யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

26/8/16

ஆதிதிராவிடர் பழங்குடியினர் விடுதிகள்: காலியாகவுள்ள சமையலர் பணிக்கு செப். 9-க்குள் விண்ணப்பிக்கலாம்.

ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை கீழ் செயல்பட்டுவரும் விடுதிகளில் காலியாகவுள்ள சமையலர் பணியிடங்களுக்கு செப்டம்பர் 9-க்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.இது குறித்த விவரம்: 
சென்னை மாவட்டத்தில் காலியாகவுள்ள ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கிவரும் விடுதிகளில் சமையலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்காக, நேர்காணல் மூலம்தகுதியுள்ள ஆண், பெண் இருபாலரும் நியமிக்கப்பட உள்ளனர். இந்தப் பணியிடத்துக்கு சம்பளமாக ரூ.4800-10,000, தர ஊதியமாக ரூ.1,300 அளிக்கப்பட உள்ளது.இதற்காக, சென்னை மாவட்டத்தில் வசித்து, 18 முதல் 35 வயதுக்குட்பட்டவராக இருக்கவேண்டும். அதோடு, சைவ, அசைவஉணவு சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும். மேலும், தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்த, ஆதிதிராவிடர், அருந்ததியினர் மற்றும் பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம்.இதற்கென, உரிய தகுதிகளுடன் விடுதிகளில் சமையலர் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் பெயர், தந்தை-கணவர் பெயர், பாலினம், பிறந்த தேதி, அஞ்சல் முகவரி, கல்வித் தகுதி, சாதி உள்ளிட்டவையோடு, முன்னுரிமை விவரம் (மாற்றுத் திறனாளி, விதவை, முன்னாள் ராணுவத்தினர், கலப்பு திருமணம், மொழிப்போர் தியாகி போன்றவை) அளித்திட வேண்டும்.

அத்துடன், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருப்பின், அதன் பதிவு எண், குடும்ப அட்டை எண், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்கள், இருப்பிடச் சான்று ஆகிய விவரங்கள், உரிய சான்று நகல்களுடன், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 2-ஆவது தளத்தில் இயங்கும் சென்னை மாவட்ட ஆதி திராவிடர், பழங்குடியினர் நல அலுவலகத்தில் செப்.6-ஆம் தேதியன்றுமாலை 5 மணிக்குள் நேரில் அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரா.அழகுமீனா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக