யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

31/8/16

உண்மையைத் தேடிய ஆசிரியர் - சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் செப்டம்பர் 5: ஆசிரியர் தினம்

உண்மையைத் தேடிய ஆசிரியர்

பேச்சாளர், எழுத்தாளர், தத்துவ அறிஞர், குடியரசுத் தலைவர், நிர்வாகி என்ற பன்முகத் தன்மைகளைத் தாண்டி ஆசிரியர்க்கெல்லாம் ஆசிரியர் என்று மதிக்கப்படுபவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். 
“உண்மையாக வாழ்தல் - எளிமையாக வாழ்தல் - களங்கமற்று இருத்தல் - உள்ளங்கனிந்திருத்தல் -மகிழ்வுடனிருத்தல் - கவலையையும் அபாயத்தையும் எதிர்த்து வாழ்தல் - வாழ்க்கையை நேசித்தல் - இறப்புக்கு அஞ்சாதிருத்தல் - அழகுக்காக உழைத்தல் - இறப்பின் துயர்களால் சூழப்படாதிருத்தல் - உலகம் தோன்றிய நாள் முதற்கொண்டு இவரைப் போன்று வாழ்ந்தவர்களும் இல்லை. வாழக் கற்றுத் தந்தவர்களும் இல்லை” என்று மகாத்மா காந்தி இவரைப் பற்றிக் கூறினார்.கல்வியையும் அறிவையும் ஞானத்தையும் வெவ்வேறு படிநிலைகளில் விளங்கவைத்த பெருமை ராதாகிருஷ்ணனுக்கு உண்டு. சிறிய அளவில் கடைப்பிடிக்கப்படும் மவுனத்துக்குக் கூட அறிவை அடுத்தகட்ட ஞானத்தை நோக்கி நகர்த்தும் வல்லமை உண்டு என்பதை அவர் வலியுறுத்தினார்.

உண்மையின் தேடல் ஒருபுறம், சமூக மேன்மையை நாடுதல் மறுபுறம் எனக் கல்விக்கு இரண்டு தன்மைகள் இருக்க வேண்டும். மனிதனின் ஆன்மிக ஆற்றலைச் செழுமைப்படுத்தும் பணியையும், தன்னம்பிக்கையுடன் கூடிய ஒத்திசைவையும் கல்வி வழங்கவேண்டும் என்றார். சர்வதேச மேடையில் இந்திய ஆசிரியர் 1908-ல் எம்.ஏ. படிப்புக்காக ராதாகிருஷ்ணன் சமர்ப்பித்த ‘தி எதிக்ஸ் ஆஃப் தி வேதாந்தா அண்ட் இட்ஸ் மெட்டாஃபிஸிக்கல் பிரீசபோஸிஷன்ஸ்' (‘The ethics of the Vedanta and its metaphysical presuppositions’) என்கிற ஆய்வேடு அவரது முதல் நூலாக வெளியானது. 1911-ல் சென்னை மாநிலக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் ஆனார். அவர் இந்தியத் தத்துவ வகுப்பெடுக்கும் முறையால் ஈர்க்கப்பட்டுப் பிற கல்லூரி மாணவர்களும் மாநிலக் கல்லூரிக்கு வந்து அவருடைய உரையை ஆர்வத்தோடு கேட்பார்கள். 1918 முதல் 1920 வரை மைசூர் பல்கலைக்கழகத்தில் தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றினார். 1920-ல் கல்கத்தா பல்கலைக் கழகத்துக்குப் பணியாற்றப் புறப்பட்டபோது அவர் அமர்ந்திருந்த குதிரை ரதத்தை அவருடைய மாணவர்களே பிரியத்துடன் இழுத்துச் சென்றனர். 1927-ல் ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டமளிப்பு விழாவில் உரை நிகழ்த்திய அவர் 1931-ல் அதன் துணைவேந்தரானார். 1936 முதல் 1938 வரையிலான மூன்று ஆண்டுகள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கீழ்த்திசைச் சமயங்கள் பிரிவில் பேராசிரியராகப் பணிபுரிந்தார். 1939-ல் வாரணாசிப் பல்கலைக்கழகத் துணைவேந்தரானார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கும் துணைவேந்தராக இருந்துள்ளார். கல்விக்கும் தேசத்துக்கும் வழிகாட்டி ஆசிரியரின் மகத்துவத்தை இந்தியச் சமூகம் உணரவைத்தவர் அவர். சமஸ்கிருத வாக்கியங்கள் விரவப் பெற்ற அவருடைய ஆங்கிலச் சொற்பொழிவுகள் கேட்பவரை ஈர்க்கும் காந்தத் தன்மை வாய்ந்தவை.

ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் அவர் ஆற்றிய உரையான ‘உலக நாகரிகத்தை வளர்த்ததில் தத்துவத்தின் பங்கு',லண்டன் - மான்செஸ்டர் பல்கலைக்கழகங்களில் ஆற்றிய உரைகள் ‘ஓர் இலக்கியவாதியின் பார்வையில் வாழ்க்கை' (An idealist view of life) என்ற தலைப்பில் நூல்களாக வெளிவந்தன. வேறுபாடுகளைத் திறந்த மனப்பான்மையோடு ஏற்றுக்கொள்வதே மக்களாட்சியின் மாண்பாகக் கருதிய அவர், ஜவஹர்லால் நேருவின் கோரிக்கையை ஏற்று இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவரானார். இதன் மூலம் அரசியல் சாராத, தத்துவப் பேராசிரியர் ஒருவர் முதன்முறையாக இப்பதவியில் அமர்ந்தார். தனது 21 வயதில் தத்துவப் பிரிவில் ஆசிரியப் பணியைச் சென்னை மாநிலக் கல்லூரியில் தொடங்கிய ராதாகிருஷ்ணனின் ஆசிரியப் பணியானது 40 ஆண்டுகள் நீண்டது. 1909 முதல் 1948 வரை மாணவர்களிடம் சர்வதேச அளவில் உரையாடிக் கொண்டே இருந்தவர். இன்று சர்வ பள்ளிகளிலும் பெருமளவு மறக்கப்பட்ட ஆளுமையான சர்வபள்ளிராதாகிருஷ்ணன் என்கிற அந்த அறிஞரின் பங்களிப்புகளும் செயல்பாடுகளும் இன்றைய இளம்தலைமுறையினருக்கு ஒரு மெய்யான சொர்க்கம்.

ஆசிரியர்களின் குறைகளுக்கு அந்தந்த மாதத்திலேயே தீர்வு காண வலியுறுத்தல்

NSPIRE AWARD 2016 - "ONLINE" - இல் பதிவிடும்முறை - வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு

TET Case Status : Listed on 13/09/2016

GRATUITY - பணிக்கொடை - *DCRG* அறிந்து கொள்ளுங்கள்

பணிக்கொடை (தமிழ்நாடு அரசு)
பணிக்கொடை என்பது அரசு/அரசு சார்ந்த ஊழியர் அல்லது ஆசிரியர் பணி ஓய்வின் போது அல்லது பணியில் இருக்கும் போதே காலமான போது அவ்வூழியருக்கு, ஊதியம் வழங்கும் நிறுவனம், ஊழியரின் பணியை பாராட்டும் விதமாக வழங்கும் ஒரு ஒட்டு மொத்தத் தொகையாகும்
. பணிக்கொடை ஊதியத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. இத்தொகை கணக்கிடுவதற்கு ஊழியரின் தகுதியான பணிக்காலமும் அவர் ஓய்வுபெறும்போது பெற்ற ஊதியமும் அடிப்படைகளாகக் கொள்ளப்படுகிறது [1].

SG.Tr TO BT TAMIL PROMOTION PANEL

மத்திய அரசில் 5550 ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய சுகாதார மிஷனில் 2016-ஆம் ஆண்டிற்கான 5550 ஆய்வக உதவியாளர், வார்டு பாய், பிசியோதெரபிஸ்ட், மருத்துவ உதவி, காசாளர் போன்ற பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம்: உத்தர பிரதேசம், தில்லி, ஜம்மூ மற்றும் காஷ்மீர், ஹரியானா மற்றும் பிற

30/8/16

FLASH NEWS : NATIONAL TEACHERS AWARD 2016 - WINNERS LIST FROM TAMILNADU

பணி நிரவல் செய்யப்பட்ட ஆசிரியை - தொடக்க கல்வி அலுவலகத்தில் தற்கொலை முயற்சி

சேலம் மாவட்ட தொடக்க கல்விஅலுவலகத்தில், ஆசிரியை, துாக்க மாத்திரை சாப்பிட்டு, மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் டவுனை சேர்ந்தவர்தனலட்சுமி, 42; சேலம், தேர்வீதி அரசுநடுநிலைப்
பள்ளியில், இடைநிலை ஆசிரியையாக பணிபுரிந்தார்.

ஆக., 13ம் தேதி, பள்ளிகளில் மாணவர்எண்ணிக்கை அடிப்படையில், உபரி ஆசிரியர் பணியிடங்கள்கணக்கெடுக்கப்பட்டு, பணி நிரவல் நடந்தது. இதில், காடையாம்பட்டி ஒன்றியத்தில் உள்ள பள்ளிக்கு, தனலட்சுமிபணி மாறுதல் செய்யப்பட்டார். அங்குசெல்ல விருப்பம் இல்லாததால், தன் பணி மாறுதல்உத்தரவை ரத்து செய்ய கோரிவந்தார்.

இந்த நிலையில், நேற்று, சேலம் மாவட்டதொடக்கக் கல்வி அலுவலகத்துக்கு வந்து, தன் உத்தரவை ரத்து செய்யவலியுறுத்தினார். அதற்கு வாய்ப்பு இல்லைஎன, அதிகாரிகள் கூறிய நிலையில், அங்கேயே, தர்ணா நடத்த முயன்றார். போலீசார்சமாதானப்படுத்தி, அவரை அனுப்பி வைத்தனர். பின், கழிப்பறை சென்று வந்த அவர், மாடிப்படி அருகில், திடீரென மயங்கி விழுந்தார். அவரை, சேலம் அரசு மருத்துவமனையில்சேர்த்தனர். அதில், பணி மாறுதலைரத்து செய்யாததால், துாக்க மாத்திரைகள் சாப்பிட்டதாக, தனலட்சுமி தெரிவித்தார். இது குறித்து, போலீசார்விசாரிக்கின்றனர்.


மாவட்டதொடக்கக்கல்வி அலுவலர் தங்கராஜ் கூறுகையில், ''பணி நிரவல் பட்டியல், ஏற்கனவேஅனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைத்தோம். அதில்குறைபாடு இருப்பின் தெரிவிக்கலாம் என, சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது. 100 சதவீதம், முறையாக பணி நிரவல்நடந்த நிலையில், தற்போது, அதை ரத்து செய்வதுசாத்தியமில்லை,'' என்றார்.

தமிழக அமைச்சரவையில் மாற்றம்: பள்ளிக் கல்வி அமைச்சராகிறார் மாஃபா பாண்டியராஜன்

தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது; பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக மாஃபாகே.பாண்டியராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநர் மாளிகையில் செவ்வாய்க்கிழமை(ஆக. 30) நடைபெறும்
நிகழ்ச்சியில் அமைச்சராக மாஃபா பாண்டியராஜன் பொறுப்பேற்றுக்கொள்கிறார்.

மேலும்அமைச்சர் சண்முகநாதனிடம் இருந்த பால்வளத் துறைஅமைச்சர் பொறுப்பு கே.டி.ராஜேந்திரபாலாஜியிடம் அளிக்கப்பட்டுள்ளது.
முதல்வர்ஜெயலலிதாவின் பரிந்துரையை ஏற்று, இந்த மாற்றங்கள்செய்யப்படுவதாக ஆளுநர் கே.ரோசய்யாதெரிவித்துள்ளார். இது குறித்து ஆளுநர்மாளிகை திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
பால் வளம்-பால் பண்ணைகள்மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்தஎஸ்.பி.சண்முகநாதன், அமைச்சரவையில்இருந்து விடுவிக்கப்படுகிறார். ஆவடி சட்டப் பேரவைத்தொகுதி உறுப்பினராக உள்ள கே.பாண்டியராஜன், பள்ளிக் கல்வி-விளையாட்டு-இளைஞர்நலத் துறை அமைச்சராக நியமிக்கப்படுகிறார்.
இலாகாக்கள்மாற்றம்:
அமைச்சரவையில்இரண்டு அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன. ஊரக தொழில்கள் துறைஅமைச்சராக இருந்த கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு, பால் வளம்-பால்பண்ணைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும், பள்ளிக்கல்வி-விளையாட்டு-இளைஞர் நலத் துறைஅமைச்சராக இருந்த பி.பென்ஜமினுக்குஊரகத் தொழில்கள் துறை பொறுப்பும் அளிக்கப்பட்டுள்ளது.
பதவியேற்புவிழா:
புதிய அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ள கே.பாண்டியராஜன், ஆளுநர்மாளிகையில் செவ்வாய்க்கிழமை (ஆக. 30) மாலை 4.35 மணிக்குநடைபெறும் நிகழ்ச்சியில் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொள்கிறார். அவருக்கு பதவிப் பிரமாணமும், ரகசியகாப்பு உறுதிமொழியையும் ஆளுநர் கே.ரோசய்யாசெய்து வைக்கிறார்.
பொறியியல்பட்டதாரி:
புதிய அமைச்சராக பொறுப்பேற்க உள்ள கே.பாண்டியராஜனின்சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம்விளாம்பட்டி ஆகும். 1959- ஆம் ஆண்டு ஏப்ரல்26- இல் பிறந்தார். பொறியியல் பட்டதாரியான அவர், எம்.பி.ஏ., பட்டமும் பெற்றுள்ளார். மனிதவள மேம்பாட்டு நிபுணராக இருக்கும் அவர், கடந்த 2011- 16 ஆம்ஆண்டில் தேமுதிக சார்பில் விருதுநகர்சட்டப் பேரவைத் தொகுதியில் இருந்துதேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதன் பின், அதிமுகவில் இணைந்தஅவர் கடந்த சட்டப் பேரவைத்தேர்தலில் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சட்டப் பேரவைத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
முதல் முறையாக மாற்றம்:

இரண்டாவதுமுறையாக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்த நிலையில், இப்போது முதல் முறையாக அமைச்சரவையில்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக, அமைச்சரவைவிரிவாக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசு நல்லாசிரியர் விருதுக்கு 534 பேர் தேர்வு

தமிழகத்தில்அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் 534 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அரசுமற்றும் அரசு உதவி பெறும்பள்ளிகளில் பணியாற்றும்
ஆசிரியர்களுக்கு 1960ம் ஆண்டு முதல்நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டு வந்தன.

பின்னர், இந்த விருது 1997ம் ஆண்டு முதல்டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டு ஆண்டுதோறும் செப்டம்பர் 5ம் தேதி வழங்கப்படுகிறது. ஆசிரியர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில்வழங்கப்படும் இந்த விருதுடன் முன்னதாகரூ.5 ஆயிரம் மற்றும் வெள்ளிப்பதக்கம், பாராட்டுப் பத்திரம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், இந்த ஆண்டு 534 பேருக்கு மேற்கண்ட விருது வழங்கப்பட உள்ளது. இந்த ஆண்டு விருது பெறுவோருக்குரூ.5 ஆயிரம் ரொக்கத்துக்கு பதிலாகரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்றுஅரசு அறிவித்துள்ளது. இதற்கு ஆசிரியர்கள் மத்தியில்வரவேற்பு உள்ளது.

இந்த ஆண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுகள்அரசுப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும்பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பணியாற்றும்ஆசிரியர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதற்கான பட்டியலைபள்ளிக் கல்வித்துறை தயாரித்து வருகிறது.


இன்று அல்லது நாளை இந்தபட்டியல் வெளியாகும் என்று தெரிகிறது. விருதுகள்செப்டம்பர் 5ம் தேதி சென்னைசாந்தோமில் உள்ள தனியார் பள்ளிஒன்றில் நடக்கும் விழாவில் வழங்கவும் பள்ளிக் கல்வித்துறை முடிவுசெய்துள்ளது.இந்த விழாவிற்கான அழைப்பிதழில்பள்ளி கல்வி துறை அமைச்சர் பென்ஜமின் பெயர் அச்சி டப்பட்டுஇருந்தது நேற்று இத்துறை அமைச்சர்மாற்றப் பட்டதால் தற்போது மாபா. பாண்டியராஜன்வழங்குவார்.

தொலைதூரக் கல்வி மையங்களுக்கு கடிவாளம் யு.ஜி.சி., புது உத்தரவு!

தொலைதுார கல்வி மையங்களில் முறைகேடுகள் நடக்காத வண்ணம், மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயன்படும் வகையில், 14 வகையான தகவல்களை இணையதளத்தில், 15 நாட்களுக்குள் வெளிப்படுத்த பல்கலை மானியக்குழு உத்தரவிட்டுள்ளது.
பல்கலை மானியக்குழு (யு.ஜி.சி.,) கட்டுப்பாட்டில் செயல்படும் கல்வி நிறுவனங்கள் பலவற்றில், தொலை துார கல்விமையம் செயல்பாட்டில் உள்ளது. தொலைதுாரகல்வி மைய செயல்பாட்டில் பல்வேறு வரையறைகள் உள்ளன.ஆனால், அனுமதி பெறாத பாடப்பிரிவுகளை நடத்துதல், அங்கீகாரம் புதுப்பிக்காமை, எல்லைகள் கடந்து தேர்வு மையம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு புகார்கள், தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு வருகின்றன.இதனால், யு.ஜி.சி., கட்டுப்பாட்டில் செயல்படும் பல்கலை, கல்வி நிறுவனங்களின் தொலைதுார கல்வி மையம் சார்ந்த முழுமையான தகவல்களை இணையதளத்தில் வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன் படி, பாடப்பிரிவுகள், அங்கீகார விபரங்கள், ஒருங்கிணைப்பாளர் விபரம், கல்வி நிறுவனங்களுக்குவரையறுக்கப்பட்டுள்ள எல்லைகள், கிளை மைய முகவரி, தேர்வு மைய விபரங்கள், புரிந்துணர்வு ஒப்பந்த விபரம், மாணவர்கள் சேர்க்கை, அங்கீகார கடித நகல், உள்ளிட்ட, 14 விபரங்களை கட்டாயம் வெளியிடவேண்டும் என கூறப்பட்டுள்ளது.மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து தகவல்களையும், 15 நாட்களுக்குள் கல்வி நிறுவனங்களின் இணைய தளத்தில் பதிவிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கை:புதிய விதிகள் உருவாக்க 2ம் தேதி கூட்டம்.

தனியார் மருத்துவ கல்லுாரிகளில், மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்க்க, புதிய விதிகள் உருவாக்குவதற்கான கூட்டத்தை, வரும், 2ம் தேதி, உயர் கல்வித்துறை நடத்துகிறது.

'நீட்' தேர்வு:
தனியார் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பில் சேர,இந்த ஆண்டு, 'நீட்' தேர்வு கட்டாயமாகியுள்ளது. நீட் தேர்வு முடிவு, கடந்த வாரம் வெளியான நிலையில், மாணவர் சேர்க்கை எப்படி, கட்டணம் எவ்வளவு என்ற குழப்பம் நீடித்து வருகிறது. தனியார் நிகர்நிலை பல்கலைகள், மருத்துவ கல்லுாரிகள் மாணவர் சேர்க்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின் இணைப்பில் உள்ள, தனியார் மருத்துவ கல்லுாரிகளில், மாணவர்களை எப்படி சேர்ப்பது, அதற்கான விதிகள் என்ன என்பதை முடிவு செய்ய, தமிழகஉயர் கல்வித்துறை மூலமாக, கமிட்டி அமைக்கப்பட்டுஉள்ளது.உத்தரவு:தமிழக தொழில்நுட்ப கல்வித்துறை அலுவலக அதிகாரிகள் குடியிருப்பில் உள்ள, உயர் கல்வி கட்டண கமிட்டி அலுவலக கட்டடத் தில், மருத்துவ விதிகள் கமிட்டியின் கூட்டம், செப்., 2ம் தேதி, பிற்பகல், 3:00 மணிக்கு நடக்கிறது. இதில், தனியார் மருத்துவ கல்லுாரிகள், சங்கங்கள் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என, தமிழக உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கட்டாய இடம் மாற்றத்தால் பயனில்லை:மாணவர்களுக்கு மீண்டும் திண்டாட்டம்

அரசு பள்ளிகளில், கூடுதலாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான கட்டாய இடம் மாற்றம் இன்று முடிகிறது. கூடுதல் ஆசிரியர்கள், வெளி மாவட்டங்களுக்கு மாற்றப்படாததால், பல பள்ளிகளில்ஆசிரியர் பற்றாக்குறை நீடிக்கிறது.அரசு பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரையிலான உயர்நிலைப் பள்ளிகளில், மாணவர்களின் விகிதத்தை விட, 2,500 பட்டதாரி ஆசிரியர்களின் அதிகம் இருப்பது தெரிய வந்தது.
இவர்களை, பற்றாக்குறை உள்ள இடங்களுக்கு, கட்டாய இடம் மாற்றம் செய்யும் பணி நிரவல் கலந்தாய்வு, நேற்று முன்தினம் துவங்கியது. ஆசிரியர்கள் எதிர்ப்பை சமாளிக்க, மாவட்டத்திற்குள் இடம் மாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, துாத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் போன்ற மாவட்டங்களில், அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்கள் உள்ளனர்.பற்றாக்குறை உள்ள பள்ளிகள் குறைவாகவே இருந்தன. எனவே, சொற்பமான ஆசிரியர்களே இடம் மாற்றம் செய்யப்பட்டனர். மற்றவர்கள் மீண்டும் அதே பள்ளிகளில், கூடுதல் ஆசிரியர்களாகவே நீடிக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.ஆனால், வட மாவட்டங்களானகிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலுார் போன்ற மாவட்டங்களில், அதிகஎண்ணிக்கையில் ஆசிரியர்கள் தேவை உள்ளது.

இந்த மாவட்டங்களுக்கு வர, பிற மாவட்ட ஆசிரியர்கள் தயாராக இல்லாததால், தென் மாவட்டங்களில் கூடுதலாக உள்ள ஆசிரியர்கள், வட மாவட்டங்களுக்கு மாற்றப்படவில்லை. இதுபோன்ற குழப்பங்களால், சில மாவட்டங்களில், மாணவர்கள் எண்ணிக்கையை விட கூடுதலான ஆசிரியர்கள் பணியில் இருக்கும் நிலை தொடர்கிறது. மறுபுறத்தில், பல மாவட்டங்களில் போதிய ஆசிரியர்கள் இன்றி, வகுப்புகள் நடக்காமல் மாணவர்கள் பாதிக்கப்படும்நிலை தொடர்கிறது.

புதிய தலைமுறை ஆசிரியர் விருது.



TNPSC:ஐகோர்ட் பணிக்கு எழுத்து தேர்வு:2 மாதங்களில் முடிவு வெளியீடு

உயர் நீதிமன்ற காலி பணியிடங்களுக்காக, நடந்த எழுத்து தேர்வு முடிவுகள், இரண்டு மாதங்களில் அறிவிக்கப்பட்டு, கவுன்சிலிங் முறையில் பணியிடங்கள் நிரப்பப்படும்,'' என, டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில், நேற்று அவர் அளித்த பேட்டி:உயர் நீதிமன்றங்களில் காலியாக உள்ள கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், டைப்பிஸ்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கு, இரண்டு நாட்களாக டி.என்.பி.எஸ்.சி., மூலம் எழுத்து தேர்வுகள் நடந்தன. டி.என்.பி.எஸ்.சி., மீது நம்பிக்கை வைத்து, தேர்வை நடத்தி தரும்படி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது, எங்களுக்கு கிடைத்த வெற்றி.நேற்று முன் தினம் நடந்த பதிவாளரின் நேர்முக உதவியாளர் பணிக்கு, 310 பேர் தேர்வு எழுதியுள்ளனர்.

நேற்று நடந்த தேர்வில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், டைப்பிஸ்ட், ஜெராக்ஸ் ஆப்ரேட்டர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு, 317 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.இந்த பணிகளுக்கு தமிழகம் முழுவதும், 57 ஆயிரத்து, 512பேர் தேர்வு எழுதி உள்ளனர். தேர்வு முடிவுகள், இரண்டு மாதங்களுக்குள் வெளியிடப்பட்டு, கவுன்சிலிங் முறையில் பணியிடங்கள் நிரப்பப்படும்.தமிழக அரசிடம் இருந்து காலி பணியிடங்களின் எண்ணிக்கை, துறை வாரியாக வந்தால், அதற்கு டி.என்.பி.எஸ்.சி., தேர்வு நடத்த தயாராகஉள்ளது. நவம்பர் மாதம் குரூப் - 4 தேர்வு நடத்த உள்ளோம். டி.என்.பி.எஸ்.சி., மூலம் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் எந்தவித அரசியல் தலையீடும் இன்றி பணியாளர்கள் தேர்வு நடக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

Minority Scholarship ஐ- online-ல் விண்ணப்பிக்க இணைப்புகளை SCAN செய்து Upload செய்வதிலிருந்து விலக்கு



சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று 110-வது விதியின் கீழ் அறிக்கை படித்தார்.

சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று 110-வது விதியின் கீழ் அறிக்கை படித்தார். அதில் கூறியிருப்பதாவது:-பெருகி வரும் நகர்ப்புற மக்கள் தொகைக்கு ஏற்ப, தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை ஏற்படுத்த பல்வேறு திட்டங்களை எனது தலைமையிலான அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. 
அந்த வகையில், இந்த ஆண்டு நகர்ப்புறங்களில்செயல்படுத்த உள்ள புதிய திட்டங்களை இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.தெரு விளக்குகளின் மின் கட்டணத்திற்காக நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் சராசரியாக தங்களது வருவாயில் 25 சதவீதத்தை செலவிடுகின்றன.எனவே, மின் கட்டண செலவை குறைக்கும் வகையில், தெரு விளக்குகள் அனைத்தையும் எல்.இ.டி. விளக்குகளாக மாற்றிட எனது தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

பள்ளிகளில் கணினி கல்வி பாடத்திட்டம் உருவாக்காததால்,பி.எட் முடித்த, 45ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் ,காத்திருப்பு!

பள்ளிகளில் புறக்கணிக்கப்படும் கம்ப்யூட்டர் கல்வி.

 தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் கணினி கல்வி பாடத்திட்டம் உருவாக்காததால்,பி.எட் முடித்த, 45ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள்,வாய்ப்பின்றி,காத்திருக்கின்றனர்.
தமிழகம் தவிர,மற்ற மாநிலங்களில்,ஆறாம் வகுப்பு முதல்,கணினிக்கல்வி பாடத்திட்டம் உள்ளது. இப்பணியிடத்துக்கு,கணினி அறிவியல் பட்டப்படிப்புடன்,பி.எட்.,முடித்திருக்க வேண்டும். தமிழகத்தில்,கணினி அறிவியல் கல்விக்கென,பி.எட்.,படிப்பு, 1996ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையில் மட்டும், 2,000ம் ஆண்டில் இருந்து, 45ஆயிரம் பேர்,பி.எட் முடித்துள்ளனர். இதுதவிர,காமராஜர்,பாரதியார் பல்கலைகளில் இருந்தும்,பி.எட்.,படித்து காத்திருப்போர்உள்ளனர்.பள்ளிக்கல்வித்துறையில்,அரசு,அரசு உதவிபெறும் பள்ளிகளில் மட்டும், 55ஆயிரம்,கணினி ஆசிரியர் காலிப்பணியிடம் உள்ளது.

இதை நிரப்பாததால்,தொழில்நுட்ப கல்வியில் மாணவர்கள் பின்தங்கும் அபாயம் உள்ளது. மேலும்,நடுநிலைப்பள்ளி வகுப்புகளில் இருந்தே,கணினி கல்வி கட்டாயமாக்கினால்,அரசால் வழங்கப்படும் இலவச லேப்-டாப்களை கல்விசார்பணிகளுக்கு மாணவர்கள் பயன்படுத்த வாய்ப்பு கிடைக்கும்.பி.எட் கணினி ஆசிரியர் நலசங்க மாநில பொதுச்செயலாளர் பாண்டியன் கூறுகையில்,சமச்சீர் கல்வி அறிமுகமான போது,ஆறு முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு,கணினி அறிவியல் பாடத்திட்டம் உருவாக்கி,புத்தகங்கள் அச்சிடப்பட்டன.

 பின்,அ.தி.மு.க.,அரசு பொறுப்பேற்றதும்,கணினி கல்வி முடக்கப்பட்டது. இதை மீண்டும் துவங்கினால்,வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் பட்டதாரிகள் பலனடைவர்.கல்வி பணி அல்லாமல்,அலுவலகப்பணியிலும் கணினி பட்டதாரிகளை நிரப்பலாம். வேலைவாய்ப்பு அறிவிக்காததால்,பி.எட்.,படிக்கும் கணினி பட்டதாரிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு,கணினிஆசிரியர் பணியிடத்திற்கு தகுதித்தேர்வு நடத்த அரசு முன்வர வேண்டும்,என்றார்.

புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளஅரசு ஊழியர்களுக்கும் பணிக்கொடை வழங்க உத்தரவு: தமிழகத்தில் 4.5 லட்சம் பேர் பயன்பெறுவர்

பழைய ஓய்வூதிய திட்டத்தைப் போன்று புதிய ஓய்வூதிய திட்டத் தில் உள்ள அரசு ஊழியர்களுக்கும் பணிக்கொடை (கிராஜுவிட்டி) வழங்க மத்திய அரசு உத்தரவிட் டுள்ளது.தமிழகத்தில் கடந்த 2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதிக்கு பிறகு அரசு பணியில் சேரும் ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்படு கின்றனர். மத்திய அரசில் புதிய ஓய்வூதிய திட்டம், 2004 ஜனவரி 1-ம் தேதிக்கு பின்னர் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது.