யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

2/9/16

பள்ளி மாணவருக்கு தூய தமிழ் அகராதிகள்: பேரவையில் அமைச்சர் ராமச்சந்திரன் அறிவிப்பு.

பள்ளி மாணவர்களுக்குத் தூய தமிழ் அகராதிகள் வழங்கப்படும் என்று சட்டப் பேரவையில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் அறிவித்தார்.சட்டப் பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை, தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு புதன்கிழமை பதிலளித்து அமைச்சர் ராமச்சந்திரன் வெளியிட்ட அறிவிப்புகள்:
மாணவர்களின் மனதில் நல்ல தமிழ்ச் சொற்களைப் பதிய வைத்து பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்காக வழக்கிழந்து வரும் தூய தமிழ்ச் சொற்களைப் பள்ளி மாணவர்கள் பயன்படுத்துவதற்கு உதவிட நடவடிக்கை எடுக்கப்படும். அதன்படி, பட விளக்கத்துடன் கூடிய அகராதியைத் தொகுத்து வகுப்பு வாரியாக கல்வித துறை மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும்.

கலைக் கழகம்:

 தமிழ்மொழியை காக்கும் நோக்கில் அன்றாடம் பயன்பாட்டுக்கு வரும் பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களைத் தரப்படுத்தி ஊடகங்களுக்கும், அறிவியாளர்களுக்கும், மொழியியலாளர்களுக்கும் வழங்கும் நோக்கில் அகர முதலி இயக்ககத்தில் தமிழ் கலைக் கழகம் ஏற்படுத்தப்படும்.தமிழ்ச் சொற்களைப் பகுத்தறிந்து அறிவியல் நோக்கில் ஆய்வு செய்து, புதிய கலைச் சொற்களை உருவாக்க விரும்புவோருக்கு உதவிடவும், தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளின் தமிழ்ப் பாடத் தேர்வர்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் பயன்படும் வகையிலும் தமிழ்ச் சொற்களின் சரியான வேர்ச் சொற்களைத் தொகுதித்து வேர்ச் சொல் சுவடி எனும் நூல் அச்சிட்டு வெளியிடப்படும்.

தமிழாய்வு அரங்கம்:

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் மாதந்தோறும் அயல்நாட்டறிஞர் அழைக்கப்பட்டு தமிழாய்வு அரங்கம் நடத்தப் பெறும். இந்த அரங்கம் நடத்தப்படுவதால் தமிழுக்கு புதிய ஆய்வு நூல் கிடைப்பதோடு தமிழாய்வு மேலும் செம்மையுறும்.தமிழியல் ஆராய்ச்சியாளர்கள் பயன்பெறும் வகையில், தமிழ் இலக்கியம் தடம் பதித்த 116 ஆண்டுகள் என்ற தலைப்பின் கீழ், 1900 முதல் 2016 வரை வெளிவந்த இலக்கிய நூல்களின் விவர அட்டவணை தமிழ், ஆங்கில மொழிகளில் வெளியிடப்படும்.கடந்த 1972 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன ஆய்வு நூலகம் சீராக்கி பராமரிக்கப்படும். மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் புதிதாக மூன்றாம் பரிசு வழங்கப்படும். இந்தப் பரிசு ரூ.5 ஆயிரம் கொண்டதாக இருக்கும்.

மென்தமிழ்ச் சொல்லாளர் மென்பொருள்:

 கணினியில் ஆங்கிலமொழிக்கென சொல் திருத்தம் செய்யும் வசதி இருக்கிறது.இதே போன்று தமிழில் ஒற்றுப்பிழை, சந்தி, மயங்கொலி உள்ளிட்ட இலக்கணப் பிழைகள் ஏதுமின்றி எழுதத்தக்க வகையிலும், தவறுகளைத் தானே சுட்டிக் காட்டித் திருத்திக் கொள்ளும் வகையிலும் ரூ.300 மதிப்பில்"அம்மா மென்தமிழ்ச் சொல்லாளர்' மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் முதல் கட்டமாக 10 ஆயிரம் அரசு அலுவலகங்களுக்குப் பெற்று வழங்கப்படும் என்று அமைச்சர் ராமச்சந்திரன் அறிவித்தார்.குவாஹாட்டி பல்கலை.யில் தமிழ் பயில உதவித்தொகைஅசாம் மாநிலம் குவாஹாட்டி பல்கலைக்கழகத்தில் தமிழை விருப்பப் பாடமாக பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப் பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை, தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீது புதன்கிழமை நடந்த விவாதங்களுக்கு பதிலளித்து அந்தத் துறையின் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வெளியிட்ட அறிவிப்புகள்:அசாம் மாநிலத்தில் உள்ள குவாஹாட்டி பல்கலைக்கழகத்தில் தமிழை விருப்பப் பாடமாகப் பயிலும் 6 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.1.39 லட்சம் வழங்கப்படும். மேலும், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆண்டுதோறும் கல்வி உதவித் தொகை அளிக்கப்படும்.21-ஆம் நூற்றாண்டில் அயலகத் தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் 5 அயலக நாடுகள் ஒவ்வொன்றில் இருந்தும் தகுதி வாய்ந்த 5 தமிழ்ப் படைப்பாளர்களிடம் இருந்து கவிதை, சிறுகதை, புதினம், கட்டுரை போன்ற தரமான படைப்புகளைப் பெற்று மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நூல்களாக வெளியிடப்படும்.

மோரீஷஸில் தமிழ்:

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் ஒன்றான மோரீஷஸ் நாட்டில் தமிழர்களுக்குத் தமிழ் மொழியை எழுதவும், பேசவும் பயிற்சி அளிக்கும் வகையில் ஆண்டுதோறும் தமிழ் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று ராமச்சந்திரன் அறிவித்தார்.

இந்த மாதம் தொழில் வரி !

ஆறுமாத வருமான அடிப்படையில் இந்த தொழில் வரி ஏப்ரல் முதல்  செப்டம்பர் வரை மற்றும் அக்டோபர் முதல்  மார்ச் வரை மாநில அரசுக்கு செலுத்தப்படுகிறது. இது மத்திய 
அரசுக்கு செலுத்தும் வருமான வரியில் கழித்தம் செய்யப்படும். இவ்வரியினை மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் செலுத்த வேண்டியதில்லை ( அரசாணை 2726/(நிதி) நாள் 01.11.1994: தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியிடு நாள் :25.06.1992.).

உண்மைத்தன்மை சான்றிதழுக்கு இழுத்தடிக்கும் காமராஜ் பல்கலை : விரக்தியில் ஆசிரியர்கள்

மதுரை காமராஜ் பல்கலையில், கல்லுாரி ஆசிரியர்கள் பட்டச் சான்றிதழ்களுக்கு உண்மைத்தன்மை (ஜெனுானஸ்) சான்று வழங்குவதில் இழுத்தடிக்கப்படுவதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அரசு கல்லுாரிகளில் பணி நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள், தங்கள் கல்வித் தகுதிக்கான பட்டச் சான்றுகளை கல்லுரிகளில் சமர்ப்பிக்க வேண்டும். இதன்பின், சம்பந்தப்பட்ட பல்கலைக்கு அச்சான்றுகள் அனுப்பி வைக்கப்பட்டு, அவற்றின் உண்மைத்தன்மை ஆய்வு செய்யப்படும்.சான்றிதழ்களை அனுப்பி வைக்கும்போது, சம்பந்தப்பட்ட கல்லுாரி முதல்வர் சார்பில் அதற்கான கட்டணமும் காசோலையாக அனுப்பி வைக்கப்படும். அதிகபட்சம் ஒரு மாதத்திற்குள் உண்மைத்தன்மைக்கான சான்று சம்பந்தப்பட்ட கல்லுாரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆனால் மதுரை காமராஜ் பல்கலையில், இப்பணிகள் பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது என கல்லுாரி ஆசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.இதுகுறித்து சிவகங்கை அரசு கல்லுாரி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:இக்கல்லுாரியில் பணியாற்றும் 43 பேரின் இளங்கலை, முதுகலை, எம்.பில்., பி.எச்டி., பட்டச் சான்றுகள் உண்மை தன்மைக்காக காமராஜ் பல்கலைக்கு 30.9.2015ல் அனுப்பி வைக்கப்பட்டது. உடன் 64,500 ரூபாய்க்கான காசோலையும் இணைக்கப்பட்டது. ஆனால் இதுவரை யாருக்கும் சான்றிதழ் அனுப்பி வைக்கவில்லை.

ஆனால் இதே கல்லுாரியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான சான்றிதழ்கள் மனோன்மணியம் சுந்தரனார், அன்னை தெரசா, பாரதிதாசன் போன்ற பல்கலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட உடன் அதற்கான உண்மை தன்மை சான்று கிடைத்து விட்டது.ஆனால் காமராஜ் பல்கலையில் மட்டும் இன்னும் கிடைத்தபாடில்லை. சான்றிதழ் பிரிவில் கேட்டால் 'அதுபோன்ற சான்றிதழ்களே வரவில்லை,' என பதில் கூறுகின்றனர். ஆனால்அரசியல், அதிகாரிகள் சிபாரிசில் சில ஆசிரியர்களுக்கு மட்டும் உண்மை தன்மை சான்று அளிக்கப்பட்டுள்ளது. இது எப்படி சாத்தியம். பல்கலை பதிவாளர் இப்பிரச்னை குறித்து விசாரித்து சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

TNPSC:குரூப்-4 தேர்வுக்கு இதுவரையில் ஆறரை லட்சம் பேர் விண்ணப்பம்: ஆன்லைனில் விண்ணப்பிக்க செப்.8 கடைசி நாள்

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு இதுவரையில் 6 லட்சத்து 60 ஆயிரம் பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். விண் ணப்பிக்க செப்டம்பர் 8-ம் தேதி கடைசி நாள் ஆகும்.

5,451 காலியிடங்கள்

தமிழக அரசின் பல்வேறு துறை களில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு-3) மற்றும் வரித்தண்டலர், நிலஅளவர், வரைவாளர் ஆகிய பதவிகளில் 5,451 காலியிடங்களை நிரப்ப குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி அண்மையில் வெளியிட்டிருந்தது. இதற்கான ஆன்லைன் விண்ணப் பம் கடந்த ஆகஸ்டு 9-ம் தேதி தொடங்கியது. தேர்வுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி என்ற போதிலும் பட்டதாரிகளும், முதுகலை பட்டதாரிகளும் போட்டிப்போட்டு விண்ணப்பித்து வருகின்றனர். நேற்று பிற்பகல் 3.30 மணி நிலவரப்படி, 6 லட்சத்து 60 ஆயிரம் பேர் ஆன்லைனில் விண்ணப்பித்திருப்பதாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா தெரி வித்தார்.ஆன்லைனில் விண்ணப்பிக்க செப்டம்பர் 8-ம் தேதி கடைசி நாள் ஆகும். இன்னும் 8 நாள்கள் காலஅவகாசம் இருப்பதால் சுமார் 11 லட்சம் பேர் விண்ணப்பிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. கடந்த ஆண்டு குரூப்-4 தேர்வுக்கு 12 லட்சம் பேர் விண்ணப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டணச் சலுகை

குரூப்-4 தேர்வுக்கு கட்டணமாக ரூ.75 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிரந்தரப் பதிவுக்கென ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். தேர்வுக் கட்டணத்தைப் பொருத்த வரையில், எஸ்சி, எஸ்டி வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் ஆகியோர் தேர்வுக் கட்டணம்ஏதும் செலுத்தத் தேவையில்லை. பிசி, பிசி (முஸ்லிம்) எம்பிசி, டிஎன்சி வகுப்பினர் பட்டதாரியாக இருப்பின் 3 முறை மட்டும் தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

நவம்பர் 6-ம் தேதி

3 முறை தேர்வுக் கட்டணச் சலுகையை அனுபவித்தவர்கள் அதன்பிறகு கண்டிப்பாக தேர்வுக் கட்டணம் செலுத்தித்தான்தேர் வுக்கு விண்ணப்பிக்க வேண்டும். 3 முறை என்ற நிபந்தனையைத் தாண்டி தேர்வுக் கட்டணம் செலுத்தாமல் விண்ணப்பித்து ஒருவேளை பணிக்கு தேர்வு செய்யப்பட்டால் அத்தகைய விண்ணப்பதாரர்கள் பிரச்சி னையை எதிர்கொள்ள நேரிடும் என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். எனவே, கட்டணச்சலுகை வாய்ப்பு பெற்றிருப்பவர்கள், எத்தனை முறை கட்டணச்சலுகையை பயன் படுத்தியுள்ளோம் என்பதை உறுதி செய்துவிட்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். எழுத்துத் தேர்வு நவம்பர் 6-ம் தேதி நடைபெறவுள்ளது.

அரசு பள்ளி தலைமை ஆசிரியரின் தொந்தரவு: மாறுதல் கேட்டு ஒட்டுமொத்த ஆசிரியர்கள் மனு.

சேலம், ராமிரெட்டிப்பட்டி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தொந்தரவு கொடுப்பதால், தங்களை பணிமாறுதல் செய்யும்படி, அங்கு பணிபுரியும் ஒட்டுமொத்த ஆசிரியர்கள், கோரிக்கை மனு அளித்துள்ளனர்.சேலம், ராமிரெட்டிப்பட்டி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன். 
அந்த பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அங்கு பணிபுரியும், ஒன்பது பட்டதாரி ஆசிரியர்கள், தங்களை வேறுபள்ளிக்கு மாறுதல் செய்யும்படி, மாவட்ட முதன்மைக்கல்விஅலுவலரை சந்தித்து, புகார் மனு அளித்தனர்.இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது: ராமிரெட்டிப்பட்டி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், சர்வாதிகாரி போல் செயல்படுகிறார். அவருக்கு பிடிக்கவில்லை எனில், அவர்களை பள்ளியை விட்டு, அனுப்பும் வரை ஓய்வதில்லை. அதற்கு சம்பந்தப்பட்ட ஆசிரியர், பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி, மாணவியரிடம்எழுதி வாங்கி வைத்துக்கொண்டு, மிரட்டல் விடுக்கிறார்.

ஊரில் உள்ள, சில அரசியல்வாதிகளையும், பெற்றோர் ஆசிரியர்கழகம் என்ற பெயரில், பள்ளிக்கு வரவழைத்து, ஆசிரியர்களுக்கு மிரட்டல் விடுக்கிறார். மேலும், 'அடித்து கொன்றுவிடுவோம்' என, மிரட்டல், பாலியல் அச்சுறுத்தல், ஆசிரியர்களை, நாளுக்கு நாள் மன உளைச்சலுக்கு உள்ளாக்குகின்றன. ஏற்கனவே, அவரது மிரட்டலுக்கு பயந்து, வேறு ஊருக்கு, பலர், மாறுதல் பெற்று சென்றுவிட்டனர். இதனால், இந்த பள்ளியில் இருந்து, வேறு பள்ளிக்கு மாறுதல் கேட்டு, ஒன்பது ஆசிரியர்கள் மனு அளித்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தமிழகத்தில் 250 அரசுப் பள்ளிகளில் மனித உரிமைமாணவர் மன்றம்: பள்ளிக் கல்வித்துறை புதிய ஏற்பாடு.

மாணவர்கள், குழந்தைப் பருவத்திலேயே மனித உரிமைகளைத் தெரிந்துகொள்ளும் நோக்கில் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் உள்ள 250 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மனித உரிமை மாணவர் மன்றங்கள் அமைக்க பள்ளிக்கல்வித் துறை அனுமதி வழங்கி உள்ளது.
குழந்தைப் பருவத்திலேயே மனித உரிமைகளைக் கலாச் சாரமாக வளர்த்தெடுக்கும் நோக்கில், தமிழக அரசும், மனித உரிமைக் கல்வி நிறுவனமும் இணைந்து கடந்த ஆண்டு 6 மாவட்டங்களில் உள்ள 120 அரசுப் பள்ளிகளில் முதற்கட்டமாக மனித உரிமை மாணவர் மன்றங்களைப் பரிசோதனை முறையில் தொடங்கி இருந்தன.தற்போது 2015-16 கல்வியாண்டில் 15 மாவட்டங்களில் கூடுதலாக 250 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்மனித உரிமைக் கல்வி மற்றும் மனித உரிமை மாணவர் மன்றங்களைத் தொடங்க பள்ளிக்கல்வி இயக்குநர் அனுமதி வழங்கி உள்ளார்.

இதுகுறித்து மனித உரிமைக் கல்வி நிறுவன நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன் கூறியதாவது: நல்ல கல்வி கிடைக்க வேண்டும் என்றால் மனித உரிமை கல்வி அவசியம். வசதியானவர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், நடுத்தர மற்றும் ஏழை குடும்பத்தினர் தங்கள் குழந்தைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். அதனால், தற்போது பரம ஏழைகள் மட்டுமே அரசுப் பள்ளிகளில் படிக்கின்றனர். அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தரமானவர்கள். அவர்கள் வழங்கும் கல்வியும் தரமானதே. ஏதாவது ஒரு கல்வியாளர், கல்வியில் நிபுணத்துவம் பெற்றவர்கள், தனியார் பள்ளிகள் நடத்துவோர் ஒரு காலத்தில் அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள், ஆசிரியர்களாக பணிபுரிந்தவர்களாகவே உள்ளனர்.தற்போது அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. அதனால், அரசுப் பள்ளி மாணவர்களுக்குச் சரியான கல்வி கொடுத்து, அவர்களைத் தேர்ச்சி பெற வைப்பதும், மாணவர்களைத் தக்கவைப்பதும் ஆசிரியர்களுக்குச் சவாலாகவேஇருக்கிறது. எனவே, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆங்கிலம், அறிவியல், கணிதம் சார்ந்த கல்விகள், தேர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். மாணவர்கள் ஓய்வில்லாமல் பெற்றோர், ஆசிரியர்கள் ஆசையை நிறைவேற்றும் இயந்திரமாக மாறிவிட்டனர். அதனால், குழந்தைகளின் கனவுகள் நிறைவேறும் இடமாக தற்போது பள்ளிகள் இல்லை. நேசிக்க வேண்டிய ஆசிரியர்களையே மாணவர்கள் எதிரிகளாகப் பார்க்கும் நிலை உள்ளது.

இப்பிரச்சினைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து மாணவர்கள்,ஆசிரியர்களிடையே நல்லுறவை ஏற்படுத்தி கல்வி, ஒழுக்கத்தில் மாணவர்களைச் சிறந்தவர்களாக் கவும், அவர்களுக்கான மனித உரிமைகளை அறிந்துகொள்ளவும் இந்த மனித உரிமை மாணவர் மன்றம் செயல்படுத்தப்படுகிறது. இதனால், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சமத்துவம், தங்கள் உரிமைகளை அறிதல், மற்றவர்களை அறிதல், ஒற்றுமை, பாலினம் போன்றவற்றை அறியும் வாய்ப்பை பெறுகின்றனர் என்றார்.சமத்துவம், தங்கள் உரிமைகளை அறிதல், மற்றவர்களை அறிதல், ஒற்றுமை, பாலினம் போன்றவற்றை அறியும் வாய்ப்பை பெறுகின்றனர்.

முக்கிய அறிவிப்பு :பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு செல்வோர் கவனத்திற்கு...

அரசு உயர் நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி  பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு 04.09.2016 அன்று   மாறுதல் கோரியுள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. 
விண்ணப்பம் சமர்ப்பித்துள்ள ஆசிரியர்கள் முதன்மைக்கல்வி அலுவலரிடம் 2 மாறுதல் விண்ணப்பங்களில் 02.09.2016 மாலைக்குள்  கையொப்பம்  பெற்று மாறுதல் கோரியுள்ள மாவட்டத்தில்  04.09.2016 அன்று  கலந்தாய்வில்  கலந்துகொள்ள வேண்டும் .

Directorate of Government Examinations SSLC Supplementary Examinations, September / October 2016 Time Table

மகப்பேறு விடுப்பு 9 மாதங்களாக உயர்வு- செய்தி அறிக்கை

1/9/16

B.Ed முதல்கட்ட கலந்தாய்வு நிறைவு: செப்டம்பரில் 2-வது கட்ட கலந்தாய்வு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள 1,777 பி.எட். இடங்களை நிரப்பு வதற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் தொடங் கியது.

தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் என பாடவாரியாக மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். இதில் பங்கேற்ற மாணவர்கள் தங்களுக்குப் பிடித்தமான கல்லூரியை தேர்வுசெய்தனர். அவர்களுக்கு உடனடியாக கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது.இந்நிலையில் முதல்கட்ட கலந்தாய்வு நேற்று முடிவடைந்தது. மொத்தமுள்ள 1,777 இடங்களில் 1,314 இடங்கள் நிரம்பியுள்ளன. இன்னும் 463 இடங்கள் காலியாகஉள்ளன.

இக்காலியிடங்களை நிரப்புவதற்கான 2-வது கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 15, 16-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான கட் ஆப் மதிப்பெண் மற்றும் காலியிட விவரங்கள் செப்டம்பர் 9-ம் தேதி இணையதளத்தில் (www.ladywillingdoniase.com) வெளியிடப்படும் என்று தமிழ்நாடு பி.எட். மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியை எம்.எஸ். தில்லை நாயகி தெரிவித்தார்.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் செய்தியாளர்களை சந்திக்கவோ, அவர்களுக்கு பேட்டி அளிக்கவோ கூடாது - பள்ளிக் கல்வித் துறை உத்தரவு.

செய்தியாளர்களிடம் பேசக் கூடாது: ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடு

 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் செய்தியாளர்களை சந்திக்கவோ, அவர்களுக்கு பேட்டி அளிக்கவோ கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.பள்ளி வேலை நேரத்தில் வெளி நபர்கள் உள்ளே வர அனுமதிக்கக் கூடாது. 

தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர்கள் யாரும் வேலை நேரத்தில் செய்தியாளர்களைச் சந்திக்கவோ, பேசவோ, துறையின் அனுமதி இல்லாமல் பேட்டி கொடுக்கவோ கூடாது என்று திருப்பூர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் (பொறுப்பு) கோ.லலிதா செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளார்.துறையின் அனுமதியைப் பெறாமல் பள்ளி தொடர்பாகவோ, துறை தொடர்பாகவோ யாரேனும் பேட்டி அளித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்த உத்தரவு மாவட்டம் முழுவதிலும் உள்ள அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும் பொருந்தும் எனவும், இந்த உத்தரவைப் பின்பற்றும்படி சம்பந்தப்பட்ட உதவி, கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவரும், நீலகிரி மாவட்டம், தும்மனட்டி அரசுப் பள்ளி ஆசிரியருமான ராஜ்குமார் என்பவர் கலை, ஆசிரியர் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.அவர், ஆசிரியர்கள் தொடர்பான பல்வேறு பிரச்னைகளை ஊடகங்கள் மூலமாக வெளியே கொண்டு வந்ததற்காக அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதன் எதிரொலியாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கலாம் என்று ஆசிரியர் சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாரத ஸ்டேட் வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு.

பாரத ஸ்டேட் வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு.
முன்னணி பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் மும்பையிஸ் நிரப்பப்பட உள்ள 33 சிறப்பு அதிகாரி பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: CRPD/SCO-IT/2016-17/08
பணி: Vice President - 03
பணி: Product Development Manager - 03
பணி: Senior Manager - 03
பணி: Manager - 04
பணி: Assistant Vice President (Servicing) - 01

பணி: Assistant Vice President (Customer Experience) -03
பணி: Assistant Vice President (B2c Market place Acquisition) - 12
பணி: Assistant Vice President (B2b Fulfillment) - 02
பணி: Assistant Vice President (B2C Fulfillment) - 02

சம்பளம்: மாதம் ரூ.42,020 - 51,490

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்குரூ.600, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரு.100. இதனை இணையதள மூலம் செலுத்தலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.09.2016

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி:10.09.2016

மேலும் தகுதி, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.sbi.co.in  என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

பள்ளி வாகனம் விதிமுறை தளர்வு:தமிழக அரசுக்கு 4 வாரம் அவகாசம்

பள்ளி வாகன விதிகளை தளர்த்துவது தொடர்பாக பள்ளிகளின் கருத்து கேட்பு குழுவின் பரிந்துரை மீது முடிவை தெரிவிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் 4 வாரம் அவகாசம் அளித்துள்ளது. 

பள்ளி வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை தளர்த்தக்கோரி தமிழ்நாடு கத்தோலிக்க கல்வி நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

10ம் வகுப்பு துணைத்தேர்வு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்!

பத்தாம் வகுப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் செப்டம்பர் 9க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.

வெளியிட்ட செய்தி குறிப்பில்,

தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வு சேவை மையங்களுக்கு (Government Examinations Service Centres) நேரில் சென்று விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.


யார் விண்ணப்பிக்கலாம்?

S வகையினர்

10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத தேர்வர்கள், தாங்கள் தோல்வி அடைந்த பாடங்களை தேர்வு செய்து மீண்டும் விண்ணப்பிக்கலாம்.
அறிவியல் பாடத்தை பொறுத்தவரை செய்முறை (Practical) தேர்வில், தேர்ச்சிப் பெற்று, அறிவியல் கருத்தியல் (Theory) தேர்வில் தேர்ச்சிப் பெறாதவர்கள் கருத்தியல் தேர்வெழுதவும், செய்முறை தேர்வில் தோல்வியுற்று, கருத்தியல் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் செய்முறை மற்றும் கருத்தியல் தேர்வெழுத விண்ணப்பிக்கத் தகுதியானவர்.
SP வகையினர்

14 1/2 வயதும் பூர்த்தி அடைந்தவர்கள் நேரடித் தனித்தேர்வர்களாக இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
மெட்ரிக்/ஆங்கிலோ இந்தியப் பாடத்திட்டத்தில் தேர்வெழுதி தோல்வியுற்றவர்கள் தற்போதுள்ள சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ் மட்டுமே தேர்வுகள் நடத்தப்படுவதால் அறிவியல் செய்முறைப் பயிற்சிப் பெற்றவர்கள் மட்டுமே செய்முறைத் தேர்வு உட்பட அனைத்துப் பாடங்களிலும் மீளத் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம்.
செப்டம்பர் 2016 தேர்வுக்கான அறிவிக்கை வெளியிடும் முன்பு வரை அறிவியல் செய்முறைப் பயிற்சி வகுப்பிற்கு 80 சதவீதம் வருகையுடன் பயிற்சி பெற்றவர்கள் பயிற்சி பெற்றதற்கான சான்றுடன் அனைத்துப் பாடங்களிலும் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம்.
செய்முறைத் தேர்வெழுதுவதிலிருந்து விலக்களிப்பு பெற்றவர்களும் அறிவியல் கருத்தியல் தேர்வினை தற்போது எழுத தகுதியுடையவராவர்.


எக்காரணம் கொண்டும் அறிவியல் செய்முறைப் பயிற்சி பெறாதவர்கள் கருத்தியல் தேர்வுக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.

மொழிப்பாடம்

பத்தாம் வகுப்பு தேர்வெழுதும் நேரடி தனித்தேர்வர்கள் (SP வகையினர்) மொழிப்பாடம் பகுதி – Iல் தமிழ் மொழியில் மட்டுமே தேர்வெழுதிட அனுமதிக்கப்படுவர்.

ஏற்கனவே தேர்வெழுதி தோல்வியுற்றவர் (S வகையினர்) பகுதி – Iல் பிற மொழிப்பாடங்களில் (Other Language) தோல்வியுற்றிருப்பின், செப்டம்பர்/அக்டோபர் 2016 தேர்வில் அன்னார் தோல்வியுற்ற பிறமொழியில் தேர்வெழுத அனுமதிக்கப்படுவர்.

அரசுத் தேர்வு சேவை மையங்கள்

ஆண் தனித்தேர்வர்களும், பெண் தனித்தேர்வர்களும் தங்களது விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்திட கல்வி மாவட்ட வாரியாக தனித்தனியே அரசுத் தேர்வு சேவை மையங்கள் (Government Examinations Service Centres) அமைக்கப்பட்டுள்ளது. தனித்தேர்வர்கள் இம்மையங்களுக்கு நேரில் சென்று தங்களது விண்ணப்பங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வு சேவை மையங்களின் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

மேலும், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலர் அலுவலகங்களிலும் இவ்விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

வெளி மாநில மற்றும் வெளிநாடு வாழ் தேர்வர்கள் விண்ணப்பிக்கும் முறை:

அரசுத் தேர்வு சேவை மையங்களில் (Government Examinations Service Centres) நேரடியாக சென்று விண்ணப்பிக்க இயலாத வெளி மாநில மற்றும் வெளிநாடு வாழ் தனித்தேர்வர்கள், செப்டம்பர்/அக்டோபர் 2016 எஸ்.எஸ்.எல்.சி துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், இத்துறையின் அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள உரிய ஆவணங்கள் மற்றும் புகைப்படத்துடன் தேர்வரின் குடும்ப உறுப்பினர்கள் எவரேனும் ஒருவர் மூலம் சென்னை – 6 அரசுத் தேர்வுகள் இயக்கக இணை இயக்குநர் (பணியாளர்) அவர்களை மேற்குறிப்பிட்ட நாட்களுக்குள் நேரில் அணுகி விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது.

வெளி மாநிலம் மற்றும் வெளி நாட்டில் பயின்று தமிழ் நாட்டில் செப்டம்பர்/அக்டோபர் 2016 எஸ்.எஸ்.எல்.சி துணைத் தேர்வெழுத விரும்பும் தனித்தேர்வர்கள் இடப்பெயர்வு சான்றிதழ் (Migration Certificate) மற்றும் இணைச் சான்றிதழ் (Evaluation Certificate) பெற்று அவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து அரசுத் தேர்வு சேவை மையங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வுக் கட்டணம்:

கருத்தியல் தேர்வு (Theory Exams)

தேர்வுக் கட்டணம் ரூ.125/- உடன் கூடுதலாக ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.50/- ஐ சேர்த்து மொத்தம் ரூ.175/- பணமாக அரசுத் தேர்வு சேவை மையத்தில் செலுத்துதல் வேண்டும்.

தேர்வுக் கட்டண விலக்கு

பார்வையற்றோர் மற்றும் காது கேளாதோருக்கு பார்வையற்றோர் மற்றும் காது கேளாதோருக்கு மேற்குறிப்பிட்ட தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கவிலக்களிக்கப்பட்டுள்ளது.

வழங்கப்படும் சலுகைகள்:

தேர்வர்கள், தேர்வெழுதும் போது சொல்வதை எழுதுபவர், கூடுதல் ஒரு மணி நேரம் போன்ற சலுகைகளை பெற விரும்பினால் உரிய மருத்துவச் சான்றிதழ்களை இணைத்து தனியே ஒரு சலுகை கோரும் கடிதத்தை தமது விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

மேற்படி மாற்று திறனாளிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்த விவரத்தினை பாடத்திட்டம் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

தேர்வு மையம்

தனித்தேர்வர்கள் அவர்கள் விண்ணப்பிக்கும் கல்வி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் மட்டுமே தேர்வெழுதிட அனுமதிக்கப்படுவர்.

தேர்வுக்கூட அனுமதி சீட்டு

ஆன்லைனில் விண்ணப்பத்தினைப் பதிவு செய்த பிறகு தனித்தேர்வர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை (Application Number) பயன்படுத்தியே அரசுத் தேர்வுத் துறை பின்னர் அறிவிக்கும் நாளில் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை (Admission Certificate) பதிவிறக்கம் செய்ய வேண்டும். எனவே, ஒப்புகைச் சீட்டினை தனித்தேர்வர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

S வகையினர்

ஏற்கனவே எஸ்.எஸ்.எல்.சி தேர்வெழுதி தேர்ச்சிப் பெற்ற பாடங்களின் மதிப்பெண் சான்றிதழ்களின் சுய சான்றொப்பமிட்ட நகல்.
அறிவியல் பாடத் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் அறிவியல் செய்முறைப் பயிற்சி முடித்ததற்கான அத்தாட்சி சான்றிதழை பள்ளித் தலைமையாசியரிடமிருந்து பெற்று இணைக்க வேண்டும்.
SP வகையினர்

எட்டாம் வகுப்பு தேர்ச்சி/ஒன்பதாம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்பு படித்தமைக்கான மாற்றுச் சான்றிதழின் சுய சான்றொப்பமிட்ட நகல் (அல்லது)
எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வினில் தேர்ச்சி பெற்றமைக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்
அறிவியல் பாடத்தில் அறிவியல் செய்முறைப் பயிற்சி ஏற்கனவே முடித்ததற்கான அத்தாட்சி சான்றிதழை பள்ளித் தலைமையாசியரிடமிருந்து பெற்று இணைக்க வேண்டும்.
மெட்ரிக் /ஆங்கிலோ இந்தியன் தேர்வெழுதி தோல்வியுற்ற தேர்வர்கள் அன்னாரின் அனைத்து அசல் மதிப்பெண் சான்றிதழ்களை அரசுத் தேர்வுகள் சேவை மையங்களில் ஒப்படைத்தல் வேண்டும்.

மேற் குறிப்பிட்டுள்ள இணைப்புகளை சமர்ப்பிக்கும் தனித்தேர்வர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே  ஆன்லைன் பதிவுக்கு ஏற்றுக் கொள்ளப்படும். இணைப்புகளுடன் பெறப்படாத விண்ணப்பங்கள் மற்றும் தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் முன்னறிவிப்புமின்றி கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.

சிறப்பு அனுமதி திட்டம்

மேற்குறிப்பிட்ட தேதிகளில் விண்ணப்பிக்க தவறும் தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தில் (Takkal) 16.09.2016 மற்றும் 17.09.2016 ஆகிய இரு தேதிகளில் ஆன்லைனில்  விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்படுகிறது.

10ம் வகுப்பு தனித்தேர்வு நாளை முதல் விண்ணப்ப பதிவு

சென்னை: 'பத்தாம் வகுப்பு தனித்தேர்வுக்கு, நாளை முதல், செப்., 9ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்' என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து, அரசு தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தரா தேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அக்., மாதம் நடக்க உள்ள, 10ம் வகுப்பு துணைத்தேர்வில் பங்கேற்க விரும்புவோர், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில்,
குறிப்பிட்டுள்ள சேவை மையங்களில், நேரடியாக விண்ணப்பிக்கலாம். செப்., 2 முதல், 9 வரை, விண்ணப்பங்கள் பெறப்படும். சிறப்பு அனுமதி திட்டமான, 'தட்கல்' திட்டத்தில், செப்., 16 மற்றும் 17ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம். அறிவியல் பாடத்தில் தேர்வு எழுத விரும்புவோருக்கு செய்முறை பயிற்சியும், தேர்வும் அவசியம். மேலும் விபரங்களை, இணையதளத்தில் அறியலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தேசிய ஆசிரியர் விருதுகள் அறிவிப்பு : சென்னையில் ஒருவர் கூட இல்லை

தமிழகத்தில், சிறந்த ஆசிரியர்களுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், சென்னையில் ஒரு அரசு பள்ளி கூட இடம்பெறவில்லை. செப்., 5 ஆசிரியர் தினத்தையொட்டி, மாநில அளவில் வழங்கப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்கள், பணித்திறன் அடிப்படையில், தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்படுவர்.

இந்த ஆண்டு, தமிழகத்தில், 23 பேருக்கு, மத்திய அரசின் தேசிய ஆசிரியர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், பஞ்சாயத்து ஒன்றிய துவக்க பள்ளிகளை சேர்ந்த, 10 பேர் இடம்பெற்றுள்ளனர். மேலும், நீலகிரி மாவட்டத்திலுள்ள பழங்குடியினர் அரசு பள்ளி ஆசிரியர், அரசு பள்ளிகளை சேர்ந்த நான்கு பேர், தனியார் பள்ளிகளை சேர்ந்த, 10 பேர் என, மொத்தம், 23 பேர், விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஆறில் ஒரு பங்கு மக்கள் தொகையை கொண்ட, சென்னை மற்றும் அதையொட்டியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், ஒரு அரசு பள்ளி ஆசிரியர் கூட விருதுக்கு தேர்வாகவில்லை. சென்னை மயிலாப்பூர் பி.எஸ்., பள்ளி மற்றும் தாம்பரம் சி.எஸ்.ஐ., கார்லி பள்ளி என, இரண்டு தனியார் பள்ளி ஆசிரியர்கள், இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் தமிழகம் நாளை ஸ்தம்பிக்கும்? தொழிற்சங்கங்கள் பங்கேற்பதால் பஸ்கள் ஓடாது?

அகில இந்திய தொழிற்சங்கங்கள், நாளை நடத்தும் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில், தமிழக அரசு ஊழியர்களும் பங்கேற்பதால், மாநிலம் ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து தொழிற்சங்கள் பங்கேற்ப தால், பஸ்கள் இயக்கத்திலும் பாதிப்பு ஏற்படும்.


10 ஆயிரம் அரசு அலுவலகங்களுக்கு விரைவில் புதிய தமிழ் 'சாப்ட்வேர்'

சென்னை: ''தமிழில் இலக்கண பிழையின்றி எழுத உதவும், புதிய மென்பொருள், முதல் கட்டமாக, 10 ஆயிரம் அரசு அலுவலகங்களுக்கு வழங்கப்படும்,'' என, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர், சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

சட்டசபையில், நேற்று அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

அசாம் மாநிலம், கவுகாத்தி பல்கலையில், தமிழை விருப்பப் பாடமாக பயிலும், ஆறு மாணவர்களுக்கு, 1.39 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் ஒன்று, மொரீஷியஸ்; அங்குள்ள தமிழர்களுக்கு, ஆண்டுதோறும், ஏழு லட்சம் ரூபாய் செலவில், தமிழ் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் நடக்கும் பேச்சு போட்டிகளில், முதல் மற்றும் இரண்டாம் பரிசு வழங்கப்படுகிறது; இனி, மூன்றாவது பரிசாக, 5,000 ரூபாய் வழங்கப்படும்; இதற்கு, 9.6 லட்சம் ரூபாய் கூடுதலாக செலவாகும்
கம்ப்யூட்டரில், ஆங்கில மொழியில் பிழை திருத்தும் வசதி இருப்பதைப் போல், தமிழிலும், இலக்கணப் பிழையை சுட்டிக்காட்டி திருத்தும், புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டு உள்ளது; 300 ரூபாய் விலையுடைய அது, முதல் கட்டமாக, 10 ஆயிரம் அரசு அலுவலகங்களுக்கு வழங்கப்படும்.இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசக் கூடாது: ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடு

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் செய்தியாளர்களை சந்திக்கவோ, அவர்களுக்கு பேட்டி அளிக்கவோ கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பள்ளி வேலை நேரத்தில் வெளி நபர்கள் உள்ளே வர அனுமதிக்கக் கூடாது. தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர்கள் யாரும் வேலை நேரத்தில் செய்தியாளர்களைச் சந்திக்கவோ, பேசவோ, துறையின் அனுமதி இல்லாமல் பேட்டி கொடுக்கவோ கூடாது என்று திருப்பூர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் (பொறுப்பு) கோ.லலிதா செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளார்.


துறையின் அனுமதியைப் பெறாமல் பள்ளி தொடர்பாகவோ, துறை தொடர்பாகவோ யாரேனும் பேட்டி அளித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்த உத்தரவு மாவட்டம் முழுவதிலும் உள்ள அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும் பொருந்தும் எனவும், இந்த உத்தரவைப் பின்பற்றும்படி சம்பந்தப்பட்ட உதவி, கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவரும், நீலகிரி மாவட்டம், தும்மனட்டி அரசுப் பள்ளி ஆசிரியருமான ராஜ்குமார் என்பவர் கலை, ஆசிரியர் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.

அவர், ஆசிரியர்கள் தொடர்பான பல்வேறு பிரச்னைகளை ஊடகங்கள் மூலமாக வெளியே கொண்டு வந்ததற்காக அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதன் எதிரொலியாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கலாம் என்று ஆசிரியர் சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பள்ளி மாணவருக்கு தூய தமிழ் அகராதிகள்: பேரவையில் அமைச்சர் ராமச்சந்திரன் அறிவிப்பு

பள்ளி மாணவர்களுக்குத் தூய தமிழ் அகராதிகள் வழங்கப்படும் என்று சட்டப் பேரவையில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் அறிவித்தார்.

சட்டப் பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை, தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு புதன்கிழமை பதிலளித்து அமைச்சர் ராமச்சந்திரன் வெளியிட்ட அறிவிப்புகள்: