதலியன மேலோங்கிக் காணப்பட்டன. 
ஆசிரியர்களை வழிகாட்டிகளாகவும் முன்மாதிரிகளாகவும் மாணவர்கள் எண்ணிய காலம் தற்போது மாறிப் போய்விட்டதாகவே படுகிறது.

தொடக்கக்கல்வி முதல் கல்லூரிக்கல்வி வரை பணியாற்றும் ஆசிரியப் பெருமக்கள் அண்மைக்காலமாக மாணவ-மாணவிகளுக்கு அஞ்சும் துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

கண்ணுக்குத் தெரிந்து தவறுகள் செய்யும் மாணவர்களை நேரடியாகக் கூப்பிட்டுக் கண்டிக்க முடியவில்லை. அப்படியே மாணவர்களின் நலன்கருதி கண்டிப்பில் ஈடுபடும் ஆசிரியர்களின் நிகழ்கால வாழ்வு அதோகதி நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறது. நான்காம் வகுப்பே படிக்கும் மாணவிக்குக்கூட இன்று கோபம் பொத்துக்கொண்டு வந்துவிடுகிறது.

ஆசிரியர்கள் தம் சொல்லாலும் செயலாலும் மாணவர்களுக்கு உடல் மற்றும் மன ரீதியாக எப்பொழுதிலும் எத்தகைய வழியிலும் துன்பம் தரக்கூடாது என்று இக்கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் இரும்புக்கரம் கொண்டு வலியுறுத்துகின்றது. இதன் விளைவு என்ன தெரியுமா?

இளைய பாரதமாகத் திகழும் மாணவ சமுதாயம் திசைமாறிச் செல்வதைத் தடுக்க வழியின்றி ஆசிரியர்கள் கைகளைப் பிசைந்துகொண்டு உணர்வின்றி வெறுமனே கூலிக்கு மாரடிக்கும் கூட்டமாக மாறிப்போய்விட்டனர்.நிதானம் தவறி வெற்று உணர்ச்சிகளுக்கு அடிமையாகி தம் இன்னுயிரைப்பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாமல் தம்மை மாய்த்துக்கொள்ள நினைக்கும் மாணவச்சமூகத்தைத் திருத்தி நல்வழிக்காட்டுவது ஆசிரியர்களின்றி வேறு யார்?

அச்சு,காட்சி ஊடகங்கள்,வளர்ந்துவரும் நவீனத் தொழில்நுட்பங்களான செல்பேசிகள்,இணையங்கள்,தெருவெங்கும் திறந்துகிடக்கும் மதுபானக்கடைகள்,மலிவான போதைப்பொருள்கள்,நலிவடைந்துபோன மனித மதிப்புகள்,அதிநுகர்வுக் கலாச்சார நோக்குகள் மற்றும் போக்குகள் போன்றவை பிஞ்சு உள்ளங்களைப் பெருமளவில் நஞ்சாக்கி வருவது கண்கூடு.

மேலும்,உடல் கவர்ச்சி மற்றும் எதிர்பால் ஈர்ப்புக் காரணமாகப் பதின்பருவ வயதினரிடையே இயல்பாக எழும் அன்பொழுக்கம் தவறாகத் திரிந்து காதலெனக் கூறப்பட்டு வகுப்பறைக்குள்ளும் வெளியேயும் சொல்ல நா கூசுமளவிற்குத் தகாத முறைகளில் நடைபெற்று வருவதை ஆசிரியர்கள் கண்டும் காணாமலும் ஒதுங்கிச்செல்லவே முற்படுகின்றனர்.இந்த இழிநிலைக்குக் காரணம் எது?

மாணவர்களுக்கு இரண்டாம் பெற்றோராக விளங்கும் ஆசிரியரின் கைக்கு விலங்கையும் வாய்க்குப் பூட்டையும் போடும் சட்டமா? பெற்றோரின் மாறிப்போன மனப்போக்கா? சமுதாயத்தின் ஒருதலைப்பட்சமான குறுகிய பார்வையா? பரபரப்பையும் விறுவிறுப்பையும் மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு செயல்படும் ஊடகங்களின் சமூக அக்கறையின்மையா? மாணவரிடையே மங்கிப்போன குருபக்தியா? இவ்வாறு ஒரு பெரும்விவாதமே நிகழ்த்தவியலும்.

தப்பித்தவறி தாய் உள்ளத்துடன் குடும்பநிலை மற்றும் வருங்காலம் குறித்து நல்லறிவு புகட்டத் துணியும் ஆசிரிய,ஆசிரியைகளுக்கு மிஞ்சுவது மிரட்டல்கள் மட்டுமே. ஆம். காதல்வயப்பட்ட அப்பாவிப் பள்ளிச்சிறுமி வெளிப்படையாகவே ஆசிரியர்கள்மீது அவதூறுகளைப் பரப்பி அவர்கள் வாழ்க்கையையே நாசப்படுத்திவிடும் கொடுமையை என்னவென்பது?

ஒருசார்பான தீர்ப்பினாலும் முடிவினாலும் அவ்வாசிரியரின் நல்லதோர் குடும்பம் வீண்பழியால் சிதைந்து சின்னாபின்னமாவது என்பது வெளிச்சத்திற்கு வராத பேருண்மையாகும்.இத்தகைய குரலற்றவர்களின் குரலைச் சற்றேனும் காதுகொடுத்து கேட்க இச்சமூகம் ஏனோ முன்வருவதில்லை.இருதரப்பு நியாயங்களை இனியாவது செவிமடுக்க முன்வருதல் எல்லோருக்கும் நல்லது.

அதுபோல,தாம் பணியாற்றும் பள்ளியை முழுத் தேர்ச்சி பெறவைக்கவும், தேர்ச்சிக்குரிய குறைந்த மதிப்பெண்கள் அடைவை எட்டாத மாணவ, மாணவியர்மீது தனிக்கவனம் செலுத்தி,சிறப்பு வகுப்புகள் நடத்தித் தேர்ச்சியுற வைக்கவும் முயலும் ஆற்றல்மிக்க ஆசிரிய, ஆசிரியைகள் படும்பாடுகள் சொல்லிமாளாதவை. மென்மையாகக்கூட மாணவ, மாணவிகளைக் கண்டிக்கவோ, தண்டிக்கவோ இயலவில்லை. ஒருபக்கம் அரசு மற்றும் அதிகாரிகளின் கெடுபிடிகள் மற்றும் கிடுக்கிப்பிடிகள். மறுபக்கம் சொல்பேச்சுக்கேளாத அடங்காப்பிள்ளைகள். இதைத்தவிர, வேறொருபக்கம் நன்குத் திட்டமிடப்பட்டு வேலைக்கு உலைவைக்கும் அச்சுறுத்தல்கள் மற்றும் அவப்பெயர்கள். அதிகம் போனால் பளார் அறைகள், கத்திக்குத்துகள், பாலியல் வன்கொடுமைப் புனைவுகள் எனப் பட்டியல் நீண்டுகொண்டே போகும்.

 தவிர, அண்மைக்காலமாக மாணவ, மாணவியரிடையே சில விரும்பத்தகாத நடவடிக்கைகள் பெருகிக் கிடப்பதை நன்கு அறிய முடிகின்றது. மேலும் சமூகத் தீங்குமிக்கப் பல்வேறு தகாத நடவடிக்கைகளும் மலிந்துள்ளன. கற்றல்-கற்பித்தல் நிகழ்வுகளின்போதே தவறு செய்யும் மாணவனைக்கண்டு உண்மையில் ஆசிரியர்கள் கண்டிக்கத் திராணியின்றி அஞ்சி வருந்தும் அவலநிலைதான் எதிர்காலச் சிற்பிகளை உருவாக்கும் வகுப்பறை நடப்பாக இருக்கின்றது.

தமிழகத்தின் ஒட்டுமொத்த வகுப்பறைகளும் மாணாக்கர்களும் இவ்வாறு உள்ளனர் என்று பொதுவாகக் குற்றம் சாட்டுவது இங்கு நோக்கமல்ல. நல்ல நெல்மணிகளாய் மாணவக் கண்மணிகள் பலர் பல்வேறிடங்களில் அறியக்கிடைக்கின்றனர் என்பது மறுப்பதற்கில்லை. எனினும், பதர்கள், முட்செடிகள், நச்சுக்களைகள் போலுள்ள தீயோரை அடையாளம் காட்டுவதென்பது சமுதாயக் கடமையாகும்.

 திசைமாறிப் பயணித்துக்கொண்டிருக்கும் மாணவ சமுதாயத்தை மீளவும் நல்வழிக்குக் கொணர பெற்றோர், சமுதாயம், அரசாங்கம், ஊடகங்கள் ஆகியவை ஆசிரியர்களுடன்  கைகோர்ப்பது சாலச்சிறந்தது. ஆசிரிய சமுதாயத்தைத் தவறாகச் சித்தரித்து கேலி,கிண்டல் செய்து இழிவாகக் கருதும் சமுதாய பொதுமனநிலை நிச்சயம் மாற்றம்பெற வைக்கவேண்டியது. அதற்கு ஆசிரியரின் தனிப்பட்ட நல்லொழுக்கப்பண்பும் மட்டுமல்லாது காலந்தோறும் சமுதாயத்திற்கு உதவக்கூடியவகையில் அமைந்த விழுமியகுணங்களும் முன்மாதிரி நடத்தைகளும் இன்றியமையாதவை.

ஆசிரியர்-மாணவர் உறவென்பது ஆண்டான்-அடிமை உறவல்ல.அதுவொரு நல்ல கருத்துப் பரிமாற்றம் உள்ளடக்கிய நட்புறவு.அதைப் போற்றிப் பேணிக்காத்தல் என்பது இருவரின் கடமையாகும். அப்போதுதான் வலியின்றிச் சுதந்திரமாக கல்வி மலரும். நாடும் நலமுடனும் வளமுடனும் ஒளிவீசித் திகழும்.

நன்றி : தினமணி
Labels: Article

FLASH NEWS: தொடக்கக்கல்வி செயல்முறைகள்- நாள்:21/8/16- சுற்றறிக்கை எண் 20- பணிவிடுவிப்பு சார்பு--ஈராசிரியர் பள்ளிகளில் மாறுதல் பெற்றவர்களை பதிலி ஆசிரியர் வந்த பின்தான் விடுவிக்கவேண்டும்

DSE PROCEEDING-2010-11 English Subject TRB Regularisation order

உள்ளாட்சி தேர்தல் 2016 - உள்ளாட்சி தேர்தல்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் தொடர்பாக தமிழ்நாடு மாநிலம் தேர்தல் ஆணையம் ஆணை




இயற்கை மருத்துவம்

உங்களுக்கு என்ன நோய்?

உங்கள் கம்ப்யூட்டரை வைரஸ் தாக்கிவிட்டதா?

உங்கள் மொபைல் பேட்டரியை பராமரிக்க சில டிப்ஸ்

உங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா என்பதை அறிந்து கொள்வது எப்படி?

உணவு சாப்பிட்டவுடன் செய்யக்கூடாதவை

உறவுகள் மேம்பட A to Z

உலகில் மிகப் பெரியவை எவை?

எச்சரிக்கை! தங்கம் வாங்கினால் ஹால்மார்க் முத்திரையை மட்டும் பார்க்காதீர்கள்..!

21/8/16

DIET-SENIOR LECTURERS –PG-TRB-ENGLISH-IMPORTANT STUDY MATERIALS BY PART-1

எஸ்எம்எஸ்., மூலம் வருமான வரி விபரம்

புதுடில்லி: வருமான வரி செலுத்துபவர்களுக்கு, மாதந்தோறும் தங்களின்சம்பளத்தில் இருந்து கழிக்கப்படும் வரிதொகை குறித்த தகவலை எஸ்எம்எஸ்மூலம் தெரிவிக்கும் முறை விரைவில் அறிமுகம்
செய்யப்பட உள்ளது. 
வரி செலுத்துவோர் மற்றும் வருமான வரித்துறையினரிடையேநல்லுறவை ஏற்படுத்துவதற்காகவும், வரி செலுத்துவோருக்கு ஏற்படும்இடையூறுகளை போக்குவதற்காகவும் இந்த முறை அறிமுகம்செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இன்னும்ஒன்று அல்லது 2 மாதங்களில் இதற்கான திட்டம் தயார்செய்யப்பட்டு விடும் என மத்தியநேரடி வரித்துறை கழக தலைவர் ராணிசிங் நாயர் தெரிவித்துள்ளார்.

மேலும்அவர் கூறுகையில், நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யும்வருமான வரியை செலுத்துவதில்லை எனநிறைய புகார்கள் வருகின்றன. இத்தகைய குழப்பத்தை சரிசெய்வதற்காகவே எஸ்எம்எஸ் மூலம் தகவல் அனுப்பும்முறை கொண்டு வரப்பட உள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் பணியாளர்களுக்கு அவர்கள்சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும்வருமான வரித் தொகை, வருமானவரித்துறையிடம் போய் சென்றதா, இல்லையாஎன தெரிவிக்கப்படும். ஒருவேளை வரித் தொகைசெலுத்தப்படவில்லை என்றால் உங்கள் நிறுவனத்திடம்உடனடியாக கேட்டு விடலாம் என்றார்.

பெண் குழந்தைகளுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய விஷயங்கள்!!

1. நன்றாகயோசித்துப் பார்த்தால் வயது வந்த மகளுடன்தந்தையர் செலவிடும் நேரம் குறைவு. முக்கியமானவிஷயங்களை கேட்டறிய வேண்டும். அவர்கள் நம்முடன் பேசும்போதுநிறைய விஷயங்கள் தெரிய
வரும்.
2. உங்கள்மகளுடைய நட்பு வட்டத்தைப் பற்றிதெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள். நட்பு வட்டத்தில் தினமும்என்ன நடக்கிறது என்று கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள். நமது நண்பர்களையே யார் நல்லவர் யார்கெட்டவர் என்று ஆராயும்போது மகள்யாருடன் பழகுகிறாள் அவர்களுடைய நடத்தை எப்படி என்றுதெரிந்துகொள்வது முக்கியம் அல்லவா?

3. கல்வியின்முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லுங்கள். கல்வியில் அவருடைய சந்தேகங்களை கேட்டுவிளக்கம் கொடுங்கள்.

4. ஆண்களைப்பற்றிசொல்லுங்கள். ஆண்களின் குணங்கள், அவர்களால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை விளக்குங்கள். நல்லவர்களை எப்படி அடையாளம் காண்பதுஎன்று விளக்குங்கள்!

5. வாழ்க்கையைப்பற்றி உங்கள் மகளிடம் பேசுங்கள். வாழ்க்கையில் என்னவாக விரும்புகிறார்? என்பதைகேளுங்கள். உரிய அறிவுரையுடன் நீங்கள்அவருக்கு உதவுவது எப்படி என்றுதிட்டமிடுங்கள்.

6. கடை, ஷாப்பிங் என்று அழைத்துச்செல்லுங்கள். பெண்கள் அந்தஇடங்களில் எப்படி நடந்து கொள்கிறார்கள், ஆண்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதைஅவர் அறியட்டும். பொது இடங்களில் கடைப்பிடிக்கும்நாகரீகம், எப்படி உடை அணிகிறார்கள்என்பதை அவருக்கு சொல்லிக்கொடுங்கள்.

7. பெண்களென்றால்வீட்டில்தான் சாப்பிடுவார்கள் என்றில்லை. வித விதமாக நாம்உண்பதைப்போல் மகளுக்கும் சிறந்த உணவகங்களுக்கு அழைத்துச்செல்லுங்கள். உணவு வகைகளை ருசிக்கும் அதேநேரம்உணவக பழக்கங்கள், எப்படிப் பரிமாறுகிறார்கள் என்ற விஷயமெல்லாம் தெரிந்துகொள்ளட்டும்.

8. நீங்கள்எவ்வளவுதூரம் உங்கள் மகளை நம்புகிறீர்கள், அவரைப்பற்றி எப்படி பெருமைப்படுகிறீர்கள், அவர் உங்களுக்குஎவ்வளவு முக்கியமான நபர் என்பதை அடிக்கடிஉணர்த்துங்கள். இது அவர்களுக்கு தன்னம்பிக்கையையும்மன உறுதியையும் கொடுக்கும்.

9. குடும்பத்தைப்பற்றி உங்கள் மகளிடம் எடுத்துச்சொல்லுங்கள். குடும்ப வரலாறை அவர் அறியட்டும். முன்னொர்களின் சிறப்புக்களையும் பற்றி அவர் தெரிந்துகொள்ளட்டும் .

10. உங்கள்வரலாற்றையும் கொஞ்சம் சொல்லுங்கள். நீங்கள்எப்படி, எங்கு படித்தீர்கள், உங்கள்இளமைக்காலம், உங்கள் பொழுது போக்குகள், நீங்கள் எப்படி இந்த நிலைக்குவந்தீர்கள், உங்கள் குடும்பம் அடையவேண்டிய இலக்கு ஆகியவற்றை அவருக்குதெளிவாக சொல்லுங்கள்.

11. புத்தகங்கள்படிக்கும் பழக்கத்தை இளம் வயதிலேயே பழக்கப்படுத்துங்கள். வீட்டில் புத்தகங்களை சேர்த்து சிறு நூலகமாக உருவாக்குங்கள். நூலகங்களிலிருந்து நல்ல நூல்களைக் கொண்டுவந்துகொடுங்கள்.

12. உடலளவிலும்மனதளவிலும் பலசாலியாக உருவாக்குங்கள். எந்த மாதிரி பிரச்சினைகள்வெளியுலகில் வரும் அதை எப்படிசமாளிப்பது என்று சொல்லிக்கொடுங்கள்.

13. இன்றையஉலகம் இயந்திரமயம். அடுத்தவர் கையை சிறு பிரச்சினைகளுக்கெல்லாம்எதிர் பார்க்க முடியாது. ஆண்கள்வரவேண்டும் என்று காத்திருக்கவும் கூடாது. வீட்டில் ஃபியூஸ் போடுவது போன்றசிறு சிறு வேலைகளைக் கற்றுக்கொடுங்கள்.


14. இவைஎல்லாவற்றையும் விட நீங்கள் ஒருஉதாரணமான வாழ்க்கை வாழுங்கள். உங்களைப் பற்றி உங்கள் மகள்பெருமைப்படட்டும். உங்கள் மனைவியை மதியுங்கள். உங்கள் மனைவி எப்படி உங்களைநடத்துகிறாரோ அதைத்தான் உங்கள் மகளும் தன்கணவனிடம் செயல்படுத்துவாள் !

கற்பித்தல் தவிர வேறு பணி கூடாது : ஆசிரியர்களுக்கு தடை

'பாடம்நடத்துவதை தவிர வேறு பணிகளில், ஆசிரியர்களை ஈடுபடுத்தக் கூடாது' என, மத்தியஅரசு எச்சரித்துள்ளது. அரசு மற்றும் தனியார்பள்ளிகளில் கற்பித்தல் பணி தவிர, நிர்வாகம்சார்ந்த பல பணிகளிலும் ஆசிரியர்கள்ஈடுபடுத்தப்படுகின்றனர். தமிழகத்தில், அரசு பள்ளி
ஆசிரியர்கள்வாக்காளர் கணக்கெடுப்பு, ஜாதி வாரி கணக்கெடுப்பு, மக்கள்தொகை கணக்கெடுப்பு, தேர்தல் பணி, அரசின்நலத்திட்டங்களை செயல்படுத்துதல், மாணவர்களுக்கு அரசின் இலவசங்களைப் பெற்றுவழங்குதல் போன்ற பணிகளையும் செய்கின்றனர்.

'தேர்தல்சார்ந்த பணிகள், மக்கள்தொகை கணக்கெடுப்புமற்றும் பேரிடர் மீட்பு பணிகள்தவிர, கற்பித்தல் அல்லாத பணிகளில் ஆசிரியர்களைபயன்படுத்தக் கூடாது' என, கட்டாயகல்வி உரிமை சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. 'இதை, பள்ளிகள் முறையாக கடைபிடிக்க வேண்டும்' என, மனிதவள மேம்பாட்டு துறைஇணை அமைச்சர் உபேந்திர குஷ்வாஹா, பார்லிமென்டில் தாக்கல் செய்த அறிக்கையில்தெரிவித்து உள்ளார்.

DSE ; BT TO PG PANEL FINAL AS ON TODAY ( 20/08/2016) RELEASED

மின் வாரிய தேர்வு 'ஹால் டிக்கெட்' வெளியீடு.

மின் வாரியம், உதவியாளர்உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப, எழுத்து தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்டை' வெளியிட்டு உள்ளது.இதுகுறித்து, மின்
வாரிய செய்திக் குறிப்பு:


  இளநிலை உதவியாளர் - கணக்கு, நிர்வாகம்; தொழில்நுட்ப உதவியாளர், களப்பணி உதவியாளர் உள்ளிட்டபதவிகளுக்கான எழுத்து தேர்வு, இம்மாதம், 27 மற்றும், 28ம் தேதி நடக்கிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தோர், 'ஹால்டிக்கெட்டை'www.tangedcodirectrecruitment.inஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம்செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 044 - 2235 8311, 2235 8312 என்ற தொலைபேசி எண்ணில்தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.