யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

26/8/16

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் தேர்ச்சி அனுமதி மாதிரி படிவங்கள் (PDF-FILE)

*.5+ மாணவர்கள் பெயர் பட்டியல்...

#கல்வியின் நிலை இன்று!



"இன்றைய மாணவர்களின் பிரச்சனைகளை உணர்ந்து அவர்களுக்கு
தூண்டுகோலாக இருக்க வேண்டிய ஆசிரியர் மற்றும் பெற்றோர்களே
இன்றைய கல்விமுறையின் தூண்டிலில் சிக்கியுள்ளனர்.என்றால்
அது மிகையாகாது.
ஆம்,
'மதிப்பெண்"எனும் மாயை வலையில் சிக்கி அதற்காக மாணவர்களை
கசக்கி எடுக்கிறார்கள்.

#இன்றைய மாணவர்களின் பிரச்னைகள்!

       *பெருபாலான ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மாணவர்களை அந்தகாலத்தில் நாங்க எல்லாம் எப்படி படிப்போம் தெரியுமா?
என்று கேள்வி கேட்டே கொல்கிறார்கள்.

        அன்றைய சூழல் வேறு என்பதை மறந்து,
    அன்று,
 நான் விளக்கொளியில் படித்து இன்று பெரிய பதவியில்
இருக்கிறேன்.என்று சொல்லும் நீங்கள்,
   
     இன்றைய மாணவர்களின் பிரச்சனையை உணராதது தான்
பெரும்  பிரச்சனையே!

      *அன்று நீங்கள் படிக்கும் காலத்தில் மின்சார வசதி இல்லாமல் இருந்திருக்கலாம்,ஆனால்

    இன்று அந்த மின்சார வசதி உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் கிடைத்திருக்கலாம்,
       மின்சாரவசதி கிடைத்தும் படிக்கவில்லை என்று கூறும்
நீங்கள் அந்த வசதியே அவனுக்கு பெரும் இடையூராக உள்ளது
என்பதை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள்.

    *இன்று அறிவியல் துறையின்  அபரீத  வளர்ச்சியால் தொலைக்காட்சி,செல்பேசி,இணையம்,மற்றும் பல தகவல் தொடர்பு வளர்ச்சியின் காரணமாக

       *ஒரு மாணவன் தகவல்களை சேகரிப்பது மட்டும் கல்வியாக இருந்தால் அவனுக்கு ஆசிரியரே தேவையில்லை.

* விவேகானந்தரின் கூற்றுப்படி,
கல்வியின் சாரம் மன ஒருமைப்பாடே தவிர,
வெறும் தகவல்களைச் சேகரிப்பதல்ல...

      அவனை மீட்டு எடுக்க வேண்டிய ஆசிரியர்களே
தொலைக்காட்சியால் அவனையே அவன் தொலைக்கிறான் என்பதையும்,செல்லிடபேசியால் அவன் செல்கள் செயல் இழக்கின்றன
என்பதை உணர்த்தாமல் பெரும்பாலான ஆசிரியர்கள் மாணவர்களை
குறைக்கூறுவதையே பெரும் குறையாக வைத்துள்ளனர்.
  அதற்கு அவர்கள்
              கூறும் காரணங்கள் "எதுவாக"இருந்தாலும்-அது
              மாணவர்களுக்கு "ஏதுவாக" இல்லை என்பதே
என் வருத்தம்.        

குழந்தைகளுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை
உருவாக்குவதை விட, மகிழ்ச்சியான
நிகழ் காலத்தைத் தருவது நம் கடமை!
என்பதை மறுக்காமலும், மறக்காமலும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

#நமது கல்விமுறை

*இன்றைய கல்வி முறையின் அவல நிலை?

*வெறும் எண்ணிக்கையால் உயர்ந்ததில்ல "வாழ்க்கை"
நல்லெண்ணங்களால் உயர்ந்ததே "வாழ்க்கை"..

   . என்பதை சொல்ல மறந்த இன்றைய கல்வி முறையால் ஆசிரியர்கள் வெறும் "calculator" ராக மாறிவிட்டன இவர்களின் பார்வையில் மாணவர்கள் ஒரு புள்ளி விவரங்களாகவே உள்ளனர்.
இது 95, இது 90, இது 80, இது 60,இது தேராது....
இத மாத்தி சொல்லணும் என்றால் A1,A2,B1,B2,C1,C2
D, E1,E2 GRADE -இவ்வாறாக அடையாளும் காணும்

கல்வியால் என்ன பயன்?

ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்?

             #நமது கல்விமுறை 100% தகவல்களை அளிப்பதாகவே இருக்கிறது.
                     அது ஒரு தூண்டுகோலாக,ஊக்கம் கொடுப்பதாக இல்லை ஊக்குவிப்பவர் இல்லையென்றால்,ஒரு மனிதன் அவனுடைய
எல்லைகளை தாண்டி உயர முடியாது.
வெறும் தகவல் தேவை என்றால்,
 ஓர் ஆசிரியர் சிறந்தவராக இருக்க முடியது.
புத்தகங்களும்  ,இணையத்தளமும் இந்த வேலையை
இன்னும் சிறப்பாக செய்யும்.

      #ஓர் ஆசிரியரின் பங்கு,ஒரு மாணவனை கற்க தூண்டுவதாக
இருக்க வேண்டும்.அறிவுக்கான தாகத்தை உருவாக்குவதாக இருக்க வேண்டும்.அப்போது தான் ஆசிரியரின் பங்கில் ஏதாவது பொருள் இருக்கும்.
                  -சத்குரு            

ஆசிரியர்-மாணவர் உறவு மேம்பட!

இன்றயை மாணவர்களின் பிரச்சனை!

இன்று நேரத்தை மாணவர்கள் "useless" ஆக பயன்படுத்துவதற்கும்,

"usedless" ஆக பயன்படுத்துவதற்கும்,

வாய்ப்புக்கள் அதிகம் என்பதை உணர்த்தும் வகையில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாடம் போதிக்க வேண்டும்.

என்னை பொறுத்தவரை ஒரு நல்ல ஆசிரியர், என்பவர் வகுப்பறையில் பாடம் கற்பிக்கும் போது, தான் ஒரு முன்னாள் மாணவன் என்பதை மனதில் வைத்துகொண்டு பாடம் கற்பிக்க வேண்டும்!

ஒரு நல்ல மாணவன் என்பவர் பின்னாளில் தானும் ஆசிரியர் ஆகலாம் என்ற எண்ணத்தோடு பாடத்தை கற்க வேண்டும்!

#யார் சிறந்த ஆசிரியர்?

சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிகொள்பவர்கள்- சாதரணமானவர்கள்!
சூழ்நிலையை தனக்கு சாதக்கமாக பயன்படுத்திக்கொள்பவர்கள்-புத்திசாலிகள்!
சூழ்நிலையை தங்களுக்கு  ஏற்றவாறு மாற்ற நினைப்பவர்கள்-போராளிகள்!
சூழ்நிலையை தங்களுக்கு ஏற்றவாறு  மாற்றியவர்கள்-சாதனையாளர்கள்!  

இன்றைய கல்விமுறையால் ஆசிரியர்-மாணவர்-பெற்றோர் உறவில்
உள்ள சிக்கலுக்கான காரணம் புரிதல் இல்லாததே என்பதை என் மன நெருடலாக பதிவு செய்துள்ளேன்!  

   இந்த பதிவு ஆசிரியர்-மாணவர்-பெற்றோர்  உறவை மேம்படுத்த உதவும்
என்ற நமிக்கையோடு!

   உங்கள் வாத்தியார் நண்பன்
        அருள் .பி.ஜி

தடய அறிவியல் பணி: விண்ணப்பிக்க 3 நாளே அவகாசம்

இளநிலை அறிவியல் அதிகாரி பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்னும் மூன்று நாட்களே அவகாசம் உள்ளது.தமிழக அரசின், தடய அறிவியல் துறையில் காலியாக உள்ள, 30 இளநிலை தடய அறிவியல் அதிகாரி பணியிடங்கள், நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. 
இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் குற்றவியலில், முதுநிலை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், அக்., 16ல் எழுத்து தேர்வை நடத்துகிறது.இதற்கு, ஜூலை, 29ம் தேதி, விண்ணப்ப பதிவு துவங்கியது. வரும், 28ம் தேதியுடன் விண்ணப்பங்களை பதிவு செய்யும்அவகாசம் முடிகிறது. விடுபட்ட பட்டதாரிகள், மூன்று நாட்களில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆதிதிராவிடர் பழங்குடியினர் விடுதிகள்: காலியாகவுள்ள சமையலர் பணிக்கு செப். 9-க்குள் விண்ணப்பிக்கலாம்.

ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை கீழ் செயல்பட்டுவரும் விடுதிகளில் காலியாகவுள்ள சமையலர் பணியிடங்களுக்கு செப்டம்பர் 9-க்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.இது குறித்த விவரம்: 
சென்னை மாவட்டத்தில் காலியாகவுள்ள ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கிவரும் விடுதிகளில் சமையலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்காக, நேர்காணல் மூலம்தகுதியுள்ள ஆண், பெண் இருபாலரும் நியமிக்கப்பட உள்ளனர். இந்தப் பணியிடத்துக்கு சம்பளமாக ரூ.4800-10,000, தர ஊதியமாக ரூ.1,300 அளிக்கப்பட உள்ளது.இதற்காக, சென்னை மாவட்டத்தில் வசித்து, 18 முதல் 35 வயதுக்குட்பட்டவராக இருக்கவேண்டும். அதோடு, சைவ, அசைவஉணவு சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும். மேலும், தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்த, ஆதிதிராவிடர், அருந்ததியினர் மற்றும் பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம்.இதற்கென, உரிய தகுதிகளுடன் விடுதிகளில் சமையலர் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் பெயர், தந்தை-கணவர் பெயர், பாலினம், பிறந்த தேதி, அஞ்சல் முகவரி, கல்வித் தகுதி, சாதி உள்ளிட்டவையோடு, முன்னுரிமை விவரம் (மாற்றுத் திறனாளி, விதவை, முன்னாள் ராணுவத்தினர், கலப்பு திருமணம், மொழிப்போர் தியாகி போன்றவை) அளித்திட வேண்டும்.

அத்துடன், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருப்பின், அதன் பதிவு எண், குடும்ப அட்டை எண், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்கள், இருப்பிடச் சான்று ஆகிய விவரங்கள், உரிய சான்று நகல்களுடன், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 2-ஆவது தளத்தில் இயங்கும் சென்னை மாவட்ட ஆதி திராவிடர், பழங்குடியினர் நல அலுவலகத்தில் செப்.6-ஆம் தேதியன்றுமாலை 5 மணிக்குள் நேரில் அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரா.அழகுமீனா தெரிவித்துள்ளார்.

சிறுபான்மை மாணவர் உதவித்தொகை விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்.

சிறுபான்மையின மாணவர்கள், கல்வி உதவித்தொகை பெற, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம், ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும், முஸ்லிம், கிறிஸ்துவ, பார்சி, ஜெயின், புத்த மற்றும் சீக்கிய இனத்தைச் சேர்ந்த சிறுபான்மையின மாணவர்களுக்கு, 1ம் வகுப்பு முதல், ஆராய்ச்சி படிப்பு வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மாணவ, மாணவியர், http://scholarships.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி தேதி, ஆக., 31 என, அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது, செப்.,30 வரை, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம் என, ஒரு மாத அவகாசம் தரப்பட்டுள்ளது

பி.ஏ.பி.எட்., - பி.எஸ்சி.பி.எட்., புதிய பாடப்பிரிவு : கல்வியியல் கல்லூரிகளில் இந்தஆண்டு அறிமுகம்.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையால், ஒருங்கிணைந்த நான்காண்டு படிப்பாக, பி.ஏ.பி.எட்., மற்றும் பி.எஸ்சி.பி.எட்., பாடப்பிரிவுகள் இந்த ஆண்டு முதல், கல்வியியல் கல்லுாரிகளில் அறிமுகப்படுத்தப்படும்,'' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.சட்டசபையில், 110 விதியின் கீழ் அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
●பொறியியல் மாணவர்கள், இந்திய பொறியியல் பணித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக, சென்னை, தர்மபுரி, கோவை, திருச்சி, திருநெல்வேலி மாவட்டங்களில், 10 லட்சம் ரூபாய் மதிப்பில் பயிற்சி மையங்கள் நிறுவப்படும்

●ஆண்டுதோறும், 10 அரசு பொறியியல் கல்லுாரிகளில் படிக்கும், 100 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, 15 நாட்கள் தொழில்நுட்பப் பயிற்சி பெற, வெளிநாட்டில் உள்ள பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர்; இத்திட்டம், 1.50 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்

●உலகப் புகழ் பெற்ற உயர்கல்வி ஆசிரியர்களின் சிறப்பு விரிவுரைகள் மற்றும் தொழிற்சாலைகளில் உள்ள சிறந்த நிபுணர்களின் உரைகளை, மாணவர்கள் கேட்டு பயன் பெற, 'வீடியோ கான்பரன்ஸ்' ஒலி ஒளியக மையம், சென்னையில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில், 75 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்படும்

●மதுரையில் உள்ள, தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லுாரியில், பொருள் சேதமில்லா தரச்சோதனை பயிற்சி மையம், 1 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்; இங்கு, ஆண்டுக்கு, 100 பேருக்கு, செய்முறை பயிற்சி அளிக்கப்படும்

●கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம்; காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்பாக்கம் ஆகிய இடங்களில், தலா, 8 கோடி ரூபாய் செலவில், புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துவக்கப்படும்

●அனைத்து பல்கலை மற்றும் இணைவுக் கல்லுாரிகள், மேகக் கணினியத்தில் இணைக்கப்பட்டு, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு சேவை வழங்கும் மையம், 160 கோடி ரூபாய் செலவில், அண்ணா பல் கலையில் நிறுவப்படும்; இத்திட்டம், 3 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும்

●அண்ணா பல்கலையில், 50 கோடி ரூபாய் செலவில், மோட்டார் வாகன தொழில்நுட்ப மையம், மோட்டார் வாகன தொழில் நிறுவனங்களுடன் இணைந்து நிறுவப்படும். மேலும், 5,000 பேர் அமரும் வசதி கொண்ட, ஒரு பெருங்கூட்டரங்கமும், 50 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்

●அண்ணா பல்கலையில், சர்வதேச ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் பயிற்சி மையம், 50 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்

●தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலையின் மண்டல மையங்கள், விழுப்புரம் மற்றும் நீலகிரி மாவட்டங்களில், 12.50 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்

●தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையால், நான்காண்டு ஒருங்கிணைந்த பி.ஏ.பி.எட்., மற்றும் பி.எஸ்சி.பி.எட்., பாடப்பிரிவுகள், இந்த ஆண்டு கல்வியியல் கல்லுாரிகளில் அறிமுகப்படுத்தப்படும்

●மதுரை காமராஜர் பல்கலையில், நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் சிறந்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுடன் கூடிய, ஒரு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை, 5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். மாணவர்கள் நலன் கருதி, 7 கோடி ரூபாய் செலவில், உள் விளையாட்டரங்கம், நுாலகம் கட்டப்படும்.

சூரிய மின் ஒளி, நிலத்தடி நீர் சேமிப்பு திட்டம், 'வைபை' வசதி, 5 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.விடுதி மேம்பாட்டு பணிகள், 1 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு முதல்வர்அறிவித்தார்.

ஒரே நாளில் 3 தேர்வு: பட்டதாரிகள் குழப்பம்.

உயர் நீதிமன்றம், மின் வாரியம் மற்றும் தொழில்நுட்ப துறை தேர்வு என, ஒரே நாளில் மூன்று தேர்வுகள் நடக்கின்றன. இதனால், மூன்றுக்கும் விண்ணப்பித்தவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
மின் வாரியம் சார்பில் இளநிலை உதவியாளர், கள உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு, வரும், 27 மற்றும், 28ம் தேதிகளில் நடக்க உள்ளது.தமிழக தொழில்நுட்ப கல்வித்துறையின் சார்பில் தட்டச்சு தேர்வும், 27 மற்றும், 28ல் நடக்கிறது. அதே நாட்களில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., சார்பில், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் உதவியாளர், தட்டச்சர் பணியிடங்களுக்கும் தேர்வு நடக்கிறது.இந்த மூன்று தேர்வுகளுக்கும், பலர் விண்ணப்பித்துள்ளனர். இதனால், எந்த தேர்வை எழுதுவது என தெரியாமல், தேர்வர்கள் தவிக்கின்றனர்.

இதுகுறித்து தேர்வர்கள் கூறியதாவது: மின் வாரிய தேர்வு பல மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கல்வித்துறை தேர்வும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால், டி.என்.பி.எஸ்.சி., தேர்வு தான் மிக குறுகிய காலத்தில் அறிவித்து நடத்தப்படுகிறது.டி.என்.பி.எஸ்.சி.,யை பொறுத்தவரை, மற்ற துறைகளின் தேர்வுகளை கணக்கிடாமல், தேர்வு தேதியை குழப்பமாக அறிவிப்பது தொடர்கிறது. சில குறிப்பிட்ட துறைகள் தேர்வை அறிவித்து விட்ட நிலையில், அதேநாளில் டி.என்.பி.எஸ்.சி.,யும் தேர்வை அறிவிக்காமல் தவிர்த்தால், அது தேர்வர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ளஸ் 2வுக்கு செப்டம்பர், 8ல் காலாண்டு தேர்வு.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, செப்., 8 முதல், 23ம் தேதி வரை, காலாண்டு தேர்வுகள் நடக்கும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. 
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஆண்டு இறுதி பொதுத் தேர்வை போல, காலாண்டு, அரையாண்டு தேர்வுகளை, அனைவருக்கும் பொதுவான வினாத்தாளுடன் நடத்த, பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. செப்., 8ல், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, காலாண்டு தேர்வு துவங்குகிறது.

பிளஸ் 2வுக்கு, செப்., 8 முதல், 12 வரை, மொழி பாடங்களுக்கும்; மற்ற தேர்வுகள், செப்., 14 முதல், 23 வரையிலும் நடத்தப்பட உள்ளன. பத்தாம் வகுப்புக்கு, செப்., 8 முதல், 14 வரை மொழி பாட தேர்வுகளும்; மற்ற தேர்வுகள், செப்., 15 முதல், 23 வரையிலும் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

REPCO வங்கியில் கிளார்க் & அதிகாரிப் பணி

சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் ரெப்கோ வங்கியில் 75 ஜூனியர் அசிஸ்டன்ட், கிளார்க் மற்றும் புரபெசனரி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயதுவரம்பு: 01.08.2016-ஆம் தேதியின்படி 21 - 28,30க்குள் இருக்க வேண்டும்.

வயது வரம்பில் அரசு விதிகளின்படி தளர்வு அளிக்கப்படும்.60 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.08.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.repcobank.co.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

மத்திய அரசுத் துறைகளில் பல்வேறு பணி: யூபிஎஸ்சி அறிவிப்பு.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி.) தற்போது பல்வேறு அரசுத் துறைகளில் ஏற்பட்டுள்ள அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 146

பணி - காலியிடங்கள் விவரம்:

குடும்ப நலத் துறையில் பேராசிரியர் (ஸ்பெஷலிஸ்ட்– அனஸ்தீசியா) - 75மெடிசின் ஸ்பெஷலிஸ்ட் - 30இதேபோன்று வேளாண்மைத்துறை, வர்த்தகத்துறை, பாதுகாப்புத் துறை, மனிதவளத் துறை, மருத்துவகல்லூரி மருத்துவமனைகளிலும் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.அனஸ்தீசியா, மருந்து, பார்மகாலஜி, பிசியாலஜி, ரேடியோ டயக்னாசிஸ் போன்ற மருத்துவம் சார்ந்த படிப்பை முடித்தவர்களும், பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், கெமிக்கல், மெட்டலர்ஜிகல், ஐ.டி., டெக்ஸ்டைல், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் போன்ற பிரிவுகளில் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு:01.07.2016 தேதியின்படி கணக்கிடப்படும்.விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.upsconline.nic.in  என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.09.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.upsc.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

கோபத்தை தவிருங்கள்

குரூப்-4 பகுதி -6

குரூப் 4 பகுதி 7

காய்கறி வாங்குவது எப்படி?

எளிதாக உடல் எடையை குறைக்க முடியாது

உலர்ந்த திராச்சையின் மருத்துவ குணங்கள்

உணவு சாப்பிட்டவுடன் செய்யக்கூடாதவை

உங்களுக்கு என்ன நோய்

ஆள்காட்டி விரலில் வைக்கப்படும் அழியாத மையின் சுவையான வரலாறு

ஆபத்தான உணவுக் குழாய் கேன்சர்