யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

1/9/16

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் செய்தியாளர்களை சந்திக்கவோ, அவர்களுக்கு பேட்டி அளிக்கவோ கூடாது - பள்ளிக் கல்வித் துறை உத்தரவு.

செய்தியாளர்களிடம் பேசக் கூடாது: ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடு

 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் செய்தியாளர்களை சந்திக்கவோ, அவர்களுக்கு பேட்டி அளிக்கவோ கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.பள்ளி வேலை நேரத்தில் வெளி நபர்கள் உள்ளே வர அனுமதிக்கக் கூடாது. 

தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர்கள் யாரும் வேலை நேரத்தில் செய்தியாளர்களைச் சந்திக்கவோ, பேசவோ, துறையின் அனுமதி இல்லாமல் பேட்டி கொடுக்கவோ கூடாது என்று திருப்பூர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் (பொறுப்பு) கோ.லலிதா செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளார்.துறையின் அனுமதியைப் பெறாமல் பள்ளி தொடர்பாகவோ, துறை தொடர்பாகவோ யாரேனும் பேட்டி அளித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்த உத்தரவு மாவட்டம் முழுவதிலும் உள்ள அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும் பொருந்தும் எனவும், இந்த உத்தரவைப் பின்பற்றும்படி சம்பந்தப்பட்ட உதவி, கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவரும், நீலகிரி மாவட்டம், தும்மனட்டி அரசுப் பள்ளி ஆசிரியருமான ராஜ்குமார் என்பவர் கலை, ஆசிரியர் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.அவர், ஆசிரியர்கள் தொடர்பான பல்வேறு பிரச்னைகளை ஊடகங்கள் மூலமாக வெளியே கொண்டு வந்ததற்காக அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதன் எதிரொலியாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கலாம் என்று ஆசிரியர் சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக