- Home
- TET
- TRP
- TNPSC
- CCE
- Forms
- GO
- Results
- Teachers Profile Form
- NHIS CARD DOWNLOAD
- KNOW UR GPF,TPF STATUS
- ஆதார் எண்ணை பதிவு செய்வது எப்படி?
- CPS A/C SLIP ONLINE
- EMIS ஆன்லைனில் பதிவிடும் முறை
- EMIS TNSCHOOLS
- பொருள் வாங்காத குடும்ப அட்டை
- தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் தொகுப்பு
- தமிழில் எழுத
- பள்ளிகள் பற்றிய விவரங்கள்
- INCOMETAX INDIA
- தேசிய திறனறித் தேர்வு
- NMMS ON LINE ENTRY
- EMIS இணையதளம்
- தேசிய கல்வி உதவித் தொகை
- கல்விச் செய்திகள்
- தகவல் துளிகள்
- பொதுஅறிவுகட்டுரை
- உடல்நலம் மருத்துவம்
- சிந்தனை கதைகள்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.
Download
27/8/16
3 ஆசிரியர்களுக்கு சி.பி.எஸ்.இ., நல்லாசிரியர் விருது
தமிழகத்தில், மூன்று தனியார் பள்ளி ஆசிரியர்கள் உட்பட, 34 பேருக்கு, சி.பி.எஸ்.இ., நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை ஒட்டி, செப்., 5ம் தேதி, ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்நாளில், சிறந்த ஆசிரியர்களுக்கு, மத்திய, மாநில அரசுகள் தனித்தனியாக விருதுகள் அறிவிக்கின்றன.இதில், சி.பி.எஸ்.இ., விருது கள், நேற்று அறிவிக்கப்பட்டன. நாடு முழுவதும், 34 பேருக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட உள்ளன. தமிழகத்தில், சென்னை, அடையாறு இந்து சீனியர் செகண்டரிபள்ளி துணை முதல்வர் ஏ.காசி விஸ்வநாதன்; ஈரோடு மாவட்டம், திண்டல், வேளாளர் வித்யாலயா முதல்வர் ஏ.வி.புவனேஸ்வரி; சேலம் மாவட்டம், ஜாகிரம்மா பாளையம், செந்தில் பப்ளிக் பள்ளி முதல்வர் சி.சீனிவாசன் ஆகியோர், விருது பட்டியலில் இடம் பெற்று உள்ளனர்.
மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் அறுவை சிகிச்சைக்காக ரூ.270 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்.
மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் அறுவை சிகிச்சைகளுக்காக ரூ.270 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளதாக குடும்பநலத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை செம்மைப்படுத்துவதற் கான 2 நாள் கருத்தரங்கம் நேற்று மாமல்லபுரத்தில் தொடங்கியது.இம்மருத்துவ கருத்தரங்கில் பங்கேற்று சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது:
751 மருத்துவமனைகள்:
தமிழகத்தில் முதல்வரின் விரி வான மருத்துவக் காப்பீட்டு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரு கிறது. மருத்துவத் துறையில் ஒரு சிறந்த நகரமாக சென்னை விளங்கி வருகிறது. இங்கு சிகிச்சை பெறுவதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வருகின்றனர்.இதேபோல் தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மக்கள் உயர்தர சிகிச்சை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மருத்துவக் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது. இந்த விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் 1.58 கோடி பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தில் 159 அரசு மருத்துவமனைகள் உட்பட 751 மருத்துவ மனைகளில் இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது.இத்திட்டத்தை சிறப்பாக செயல் படுத்த அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள நிரந்தர வைப்பு நிதி ரூ.35 கோடியும், அறுவை சிகிச்சைகளுக்காக ரூ.270 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இந்தத் திட்டத்தை செம்மைப் படுத்தும் நோக்கில் மருத்துவர்கள், இன்சூரன்ஸ் நிறுவன அலுவலர் கள் மற்றும் பலர் பங்கேற்கும் இந்த 2 நாள் கருத்தரங்கம் நடைபெறுகிறது என்றார்.சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை செயலர் ஜெ.ராதா கிருஷ்ணன் பேசும்போது, “மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் ஏழை மக்கள் பயன்பெறுவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட வேண்டும்” என்றார்.இந்திய மற்றும் ஹோமியோபதி மருத்துவத் துறையின் ஆணையர் மோகன் பயாரி பேசும்போது, தமிழக அரசு விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் இந்திய மருத்துவ முறைகளையும் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இக்கருத்தரங்கில் பங்கேற்க வந்தவர்களை தேசிய சுகாதார இயக்கத்தின் திட்ட இயக்குநர் தார்ஸ் அஹமது வரவேற்றார். யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஏ.ஹோடா, எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கத்தின் திட்ட இயக்குநர் எஸ்.நடராஜன், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை சிறப்புச் செயலர் பி.செந்தில்குமார், தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழக மேலாண்மை இயக்குநர் அபூர்வா, தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணைச் செயலர் ராஜேஸ்வரராவ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

அரசுப் பள்ளிக்கு ஆசிரியர்கள் நியமனம்: மாணவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது.
தகொளத்தூர் அருகே அரசுப் பள்ளிக்கு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டதால், மாணவர்களின் போராட்டம் புதன்கிழமை முடிவுக்கு வந்தது.சேலம் மாவட்டம், கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம், கத்திரிப்பட்டியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் இரண்டு ஆண்டுகளாக ஆசிரியர்கள் இல்லை என்று கூறப்பட்டது.
இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது. இதுகுறித்து பெற்றோர்கள், கல்வித் துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆசிரியர்கள் இல்லாத பள்ளிக்கு தங்கள் குழந்தைகளை அனுப்பாமல் திங்கள்கிழமை முதல் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் புதன்கிழமை இரண்டு ஆசிரியர்களை நியமிக்க மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் ஒப்புதல் அளித்தார். மேலும் கூடுதலாக ஒரு ஆசிரியரை கிராம மக்களே நியமித்து கொள்ளத் திட்டமிட்டுள்ளனர். இதனால் கிராம மக்கள் போராட்டத்தைக் கைவிட்டு மாணவ, மாணவியரை பள்ளிக்கு அனுப்பிவைத்தனர்.

புதிய பள்ளி துவக்கம், தரம் உயர்வு : தமிழக அரசின் அறிவிப்புக்கு ஆசிரியர்கள் சங்கங்கள் வரவேற்பு.
மிழகத்தில் புதிதாக 5 தொடக்கப் பள்ளிகள் தொடங்குவது, பள்ளிகள் தரம் உயர்த்தப்படுவது உள்ளிட்ட அரசின் பல்வேறு அறிவிப்புகளை ஆசிரியர்கள் சங்கங்கள் வரவேற்றுள்ளன. அதேசமயம், பயோ மெட்ரிக் வருகை முறையை அனைத்து அரசுத்துறைகளுக்கும் கொண்டு வர வேண்டும் என்றுஆசிரியர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் 110 விதியின் கீழ் முதல்வர் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், நடப்பாண்டில் தமிழகத்தில் புதியதாக 5 தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும். 3 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 19 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும். தரம் உயர்த்தப்படும் பள்ளிகளுக்கு 95 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் புதிதாக தோற்றுவிக்கப்படும்.நடப்பாண்டில் ரூ.60 கோடியே 79 லட்சம் செலவில் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முதல்வரின் இந்த அறிவிப்பை ஆசிரியர் சங்கங்கள் வரவேற்றுள்ளதுடன், நன்றியும் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து, தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் செயலாளர் தாஸ் கூறியதாவது: முதல்வர் அறிவிப்பில் அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர் மாணவர் வருகை பயோ மெட்ரிக் முறையின் கீழ் கொண்டு வரப்படும் என்று அறிவித்துள்ளார். இது ஆசிரியர்களை குறிவைத்து செய்வதுபோல உள்ளது. இந்த முறையை அனைத்து அரசுத்துறைகளுக்கும் கொண்டு வர வேண்டும். பள்ளி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் பணியல்லாமல் பல பணிகள் கொடுக்கப்படுவதால், பயோ மெட்ரிக் முறை பொருத்தமாக இருக்காது.மேலும், தமிழகத்தில் 355 உதவி தொடக்க கல்வி அலுவலகங்களிலும், மாவட்ட தொடக்க கல்வி அலுவலகங்களிலும்உதவியாளர்கள் இல்லை. 1000 எழுத்தர் பணிகள் காலியாக உள்ளன.
இதனால் ஆசிரியர்கள் இலவச பொருட்களை எடுத்து செல்வது உள்ளிட்ட பல பணிகளை செய்கின்றனர். ஆதார் அட்டை தொடர்பான பணிகளையும், தேர்தல் ப ணிகளையும் செய்ய வேண்டியுள்ளதால் உரிய நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும். ஆசிரியர் நலனில் அக்கறை கொண்ட அரசு, நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும். 7வது ஊதியக் குழுவில் கூறப்பட்டதை நிறைவேற்ற முன்வர வேண்டும். இவ்வாறு தாஸ் தெரிவித்தார்.

NMMS - தேர்வு ஏன் எதற்கு என்பது குறித்த சின்ன விளக்கம்
பள்ளி மாணவ-மாணவிகளின் படிப்புக்கு உதவும் வகையில் மத்திய-மாநில அரசுகள் பல்வேறு கல்வி உதவித்தொகைகளை வழங்குகின்றன. ஒருபுறம் மாணவர்களின் பொருளாதார, சமூக நிலையைக் கருத்தில் கொண்டும், இன்னொரு புறம் தகுதி அடிப்படையிலும் கல்வி உதவித்தொகை (ஸ்காலர்ஷிப்) வழங்கப்படுகிறது.
_*தேசிய திறனாய்வுத் தேர்வு என்பது 10ஆம் வகுப்பு மாணவர்களுக்காக நடத்தப்படும் சிறப்புத் தேர்வு. இதில் தேர்ச்சிபெறும் மாணவர்களுக்கு மத்திய அரசு மாதந்தோறும் ரூ.500 கல்வி உதவித்தொகை வழங்குகிறது. ஆராய்ச்சிப் படிப்பு (பி.எச்டி.) வரை இந்த உதவித்தொகைகிடைக்கும்.
_இந்த தேர்வை 10ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களே எழுத முடியும். 9ஆம் வகுப்பு முழுப் பாடத்திட்டத்திலும், 10ஆம் வகுப்பில் நவம்பர் வரையிலான பாடத்திட்டத்திலும் (சி.பி.எஸ்.இ. தரம்) கேள்விகள் கேட்கப்படும்.
__முதலில் மாநில அளவில் ஒரு தேர்வும், அதில் தேர்ச்சி பெறுவோருக்கு தேசிய அளவில் இறுதித் தேர்வும் நடத்தப்படுறது. தமிழக அரசு நடத்தும் முதல் கட்டத் தேர்வு மூலம் 300 மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். தேசிய தேர்வில் மெரிட் பட்டியலில் முதல் ஆயிரம் இடங்களுக்குள் வந்துவிட்டால் உதவித்தொகை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இதில் தமிழகத்துக்கான ஒதுக்கீடு 40 இடங்கள். குறிப்பிட்ட மாநிலங்களில் தகுதியான மாணவர்கள் கிடைக்காதபட்சத்தில், அதிக மதிப்பெண் பெற்றுள்ள மற்ற மாநில மாணவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
__இத்தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் உள்ளிட்ட சர்வதேச பல்கலைக்கழகங்களில் மேற்படிப்பு படிக்க எளிதாக இடம் கிடைக்கும் என்பது இந்தத் தேர்வின் சிறப்பு அம்சம்

கூடுதல் ஆசிரியர்களை வடமாவட்டங்களுக்கு மாற்ற முடிவு ,ஆசிரியர்கள் பதற்றம் !
ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங், முடிவு கட்டத்தை எட்டியுள்ளது. வரும், 27ம் தேதி கட்டாய இடமாற்றம் நடக்கிறது; இதில், ஆசிரியர்கள், பல்வேறு மாவட்டங்களுக்கு அதிரடியாக மாற்றப்பட உள்ளனர். அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டுக்கு ஒருமுறை விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடக்கிறது.
கடந்த, 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டு கவுன்சிலிங்கில், முக்கிய காலியிடங்கள்
மறைக்கப்படாமல், ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். வரும், 27 முதல், 29ம் தேதி வரை, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், பணி நிரவல் எனப்படும், கட்டாய இடமாற்றம் செய்யப்படுகிறது.
அதிக அளவில்... : ஒவ்வொரு பள்ளியிலும், மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, இத்தனை ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்ற விகிதாச்சாரம் உள்ளது. அதையும் மீறி, சில மாவட்டங்களில், அதிகளவில் ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். அவர்களை கணக்கெடுத்து, ஆசிரியர் பற்றாக்குறை உள்ள மாவட்ட பள்ளிகளுக்கு மாற்றுவதே, பணி நிரவல் கலந்தாய்வு என, கூறப்படுகிறது.
அதன்படி, பள்ளிக் கல்வித்துறை எடுத்துள்ள பட்டியலில், 3,000 ஆசிரியர்கள் வரை, சில மாவட்டங்களில், கூடுதலாக பணியாற்றுவது தெரியவந்துள்ளது. எனவே, கூடுதல் ஆசிரியர் இடங்களை, ஆசிரியர் தேவைப்படும் பல்வேறு மாவட்ட பள்ளிகளுக்கு மாற்ற முடிவு செய்துள்ளனர். விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், தர்மபுரி போன்ற மாவட்டங்களில், காலியிடங்கள் அதிகமாக உள்ளன. எனவே, தென் மாவட்டங்கள் மற்றும் மத்திய மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள், வரும், 27ம் தேதி முதல், எந்த மாவட்டத்திற்கும் அதிரடியாக மாற்றப்படலாம்.
அதேநேரம், பள்ளிக் கல்வித் துறையில் அதிகமாக பணியாற்றும் தென் மாவட்ட ஆசிரியர்கள், எப்படியாவது, சொந்த மாவட்டம் அல்லது அதையொட்டிய பகுதிகளுக்கு செல்ல, அதிகாரிகளை அணுகியுள்ளனர். ஆனால், சிபாரிசு கூடாது என, அரசிடமிருந்து கண்டிப்பான உத்தரவு உள்ளதால், அதிகாரிகளுக்கு நெருக்கடியான நிலையும், ஆசிரியர்கள் மத்தியில் பதற்றமான சூழலும் ஏற்பட்டுள்ளது.

தொடக்கக்கல்வி - தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல் மற்றும்சமூகஅறிவியல் பாடங்களில் உயர்கல்வி தகுதி பெற்றால் மட்டுமே ,ஊக்க ஊதியம் மற்றும்பதவி உயர்வு வழங்கப்படும் - பிற பாடங்கள் படித்தால் ஊக்க ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்க கூடாது - இயக்குனர் செயல்முறைகள் (நாள்: 24/08/2016)
மாதச் சம்பளம் வாங்கும் அனைவருக்கும் பிஎஃப் கணக்கு என்பது நிச்சயம் இருக்கும். பிஎஃப் கணக்கில் தெரிந்து வைத்திருக்க வேண்டிய முக்கிய 10 விஷயங்கள் எவை என்பதை சென்னை மண்டல ஆணையர் எஸ்.டி. பிரசாத் விளக்குகிறார்.
நாமினி!
"முதலீடு செய்யும்போது நாமினி என்பது முக்கியமான விஷயம். பிஎஃப் முதலீட்டுக்கும் நாமினி என்பது மிகவும் முக்கியம். வேலைக்குச் சேரும்போது பலரும் திருமணம் ஆகாமல் இருப்பார்கள். அப்போது பெற்றோரின் பெயரை நாமினி யாகக் காட்டியிருப்பார்கள். ஆனால், திருமணத்துக்குப் பிறகு நாமினியின் பெயரை மாற்றுவது முக்கியம். அதேபோல, நாமினியாக நாம் காட்டியவர் திடீரென இறந்துவிட்டால் புதிதாக வேறு ஒரு நாமினியை உடனடியாக நியமிப்பது அவசியம். வேலைப் பார்க்கும் நிறுவனத்தின் மூலமாகவோ அல்லது நேரடியாக பிஎஃப் அலுவலகத்துக்கோ சென்று புதிய நாமினியை நியமிக்கலாம்.
பென்ஷன்!
பத்து வருடத்துக்கு மேல் ஒருவர் பிஎஃப் கணக்கில் தொடர்ந்து பணம் செலுத்தி யிருந்்தால் அவருக்கு பிஎஃப் பென்ஷன் கிடைக்கும். இந்த பென்ஷன் தொகையை 50 முதல் 58 வயதுக்குள் எப்போது வேண்டு மானாலும் திரும்ப வாங்கிக் கொள்ளலாம். 10 வருடத்துக்கு முன்பு வேலையை விட்டு நிரந்தரமாக விலகும்போது பென்ஷன் தொகை அட்டவணை D-யின்படி கிடைக்கும். இந்தத் தொகைக்கு வட்டி கிடையாது.
மேலும், 1.9.2014-க்கு பிறகு வேலைக்குச் சேர்ந்தவர்கள், மாதச் சம்பளம் 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வாங்குபவர் களுக்கு பென்ஷன் கிடையாது. பிஎஃப் செலுத்தும் தொகையில் அதிகபட்சமாக பென்ஷனுக்காக ரூ.1,249 பிடிக்கப்படும். இந்தப் பென்ஷன் தொகை பிஎஃப் உறுப்பினரின் ஆயுட்காலம் முழுவதும் வழங்கப்படும். பென்ஷன் காலத்தில் உறுப்பினர் இறந்துவிட்டால் அவரது வாரிசு தாரருக்கு இந்த பென்ஷன் தொகை கிடைக்கும்.
இடையில் பணம் எடுத்தல்!
பிஎஃப் தொகையை சில காரணங்களுக்கு மட்டும் இடையில் எடுக்க முடியும். இதற்கு குறைந்தபட்சம் 5 வருடம் பிஎஃப் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். அதாவது, பிஎஃப் உறுப்பினர், உறுப்பினரின் ரத்த உறவுகள், மகன்/மகளின் திருமணத்துக்கு, மருத்துவச் சிகிச்சை போன்றவற்றுக்குப் பணம் எடுக்கலாம்.
மேலும் வீடு வாங்கவும், வீட்டைப் புதுப்பிக்கவும் கடன் வாங்க முடியும். எந்தெந்த செலவு களுக்கு எவ்வளவு தொகை எடுக்க முடியும் என்பதை http://www.epfindia.com/site_en/WhichClaimForm.php இணைய தளத்தில் பார்க்கலாம்.
பிஎஃப் கணக்கை முடிப்பது!
பிஎஃப் கணக்கில் செலுத்தும் தொகை முழுவதும் இடையில் எடுக்க முடியாது. அதாவது, நிரந்தரமாக வேலையை விட்டுச் செல்லும்போதுதான் பணத்தை எடுக்க முடியும். 58 வயதுக்குமுன் சொந்த தொழில் செய்வதற்காக அல்லது மருத்துவ ரீதியான பிரச்னையினால் பணியிலிருந்து விலகும்போது, நிரந்தர ஊனம் ஏற்படும்போது, நிறுவனத்தை மூடும்போது பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை வெளியே எடுக்க முடியும்.
இன்ஷூரன்ஸ்! (Employees’Deposit-Linked Insurance Scheme)
பிஎஃப் உறுப்பினராக இருப்பவர்களுக்கு தொழிலாளர் வைப்பு சார் ஈட்டுறுதி காப்பீட்டுத் திட்டத்தில் கவரேஜ் கிடைக்கும். இதில் பணிக் காலத்தில் இறப்பு ஏற்பட்டால் இன்ஷூரன்ஸ் பாலிசியிலிருந்து க்ளெய்ம் பெற முடியும். இந்த பாலிசிக்கான பிரீமியத்தை நிறுவனம் செலுத்தி விடும். இந்த பாலிசியில் அதிகபட்சம் ரூ. 3.6 லட்சம் வரை கவரேஜ் கிடைக்கும். அனைத்து நிறுவனங்களும் இன்ஷூரன்ஸ் பாலிசி பிரீமியத்தைக் கட்டாயம் செலுத்த வேண்டும்.
அனைத்தும் ஆன்லைன்!
பிஎஃப் அமைப்பில் உள்ள பெரும்பாலான சேவைகளுக்கு ஆன்லைன் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் இ-பாஸ்புக், பிஎஃப் பேலன்ஸ் செக் செய்து கொள்வது, பிஎஃப் ஸ்டேட்மென்ட் எடுப்பது என அனைத்தும் ஆன்லைனிலேயே செய்து கொள்ள முடியும். மேலும், உங்களுடைய செல்போன் எண்ணைப் பதிவு செய்து வைத்தால், ஒவ்வொரு மாதமும் உங்களின் கணக்கில் பிஎஃப் தொகை வரவு வைக்கப்பட்டதற்கான குறுஞ்செய்தி வரும். http://www.epfindia.com/site_en/ என்ற இணையதளத்தில் அனைத்துச் சேவைகளும் கிடைக்கிறது.
எதற்கு எந்தப் படிவம்?
பிஎஃப் தொகையை வெளியே எடுப்பதற்கு, கடன் வாங்குவதற்கு என ஒவ்வொரு நடைமுறைக்கும் ஒரு படிவம் உள்ளது. அதாவது, பிஎஃப் வழங்கும் இன்ஷூரன்ஸ் பாலிசியின் கவரேஜ் தொகையைப் பெறுவதற்குப் படிவம் 5 சமர்பிக்க வேண்டும். பிஎஃப் கடன் வாங்குவதற்குப் படிவம் 31 உள்ளது. எதற்கு எந்தப் படிவம் என்பதை http://www.epfindia.com/site_en/WhichClaimForm.php இணையதளத்தில் பார்க்க முடியும். அதற்கான படிவத்தை http://www.epfindia.com/site_en/Downloads.php?id=sm8_index டவுன்லோடு செய்துகொள்ள முடியும்.
புகார் தெரிவிக்க!
பிஎஃப் தொடர்பான பிரச்னைக்கு, சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் இருந்து சரியான பதில் கிடைக்கவில்லை அல்லது வேலை பார்க்கும் நிறுவனத்தில் பிஎஃப் தொடர்பான பிரச்னை இருந்தால் அது குறித்து புகார் தெரிவிக்க முடியும். இந்தப் புகாரை கடிதம் மூலமாகவும் தெரிவிக்கலாம். அல்லது ஆன்லைனிலும் தெரிவிக்க முடியும். http://epfigms.gov.in/grievanceRegnFrm.aspx?csession=2b4n9lQYhr1& என்ற இணையதளத்தில் பிஎஃப் சம்பந்தமான புகார்களைத் தெரிவிக்க முடியும். ஆன்லைனில் புகார் தெரிவிக்கும்போது அந்தப் புகார் மீதான நடவடிக்கை அடுத்த 15 நாட்களுக்குள் எடுக்கப்படும். அப்படி நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனில் அடுத்தடுத்த அதிகாரிகளுக்கு அந்தப் புகார் செல்லும்.
டிடிஎஸ்!
பிஎஃப் கணக்கி லிருந்து பணத்தை வெளியே எடுக்கும்போது டிடிஎஸ் (TDS)செலுத்த வேண்டியிருக்கும். அதாவது, ஐந்து வருடத்துக்கு குறைவாகப் பணியாற்றி, வேலையை விட்டு நிரந்தரமாக விலகும்போது வெளியே எடுக்கும் பிஎஃப் தொகை 30 ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கு அதிகமாக இருந்தால், அந்தத் தொகைக்கு டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். இது 1.6.2015-லிருந்து நடைமுறையில் உள்ளது. டிடிஎஸ் குறித்த விரிவான கட்டுரையை படிக்க இங்கே செல்லவும்.
http://www.vikatan.com/personalfinance/article.php?aid=10541
நிரந்தரக் கணக்கு எண்!
பிஎஃப் அமைப்பு UAN(Universal Account Number) என்ற 14 இலக்க எண்ணை நிரந்தரக் கணக்கு எண்ணை வழங்கி உள்ளது. பணிக்காலத்தில் எத்தனை முறை வேலை மாறினாலும் இந்த எண்தான் பிஎஃப் நிரந்தர எண்ணாக இருக்கும். இந்த எண் ஒருவருக்கு ஒருமுறைதான் வழங்கப்படும். கேஒய்சி விதிமுறைகளைப் பூர்த்திச் செய்து தந்து இந்த எண்ணைப் பெற முடியும்.
இந்த எண்ணை நேரடியாக வாங்க முடியாது. பணிபுரியும் அலுவலகத்தின் மூலமாகவே வாங்க முடியும். இந்த எண்ணை http://uanmembers.epfoservices.in/uan_reg_form.php என்ற இணைய தளத்தில் கேட்கும் தகவல்களைத் தந்து ஆக்டிவேட் செய்து கொள்வது அவசியம்.
இதை ஆக்டிவேட் செய்யும் போது தரும் செல்போன் எண்ணை மாற்ற பிஎஃப் அலுவலகத்தின் உதவி தேவைப்படும். எனவே, உங்களின் நிரந்தரச் செல்போன் எண் கொடுத்து ஆக்டிவேட் செய்து கொள்வது நல்லது.”

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)