"இன்றைய மாணவர்களின் பிரச்சனைகளை உணர்ந்து அவர்களுக்கு
தூண்டுகோலாக இருக்க வேண்டிய ஆசிரியர் மற்றும் பெற்றோர்களே
இன்றைய கல்விமுறையின் தூண்டிலில் சிக்கியுள்ளனர்.என்றால்
அது மிகையாகாது.
ஆம்,
'மதிப்பெண்"எனும் மாயை வலையில் சிக்கி அதற்காக மாணவர்களை
கசக்கி எடுக்கிறார்கள்.
#இன்றைய மாணவர்களின் பிரச்னைகள்!
*பெருபாலான ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மாணவர்களை அந்தகாலத்தில் நாங்க எல்லாம் எப்படி படிப்போம் தெரியுமா?
என்று கேள்வி கேட்டே கொல்கிறார்கள்.
அன்றைய சூழல் வேறு என்பதை மறந்து,
அன்று,
நான் விளக்கொளியில் படித்து இன்று பெரிய பதவியில்
இருக்கிறேன்.என்று சொல்லும் நீங்கள்,
இன்றைய மாணவர்களின் பிரச்சனையை உணராதது தான்
பெரும் பிரச்சனையே!
*அன்று நீங்கள் படிக்கும் காலத்தில் மின்சார வசதி இல்லாமல் இருந்திருக்கலாம்,ஆனால்
இன்று அந்த மின்சார வசதி உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் கிடைத்திருக்கலாம்,
மின்சாரவசதி கிடைத்தும் படிக்கவில்லை என்று கூறும்
நீங்கள் அந்த வசதியே அவனுக்கு பெரும் இடையூராக உள்ளது
என்பதை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள்.
*இன்று அறிவியல் துறையின் அபரீத வளர்ச்சியால் தொலைக்காட்சி,செல்பேசி,இணையம்,மற்றும் பல தகவல் தொடர்பு வளர்ச்சியின் காரணமாக
*ஒரு மாணவன் தகவல்களை சேகரிப்பது மட்டும் கல்வியாக இருந்தால் அவனுக்கு ஆசிரியரே தேவையில்லை.
* விவேகானந்தரின் கூற்றுப்படி,
கல்வியின் சாரம் மன ஒருமைப்பாடே தவிர,
வெறும் தகவல்களைச் சேகரிப்பதல்ல...
அவனை மீட்டு எடுக்க வேண்டிய ஆசிரியர்களே
தொலைக்காட்சியால் அவனையே அவன் தொலைக்கிறான் என்பதையும்,செல்லிடபேசியால் அவன் செல்கள் செயல் இழக்கின்றன
என்பதை உணர்த்தாமல் பெரும்பாலான ஆசிரியர்கள் மாணவர்களை
குறைக்கூறுவதையே பெரும் குறையாக வைத்துள்ளனர்.
அதற்கு அவர்கள்
கூறும் காரணங்கள் "எதுவாக"இருந்தாலும்-அது
மாணவர்களுக்கு "ஏதுவாக" இல்லை என்பதே
என் வருத்தம்.
குழந்தைகளுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை
உருவாக்குவதை விட, மகிழ்ச்சியான
நிகழ் காலத்தைத் தருவது நம் கடமை!
என்பதை மறுக்காமலும், மறக்காமலும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
#நமது கல்விமுறை
*இன்றைய கல்வி முறையின் அவல நிலை?
*வெறும் எண்ணிக்கையால் உயர்ந்ததில்ல "வாழ்க்கை"
நல்லெண்ணங்களால் உயர்ந்ததே "வாழ்க்கை"..
. என்பதை சொல்ல மறந்த இன்றைய கல்வி முறையால் ஆசிரியர்கள் வெறும் "calculator" ராக மாறிவிட்டன இவர்களின் பார்வையில் மாணவர்கள் ஒரு புள்ளி விவரங்களாகவே உள்ளனர்.
இது 95, இது 90, இது 80, இது 60,இது தேராது....
இத மாத்தி சொல்லணும் என்றால் A1,A2,B1,B2,C1,C2
D, E1,E2 GRADE -இவ்வாறாக அடையாளும் காணும்
கல்வியால் என்ன பயன்?
ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்?
#நமது கல்விமுறை 100% தகவல்களை அளிப்பதாகவே இருக்கிறது.
அது ஒரு தூண்டுகோலாக,ஊக்கம் கொடுப்பதாக இல்லை ஊக்குவிப்பவர் இல்லையென்றால்,ஒரு மனிதன் அவனுடைய
எல்லைகளை தாண்டி உயர முடியாது.
வெறும் தகவல் தேவை என்றால்,
ஓர் ஆசிரியர் சிறந்தவராக இருக்க முடியது.
புத்தகங்களும் ,இணையத்தளமும் இந்த வேலையை
இன்னும் சிறப்பாக செய்யும்.
#ஓர் ஆசிரியரின் பங்கு,ஒரு மாணவனை கற்க தூண்டுவதாக
இருக்க வேண்டும்.அறிவுக்கான தாகத்தை உருவாக்குவதாக இருக்க வேண்டும்.அப்போது தான் ஆசிரியரின் பங்கில் ஏதாவது பொருள் இருக்கும்.
-சத்குரு
ஆசிரியர்-மாணவர் உறவு மேம்பட!
இன்றயை மாணவர்களின் பிரச்சனை!
இன்று நேரத்தை மாணவர்கள் "useless" ஆக பயன்படுத்துவதற்கும்,
"usedless" ஆக பயன்படுத்துவதற்கும்,
வாய்ப்புக்கள் அதிகம் என்பதை உணர்த்தும் வகையில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாடம் போதிக்க வேண்டும்.
என்னை பொறுத்தவரை ஒரு நல்ல ஆசிரியர், என்பவர் வகுப்பறையில் பாடம் கற்பிக்கும் போது, தான் ஒரு முன்னாள் மாணவன் என்பதை மனதில் வைத்துகொண்டு பாடம் கற்பிக்க வேண்டும்!
ஒரு நல்ல மாணவன் என்பவர் பின்னாளில் தானும் ஆசிரியர் ஆகலாம் என்ற எண்ணத்தோடு பாடத்தை கற்க வேண்டும்!
#யார் சிறந்த ஆசிரியர்?
சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிகொள்பவர்கள்- சாதரணமானவர்கள்!
சூழ்நிலையை தனக்கு சாதக்கமாக பயன்படுத்திக்கொள்பவர்கள்-புத்திசாலிகள்!
சூழ்நிலையை தங்களுக்கு ஏற்றவாறு மாற்ற நினைப்பவர்கள்-போராளிகள்!
சூழ்நிலையை தங்களுக்கு ஏற்றவாறு மாற்றியவர்கள்-சாதனையாளர்கள்!
இன்றைய கல்விமுறையால் ஆசிரியர்-மாணவர்-பெற்றோர் உறவில்
உள்ள சிக்கலுக்கான காரணம் புரிதல் இல்லாததே என்பதை என் மன நெருடலாக பதிவு செய்துள்ளேன்!
இந்த பதிவு ஆசிரியர்-மாணவர்-பெற்றோர் உறவை மேம்படுத்த உதவும்
என்ற நமிக்கையோடு!
உங்கள் வாத்தியார் நண்பன்
அருள் .பி.ஜி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக