யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

1/9/16

திண்டுக்கல் மாணவர்களின் ’ஹைபிரிட்’ காருக்கு அங்கீகாரம்

திண்டுக்கல், எஸ்.எஸ்.எம்., பொறியியல் கல்லுாரி மாணவர்களால் நவீன தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட பெட்ரோல் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் கார், தேசிய அளவில், ஹைபிரிட் கார் தொழில் நுட்பத்திற்கான, மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது.


ஆண்டுதோறும், பொறியியல் கல்லுாரிகளுக்கு இடையிலான நவீன தொழில்நுட்ப தயாரிப்பு போட்டியை இம்பீரியல் சொசைட்டி ஆப் இன்னோவேஷன் இன்ஜினியர்ஸ் என்ற அமைப்பு நடத்துகிறது. இந்தாண்டு முதற்கட்ட போட்டி ஆந்திராவில், இரண்டு வாரங்களுக்கு முன் நடந்தது. 150 முக்கிய பொறியியல் கல்லுாரிகள் பங்கேற்றன. 

அதில் பங்கேற்ற, திண்டுக்கல், எஸ்.எஸ்.எம்., பொறியியல் கல்லுாரியின் மெக்கானிக்கல் துறை மாணவர்கள் தயாரித்த ஹை பிரிட் கார் தேசிய அளவில், மூன்றாம் இடம் பிடித்தது. இந்த கார், பெட்ரோல் மற்றும் மின்சாரம் என்ற, இரண்டு வகையான ஆற்றலில் இயங்கும் தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் எரிபொருள் சிக்கனமாவதுடன், சுற்றுச்சூழல் மாசுபடுவதும் குறைகிறது.

இன்ஜின் திறன், 208 சி.சி.,யும், 6.2 குதிரை சக்தி திறனும் கொண்டது. 3,600 ஆர்.பி.எம்., மற்றும் 12.9 இழுவைத்திறன் கொண்டது. மணிக்கு, 80 கி.மீ., வேகம் செல்லும். இது பந்தய கார் என்பதால், ஒருவர் மட்டுமே பயணம் செய்யலாம்.லிட்டருக்கு, 35 கி.மீ., துாரம் இயங்கும்.

பாதுகாப்பு அம்சமாக காரில் தீ பிடித்தால் உடனடியாக அணைக்கும், கில் சுவிட்ச் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆபத்தான நேரங்களில் விபத்தை தவிர்க்கலாம். எளிதாக இயக்குவதற்கு, ஆட்டோமேட்டிக் கிளட்ச் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் எளிதாக காரின் வேகத்தை கட்டுப்படுத்தலாம்.

கல்லுாரியின் துறைத்தலைவர் சரவணன், குழு ஒருங்கிணைப்பாளர்கள் சிலம்பரசன், பிரபாகரன், விக்னேஷ் கூறியதாவது: எங்கள் கண்டுபிடிப்புக்கு தேசிய அங்கீகாரம் கிடைத்தது மகிழ்ச்சி. இதன்மூலம் இன்னும் பல்வேறு நவீன தொழில் நுட்பங்களை மாணவர்கள் கண்டறிய ஆர்வம் பிறக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

TNPSC GROUP 4 : 8ம் வகுப்பு தமிழ் முதல் பருவம் ஆன்லைன் தேர்வு

அரசு ஊழியர்களின் குறைந்த பட்சஊதியம் 42 சதவீதம் உயர்வு

பிரதமர் மோடி தலைமையிலான அரசு, மத்திய அரசு ஊழியர்களுக்கு, குறைந்தபட்ச ஊதியத்தை, 42 சதவீதம் உயர்த்தி உள்ளது. மத்திய அரசு பணியில் உள்ள ஊழியர்களுக்கு, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிற்சங்கங்கள்,செப்., 2ல், நாடு தழுவியவேலைநிறுத்த போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளன.
இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு,குறைந்தபட்சஊதியத்தை, 42 சதவீதம் உயர்த்தி, மத்திய அரசு அறிவித்துள்ளது. தவிர, இரு ஆண்டுகளுக்கு போனஸ் அளிப்பது குறித்தும், அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதையடுத்து, வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பை, அனைத்து தொழிற்சங்கங்களும் மறுபரிசீலனை செய்யும்படி, மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய அரசு ஊழியர்களின் பிரச்னைகள் குறித்து ஆராய, நிதியமைச்சர் அருண் ஜெட்லிதலைமையில், அமைச்சகங்கள் இடையிலான குழு, கடந்தாண்டு அமைக்கப்பட்டது. இக்குழு அளித்த பரிந்துரைகளின்படி, குறைந்தபட்ச ஊதிய உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகி உள்ளன

NTSE - தேசிய திறனாய்வுத் தேர்வு 06.11.2016 ஞாயிற்றுக்கிழமை பதிலாக 05.11.2016 சனிக்கிழமை நடைபெறும்

மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கும் அரசு சலுகைகள்வழங்கப்படுகிறது: காங். புகாருக்கு முதல்வர் பதில்

மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கும் சலுகைகள் வழங்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.சட்டப்பேரவையில் நேற்று ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் நலன் ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது. 
இதில், குளச்சல் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ஜே.ஜி.பிரின்ஸ் பேசும்போது, ‘‘நாடார் பிரிவினரை மிகவும் பிற்படுத்தப்பட்டவர் பட்டியலிலும், மீனவர்களை பழங்குடியினர் பட்டியலிலும் சேர்க்க வேண்டும். இந்து தலித்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய தலித்களுக்கு வழங்கப்படவில்லை. அதை வழங்க வேண்டும்’’ என்றார்.

அப்போது அவையில் இருந்த முதல்வர் ஜெயலலிதா, இதற்கு பதிலளித்து பேசியதாவது:மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக, சமீபத்தில் பிரதமரை சந்தித்தபோது மனு அளிக்கப்பட்டுள்ளது. மதம் மாறியவர்களுக்கு அரசு சலுகைகள் மறுக்கப்படுவதாக கூறப்படுவது தவறானது. அனைத்து சலுகைகளும் வழங்கப்படுகின்றன. சுயநிதி கல்வி நிறுவனங்களில் பயிலும் மதம் மாறிய கிறிஸ்தவ மாணவர்கள் கல்லூரிகளுக்கு செலுத்த வேண்டிய கல்விக் கட்டணம் மற்றும் நிறுவன கட்டணங்களில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் பதிலளித்தார்.

மலைக் கிராம பள்ளிகளுக்கு சரிவர பணிக்குச் செல்லாத ஆசிரியர்கள்!

மலைக் கிராமங்களில் அமைந்துள்ள பள்ளிக்கு ஆசிரியர்களும், தலைமை ஆசிரியர்களும் சரிவர செல்வதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மலைக் கிராமங்களில் உள்ள மலைவாழ் மக்களுடைய பிள்ளைகள் கல்வி கற்க நீண்ட தொலைவு செல்ல வேண்டியிருந்த காரணத்தால் அவர்கள் தங்களுடைய பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்பாமல், வேலைக்கு அனுப்பச் செய்த காலம் இருந்தது. ஆனால் அவர்களது நலன் கருதி மலைக் கிராமங்களிலேயே பள்ளிகளை அரசாங்கம் தொடங்கியது. 

தமிழகத்தைச் சேர்ந்த 23 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது டெல்லியில் செப்.5-ல் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் வழங்குகிறார்.

தமிழகத்தைச் சேர்ந்த 23 ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.அவர்களுக்கு டெல்லியில் செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறும் ஆசிரியர் தினவிழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நல்லாசிரியர் விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார்.
ஆசிரியர் பணியைப் போற்றும் வகையில் மத்திய அரசு ஆண்டுதோறும் சிறந்த ஆசிரியர்களைத் தேர்வுசெய்து அவர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த விருது, ரூ.50 ஆயிரம் ரொக்கம், வெள்ளிப்பதக்கம், பாராட்டுச்சான்று ஆகியவற்றை உள்ளடக்கியது.கடந்த 2015-ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் தொடக்கக்கல்வி பிரிவின் கீழ் 15 ஆசிரியர்களும், மேல்நிலைக் கல்வி பிரிவின் கீழ் 7 பேரும், சிறப்புப்பிரிவின் கீழ் ஒருவரும் என மொத்தம் 23 பேர் தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். டெல்லியில் செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறும் ஆசிரியர் தினவிழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தேசிய நல்லாசிரியர் விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார்.

B.Ed முதல்கட்ட கலந்தாய்வு நிறைவு: செப்டம்பரில் 2-வது கட்ட கலந்தாய்வு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள 1,777 பி.எட். இடங்களை நிரப்பு வதற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் தொடங் கியது. 
தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் என பாடவாரியாக மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். இதில் பங்கேற்ற மாணவர்கள் தங்களுக்குப் பிடித்தமான கல்லூரியை தேர்வுசெய்தனர். அவர்களுக்கு உடனடியாக கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது.இந்நிலையில் முதல்கட்ட கலந்தாய்வு நேற்று முடிவடைந்தது. மொத்தமுள்ள 1,777 இடங்களில் 1,314 இடங்கள் நிரம்பியுள்ளன. இன்னும் 463 இடங்கள் காலியாகஉள்ளன.

இக்காலியிடங்களை நிரப்புவதற்கான 2-வது கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 15, 16-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான கட் ஆப் மதிப்பெண் மற்றும் காலியிட விவரங்கள் செப்டம்பர் 9-ம் தேதி இணையதளத்தில் (www.ladywillingdoniase.com) வெளியிடப்படும் என்று தமிழ்நாடு பி.எட். மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியை எம்.எஸ். தில்லை நாயகி தெரிவித்தார்..

தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கீழ் தகவல்கள் அளிக்க மறுத்த முதன்மை கல்வி அலுவலர் (CEO) மீது ஒழுங்கு நடவடிக்கை தமிழ்நாடு தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு!!!

பாரத ஸ்டேட் வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு.

முன்னணி பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் மும்பையிஸ் நிரப்பப்பட உள்ள 33 சிறப்பு அதிகாரி பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: CRPD/SCO-IT/2016-17/08
பணி: Vice President - 03
பணி: Product Development Manager - 03
பணி: Senior Manager - 03
பணி: Manager - 04
பணி: Assistant Vice President (Servicing) - 01
பணி: Assistant Vice President (Customer Experience) -03
பணி: Assistant Vice President (B2c Market place Acquisition) - 12
பணி: Assistant Vice President (B2b Fulfillment) - 02
பணி: Assistant Vice President (B2C Fulfillment) - 02

சம்பளம்: மாதம் ரூ.42,020 - 51,490

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்குரூ.600, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரு.100. இதனை இணையதள மூலம் செலுத்தலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.09.2016

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி:10.09.2016

மேலும் தகுதி, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.sbi.co.in  என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்

பள்ளி வாகனம் விதிமுறை தளர்வு:தமிழக அரசுக்கு 4 வாரம் அவகாசம்

பள்ளி வாகன விதிகளை தளர்த்துவது தொடர்பாக பள்ளிகளின் கருத்து கேட்பு குழுவின் பரிந்துரை மீது முடிவை தெரிவிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் 4 வாரம் அவகாசம் அளித்துள்ளது. 
பள்ளி வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை தளர்த்தக்கோரி தமிழ்நாடு கத்தோலிக்க கல்வி நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

10ம் வகுப்பு துணைத்தேர்வு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்!

பத்தாம் வகுப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் செப்டம்பர் 9க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.

வெளியிட்ட செய்தி குறிப்பில்,

தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வு சேவை மையங்களுக்கு (Government Examinations Service Centres) நேரில் சென்று விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

யார் விண்ணப்பிக்கலாம்?

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் செய்தியாளர்களை சந்திக்கவோ, அவர்களுக்கு பேட்டி அளிக்கவோ கூடாது - பள்ளிக் கல்வித் துறை உத்தரவு.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் செய்தியாளர்களை சந்திக்கவோ, அவர்களுக்கு பேட்டி அளிக்கவோ கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.பள்ளி வேலை நேரத்தில் வெளி நபர்கள் உள்ளே வர அனுமதிக்கக் கூடாது. 
தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர்கள் யாரும் வேலை நேரத்தில் செய்தியாளர்களைச் சந்திக்கவோ, பேசவோ, துறையின் அனுமதி இல்லாமல் பேட்டி கொடுக்கவோ கூடாது என்று திருப்பூர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் (பொறுப்பு) கோ.லலிதா செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளார்.துறையின் அனுமதியைப் பெறாமல் பள்ளி தொடர்பாகவோ, துறை தொடர்பாகவோ யாரேனும் பேட்டி அளித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்த உத்தரவு மாவட்டம் முழுவதிலும் உள்ள அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும் பொருந்தும் எனவும், இந்த உத்தரவைப் பின்பற்றும்படி சம்பந்தப்பட்ட உதவி, கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவரும், நீலகிரி மாவட்டம், தும்மனட்டி அரசுப் பள்ளி ஆசிரியருமான ராஜ்குமார் என்பவர் கலை, ஆசிரியர் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.அவர், ஆசிரியர்கள் தொடர்பான பல்வேறு பிரச்னைகளை ஊடகங்கள் மூலமாக வெளியே கொண்டு வந்ததற்காக அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதன் எதிரொலியாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கலாம் என்று ஆசிரியர் சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் தொடர் உண்ணாவிரதம்


பணிநிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு குறித்தும்   தங்களது கோரிக்கையை வலியும் தொடர் உண்ணாவிரதம் அரசு விருந்தினர் மாளிகை முன்பு நடத்து வருகிறது. .
சென்னையிலிருந்து நேரடி தகவலுடன்
பி.இராஜலிங்கம் புளியங்குடி 

தமிழக ஆளுனர் மாற்றம்...

தமிழக ஆளுநர் ரோசய்யாவின் பதவிக் காலம் முடிவடைந்ததை அடுத்து, பொறுப்பு ஆளுநர் அறிவிக்கப்பட்டுள்ளார்.தமிழக ஆளுநர் பொறுப்பை கூடுதலாக மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ் கவனிப்பார் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த 2011ம் ஆண்டு தமிழக ஆளுநராக ரோசய்ய பதவியேற்றுக்கொண்டார். அதையடுத்து, ரோசய்யாவின் பதவிக் காலம் இன்றுடன் முடிவடைவதை முன்னிட்டு தமிழக ஆளுநர் பொறுப்பை வித்யாசாகர் ராவ் கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தெலங்கானாவைச் சேர்ந்த வித்யாசாகர் ராவ் மத்திய அமைச்சராக பொறுப்பு வகித்தவர்.இதையடுத்து, தமிழகத்துக்கு புதிய ஆளுநரை மத்திய அரசு எப்போது வேண்டுமானாலும் நியமிக்கலாம்.பிரதமர் யாரைக் குறிப்பிடுகிறாரோ அவரைத் தான், மாநில ஆளுநராக குடியரசுத் தலைவர் அறிவிப்பார். அந்த வகையில் குஜராத் மாநில முதல்வராக இருந்த ஆனந்திபென் பட்டேல் உள்ளிட்ட சிலரின் பெயர்கள் தமிழக ஆளுநர் பதவிக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவை வெளியிடவும்; அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அரசுக்கு வலியுறுத்த வரும் செப்டம்பர் 02 பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு


அரியலூர் மாவட்டத்தில் 37 கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

அரியலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 37 கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இது குறித்து,அரியலூர் கோட்டாட்சியர் மோகனராஜன்,உடையார்பாளையம் கோட்டாட்சியர் டீனாகுமாரி ஆகியோர் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பு:
உடையார்பாளையம் வட்டத்தில் காலியாக உள்ள 22 பணியிடத்துக்கும்,செந்துறை வட்டத்தில் காலியாக உள்ள 5 பணியிடத்துக்கும்,அரியலூர் வட்டத்தில் காலியாக உள்ள 10பணியிடத்துக்கும்,விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குறிப்பிட்ட இனத்தவர்கள் மற்றும் அந்தந்த வட்டத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 5-ஆம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்று 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் 30 வயதிற்கு உட்பட்டவராகவும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர்,அருந்ததியினர் மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரப்பினர் 35 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.

மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்,தமிழிலில் எழுத,படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஒரு திருமணத்திற்கு மேல் திருமணம் செய்திருத்தல் கூடாது,குற்றவியல் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டவராக இருத்தல் கூடாது,நேர்காணலுக்கு அழைக்கும் போது, நன்னடத்தைச் சான்று,உடற்தகுதிக்கான அரசு மருத்துவரிடம் பெற்ற சான்று,கல்வித்தகுதிக்கான சான்றுதள்,வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருப்பின் அதற்கான பதிவு அட்டை ஆகியவை சமர்பிக்க வேண்டும்ஒரு வெள்ளைத்தாளில் பெயர்,முகவரி,கல்வித்தகுதி மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் போன்ற முழு விபரங்களுடன்பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் ஒட்டப்பட்டு நகல் சான்றிதழ்கலை இணைத்து சுய முகவரியிட்ட ரூ.30-க்கான அஞ்சல் தலை ஒட்டப்பட்ட உறையுடன் கூடிய அந்ததந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் செப்டம்பர் 7 ஆம் தேதி மாலை5 மணிக்குள் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

31/8/16

TET Case Status : Listed on 13/09/2016



PDT GRATUITY - பணிக்கொடை - *DCRG* அறிந்து கொள்ளுங்கள்

பணிக்கொடை(தமிழ்நாடு அரசு)
பணிக்கொடைஎன்பது அரசு/அரசு சார்ந்தஊழியர் அல்லது ஆசிரியர் பணிஓய்வின் போது அல்லது பணியில்இருக்கும் போதே காலமான போதுஅவ்வூழியருக்கு, ஊதியம் வழங்கும் நிறுவனம், ஊழியரின் பணியை
பாராட்டும் விதமாகவழங்கும் ஒரு ஒட்டு மொத்தத்தொகையாகும். பணிக்கொடை ஊதியத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. இத்தொகை கணக்கிடுவதற்கு ஊழியரின் தகுதியான பணிக்காலமும் அவர் ஓய்வுபெறும்போது பெற்றஊதியமும் அடிப்படைகளாகக் கொள்ளப்படுகிறது [1].

அரசு& அரசு சார்ந்த ஊழியர்களுக்கு பணிக்கொடைகணக்கீடு முறை தொகு

பணி ஓய்வின் போது பணிக்கொடைகணக்கீடு செய்யும் போது ஊழியர் இறுதியாகவழங்கப்பட்ட ஊதியம் மற்றும் பணிக்காலம்ஆகிய இரண்டும் கணக்கீட்டில் எடுத்து கொள்ளப்படுகிறது.[2]

இறுதியாகவழங்கப்பட்ட ஊதியம் (Last Pay Drawn) தொகு
அரசு மற்றும் அரசு சார்ந்தஊழியர்களைப் பொருத்த வரை, அடிப்படைஊதியம் (Basic Pay), தர ஊதியம் (Grade Pay), சிறப்புஊதியம் (Special Pay), தனி ஊதியம் (Personal Pay) மற்றும் அகவிலைப்படி(Dearness Allowance) ஆகியவற்றின்கூட்டுத்தொகையை, இறுதியாக வழங்கப்பட்ட ஊதியமாகக் (Last Pay Drawn) கொண்டு பணிக்கொடை கணக்கிடப்படுகிறது.

பணிக்காலம்கணக்கிடுதல் தொகு
ஓய்வு(Retirement) இனங்களில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளும் (அல்லது4 ஆண்டு 9 மாதங்களுக்கு மேலும்) அரசுப் பணியில்இருந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 33 ஆண்டு பணிக்காலம் மட்டுமேபணிகொடை கணக்கீடு செய்வதற்கு எடுத்துக் கொள்ளபடுகிறது.

32 ஆண்டுகள்9 மாதங்களுக்கு மேல் பணி செய்திருந்தால்33 ஆண்டு பணிக்காலமாக எடுத்துக் கொள்ள வேண்டும். 32 ஆண்டுகள்5 மாதங்கள் பணி செய்திருந்தால் 32 ஆண்டுகள்மட்டுமே பணிக்காலமாக கணக்கில் கொள்ளப்படுகிறது.

பணிக்கொடைகணக்கீடு தொகு
மொத்தப்பணி செய்த ஆண்டிற்கு அரைமாத ஊதியம் வீதம், குறைந்தபட்சமாக இரண்டரை மாத ஊதியமும், அதிக பட்சமாக பதினாறறை (16 ½) மாதஊதியமும் பணிகொடையாக வழங்கப்படும். ஆனால் அதிகபட்ச வரம்புரூபாய் 10 இலட்சம்.

பணிக்கொடைவருவாய்க்கு வருமான வரி சட்டம்10 (10)-இன் கீழ் வருமான வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்குபணிக்கொடை வழங்கப்பட மாட்டாது.


அரசு மற்றும் அரசு ஒப்புதல்பெற்ற நிறுவனங்களுக்கு ஊழியர் செலுத்த வேண்டியதொகைகள் நிலுவை இருப்பின், அதனைபணிக்கொடைத் தொகையிலிருந்து பிடித்தம் செய்யப்படும்.

DINDIGUL DISTRICT-1st TERM EXAM TIME TABLE 2016 SEPTEMBER-CLASS-6,7,8,9,&11