யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

26/8/16

"க்ரீமி லேயர்' முறையை ஒழிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

நாட்டில் "க்ரீமி லேயர்' முறையை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்று தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினரும், பாமக இளைஞர் அணித் தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.

மண்டல் கமிஷன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஐக்கிய பிற்படுத்தப்பட்டோர் அமைப்பு சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற "சமூக நீதிக்கான உரிமைகள்' தொடர்பான கருத்தரங்கில் அவர் பேசியதாவது:


"இடஒதுக்கீடு' என்பது அரசியலமைப்பு நம் அனைவருக்கும் அளித்துள்ள உரிமை. ஆனால், சமூகம், கல்வி ரீதியாக இடஒதுக்கீடு அளிப்பதற்குப் பதிலாக பொருளாதார ரீதியாக இடஒதுக்கீடு அளிக்க நடைபெறும் முயற்சி அரசியலமைப்பு சாசனத்துக்கு எதிரானது. இதற்கு வகை செய்யும் "க்ரீமி லேயர்' முறையை முழுமையாக ஒழிக்க வேண்டும்.

இந்தியாவில் 1931-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் நடத்திய விசாரணையின் முடிவில் மண்டல் கமிஷன் அதன் அறிக்கையை 1981-இல் அளித்தது. அப்போதே பிற்படுத்தப்பட்டோர் 51-54 சதவீதமாகவும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் 20-22 சதவீதமாகவும் இருந்தனர்.

இத்தகைய சூழலில் இடஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பு 50 சதவீதமாக இருப்பதை ஏற்க முடியாது. அதற்குப் பதிலாக சுமார் 85 சதவீதம் வரையிலாவது இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். 1991-ஆம் ஆண்டுக்குப் பிறகு வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான பிரதிநிதித்துவம் போதுமானதாக இல்லை. இது தொடர்பாக மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றார் அன்புமணி ராமதாஸ்.து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக