யாருக்கும் அஞ்சோம்...! எதற்கும் அஞ்சோம்...! எப்போதும் அஞ்சோம்...! எங்கேயும் அஞ்சோம்... கல்வி சேவை
.புத்தாண்டு வாழ்த்தும் பொங்கி எழும் போர்க்குணமும் ஒன்றாகட்டும்
அன்பு நண்பர்களே,ஆசிரிய சகோதர-சகோதரிகளே, வணக்கம்.Android Smart phone பயன்படுத்துபவர்கள் தங்கள் போனிலேயே Kalvi Sevai அப்ளிகேசனை நிறுவி உடனுக்குடன் பள்ளி,ஆசிரியர்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ளும்வண்ணம் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் பெற கீழ் உள்ள லிங்கை சொடுக்கவும்.

Download

9/9/16

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி 'போனஸ்' : உள்ளாட்சி தேர்தலால் முன்னதாக பேச்சு

உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளதால், தீபாவளி போனஸ் சம்பந்தமாக, தொழிற்சங்கங்களுடன், முன்கூட்டியே பேச்சு நடத்த, அரசு நிறுவனங்கள் முடிவு செய்து உள்ளன. தமிழக அரசுக்கு சொந்தமான, தமிழ்நாடு மின் வாரியம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், அரசு போக்குவரத்து கழகங்கள் உள்ளிட்ட நிறுவனங்களில், அதிகாரிகள் தவிர்த்து, மற்ற பிரிவுகளில், 3.75 லட்சம் பேர் பணிபுரிகின்றனர்.
இவர்களுக்கு, தீபாவளி பண்டிகையின் போது, தமிழக அரசு, போனஸ் வழங்கி வருகிறது. ஒவ்வொரு அரசு நிறுவனமும், போனஸ் தொகையை நிர்ணயம் செய்ய, அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களுடன் பேச்சு நடத்தும். தொழிற்சங்கங்களின் கோரிக்கை, அரசின் நிதித்துறை வரை செல்லும். பரிசீலனைகள் முடிந்ததும், போனஸ் குறித்து, முதல்வர் அறிவிப்பார். இந்த ஆண்டு தீபாவளி, அக்., 29ல் வருகிறது. உள்ளாட்சி தேர்தலும், அதே மாதம் நடக்க உள்ளதால், முன்கூட்டியே, போனஸ் பேச்சு நடத்தப்பட உள்ளது.

இதுகுறித்து, தமிழக நிதித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த ஆண்டு, அரசு நிறுவன ஊழியர்களுக்கு, 8.33 சதவீதம் போனஸ்; 11.67 சதவீதம் கருணை தொகை என, மொத்தம், 20 சதவீதம் போனஸ் வழங்கப்பட்டது. இதன்படி, 3.76 லட்சம் பேருக்கு, 242 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. நடப்பாண்டு, போனஸ் தொகை உயர வாய்ப்பு உள்ளது. வழக்கமாக, தீபாவளிக்கு, இரண்டு வாரங்களுக்கு முன், போனஸ் பேச்சு நடக்கும்; உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளதால், இம்மாத இறுதியிலே பேச்சு நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

NHIS : வரம்பை மீறி சிகிச்சைக்கு பரிந்துரை: அரசு உத்தரவு.

NHIS : வரம்பை மீறி சிகிச்சைக்கு பரிந்துரை: அரசு உத்தரவு.


'மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு, பரிந்துரை செய்யும் குழுக்கள், அரசாணை வரம்பை மீறி, பரிந்துரை செய்வதை தவிர்க்க வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள், புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், தெரிவிக்கும் குறைகளை களைய, மாவட்ட அளவில், கலெக்டர் தலைமையிலும், மாநில அளவில், கருவூல கணக்கு துறை இயக்குனர் தலைமையிலும், குழு அமைக்கப்பட்டுள்ளது. நிதித்துறை செயலர் - செலவினம் தலைமையில், உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில், சுகாதாரத்துறை செயலர், 'யுனைடெட் இந்தியாஇன்சூரன்ஸ்' நிறுவன பிரதிநிதியும் இடம் பெற்றுள்ளனர்.இக்குழுவினர், அனுமதி பெறாத மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றதற்கும், அனுமதி அளிக்கப்படாத சிகிச்சைக்கும், பரிந்துரை செய்கின்றனர்; அதை, காப்பீட்டு நிறுவனம் ஏற்பதில்லை. இதை எதிர்த்து, அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் கோர்ட்டுக்கு செல்கின்றனர்.

புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், சேர்க்கப்படாத மருத்துவ சிகிச்சை, அறுவை சிகிச்சை போன்றவற்றுக்கு உதவி செய்ய, அரசிடம் திட்டம் இல்லை.மாவட்ட, மாநில அளவிலான குழுவினர், அரசு ஆணைக்கு புறம்பாக, மருத்துவ செலவினம் வழங்க, பரிந்துரைக்க வேண்டாம்; அரசுக்கு எதிராக, வழக்கு வருவதை தவிர்க்கலாம் என, நிதித்துறை செயலர் சண்முகம் பிறப்பித்தஅரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை பல்கலை முதுநிலை படிப்பு 'ரிசல்ட்' நாளை வெளியீடு.

சென்னை பல்கலை முதுநிலை படிப்பு 'ரிசல்ட்' நாளை வெளியீடு.

சென்னை பல்கலையில், முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான தேர்வு முடிவு, நாளை வெளியாகிறது. சென்னை பல்கலையின், தொலைநிலை கல்வியில், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., மற்றும் எம்.எஸ்சி., - ஐ.டி., படிப்புகளுக்கு, மே, ஜூன் மாதங்களில் தேர்வுகள் நடந்தன.
இதற்கான முடிவு, நாளை இரவு, 8:00 மணிக்கு, பல்கலை இணையதளத்தில் வெளியாகிறது.'மறுமதிப்பீடுக்கு, செப்., 22ம் தேதிக்குள், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்' என, சென்னை பல்கலை, தலைமை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி எஸ்.திருமகன் தெரிவித்து உள்ளார்.

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு செப்டம்பர் 14-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு*

சென்னை: குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 14ம்தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என்றுடிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. குரூப் 4 தேர்வுக்கு கட்டணம் செலுத்த கடைசிநாள் 16ம் தேதி எனஅறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கு இன்று கடைசிநாள் எனடி.என்.பி.எஸ்.சி. அறிவிருந்தது. இந்நிலையில்ஏராளமானோர் ஆன்-லைனில்
விண்ணப்பிக்கமுயற்சித்ததால் இணையதளம் முடங்கியது. இதன் காரணமாக குரூப்4 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிகப்பட்டுள்ளது.

குரூப்4 பதவியில் 5,451 காலி பணியிடங்கள் உள்ளன. எழுத்து தேர்வு நவம்பர் 6ம்தேதி நடக்கிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) தமிழக அரசு பணியில்குரூப் 4 பதவியில் காலியாக உள்ள இளநிலைஉதவியாளர்(பிணையமற்றது)- 2345 இடங்கள், இளநிலை உதவியாளர்(பிணையம்)-121 இடம், வரித்தண்டலர் (கிரேடு 1)- 8 இடம், நில அளவர்- 532 இடம், வரைவாளர்-327 இடம், தட்டச்சர்-1714 இடம், சுருக்கெழுத்து தட்டச்சர்(கிரேடு 3)- 404 இடங்கள் உள்ளிட்ட 5,451 காலிபணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 9ம்தேதி ெவளியிட்டது.

அறிவிப்புவெளியிட்ட அன்றே ஆன்லைன் மூலம்விண்ணப்பிக்கும் பணியும் தொடங்கியது. விண்ணப்பிக்க10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், குரூப்4 தேர்வுக்கு பட்டதாரி முதல் 10ம் வகுப்புதேர்ச்சி பெற்றவர்கள் வரை போட்டி போட்டுகொண்டு விண்ணப்பித்தனர். இது வரை 8 லட்சத்துக்கும்அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடக்கப்பள்ளிகளில் 5 லட்சம் ஆசிரியர்கள் பணியிடம் காலி: விரைந்து நிரப்ப மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்

நாடு முழுவதும் தொடக்கப்பள்ளி களில் 5 லட்சம் ஆசிரியர்பணியிடங் கள் நிரப்பப்படாமல் உள்ளன. இந்தப் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண வலியுறுத்திமாநிலங் களுக்கு மத்திய அரசுகடிதம் எழுதியுள்ளது.

மத்தியமனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ்ஜவடேகர்
நேற்று கூறியதாவது:

நாடு முழுவதும் தொடக்கப் பள்ளிகளில் 5 லட்சத்துக்கும் மேற் பட்ட ஆசிரியர்பணியிடங்கள் காலி யாக உள்ளன. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளிகளில் ஒரே ஆசிரியர் பணிபுரிகிறார். இந்தப் பிரச்சினை மிகவும் முக்கியமானது. ஆசிரியர்பணியிடங்களை மாநில அரசுகள்தான் நிரப்புகின்றன. எனவே, ஆசிரியர் பணியிடங்களை மிக விரைந்து நிரப்பமாநில முதல்வர்களுக்கு நான் கடிதம் எழுதிவருகிறேன்.

அத்துடன்அனைத்து மாநிலங் களையும் சேர்ந்தகல்வித் துறை அமைச்சர்களின் மாநாட்டைவிரை வில் நடத்த உள்ளோம். அப்போது ஆசிரியர் பணியிடங்களை நிரப்பு வது குறித்துமுக்கியமாக விவா தித்து முடிவெடுக்கதிட்டமிட்டுள் ளோம். இவ்வாறு பிரகாஷ்ஜவடேகர் கூறினார்.


இதுகுறி்த்துமத்திய அரசு அதிகாரிகள் கூறும்போது, ‘‘பள்ளி களில் உள்கட்டமைப்பு மற்றும்ஆசிரியர்கள் இல்லாமல் கல்வியின் தரத்தை மேம்படுத்துவது கனவாகவே இருக்கும். இந்தப் பிரச்சினை களைத்தீர்க்க மனிதவள மேம்பாட்டுத் துறைஅமைச்சகம் சிறப்பு கவனம் செலுத்திவருகிறது. அத்துடன் உயர்க் கல்வித் துறையில்காலி இடங்களை நிரப்பவும் அமைச்சகம்தீவிரமாக உள்ளது’’ என்றனர்.

கற்பித்தல் தவிர வேறு பணி கூடாது : ஆசிரியர்களுக்கு தடை'பாடம் நடத்துவதை தவிர வேறு பணிகளில், ஆசிரியர்களை ஈடுபடுத்தக் கூடாது' என, மத்திய அரசு எச்சரித்துள்ளது.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில்கற்பித்தல் பணி தவிர, நிர்வாகம்சார்ந்த பல பணிகளிலும் ஆசிரியர்கள்ஈடுபடுத்தப்படுகின்றனர். தமிழகத்தில், அரசு பள்ளி ஆசிரியர்கள்வாக்காளர் கணக்கெடுப்பு, ஜாதி வாரி கணக்கெடுப்பு, மக்கள்தொகை கணக்கெடுப்பு, தேர்தல் பணி, அரசின்நலத்திட்டங்களை செயல்படுத்துதல், மாணவர்களுக்கு அரசின் இலவசங்களைப் பெற்றுவழங்குதல் போன்ற பணிகளையும் செய்கின்றனர்.'தேர்தல் சார்ந்த பணிகள், மக்கள்தொகை கணக்கெடுப்பு
மற்றும் பேரிடர் மீட்புபணிகள் தவிர, கற்பித்தல் அல்லாதபணிகளில் ஆசிரியர்களை பயன்படுத்தக் கூடாது' என, கட்டாயகல்வி உரிமை சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. 'இதை, பள்ளிகள் முறையாக கடைபிடிக்க வேண்டும்' என, மனிதவள மேம்பாட்டு துறைஇணை அமைச்சர் உபேந்திர குஷ்வாஹா, பார்லிமென்டில் தாக்கல் செய்த அறிக்கையில்தெரிவித்துஉள்ளார் 

ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கு சுப்ரீம் கோர்டில் வரும் 14.9.2016 அன்று நீதிமன்ற எண் 13 வரிசை எண் 9ல் விசாரணைக்கு வருகிறது

MOVEMENT REGISTER - பராமரிப்பது சார்ந்த அறிவுரைகள்

சி.பி.எஸ்.இ.,க்கு இணையாக தமிழக பாடத்திட்டம் மாற்றம்

தமிழகத்தில், மத்திய அரசின் இடைநிலை கல்விவாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை விட, தரமான பாடத்திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தனியார் கல்லுாரிகள் மற்றும்பல்கலைகளில், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பில்சேர,
'நீட்' எனப்படும், தேசியபொது நுழைவுத்தேர்வு கட்டாயமாகி உள்ளது.
அதற்கேற்ப, தமிழகத் தில், 10 ஆண்டுகள் பழமையான, 10ம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ் 2 பாடத்திட்டம், விரைவில் மாற்றப்படும் என, தெரிகிறது. இதற்கானகமிட்டி, விரைவில் அமைக்கப்பட உள்ளது. ஏற்கனவே, 2012ல், புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு, அரசின் பரிசீலனையில் உள்ளது. இதையே அறிவிப்பதா அல்லது, புதிய அம்சங்களைசேர்ப்பதா; புதிதாக பாடத்திட்டம் ஏற்படுத்த, கமிட்டி அமைப்பதா என, பள்ளிக்கல்வி செயலகஅதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

'மத்தியஅரசின் சி.பி.எஸ்.இ.,க்கு இணையாக, அல்லது அதைவிட தரம் உயர்ந்தபாடத்திட்டம் கொண்டு வர, முதல்வர்விரும்புகிறார். அதற்கான நடவடிக்கைகள் விரைவில்எடுக்கப்படும்' என்று, பள்ளிக்கல்வித் துறைவட்டாரங்கள் தெரிவித்தன. இதுகுறித்து, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் கே.பி.ஓ.சுரேஷ்கூறுகையில், ''எந்த அளவுக்கு பாடத்திட்டம்தரம் உயர்த்தப்பட வேண்டும் என, அரசு பள்ளிஆசிரியர்களுக்கு முழுமையாக தெரியும். எனவே, கமிட்டியில் அவர்களைசேர்க்க வேண்டும்,'' என்றார்.

ஒரு ரூபாய்க்கு ஒரு ஜிபி: புதிய திட்டத்தை அறிமுகம் செய்யும் பிஎஸ்என்எஸ்

நாடு முழுவதும் சுமார் ஒரு ரூபாய்க்கு ஒரு ஜிபி தகவல்களைப் பெறும் புதிய திட்டம் (இன்டர்நெட் டேட்டா)பிஎஸ்என்எல் வெள்ளிக்கிழமை (செப்.9) முதல் அறிமுகப்படுத்த உள்ளது.இதுகுறித்த விவரம்: வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையிலான புதிய திட்டங்களை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தி வருகிறது.
அவ்வகையில், நகரங்கள், கிராமங்கள் ஆகிய பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில், "அன்லிமிடெட் வயர்லைன் பிபி 249' எனும் புதிய அகண்ட அலைவரிசை திட்டத்தை செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்தபட உள்ளது. அதன்படி, பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் வரையில்லாத (அன்லிமிடெட்) ஒரு ஜிபிக்கும் அதிகமான தகவல்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதோடு, இந்தத் திட்டம் 2 எம்பிபிஎஸ் வேகத்தில் தகவல்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

6 மாதத்துக்கு..: இந்தத் திட்டத்தைப் பயன்படுத்த தொடங்கியதிலிருந்து மாதத்துக்கு 300 ஜிபி தகவல்களை ரூ.249-க்கு வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம். அதன்படி, ஒரு ஜிபி-க்கான பதிவிறக்க கட்டண செலவு ரூ.1-க்கும் குறைவாகவே பிஎஸ்என்எல் வழங்க உள்ளது. ஆறு மாதத்துக்கு பிறகு, வாடிக்கையாளர்கள் ஏதேனும் ஒரு அகண்ட அலைவரிசை திட்டத்துக்கு மாறிக்கொள்ளலாம்.

மேலும், இதுதொடர்பாக பிஎஸ்என்எல் நிர்வாக இயக்குநரும், தலைவருமான அனுபம் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது: பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனம் மட்டுமே மிகவும் குறைந்த கட்டணத்தில் ஒரு ரூபாய்க்குள் ஒரு ஜிபி தகவல் அளிக்கும் சேவையை அளிக்கஉள்ளது. மேலும், இந்த புதிய திட்டம் வாடிக்கையாளர்களை கவரும் வகையிலும், அதிகரிக்கவும் வழிவகை செய்யும் என்றார் அவர்.

புதிய வாடிக்கையாளர்கள் இந்த பிபி-249 திட்டத்தை பிஎஸ்என்எல் விற்பனை மையங்களில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, 18003451500 என்ற கட்டணமில்லா இலவச எண்ணிலும் www.bsnl.co.in என்ற இணையதள முகவரியிலும் தெரிந்துகொள்ளலாம் என பிஎஸ்என்எல் தமிழ்நாடு தொலைப்பேசி வட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ள

பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் மத்திய கல்வி வாரியத்தில் 10-ம் வகுப்பு தேர்வுகளை தமிழில் எழுதலாம்.

பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் மத்திய கல்வி வாரியத்தில் 10-ம் வகுப்பு தேர்வுகளை தமிழில் எழுதலாம் என்று தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவன தலைவர்சி.பி.சர்மா தெரிவித்தார்.

திறந்தநிலை பள்ளி
தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் சி.பி.சர்மா, சென்னை மண்டல இயக்குனர் பி.ரவி ஆகியோர் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

காஞ்சிப்புரம் மாவட்டத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள. கல்லூரியில் 2016-2017 ஆம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!!!

திருப்பூரில் செப்.14-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

ஓணம் பண்டிகை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் செப்டம்பர் 14-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ச.ஜெயந்தி கூறியுள்ளது:

திருப்பூர் மாவட்டத்தில் வரும் செப்டம்பர் 14-ஆம் தேதி ஓணம் பண்டிகை முன்னிட்டு,  மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்து உத்திரவிடப்படுகிறது.

மேற்கூறப்பட்ட உள்ளூர் விடுமுறை நாளுக்கு பதிலாக செப்டம்பர் 24-ஆம் தேதி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.

உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்ட 14-ஆம் தேதி திருப்பூர் மாவட்டத்திலுள்ள கருவூலகம்  மற்றும் சார்நிலை கருவூலகங்கள், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு, குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும், என்று தெரிவித்துள்ளார்.

தற்காலிக பதவி உயர்வு உரிமை விடல் அடிப்படை விதிகள்!!



பணி உயர்வு பெறும்போது ஊதியம் நிர்ணயம் செய்வது குறித்த தெளிவுரை..மற்றும் அடிப்படைவிதிகள்...


போனஸ் ஊதிய உயர்வு மற்றும் ஊக்க ஊதிய உயர்வுகள் குறித்து அடிப்படை விதிகள்..

நபார்டு வங்கியில் 85 உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

மும்பையில் உள்ள நபார்டு வங்கியில் 85 Development Assistant, Development Assistant (Hindi) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: 01/DA/2016-17
பணி: Development Assistant, Development Assistant (Hindi)
காலியிடங்கள்: 85
சம்பளம்: மாதம் ரூ.8,040 - 201,100
வயதுவரம்பு: 18 - 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்று ஆங்கிலத்தில் எழுத, படிக்க, பேச தெரிந்திருக்க வேண்டும். முன்னாள் இராணுவத்தினர்கள் இளநிலை பட்டம் அல்லது 10-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ராணுவத்தில் 15 வருடங்கள் பணிபுரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.450, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.50. இதனை ஆன்லைனில் செலுத்தலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.nabard.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.09.2016
ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெறும்.

மேலும் தகுதி, அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://www.nabard.org/pdf/final%20advt%2030%20Aug%2016.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமலர் - லட்சிய ஆசிரியர் விருது 2016 - ஆசிரியர்ளுக்கு அழைப்பு

TNPSC:குரூப் 4 தேர்வு விண்ணப்பிக்க செப்.14 வரை நீட்டிப்பு.

குரூப் 4 தொகுதியில் காலியாகவுள்ள 5 ஆயிரத்து 451 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று வியாழக்கிழமை (செப்.8) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 
விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம்  செப்.14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வு கட்டணம் செலுத்த செப்.16-ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இளநிலை உதவியாளர், வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர், தட்டச்சர் உள்ளிட்ட குரூப் 4 தொகுதியின் கீழ் 5 ஆயிரத்து 451 பணியிடங்கள் காலியாக உள்ளன.

 இந்தக் காலியிடங்களை எழுத்துத் தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) கடந்த மாதம் 9 ஆம் தேதி வெளியிட்டது. கடந்த ஒரு மாதமாக இணைய வழியாக (www.tnpsc.gov.in) தேர்வர்கள் விண்ணப்பித்து வந்தனர். எழுத்துத் தேர்வானது நவம்பர் 6 ஆம் தேதியன்று காலை 10 மணிக்குத் தொடங்கி, பிற்பகல் 1 மணி வரை நடைபெறும்.
இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

தொடக்கப்பள்ளிகளில் 5 லட்சம் ஆசிரியர்கள் பணியிடம் காலி: விரைந்து நிரப்ப மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்

நாடு முழுவதும் தொடக்கப்பள்ளி களில் 5 லட்சம் ஆசிரியர் பணியிடங் கள் நிரப்பப்படாமல் உள்ளன. இந்தப்பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண வலியுறுத்தி மாநிலங் களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று கூறியதாவது:
நாடு முழுவதும் தொடக்கப் பள்ளிகளில் 5 லட்சத்துக்கும் மேற் பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளிகளில் ஒரே ஆசிரியர் பணிபுரிகிறார். இந்தப் பிரச்சினை மிகவும் முக்கியமானது. ஆசிரியர் பணியிடங்களை மாநில அரசுகள்தான் நிரப்புகின்றன. எனவே, ஆசிரியர் பணியிடங்களை மிக விரைந்து நிரப்ப மாநில முதல்வர்களுக்கு நான் கடிதம் எழுதி வருகிறேன்.அத்துடன் அனைத்து மாநிலங் களையும் சேர்ந்த கல்வித் துறை அமைச்சர்களின் மாநாட்டை விரை வில் நடத்த உள்ளோம். அப்போது ஆசிரியர் பணியிடங்களை நிரப்பு வது குறித்து முக்கியமாக விவா தித்து முடிவெடுக்க திட்டமிட்டுள் ளோம். இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

இதுகுறி்த்து மத்திய அரசு அதிகாரிகள் கூறும்போது, ‘‘பள்ளி களில் உள்கட்டமைப்பு மற்றும் ஆசிரியர்கள் இல்லாமல் கல்வியின் தரத்தை மேம்படுத்துவது கனவா கவே இருக்கும். இந்தப் பிரச்சினை களைத் தீர்க்க மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் சிறப்பு கவனம் செலுத்திவருகிறது. அத்துடன் உயர்க் கல்வித் துறையில் காலி இடங்களை நிரப்பவும் அமைச்சகம் தீவிரமாக உள்ளது’’ என்றனர்.